Friday, February 28, 2014

சித்தாந்த வித்யாநிதி ,சைவ நன்மணி , சித்தாந்த கலாநிதி திரு சண்முகவேல் ஐயாஅவர்கள்

http://aanandanvivek.blogspot.in/2014/02/blog-post_286.html
திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


Sunday, February 23, 2014

திருமந்திர சொற்பொழிவுகள்

பேசுவதால் பயனில்லை - இலங்கை ஜெயராஜ்

எழில் ஞான பூசை ( EZHIL GNANA POOSAI )

 

நம் தமிழ் வேதங்களாகிய  இத் திருமுறைகளை "நாளும்  இன்னிசையால் தமிழ் பரப்பும் " ஓதுவார் மூர்த்திகளை  கொண்டு ஓதுவதற்கும் , அதன் சிறப்புகளை சிந்திபதற்கும் திருவருளும் , குருவருளும், கூட்டி உள்ளது .

ஞான நூல் தனையோதல் ஓதுவித்தல் 
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனமிலாப்  பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில் ஞான பூசை என்ற அருள்நந்தியாரின்  அருள் வாக்கிற்கிணங்க , இத்  திருமுறை முற்றோதுதல் ஞானவேள்வியை எழில் ஞான பூசை என்னும் திரு நாமத்தோடு  சீரார் பெருந்துறையான் புனிதப் பேரவை சிறப்பாக நடத்துகிறார்கள் .


இணையத்தளத்தில் கண்டுகளிக்க :-


www.ezhilgnanapoosai.com

e-mail : ezhilgnanapoosai@gmail.com


 எழில் ஞான பூசை என்பது யாது?

    ஞான நூல்களைப் படித்தல், பிறரைப் படிக்கச்
செய்தல், அவற்றின் பொருளைக் கேட்டல், பிறரைக் கேட்க
வைத்தல், அப்பொருளைப் பற்றிச் சிந்தித்தல் என்ற
ஐந்தும் எழில்ஞான பூசையாகும்.

பன்னிரு திருமுறைகள் (முழுமையும்)


 http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_17.html 

திருச்சிற்றம்பலம்

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

 

சைவ சமயத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள


திருச்சிற்றம்பலம்


http://aanandanvivek.blogspot.in/

Friday, February 21, 2014

ராம நாம சக்கரம்

http://www.kulaluravuthiagi.com/vina5.htm

ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்


 


 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)http://www.agasthiar.org/

 
பீஷ்மர் மகாபாரத யுத்த களத்தில் தோல்வியுற்று மரணப் படுக்கையில் கிடந்தார் அல்லவா? இச்சாம்ருத்யு என்ற அற்புதமான வரம் பெற்றிருந்ததால் அவர் விரும்பினால் ஒழிய அவரை மரணம் நெருங்காது. அதனால் அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் உயிரை விட விரும்பி மரணப் படுக்கையில் தாங்க முடியாத வேதனையில் துடித்துக கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குத் தாகம் ஏற்படவே அர்ச்சுனனை நோக்கி தனக்கு தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டார். யுத்த களத்தில் தண்ணீருக்கு எங்கே போவது? ஆனாலும், அர்ச்சுனன் இறைவனை வேண்டி ஒரு ஜல அஸ்திரத்தை பிரயோகம் செய்தான். ஜல அஸ்திரத்தால் தண்ணீர் கொண்டு வர இயலவில்லை.

அர்ச்சுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. எந்தக் குழப்பத்தையும் தீர்க்கக் கூடியவர் பரமாத்மா ஒருவர்தான் என்பதால் அங்கிருந்த அனைவரும் அஸ்திரம் பலனளிக்காததற்கு காரணம் என்ன என்று அறியும் வண்ணம் கிருஷ்ண பகவானை நாடினர்.
பகவான் ஒரு குறும்புப் புன்னகையுடன் சகாதேவனை நோக்க சகாதேவனும் கிருஷ்ணனின் ரகசிய செய்தியைப் புரிந்து கொண்டு விரைந்து சென்று அர்ச்சுனனின் அம்பு தரையில் பதிந்திருந்த இடத்திற்கு அருகே தன்னுடைய குரு விரலையும் சனி விரலையும் வைத்து ஏதோ சைகை செய்தான். மறு விநாடியே பூமியிலிருந்து கங்கை பிரவாகம் பீறிட்டு வெளி வந்து பீஷ்மரை அடைந்து அவருடைய தாகத்தைத் தீர்த்து வைத்த்து.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த அதிசய செயலைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அப்போதுதான் கிருஷ்ண பரமாத்மா அனைவரிடமும் ராம நாம மகிமையை எடுத்துக் கூறி அதை கைகளால் ஜபிக்கும் முறையை அறிந்த ஒருவன் சகாதேவன் மட்டுமே என்ற இரகசியத்தையும் அன்று முதன் முதலில் வெளியிட்டார்.

இவ்வாறு சகாதேவன் பல வருடங்கள் பயின்று வந்த ராம நாம மகிமையால்தான் பூமிக்கடியில் மறைந்திருந்த கங்காதேவி தன்னுடைய தனயனாக இருந்த பீஷ்மரின் தாகம் தீர்க்க விரைந்து வந்தாள்.

எனவே ஒரு தாயின் அன்பையும் மீறிய சக்தி உடைய ராம நாம சக்திதான் எந்த அற்புத்த்தையும் உலகில் சாதிக்கும் என்பதை உணர்த்தவே கிருஷ்ண பரமாத்மா இந்த நாடகத்தை நிகழ்த்தினார் என்பதை அப்போது அனைவரும் உணர்ந்து போற்றினர்.

சகாதேவன் ஓதிய ராம நாம ஜப யோகத்தை நீங்களும் இங்கே காட்டிய முறையில் பயின்று நலம் பல பெறலாம்.

நமசிவாய சக்கரம்

http://www.kulaluravuthiagi.com/vina5.htm உடலையும் உள்ளத்தையும்
தூய்மையாக்கும் நமசிவாய சக்கரம்


ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்


 


 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)http://www.agasthiar.org/

 
 
இங்கு கொடுத்துள்ள ’நமசிவாய’ சக்கரத்தை ஒரு பேப்பரில் அல்லது ஒரு பலகையில் வரைந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் இந்தச் சக்கரத்தை நீங்கள் வரைந்து கொள்ளலாம். இந்தச் சக்கரத்தை உங்கள் முன் வைத்து கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளவும். முதலில் சக்கரத்தில் உள்ள ’ந’ என்ற எழுத்தில் வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலை வைத்து ’ந’ என்று மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லவும். அடுத்து ’ம’ என்ற எழுத்தில் உங்கள் நடுவிரலை (சனி விரல்) வைத்து ’ம’ என்று சொல்லவும்.

அடுத்து ’சி’ என்ற எழுத்தின் மேல் உங்கள் மோதிர விரலை (சூரிய விரல்) வைத்து ’சி’ என்று சொல்லவும். அடுத்து ’வா’ என்ற எழுத்தின் மேல் உங்கள் சுண்டு விரலை (புத விரல்) வைத்து ’வா’ என்று சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறு வைத்து உங்கள் ஆள்காட்டி (குரு விரல்)விரல் ’ய’ என்ற எழுத்தைத் தொடுமாறு வைத்து ’ய’ என்று சொல்லவும்.உடலையும் உள்ளத்தையும்
தூய்மையாக்கும் நமசிவாய சக்கரம்
அடுத்து சுண்டு விரலையும், ஆள்காட்டி விரலையும் எடுக்காமல் ’ய’ என்ற அட்சரத்தைச் சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி திரும்பவும் உங்கள் உள்ளங்கை பூமியைப்பார்க்குமாறு வைத்துக் கொண்டு சுண்டு விரலுக்குரிய ’வா’ என்ற எழுத்தைச் சொல்லவும். அடுத்து உங்கள் மோதிர விரலால் ’சி’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் நடுவிரலால் ‘ம’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் ஆள்காட்டி விரலால் ’ந‘ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். இவ்வாறு நீங்கள் ’நமசிவாய, யவாசிமந’ என்று சொல்வது ஒரு சுற்று பஞ்சாட்சர ஜபமாகும்.


உங்கள் சூழ்நிலை, ஓய்வு நேரம், குறிக்கோள் இவற்றைப் பொறுத்து இந்த ‘நமசிவாய, யவாசிமந‘ ஜபத்தை 108, 1008, 1008, 100008 என எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். இந்த ஜபத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற, நிறைவேற்ற உங்கள் விரல்களில் ஓர் அற்புத சக்தி உருவாவதை நீங்கள் கண் கூடாகக் காணலாம். உங்கள் எண்ணங்களில் தூய்மையும், செயல்களில் உற்சாகத்தையும், வார்த்தைகளில் சந்தோஷத்தையும் நீங்களே எளிதில் உணரலாம்.

உங்கள் கைகள் தூய்மை அடைவதால் உங்கள் கைகளால் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும், நீங்கள் எடுத்துத் தரும் பணம், தான்யம், உணவு, ஆபரணம் போன்ற செல்வங்கள் விருத்தியாகும். மற்றவர்கள் உங்களிடம் பேச வேண்டும். உங்களிடம் பழக வேண்டும் என விருப்பப்படும் அளவிற்கு உங்களின் தோற்றமும், செய்கையும் கவர்ச்சியுடன் அமையும்.

உடல், மனம், உள்ளம் மூன்றையும் சுத்திகரிக்கும் அற்புத யோகமே இந்த நமசிவாய ஜப யோகமாகும். இந்த ஜப யோகத்தை ஒரு தாளிலோ, பலகையிலோ தொடர்ந்து பயின்று வரும்போதே, அலுவலகம், பள்ளி, பஸ், ரயில் என வெளி இடங்களில் ஓய்வாக இருக்கும்போது இந்தச் சக்கரம் இல்லாமலும் எழுத்துக்களை மனதில் உருவமாக நினைத்துக் கொண்டு அங்குள்ள மேஜை, உங்கள் இடது உள்ளங் கை, தொடை என எந்தப் பொருளின் மீதும் கைவிரல்களைச் சுழற்றி இந்த நமசிவாய ஜப யோகத்தைப் பயின்று வரலாம்.
திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Thursday, February 20, 2014

அருணகிரிநாதர் நூல்கள்

அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும், காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தார் என்றும் சொல்கின்றனர்.

இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்.
அருணகிரிநாதர் நூல்கள் மொத்தம் 9. அவை :Simple Siddha Mantras for Lord Shri RamSimple Siddha Mantras for worshipping Lord Shri Ram.

First revealed by Sathguru Venkataraman in a public lecture on April 10, 1984. The voice in this clip is that of the Sathguru himself culled from his April 10, 1984 lecture.

Monday - Sri Ram Jaya Ram Siva Ram
Tuesday - Sri Ram Jaya Ram Jaya Jaya Ram
Wednesday - Hari Rama Hari Rama Rama Rama Hari Hari
Thursday - Jaya Rama Siva Rama Guru Rama Jaya Ram
Friday - Sita Rama Hanumantha Rama Sita Hanumantha
Saturday - Sri Ram Jaya Ram Sundara Ram
Sunday - Sri Ram Jaya Ram Raghu Ram
Special Mantra - Sri Ram Jaya Ram Kodhanda Ram

For more details, please visit http://www.Agasthiar.org/a/rama

Agasthiar Ashram located in holy Arunachala.

Some of the images of Lord Shri Ram used in this clip were taken from the Internet.

Ramachandra Prayers Part 1:
http://www.youtube.com/watch?v=7zUcY8...

Ramachandra Prayers Part 2:
http://www.youtube.com/watch?v=u3tt54...

Simple Rama Siddha Mantras:
http://www.youtube.com/watch?v=OVosDQ... ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

 

Sunday, February 16, 2014

கர்ப்பக்கிருக அமைப்பு, அர்ச்சனை அபிசேக ஆராதனைகளின் விஞ்ஞான விளக்கம்


கோடான கோடி நன்றிகள்


ஒத்த அதிர்வு கொண்ட காற்றுமண்டலம், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடைய ஒலிக்குப் பெரும் ஓசை எழுப்பவல்லது (Maximum Sound) என்பது தெரிந்ததே. ஆகம சிற்ப சாத்திரங்கள், விக்கிரகத்தின் உயரத்துக்கேற்ப கர்ப்பக்கிருகத்தின் உள் அளவை வரை வரையருத்திருக்கின்றன. ‘ஓம்’ என்ற ஒலிக்குக் கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று மண்டலம் ஒத்த அதிர்வு அளிக்கும்படி அதன் உள்ளளவு அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது காற்றின் ஒவ்வொரு மூலக்கூறும் பெரும் வீச்சுடன் ஒத்த அதிர்வு அடைய முடியும்.
ஆலயத்தில் மூல விக்கிரகத்திற்கு தண்ணீர், எண்ணெய், தேன், பால், தயிர், விபூதி ஆகியவற்றை கொண்டு அபிசேகம் செய்வதன் தத்துவம். இந்த ஒவ்வொரு பொருளுக்கும் மின்கடத்தும் திறன் (conductivity) மாறுபடுகிறது.
தயிர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யும்போது விக்கிரகத்தின் மின்கடத்தும் திறன் அதிகமாகிறது. எண்ணெய், தேன், விபூதி, குங்குமம், பூ ஆகியவற்றால் அபிசேகம் செய்யும்போது இதன் மின்கடத்தும் திறன் குறைந்தாலும் நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அபிசேகப் பொருள்களான குங்குமம், பால், தயிர், தேன், தண்ணீர் ஆகியவற்றின் pH மதிப்பும் அளவிடப்பட்டுள்ளன. ஒரு திரவத்தின் pH-ன் மதிப்பு அதிகரிப்பது, அதன் எதிர்மின்னூட்டம் (Negative ION Concentration) அதிகரிப்பதையே குறிக்கும். குங்குமம், சந்தனம், மஞ்சள், தண்ணீர் ஆகியவை அதிக pH மதிப்பு கொண்டவை. இவற்றைக் கொண்டு அபிசேகம் செய்வதால் கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று மண்டலத்திலும் எதிர்மின்னூட்டங்கள் அதிகரிக்கும்.
அபிசேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை செய்யும்போது காற்று மண்டலத்தில் ஒரு மின்தேக்கியை வைத்து மின்னூட்டதை அளந்தால் தூபம், தீபம் காட்டும் மாறுபாட்டால் மின்னூட்டம் மாறுபடுவது (Charge) தெரியும்.
எதிர்மின்னூட்டமும் ஈரப்பதமும் உள்ள காற்று மண்டலம் கர்ப்பக்கிருகத்தினுள் அமைந்து உள்ளது. அந்தக் காற்று மண்டலத்துள் ‘ஓம்’ என்ற ஒலியுடன் (பிரணவ மந்திரம்) அர்ச்சனை செய்யும்போது அந்த ஓலி விக்கிரகத்தில் பட்டு எதிரொலிக்கிறது. இதனால் அந்தக் காற்றுமண்டலத்தில் இதனால் அந்தக்காற்று மண்டலத்தில் பெரும் அலைவும்; முத்ததிர்வும் (Maximum Amplitude at Resonance) கிடைக்கிறது.
இந்நிலையில் ஏற்படும் காற்றுவீச்சு எதிரே உள்ள பக்தர்களின் மேல்படும்போது அவர்களுக்கு உள்ளவளமும் – உடல்நலமும் கிடைக்கிறது.

இந்த விஞ்ஞான உண்மையை அன்றே அறிந்திருந்த நமது முன்னோர்கள் இத்தகைய ஆலயங்களை மலைகள் மீதும், கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய சொலைப்பகுதிகளிலும், அருவிக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள். இந்த இடங்களில் உள்ளத்தூயமையும் உடல் நலமும் கிட்டுகிறது. இதற்காகத்தான் ஆறுகால அபிசேகங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன. அர்ச்சனைகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக விக்கிரத்தில் தொடர்ந்து அதிர்வுகள் நிலைத்திருக்கும். ஆலயத்தில் உள்ள கர்ப்பகிருகத்தின் அமைப்பு இதனை சேமித்துப் பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூலவிக்கிரகம் ஒலி அலைகளின் எதிரொலியை எழுப்பவில்ல விதத்தில் அமைந்துள்ளது. அடியில் பொருத்தப்பட்டுள்ள எந்திரத்தகடு ஆற்றல சேமிப்புக்கலனாகவும் காற்று மண்டலம் அந்த சக்தியை ஏற்றிச் செல்லும் முறையிலும் முறையிலும் அமைந்துள்ளன. இதன் முழுப்பலனும் வழிபடவரும் பக்தர்களுக்கு போய்ச் சேர்கிறது. அவர்கள் இவற்றை ஏற்பவர்களாக (Receiver) விளங்குகிறார்கள்.
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்றுமண்டலத்தில் பிராணவாயு அழுத்தம் அதிகரிக்கிறது. அந்தக் காற்று மண்டலம் பிராணவாயுக் கூறுகளை அதிகமாக பெறுவதால் பதர்களின் உடல்நலம் சீர்பெற உதவும். ஒலியின் திசைவேகம் ஈரப்பததில் அதிகமாக இருக்கும். ஆகையால் எப்போதும் அபிசேக நீரினால் ஈரமாகவே உள்ள கர்ப்பக்கிருகம் இந்த நிலையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆலயங்களின் அமைப்பும் அதன் உள்ளமப்பும் இவ்வாறு வேதாந்தபூர்வமகவும், விஞ்ஞானபூர்வமாகவும் கணிக்கப்பட்டே அமைந்திருக்கின்றன. இதனால் மனிதர்களுக்கு உடல்நலமும், உள்ளவளமும் கிடைக்கின்றது.
 

Friday, February 14, 2014

திருவாசக விளக்கம்

சைவ சித்தாந்த சாத்திரங்கள்-ஒருபார்வை.