Wednesday, August 21, 2013

பெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்றுமையாய் நீண்ட நாட்கள் வாழ ஓத வேண்டிய திருப்பதிகம்.

திருவாரூர் திருவாதிரைத் திருப்பதிகம்

 

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

  முத்து விதான மணிப்பொற்

 

திருச்சிற்றம்பலம்


208முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.1
209நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.2
210வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.3
211குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.4
212நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.5
213விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.6
214செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.7
215முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.8
216துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.9
217பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4.21.10

திருச்சிற்றம்பலம்
*


திருவாதிரை சைவர்கள் கொண்டாட வேண்டிய முக்கியமான பண்டிகை என்கிறார் என் திருமுறை ஆசிரியர். திருவாதிரைப் பற்றிய குறிப்புகள் நம் திருமுறைகளிலோ, அல்லது தமிழ் இலக்கியங்களிலோ இடம் பெற்றிருக்கின்றனவா?

இடம் பெற்றிருக்கின்றன. திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய பதிகத்தில் சைவசமயத் தொடர்பான பல விழாக்களைக் குறிப்பிட்டு அவற்றைக் ’காணாதே போதியோ பூம்பாவாய்’ எனக் கூருகின்றார். அப்பதிகத்தில் ஒரு பாடலில் ’காபலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்கின்றார். அப்பர் தேவாரத்தில் ’திருவாதிரைத் திருப்பதிகம்’ என்று ஒரு பதிகமும் (10 பாடல்கள்) அமைந்துள்ளது. திருவாதிரையின் சிறப்பினைக் கூறும் இப்பதிகத்தின் ஒவ்வோரு பாடலின் இறுதி வரியிலும் ’ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’என முடிகின்றது. சேக்கிழாரின் பெரிய புராணத்தில் அப்பர் புராணம் (2398), சம்பந்தர் புராணம்(1505) ஆகியப் பாடல்களில் திருவாதிரைப் பற்றிய குறிப்பு வருகின்றது. 9ம் திருமுறையான திருப்பல்லாண்டும், கொடிக்கவி என்னும் சாத்திர நூலும் எழுந்த நாள் திருவாதிரை நன்னாநாளே ஆகும். தமிழ் இலக்கியத்தில் பரிபாடலில் 8வது செய்யுளில் ”ஆதிரை முதல்வன்’ என்னும் சிவபெருமானைக் குறிக்கும் ஒர் தொடர் வருகின்றது. கலித்தொகை அதன் பகுதியாகிய நெய்தற்கலியில் ’அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த’ என்னும் தொடர் (கலி 150-20), திருவாதிரை நாளன்று சிவபெருமான் அணிகளை அணிதிருப்பதுப் போல அமைந்த ஒரு செண்பக மரம் பற்றிய தொடர் வருகிறது.


*

தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நீங்க ..... 

 

 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_4842.html


 

திருச்சிற்றம்பலம்

 

 

தம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்

 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_3467.html

 

திருச்சிற்றம்பலம்

 

 

குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்வதற்கு...... 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_7675.html

 

 

திருச்சிற்றம்பலம்

  

 

திருச்செங்கோடு மலை சிறப்பு 

 

http://vivekaanandan.blogspot.in/2013/05/blog-post_2446.html


 

திருச்சிற்றம்பலம்

 

பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம்

http://vivekaanandan.blogspot.in/2012/12/blog-post_2201.html
 

திருச்சிற்றம்பலம்

 
 
*
 


என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 

*

திருமுறைகளின் சிறப்பு:-
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால். 
*
 பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள்:-
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.

*
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்


திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: