Saturday, August 31, 2013

அஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாரூர் தேவாரத் திருப்பதிகம்

 

(இரண்டாம் திருமுறை 79வது திருப்பதிகம்)


 திருவாரூர்


 


 கவனமாய்ச் சோடையாய் 


 

திருச்சிற்றம்பலம்


855பவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார்
போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்
தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
01
856 தந்தையார் போயினார் தாயரும்
போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம்
வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
02
857 நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
ஆக்கைதான் நிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றம்நீங்
காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர்
வைகலும் மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
03
858 நீதியால் வாழ்கிலை நாள்செலா
நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளும்நாள்
இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும்
வருணனும் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
04
859 பிறவியால் வருவன கேடுள
ஆதலாற் பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங்
காதெனத் தூங்கி னாயே
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
05
860 செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்
தேரையாய்ச் சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற
லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந்
தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
06
861 ஏறுமால் யானையே சிவிகையந்
தளகமீச் சேர்ப்பி வட்டில்
மாறிவா ழுடம்பினார் படுவதோர்
நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர்
பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
07
862 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
சுவரெறிந் திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
லாமையான் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
08
863 தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
புத்திரர் தார மென்னும்
பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக்
கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார்
சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
09
864 நெடியமால் பிரமனும் நீண்டுமண்
ணிடந்தின்னம் நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார்
பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார்
மணியணி கண்டத் தெண்டோ ள்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
10
865 பல்லிதழ் மாதவி அல்லிவண்
டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய
ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதெரி யாடுமெம்
மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார்
ஓதநீர் வைய கத்தே.
11

திருச்சிற்றம்பலம்


 தினமும் சாம கானம் ஓதி வந்தால் அல்லது சாம வேத பீஜாட்சரங்கள் பரிணமிக்கும் ‘மந்திரமாவது நீறு...‘ என்னும் திருஞான சம்பந்த மூர்த்திகளின் தேவாரத் திருப்பதிகத்தை ஓதி வந்தால் சாம வேதப் பிரியனான எம் ஈசன் உங்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அபரிமிதமாக வளர்த்து எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொடுப்பான்.


மந்திர மாவது நீறு 


திருஆலவாய்

திருநீற்றுப்பதிகம்

 

திருச்சிற்றம்பலம்


709மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
01
710 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
02
711 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
03
712 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
04
713பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
05
714 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
06
715 எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
07
716 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.
08
717மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.
09
718குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
10
719ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
11

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


தன்னம்பிக்கை வளர :-

 

 அப்பர் பெருமானின் ‘நாமார்க்கும் குடியல்லோம்’


http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6098

 

திருச்சிற்றம்பலம்

 
மற்றும் ஆனை மிதிக்க வருகையில் பாடிய ‘சுண்ணவெண் சந்தன’ என்ற பதிகமும்.


http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4002


திருச்சிற்றம்பலம்

 

 

உண்மையான பாதுகாப்பு கவசம் 

 

http://vivekaanandan.blogspot.in/2013/04/blog-post_13.html 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: