Tuesday, August 27, 2013

ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி

ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி பற்றிய தெய்வீக விளக்கங்கள் அகஸ்தியர் விஜயம் இதழில்யிருந்து : -

***பலரும் ஆலயக் கொடிக் கம்பத்தின் மகத்துவத்தை உணர்வதில்லை !இவ்வகையில் ஆலயத்தில் பொதிந்துள்ள கோடானு கோடி இறைரகசியத்தை தக்க சற்குருவே உணர்த்த வல்லார் .நாமாக வெறும் நூல் படிப்பாக , எதையும் அறிய இயலாது !ஏனெனில் நூல் உணர்வு அறியா நுண்ணியோனாகத்தானே இறைவன் மிளிர்கின்றான் !

***காலையிலும் ,மாலையிலும் உத்தம சிவ்பக்தராம் ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் "ஒளிக்கும் இருளுக்கும் " என்னும் பாடலை ஓதி , ஆலயக் கொடி கம்பத்தை அடியிலிருந்து நுனி வரை ஒவ்வொரு பகுதியாக , கண்ணால் உணர்ந்து வழிபட்டு வர நல்ல தியான நிலை சித்திக்கும் .


***மன அமைதியின்றி வாடுவோர் ,பானகம் தானம் செய்து , கொடிக்கவித் துதியுடன் கொடிக்கம்பத்தை வணங்கி ,கொடிக்கம்பத்தின் உச்சியில் இருக்கும் நந்தியெம்பிரானை ,குறைந்தது 11 நிமிடங்களேனும் உற்று கவனித்து ,தியானித்து வணங்கி வர ,மன அமைதிக்கான நல்வழி முறைகள் அருளப் பெறுவர் .
- (ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் 2003 ஜூலை பக்கம் 24 )

** கொடிகவித்துதியுடன் அடங்கி உள்ள சூக்குமமான வேதாந்த அர்த்தங்கள் எண்ணற்றவை ,யுகங்களைக் கடந்த ஞானத்தை வார்க்க வல்லன என்பதனைப் பலரும் அறியார் .
*** இனியேனும் புரிந்து கொண்டு ,தினசரி வாழ்வில் ஓத வேண்டிய மாமறைத் துகளுள் ஒன்றாய்க் கொடிகவித் துதியும் அனைவர் வாழ்க்கையிலும் பதிவதாக .

( ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் - 2012 ஜூலை பக்கம் 15)

***பல ஆண்டுகளுக்கு முன்னர் , சிதம்பரம் ஆலய உற்சவத்தில் கொடிக் கயிறு ஏறாது மறுத்து நின்ற காலை " உமாபதி வரட்டும் உத்தமக் கோடி ஏறட்டும்" என்றபடியாய் சாட்சாத் சிவனே ஆகாசவாணியாய் ஒலித்திட அனைவரும் உமாபதி சிவாச்சாரியாரை அழைத்து வந்தனர் . இம் மகான் பாடிய கொடிக்கவியில் துவஜஸ்தம்பமும் உருகிக் கனிந்திட ..., எவருமே இயக்காது கொடியும் தானே கொடிமரத்தின் மேலேறிப் பறந்து பட்டொளி வீசியதுவே ! உமாபதி சிவாச்சாரியார் வார்த்தளித்த " கொடிக்கவித் துதி " ., நேத்ரசக்தி நிறைந்தது ..,-
(ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் - 2011 ஏப்ரல் பக்கம் 15 )

* திருமந்திரம் ,தேவாரம் ,திருவாசகம் , திருப்புகழ், திவ்யப் பிரபந்தம் , அருட்பாக்கள் போன்ற தமிழ் மாமறைகள் யாவும் தெய்வ தரிசனத்தில் பிறந்தவை ஆதலின் ,தெய்வாமிர்த சக்திகளுடன் சாசுவதமாய் என்றென்றும் பரிமளிப்பவை .ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் தினமும் பன்னிரு மாமறைத் துதிகளையேனும் ஓதி வந்தால்தானே ஐயா , இந்த தெய்வாமிர்த்ப் பொழிவை யாவரும் சமுதாயத்தில் அடைய முடியும்
( ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் - 2011 ஜூன் பக்கம் 15)

நம் தெய்வத் தமிழ் பற்றி மேலும் சில விளக்கங்களை இதற்கு முன்னமே பதிவிட்டிருந்தோம் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் அடிப்படை ஆன்மிகம் - 3 ( "அட்சர ஆழிப்பா " உணர்த்தும் தெய்வத் தமிழ் அருமை ) @ www.pulipani.com
கொடிகவித் துதியை கீழ் கண்ட இணைப்பில் தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள் :-


http://www.4shared.com/office/tFlIfzpy/kodikavi_thuthi.html
 
 

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: