Tuesday, July 30, 2013

லண்டன் ஹிந்து கோயில்கள்


திருச்சிற்றம்பலம்


http://londonhindutemples.com/திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

ஜீவ காருண்யம்

 
வள்ளலார் எழுதி வைத்துள்ள ஜீவ காருண்யம் !

ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையாலும் ஊழ் வினையாலும் சத்தியமாக வராது ?

ஜீவர்களுக்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனை மனைவி தடுத்தாலும்.பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,தந்தையைப் பிள்ளைத் தடுத்தாலும் ,சீஷரை ஆசாரியர் தடுத்தாலும்,---அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,--குடிகளை அரசன் தடுத்தாலும்,;--அந்த தடைகளால் சிறிதும் தடைபடாமல் அரவர் செய்த நன்மை தீமைகள் அரவரைச் சேருமல்லாது வேறிடத்தில் போகாது என்பதை ,உண்மையாக நம்பி,ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டும் என்றும் அறிய வேண்டும்.

உள்ளபடி பசியால வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுக்க நினைத்த போது,நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால் ,அந்தப் புண்ணியரகளை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.

ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது,அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ,ஜானிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.

ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறமும், கீழும் மேலும்,நடுவும் பக்கமும்,நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுவதும் சில்லென்று தழைய ,முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற ,கடவுள் விளக்கத்தையும் ,திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.

ஆதலால் அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும்,கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும்,அறிய வேண்டும்.பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால் இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறியவேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி சீவர்களைப் பசி என்கின்ற அபாயத்தில் நின்றும் நீங்கச செய்கின்ற உத்தமர்கள் எந்த ஜாதியாராயினும் ,எந்தச் சமயத்தாராயினும் எந்தச் செய்கையை உடையவர்களாயினும்,...தேவர்,.முனிவர்..சித்தர் ..யோகியர்..முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்பு உடையவாகள் என்று சர்வ சக்தியை உடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படும் என்று அறியவேண்டும்.;---திருஅருட் பிரகாச வள்ளலார் . .
 
 
மாமிசம் சாப்பிடாதே! மரணமிலா பெருவாழ்வு கிட்டாது
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !

மிருகங்களும், பறவைகளும் மற்ற உயிர்களும் செய்யும் முறையீடும், விண்ணப்பமும்.

எல்லா உயிர்களுக்கும் பொதுக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை நீதிக்கடவுளே! தேவரீர் பெருங்கருணையினால் விசேட அறிவு கொடுக்கப்பட்ட மனிதர்கள் எங்களுக்குச் செய்யும் கொடுமைகளை சொல்லி முடியாது. உணவிற்காக தினசரி கோடிக்கணக்கில் எங்களை பதறப்பதற,துள்ளத்துள்ள, வெட்டி, அறுத்து, நசுக்கி இரக்கமில்லாமல் கொள்ளுகிறார்கள். முன் ஜென்மத்தில் ஏற்கனவே நாங்கள் உயிரைக் கொன்று இரக்கமில்லாமல் வாழ்ந்ததால் தான் இப்போது மனித உடம்பிலிருந்து விடுபட்டு துன்பபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் இப்போது அடைந்து கொண்டிருக்கின்ற துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எங்களுக்கு செய்தாலும் அவர்கள்
எங்கள் ஆன்ம இனங்கள் என்ற உணர்வு வந்துவிடுகிறது. எங்களுக்குச் செய்யும் கொடுமையால் அவர்கள் கொடுமை, வறுமை,பிணி,துன்பம், கவலை , பூமி நடுக்கம், பெரும்புயல், யுத்தம், விஷசுரம்,பேரிடி, தீடீர் சாவு, திருட்டு, கொள்ளை, கொலை முதலியவைகளால் துன்பப்பட்டு இறக்கின்றனர். அவர்களுக்கு இரக்க சிந்தனை உண்டு பண்ணி அவர்களையும் எங்களையும் காத்தருள வேண்டும். தனக்கோ தன்பிள்ளைக்கோ
தன் மனைவிக்கோ சுற்றத்திற்கோ ஆபத்து வரும்போது கவலைப்பட்டு கண்ணீர் விட்டுக்கதறும் மனிதர்கள் எங்களை ஏன் இரக்கமில்லாமல் கொல்லுகிறார்கள்? அவர்களுக்கு நாங்கள் என்ன கெடுதல்
செய்தோம்? இது தான் மனித நீதியா? உங்களைப் படைத்த கடவுள் தானே எங்களையும் படைத்தார்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று ஒருமை நடம்புரியும் ஒரே கடவுளே! ஒளியே!

எங்களுக்கு விசேட அறிவு இல்லாததால், எங்களுக்கு தேவரீரை வணங்க முடியவில்லை. நினைக்க முடியவில்லை. பக்தி செய்ய முடியவில்லை. தொண்டு செய்ய முடியவில்லை. ஆகவே எங்களையும் மனித உடம்பில் வரவழைத்து தேவரீர் திருவடியை அடைய அருள் செயல் வேண்டும். மேலும் மனிதர்கள் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்து அவர்களுக்கு உண்மை அறிவு, உண்மை இரக்கம், உண்மை அன்பு முதலிய நற்குணங்களை அளித்து இவ்வுலகையும் மற்ற உலகங்களையும் அறிவு உலகமாக, அருள் உலகமாக, ஆனந்த உலகமாக மாற்றும்படி மிகவும் மன்றாடி கேட்டு கொள்கிறோம்.

குற்றமெல்லாம் குணமாகக் கொள்ளும் குணப்பெருங்குன்றே! எவ்வுயிர்க்கும் தாயே!

எங்கள் சார்பில் எங்களுக்காக மனிதர்களிடம் வாதாடுகின்றவர்களுக்கும் தேவரீரிடத்தில் விண்ணப்பித்துக் கொள்பவருக்கும், கொல்லா விரதத்தை பரப்புகின்றவர்களுக்கும், எக்காலத்தும் எல்லா நன்மைகளும் பெறச்
செய்து மரணமிலாப் பெருவாழ்வில் அவர்களை வாழவைக்க வேண்டுகிறோம்.மற்றவர்களையும் கொல்லா விரதத்தை எடுக்க செய்து அவர்களையும் மரணத்திலிருந்து விடுவிக்க வேண்டும். சிற்றறிவால் செய்து
கொள்ளும் இச்சிறு விண்ணப்பத்தை திருச்செவிக்கு ஏற்பித்தருளல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

இங்ஙனம் தங்கள் அருமைப் பிள்ளைகளாகிய,
மாடு ஆடு கோழி பன்றி மீன் மற்ற உயிர்வகைகள்

ஊன் உணவை விட்டாலன்றி இன்று பெருகி வரும் எந்த நோயையும் தீர்க்க முடியாது. இது சத்தியம்! சத்தியம்!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !
 
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !
மனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா?

• சைவ விலங்கினங்கள் உடல் முழுக்க வியர்க்கும், அசைவ விலங்குகள் நாக்கில் வியர்க்கும்
• சைவ பிராணிகளுக்கு தட்டையான பற்கள இருக்கும், முன் பற்கள கடித்து கத்தரிக்க பயன்படும். அசைவ விலங்கினங்களுக்கு தட்டையான பற்கள கிடையாது. கூரிய பற்கள மட்டுமே.
• அசைவ விலங்குகளுக்கு அதன் குடல் நீளம் குறைவு. அழுகிவிடும் மாமிசம் சீக்கிரம் வெளியேறிட வகை செய்யும். சைவ பிரானகளுக்கு அதன் உடல் நீளத்தை விட 20 மடங்கு குடலின் நீளம் இருக்கும். மனிதர்கள் குடல் அவர்கள் உடல் நீளத்தை விட 20 மடங்காகும்.
• அசைவ விலங்கினங்களுக்கு வயிற்றில் ஆசிட் (hydrochloric (HCl) acid) காரத்தன்மை மிகுந்திருக்கும். சைவ பிராணிகளுக்கு குறைவாகவே இருக்கும்.மனிதர்களுக்கு சைவ பிராணிகள் போலத்தான் உள்ளது.
• அசைவ விலங்குகள் நீரை நக்கிக்குடிக்கும். சைவ விலங்குகள் உருஞ்சிக் குடிக்கும்
 

கோழியை விரும்பிச் சாப்பிடுபவர்களின் கதி என்ன?


http://vivekaanandan.blogspot.in/2013/10/blog-post_19.html
ஆன்மீகப்படி ஏற அசைவம் தவிர்ப்பீர்! 


http://vivekaanandan.blogspot.in/2013/10/blog-post_3676.html 


 


'

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா? 


http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_8236.html 


 


 


'


இந்துச் சைவர்கள் புலால் உண்ணுவதை மறுக்கின்றனரா? 

http://vivekaanandan.blogspot.in/2013/04/blog-post_9419.html
 

சைவ உணவு உண்பதன் மகத்துவம் 

http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_5820.html 

 

 

உலகத்தின் மிகச் சிறந்த சொற்ப்பொழிவு! 

 http://vivekaanandan.blogspot.in/2013/03/blog-post_17.html

ஜோதிட தெரபி


Sunday, July 28, 2013

தேவார வைப்புத் தலங்கள்

 

http://www.shivatemples.com/vt/index.php

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ”

 

http://www.vakeesarperavai.com/Audios.html


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே.

- See more at: http://ooooor.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/#sthash.UTP8uW0Aவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்

http://www.shaivam.org/siddhanta/sp/spt_t_tirupperunturai.htm

இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் (உலகப்புகழ்பெற்றவை) அரூப சிவன் : ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார். இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு "ஆத்மநாதர்' என்று பெயர் ஏற்பட்டது. ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம்.
தீபாராதனை தட்டை தொட்டு வணங்க முடியாது : கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
முக்கண் தீபம் : ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.
குதிரைச்சாமி : பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? ஆம்! ஆவுடையார்கோயிலிலுள்ள ஒரு சிவனைத்தான் இப்பெயரில் அழைக்கிறார்கள். மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று அரிமர்த்தனபாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, "குதிரைச்சாமி' என்று அழைக்கிறார்கள். தலையில் கொண்டை, குதிரை வீரர் அணியும் ஆடை, கையில் சவுக்குடன் வித்தியாசமான வடிவில் காட்சி தருகிறார். குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு "அசுவநாதர்' என்றும் பெயர் உண்டு.
தீப தத்துவம் : ஆத்மநாதர் கோயிலில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை குறிக்கின்றன. சிவனை சுற்றி திருவாசியில் உள்ள 27 தீபங்கள் நட்சத்திரங்களையும், அருகிலுள்ள 2 தீபங்கள் ஜீவாத்மா, பரமாத்மாவையும் குறிக்கின்றன. சன்னதியிலிருந்து வெளியே வரும் அடுத்தடுத்த வாசல் நிலைகளில் பஞ்சகலைகளை குறிக்க 5 தீபம், 36 தத்துவங்கள், 51 அட்சரங்கள், 11 மந்திரங்கள், 224 உலகங்கள் இவற்றை குறிக்கும் விதமாக அந்தந்த எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனின் திருவாசியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
புழுங்கல் அரிசி நைவேத்யம்சிவன்: இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது. மூன்றாம்கால (காலை 11 மணி) பூஜையின்போது மட்டும் தேன்குழல், அதிரசம், வடை, பிட்டு, தோசை, பாயாசம் படைக்கப்படுகிறது. பொங்கலன்று வாழை இலை போட்டு, 16 வகை காய்கறிகளுடன், சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல் மற்றும் கரும்பு படைக்கின்றனர்.
"எனக்கே தண்ணி காட்டுறியா?' : யாராவது ஒருவரை ஏமாற்றினால், "என்ன தண்ணி காட்டுறீயா?' என்பர். இந்த "வழக்கு' எப்படி வந்தது என தெரிந்து கொள்ளுங்கள். ஆவுடையார் கோயில் பகுதி மக்களின் நிலத்தை குறுநில மன்னன் ஒருவன், பறித்துக் கொண்டான். அவர்கள் பேரரசரிடம் முறையிட்டனர். மன்னனோ, அந்த நிலம் தன்னுடையது என்று வாதாடினான். அது மக்களுடையது என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா என்று கேட்டான்.
மன்னனின் செல்வாக்கிற்கு முன்னால், எதுவும் செய்யமுடியாத மக்கள் சிவபெருமானை நாடினர். உண்மையை வெளிக்கொணர உன்னைத் தவிர வேறு சாட்சியில்லை என மனமுருகி வணங்கினர். சிவன் பேரரசரிடம் மாறுவேடத்தில் சென்றார். குறுநில மன்னனை அழைத்து, ""மன்னா! உன் நிலம் எப்படிப்பட்ட தன்மையுடையது?'' என்று கேட்டார். அதற்கு மன்னன், ""அது வறண்ட பூமி'' என்றான். சிவன் மறுத்தார். ""பேரரசரே! அது செழிப்பான நிலம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நிலத்தை தோண்டுங்கள். தண்ணீர் வரும்,'' என்றார். அதன்படியே நிலத்தை தோண்ட நீர் வெளிப்பட்டது. குறுநிலமன்னன் தலை குனிந்தான். மக்களிடமே நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர். சிவன் தண்ணீர் காட்டிய அந்த இடம், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. அப்பகுதியை, "கீழ்நீர்காட்டி' என்று சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை, பஞ்சாட்சர மண்டபத்தின், மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்துள்ளனர்.இப்போ தெரிஞ்சுதா? நம்ம சிவன் தான் முதன் முதலில் "தண்ணி காட்டியவர்' என்று.
அரூப அம்பாள் : தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.
இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். இவளது அபிஷேக தீர்த்தம் மற்றும் குங்குமத்தை பிரசாதமாக தருகின்றனர். இவளது சன்னதி முன்பாக தொட்டில், வளையல் கட்டி வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.
கிரஹணத்தில் பூஜை : சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார்கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது.
நிற்கும் தெய்வங்கள் : குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்கவிநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.
தூண்களில் நவக்கிரகம் :ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால்,நவக்கிரக தூண்கள் வைக்கப் பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.
அன்னபூரணி விநாயகர் : ஆத்மநாதர் கருவறையை சுற்றிலும் இரண்டாம் பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒரு விநாயகர், அன்னபூரணி அம்பாளுடன் வடக்கு நோக்கியபடி இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர் யம் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. மற்றோரிடத்தில் தெற்கு நோக்கியிருக்கும் விநாயகர், நர்த்தன கோலத்தில் இருக்கிறார். இவருக்கு கீழே இரண்டு பேர் ஆடுவது போல சிற்பம் இருக்கிறது.
சச்சிதானந்தம் : முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. "சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், "சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், "ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது விசேஷம்.
தெற்கு பார்த்த சிவத்தலம் : சிவன் கோயில்கள் பொதுவாக கிழக்கு நோக்கித்தான் இருக்கும். அரிதாக சில தலங்கள் மேற்கு பார்த்திருக்கும். ஆனால், ஆவுடையார் கோயில் தெற்கு நோக்கியபடி இருக்கிறது. சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை "தெட்சிணாமூர்த்தி' என்பர். இங்கு அவர் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த தலம் என்பதால் தெற்கு நோக்கி அமைந்தது என்கிறார்கள். ஆவுடையார் கோயிலும், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவன நாதர் கோயிலும் தெற்கு நோக்கியவை ஆகும்.
மாணிக்கவாசகர் : இத்தலத்தில் சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறவர் மாணிக்கவாசகர். இவருக்குத்தான் உற்சவம் நடைபெறுகிறது.இந்த உற்சவத்தை பக்தோர்ச்சவம்(அடியார்க்குச் செய்யும் உற்சவம்) என்று சிலர் கூறுவர்.மாணிக்க வாசகர் இறைவனோடு இரண்டறக் கலந்து சாயுச்சிய முத்தி பெற்றவர் ஆகையாலும், அவர் அறிவாற்சிவமே என்று ஞானிகளால் பேசப்படுவதாலும், இறைவன் வேறு மாணிக்கவாசகர் வேறு என்று எண்ணுவது சிவாபராதம் ஆகையாலும் அவர்க்கு எடுக்கும் விழா பிரம்மோற்சவமே ஆகும். ஆன்மநாதரின் பரிகலச் சேடம் நிர்மாலிய புஷ்பம் முதலியன இவர்க்குச் சேர்ப்பிக்கப்பெறுகின்றன.
தலவிருட்சம் : தியாகராஜ மண்டபத்துக்கு அப்பால் வடமேற்கு மூலையில் வெளிமதிலை ஒட்டினாற்போல் அமைந்த திருமாளிகைப்பத்தியில் தலவிருட்சமான குருந்த மரங்கள் இரண்டு உள்ளன.இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு மேடையில் இடைவெளி இருக்கிறது.இப்பிரகாரத்தின் மூலையில் மடைப்பள்ளி இருக்கிறது.
இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் (உலகப்புகழ்பெற்றவை)
1 டுண்டி விநாயகர் சிற்ப உருவம்
  1. உடும்பும் குரங்கும்
  2. கற்சங்கிலிகள் - சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது
  3. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்
  4. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்
  5. பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்
  6. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்
  7. நடனக்கலை முத்திரை பேதங்கள்
  8. சப்தஸ்வரக் கற்தூண்கள்
  9. கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.
நந்தி, பலி பீடம் இல்லாத சிவன் கோயில், சுவாமி, அம்பாளுக்கு உருவம் கிடையாது.லிங்கம் கிடையாது.அடிப்பகுதியான ஆவுடை மட்டுமே உண்டு.அம்பாளுக்கு திருப்பாதங்கள் மட்டுமே உண்டு. திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான் நரியை பரியாக்கிய கதை நடந்த தலம். மாணிக்க வாசகருக்கு சிவபெருமானே குருவாக வந்து உபதேசம் செய்த சிவதலம். பிரதோஷம் நடைபெறாத சிவதலம். மாணிக்க வாசகருக்கு மட்டுமே இங்கு திருவிழா,உற்சவர் மாணிக்க வாசகரே. திருவாசகம் பிறக்க காரணமான தலம்,மாணிக்க வாசகர் தமது கைப்பட எழுதிய ஓலைச்சுவடி,எழுத்தாணி ஆகியவை சன்னதியில் இன்னும் உள்ளது. கல்வெட்டுக்கள், கருங்கல் தாழ்வாரங்கள்,அதி அற்புத சிற்பங்கள் நிறைந்த மிக சிறப்பான கோயில்.

*

http://poetryinstone.in/lang/ta/tag/avudayar-koil


*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

வள்ளலார் கண்ட முருகன்****
திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே.

- See more at: http://ooooor.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/#sthash.UTP8uW0A.dpuf


 

திருமண தடையா ?*

http://temple.dinamalar.com/New.php?id=373

*
தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஓதவேண்டிய பதிகம்:
திருமருகல் ‘சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்’ - (ஞானசம்பந்தர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=2018*நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.090.திருவேதிகுடி4.090.திருவேதிகுடி

திருவிருத்தம்

திருச்சிற்றம்பலம்

*

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்.
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.863 கையது காலெரி நாகங் கனல்விடுசூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை
விண்ணவர்கோன்
செய்யினி னீல மணங்கம ழுந்திரு
வேதிகுடி
ஐயனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.1

கைகளில் விடத்தைக் கக்கும் பாம்பினையும் தீயைப் போல வெம்மையைச் செய்யும் சூலப்படையையும் ஏந்தியவனும், கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்டவனும், விரிந்த சடையினை உடைய தலைவனுமாய், வயல்களிலே நீலப்பூக்கள் மணம் கமழும் திருவேதிகுடியில் உகந்தருளியிருக்கும் ஐயனுமான, நுகர்ந்தும் நிறைவு தாராத ஆரா அமுதை அடைந்து அதில் முழுகுவவோம் நாம்.


864 கைத்தலை மான்மறி யேந்திய கையன்கனன்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து
பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு
வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.2

கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப்படையையும் ஏந்தி, மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும், வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம்.


865 முன்பின் முதல்வன் முனிவனெம் மேலைவினைகழித்தான்
அன்பி னிலையி லவுணர் புரம்பொடி
யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு
வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந்
தாடுதுமே.
4.090.3

முன்னும் பின்னும் தானே உலக காரணனாய், மனனசீலனாய், நம் பழைய வினைகளைப் போக்குபவனாய், அன்பு நிலையில் இல்லாத அசுரர்களின் மும்மதில்களையும் அழித்த செம்பொன் போல்பவனாய், தாமரை மலர்மேல் உள்ள பிரமன் வழிபடுவதற்காக வந்து அடையும் திருவேதிகுடியில் விரும்பி உறைபவனாய், நம்மை அடிமைகொள்ளும் பெருமானை நாம் அடைந்து அவன் அருளாரமுதக் கடலில் ஆடுவோம்.


866 பத்தர்க ணாளு மறவார் பிறவியையொன்றறுப்பான்
முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட
முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு
வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.4

பக்தர்களாய்த் தன்னை நாளும் மறவாத அடியார்களுக்குப் பொருந்திய பிறவிப் பிணியை அறுப்பவனாய், பாசநீக்கம் உற்றவர்கள் இம்மண்ணுலகில் சிவப்பணி செய்து உயரச் செய்தவனாய், கொத்தாகப் பூத்த கொன்றையின் மணம் பரவும் திருவேதி குடித் தலைவனாய் உள்ள ஆரா அமுதக் கடலை நாம் அடைந்து ஆடுவோம்.


867 ஆனணைந் தேறுங் குறிகுண மாரறிவாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ்
சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயிறிரு
வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந்
தாடுதுமே.
4.090.5

தேனிலே பொருந்தி உண்டு பறக்கும் வண்டுகள் மிகுதியாகக் காணப்படும் திருவேதிகுடியில் பஞ்சகவ்வியத்தில் அபிடேகம் கொள்ளும், மழு ஏந்திய பெருமான், பிறையும் கங்கையும் சடைமுடியில் சூடி, கையில் மானை வைத்துக் கொண்டு கூத்து நிகழ்த்துபவன் விரும்பி காளையை ஏறி ஊரும் அப்பெருமானுடைய பெயர்களையோ, அடையாளங்களையோ, பண்புகளையோ ஒருவரும் முழுமையாக அறிதல் இயலாது. அவனை அடைந்து அருளாரமுதக் கடலில் ஆடுவோம் நாம்.


868 எண்ணு மெழுத்துங் குறியு மறிபவர்தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய வானவர்
தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு
வேதிகுடி
நண்ண வரிய வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.6

எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடுத் தேவர்கள் பணிந்து தௌந்து கொள்ளுமாறு, அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திருவேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவபெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம்.


869 ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனைநாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக
மகிழ்ந்துடையான்
சேர்ந்து புனற்சடைச் செல்வப்பிரான்றிரு
வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு தையடைந்
தாடுதுமே.
4.090.7

உகந்து காளையை ஏறி ஊருஞ் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம். செவிக்கு இனியவான மடப்பம் பொருந்திய மொழிகளை உடைய பார்வதியை மகிழ்ந்து பாகமாக உடையவனாய், சடையிற் கங்கையைச் சூடிய செல்வப் பிரானாய் வயல்கள் சூழ்ந்து திருவேதிகுடியைச் சார்ந்திருக்கும் பெருமானாகிய குளிர்ந்த அமுதை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம்.


870 எரியு மழுவின னெண்ணியு மற்றொருவன்றலையுள்
திரியும் பலியினன் றேயமும் நாடுமெல்
லாமுடையான்
விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு
வேதிகுடி
அரிய வமுதினை யன்பர்க ளோடடைந்
தாடுதுமே.
4.090.8

கொடிய மழுவை ஏந்தியவனாய், பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை பெற விரும்பித் திரிபவனாய், தேயங்களும் நாடுகளும் எல்லாம் உடையவனாய், விரிந்த சோலைகளும் சேறு விளங்கும் வயல்களும் அழகு செய்யும் திருவேதிகுடியில் உறையும் பெருமானாகிய அரிய அமுதை அன்பர்களோடு அடைந்து அதில் திளைத்து ஆடுவோம்.


871 மையணி கண்டன் மறைவிரி நாவன்மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு
வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு
வேதிகுடி
ஐயனை யாராவமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.9

நீலகண்டனாய், வேதம் ஓதும் நாவினனாய், பெருமையாகக் கருதி விரும்பிய திருநீற்றை மெய் முழுதும் அணிந்தவனாய், மேம்பட்ட வெள்ளிய மழுப்படையினனாய், சிறந்த தாமரைகள் மணம் வீசும் திருவேதிகுடித் தலைவனாய் உள்ள சிவபெருமானாகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம்.


872 வருத்தனை வாளரக் கன்முடி தோளொடுபத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா வருளனைப் பூதப்
படையுடைய
திருத்தனைத் தேவர்பி ரான்றிரு வேதி
குடியுடைய
அருத்தனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.10

வாளை ஏந்திய அரக்கனுடைய தோள்களோடு தலைகள் பத்தினையும் நெரித்துத் துன்புறுத்தியவனாய், பிறகு அவற்றைப் பொருத்தியவனாய், தவறாத அருளுடையவனாய், பூதப் படையை உடைய புனிதனாய், தேவர்கள் தலைவனாய், திருவேதி குடியில் உறையும் மெய்ப்பொருளான ஆரா அமுதினை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம்.


திருச்சிற்றம்பலம் 


பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி


நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு
என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல்
ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகம்மலி வாழை விரை
நாறஇணை வாளை மடுவில்
வேறுபிரியாது விளையாட வளம்
ஆறும் வயல் வேதிகுடியே


சொற்பிரிவு இலாதமறை பாடி நடம்
ஆடுவர் தொல் ஆனை உரிவை
மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்
நாளும்வளர் வானவர் தொழத்
துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர்
இயன்ற தொகுசீர்
வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர்
என்பர்திரு வேதிகுடியேபோழும்மதி பூண்அரவு கொன்றை மலர்
துன்றுசடை வென்றி புகமேல்
வாழும்நதி தாழும் அருளாளர் இருள்
ஆர்மிடறர் மாதர் இமையோர்
சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர்
வரிதோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி
என்பர்திரு வேதிகுடியேகாடர்கரி காலர்கனல் கையர் அனல்
மெய்யர்உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர்சரி கோவணவர்
ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள்
மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை
மேவுதிரு வேதிகுடியே


சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற
முனிந்து தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்
இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல்
பற்றி வரி வண்டு இசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர்
போக நல்கு வேதிகுடியே
 செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து
கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மடமங்கை யொடு
அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ்
மிக்க இழிவு இலாதவகையார்
வெய்ய மொழி தண்புலவருக்கு உரை
செயாத அவர் வேதிகுடியேஉன்னி இரு போதும் அடி பேணும் அடியார்
தம் இடர் ஒல்க அருளி
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல்
இருந்த துணை வன்தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம்
விரும்பி அரு மங்கலம் மிக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர்
இயற்று பதி வேதிகுடியே
 உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை
பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது
நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும்
ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்இசை
உலாவுதிரு வேதிகுடியே


பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி
அங்கையனும் நேட எரிஆய்
தேவும்இவர் அல்லர் இனி யாவர்என
நின்று திகழ் கின்றவர்இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது
அறாத கொடையாளர் பயில்வாம்
மேவுஅரிய செல்வம்நெடு மாடம்வளர்
வீதி நிகழ் வேதிகுடியே


வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து
அறிவிலாதவர் மொழி
தஞ்சம்என என்றும் உணராத அடியார்
கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள்
தெரிந்துஎழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி
நிகழ்கின்ற திருவேதிகுடியே


கந்தமல்லி தண்பொழில் நல்மாடம் மிடை
காழி வளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலிசெந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்
என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளும் அதுவே
சரதம் ஆணை நமதே


திருச்சிற்றம்பலம்.

சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப் போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்


பாடியவர்: திருஞானசம்பந்தர்  தலம்: திருமருகல்


சடையாய் எனுமால்; சரண்நீ எனுமால்;
விடையாய் எனுமால்; வெருவா விழுமால்;
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ, இவன் உள் மெலிவே


சிந்தாய் எனுமால்; சிவனே எனுமால்;
முந்தாய் எனுமால்; முதல்வா எனுமால்;
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே


அறையார் கழலும் அழல்வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய்; பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளை கொண்டு எழில் வல்வினையே


ஒலி நீர் சடையில் கரந்தாய், உலகம்
பலி நீர் திரிவாய், பழி இல் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய், இவளை
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே


துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே


பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையார் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோந்து
அலரும் படுமோ அடியாள் இவளே


வழுவாள் பெருமான் கழல்வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே


இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே


எரிஆர் சடையும் மடியும் இருவர்
தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே


அறிவுஇல் சமணும் அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறிஏந்து கையாய்; மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே


வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே

*


 திருமணம் தடையின்றி இனிதே நடைபெற உதவும் பதிகம்
(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)
திருக்குறுந்தொகை                                                 5-ம் திருமுறை      காவிரி வடகரைத்தலம் அறுபத்தி மூன்றில் இருபத்தைந்தாவது தலம் திருமணஞ்சேரி திருத்தலம் ஆகும். திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருநாவுக்கரசர் சுவாமிகள் ஆகியோர் பாடல் பெற்றது. இதனைக் கீழைத் திருமணஞ்சேரி என்பர். மன்மதன் பூசித்துப் பேறு பெற்ற தலம். ஆமை வழிபட்டது. ஈசன், உமாதேவியைத் திருமணம் செய்த தலம்.
     திருமணஞ்சேரி திருத்தலத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் சந்நிதி மிக விசேடம். திருமணம் ஆகாது தாமதப்படும் அல்லது தடைப்படும் ஆண் பெண் இருபாலரும் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுக் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்து விரைவில் திருமணத் தடை நீங்கி திருமணம் அடைந்து வருவது இன்றும் கண்கூடாகக் காணும் விசேடமாகும். இந்தத்தல ஐதீகமே இத்திருப்பதிகப் பயனுக்குத் தக்க சான்றாகும்.

திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)


திருச்சிற்றம்பலம்

          1. பட்ட நெற்றியர் பாய்புலித் தோலிவினர்
            நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
            சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரிஎம்
            வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.


    சிவபெருமான், நெற்றியில் பட்டம் அணிந்து விளங்குபவர்ளூ புலித்தோலை உடுத்தியவர்ளூ நின்று மேவி திருநடனம் புரிபவர்ளூ முனிவர்கள் நாள்தோறும் ஏத்தி வழிபடுகின்ற செல்வம் திகழும் திருமணஞ்சேரியில், நீண்ட சடையைக் கொண்டை போல் சேர்த்து அழகு பொலிய விளங்குபவர். அப்பெருமானுடைய அருளாகிய எழில் வண்ணத்தை வாழ்த்துவோமாக!          2. துன்னு வார்குழ லாள்உமை யாளொடும்

            பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
            மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
            உன்னு வார்வினை யாயின ஓயுமே.

     பின்னிய நீண்ட கூந்தலையுடைய உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், சடைமுடியின் மேல் பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் சிறப்புடன் திகழும் திருமணஞ்சேரியில் அமுதமாகத் திகழ்பவர். அவரை நினைத்து ஏத்தும் அடியவர்களுடைய வினை யாவும் தீரும்.          3. புற்றில் ஆடரவு ஆட்டும் புனிதனார்

            தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
            சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
            பற்றி னார்அவர் பற்றவர் காண்மினே.

     புற்றில் வாழும் அரவத்தை ஆபரணமாக அணிந்து ஆட்டுகின்ற புனிதராகிய சிவபெருமான், மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கி அழித்தவர். அப்பெருமான், நாற்புறமும் மதில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் வீற்றிருப்பவர். அவர் தன்னை உள்ளத்தில் பதித்துப் பற்றாகி மேவும் அடியவர்களைப் பற்றி இருந்து அருள் செய்யும் பெருமான் ஆவார்.          4. மத்த மும்மதியும் வளர் செஞ்சடை
            முத்தர் முக்கணர் மூசுஅர வம்அணி
            சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரிஎம்
            வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

     சிவபெருமான், ஊமத்த மலரும், பிறைச் சநதிரனும் செஞ்சடையில் தரிதத்தவர்ளூ உலகப் பற்று நீங்கிய மெய்யடியவர்களுக்கு முத்திப் பேற்றினை அளிப்பவர்ளூ சூரியனை வலக் கண்ணாகவும், சந்திரனை இடக் கண்ணாகவும், அக்கினியை நெற்றிக் கண்ணாகவும் கொண்ட முக்கண்ணர்ளூ உடலில் தவழுமாறு பாம்பை அணிந்துள்ளவர்ளூ சித்தராகத் திகழ்பவர்ளூ நெருப்புப் போன்ற சிவந்தமேனி வண்ணம் உடையவர். அப்பெருமான், சீர் மிகுந்த திருமணஞ்சேரியில், அறிவின் களஞ்சியமாக விளங்குபராகித் தம்மை விரும்பும் அடியவர்களுக்கு விரும்பும் தலைவராகி அருள் புரிபவர்.

          5. துள்ளு மான்மறி தூமழு வாளினர்
            வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
            அள்ளல் ஆர்வயல் சூழ்மணஞ் சேரிஎம்
            வள்ள லார்கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.

  சிவபெருமான், மான் கன்றும் மழுப்படையும் கையில் ஏந்தியவர்ளூ கங்கையைச் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப்பெருமான்,  யவா ன்கு விளங்கும் வயல்வளம் சூழ்ந்த திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் வள்ளல். அவர்தம் திருக்கழலை வாழ்த்துதலே, இப்பிறவியில் நன்கு வாழும் வாழ்க்கை என்பதாகும்.          6. நீர் பரந்த நிமிர்புன் சடையின்மேல்
            ஊர் பரந்த உரகம் அணிபவர்;
            சீர் பரந்த திருமணஞ் சேரியார்
            ஏர் பரந்தங்கு இலங்கு சூலத்தரே.

        சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் கொண்டு ஊhந்து செல்லும் பாம்பை ஆபரணமாகத் திருமேனியில் அணிந்துள்ளவர். அவர், சிறப்பு மிக்க திருமணஞ்சேரியில் பெருமையுடன் சூலப்படை யுடையவராய் விளங்கும் ஈசன் ஆவார்.          7. சுண்ணத் தர்சுடு நீறுகந்து ஆடலார்
            விண்ணத் தம்மதி சூடிய வேதியர்;
            மண்ணத் தம்முழவு ஆர்மணஞ் சேரியர்
            வண்ணத் தம்முலை யாள்உமை வண்ணரே.

       சிவபெருமான், திருவெண்ணீற்றைத் திரு மேனியில் பூசி விளங்;குபவர்ளூ சாம்பலை உகந்து ஆட வல்லவர்ளூ விண்ணில் தவழும் சந்திரனைச் சூடியவர்ளூ வேதங்களை விரித்து ஓதியவர். பூவுலகத்தில் முரசு ஒலிக்கும் திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் அப்பெருமான் வண்ணம் திகழும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.          8. துன்ன ஆடையர் தூமழு வாளினர்
            பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
            மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரிஎம்
            மன்ன னார்கழலே தொழ வாய்க்குமே.

      சிவபெருமான், தைத்த கோவணத்தை ஆடையாக உடுத்தியவர்ளூ மழுப்படை யுடையவர்ளூ பின்னி அழகுபடுத்திய சிவந்த சடைமுடியின் மீது, பிறைச் சந்திரனை வைத்தவர்ளூ சிறப்பான பொழில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் விளங்கும் பெருமைக்கு உரியவர். அப்பரமனின் திருக்கழலைத் தொழுது ஏத்த எனக்குப் பேறு கிடைத்தது.          9. சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்

            பத்தர் சேர்அமண் கையர் புகழவே
            மத்தர் தாம்அறியார் மணஞ் சேரிஎம்
            அத்த னார்அடியார்க்கு அல்லல் இல்லையே.

      சித்தர்கள், தேவர்கள், திருமால் மற்றும் நான்முகன்ஆகியவர்களுடன் புத்தரும் சமணரும் புகழ்ந்து ஏத்தவும் அத்தகையோர்க்கு, அறிய முடியாதவராகித் திருமணஞ்சேரியில் வீற்றிருப்பவர் ஈசன். அன்புக்கு எழியவராகிய அப்பரமனின் அடியவர்களுக்கு, அல்லல் என்பது இல்லை.         10. கடுத்த மேனி யரக்கன் கயிலையே
            எடுத்த வன்னெடு நீள்முடி பத்திறப்;
            படுத்த லும்மணஞ் சேரி யருள்எனக்
            கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

       பலம் பொருந்திய மேனியை உடைய அரக்கனாகிய இராவணன் கயிலைமலையை பெயர்த்து எடுத்தபோது, அவனுடைய நிண்ட முடிகள் பத்தும் நலியுறுமாறு அடர்த்து மேவிய ஈசனை, அவ்வரக்கன், திருமணஞ்சேரி ஈசனே அருள்வீராக என்று ஏத்த, ஈசனும் மனமிரங்கி அவ்வரக்கனுக்கு அரச வாளும் அளித்து, இராவணனுடைய பெயர் என்றும் நிலைக்குமாறும் அருள் புரிந்தார்.
திருச்சிற்றம்பலம்

http://devaramthiruvasagam.blogspot.in/2013/03/blog-post.html

*


http://www.saalaram.com/idb/MTQyMDI=/ODg=/aW1nX2FsbA==

*திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்