Saturday, August 3, 2013

டெங்கு காய்ச்சல் குணமடைய, திருநீலகண்டப் பதிகம் ஓத வேண்டும்

 
 எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெறுவதற்கும், விஷசுரம், விஷக்கடி முதலியன நீங்குவதற்கும் தொண்டையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி குரல் வளம் பெறுவதற்கும், செய்வினை, பில்லி, சூனியம் பாதிக்காமல் இருக்கும் பொருட்டும், துணிவுடன் செயலாற்றுவதற்கும், இளைய சகோதரன் நலம் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்


Nalamigu Padhigangal 40 Vol 2

திருச்சிற்றம்பலம்


நோய்களும் துன்பங்களும் நீங்க:
கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய குளிர்காய்ச்சலைப் போக்கியருள பாடிய திருநீலகண்டப்பதிகம்.
‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ 

 
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1116


திருச்சிற்றம்பலம்


 சுண்ணாம்புக் காளவாய்ச் சூட்டையும் குளிர்வித்த அப்பர்
பெருமானின் ‘மாசில் வீணையும்’ என்ற பதிகம்.

திருச்சிற்றம்பலம்


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலு
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே


ஆளா காராளானாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்மை யுணற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே


நடலை வாழ்வு கொண்டென் செய்தீர் நாணிடலீர்
சுடலை சேர்வதுசொற்பிரமாணமே
கடலினஞ்ச முதுண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்தார் முனிபண்டமே.


பூக்கைக் கொண்டவர் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்ட ரனாம நவிற்றிலார்
ஆக்கைக் கேயிரை தேடியலமந்து
காக்கைக் கேயிரையாகிக் கழிவரே


குறிகளு மடையாள முங்கோயிலும்
நெறிகளு மவர் நின்றதோர் நேர்மையும்
அறியவாயிர மாரண மோதிலும்
பொறியிலீர் மனமென்கொல் புகாததே


வாழ்த்த வாயும் நினைக்க மனநெஞ்சும்
தாழ்த்த சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேநெடுங்காலமே


எழுது பாவை நல்லார் திறம்விட்டு நான்
றொழுதுபோக நின்றேனையுஞ்சூழ்ந்து கொண்
டுழுத சால்வழியே யுழுவான் பொருட்
டிழுதை நெஞ்சமிதென் படுகின்றதே

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்கமிக்கவர் பூவு நீறுங் கொண்டு
நக்கு நிற்பவரவர் தமை நாணியே


விறகிற் றீயினன்பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவு கோனட்டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக்கடைய முன்னிற்குமே.

திருச்சிற்றம்பலம்


http://mysangamam.com/?p=21758

திருச்சிற்றம்பலம்

http://vivekaanandan.blogspot.in/2013/05/blog-post_2446.html

திருச்சிற்றம்பலம்


அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று
சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான்
கழல் போற்றுதும் நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

காவினை இட்டும் குளம் பல
தொட்டும், கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து, மலர்அடி
போற்றுதும், நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்
மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு
எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும்
மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

விண்உலகு ஆள்கின்ற
விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும்
தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர்!
உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

மற்று இணை இல்லா மலை திரண்டு
அன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது
ஒழிவதும் தன்மை கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து,
உம்திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

மறக்கும் மனத்தினை மாற்றி, எம்
ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான், திருந்து
அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர்கொடு வந்து, உமை
ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை
கடிந்து, உம்கழல் அடிக்கே,
கருகி மலர்கொடு வந்து உமை
ஏத்ததும்; நாம் அடியோம்;
செருவில் அரக்கனைச் சீரில்
அடர்த்து அருள்செய்தவரே,
திருஇலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

நாற்றமலர் மிசை நான்முகன்
நாரணன் வாது செய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும்
தொடர்வு அரியீர்;
தோற்றினும் தோற்றும்; தொழுது
வணங்குதும்; நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

சாக்கியப் பட்டும் சமண் உரு
ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப்
போகமும் பற்றும் விட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்
அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

பிறந்த பிறவியில் பேணி எம்
செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில்
இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடும் கூடுவரே

திருச்சிற்றம்பலம்.


திருச்சிற்றம்பலம்

வெப்ப நோய்கள் நீங்க:

சம்பந்தப் பெருமான் மதுரை மன்னன் கூன்பாண்டியனின் வெப்புநோய் தீர்த்தருளிய
திருநீற்றுப்பதிகம். மற்றும் சுண்ணாம்புக் காளவாய்ச் சூட்டையும் குளிர்வித்த அப்பர்
பெருமானின் ‘மாசில் வீணையும்’ என்ற பதிகம்.


 ஏவல், பில்லி, சூன்யம், காற்று சேஷ்டை போன்ற துன்பங்கள் விலகும். எதிரிகளின் பொறாமை, கண் திருஷ்டி தோஷங்கள் விலகும். கன்னிப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய பதிகம். திருநீற்றை நீரில் குழைத்து கை, கால்களில் 36 இடங்களில் காப்பாகப் பூசி இப்பதிகத்தை ஓதி வருதல் சிறப்பு. காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் நீராடி முறையாக திருநீறணிந்து இப்பதிகத்தை ஓதி வந்தால் தியானம் எளிதில் கை கூடும். முழுமையான ஆரோக்யம் கிட்டும்


Thevaram

*
 "பிணிகளை நீக்கும் திருநீற்றுப் பதிகம்"


  வெப்பம் மிகுதியால் ஏற்படும் சுரநோய், பித்தசுரம் முதலிய நோய்கள் நீங்குவதற்கு ஓதவேண்டிய பதிகம் திருஞானசம்மந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திரு நிறே.


பொழிப்புரை
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே


பொழிப்புரை

குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.


பொழிப்புரை
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.


பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.


பொழிப்புரை
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.


பொழிப்புரை
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை

கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.


இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பொழிப்புரை

பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை

நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை

மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.


ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

பொழிப்புரை

ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

*

தமிழ் வேதங்களாகிய திருமுறைகளினால்  பெற முடியாத ஒன்றை வேறு எம்முறையிலும் பெறவே முடியாது .


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

1 comment:

Saravanan said...

Excellent.