Thursday, August 8, 2013

வாழ்க்கையில் வளம்பெற

 


(வாழ்க்கையில் வளம்பெற இப்பதிகத்தை ஓதி வரவும். குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை அளித்து படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய பதிகம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஓதி வந்தால் ஞான வளத்தை சிவனருளால் எளிதில் பெற முடியும்.)


 
Nalamigu Padhigangal 40 Vol 1


தோடு டையசெவி யன்விடை யேறியோர் துõவெண் மதிசூடிக்
காடு டையசுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர் கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.


முற்ற லாமையிள நாகமோ டேனமுளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்ட லுடை யார்பெரி யார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.


நீர்ப ரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தயின வெள்வளை சோரஎன் உள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய ஓரூரிது வென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.


விண்ம கிழ்ந்தமதி லெய்த்து மன்றி விளங்கு தலையோட்டில்
உன்ம கிழ்ந்துபலி தேரிய வந்தென துள்ளங் கவர்கள்வன்
மன்ம கிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை மலிந்த வரைமார்பில்
பெண்ம கிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.
.


ஒருமை பெண்மையுடை யன்சடை யன்விøடையூரும் இவனென்ன
அருமை யாகவுரை செய்ய அமர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இதுவென்னப்
பெருமை பெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
மறை கலந்தஒலி பாடலோடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இனவெள் வளைசோர என்னுள்ளங் கவர்கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே.


சடை மூயங்கு புனலன் அனலன் எரிவீசிச் சதிர்வெய்த
உடை மூயங்கு மரவோடுழி தந்தென துள்ளங் கவர்கள்வன்
கடன் மூயங்கு கழிசூழ் குளிர்காலைம் பொன்னஞ் சிறகன்னம்
பெடை மூயங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.


வியரிலங்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயரிலங்கை அரையன் வலிசெற் றெனதுள்ளங் கவர்கள்வன்
துயரிலங்கும் உலகிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.


தாணுதல் செய்திறை காணிய மாலொடு தாண்டா மரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனதுள்ளங் கவர்கள்வன்
வாணுதல் செய் மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.


புத்த ரோடுபொறியில் சமணும் புறங்கூற நெறிநில்லா
ஒத்த சொல்ல உலகம் பலிதேர்ந் தெனதுள்ளங் கவர்கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுவென்னப்
பித்தர் போலும்பிர மாபுரம் மேவிய பெம்மா னிவனன்றே.


அரு நெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெரு நெறியபிரமாபுர மேவிய பெம்மான் இவன்றன்னை
ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு நெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


No comments: