Saturday, August 10, 2013

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வராமல் இருக்கவும், ஆயுள் விருத்திக்காகவும் ஓத வேண்டிய பதிகம்


மரணபயம் நீங்க
காலபாசத்திருக்குறுந்தொகை

 

 

“தமிழ் மகா மிருத்துஞ்செய மந்திரம்” எனப்போற்றப்படும் அப்பர் பெருமானின் காலபாசத் திருக்குறுந்தொகை.

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5092திருச்சிற்றம்பலம்


பாடியவர்: திருநாவுக்கரசர்
 காலபாசத் திருக்குறுந்தொகை

கண்டு கொள்ளரி கண்டு கொள்ளரி யானைக் கனிவித்து
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடு கொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே

நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்லவடம்இடுவார் கட்கு
கொடுக்கக் கொள்க எனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீர் இங்கு நீங்குமே

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.

சாற்றினேன் சடை நீள்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்ப்
போற்றி என்றுரைப் பார்புடை போகலே

இறையென் சொல்மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப்பெருமான் தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வார் எதிர் செல்லலே

வாம தேவன் வளநகர் வைகலும்
காமம் ஒன்றிலராய்க் கைவிளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசன் அடியரை
விடைகொள் ஊர்தியினான அடியார்குழாம்
புடைபுகாது நீர்போற்றியே போமினே

விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நீச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்சம் எய்தி அருகணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே

இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாøயுஞ் சாரலே.

மற்றுங் கேண்மின் மனப்பிரிப்பு ஒன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடையான் அடியே அலால்
பற்று ஒன்றில்லிகள் மேற்படை போகலே

அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றிட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்குப் பேர்மின்கள் மற்று நீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே.


திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

No comments: