Sunday, August 25, 2013

கரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கருகாவூர் தேவாரத் திருப்பதிகம்

 

 

திருக்கருகாவூர்

  முத்தி லங்குமுறு வல்லுமை

 

திருச்சிற்றம்பலம்
488 முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
01
489..விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
02
490. .பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகுழை யாவழை யாவருங்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
03
491. .பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
04
492. .மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
05
493..மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
06
494..வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
07

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 08
495..பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
09
496..போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
10
497..கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர், தேவியார் - கரும்பனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்
*

கர்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ


கர்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ. திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து வணங்கி மலை ஏறிச் செல்லவும். மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும் தரிசனம் செய்யவும். பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும் கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவர்த்தி தருவதே மேற்கண்ட முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும். சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில் இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு.

பிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம் 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_891.html

 


திருச்சிற்றம்பலம்

 

 

நன்மக்கட்பேறு அடைய 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_8474.html

 


திருச்சிற்றம்பலம்

 

 

குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_11.html

 


திருச்சிற்றம்பலம்

 

சுகப் பிரசவம் அமைய - திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் 

 

http://vivekaanandan.blogspot.in/2012/04/blog-post_12.html
திருச்சிற்றம்பலம்

 

*திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

 

No comments: