Wednesday, August 7, 2013

பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குவதற்கு


 


 பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குவதற்கும், சிறை வாசத்தைத் தடுப்பதற்கும், சிறையிலிருந்து விரைவில் விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை


செய்யனே, திரு ஆலவாய் மேவிய
ஐயனே, அஞ்சல் என்று அருள்செய்; எனைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்,
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே


சித்தனே, திரு ஆலவாய் மேவிய
அத்தனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
பத்திமன், தென்னன், பாண்டியற்கு ஆகவே


தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எக்காரம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே


சிட்டனே, திரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்தியனே, அஞ்சல் என்று அருள்செய்;
துட்டராம் அமணர் கொளுவும் சுடர்
பட்டிமன், தென்னன், பாண்டியற்கு ஆகவே


நண்ணலார் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எண்ணிலா அமணர் கொளுவும் சுடர்
பண்இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே


தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல் என்று அருள், ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன், பாண்டியற்கு ஆகவே


செங்கண் வெள்விடையாய், திரு ஆலவாய்
அங்கணா, அஞ்சல் என்று அருள்செய்; எனை
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன், பாண்டியற்கு ஆகவே


தூர்த்தனன் வீரன் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
ஏத்திலா அமணர் கொளுவும் சுடர்,
பார்த்திவன் தென்னன், பாண்டியற்கு ஆகவே


தாவினான் அயன் தான் அறியா வகை
மேவினாய் திரு ஆலவாய், அருள்;
தூவிலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன், பாண்டியற்கு ஆகவே


எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
குண்டராம் அமணர் கொளுவும் சுடர்,
பண்டிமன் தென்னன், பாண்டியற்கு ஆகவே


அப்பன், ஆலவாய் ஆதி, அருளினால்
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரை பத்தும்
செப்ப வல்லவர், தீது இலாச் செல்வரே

திருச்சிற்றம்பலம்.


*

 இத்திருப்பதிகத்தின் கருத்து ஞானவெற்றி. ஞானவெற்றி என்பது திருவருள் வெற்றியாகும். தனக்கு மாறாகச் செய்யும் உயிர்களின் போக்கினை ஒறுத்தடக்கி நன்னெறியில் செலுத்துதல் ஞானவெற்றி. தில்லையில் மாணிக்கவாசக சுவாமிகள் தங்கியிருந்த காலத்தில் மகளிர் சிலர் கூடி, கைகள் இரண்டையும் மேலே தூக்கி இரு பக்கமும் நீட்டி, வானில் பறப்பது போல், இரு கைகளையும் சேர்த்துப் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு பாடி ஆடும் ஓர் ஆட்டவகையான, திருவுந்தியார் விளையாடுதலைக் கண்டு அவர்கள் வாய் மொழியாக இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார். 'திருவுந்தியார்' எனப்படும் இந்த இருபது பாடல்களிலும், மும்மல காரியம் ஆகிய முப்புரங்களும் சிவபெருமானது பேராற்றலினால் அழிந்ததையும், தக்கன் யாகம் ஒழிந்ததையும், அதனால் சூரியன், இந்திரன் முதலிய தேவர்களின் அகங்காரம் ஒடுங்கியமையும் பற்றியே கூறப்பட்டுள்ளது. இறைவரது வெற்றியைப் போற்றுவதால் நாமும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. இதில் ஐயமே வேண்டாம், பகைமை, விரோதம் யாவும் நீங்கி நலம் பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், மணிக்கவாசகர் சுவாமிகள் பாடிய இத்திருப்பதிகம் பெரிதும் உதவும். திருவாசகத்தின் பெருமைக்கு மாணிக்கவாசகர் கூற இறைவரே தம் திருக்கையால் எழுதிக் கொண்டார் என்ற வரலாறே சான்று.


வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற


ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற


தச்சு விடுத்தலும் தாமடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற


உய்யவல்லார் ஒருமூவரைக் காவல்கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற


ஆவா திருமால் அவிர்ப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தா னென்றுந்தீ பற
சதுர்முகன் தாதையென் றுந்தீ பற


வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தா னென்று உந்தீ பற
கலங்கிற்று வேள்வி யென்று உந்தீ பறபார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேஏடி உந்தீ பற
பணைமுலை பாகனுக்குந்தீ பற


புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தனில் ஏறினார் உந்தீ பற
வானவர் கோனென்றே உந்தீ பற


வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற


ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்றுந்தீ பற


உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்த வாறுந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற


நாமகள் நாசி சிரமபிர மன்படச்
சோமன் முகம் நெரித்துந்தீ பற
தொல்லை வினை கெட உந்தீ பற


நான்மறை யோனும் மகத்தியமான்படப்
போம்வழி தேடுமாறுந்தீ பற
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற


சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்த வாறுந்தீ பற
மயங்கின்று வேள்வி என்றுந்தீ பற

 .
தக்கனார் அன்றே தலையிழந்தார் தக்கன்
மக்களைச் சூழநின்றந்தீ பற
மடிந்தது வேள்வி என்றுந்தீ பற


பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன்தன் தாதைக்கே உந்தீ பற

நல்ல மலரின்மேல் நான்முகு னார்தலை
ஒல்லை உரிந்ததென்றுந்தீ பற
உகிரால் அரிந்ததென்றுந்தீ பற


தேரை நிறுத்தி மலைஎடுத்தான் சிரம்
ஈரைந்து மிற்றவாறுந்தீபற
இருபதும் இற்றதென்றுந்தீ பற

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென்றுந்தீ பற
அதற் கப்பாலுங் காவலென்றுந்தீ பற

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்


பகைவர்கள் தோற்று ஓடுவர்

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_5461.html 

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்:
தீயவழிகளைக் கூறிப்பாண்டியநாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் துன்பம் உண்டாக்கிய கொடுமைமிக்க சமணர்களால் திருஞானசம்பந்தருக்குத் துன்பம் ஏற்படுமோ? என்று அஞ்சிய பாண்டிமாதேவியை நோக்கி ஆலவாயரன் அருளினால் இத்தீயவர்களை வெல்வேன் என்று சம்பந்தர் உறுதியளித்த பாடல்கள்.

http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3039 


திருச்சிற்றம்பலம்வேல் பந்தனம் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_18.html 

 

 

திருச்சிற்றம்பலம்

 எதிரி தொல்லைகளை சமாளிக்க வழி 

 

http://vivekaanandan.blogspot.in/2013/01/blog-post_21.html 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

தீயோர்கள் விலகி நிற்க - பகை தீர! 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_7.html 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

பகையை வென்றிடும் பக்திப் பாமலர்கள் 

 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_9676.html 

 

 

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

No comments: