Sunday, November 27, 2011

அனைத்தும் திருஅண்ணாமலையுள் அடக்கமே!

 

http://www.tamiloviam.com/unicode/05310710.asp**************

http://www.agasthiar.org/arunafr.htm


**************


http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_3599.html


***************


http://singai-krishnan.blogspot.in/2006/08/blog-post.html**************


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான தலங்கள்

 http://vivekaanandan.blogspot.in/2013/09/27.html ***************
****************


27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் :-

01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

*

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் :-1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி

“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
நீத்தார் இறைவனடி சேராதவர்”
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தி – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.


*


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

திரு.மிஸ்டிக் செல்வம்தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்

கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படிப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்தார்.இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு.
கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார்.பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள்,சித்தர்கள் ஆகியோரின் நட்பையும்,ஆசியையும் பெற்றதுடன்,பயிற்சிகளையும் மேற்கொண்டார்.மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார்.குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம்,அஷ்டகர்மம்,அஷ்டாங்க யோகம்,மானசயோகம்,மூலிகை மர்மங்கள்,சூட்சும உலகம்,மந்திர ரகசியம்,கிரக இயக்கங்கள்,பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள்,ஜோதி வழிபாடு,சூரிய வழிபாடு,மதங்களின் வணக்கமுறை,விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.
40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும்,வழிகாட்டுதல்படியும் ஞான சிந்தாமணி,ஜோதிட பூமி,ஜோதிட அரசு,ஸ்ரீவராஹி விஜயம்,பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரங்குகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.
திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டத்தில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.அகில உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.

திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’ ‘ஸ்ரீசொர்ணபைரவர்’ ‘ஆன்மீகத்திறவுகோல்’ என்னும் நூல்களை எழுதியுள்ளார்.இவருடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கிடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.

திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் விபூதிப்பிரயோகம்,
ருத்ராட்சப் பிரயோகம்
மந்திரப்பிரயோகம்,
சங்குப்பிரயோகம்,
அஞ்சனப்பிரயோகம்,
யந்திரப்பிரயோகம்,
காலதோஷ நிவாரணம்,
வாஸ்துதோஷ நிவாரணம்,
பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு,சிவமணி மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்றன:
1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல்

2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்

3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீகக்கூட்டங்கள்,கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்

4.வயது முதிர்ந்த,கவனிப்பாரற்ற ஆன்மீகப்பெரியோர்களை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்

5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்

6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல்

இந்த நல்லெண்ணங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தன்னலமற்ற தொண்டு மனப்பான்மையுடன் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்.அதை 5.2.2007 அன்று இந்திய ட்ரஸ்ட் ஆக்ட் 1882இன்படி பதிவு பதிவு எண்:433/2007 கீழ் நிறுவி பதிவு செய்துள்ளார்.
முகவரி:
மிஸ்டிக் (இந்தியா)மிஷன்,(இந்திய ஆன்மீகக் கழகம்)
எண்:1,முதல் மெயின் றோடு,ஜெயராம் நகர்,கொளத்தூர்,சென்னை-99.

ரூ.1000/-ஐ இந்தப் பெயருக்கு டி.டி.எடுத்து அனுப்புவோருக்கு டாக்டர் மிஸ்டிக் செல்வம் அவர்களின் பேச்சுக்கள்,எழுத்துக்கள் அடங்கிய படைப்புக்கள் அனைத்தும் அவர்களின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களின் எழுத்துக்களை ஒருமுறை வாசித்தால் /பேச்சினை ஒரு முறை கேட்டாலே நமது வாழ்க்கையில் நீண்ட காலப்பிரச்னைகள் தீருவதற்கான ஆன்மீக வழிமுறை அல்லது தீர்வு கிடைக்கும் என்பது எனது அனுபவ உண்மை!!!***************


http://chamundihari.wordpress.com/2011/08/29/mystic-selvam-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/***************http://thalabhathi85.blogspot.in/2012/04/blog-post_08.html
**************


"மஹா சிவராத்திரி"

 

சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும்
சிறப்புவாய்ந்த விரதம் சிவராத்திரி ஆகும். இதன் சிறப்புக் கருதி இவ்விரதத்தை மகா சிவராத்திரி என்றும்

அழைப்பதுண்டு.இஃது மாசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் இடம்பெறும். இப் புண்ணிய தினத்திலே உபவாசமிருத்தல், சிவாலய

தரிசனம் செய்தல், சிவ தோத்திரங்கள் பாடல், சிவ மந்திரங்கள் செபித்தல், இரவு சிவ சிந்தனையுடன் கண் விழித்தல்

ஆகிய கருமங்களைச் சிரத்தையோடு செய்தல் மிகப் புண்ணியம் வாய்ந்ததாகும்.இவ்விரதத்தை சிவாலயத்தில் அனுஷ்டித்தல் சாலச் சிறந்ததாகும். இயலõதவர்கள், இல்லத்திலே புனிதமான முறையில்

அநுட்டிக்கலாம்; ஆனால் அன்றைய தினம் சிவாலய தரிசனம் செய்தாக வேண்டும். பகல் முழுவதும்

உண்ணாவிரதமிருந்து பின் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாமப் பூசைகளையும் சிவாலயத்திலே தரிசித்தல்

வேண்டற்பாலது. சிவராத்திரியின் போது மூர்த்திக்கு அபிடேகம் செய்தல், வில்வத்தால்அர்ச்சித்தல், வேதம் ஓதுதல், சிவ

புராணங்கள் படித்தல் பயன் சொல்லல், ஆகியனவும் மிகுந்த நற்பலன்கள் அளிக்கும். சிவராத்திரியன்று நித்திரை

விழிக்கும் போது அப்பொழுதை ஆத்மீக முறையில் சிவ வழிபாட்டிலேயே கழித்தல் வேண்டும். கேளிக்கைகளில் இத்

தவப் பொழுதைக் கழித்தலைத் தவிர்த்தல் அவசியம். சிவராத்திரி சிவ சிந்தனையிலே கழிக்கப்பட வேண்டும்.

சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் உள்ள முகூர்த்தம் இலிங்கோற்பவ காலம் எனப்படும். சிவ இராத்திரி

முழுவதும் நித்திரை விழிக்க இயலாதவர்கள் இலிங்கோற்பவ முகூர்த்தம் முடியும் வரை தன்னும் நித்திரை விழித்தல்

நன்று.

சிவராத்திரி

நித்திய சிவராத்திரி,

பட்ச சிவராத்திரி,

மாத சிவராத்திரி,

யோக சிவராத்திரி,

மகா சிவராத்திரி

என 5 வகைப்படும்.மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபிரான் இலிங்கத்தில் தோன்றினார். இத்தினமே மகா

சிவராத்திரியாகும். இத்தினத்தில் சிவ பூசை செய்து சிவ புண்ணியம் பெறலாம். சிவன் அபிடேகப்பிரியராதலால் இரவு

நான்கு யாமமும் இலிங்கோற்ப மூர்த்திக்கு நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் கருப்பஞ்சாறு, இளநீர்

ஆகியவற்றால் நான்கு யாமமும் அபிடேகம் செய்து அர்ச்சித்தல் முறையாகும்.

விரதமனுட்டிப்போர் அதிகாலை துயிலெழுந்து தூய நீராடி இல்லத்தில் சிவ வணக்கம் செய்த பின் சிவாலயம் சென்று

தரிசித்தல் வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் மிகச் சிறப்பõகும். மாலையில் மீண்டும் சிவாலயம் சென்று

இரவு நான்கு யாமமும் சிவதரிசனத்தில் ஈடுபட்டு அபிஷேக அர்ச்சனை பூசைகள் கண்டு களித்து மறுநாட் காலை

சூரியன் உதிப்பதற்கு 6 நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும். அந் நேரத்தில் அந்தணர் ஏழைகளுக்கு தானம்

செய்தலும் உகந்ததாகும்.
சிவலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுமே அடங்கியுள்ளனர். சிவலிங்கத்தின் பீடம் ஆவுடையார்

எனப்படும். இஃது சக்தியின் ரூபம். பாணம் சிவரூபம், பீடம் கிரியாசக்தி வடிவம், இலிங்கம் ஞான சக்தி வடிவம், பீடத்தின்

அடிப்பாகம் பிரம்ம ரூபம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், இக் கருத்தை பின்வரும் பாடல் மூலம் திரு மூலர்

விளக்கியுள்ளார்.மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலம் தரு ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சக்தி சிவன் வடிவாகிப்

பலம் தரு லிங்கம் பரா நந்தியாமே சிவ இரவில் இடம்பெறும் நான்கு யாமப் பூசை முறைகள் பற்றி நோக்குவோம்.முதலாம் யாமத்தில் பால், தயிர், நெய், கோமயம் கோசலம் ஆகியவை கலந்த பஞ்ச கவ்வியத்தால் இலிங்கோற்பவ

மூர்த்தியை அபிடேகம் செய்து பின்னர் வில்வம் தாமரை ஆகியவற்றால் மூர்த்தியை அர்ச்சித்தல் வேண்டும். நிவேதிக்க

வேண்டியது பயத்தம் பருப்பு, ஓத வேண்டியது யசுர் வேதம். இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்தத்தால் மூர்த்தியை

அபிடேகித்த பின் சந்தனம் தாமரை சாற்றி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேகித்து யசுர்வேதம் ஓத வேண்டும்.
மூன்றாம் யாமத்தின் போது மூர்த்திக்கு தேனால் அபிஷேகம் செய்து கற்பூரம் சாதி முல்லை மலர்கள், சாற்றி முக்கிளை

வில்வத்தால் அர்ச்சித்து எள் அன்னம் நிவேதித்து சாம வேதம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். நான்காம் யாமத்தில்

கருப்பஞ்சாற்றினால் சுவாமியை அர்சித்து அரைத்த குங்குமப்பூ, நந்தியாவட்டை மலர் சாற்றி, நீலோற்பவ மலரால்

அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து மூர்த்தியை வழிபட வேண்டும். ஓத வேண்டியது அதர்வேதம். சிவராத்திரியின்

பின்னணியில் உள்ள சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றை நோக்குவோம். ஒருகால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்குமிடையே தாமே பரம் பொருள் என்ற கர்வம் ஏற்பட்டது. இவர்களது அறியாமையை நீக்க சிவபெருமான் திருவுளங் கொண்டு தான்

ஒரு மாசி மாத அபர பக்கத்தில் சதுர்த்தசியில் பெரியதோர் சோதிப் பிழம்பாக பிரம்ம விஷ்ணுக்கள் முன் தோன்றி

இச்சோதியின் அடி முடியை எவர் காண்கின்றாரோ அவரே உண்மை பரம் பொருள் என அசரீரி மொழிந்தார்.அசரீரி வாக்குக் கேட்ட அவர்கள் பிரம்மன் அன்னப்பட்சி வடிவமெடுத்து சோதிப் பிழம்பான நுனியைத் தேடி மேல்

நோக்கிப் பறக்கலானார். விஷ்ணு பன்றி வடிவமெடுத்து சோதியின் அடியைத் தேடிப் பூமியைக் குடைந்த வண்ணம் கீழே

செல்லலானார். ஆனால் இருவருமே தமது முயற்சியில் வெற்றியடையவில்லை. விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்

கொண்டார். ஆனால் பிரம்மனோ தான் சோதிப் பிழம்பின் முடியை கண்டதாகவும் தனது கூற்றை நிரூபிக்க தாழம் பூவை

சாட்சி கூறவும் வைத்தார்.பொய்யுரைத்த பிரம்மனுக்கு பூவுலகில் ஆலயங்கள் அமைக்கப்படமாட்டா, என்றும் பொய்சாட்சி கூறிய தாழம்பூ சிவ

பூசைக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சிவபிரான் சாபமிட்டார். தமது அறியாமையும் அகந்தையும் ஒழிந்து சிவனே

பரம்பொருள் என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தனர். சோதிப் பிழம்பு மலையாக இறுகி, சிவனார் இலிங்க வடிவில்

காட்சி தந்தார். இந்த வகையில் சிவ முக்கியத்துவம் பெற்ற சிவராத்திரி விரதத்தை சைவ சமயிகள் யாவரும்

முறைப்படி அனுஷ்டித்து எல்லாம் வல்ல ஈசன் இன்னருள் பெற்றுய்ய வேண்டும்.

*
 சிவராத்திரி திருத்தகவல்கள்

பாரதத்தில் உள்ள பனிரெண்டு தலங்களை ஜோதிர்லிங்க தலங்கள் என்று சொல்வார்கள். அந்தத் தலங்களை தரிசிப்பது என்பது மிகவும் புண்ணியம் தரக்கூடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் சிவராத்திரியோடு தொடர்புள்ள தலங்கள் சில உள்ளன. இயன்றவர்கள் அருகிலுள்ள சிவத்தலத்துக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. திருவண்ணாமலை
பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி தேட நெருப்பாய் சிவபெருமான் நின்ற இடம் திருவண்ணாமலை. நெருப்பு உருவமாய் இருந்த சிவபெருமான் கல் மலையாய் மாறி காட்சிக் கொடுத்தார். அவரே அண்ணாமலையார் ஆனார். அவர் ஜோதி வடிவில் காட்சிக் கொடுத்ததைத்தான் ‘கார்த்திகை தீபம்’ என்ற குறியீட்டால் விளக்குகிறார். மகா சிவராத்திரி நாளில், லிங்கோத்பவ காலம் என்று சொல்லப்படும் காலத்தில் சிவன் ஜோதி உருவாக காட்சிக் கொடுத்தார் என்பார்கள். இந்த வகையில் திருவண்ணாமலை சிவராத்திரி விசேஷ தலமாகும்.
திருக்கடையூர்
எமனுக்கும் சிவராத்திரிக்கும் தொடர்புண்டு. சிவராத்திரி வேளையில்தான் பெருமானை பூஜிக்கும் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த எமன் உதைப்பட்டான்.
திருவைகாவூர் புராணத்தில் சருக்கம் என்ற பகுதியில் வேடன் ஒருவன் சிவலோகம் செல்ல அதைத் தடுத்தான் எமன். அதனால் ஈசனால் உதைப்பட்டான். அதன் பின்னர் வேடன் செய்த சிவபூஜையின் மகிமையும் சிவராத்திரி மகிமையும் அவனுக்கு சொல்லப்பட்டது என்ற செய்தி விவரிக்கப்பட்டிருக்கிறது.சிவராத்திரி நாளில் செய்யும் பூஜை ஆன்மாக்களின் வினையை நீக்கும்; எமவாதனை அகற்றும். சிவனுடன் ஐக்கியமாக்கும். ஆகையால்தான் பெரியவர்கள் சிவராத்திரி நான்காம் காலத்தில் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவார்கள். திருக்கடையூர் எமன் சிவபூஜை செய்த தலம், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்திலிருந்து சிவன் வெளிப்பட்ட தலம். எமனை சிவன் காலசம் ஹாரராக வந்து வதம் செய்தார். இந்த வகையில் திருக்கடையூரில் சிவராத்திரி விசேஷம்.

மகாசிவராத்திரி வழிபாடு உருவானது இங்கேதான்!


திருவைகாவூர்
திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி முதலான மகாசிவராத்திரி தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, திருவைகாவூர். வேடனொருவன் மரத்தினின்று சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அப்படி அந்த புராணக் கதை நிகழ்ந்த தலமே திருவை காவூர்தான் என்றறியும் போது, ஆச்சரியம் விழி விரிய வைக்கிறது. வேடன் ஒருவன் மானை பார்த்தான். அவன் அருகில் நகர்ந்து வருவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த வில்வாரண்யத்திற்குள் புகுந்தது. சற்று தூரத்திலிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் துரத்தியபடி உள்ளே நுழைந்தான். தவநிதி முனிவர், ‘‘மானைக் கொல்லாதே.

வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘எனக்கு இந்த மான்தான் வேண்டும்’’ என்று பிடிவாதமாக நின்றான். பிறகு, முனிவரைப் பார்த்து பேசினான்: ‘‘இதோ பாருங்கள், என் வேலை வேட்டையாடுவது. எனக்கு உங்கள் பேச்செல்லாம் புரியவில்லை. ஒழுங்காக மானை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டுக் கூட மானை பிடித்துச் செல்வேன்.’’ தவநிதி முனிவர் மெல்ல சிரித்துக் கொண்டார். ஈசன் ஏதோ ஒரு திருவிளையாடலை அன்றைய தினம் நிகழ்த்தப்போகிறான் என்று தவத்தால் கனிந்திருந்த அவர் மனசுக்குத் தெரிந்தது. ஆகவே வேடன் மிரட்டலுக்குத் தான் பயப்படாததுபோல அமைதி காத்தார்.
அதாவது ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், உன்னிடம் அந்த மானை ஒப்படைக்கமாட்டேன்’ என்றது அந்த மௌனம். அது வேடனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டியது. அவ ரைத் தாக்க கை ஓங்கினான். அப்போது அருகில் ஓர் உறுமல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிய வேடன் தன்னருகே ஒரு புலி நின்றிருந்ததைக் கண் டான். அதன் செந்தணல் விழிகள் கோபத்தை உமிழ்வதைக் கண்டான். அவ்வளவுதான் அங்கிருந்து மருண்டு ஓடினான். புலியும் அவனைத் துரத்தியது. ‘நன்றி மகாதேவா, இந்த அப்பாவி வேடனுக்கு நற்கதி அருளுங்கள்’ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார் முனிவர்.
ஓடிய வேடன் சற்றுத் தொலைவிலிருந்த வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். தன் விழிகளில் செம்மை நீக்கி கருணை ஒளிர, இவன் தானறியாமல் செய்யப்போகும் நல்வினைக்கு இவனுக்கு நற்கதி அருள தீர்மானித்தது புலியாய் வந்த சிவம். இரவு வந்தது. பசியும் பயமும் வேடனைப் பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல் வில்வத் தளிர்களை உருவி புலியின் மீது போட்டான். புலிச் சிவம் பரவசமாக அதனை ஏற்றுக்கொண்டது. அன்று இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்திலிருந்து இலைகளைப் பறித்து போட்டபடியே இருந்தான் வேடன். பொழுது விடிந்தது, மரத்துக்குக் கீழே தான் போட்ட வில்வ இலைகள் ஒரு பெரும் குவியலாக இருக்கக் கண்டான். புலியைக் காணோம். பயம் நீங்கியவனாக மரத்திலிருந்து இறங்கிய அவன் அந்த வில்வக் குவியலைத் தன் கைகளால் விலக்கிப் பார்க்க உள்ளே சிவ லிங்கம் ஒன்று கம்பீரமாகக் காட்சியளித்தது. பளிச்சென்று தோன்றிய பேரொளியில் ஈசன் அவனுக்கு தரிசனமளித்து, ஆட்கொண்டார்.
பிரம்மனும் விஷ்ணுவும் அந்த அதிசயத்தைக் காண அத்தலத்தில் தோன்றினர். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் வேடனை நெருங்கினார். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி விரட்டினார். சற்று தொலைவே இருந்த நந்திதேவரை ஈசன் பார்க்க, நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனை சற்று தூரத்தில் நிறுத்தினார். எமன் அங்கேயே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி, ஈசனைத் தொழ, அவரும் எமனை விடுவித்தார். இந்த புராணக் கதையை பல்வேறு விதங்களாக சொன்னாலும் இத்தலத்தில்தான் இதைப் பற்றி முழுமையாக அறிய முடிகிறது. ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை
யாராலும் தடுக்க முடியாது.
இத்தலத்தை எமதர்மனால் மிதிக்க முடியாது என்பதால் எமபயம் நீக்கும் தலமாகும். மகாசிவராத்திரியின் மகத்துவத்தை விளக்கும் தலமும் இ துதான்.
சிவராத்திரி தினத்தன்று தூங்கும் ஒரு குழந்தையின் நகையைத் திருடுவதற்காக ஒருவன் அதனைக் கொலை செய்து விட்டதாகவும் அடியார் பிரார்த்தனைக்கிரங்கி இறைவன் அக்குழந்தையை உயிர்பித்ததாகவும் இதனால் மகவருளீசர் எனவும் இறைவன் பெயர் பெற்றார். தன் தேயும் தன்மையை இறைவன் போக்கியதால் மகிழ்ந்த அக்கினி, ஒரு தீர்த்தம் அமைத்தது. பிரம்மனும் இங்கே ஒரு புஷ்கரணியை உருவாக்கி, ஈசனை வழிபட்டு, படைப் புத் தொழிலை பெற்றான். விஷ்ணு இத்தலத்தில் தவமியற்றியதால் அரியீசர் என்றும் இத்தல ஈசன் அழைக்கப்படுகிறார்.
ஒரு சமயம் சிவபெருமான் உமா தேவியோடு கயிலையிலிருந்து தென்னாட்டிற்கு எழுந்தருளினார். அப்போது காவிரியின் வடகரையில் மிகச் செழிப்பாக காணப்பட்ட இத்தலத்தினை கண்டு இங்கேயே எழுந்தருளினர். இதனைக் கண்ட பூமிதேவி, அவர்களை வணங்கி வழிபட, இத்தலம் பூமிபுரம் என்றும் பெயர் பெற்றது. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் பெருமானின் ஆலோசனைப்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று அவை தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத் திற்கு வில்வாரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேஸ்வரர் என்றும் பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
திருவைகாவூர், பச்சை வயல் நிறைந்த அழகிய கிராமம். கோயிலுக்கு எதிரேயே தீர்த்தம். தலத்தின் தொன்மையை கோயிலின் ராஜகோபுரத்தை பார்க்கும்போதேஉணரலாம். ராஜகோபுரத்திலிருந்து உள்கோபுரம் போகும் வழி நீண்டு நெடியதாக இருக்கிறது. ஈசனை நோக்காது, வாயிலை நோக்கிய, எமனைத் தடுத்து நிறுத்திய கோலத்தில் நந்திதேவரை தரிசிக்கலாம். கோயிலின் உள்ளே ஆங்காங்கு வேடன் மோட்சமுற்ற கதையை சுதையாகவும் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். கோயிலின் முகப்பு எளிய, சிறு மண்டபமாக அமைந்துள்ளது. தென்புறத்து வாயிலில் கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் சந்நதி அமைந்திருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்பது போன்று நந்தி தேவர் கிழக்கு நோக்கியுள்ளார்.
மிகப் பழமையான ஆலயமாதலால் உட்கோபுர வாயிலில் நிறைய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். மகா மண்டபத்தின் அருகேயே கையில் கோலோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். தட்சிணாமூர்த்தி நின்றகோலத்தில் மான், மழுவோடு ஜடாதாரியாக அருள்வது இத்தலத்தில்தான். அருகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாக துவார பாலகர்களாக பிரம்மனும் விஷ்ணுவும் நிற்கிறார்கள்! அடுத்து அர்த்த மண்டபத்திற்குள் உள்ள நந்திதேவரும் வாசலையே நோக்குகிறார். அவருக்குப் பின்னால் வில்வாரண்யேஸ்வரர் அற்புதக் காட்சி தருகிறார். அருட்பிரவாகமானது அலை அலையாக அவ்விடத்தில் பொங்கித் ததும்புவதை அனுபவித்துதான் உணர முடியும்.
கருவறை கோஷ்டத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் அத்தனை நேர்த்தி! அகத்தியர், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் பிரமிப்பூட்டுகிறார்கள். அவர்களிலும் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி அருள் உலகம் மட்டுமல்லாது, கலையுலகத்தின் பொக்கிஷமுமாகும். இவரை அருணகிரி நாதர் பாடி மகிழ்ந்திருக்கிறார். கோயிலை வலம் வந்து துர்க்கையை வணங்கி, அருகேயுள்ள அம்பாள் சந்நதிக்குப் போகலாம். சர்வஜன ரட்சகி எனும் திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலிக்கிறார். அழகிய தமிழில் வளைக்கை அம்மன் என்று பெயர். சர்வஜன ரட்சகி என்று மிகப்பெரிய பொறுப்பை தனது திருப்பெயரோடு தாங்கி நிற்கிறாள். அழகும் அருளும் சேர்ந்து இலங்கும் திருமுகம்.
அபய-வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள். அடுத்து நடராஜரை தனி சந்நதியில் தரிசிக்கிறோம். இக்கோயிலில் கொலுவிருக்கும் பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் திகழ்கிறார்கள். மூலவர் வில்வவனேஸ்வரரை தரிசித்துவிட்டு தல விருட்சங்களான வில்வ மரங்களையும் தரிசிக்கலாம்.
மகாசிவராத்திரி தினத்தின் சிறப்பை இத¢தலத்தில் விளக்க இம்மரங்கள் சாட்சிகளாக உள்ளன. வேடனுக்கு தஞ்சமளித்து பின் மோட்சமும் வாங்கித் தந்த இடமல்லவா! இந்த மரத்தை வணங்கி, வில்வ மரத்தின் மேற்புறத்தில், சப்த மாதர்கள் தவஞ்செய்யும் காட்சியை கண்டு, மேற்கு பிராகாரத்திலுள்ள வல்லப விநாயகரை வழிபடலாம்.
முதலாம் குலோத்துங்கச் சோழன் இந்த கோயிலுக்காக கொடுத்த நிலங்கள் பற்றி நிறைய கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. மாசி மாத மகா சிவராத்திரி விழா நான்கு கால பூஜையும் வேடனுக்கு மோட்சமளித்த நிகழ்வும் அமாவாசை அன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் தீர்த்தவாரியும் நடை பெறுகின்றன. நோயின் கடுமை தாங்க முடியாதவர்கள், மரண பயம் கொண்டவர்கள், இத்தலத்தை மிதித்தவுடன் குணமாகிறார்கள். இத்தலத்தின் எல்லையில் நின்று, ‘‘அவரைக் காப்பாற்றுங்கள்’’ என்று வெறுமே சொல்லிவிட்டால் கூட போதும் என்கிறது, தலபுராணம். ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான, எமபயம் போக்கும் தலம் இதுவேயாகும்.


*http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=460:2010-10-05-03-00-29&catid=59:cricket&Itemid=387

*


*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Saturday, November 26, 2011

திருநீறு எனும் விபூதி மகிமை 
திருநீறின் மஹிமையைக் கூறும் சம்பவம் மதுரையில் நடைபெற்றது. மதுரையை ஆண்டுகொண்டிருந்த நெடுமாற பாண்டியனுக்கு சமணமதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், அவன் சமணத்தை தழுவியிருந்தான். சைவர்களான அவன் மனைவி மங்கையர்கரசிக்கும் அமைச்சர் குலச்சிறையார் இதில் பெரும் வருத்தம். சமண்த்துறவிகள் மதபேதத்தாலும் மதியிழந்து, மன்னனின் சம்மதத்துடன், திருஞானசம்பந்தருக்கு தீ
வைத்துவிடுகின்றனர். 'அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும்' என்று ஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிடுகிறார்.

"செய்யனே திருவாலவாய் மேவிய
ஐய்யனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்காகவே"

மன்னனின் மனைவியும் அமைச்சரும், மிகுந்த சிவபக்தர்கள் என்பதால், இரங்கி, தீயை மெல்லத் தாக்கப் பணித்தாராம் சம்பந்தர். தீயின் வெப்பம் மெல்ல உடலில் பரவ, அதன் தாக்க்த்தை தாளாது மன்னன் துடிக்க, சமணர்கள் செய்த எவ்வித மந்திரங்களும் சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. மங்கையர்க்கரசி, குலசேகர பாண்டியன் அழைப்பின் பேரில் சம்பந்தர் ஆஜராகி, மன்னனை குணப்படுத்துகிறார். மந்திரம் ஜபித்து திருநீறு பூசி குணமடையச் செய்கிறார்.

"
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே."

என்ற திருநீற்றுப்பதிகத்தை பாடுகிறார்.

சமணர்களுக்கு சைவத்தின் மீதும் சம்பந்தர் மீதும் விரோதம் இருந்தபடியால், அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று ஒதுக்கி விட்டு, தங்களோடு வாதமிட அழைப்பு விடுக்கின்றனர். அனல்வாதம் புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும் நீரிலும் இட்டாலும், எந்த ஏடு எரியாமல், மூழ்காமல் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்படவேண்டும், என்பது நிபந்தனை. சம்பந்தர் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடுகிறார். சமணர்கள் சிலர் மதம் மாறுகின்றனர். வேறுசிலர் கழுவில் ஏறி உயிர்த் துறக்கின்றனர் என்று சரித்தரம் அழுத்தமாக நடந்தவற்றை எடுத்துரைக்கிறது. அத்தகைய மகிமை வாய்ந்ததாம் திருநீறு. பக்தியுடன் அணிவோருக்கு நல்லருள் கிட்டும் என்பது திண்ணம்.

சிவபெருமானை தியானித்து தண்ணீருடன் சேர்த்துக் குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்ளல் வேண்டும். இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். மூன்று வகைப்பாவங்களைப் போக்கும் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை.

முதல் கோடு: அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு: உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு: : மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.
சிவபெருமானை எண்ணி விபூதியை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாபங்களையும் நீராக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.

நன்றி தினமலர்!


**************

திருநீறு எனும் விபூதி மகிமை:-

http://www.brahmintoday.org/issues/issues-001/bt0811_holy-ash.php


***************

விபூதி இயல் :-


http://www.saivaneri.org/eswaramoorthypillai/thiruneeru-viboothi-meaning.htm


**************


http://noolaham.net/project/18/1764/1764.htm


****************

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்.

 

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. ஒன்று அவன்தானே என்கிறது திருமந்திரம்.இதனை மாணிக்கவாசகர்
″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ - திருவெம்பாவை

என்றார். இவை சைவ மரபின் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்துவன.
இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.
இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து(உள்பொருள்) ஆகவும் சித்து(அறிவுடையபொருள்) ஆகவும், ஆனந்தம்(இன்பமயமானபொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.
இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.
″கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை ″ - திருக்குறள்


தன்வயத்தனால்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்
பேரருள் உடைமை
முடிவில் ஆற்றலுடைமை
வரம்பில் இன்பமுடைமை
ஆகிய எண்குணங்களையும் உடையவன்.

இறைவன் ஒருவனே அவனைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றோம். ஏனெனில் அவ்வடிவங்களில் இறைவன் எமக்கு அருள்பாலிக்கின்றான். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், விநாயகன், முருகன், இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி போன்றவை அனைத்தும் அத்தகைய வடிவங்களே.
″யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் ″

எனச் சிவஞானசித்தியார் கூறுவது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகிறது
இறைவன் உருவமற்றவன். அவனை மனத்தில் நினைத்தற்காகவும், மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம்.
பல்வேறு மூர்த்திகளுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்தையும் சிவப்பரம்பொருளாகவே காணும் சிவநெறி எம்மிடையே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இது எங்கள் சைவ மரபின் தனித்துவமாகும்.
″ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடி நாம்தௌ;ளேனம் கொட்டாமோ″ - திருவாசகம்

″மெய்ப்பொருள் ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பல பெயர்களால் அழைக்கின்றார்கள். ″ என்னும் வேதவாக்கு இறைவன் ஒருவனே என்னும் கோட்பாட்டை மேலும் வலியுறுத்துவதாக அமைகின்றது.
அன்பே சிவம்
″அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″ – திருமூலர் திருமந்திரம்

″அன்பே சிவம் ″ என்றார் திருமூலர். அன்பு வேறு சிவம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அன்புதான் சிவம் ஆகவும் சிவம் தான் அன்பு ஆகவும் விளங்குகின்ற உண்மையை இத்திருமந்திரப் பாடல் உணர்த்துகிறது.
அன்புதான் சிவம் அதனால் அன்பினை உள்ளத்தில் இருத்திää அதனை எப்பொழுதும் நினைந்து செயற்படுதல் நம் கடமையாகும். அன்பையே மலராகவும், பத்திரங்களாகவும், நீராகவும், மந்திரங்களாகவும் கொண்டு அர்ச்சிக்கலாம். படையல் செய்யலாம். பிரசாதமாக ஆகத் தமர்லு பிறர் என்னும் வேறுபாடு இன்றிச் சமமாக எல்லோருக்கும் வழங்கலாம். அதனை எல்லோருக்கும் வழங்குவதில் ஏற்படும் ஆனந்தம் எல்லையற்றது.
சிவத்தியானமாக, சிவ வழிபாடாகக் கருதிää தினந்தோறும் பிற உயிர்களுக்கு அன்பு செய்து வரவேண்டும். அப்போதுதான் அது மாபெரும் சக்தியாக அமையும். அன்பினால் ஆகாதது ஒன்றும் இல்லை. அன்பு வாழ்வுதான் சைவசமய வாழ்வு. அன்புநெறியே சைவநெறி.
இறைவன் எவ்வழிää அவ்வழியிலேயே அடியாரும் ஒழுக வேண்டும். அதுதான் உண்மைச் சைவர்கள் ஒழுகும் வழி. இறைவன் அன்பே வடிவானவன். எனவேää சைவர்களும் அவ்வழி நின்று வாழவேண்டியது முறையாகும்.
சைவ சமயத்தின் நோக்கம் உயிர்கள் கடவுளை அடைதலாகும். அதற்குச் சைவர்கள் கடவுள் மீது பக்தி செலுத்துதல் வேண்டும். கடவுளைக் காலையிலும் மாலையிலும் மற்ற வேளைகளிலும் பூசித்தல், தியானித்தல் திருக்கோயிலில் வழிபாடு செய்தல், அவன் புகழ் பாடுதல், பரவுதல் முதலியன மூலம் பக்தி செலுத்தலாம். அதேவேளை, இந்த உலகிலுள்ள அனைத்திலும் கடவுள் நிறைந்திருப்பதால், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல் அவசியமாகின்றது. உயிர்களுக்குச் செய்யும் அன்பு இறைவனுக்குச் செய்யும் அன்பாகும். உயிர்களுக்குச் செய்யும் தீமை இறைவனுக்குச் செய்யும் தீமையாகும்.

பிற உயிர்களுக்கு அன்புசெய்தல், பேணுதல் என்பன அன்பே வடிவான கடவுளுக்குப் பிரியமான தொண்டாக அமையும். அதனூடாகச் சமய நோக்கமான கடவுளைப் பற்றுதல் என்பதை இலகுவில் அடைய முடியும். எல்லா நன்மைகளும் அன்பிலிருந்துதான் ஊற்றெடுக்கின்றன. அன்பே சிவம். எல்லாத் தீமைகளும் அன்பின்மையிலிருந்தே உருவாகின்றன. அன்பின்மை சிவநிந்தை ஆகும். அது சுயநலத்தை வளர்க்கின்றது. சிவத்தை மறுப்பவர்கள் அன்பை மறுக்கின்றார்கள். அன்பை மறுப்பவர்கள் வாழ மறுக்கிறார்கள் என்னும் உண்மையைச் சைவநெறி காட்டுகிறது.
″எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே″ – தாயுமானவர்

எனத் தாயுமானவர் இறைவனை வேண்டுகிறார். ″அன்பின் வழியது உயிர் நிலை″ என்றார் திருவள்ளுவர். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவதையும் இரக்கம் காட்டுவதையும் சைவர்கள் வாழ்க்கைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிந்தனை, பேச்சு, செயல் என்பவற்றினால் அன்பு வெளிப்படும்போதுதான் சிவ தரிசனம் செய்வதாக அமைகின்றது. அப்போது தான் சர்வம் சிவமயம் என்பது உணரப்படுகிறது.
″யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி″ என்து திருமூலர் திருமந்திரம். கடவுள் எம்மீது கருணை கூர்ந்து ஈய்ந்த பொருளை நாம் மட்டும் அனுபவிக்கக்கூடாது. பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதலே முறையாகும்.
பசித்து வந்தவர்களுக்கும்ää உதவி வேண்டியவர்களுக்கும் அவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும். நலிந்தோர்க்கு உதவுதல், அநாதைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், நோயாளர், வயோதிபர், குழந்தைகள் என்போர்க்கு உதவுவது புண்ணியங்களாகும். தன்னல மறுப்புää பிறர்துயர் துடைத்தல் என்பவற்றைச் சைவ நெறி மிக உயர்வாகப் போற்றுகிறது. அவை அன்பின் செயற்பாடுகளாக விளங்குகின்றன. அன்பே சொரூபமாய் விளங்குவன யாவும் வணக்கத்திற்குரியவை. அந்த வகையில் கடவுள், தாய், தந்தை, பெரியோர், குரு ஆகியோர் வணக்கத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். அன்பே சிவம், சிவபெருமானைச் சகல சீவ தயாபரன் என்றும், கருணாமூர்த்தி என்றும், அன்பினில் விளைந்த ஆரமுது என்றும் நூல்கள் சிறப்பிக்கின்றன. அன்பு நெறியை மேற்கொள்வதன்மூலம் மனிதர், சிறந்த நிலையை எய்துவதுடன், மேலும் வளர்ச்சிபெற்று அருள், கருணை கைவரப்பெறும் போது தெய்வீக வாழ்வு அடையப்பெறுகின்றனர்.

இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது. உருவம் உள்ளத்தில் பதிவது போல அருவம் பதிவதில்லை. ஆதலால் இறைவனின் திருவுருவம் அழகிய விக்கிரகங்களாக அமைக்கப்பட்டு திருக்கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது. பிள்ளையார், சிவலிங்கம், அம்பாள், முருகன், விஷ்ணு, துர்க்கை, வைரவர், சூரியன், ஐயப்பன் முதலிய பலவித வடிவங்களிலே வழிபாடுகள் நடைபெறினும் எல்லா உருவங்களிலும் சிவனே உறைகிறான் என்பதே சைவத்தின் நிலைப்பாடு.
.
 

*

http://sivanarul-sivamayam.blogspot.com/2010/08/blog-post_11.html


*


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

இறை வழிபாடும் ஆலய தரிசனமும்**************


http://sivathamiloan.blogspot.in/2009/08/blog-post_20.html

*************

கோயில் என்னும் அற்புதம் :-

http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

**************

ஆலயங்களிலே பக்தர்கள்”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?


அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.****************


தானங்களின் பலன் :-தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்?

நெய் தானம் - பினி நீங்கும்

அரிசி தானம் - பாவம் அகலும்

தேங்காய் தானம் - காரிய வெற்றி

ஆடை தானம் - ஆயுள் விருத்தி

தேன் தானம் - புத்திர விருத்தி

அன்னதானம் - ஆண்டவன் அருள்


***************


எப்போது தரிசனம் கூடாது?


காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிட கூடாது. சிவாச்சாரியார முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும்.
திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக் கூடாது.

கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

ருத்ராட்ஷம்

http://omnamashivaayaa.blogspot.com/*ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள் :-


*


http://siththarkal.blogspot.com/2011/04/blog-post_18.html


*

ருத்ராட்சப் பிரயோகம்:-

http://www.mediafire.com/?5ogw5w6h50554x5திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

பரிகார ஸ்தலங்கள் ஒரு பார்வை!

 

மனிதப்பிறவி என்பதே மிகப் பாவியானது என்கிறார்கள் யோகிகள். எனவேதான் இன்னும் ஒரு பிறப்பு என்பதே வேண்டாம். இறைவா உன்னிடத்தில் என்னை சேர்த்துக் கொள். மீண்டும் என்னை இப்பூவுலகில் பிறக்க வைத்து ஊன் உடலால் உழல விடாதே என்று வேண்டி தவமிருப்போர் பலர்.

மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை.

இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.

நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் தட்டிப்போவோருக்கு - திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).

மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்).

மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது.

குருவருள் பெற (குருஸ்தலம்) - ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்).

தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது.

பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் (கடலூர்) சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும்.

கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும்.

பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்).

விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். சிவகங்கையில் உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.

வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா, திருப்புவனம் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.

சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.

ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில் .*

http://deivathamizh.blogspot.com/2010/12/blog-post.htmlதிருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்