Monday, October 28, 2013

Hindu Rituals and Routines: Why do we follow them?

A Small, beautiful booklet from Chinmaya Yuva Kendra. கோடான கோடி நன்றிகள்

http://www.tamilhindu.com/2008/05/hindu-rituals-and-routines-why-do-we-follow-them/ 


திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Sunday, October 27, 2013

சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் !!

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது

உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

அறிவியலும் இந்து மதமும் -

அறிவியலும் இந்து மதமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பிட்யூட்டரி சுரப்பி. பிட்டியூட்டரி சுரப்பி முதன்மையான சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சுரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.

படங்களும் அதன் விரிவாக்கமும்

1. கோவிலின் அமைப்பு
2. பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம்
3.பிட்யூட்டரி சுரப்பி
4.மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம் .

திருச்சிற்றம்பலம்

 

Temple News | News | Dinamalar Temple | லிங்க வடிவில் சிவனை வழிபடுவது ஏன்?

திருச்சிற்றம்பலம்

 

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு

http://vivekaanandan.blogspot.in/2013/10/blog-post_8.html 

 

திருச்சிற்றம்பலம்

 

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


Saturday, October 26, 2013

ஆழ்ந்து அகன்ற நுண்ணிய சமயம்


திருச்சிற்றம்பலம்

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கறியவன் நமசிவாயன்.
இந்த உலகமானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது. அந்த பஞ்சபூதங்களைதான் சைவ சமயத்தில் ந-ம-சி-வா-ய என்னும் ஐந்து எழுத்து மந்திரத்தால் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சபூதங்களையும் இயக்கிற ஒரு ஜீவசக்திதான் சிவன் அல்லது நமசிவாயர் ஆவார். இந்த பஞ்சபூதங்கள் அனைத்தும் atom என்று சொல்லப்படுகிற நுண்ணிய துகள்களாலான அனுக்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு அனுக்களும் எலக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் என்னும் மிக நுண்ணிய சக்கதிகளாலே இயக்கப்படுவதாக இன்றைய அறிவியல் நமக்கு விளக்குகிறது. இதையேதான் வேதங்களில் பிரம்மா விஷ்னு சிவன் என்னும் மும்மூர்த்திகளாலே இவ்வுலகம் இயக்கப்படுவதாக நமக்கு கூறுகிறது. நம்முடை சைவ சமயத்தை சேர்ந்த மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் நமசிவாயர் "அனுவிலும் அனுவானவர்", "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என விளக்குகிறார்.
சிவனின் சூட்சமத்தில்(ஒரு சிறு புள்ளி) அடங்கி இருந்த இந்த பிரபஞ்சமானது திடீரென விழிப்பு பெற்று உலகம் விரிவடைய தொடங்கியது. அதையேதான் அறிவியலில் Big Bang theory ல் இந்த உலகமானது கோடானகோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு சிறுபுள்ளியில் இருந்து வெடித்து சிதறி உருவானதே என விளக்குகிறது. இந்த உலகமானது கோடிகணக்கான பால்வீதி மண்டலங்களால்(Galaxy) உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பால்வீதி மண்டலங்களிலும் கோடிக்கணக்கான நட்சத்திர(சூரியன்) மண்டலங்களால் நிறைந்திருக்கிறது.ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களும் பூமி போன்ற கோள்கள் மற்றும் விண்கற்களால் நிறைந்திருக்கிறது. கோள்கள் தன்னைத்தானே சுற்றிகொண்டு அதனுடைய நட்சத்திரங்களை(சூரியன்) மையமாக கொண்டு சுற்றுவது போல, நட்சத்திரங்களும் தன்னைத்தானே சுற்றி கொண்டு அதனுடைய பால்வீதி மண்டலத்தின் மையமான கரும்புள்ளியை(black hole) சுற்றுகிறது. பிறகு அனைத்து பால்வீதி மண்டலங்களும் (galaxy) வேறு ஒரு மையத்தை அடிப்படையாக கொண்டு சுற்றி வருகிறது. இதுபோல பல அடுக்குகளாக இயங்கி, முடிவில் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு புள்ளியை மையமாக கொண்டு சுற்றி வருகிறது. அந்த மையத்தையே பரபிம்மம் (அ) நமசிவாயம் என்று அழைக்கப்படுகிறது. ஊழிகாலத்திற்க்கு பின் இவ்வுலகமானது சுருக்கம் பெற்று மீண்டும் சிவனின் சூட்சமத்திற்குள் அடங்கிவிடும். சைவ சமயத்தில் இந்த பிரபஞ்ச இயக்கத்தையே சிவதாண்டவம் என்று அழைக்கிறார்கள், அதையே நடராஜர் உருவமாகவும் நம்முடைய முன்னோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு உயிர்சக்திகளால் (ஈர்ப்புசக்தி) இணைக்கப்பட்டிருக்கிறது. அதையே அறிவியலில் COSMIC ENERGY (கடவுள் துகள்) என்று அழைக்கிறார்கள். இந்த உயிர்சக்திகளே மனிதனின் ஆரோக்கிய வாழ்வையும், அறிவு வளர்ச்சிகளையும் தீர்மானிக்கிறது.
இந்த cosmic energy அதிகமாக குவிகிற இடங்களில்தான் சிவாலயங்களை நம்முடைய முன்னோர்கள் எழுப்பினார்கள். அனைத்து சிவாலயங்களின் முலவர் சன்னதியின் கலசங்கள் மிகச்சரியாக அந்த சக்திகள் குவிகிற இடத்திற்க்கு நேர் எதிராக இருக்கும். கலசங்களுக்கு நேர்கீழாக மூலவரின் சிலை இருக்கும், சிலைக்கு கீழே பலகோடி முறை மந்திரங்களால் ஜெபிக்கபட்டு சக்திகள் ஏற்றபட்ட எந்திர தகடுகள் இருக்கும். முலவர் சன்னதியின் முன்பக்கம் தவிர மற்ற மூன்று பக்கங்களும் முடபட்டே இருக்கும். இந்த cosmic energeyயானது கலசங்களில் இருந்து சிலைக்கு கீழே உள்ள எந்திர தகடுகளுக்கு சென்றுகொண்டிருக்கும், பூஜை செய்பவர்கள் தீபாரதனை காட்டிகொண்டு மந்திரங்களை சொல்லும்போது, அந்த எந்திரங்கள் சக்திளை தீபாரதனையில் காட்டப்படும் தீபத்திற்குள் செலுத்துகிறது, அந்த தீபத்தை நாம் தொட்டு வணங்கும்போது அந்த சக்தியானது நமது உடலுக்குள் செல்கிறது.இவ்வாரு பிரபஞ்சத்தில் பரவி கிடக்கும் இந்த காந்தசக்திகளை(COSMIC ENERGY) மனித உடலுக்குள் கொண்டு செல்வதே நம்முடைய ஆலயங்களின் முதல் நோக்கமாகும். மிகநீண்ட தியான பயிற்ச்சிகளால் பெறப்படுகிற இந்த சக்திகளை, மனிதன் ஆலயங்களினால் எளிதில் பெற்றுவிடுகிறான் என்பதே உண்மை. மேலும் பெரும்பாலான சிவாலயங்கள் ஏதோ ஒரு சிவயோகியின் சமாதியின் மீதே எழுப்பட்டதாகவே உள்ளது. சிவாலயங்கள் எழுப்புவதற்க்கு முன்பே அந்த இடத்தின் சக்தியை உணர்ந்தே சிவயோகிகள் அந்த இடங்களில் ஜீவசமாதியும் எய்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு ஆச்சர்யமானது. நம்முடைய சிவாலயங்களில் இதுபோன்ற எண்ணிலடங்காத அற்புதங்கள் உள்ளது.
நன்றி
சைவநெறிக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பதே உண்மை.
வீரசைவம் ஓங்குக, சிவம் வெல்க
வீரசைவன் எழுந்தால் சைவம் எழும்.
ஓம் நமசிவாய
இவன்,
ஸ்ரீகணேசன்.லிங்கத்தார்
திருச்சிற்றம்பலம்

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


திருமுறையில் சைவ சித்தாந்தம்


திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்


திருமுறைகளின் சிறப்பு :-


திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால். 

திருச்சிற்றம்பலம்

 பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள் :-
 
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.

*

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

"பண் இசை மணி" குமரேசன் அவர்களின் திருமுறை பண்ணிசை


திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்


திருமுறைகளின் சிறப்பு :-
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால். 

திருச்சிற்றம்பலம்

 பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள் :-
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.

*

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

குழந்தைகளுக்கு பக்தி புகட்டுவோம்!

ஆண்டவன் தொண்டு என்றாலும், ஆன்மிக நூல்களை வாசிப்பதென்றாலும் அது வயதானவர் களுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பக்தி, ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது செலுத்திய பக்தி, அவர் இறைவனின் குழந்தையாகவே மாறுவதற்குரிய சந்தர்ப்பத் தைத் தந்தது. இதனால் இவரை, “இளைய பிள்ளையார்’ என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறோம்.

சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதியம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வராக அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரை, அவரது தந்தை தினமும் தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல் வார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் (குளம்) நீராடும் போது, குழந்தையை கரையில் அமர்த்தி விடுவார். குழந்தை சம்பந்தன் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பார். ஒரு தோணியில், சிவபார் வதி பவனி வருவது போன்ற சிற்பம் அங்கு இருக் கும். அதை ரசித்தபடியே இருப்பார்.

ஒருநாள் நல்ல பசி. குளிக்கச் சென்ற இருதயர் திரும்பவில்லை. கரையில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. அப்போது, அம்பாள் அவர் முன் வந்தார். கையில் கொண்டு வந்த பொற் கிண் ணத்தில் பால் நிரம்பியிருந்தது. குழந்தைக்கு அதைப் புகட்டினாள். அப்படியே மறைந்து விட்டாள்.

குளித்துவிட்டு வந்த இருதயர் குழந்தையின் வாயில் வழிந்திருந்த பாலைப் பார்த்துவிட்டு,
“பிறர் கொடுக்கும் பாலைக் குடிக்கலாமா? யார் கொடுத்தது இது?’ என்று அதட்டினார்.

“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம்
கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே…’

—என்று துவங்கி ஒரு பதிகத்தைப் பாடியபடியே தோணியப்பரையும், அம்பிகையையும் சுட்டிக்காட்டியது குழந்தை. பதிகம் என்பது 11 பாடல்களைக் கொண்டது. இந்தப் பதிகத்தைப் பாடுவோருக்கு முன்வினை பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று பாடி முடித்தார்.

ஒரு குழந்தைக்கு இவ்வளவு ஞானமா? இருதயரும், கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர்.

சம்பந்தரின் பாடல்களில் ஒரு விசேஷம் உண்டு. இவர் பாடும் ஒவ்வொரு பதிகத்தின் கடைசிப் பாடலிலும் தன் பெயரை அவர் குறிப்பிட்டிருப்பார்; அதாவது, இந்தப்பாடல் ஞானசம்பந்தனாகிய தன்னால் தரப்பட்டது என்று சொல்லியிருப்பார்.

இவரது முதல் பாடலைப் போல கடைசிப் பாடலும் மிகவும் உயர்ந்தது. இவருக்கு நிச்சயிக்கப்பட்ட முதல் திருமணம் சில காரணங்களால் நின்று போனது. பின்னர், திருப்பெருமணநல்லூர் எனப்படும் ஆச்சாள்புரத்தில் வசித்த பெண்மணியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமக்கள் யாக குண்டத்தை வலம் வந்த போது, தன் இனிய குரலில்,
“காதலாகிக் கசிந்து’ எனத்துவங்கும் பதிகத்தைப் பாடினார் சம்பந்தர். அவர் பாடி முடித்ததும், மாப்பிள்ளை – மணப் பெண்ணுடன், திருமணத்தில் பங்கேற்றவர்களும் அந்த ஜோதியில் கலந்து விட்டனர்.

சிவஜோதியில் சம்பந்தர் கலந்த நாளை குருபூஜை யாக எல்லா சிவாலயங்களிலும் வைகாசி மூலம் நட்சத்திரத்தன்று நடத்துவர். சீர்காழி தோணியப் பர் கோவிலில் இந்த நிகழ்ச்சி மிகவும் விசேஷம்.

சம்பந்தரின் வரலாறு, குழந்தைப் பருவத்திலேயே பக்தியைப் புகட்ட வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்கிறது.திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

Friday, October 25, 2013

ஹிந்துத்துவம் தொடர்பான புத்தகங்களை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளுங்கள்...


திருச்சிற்றம்பலம்http://adiraihindus.blogspot.in/p/blog-page_1124.html

02-பிற வெளியீடுகள்

5.) ஹிந்து கோவில்கள் மற்றும் கலாச்சாரம்

6.) பகவத்கீதை 18 அத்யாயங்களும்

7.) சிகாகோ சர்வமத மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் உறை தமிழில்

8.) நவராத்ரி ஸ்லோகங்கள்

9.) ராமாயனம் தமிழில் - அருள்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்

10.) தமிழில் அர்ச்சனைகள்

11.) வேதமந்திரங்கள்

12.) முழு மஹாபாரதம் (ஆதிபர்வம்-தமிழில் படங்களுடன்)

13.)ஸ்ரீஜய ஆண்டு தமிழ் பஞ்சாங்கம்

14.) ஸ்ரீமத் ராமாயணம்( ஸ்ரீ வால்மீகி ராமயணத்தை தழுவியது)

15.)உரைநடையில் கம்பராமாயணம் 

16.) அபிராமி அந்தாதி

17.) பட்டினத்தார் பாடல்கள்

18.) முருகன் பாடல்கள்

19.) திருமந்திரம் 1-150 

03-அர்த்தமுள்ள இந்து மதம்அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் (10 தொகுதிகளும்)


04- ரிக், யஜுர், சாம, அதர்வன (நான்கு) வேதங்கள்

01. ரிக் வேதம் தமிழில் 1-10

02. யஜுர் வேதம் தமிழில் 1 - 3

03. சாம வேதம் தமிழில் 1 & 2

04. அதர்வன வேதம் 1-405-மற்றவை

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


HAPPINESS IN HINDUISM

தீபாவளியை எப்படி கொண்டாடுவது ?
GITA IN 16 SIMPLE BEAUTIFUL SLIDES


Read, understand, analyse and implement. you will be able to face without pain any problem, at any age, in your life. Download 3.2 mb

https://www.box.com/s/uj9960c3l9fuxnz3c36w
கீதையில் மனித மனம் 

http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_6097.html 

 

*

 

கீதை கூறும் ஆன்மீகம் 


 

http://vivekaanandan.blogspot.in/2007/11/blog-post_19.html 

 

 

 


சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்...!

சித்தர் திருமூலர் அவர்கள் தான் எழுதிய திருமந்திரத்தில் செம்பினைப் பொன்னாக்கும் வழிமுறையினை எளிதாக, தெளிவாக எழுதியுள்ளார்.

திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் 903ஆம் பாடலைக் காண்போம்.

செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

இப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.

இங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.

இப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். இது உடலின் இரசவாதம், உயிரின் இரசவாதமாகும்.

905 ஆம் பாடலிலும் இதனை மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறார்.

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

சிவாயநம என செபித்துவர பிறப்பில்லை. சிவனின் நடனத்தைக் (தரிசனத்தைக்) காணலாம். செம்புநிலையிலுள்ள உயிரானது குற்றங்கள் நீங்கி தங்கத்தின் நிலைக்கு உயரும் என்று எழுதுகிறார்.

அதாவது செம்பினைப் பொன்னாக்கினால் அதனால் என்ன பயன் ஒருவர்க்கு உண்டாகுமோ அத்தகைய பயனைப் பெற சிவாயநம என ஓதுவது போதுமானதாகும். அவ்வாறு தினமும் சிவசிந்தனையிலிருந்து சிவாயநம என ஓதி வந்தால் நிச்சயம் பொன்கிடைக்கும். பொன்னுக்கு நிகரான நன்மைகள் உங்களைவ வந்து சேரும். உங்கள் உடலும் பொன் உடம்பென ஆரோக்கியமான, பலமான உடலாக மாறும். உடலின் குற்றங்கள் நீங்கி நலம்பெறும்.
திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

 

 

சைவ சமயத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள


திருச்சிற்றம்பலம்


http://aanandanvivek.blogspot.in/
  

திருச்சிற்றம்பலம்

 

தமிழ் வேதங்களாகிய திருமுறைகளினால்  பெற முடியாத ஒன்றை வேறு எம்முறையிலும் பெறவே முடியாது .

 

 

 

Thursday, October 24, 2013

தம்பதிகளை வாழ்த்துதல் - Blessing the couples


திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்


மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்  அவர்கள் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_7372.htmlதிருச்சிற்றம்பலம்

 

 

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்