Sunday, September 29, 2013

நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்.....


திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)
அரவணையான் சிந்தித் 


திருச்சிற்றம்பலம்
54 அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
6.6.1
55 கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.
6.6.2
56 வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
6.6.3
57 அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
6.6.4
58 ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
6.6.5
59 திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
6.6.6
60 உரைமாலை யெல்லா முடையவடி
உரையால் உணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையில் லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட் டானக் காபாலியடி.
6.6.7
61 நறுமலராய் நாறு மலர்ச்சேவடி
நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
6.6.8
62அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
அடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்டத் தலைவனடி.
6.6.9
63 அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலனடி.
6.6.10

இத்தலம் நடு நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருவீரட்டேசுவரர்,
தேவியார் - திருவதிகைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்
 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

 

Saturday, September 28, 2013

"மகா மக " தீர்த்த வழிபாடு

"மகா மக " தீர்த்த வழிபாடு ... 16 வகை முறையான நிலையான செல்வங்கள் கிடைக்க வழிவகை செய்யும் மாதம் ஒரு முறை செய்யும் எளிய வழிபாடு தான் முயற்சித்து பாருங்கள் விரிவாக அறிய
 


கோடான கோடி நன்றிகள்

http://pulipanisithar.blogspot.in/search?updated-max=2013-07-30T01%3A15%3A00-07%3A00&max-results=2&start=4&by-date=false

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்Thursday, September 26, 2013

நல்லவர்களுக்கு கஷ்டங்கள் வருவது ஏன் ?மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்கள்


திருச்சிற்றம்பலம்http://aanandanvivek.blogspot.in/2013/09/blog-post_9764.html


திருச்சிற்றம்பலம்

 

http://www.youtube.com/user/knowingourroots/videos 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


Tuesday, September 24, 2013

பொங்கு மிசைத் திருப்பதிகம் [செல்வம் , புகழ் , வெற்றி முதலிய ஒன்பது வகையான நலன்களை அளிக்கும் அறிய பதிகம்]

 

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருச்சிவபுரம் தேவாரத் திருப்பதிகம்

திருச்சிவபுரம் - திருவிராகம்

 புவம்வளி கனல்புனல் 

 

கோடான கோடி நன்றிகள்

 பதிகத்தினை தேர்ந்து எடுத்தவர்  சிவ . ஆ . பக்தவச்சலம்    

தமிழ் வேதத் திரட்டு பகுதி -  2 .
நூல் கிடைக்குமிடம்

43, சந்நிதி வீதி,
நல்லுர்பேட்டை ,
 குடியாத்தம்  - 632602
[ வேலூர் மாவட்டம் ]
தொலைபேசி - 04171 222946திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

 

 

 

தேர்தலில் வெற்றி பெறவும் , நல்ல பதவி கிடைக்கவும் , நன்மதிப்புடன் வாழ உதவும் பதிகம்


திருச்சுழியல்

 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)ஊனாய்உயிர் புகலாய்அக


திருச்சிற்றம்பலம்


832ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.
7.82.1
833தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.
7.82.2
834கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.
7.82.3
835மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்
அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.
7.82.4
836உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்
செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்
கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.
7.82.5
837மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்
தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.
7.82.6
838சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.
7.82.7
839பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்
கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்
சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.
7.82.8
840கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்
செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.
7.82.9
841நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்
பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.
7.82.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இணைத்திருமேனிநாதர், தேவியார் - துணைமாலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்கோடான கோடி நன்றிகள்

 பதிகத்தினை தேர்ந்து எடுத்தவர்  சிவ . ஆ . பக்தவச்சலம்    

தமிழ் வேதத் திரட்டு பகுதி -  2 .
நூல் கிடைக்குமிடம்

43, சந்நிதி வீதி,
நல்லுர்பேட்டை ,
 குடியாத்தம்  - 632602
[ வேலூர் மாவட்டம் ]
தொலைபேசி - 04171 222946திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

பெண்களின் கர்பப் பைக்கு உறுதி அளிப்பது காளி ஆசனம் என்னும் அற்புத ஆசனம்

காளி ஆசன மகிமை

 பெண்களின் கர்பப் பைக்கு உறுதி அளிப்பது காளி ஆசனம் என்னும் அற்புத ஆசனம் ஆகும். பெண்கள் கோலம் இடுதல், தான்யங்களைப் புடைத்து சுத்தம் செய்தல், மஞ்சள் அரைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடும்போது அவர்களையும் அறியாமல் இந்த காளி ஆசனத்தில் அமர்ந்து காரியங்களில் ஈடுபடுவதால் இயற்கையான முறையில் அவர்களுக்கு கர்பப்பை வளம் பெறுகிறது. ஆனால், தற்காலத்தில் இத்தகைய செயல்பாடுகள் குறைந்து வருவதால் அந்த ஆசனத்தில் அமர்ந்து அன்னதான பிரசாதங்களை தயார் செய்ய வைத்து உள்ளுறுப்புகளை வளம்படுத்தும் வழிபாடுகளை பெரியோர்களும், மகான்களும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
குத்துக் காலிட்டு அமர்வதே காளி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் கருவுற்ற தாய்மார்களை இத்தகைய காளி ஆசனத்தில் அமர வைத்து மகப்பேற்றை நிறைவேற்றியதால் எத்தகைய வேதனையும் இன்றி பெரும்பாலான தாய்மார்களுக்கு சுகப் பிரசவமே நிகழ்ந்தது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் பூரண உடல், மன ஆரோக்கியத்தைப் பெற்று விளங்கின.

Breech presentation போன்ற பிரசவ கால பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைவதே காளி ஆசனமாகும்.


http://kulaluravuthiagi.com/panchabutham.html 


ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்


 


 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

 

http://www.agasthiar.org/ 


 


http://kulaluravuthiagi.com/ 

 

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா?

 
கோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்

 வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும். உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். உலகிலேயே சிறந்த ஆலய மணி
சிகண்டி பூர்ணம், சிதம்பரம் நடராஜர் சன்னதி
(மணி ஓசையைக் கேட்கவும்)
http://www.kulaluravuthiagi.in/mani.htm 

http://www.kulaluravuthiagi.in/maniosai.htm ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

 

http://www.agasthiar.org/ 

 

http://kulaluravuthiagi.com/ 

 

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


Sunday, September 22, 2013

மனம் அலை பாயாமல் இருக்க

திருக்கைலாயப் பொதிய முனிப்பரம்பரை 1001 வது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீ வாத்தியார்
(சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள்)
அருளிய

 
 நத்தச் சுடராகி நானிலத்தில் காத்தருள

அத்தன் அருட்சுடரான் ஆழாழி கொண்ட துறை

கொத்துசுழி கூட்டாங்கே கூடல் அரிநாதா

சித்தாய்ச் செறிந்தருளக் கா


இந்த திருநத்தளிப் பாசுரம் எத்தகைய ஆபத்துக் காலங்களிலும் காக்கும்., மற்றும் மன நிம்மதி ., மன சாந்தம் .. மன
ம் லை பாயாமல் இருக்க எப்பொழுதும் ஓதலாம் ...,

ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

 

http://www.agasthiar.org/ 

 

http://kulaluravuthiagi.com/ 

 

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


சிவாலயங்களில் தீபம் ஏற்றும் திருப்பணி


திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்

 

சிவாலயங்களில் தினந்தோறும் தீபம் ஏற்றிவழிபாடு செய்தல் மிகவும் உண்ணதமான் பணி மட்டுமன்றி இன்று நாம்படும் பலவித சொல்லமுடியாத இன்னல்களினின்றும் நம்மையும் இந்த வுலகையும் ரட்சிக்கும் என்பதில் ஐயம் இல்லை.


குறிப்பாக இந்த விளக்கிடும் செயல் பற்றி மிகவும் சாஸ்திர சம்ப்ரதாயம் அறிந்த அறிஞருடன் இதற்கென பிரதயேகமாக் சென்று உரையாடியபின் இந்த இணையதளத்தை இன்று நாம் உங்கள் முன் சமர்பிக்கின்றோம்.
அப்படிப் பேசி அறிந்ததொரு தகவல் விளக்கேற்ற குறிப்பாக,இலுப்பை எண்ணெய் (botanical name: Bassia Longifolia) மட்டுமே முக்கியமாக உபயோகப்படுத்தப்பட்டவரையில் அனைத்தும் சரியாக நடந்ததையும் பிறகு எரிபொருளான எண்ணெய் மாற மாற நாமும் நம்நிலையும் தற்போதிய சூழலில் தள்ளப்பட்டிருப்பதையும் அந்த மூதறிஞர் விளக்கினார்.


 

தீபத்தின் பயன்கள்
திருவண்ணாமலையில் ஐந்து தீபம் உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை "இறைவன் ஒருவனே!' என்று தத்துவங்கள் கூறுகின்றன. அந்த ஒருவனுக்கு பெயர் ஏதும் இல்லை. ஊரும் இல்லை. எங்கும் இறைவன் நிறைந்து விளங்குகிறான்.


இதனை வலியுறுத்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் முன்னிலையில் திருக்கார்த்திகையன்று அதிகாலை வேளையில் பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதியை ஏற்றி தீபாராதனை செய்வர். இத்தீபம் " பரணி தீபம்' என்று பெயர்பெறும். கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவதால் இந்த தீபத்தை "பரணி தீபம்' என்கிறார்கள். பிறகு அந்த கற்பூரச்சுடரொளி ஒரு பெரிய ஒற்றைத் திரியில் பொருத்தப்பட்டு, நந்தீஸ்வரர் முன்னிலையில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் ஏற்றப்படும். ஒற்றை தீபம் ஒன்றாக இருக்கும் கடவுளையும், ஐந்து தீபங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களையும் அவர் மேற்கொள்ள பஞ்சமூர்த்திகளாகப் பிரிவதையும் காட்டும். இவர்கள் தங்கள் பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும் வகையில் அம்மன் சன்னதியில் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

கார்த்திகை விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் : ராவணனைக் கொன்ற பாவம் தீர வேதாரண்யம் கடலில் நீராடிய ராமபிரான், சிவபெருமானைப் பூஜித்ததால் இவ்வூர் "ஆதிசேது' எனப்பட்டது. இங்குள்ள சிவனை நான்கு வேதங்களும் வழிபட்டதால் "வேதாரண்யேஸ்வரர்' என்று அழைப்பர். வேதங்கள் சிவனை வணங்கிவிட்டு கோயில் கதவை மூடிவிட்டுக் கிளம்பின. அதன் பிறகு கதவு திறக்கப்படவில்லை. பிற்காலத்தில் அப்பர் கதவைத் திறக்கவும், சம்பந்தர் மூடவும் செய்து அற்புதம் நிகழ்த்தினர். இத்தலத்தில் எலி ஒன்றும் சிவனுக்கு சேவை செய்து சிவபுண்ணியம் தேடிக் கொண்டது. விளக்கில் இருக்கும் நெய்யினை உண்ணப் பாய்ந்து வந்தது எலி. ஆனால், எலியின் மூக்குபட்டு அணைய இருந்த தீபத்தின் சுடர் பிரகாசமானது. அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் நாம் செய்யும் சிவபுண்ணியத்திற்கு பலனுண்டு. ஒன்றும் அறியாத எலி செய்த இந்த அற்புத கைங்கர்யத்துக்காக, இறைவன் மலை நாட்டின் மன்னனாகும் பாக்கியம் தந்தார். மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறந்த அந்த எலி மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தையும் பெற்றது. அதனால், கார்த்திகை நாளில் ஏற்றும் தீபம் மிகவும் சிறப்பானது என்பதை உணர்வோம்.

ஆண்டுக்கொரு முறை பவனிவரும் அர்த்தநாரி : திருவண்ணமாலையில் திருக்கார்த்திகை அன்று மாலையில் ஏற்றப்படும் தீபம் கார்த்திகை தீபமாகும். தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் ஊர்வலமாக வருவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இவரது பவனி நடப்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பஞ்சமூர்த்தி சன்னதிகளில் ஏற்றிய ஐந்து தீபங்கள், அம்மன்சன்னதியில் ஏற்றிய ஐந்து தீபங்களும் ஆக பத்து தீபங்களும் சுவாமியின் முன்னால் சுமந்து வரப்படும். கொடிமரத்திற்கு முன்புள்ள அகண்டத்தில் (தீச்சட்டி) இதை ஒன்று சேர்ப்பர். ஒன்றாக இருக்கும் தெய்வத்தால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அந்த தெய்வத்திடமே திரும்பவும் ஒடுங்கும் என்பதைக் குறிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படும்.

அப்போது மலையுச்சியில் கார்த்திகைஜோதியாக அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். அன்னை உமையவள் அண்ணாமலையில் தவம் செய்ததன் பயனாக சிவனின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதனால் சிவனும் சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உண்டானது. அத்திருக்கோலம் தோன்றிய நேரமே கார்த்திகை மாத கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம். தீபமேற்றும் போது பாடும் பாடல்அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் முருகப்பெருமானின் புகழ்பாடும் நூல்களில் சிறப்பானது. திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் என்பர். இறைவனே தீபச்சுடரொளியாக இருந்து நாம் வேண்டியவற்றை தந்து அருள் செய்கிறான். சாதாரணமாக ஓரிடத்தில் ஏற்றும் விளக்கு புறஇருளைப் போக்கும். ஆனால், திருவிளக்காக கோயிலிலோ அல்லது பூஜை அறையிலோ ஏற்றும் தீபம் நம் புற இருளுடன் மனஇருளையும் போக்கும் சக்தி கொண்டது. அதனால் தான் முருகனைப் போற்றும் அருணகிரிநாதர் பழநித்திருப்புகழில் "தீபமங்கள ஜோதீ நமோநம' என்று தீபச்சுடரை முருகப் பெருமானாகவே போற்றி வணங்குகிறார். அதனால் திருக்கார்த்திகை தீபமேற்றும்போது "

"தீபமங்கள ஜோதீ நமோநமதூய
அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்''
என்று பாடி தீபமேற்ற வேண்டும்.

2500 ஆண்டுகள் பழமையான கார்த்திகை திருவிழா : வட இந்தியாவில் தீபாவளியன்று வீடுகளில் விளக்கேற்றப்படுகிறது. ஆனால், தமிழ் மண்ணில் தீபவிழாவாக கார்த்திகைத் திருநாள் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் பவுர்ணமியன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் கார்த்திகை தீபவிழா நடைபெற்றாலும் நினைக்க முக்தி தரும் தலமாகிய திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக நடக்கிறது. ஞானசம்பந்தர் தேவாரப்பதிகத்தில் ""தொல் கார்த்திகைத் திருநாள்'' என்று இதுபற்றி குறிப்பிடுவதில் இருந்து இதன் பழமையை அறியலாம். அகநானூறு, நற்றிணை போன்ற மிகப்பழைய இலக்கியங்களும் கார்த்திகை விழாவின் சிறப்பைப் போற்றுகின்றன. சம்பந்தர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பிற இலக்கிய காலங்களை பார்க்கும் போது ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக இந்த விழா நடந்து வருவதை அறியலாம்.

பாட்டும் பொருளும்
கலியநாயனார்

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும்
விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந்
திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.

இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான கலியநாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.
காரிநாயனார்

தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத
ஓளிவிளக்குச்

சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.

பெருஞ் செல்வத்தால் பெறும் சிறந்த கெடாத பயன் இதுவே! எனும் உள்ளத்தராய், நீங்காது ஒளிதரும் விளக்குகளைச் சிவபெருமான் கோயிலுக்குள் ஏற்றி வைத்து, நாவாரப் போற்றுபவ ரான காரி்நாயனார், வறுமை வந்து அடையவே, அந்த வறுமையுடன் இங்கு இருத்தல் தகாது என்று எண்ணித், தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தில்லையைச் சென்று சேர்ந்தார்.
கணம்புலநாயனார்

தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத்
திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.

இப்பணியைத் தம் இறைவர் திருவுள்ளத்தில் ஏற்றுத் திருவிளக்கை மிக்க அன்புடன் எரித்த ஒப்பில்லாத தொண்டருக்கு, இறைவனார் நன்மை பெருகும் பெருங்கருணையினை வைத்தருளச், சிவலோகத்தில் எங்கள் பெருமானாரான கணம்புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி அங்கு அமர்ந்தருளினார்.

மூரியார் கலியுலகில்
முடியிட்ட
திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்
.

வலிமை பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில், தம்முடியையே திருமுன்பு இடும் விளக்காகக், கங்கை எனும் பேராற்றை அணிந்த சிவபெருமானுக்கு எரித்த கணம்புல்ல நாயனாரின் திருவடிகளைப் போற்றித், தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் `திருக்கடவூரில்' தோன்றி யருளிய `காரி நாயனார்' செய்த திருத்தொண்டினைச் சொல்வாம்.

திருவிளக்கு மகிமைவிளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

-- 10வது திருமுறை


எண்ணில்திரு விளக்குநெடு
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல்
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம்
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல்
மாண்டதுமாட் சிமைத்தாக.


திருவிளக்குத் திரியிட்டங்கு
அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா
உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய
அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன்
நேர்வந்து பிடித்தருளி.

எயிலணையும் முகில்முழக்கும்
எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும்
முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம்
விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில்
சக்கரப்பா டித்தெருவு.


தேவர்பிரான் திருவிளக்குச்
செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
திருத்தொண்டின் நலமுரைப்பாம்.

பணிகொள்ளும் படம்பக்க
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
வினைமுடிக்கத் தொடங்குவார்.


மனமகிழ்ந்து மனைவியார்
தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும்
கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில்
திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார்
கையறவால் எய்தினார். திருச்சிற்றம்பலம்

 

நலம் தரும் தீப‌ வழிபாடு :-

http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_3755.html 

 

திருச்சிற்றம்பலம்

 

கார்த்திகைத் தீபம் :-

http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_54.html 

 

திருச்சிற்றம்பலம்

 

திசைகளும் தீபங்களும் :-

http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_529.html 

 

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்