Monday, August 12, 2013

தம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்

தாம்பத்திய உறவு முழு நிறைவுடன் நடைபெறுவதற்கும், தம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருமணஞ்சேரிஅயில் ஆரும் அம்பு அதனால் புரம் மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே


விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை நீற் சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாட வல்லார் வினை பாறுமே


எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை
வைப்பான் மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின்றார் வினை வீடுமே


விடையானை மேல் உலகு ஏழும் இப்பார் எல்லாம்
உடையானை ஊழி தோறுஊழி உளதுஆய
படையானை பண்இசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே


எறி ஆர் பூங்கொன்றையினோடும் இளமத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைத்தானை
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்ப வல்லார்க்கு இடர் சேராவே


மொழியானை முன்ஒரு நால்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண்இசை ஆன பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே


எண்ணானை எண் அமர்சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே


எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள்
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை
மடுத்து ஆர வண்டு இசைபாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார், பெரியோர்களே


சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மாதவர் ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான், கழல் ஏத்துமே


சற்றேயும் தாம்அறிவுஇல் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர்மேல் வினை பற்றாவே


கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண் ஆரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ஆரப் பாடவல்லார்க்கு இல்லை, பாவமே


திருச்சிற்றம்பலம்

*

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாஞ்சியம் தேவாரத் திருப்பதிகம்

 

(இரண்டாம் திருமுறை 7வது திருப்பதிகம்)

திருவாஞ்சியம் 

 

வன்னிகொன்றை மதமத்தம்.
 
 
திருச்சிற்றம்பலம்
67வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.
01
68கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.
02
69மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.
03
70 சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.
04
71கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.
05
72அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.
06
73 விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.
07
74மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.
08
75செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.
09
76பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.
10
77தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர், தேவியார் - வாழவந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
 

திருச்சிற்றம்பலம்

 

தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நீங்க ..... 

 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_4842.html

 திருச்சிற்றம்பலம்குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்வதற்கு...... 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_7675.html

 திருச்சிற்றம்பலம்

 

 

பெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்றுமையாய் நீண்ட நாட்கள் வாழ ஓத வேண்டிய திருப்பதிகம். 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_21.html

 திருச்சிற்றம்பலம்

 

 

திருச்செங்கோடு மலை சிறப்பு 

 

http://vivekaanandan.blogspot.in/2013/05/blog-post_2446.html

  

 

 

திருச்சிற்றம்பலம்

 

பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம்

http://vivekaanandan.blogspot.in/2012/12/blog-post_2201.html
 
 

திருச்சிற்றம்பலம்

  *


திருமுறைகளின் சிறப்பு :-

திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால். 
*
 பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள் :-

திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.

*

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: