Sunday, August 11, 2013

பேசாத குழந்தையும் பேசும்!

தொழில் நிரந்தரம் பெற

திருமயிலாப்பூர் 

பூம்பாவைத்திருப்பதிகம்
தொண்டை மண்டலப் பகுதிகளில், இன்றளவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. சின்னக் குழந்தைகள், பேச வேண்டிய பருவத்தில் பேசாமல் இருந்தாலோ, சரியாகச் சொற்கள் வராமல் திக்கித் திணறினாலோ அவர்களுக்காக திருக்கபாலீஸ்வரத்தில் இருக்கும் வாயிலார் சந்நிதிக்கு வருவதாக நேர்ந்து கொண்டால், அந்தக் குழந்தைகள் பேசத் தொடங்குவார்களாம்!
அதன் பின் அவர்களைக் கோயிலுக்கு அழைத்து வருவது வழக்கம். சமீப காலங்களிலும் இந்த நம்பிக்கை நடைபெற்று வருவதை, இப்போது 40-45 வயதில் இருக்கும் சிலர், தங்களையே ஆதாரங்களாகக் காட்டி விளக்குகிறார்கள்!http://hinduspritualarticles.blogspot.in/2013/06/blog-post_17.html


மட்டிட்ட புன்னையங் திருச்சிற்றம்பலம்


502மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
01
503மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.
02
504 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
03
505ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
04
506மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.
05
507மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.
06
508மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.
07
509தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.
08
510 நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.
09
511உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
10
512கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.
11இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கபாலீசுவரர், தேவியார் - கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்

 

திருக்கோலக்கா

  மடையில் வாளை 

 

 
மடையில் வாளை பாய மாதரார் 
குடையும் பொய்கைக் கோலக் காவுளான் 
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் 
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1.74.1
 
பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி 
கொண்டான் கோலக் காவு கோயிலாக் 
கண்டான் பாதங் கையாற் கூப்பவே 
உண்டான் நஞ்சை உலக முய்யவே. 1.74.2
 
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக் 
கோணற் பிறையன் குழகன் கோலக்கா 
மாணப் பாடி மறைவல் லானையே 
பேணப் பறையும் பிணிக ளானவே. 1.74.3
 
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் 
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் 
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா 
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. 1.74.4
 
மயிலார் சாயல் மாதோர் பாகமா 
எயிலார் சாய எரித்த எந்தைதன் 
குயிலார் சோலைக் கோலக் காவையே 
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1.74.5
 
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் 
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் 
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் 
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. 1.74.6
 
நிழலார் சோலை நீல வண்டினங் 
குழலார் பண்செய் கோலக் காவுளான் 
கழலால் மொய்த்த பாதங் கைகளாற் 
தொழலார் பக்கல் துயர மில்லையே. 1.74.7
 
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை 
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் 
குறியார் பண்செய் கோலக் காவையே 
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. 1.74.8
 
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் 
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக் 
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா 
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. 1.74.9
 
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் 
உற்ற துவர்தோ யுருவி லாளருங் 
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் 
பற்றிப் பரவப் பறையும் பாவமே. 1.74.10
 
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் 
குலங்கொள் கோலக் காவு ளானையே 
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் 
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. 1.74.11

 -   திருச்சிற்றம்பலம் -
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


No comments: