Sunday, January 31, 2016

வாழ்க்கை ஒரு உன்னதமான பொக்கிஷம்

aanmigam: எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம்

aanmigam: எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம்: எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம் தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அதுபோன்ற வேறு உச்சக்கட்டSaturday, January 30, 2016

ஸ்ரீனிவாசா கோவிந்தா

சித்தர்கள் போற்றும் வாலை

மெய்ப்பொருள் உபதேசம்

http://ubanyasam.blogspot.in/2016/01/blog-post_49.html
இறைவன் ஏன் கோயிலில் கல்லாக உள்ளான்?

நமது வினையை அழிப்பது யார்?

சித்தர்கள் செய்த தவம் என்ன?

பகவத் கீதையின் சாரம் என்ன?

சும்மா இருந்தால், பிழைப்பு எப்படி நடக்கும்?

இறைவன் ஏன் செயல்படவில்லை?

கிருஷ்ணர் உபதேசித்த காயத்திரி மந்திரம்

மூளையை செயல்பட வைப்பது எப்படி?

Vishnu Sahasranamam With Lyrics - Vishnu Stotra - Rajalakshmee Sanjay - ...
Siva Om Hara Om | Unni Krishnan, Ramu | Music: D.V.Ramani

சிவபுராணம் - பொருள் விளக்கம்

Sri Hanuman Chalisa - Varam Tharum Sri Anjaneya

ஸ்ரீகுருசிவநடராஜன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவில் இதோ சில நிமிடங்கள், மக்கள் நல்வழி வாழ ! நல்லவை தேட !!https://www.youtube.com/channel/UCDCgM2K8OoN0swZbPMipyFw

நம் உடலில் உயிர் எங்குள்ளது பாருங்கள்

கோடான கோடி நன்றிகள்[;நம் உடலில் உயிர் எங்குள்ளது பாருங்கள்;]
உயிர் நம் உடலில் எந்த இடத்தில்
இருக்கிறது?-சித்தர்கள் கூறும் விளக்கம் !!!
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து
வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும்
அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல்
மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே
பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல்
காரியம். குழந்தை அழும்போது முதல்
முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது.
உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே
செல்கிறது.
உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று
அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்
என்று பார்ப்போமா?
“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
- திருமந்திரம் – 309
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
- திருமந்திரம் 197
இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே
உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில்
வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே
வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது
என யாருக்காவது தெரியுமா என்றால்
அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.
“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று”
- திருமந்திரம் 1777
“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”
- மாணிக்கவாசகர்
“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்”
- திருமந்திரம் 1797
“உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே! “
- சிவவாக்கியர்
இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற
ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின்
நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது
எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு
எனக் கூறப்படுகிறது.
இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம்
எனத் தெளிவாகக் கூறுகிறார்.
“தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
- திருமந்திரம் 1823-
வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின்
அளவைப் பற்றி மட்டும் கூறாமலா
விட்டிருப்பார்கள்.
ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை
எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால்
,அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின்
அளவாகுமாம். இதைக் கூறியது நம்
திருமூலர்தான்.
நாம் யார்? உடலும், மனமும் மட்டும் தான்
நாமா? எது இல்லாவிடின் இவ்வுடல் இயக்கம்
செயல்படாமல் நிற்கிறது? எப்போது ஒருவர்
இறந்து விட்டார் என்று கூறுகிறோம்? இறந்த
உடன் எதோ ஒன்று இவ்வுடலை விட்டு
பிரிகிறது அல்லவா! அந்த எதோ ஒன்று
இவ்வுடலில் இருப்பதால் தானே நம் உடல்,
மனம் செயல்படுகிறது. அது என்ன? நமது
ஞானிகள் இதை உயிர் என்றும் ஆன்மா என்றும்
“ஜீவாத்மா” என்றும் கூறிபிடுகின்றனர்.
இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற
கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில்
தங்கியுள்ள உயிர் அதாவது ஜீவாத்மா தான்
நான் என்று கூறிப்பிடுகின்றனர்.
இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே
நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர
முடியும். இவ்வுயிரை அறிய முதலில்
இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு
இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம்
உடலில் அங்கு சென்று அதை உணர முடியும்.
நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும்
என்பதை முதலில் நமது சிற்றறிவால் சிந்தனை
செய்து அறிவோம்? அதன் பின் நம் அடைந்த
முடிவை ஞானிகளின் பாடல்களின் மூலம்
உறுதி செய்து கொள்வோம்.
உயிரின் தன்மை என்ன என்று தெரிந்து
கொண்டு பின் அது எந்த இடத்தில் இருக்கும்
என்று பார்போம். உயிரின் தன்மை அறிய
இறந்த உடலுக்கும் உயிர் தங்கியுள்ள
உடலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு
பார்போம்.
எல்லா உயிர் உள்ள மனித உடலும் ஒரு
குறிப்பிட்ட அளவு வெப்பம் உள்ளதை
அறியலாம். இறந்த உடலில் இவ்வெப்பம்
இல்லாமல் குளிர்ந்து போய் இருப்பதை நாம்
பார்க்கலாம். அதனால் உயிரின் ஒரு தன்மை
வெப்பம் (அ) ஜோதி என்று அறிந்து
கொள்ளலாம். ஆன்மா ஜோதி மயமானது என்ற
ஞானிகளின் கூற்றின்படி உயிரின் மற்றொரு
தன்மை ஒளி என்பதை அறியலாம்.
இவ்விரு முக்கியமான தன்மையினை கொண்டு
உயிர் இருக்ககூடிய இடத்தை ஆராய்வோம்.
முதல் படியாக ஒரு மனிதன் எந்த உறுப்பு
இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை
பார்போம்? கை, கால் இல்லாமல் உயிர் வாழ
முடியும். நம் உடலில் இருதயம் கூட
இல்லாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு
நாம் உயிர் வாழ்கிறோம். இதனால்
இவ்வுருப்புகளில் உயிர் இல்லை என நாம்
முடிவு செய்து கொள்ளலாம்.
தலை இல்லாமல் மனிதன் உயிர் வாழ
முடியாது. தலையே உடலில் பிரதான
உறுப்பாக இருக்கிறது. “எண் சான் உடம்பிற்கு
சிரசே பிரதானம்” என்பது சித்தர்கள் வாக்கியம்.
இதிலிருந்து உடலில் உயிர் தலையில் தான்
இருக்கிறது – இருக்க வேண்டும் என்பது
தெளிவாகிறது அல்லவா?
நமது தலையில் எங்கு உயிர் இருக்க
முடியும்? ஒரு சிறு உதாரணம் கொண்டு
இதை ஆராய்வோம்.
நமது தலையினை ஒரு அறையாக
பாவிப்போம். ஒரு விளக்கினை (ஒளி) ஏற்றி நடு
அறையில் வைத்தால் தான் அவ்விளக்கின் ஒளி
சமமாக எல்லா இடங்களுக்கும் பரவும். அது
போலவே நமது உயிரானது சிரசின் நடுவில்
அதாவது தலையின் உள் நடுவில் இருந்தால்
தான் உயிர் ஆற்றல் தலையில் உள்ள ஐந்து
உறுப்புகளுக்கும் சமமாக ஆற்றல்
கொடுக்கும்.
அதனால் நமது சிந்தனையின் படி தலையின்
நடுவில் தான் உயிர் இருக்க வேண்டும் என்று
புலனாகிறது. நமது இந்த முடிவை
ஞானிகளின் பாடல்களை கொண்டு சரியா
என்று பார்போம்.
திருமூல நாயனார் தமிழ் மறையான
திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான
இரகசியத்தை கூறியுள்ளார். நமது சிரசில்
இருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே
இறங்குகிறது! அது நமது கண், காது, மூக்கு
உள்ளே சேரும் மத்தியில் , வாயின் உள்
அண்ணாகுவின் சற்று மேல் வந்து நிலை
கொண்டு , அங்கிருந்து இருநாடியாக பிரிந்து
இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடமே
சிரநடு.
மற்றுமொரு சித்தர் “உச்சிக்கு கீழ்
அண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு
நித்தம் எரியுதடி ஞான பெண்ணே” என்று
உயிர் உள்ள இடத்தை சுட்டி காட்டுகிறார்.
இதன் மூலம் உயிர் உள்ள இடம் நமது தலை
மத்தி என்று புலனாகிறது.
அடுத்தாக தலையின் நடுவில் உள்ள உயிரை
எவ்வாறு சென்று அடைவது என்று பாப்போம்.
இது மிகவும் எளிது. நமது தலையில் உள்ள
எந்த உறுப்பில் ஒளி துலங்குகிறது? கண்
அல்லவா? ஆம் கண்ணே நமது ஜீவ ஒளியினை
பிரதிபளிக்கிறது.
ஒளியாக உள்ள அந்த இறைவனின் அம்சமான
உயிரை – ஒளியை கொண்டே தான் அடைய
முடியும். அதனால் கண்களே நாம் நமக்குள்
உட்புகும் வாசல். கண் ஒளியே இறைவன்
திருவடி. மெய்யான ஒளியினை தாங்கி
உள்ளதால் கண்ணே மெய்பொருள். இறைவன்
திருவடியான கண்களை பிடித்தாலே நம்மை
அறிந்து இறைவனை அறிய முடியும்.
கண்ணை பற்றி பாடாத ஞானிகளே இல்லை
எனலாம். பரிபாசையாக , நேரடியாக, குறிப்பாக
கண்ணையே ஞானிகள் , இறைவனை அடையும்
வழி என்று கூறி உள்ளனர்.
கண்ணை பற்றி சொல்லியுள்ள சில
ஞானிகளின் பாடல்களை பாப்போம்.
இயேசு கிறிஸ்து :
“தேவன் ஒளியாக உள்ளான், நீ ஒளியிலே
நடந்தால் தேவனை தரிசிக்கலாம்”.
“கண்ணே சரிரத்தின் விளக்கு. உன் கண்கள் ஒளி
மிகுந்ததாக இருந்தால் உன் உடல் ஒளி
மிக்கதாக இருக்கும்”
- இதுதான் மூலம் நம் கண் ஒளியை பெருகி
அந்த ஒளியில் உள் நடந்து தேவனை தரிசிக்க
வேண்டும் என்று தெளிவாக கூறி விட்டார்.
திருநாவுக்கரசர் :
“காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்
காண்”
அபிராமி பட்டர்:
“மணியே , மணியின் ஒளியே, ஒளியின்
உணர்வே, அணுகாதவர்க்கு பிணியே, பிணிக்கு
மருந்தே” என்று கண்மணியில் ஒளியை நாம்
பற்ற வேண்டும் என்று பாடியுள்ளார்.
வள்ளலார்:
“காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய்,
காட்டும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய்
பூணும் திருவடிகள்“
திருவருட்பாவில் பல பாடல்களில் திருவடி
கண்களே என்று இதை வெளிச்சமாக்கி காட்டி
உள்ளார்.
திருவள்ளுவர்:
“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் ,
மற்றவைகளில் நிலையாமை காணப்படும்”
கடவுள் வாழ்த்து பகுதியில் பத்து பாடல்களில்
ஏழு பாடல்களில் அடி என்று குறிபிடுகிறார்.
கண்ணன் என்ற வார்த்தை குறிப்பது கண்ணில்
உள்ளவன் அவன் என்பதே.
கிருஷ்ண மணி என்று நாம் நம்
கண்மணியையே குறிப்பிடுகிறோம்.
கண்மணியில் , கிருஷ்ணமணியில் பெரும்
உணர்வே கிருஷ்ண உணர்வு.
கடோபநிசத்தில் நசிகேதன், மனித தேகத்தில்
இறைவன் இருக்கும் இடம் யாது என
எமதர்மரஜனிடம் வினவ, அதற்கு எமன்,
இறைவன் கட்டை விரல் அளவான இடத்தில்
புகை இல்லாத ஜோதியாக விளங்குகிறான்
என்று பதில் கூறுகிறார். இதுவே ஆதாரம்
இதற்கு.
நம் உடலில் கட்டைவிரல் அளவான இடம் என
பரிபாசையாக கூறப்பட்டது நமது
கண்ணையே. பேரொளியான அருட்பெரும்
ஜோதியான இறைவன் புகையில்லாத ஜோதி.
நம் கண்மணி உள் இருக்கும் சுயம் ஜோதி.
எவ்வளவு பெரிய ஞான இரகசியம். இது
தெரிந்தால் தானே தட்சிணாமூர்த்தி
உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா
இருந்து தவம் செய்ய முடியும்.
ஆதி குரு தட்சிணாமூர்தியும் மோன
உபதேசமாக இதையே தெரிவிக்கிறார். சும்மா
இரு என்று சனகாதி முனிவர்களுக்கு
உபதேசித்து நாம் சும்மா இருக்க வேண்டிய
இடம் – அதாவது நமது மனதை நிறுத்த
வேண்டிய இடம் நம் கண்மணியிலே – கண்
ஒளியிலே என்று உணர்த்தி உள்ளார்.
சித்தர் சிவவாக்கியர் :
“வலது கண் சூரியன் , இடது கண் சந்திரன்”
என நேரடியாக குறிபிடுகிறார்.
பகவத் புராணத்தில் இறைவன் இருதயத்தின்
உள் உள்ளார் என்று தெரிவிக்க பட்டு உள்ளது.
இருதயம் என்பது = இரு + உதயம். நமது இரு
கண்களே சூரியன் , சந்திரன் உதயமாகும்
இடம். ஆம் நமது உடலில் வலது கண்
சூரியன் , இடது கண் சந்திரன்.நாம்
கோவிலுக்கு சென்று ஆண்டவனுக்கு கற்பூரம்
காட்டி நமது கண்களிலேதான் வைத்து
கொள்கிறோம்.
8 , 2 ,
சூரியன் , சந்திரன்,
அ, உ,
சக்கரம், சங்கு என்று குறிபிட்டுள்ள
அனைத்தும் வலது கண்ணையும், இடது
கண்ணையும் தான் குறிக்கும்.
நமது அடுத்த கேள்வி நம்மால் ஏன் ஆத்மா
ஜோதியை நம் கண் ஒளியினை கொண்டு
பார்க்க முடிவதில்லை என்பது தான்?
இதற்கான பதில் நாம் செய்த வினைகள் (அ)
கர்மம் தான்.
“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு
ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான
சுவாமிகள்.
நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே
அதாவது இறைவனின் அம்சமே நமது உயிர்.
இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும்,
மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர்
ஆரோக்கியமாகவும் மற்றொருவர்
ஊணமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது
ஏன்? நம் பிறப்பை , இறப்பை நிர்ணயிப்பது
எது?
இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு முன் பற்பல
பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே
தான்.
அவரவர் செய்த செயல்களே புண்ணியம்
என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி
அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க
செய்கிறது. இதுவே இறை நியதி.
எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த
நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை
மூடையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம்
மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு
அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல்
நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக
எடுத்து நம் உயிரோடு இணைத்து பிரார்த்துவ
கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை
மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க
செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.
இப்பிரார்த்துவ வினைகள் போக மீதம் உள்ளது
சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும்.
பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன்
புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.
பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து
வினை கூடவோ குறையவோ , அதாவது
புண்ணியம் செய்து நல்வினை கூடலாம்,
அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம்.
இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று
அந்த வினைகளோடு மரிக்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு
போவது அவனவன் செய்த வினை பயன்கள்
மட்டுமே.
நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு
ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை
துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள்
சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து
மூடியுள்ளது.
வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள்
விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள்
இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம்
மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு,
சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது
இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி
போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது.
கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை
சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை
சக்தி அவர்களுக்கு இல்லை.
இவ்வினை திரையினை அகற்றுவது எப்படி?
இறைவன் திருவடியான நம் கண்ணை –
கண்மணியின் ஒளியை பற்றியே.
எவ்வாறு இறைவன் திருவடியை பற்றுவது
(அ) பிடிப்பது?
ஒரு தகுந்த ஞான சற்குருவின் மூலம் தீட்சை
பெற்று தான்.
ஏன் குரு வேண்டும்?
“மாதா, பிதா, குரு தெய்வம்”.
ஒருவருக்கு தாயும் , தந்தையும் இயற்கையாக
கிடைத்து விடுகிறது.
தாய் தந்தை பெற்ற நாம் ஒரு குருவை
அடைந்து உபதேசம் , தீட்சை பெற்று தவம்
செய்தே இறைவனை அடைய வேண்டும்.
இதுவே இறை விதி.
குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே
அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும்
குருவை தேடி சென்று நல்ல சீடர்களாக
இருந்தார்கள்.
இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம்
பெற்றார்.
அருணகிரிநாதருக்கு முருக பெருமானே
குருவாக வந்தார்.
வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி
ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.
குருவின் முக்கியத்துவத்தை உணர்த்த
சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தி
யாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.
இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும்
இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில்
தானே குருவாகி தன்னை அடைய வழி
கட்டினான். நம் அனைவர்க்கும் இது
பொருந்தும்.
நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது
சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல
விஷயங்களை கற்று கொடுத்துள்ளது.
இவைகளை எல்லாம் நமக்கு உலகியல்
விஷயங்களை மட்டும் தான் கற்று
கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம்
ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.
யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு
சேர்க்கிறரோ அவரே ஒருவருக்கு குரு ஆவார்.
நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை
அம்சம் ) பற்றி சுருதி, யுக்தி மற்றும்
வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன்
துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ
அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர நம்
கண்களுக்கு உணர்வு கொடுத்து(தீக்ஷை) ,
தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு.
இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே
பாக்கியவான். அவனே தவம் செய்து இறை
அருள் பெறுவான்.
“குருவில்லா விதை பாழ்”
“குருவின் அடி பணிந்து கூடுவார்
அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்”
“தகுந்த ஞான ஆசிரியன் கொண்டு உங்கள் நடு
கண் புருவ பூட்டை திறந்து கொள்வது
நலம்.”
“குரு பிரம்மா , குரு விஷ்ணு, குரு தேவோ
மகேஸ்வரா, குரு சட்சாத் பர பிரம்மா”
- குருவின் பெருமையை இவைகள் உணர்த்தும்
மனு முறை கண்ட வாசகத்தில் பெரிய
குற்றமாக வள்ளலார் இதனையும்
வலியுறுத்தி கூறுகிறார்
“குருவை வணங்க கூசி நின்றேனோ”
“குருவுக்கு காணிக்கை கொடுக்க
மறந்தேனோ”
நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம்
தீட்சையின் மூலம் பிறக்கிறது. குரு தனது
கண் ஒளியின் மூலம் நமது கண் ஒளியை
தூண்டி , கண்மணிக்கு உணர்வு கொடுத்து
சூட்சும சாரிரத்தை பிறக்க செய்கிறார்.
இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே
தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று
பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு
நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம்
இதுவே.
தீட்சை பெற்றவனே துவிஜன் ஆகிறான்.
துவிஜன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று
பொருள். இதையே பைபிள் “மறுபடி
பிறவாதவன் பரலோக சாம்ராஜ்ஜியத்தில்
பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய
மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை”
என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால்
துவிஜனாகி தவம் செய்து முடிவில்
இறைவனை அடைகிறான்.
ஞான சரியையில் வள்ளல் பெருமான் கூறும்
தவம் இதுவே “நினைந்து நினைந்து – நம்
கண்மணியை நினைந்து நினைந்து , உணர்ந்து
உணர்ந்து – கண்மணியில் தீட்சையின் மூலம்
பெறப்பட்ட உணர்வை உணர்ந்து, இதனால்
ஏற்படும் நெகிழ்ச்சியில் நெகிழ்ந்து அதனால்
வரும் கண்ணீரில் நனைந்து” என்று தவம்
செய்யும் முறையை ஞான சரியையாக வள்ளல்
பெருமான் குறிபிடுகிறார்.
தீட்சையின் மூலமே வள்ளல் பெருமான்
நம்முள் வந்து நம்மை வழி நடத்துகிறார்.
தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை
பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள
வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே
விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா
பாதகங்கள் செய்யாதவராக இருத்தல்
வேண்டும்.
இவைகள் இருப்பின் இனி இவைகள்
செய்வதில்லை என சங்கல்பம் செய்து இனி
மேல் இவைகளை தவிர்த்து பின் தீட்சை
பெறலாம்.
நாம் தகுந்த சற்குருவிடம் தீட்சை பெற்று தவம்
செய்தால் தான் கண்களில் ஒளி பெருகி வினை
திரைகள் அழிந்து நமது ஆன்ம தரிசனம் நமக்கு
கிட்டும். நாம் நம்மை அறியலாம். நம்மை
அறிந்து அந்த பரமனை அறிந்து உணரலாம்.
பேரின்பம் பெறலாம். மரணமில்லா பெரு
வாழ்வு பெற்று சிரஞ்சீவியாக வாழலாம்.

நம்ப முடியாத அதிசயங்கள்

Friday, January 29, 2016

அன்றாட வாழ்விற்கு திருமுறைப் பாடல்கள்


அன்றாட வாழ்விற்கு திருமுறைப் பாடல்கள்
பிறப்பில் அரிது மானடப் பிறப்பு. இந்தியாவில் பிற்பதற்கே ஒரு புண்ணியம் வேண்டும். அதிலும் தமிழகத்தில் இந்துவாக சைவ சமயத்தில் பிறப்பது என்பது பல பிறவிப் புண்ணியமாகும்.
1, சைவர்கள் காலையில் எழும்போது ” சிவாய நம ” என்று சிந்தித்தவாறு எழுதல் வேண்டும் என்கிறார் சிவமாய் தன்மையைப் பெற்ற திருநாவுக்கரசர் சுவாமிகள்
” சித்தமாரத் திருவடியே உள்கி நினைந்தெழுவார்
உள்ளம் ஏயவன் காண் ” அப்பர் சுவாமிகள் தி.மு. 6
2. சிவாயநம என்று சிந்தித்தவாறு எழுந்து, கைகால் சுத்தம் செய்து,பல் துலக்கி, முகம் கழுவி, சிவாயநம் என்று சொல்லி திருநீறு நெற்றியில் அணிதல் வேண்டும். பிறகு குவளை நீர் அருந்த வேண்டும்.
3. உள்ளங்கையில் உளுந்து மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து சிவாயநம என்று பத்து முறை சொல்லி தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்
4. ஒரிடத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர வேண்டும். அமர்ந்து கீழ்க்காணும்பாடல்களை வாய்விட்டு பாட வேண்டும்.
சமயக்குருமார்கள் நால்வரை நினைந்து பாடவேண்டிய பாடல்
” பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருவாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி ” பெரிபுராணம்
சிவபிரானை நினைந்து பாடவேண்டிய பாடல்
” படைக்கலமாக உன் நாமத்தெழுத்து அஞ்சு என்நாவிற் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே. திருநாவுக்கரசர்
இப்பாடலை பாடி முடித்தவுடன் 108 முறை ஆதி மந்திரமாகிய ” சிவாய நம ” என்ற சொல்ல வேண்டும்
குளிக்கும் போது பாடவேண்டிய பாடல்
களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துகத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும் ஐயாறன் அடித்தலமே. திருநாவுக்கரசர்
சிவ பூசையின் போது பாடவேண்டிய பாடல்
“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே
வழுவாதிருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே. திருநாவுக்கரசர்
சாப்பிடும் முன்பு ( சிவபிரானுககு அர்ப்பணம் செய்து விட்டு உண்பது ) அருந்தமிழ் பாடல்
” அடியனேன் அறிவிலாமை கண்டும் என்அடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்து இங்கு அமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாகமான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண போற்றி ! பெரியபுராணம் 12
விளக்கு ஏற்றும் போது பாடவேண்டிய பாடல்
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே. நாவுக்கரசர்
விளக்கை ஏற்றி பிறகு பாடி வணங்கவேண்டிய பாடல்
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவர்பளிங்கின் திரள் மணிக்குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்த கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவவளர் தெய்வக் கூத்துக ந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே ” திருவிசைப்பா தி.மு. 9
உறங்க செல்வதற்கு முன் பாடவேண்டிய பாடல்
” மஞ்சனே மணியுமானாய் மரகத் திரளுமானாய்
நெஞ்சளே புகுந்து நின்று ளநினைதரு நிகழ்வினானே
துஞ்சம் போதாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடு துறையுளானே. ” திருநாவுக்கரசர் தி..மு. 4
படுக்கைக்கு செல்லும் முன்பு நம் உயிரை இறைவருடைய திருவடிக்கீழ் வைத்து விட்டு செல்ல வேண்டும்.
மிக அருமைப்பாடுடையது இப்பாசுரம் தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாய் இதுபோன்ற அரிய பாடல்கள் நமக்குகிடைத்துள்ளன.
மற்றவர்களை வாழ்த்தும் போது பாட வேண்டிய பாடல்
” மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும்ஓர் குறைவிலைக்
கண்ணில் நல்லஅஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. ஞானசம்பந்தர்
உலகம் நலம் பெற பாடவேண்டிய தீந்தமிழ் பாடல்
வையம் நீடுக மாமழை மண்ணுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறிதாம் தழைத்து ஓங்குக
தெய்வ வெண்திருநீறு சிறக்கவே, ” பெரியபுராணம் 12

இப்பாடல்களை பாடுவதன் மூலம் நாம் நலமாக வாழ்வோம். உலகம் நலம்பெற வேண்டும் என எண்ணும் பொழுது நாம் நலமாக வாழ்வதற்கு இறையருள் முன்நிற்கும்..
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்

திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்-

ஆன்மிகம்கீழ்கண்ட தளத்தை BOOK MARK

செய்து 

வைத்துக்கொள்ளுங்கள்.காலம் 

முழுவதும் உங்களுக்கு பயன் படும் 

அரிய புத்தகங்கள் நிறைய உள்ளன...


Tuesday, January 26, 2016

Arunachala Dhyanam - Glory to Lord Arunachala Shiva

Miracle Mantra- Cure for all Problems-Vishnu Sahasranama

VEGETARIAN ELITE Bhagavan Sri Ramana Maharshi: A Great Sage's Love for A...

Best Prayer - Tamil

karuvooraar

Science behind Lord Nataraja(Tamil)

Chidambaram Sri Thillai Nataraja Temple - Temples of India [TAMILNADU] -...

Vaitheeswaran Kovil ~ Healing Sthala for 4448 Acute Diseases *

Vaitheeswaran Koil Iyappan Gurukkal

Navagra temples

MasaniAmman Temple History Tamil

lotusnews Oru kovil Oru kathai MEENKULATHI BAGAVATHI AMMAN TEMPLE

மன நிம்மதிக்கு இறைவனிடம் உண்மையாக சரணடையுங்கள்

PREGNANCY GOD SONG - Garbarakshambigai
Garbharakshambikai Kavacham By Sudha Raghunathan

https://youtu.be/u3VI0PG0akE

Vazhai Maraththin Arputhangal - வாழை மரத்தின் அற்புதங்கள் _Swamiji_om9tv...

Monday, January 25, 2016

The Great Mariamman Mystery Solved

Swastika - A Tamil Sign - "Ohm"

முருகன் எனும் அதிசயம்

The True Meaning of Vaikundam

Amazing Facts on the Order of the Days of Week

The First Theorist of the World

ஆரத்தியின் வியக்கவைக்கும் மகிமை

Part-1 Siddhar Phenomenon & Color ConceptPart-2 Evolution of Vinayaka Worship


https://youtu.be/M9Ch8oQOl7M


Secret of Tamil Siddhars

Siddhargal aalayam-maranthu pona nam marutthuvam PART-3

SIDDHA SCIENCE AND ART OF LIVING

Shri Mahavathar Babaji's Revelations (Tamil) - Evolve Now - A Kriya Yoga...

chakras tamil

Nama Shivaya | Lord Shiva Songs | S.P.Balasubrahmanyam

WHAT IS PEACEFUL MIND?

PHYSICAL HEALTH FOR SUCCESS

THE ROOT CAUSE OF OUR PROBLEMS IN LIFE AND THE SOLUTIONS

paavam poga enna vazhi...? - பாவம் போக என்ன வழி...?

who is god?

இந்தியா போரில் வெற்றிபெற பாதுகாப்பு துறை ஓங்கார குடிலை அனுகலாம்

A complete book in Tamil that will help you to do Pradosha Pooja at home.

கோடான கோடி நன்றிகள்

http://www.tamilbrahmins.com/downloads.php?do=file&id=245

Saturday, January 23, 2016

Hindu Rituals and Routines: Why do we follow them?

A Small, beautiful booklet from Chinmaya 


Yuva Kendra.


கோடான கோடி நன்றிகள்
பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி

நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது, நாசா ஆராய்ச்சியில் ஆச்சரியம்!! (Video)

https://vidhai2virutcham.com/2015/12/30/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/


************************************************************************************************************************************************************


Saturday, January 16, 2016

சித்தர்களின் அறவியல், அறிவியல் : விஞ்ஞான பார்வையில் காயத்திரி மந்திரம்

சித்தர்களின் அறவியல், அறிவியல் : விஞ்ஞான பார்வையில் காயத்திரி மந்திரம்: காயத்திரி மந்திரம் அதீத சக்தி வாய்ந்த உலகின் தலைசிறந்த மந்திரம் என்பது அடியேன் அறிந்ததே. அது விசுவாமித்திர மஹரிஷியால் உலக நன்மைக்காக அ...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : அருளை அள்ளி வழங்கும் அரு மருந்து நாயகி

சித்தர்களின் அறவியல், அறிவியல் : அருளை அள்ளி வழங்கும் அரு மருந்து நாயகி: திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்து...

AUM: What does AUM mean? Why is AUM important?

Most Important Day to Remove Karma: Maha Pradosham

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்
சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே. இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும். அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும்ங நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்-.

Saturday, January 9, 2016

aanmigam: காசி" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக...

aanmigam: காசி" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக...: "காசி" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..? இதை முழுவதுமாக படியுங்கள். காசி என்பது 168 மைல் பர...


aanmigam: புதுவீடு புது பூசணி !!!

aanmigam: புதுவீடு புது பூசணி !!!: புதுவீடு புது பூசணி !!! புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலா...

aanmigam: கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை.

aanmigam: கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை.: கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை. பெரும்பாலனவர்கள் மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் நம்மை தீய சக்திகளிட...

Enlightenment (முக்தி) - 2015 Healer Baskar (Peace O Master)

Upanyasam on Sri Vishnu Sahasranamam by Sri.Dushyanth Sridhar - Names

Friday, January 8, 2016

Moondravathu Kan

Manathengum Margazhi - [EP - 1]

TAMIL- HOW TO GO TO RIGHT BRAIN - ALPHA STATE......MIND-வலது பக்க மூளைக்...

Gist of Gita (Tamil)

https://www.youtube.com/playlist?list=PLFhE-jwdLAYFqnLqKPanwlLY4otuvjQOS

கோடான கோடி நன்றிகள் - 

திருவாசகம் - விளக்கச் சொற்பொழிவு

கோடான கோடி நன்றிகள் - 

திருச்சிற்றம்பலம்

https://www.youtube.com/channel/UCPwWosZj9HdqfqwA1Dg9Qlg/videos

திருச்சிற்றம்பலம்Sri Sri Speaks on 4 Pillars of Knowledge

Sri Sri Ravishankar Speaks on Indian Values

Who is God - Sri Sri's Speech in Tamil

பெண்கள் tv பார்ப்பதை குறைத்து ஞானிகள் தியானம் செய்தால் குடும்பத்துக்கும்...

ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வழிமுறைகள்

திருக்குறள்: கொல்லாமை

சைவமே ஜென்மத்தைக் கடைத்தேற்றும்

மனிதன் கடவுள் ஆகலாம்.

அகர முதல - கடவுள் வாழ்த்து

Copy of வாசி யோகம் / குண்டலினி

aanmigam: ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை!

aanmigam: ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை!: ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை! வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை...