Wednesday, August 7, 2013

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கு...

 

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய இரு பதிகங்கள்

 பார்வைக் குறை நீக்க வேண்டிப் பாடும் பதிகம்:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கச்சியேகம்ப பதிகம்
‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’


http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7061

இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு :-


பண் : தக்கேசி (7--61)   ராகம் : காம்போதி


பாடியவர்: சுந்தரர்        தலம்: திருக்கச்சி ஏகம்பரம்


ஆலம்தான் உகந்து அமுது செய்தானை,
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச்
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈர்உரி போர்த்து உகந்தானைக்
காமனைக் கனலா விழித்திõனை
வரிகொள் வெள்வளையான் உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


குண்டலம் திகழ் காது உடையானை
கூற்று உதைத்த கொடுந் தொழிலானை
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை
வாள்அரா மதிசேர் சடையானை
கெண்டை அம் தடங்கண் உடை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை,
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள் செய்ய வல்லானை,
அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


திங்கள் தங்கிய சடை உடையானை,
தேவ தேவனை, செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை,
சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை,
வேதம்தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்தன்னை,
நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண்இல் தொல் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள்
சிந்தையில் திகழும் சிவன் தன்னை
பந்தித்த வினைப் பற்று அறுப்பானை
பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தம் இல் புகழாள் உமைநங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


வரங்கள் பெற்று உழல், வாள் அரக்கர் தம்
வாலிய புரம் மூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி
நிரந்தரம் செய்த நிட்கண்டனைப்
பரந்த தொல் புகழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை
பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றது என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானைக்
குளிர் பொழில், திரு நாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர்தாமே


திருச்சிற்றம்பலம்.

வலக்கண் கோளாறு நீங்குவதற்கு :-

பாடியவர்: சுந்தரர்            தலம்: திருவாரூர்


மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்,
பிறரை வேண்டாதே
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று,
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர்? திருவாரூரீர்
வாழ்ந்து போதீரே


விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்;
விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை;
கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண்
கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால்,
வாழ்ந்து போதீரே


அன்றில் முட்டாது அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே,
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி அவைபோல,
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தம்கண் காணாது,
குன்றில் முட்டிக் குழியல் விழுந்தால்,
வாழ்ந்து போதீரே


அன்றில் முட்டாது அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே,
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி அவைபோல,
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தம்கண் காணாது,
குன்றில் முட்டிக் குழியல் விழுந்தால்,
வாழ்ந்து போதீரே


துருத்தி உறைவீர்; பழனம் பதியாச்
சோற்றுத்துறை ஆள்வீர்,
இருக்கை திருஆரூரே உடையீர்;
மனமேஎன வேண்டா;
அருத்தி உடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து, மறுமை பணித்தால்,
வாழ்ந்து போதீரே


செந்தண் பவளம் திகழும் சோலை
இதுவோ திருஆரூர்?
எந்தம் அடிகேள், இதுவே ஆமாறு,
உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார்
தம் கண் காணாது
வந்து, எம்பெருமான் முறையோ?
என்றால், வாழ்ந்து போதீரே


தினைத்தாள் அன்ன செங்கால்
நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல்
மாலைப் புரிபுன் சடையீரே,
தனத்தால் இன்றித் தாம்தாம்
மெலிந்து, தம்கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார்
இருந்தால், வாழ்ந்த போதீரே


ஆயம் பேடை அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே,
ஏய எம்பெருமான், இதுவே ஆமாறு,
உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டிப் பிறவி காட்டி,
மறவா மனம்காட்டிக்
காய் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே


கழியாய், கடலாய், கலனாய்,
நிலனாய், கலந்து சொல்ஆகி,
இழியாக் குலத்தில் பிறந்தோம்;
உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர்,
அடிகேள் பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து
இருந்தால் வாழ்ந்து போதீரே


பேயோடேனும் பிறவிஒன்று இன்னாது
என்பர் பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ,
கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும்,
உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திருஆரூரீர்,
வாழ்ந்து போதீரே


செருந்தி செம்பொன் மலரும் சோலை
இதுவோ, திருஆரூர்?
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாகக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை
இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று
உரைத்தால், வாழ்ந்து போதீரே


காரூர் கண்டத்து எண்தோள் முக்கண்
கலைகள் பலஆகி,
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பேர் ஆரூரன்;
பாரூர் அறிய, என்கண் கொண்டீர்,
நீரே பழிப்பட்டீர்,
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர்,
வாழ்ந்து போதீரே

திருச்சிற்றம்பலம்.


திருச்சிற்றம்பலம்

 

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்காறாயில் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 15வது திருப்பதிகம்)

திருக்காறாயில் (திருக்காறைவாசல்) 

நீரானே நீள்சடை.
 
 
திருச்சிற்றம்பலம்
154நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.
01
155 மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமி லாதாரே.
02
156விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.
03
157தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.
04
158கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
05
159 ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
06
160சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.
07
161கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.
08
162 பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.
09
163செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.
10
164ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

திருச்சிற்றம்பலம்

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

கண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வம்

 

http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_4918.html 

 

 திருச்சிற்றம்பலம்

 

Eye Disease Cure 

 

http://vivekaanandan.blogspot.in/2013/11/eye-disease-cure.html 

 திருச்சிற்றம்பலம்


 கண் நோய் தீர்க்கும் கருடக்கொடி சித்தர்
 
 திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகில் அமைந்துள்ளது 
ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் ஆலயம். 
இதில் ஆண்டாள் சன்னதியில் அமைந்துள்ள கற்தூணில் கருடக்கொடி சித்தர் 
அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.
 

 இத்திருத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல காலம் வாழ்ந்து, ஜீவ சமாதி 
அடைந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலம், கண் நோய் என வரும் 
அடியாருக்கு கண் நோய் மற்றும் பார்வை குறைபாட்டை தீர்க்கும் வல்லமை பெற்ற 
தலாமாக விளங்குகிறது.
 
 சித்தரின் திருவுருவம் அமைந்த கற்தூணுக்கு 
சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது கண் நோய் உள்ள 
பக்தர்கள் கலந்து கொண்டு பலன் பெறுவர்.

1 comment:

ganesh iyer said...

aaraadha inbam arulum malai potri..