Saturday, August 10, 2013

பிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்

 

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே

கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரைஏருஞ் சிராப்பள்ளி
வேம்முகவேழ்ந்து ஈருரி போர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே

மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

துறை மல்கு சாரற் சுனை மல்கு நிலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி யுடையவன் எங்கள் பெருமானே

கொலை வரையாத கொள்கையர் தங்கம் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமையுரைப் பீர்காள்
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே

வெய்யதண் சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய போன் சேருஞ் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம் மகிழ்வார் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே

வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர் கோயிற் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிர் றாகாதே

மலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன் தன்
தலைகலனாகப் பலி திரிந்துண்பர் பழியோரார்
சொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்கால்
சிலவல போலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடை செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

நானாது உடை நீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்
பேணாது உறுசீர் பெருதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே

தேனயம் பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரை சூழ்ந்த
கானல் சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத் தவரோடு மன்னி வாழ்வரே

திருச்சிற்றம்பலம்


*

திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

 மட்டு வார்குழ லாளொடு

 

திருச்சிற்றம்பலம்


841 மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.
5.85.1
842அரிய யன்றலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.
5.85.2
843அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
5.85.3
844தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே.
5.85.4

இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.85.5-10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.
*

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருச்சிற்றேமம் தேவாரத் திருப்பதிகம்

 

(மூன்றாம் திருமுறை 42வது திருப்பதிகம்)

 சிற்றேமம்

 

நிறைவெண்டிங்கள் வாண்முக.
 
 
திருச்சிற்றம்பலம்
444 நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.
01
445..மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்
ஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.
02
446..நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே.
03
447..கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே.
04
448. .வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே.
05
449..பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.
06
450. .கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்
தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே.
07
451..சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே.
08
452..தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.
09
453. .வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.
10
454..கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பொன்வைத்தநாதர், தேவியார் - அகிலாண்டேசுவரியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

திருச்சிற்றம்பலம்


கரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_25.html

 


திருச்சிற்றம்பலம்

 

நன்மக்கட்பேறு அடைய 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_8474.html

 


திருச்சிற்றம்பலம்

 

குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் 

 

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_11.html

 


திருச்சிற்றம்பலம்

 

சுகப் பிரசவம் அமைய - திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் 

 

http://vivekaanandan.blogspot.in/2012/04/blog-post_12.htmlதிருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

No comments: