Tuesday, December 27, 2016

கோவில்களில் மணி இருப்பது ஏன்?.. மூளைக்குள் ஏற்படும் அதிரடி மாற்றம்!...


கோவில்கள் மனிதனிடம் உள்ள தீய அலைகளை அழித்து நல்ல சிந்தனையை மேம்படுத்தவே முக்கியமாக கட்டப்பட்டது.

பெரும்பாலான கோவில்களில் மணி இருக்கும்.
சரி கோவிலில் மணி எதற்கு தொங்கவிடப்பட்டுள்ளது?
கோவில் மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நேரங்களில் தெய்வீக சூழ்நிலைக்குப் பொருந்தாத ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனிதனின் மனம் லயிக்க மணியானது உதவுகிறது.
கோவிலில் மணி இருப்பதற்கு அறிவியல் காரணங்களும் இருக்கிறது தெரியுமா?
கோவில் மணிகள் பெரும்பாலும் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், வெள்ளி, ஈயம் போன்ற பல உலோகங்களால் சரியான கலவையில் உருவாக்கப்படுகிறது.
இவை மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வருகின்றன. மணியை அடித்தவுடன் வரும் சத்தமானது 10லிருந்து 20 வினாடிகளுக்கு எதிரொலிக்கும். அந்த சில வினாடிகளில் மனித உடலில் இருக்கும் ஏழு குணப்படுத்தும் மையங்களுக்கும் இது சென்று மனதை ஒருநிலைப்படுத்துகிறது.
மேலும், மணிச்சத்தமானது மனிதனின் உள்கோட்டில் ஒரு வித பாசிட்விங் வைப்ரேஷன்களை உருவாக்கி எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்தி ஒரு நேர்கோட்டுக்கு கொண்டு வருகிறது.
பூஜை நேரங்களில் அமங்கலமான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில்விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் மணி அடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Sunday, December 25, 2016

"ஓம்"


"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...
உடலில் உயிர் வாயுவான ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறதாம்.
கரிமில வாயுவான கார்பன்-டை-ஆக்சைடுவின் அளவும் இரத்தத்தில் லேக்டிக் ஆசிட்டின் அளவும் குறைகிறதாம்.
கல்கத்தாவை சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அன்வெஷா அங்கே நடந்த அறிவியில் கண்காட்சியில் நிரூபித்து, விஞ்ஞானிகளை வாயடைக்க செய்துள்ளார்.
"ஓம்" எனும் மந்திரத்தை 30 நிமிடங்கள் கேட்டாலே இத்தனை பயன்கள் என்றால்..
அதை தினமும் 30 நிமிடங்கள் வெறும் வயிற்றில் உச்சரித்தால் இன்னும் எத்தனை எத்தனை பயன்கள் தருமோ?? 

கோமாதாவை ஏன் வணங்க வேண்டும் சிலிர்க்க வைக்கும் காரணங்கள் | Why Do Hindus...

BORN ON THURSDAY..?இந்த நாளில பிறந்தாய் BY INDIAN SPIRITUAL GURU SANJEVI...

மிக பெரிய வெற்றி தரும் லட்சுமி வசியம்

வற்றாத வளமைக்கு எளிய பரிகாரம்

அதீத விரயங்கள் மற்றும் செலவுகள் நிற்க எளிய பரிகாரம்

வீட்டில் சிலர் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுகிறார்களே! ஏன்?

எதிர்பாரா பண வரவிற்கு எளிய பரிகாரம்

நிரந்திர பணவரவைத் தரும் இலவங்கப் பட்டை

பெண்களின் தலைவகிடு ரகசியம் என்ன

கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயன்கள்

பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எப்படி வணங்க வேண்டும்

KARMA THEORY by (Healer Baskar) (Peace O Master)

ஸ்வாதி நட்சத்திரம் சொல்லும் சம்பத்து தாரா பெருமை

கோடான கோடி நன்றிகள்

சம்பத்து தாரா ஜோதிடர்

ஜோதிஷண்முகம்

பறக்கை

குமரிமாவட்டம்

9629170821
ஸ்வாதி நட்சத்திரம் சொல்லும் சம்பத்து தாரா பெருமை - பாகம் - 1

ஸ்வாதி நட்சத்திர வடிவங்களுள் ஒன்று தீபம் என்ற ஜோதி ஆகும்.இதனை அடுத்த நட்சத்திரம் விசாகம் என்ற தோரணவாயில் ஆகும்.நமது நாட்டில் மின்சாரம் புழக்கத்தில் வராத காலங்களில் பழங்கால வீடுகளில் தலைவாசலின் வெளியே இரவு நேரங்களில் ஒளி கிடைக்கும் பொருட்டு அகல் விளக்கு வைப்பதற்காக வாசலின் இருபுறங்களிலும் சுவற்றில் ஒரு மாடக்குழி அமைத்திருப்பார்கள். ஆனால் இதில் வேறு ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது கருக்கல் நேரம் என்ற இருள் சூழும் மாலை வேளையில் தான் எதிர் மறை சக்திகளின் ஆற்றல் பெருகும் இந்த நேரத்தில் அவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வீடுகளின் தலைவாசலின் அருகில் ஏற்றப்படும் இந்த தீபம் அவற்றை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து வீட்டை எதிர்மறை சக்திகள் அனுகாமல் பாதுகாக்கும்.

ஆனால் காலமாற்றத்தில் ஸ்வாதியின் இந்த இயற்கை தீப ஒளி நிலை - மின்விளக்குகளாக மாறி விசாகம் என்ற தலைவாசலின் இருபுறமும் அமர்ந்து அலங்காரமாக ஒளி வீசுகிறது. எப்படி ஆனாலும் ஸ்வாதி என்ற ஒளி - விசாகம் என்ற தோரணவாசலின் அருகே சென்று அதை அலங்கரித்து தனது சம்பத்து தாரா பலனை உலகிற்கு வலிமையாக உணர்த்துகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

ஸ்வாதியின் தீபம் அணையாமல் ஒளிரும் . . . . .


பொதுவாக வைஷ்ணவ அந்தணர்கள் வீட்டில் அகல் விளக்கு வைக்கும் மாடக்குழி கொண்ட துளசி மாடம் அமைத்து அதில் துளசி செடியை வளர்ப்பது வழக்கம்.வீட்டில் இருக்கும் பெண்கள் காலை வேளையில் குளித்து துளசி மாடத்தில் தீபம் ஏற்றி துளசியை வழிபடுவார்கள். காலப்போக்கில் இன்று இந்து தர்மத்தை கடைபிடிக்கும் எல்லா சமூகத்து மக்களும் தங்கள் வீட்டில் துளசி மாடம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

துளசி என்பது பொதுவில் ஒரு மூலிகை செடி என்றாலும் இது சாஸ்திர ரீதியாக திருமாலுக்கு உகந்த தெய்வீக மூலிகையாக கருதப்படுகிறது.சித்த மருத்துவ அறிவியல் ரீதியில் துளசி இலையை உண்பதால் பெண்களுக்கு கர்ப்பபை சுத்தமாகும்.வாழ்வில் ஒருபோதும் கருப்பை கோளாறுகள் எதுவும் வராது.தினமும் அதிகாலை வேளையில் துளசி செடியில் இருந்து வெளிவரும் பிராணன் என்ற தூய்மையான காற்று அதை வலம் வந்து வணங்கும் பெண்களுக்கு இயற்கையிலேயே நாடி சுத்தி பிராணயாமமாக செயல்பட்டு பெண்களின் உடலில் இருக்கும் நுண்ணிய நரம்புகளை பலப்படுத்தி அவர்கள் உடலை பெண்மைக்குரிய இயல்புகளுடன் தூய்மையாகவும் பலமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

நட்சத்திர வடிவங்களின் படி ஸ்வாதியின் வடிவங்களுள் தீபம் மற்றும் மரம்,செடிகள்,ஆண்குறி, இவை அடங்கும்.ஸ்வாதி நட்சத்திரத்தில் தான் முத்துச்சிப்பி சூல் கொள்ளும் என்பது பிரபஞ்சத்தின் நியதி.இந்த அடிப்படையில் ஸ்வாதி நட்சத்திரத்தில் எளிதில் கரு கூடும் என்பதால் தான் கர்ப்பதானம் செய்யலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.இப்படி ஸ்வாதி நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட வடிவங்களும் அதன் வெளிப்படையான செயல்பாடுகளும் கர்ப்பப்பையுடன் தொடர்பு பெறுவதை நம்மால் தெளிவாக உணரமுடிகிறது.

எனவே வீட்டில் துளசி மாடம் வைத்து அதில் விளக்கேற்றி வழிபடும் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் வராது. சிறுவயது முதலே இந்த வழக்கத்தை கடைபிடித்து வாழும் பெண்களின் உடலும் மனமும் எப்போதும் தூய்மையாக இருக்கும் என்பதும் ஸ்வாதி நட்சத்திரத்தின் பெருமைக்கு மேலும் அணிசேர்க்கிறது.


சரவிளக்கு சொல்லும் ஸ்வாதி நட்சத்திர பெருமைகள்

பாகம் - 3

கோவில்களில் கருவறை வாசலில் தோரணம் போன்று சரவிளக்குகளை அமைத்திருப்பதைக் காணலாம்.நட்சத்திர வடிவங்களின் படி வாசல் என்பது விசாகத்தின் அடையாளம் ஆகும்.தீபம் என்ற ஸ்வாதியை விசாகம் என்ற தோரண நுழைவாயிலில் ஏற்றிவைப்பதன் சூட்சுமம் இதில் ஒளிந்துள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனே பரமாத்மா என்ற கடவுளின் ஒளி.இந்த சூரியன் என்ற பரமாத்ம ஒளி நீசம் பெற்று மறைந்து இருப்பது இருள் காரகன் என்ற சனி உச்சமாக அமையும் துலாம் இராசியில் உள்ள ஸ்வாதி நட்சத்திரத்தில் தான்.உலக வாழ்க்கை என்பது மாயை என்ற இருளுக்குள் மறைந்து கிடக்கும் பரமாத்மாவை அறியாத ஜீவாத்மாவின் நிலை என்பதால் தான் பூமியில் கோவில்களை அமைத்து அதன் மூலஸ்தானம் என்ற கருவறையை இருட்டாக வைத்து அதில் பரமாத்வாவின் ஒளியை மிகவும் சிறிய அளவில் காட்சிக்குத் தெரியும் படி ஜீவாத்ம பரமாத்ம நிலையை தத்துவ ரீதியாக தலைமுறை தலைமுறையாக இன்று வரை நமக்கு காட்டி வருகிறார்கள்.

ஆனால் நாம் இந்த தத்துவ உண்மைகளைத் தேடாமல் கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டு சாமியைக் கும்பிட்டு ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

எனவே கடவுளைத் தேடுபவர்களும் குழந்தை வரம் வேண்டுபவர்களும் ஸ்வாதி & விசாகம் நட்சதிர நாளில் கோவில்களில் கருவறை வாசலில் இருக்கும் விளக்குகளுக்கு எண்ணெய் உபயம் செய்து அதில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இருளில் ஒளிந்திருக்கும் பரமாத்மாவை அகக்கண்ணில் கண்டு அவர் அருளால் வேண்டும் வரம் அடையலாம்

.

Thursday, December 22, 2016

🍃நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

  http://spiritualaffairs.blogspot.in/🍃அஸ்வினி - அஸ்வத்தாமன்

🍃பரணி - துரியோதனன்

🍃கிருத்திகை - கார்த்திகேயன்

🍃ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்

🍃மிருகசீரிடம் - புருஷமிருகம்

🍃திருவாதிரை - ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர்,ராமானுஜர்

🍃புனர்பூசம் - ராமன்

🍃பூசம் - பரதன்,தாமரை மலர்,கிளி

🍃ஆயில்யம் - தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்

🍃மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்

🍃பூரம் - பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்

🍃உத்திரம் - மஹாலக்ஷ்மி,குரு

🍃ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,லவ-குசன்

🍃சித்திரை - வில்வ மரம்

🍃ஸ்வாதி - நரசிம்மர்

🍃விசாகம் - கணேசர்,முருகர்,

🍃அனுசம் - நந்தனம்

🍃கேட்டை - யுதிஸ்திரர்

🍃மூலம் - அனுமன்,ராவணன்

🍃பூராடம் - ப்ருஹஸ்பதி

🍃உத்திராடம் - சல்யன்

🍃திருவோணம் - வாமனன்,விபீசனன்,அங்காரகன்

🍃அவிட்டம் - துந்துபி வாத்தியம்

🍃சதயம் - வருணன்

🍃பூரட்டாதி - கர்ணன்,கின்னரன்,குபேரன்

🍃உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு

🍃ரேவதி - அபிமன்யு,சனிபகவான்


Wednesday, December 7, 2016

215 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு .....

Saturday, December 3, 2016

கீழ்க்கண்ட நட்சத்திரங்கள் சித்தர்களின் பிறப்பு நட்சத்திரங்கள். தங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 2,6,9 வரும் நட்சத்திரத்தில் பிறந்த சித்தர் வழிபாடு செய்ய வாழ்க்கை வளம் பெறும்.
இவர்களது ஜீவ சமாதி எங்கே இருக்கிறது என்று கூகுளில் தேடி அறிந்து, அங்கு சென்று வழிபடவும்.
சில நட்சத்திரங்கள் விட்டுபோய் இருக்கலாம். இனிவரும் பதிவுகளில் அவை பதியப்படும்.
சித்தர்களின் ஜென்ம நட்சத்திரங்கள்
===============================
அகத்தியர் - ஆயில்யம்
நந்தீசர் - விசாகம்
திருமூலர் - அவிட்டம்
கருவூரார் - அஸ்தம்
ராமதேவர் - பூரம்
பதஞ்சலி - மூலம்
கமலமுனி - பூசம்
குதம்பைசித்தர்- விசாகம்
கோரக்கர் - ஆயில்யம்
தன்வந்திரி - புனர்பூசம்
சுந்தரானந்தர் - ரேவதி
கொங்கணர் - உத்திராடம்
சட்டமுனி - மிருகசீரிடம்
வால்மீகி - அனுஷம்
இடைக்காடர் - திருவாதிரை
மச்சமுனி - ரோகிணி
போகர் - பரணி
பாம்பாட்டி - மிருக சீரிடம்

Thursday, December 1, 2016

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: நமது சாஸ்திரங்கள் கடவுளைப் பற்றிக் கூறும் நிலை

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: நமது சாஸ்திரங்கள் கடவுளைப் பற்றிக் கூறும் நிலை: கடவுள் என்று தனி ஒருவன் இல்லை. கடவுளென்ற நிலையோ, நாம் கோயிலில் நம்மை காக்கின்ற தெய்வம் என்ற நிலையோ இல்லை. நமது உயிரை ஈசன்   என்றும்...

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: அருளைத் தேடினால், (நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலு...

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: அருளைத் தேடினால், (நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலு...: “ நாம் இம்மனித உடலுக்கு ப் பின் , பெறவேண்டியது எது ? ” என்பதை உங்கள் எல்லோருக்கும் , தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு போகின்றோம். ...

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: அருளைத் தேடினால், (நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலு...

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: அருளைத் தேடினால், (நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலு...: “ நாம் இம்மனித உடலுக்கு ப் பின் , பெறவேண்டியது எது ? ” என்பதை உங்கள் எல்லோருக்கும் , தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு போகின்றோம். ...

வளைகாப்பும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வியக்க வைக்கும் விஞ்ஞானமும் | T...

Monday, November 21, 2016

தேவாரத் தலங்கள் வழிகாட்டி

நம் ஈசனருளால், திருத்தல யாத்திரையை விரும்பிச் செய்கிற சிவ அன்பர்களுக்கு வழிகாட்டி உதவும் ஓர் ஆவணச் செயலி....
திருத்தல அமைவிட படம்,
அருகிலிருக்கும் ஊர்களிலிருந்து தூரம்,
பாடப்பட்ட பதிகங்கள்,
இன்னும் பல தகவல்கள்....
உங்களது ANDROID PHONE-ல், இணைய வசதி இல்லாத இடங்களிலும்,
பயன்படுத்தலாம்.
சிவ அன்பர்களுக்காகவே, நம் சிவனருளால் கடின உழைப்பைக் கொண்டு காஞ்சிபுரம் வாகீசர் பேரவை அன்பர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு சில படங்கள் உங்கள் பார்வைக்கு....
DOWNLOAD (16 MB) செய்ய -