Friday, November 21, 2014

எல்லா உயிரிலும் கடவுள்

உயிர்களை எக்காரணம் கொண்டும் வதைக்கக் கூடாது. ஜனமேயஜயர் மகாராஜாவின் கதை தெரிந்தால், மற்ற உயிர்கள் மீது நமக்கு கை வைக்கவே தோன்றாது.
அர்ஜுனனுக்கும், சுபத்ரைக்கும் அபிமன்யு பிறந்தார். அபிமன்யுவுக்கும் அவரது மனைவி உத்தரைக்கும் பிறந்தவர் பரீட்சித்து மகாராஜா. பரீட்சித்துவுக்கும் அவர் மனைவி மாத்ரவதீக்கும் பிறந்த மகனே ஜனமேஜயர். அதாவது அர்ஜுனனின் கொள்ளுப்பேரர். இவருக்கு சிருதசேனர், உக்ரசேனர், பீமசேனர் என்ற சகோதரர்கள் இருந்தனர்.
ஜனமேஜயருக்கு யாகங்களைச் செய்வதில் அலாதிப்ரியம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பலவித நன்மைகள் நடந்தன. ஒருமுறை "தீர்கஸத்ரம்' என்னும் அரிய பலன்களைத் தரும் யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நாய்க்குட்டி யாக குண்டம் அருகே வந்து விட்டது. அது அசுத்தம் செய்து விடுமோ என்ற பயத்தில், ஜனமேஜயரின் சகோதரர்கள் அதை அடித்து விரட்டினர். அது வலி தாங்காமல், 
தன் தாயிடம் போய் முறையிட்டது.
நாயின் தாய் ஜனமேஜயரிடம் போய், ""எனது குட்டி அசுத்தம் செய்து யாகத்துக்கு பங்கம் ஏற்பட்டிருந்தால் அதை அடித்திருக்கலாம். 
அப்படி ஏதும் செய்யாமல், யாக குண்டம் அருகே நின்று வேடிக்கை பார்த்ததற்காக உங்கள் சகோதரர்கள் அடித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். எனக்கு நீதி வேண்டும்,'' என்றது.
நாயின் கோரிக்கையை ஜனமேஜயர் கண்டுகொள்ளவில்லை.
இதன் விளைவாக அந்த நாய், ""என் குட்டியை அநியாயமாக தாக்கிய உன்னை எந்நேரமும் பயம் ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும்,'' என சாபம் கொடுத்து விட்டது. அதன் பிறகு தான் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தார் ஜனமேஜயர் . நாய் சாபமிட்டபடியே, இனம் புரியாத பயம் அவரை எந்நேரமும் வாட்டி வதைத்தது.
பயம் நீங்க அவர் பல யாகங்களைச் செய்தார். ஆனால், நீங்கவில்லை. ஒரு உயிரை தேவையின்றி துன்புறுத்தி, எத்தனை யாகங்கள், பிரார்த்தனைகள் செய்தாலும் இறைவன் அதைக் கண்டுகொள்ள மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டார்.
இந்நேரத்தில் வைசம்பாயனர் என்னும் மகான் வந்தார். இவர் மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் பிரதம சீடர்.
""ஜனமேஜயா! பாரதக் கதையைக் கேட்டால் பயம் நீங்கும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் கிருஷ்ணரின் அருளால் பயமின்றி இருந்தனர்,'' என்றார். அந்தக்கதையை அவரே கூறக்கேட்டு பயம் நீங்கப்பெற்றார்.
அதன்பின், எந்த ஒரு பிராணிக்கும் துன்பம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இவரது தந்தை பரீட்சித்து மகாராஜா பாம்பு தீண்டி தன் 60ம் வயதிலேயே இறந்து விட்டார். எனவே, பாம்புகளுக்கு தீங்கு செய்யாதவரை அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தினார்.
""ஜரத்காரோர் ஜரத்கார்வாம்
ஸமுத்பந்நோ மஹாயசா:!
ஆஸ்திகஸ ஸத்யஸந்நோ மாம்
பந்நேகப்யோபிரக்ஷிது!!

என்னும் மகாபாரதத்திலுள்ள ஸ்லோகம் ஒன்றைச் சொன்னால், பாம்புகள் கடிக்கக்கூடாது என்ற வரத்தை பாம்புகளின் தலைவனான தட்சகனிடம் பெற்றார். 
இனியாவது, எல்லா உயிர்களையும் கடவுளாகவே பாருங்கள். அவற்றுக்கு துன்பம் இழைக்கத் தோன்றாது.
Thursday, November 13, 2014

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்

மேலை நாடுகளில் கடைபிடித்து வரும் தாந்த்ரீக முறைகளில் சிலவற்றை


இனி உங்களுக்கு அளிக்கலாம் என உள்ளேன். இவை அனைத்தும் 


பரிசோதிக்கபட்டவை ஆகும். ஆகையால் அனைவரும் செய்து பயன் 


அடையலாம்.


இதை இன்று இரவு (வெள்ளிக்கிழமைகளில்) 8-9 மணிக்குள் செய்தால்


 பலன் இரட்டிப்பு ஆகும்.சாதாரண நாட்களிலும் செய்யலாம்-கால நேரம்


 பார்க்க வேண்டியதில்லை.


சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். 


அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும். 


அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி


 பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு 


கிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்) 


தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் 


செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, 


கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்) 


வைத்து விடவும். தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், 


வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு


 பலன் தரும். இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள்


 மேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர


 உச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது


 வந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம். இவை 


தூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில்


 மாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம். 


முடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-அவரவர் வசதிக்கேற்ப்ப.கோடான கோடி நன்றிகள்


Wednesday, November 12, 2014

பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் 26 குணங்கள்...... 

பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் இதை ‘செக் லிஸ்டாகப்’ (Check List) பயன் படுத்தலாம். அவர்கள் பத்தரை மாத்துத் தங்கமா, பம்மாத்துப் பேர்வழிகளா என்று விளங்கி விடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 26 குணங்கள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் வெறும் ‘ஆசாமி’!!! இதோ கிருஷ்ண பரமாத்மா கொடுக்கும் பட்டியல்: 

1.அச்சமின்மை (அபயம்) 
2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:)
 3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி) 
4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி) 5.ஐம்புலனடக்கம் (தம:) 
6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்) 
7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்) 
8.தவம் (தப:) 
9.நேர்மை (ஆர்ஜவம்) 
10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை) 
11.உண்மை (சத்யம்) 
12.சினமின்மை (அக்ரோத:) 
13.துறவு (த்யாகம்) 
14.அமைதி (சாந்தி) 
15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy) 
16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)
 17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்) 18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை) 
19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்) 
20.மன உறுதி (அசாபலம்) 
21.தைரியம், துணிவு (தேஜ:)
 22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)
 23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி)
 24.சுத்தம் (சௌசம்) 
25.வஞ்சனை இன்மை (அத்ரோஹ:)
 26. செருக்கின்மை ( ந அதிமானிதா ) 

  இந்த மூன்று ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்வது நல்லது. நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். இதோ மூன்று ஸ்லோகங்கள்: 

அபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம். அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக: சாந்தி ரபைசுனம் தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம். தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத.


ஆலய வழிபாடு - Temple worship

மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்கள்


திருச்சிற்றம்பலம்http://aanandanvivek.blogspot.in/2013/09/blog-post_9764.html

திருச்சிற்றம்பலம்

 

http://www.youtube.com/user/knowingourroots/videos 

 

 

திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
-

Monday, November 3, 2014

அகத்தீசா என்றால் விரும்பியது அனைத்தும் கைகூடும்


ஓம்  அகத்தீசாய நம


ஓம்  நந்தீசாய நம


ஓம் திருமூலதேவாய நம


ஓம் கருவூர் தேவாய நம


ஓம்  பதஞ்சலி தேவாய நம


ஓம்  இராமலிங்க தேவாய நம