Saturday, July 30, 2016

திருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் -

கோடான கோடி நன்றிகள்http://srirajanastro.blogspot.in/2016/07/blog-post_49.html


ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிக பலக் குறைவும் உடல் நலக்குறைவும்.

கோடான கோடி நன்றிகள்


கொடி மர தத்துவம்.!

கோடான கோடி நன்றிகள்

http://srirajanastro.blogspot.in/2016/07/blog-post_15.html
கொடி மர தத்துவம்.!
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.
அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.
கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.
அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.
இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.
அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.
கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.
ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?
அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.
எப்படி தெரியுமா?
கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.
இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.
சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.
நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.
கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.
அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.
லால் கிதாப் பரிகாரங்கள்

கோடான கோடி நன்றிகள்
http://srirajanastro.blogspot.in/2015/08/blog-post_9.html

பணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் ...


கோடான கோடி நன்றிகள்http://srirajanastro.blogspot.in/2015/08/blog-post_83.html


விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..

பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

தடைகள் விலக தாந்த்ரீக முறை

கோடான கோடி நன்றிகள்http://srirajanastro.blogspot.in/2015/09/blog-post_83.html
மாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்

கழுத்திலிருந்து மார்பை வரை உள்ள நீளத்திற்கு வெள்ளியிலான சங்கிலியை மாமியர், மருமகள் இருவரில் ஒருவர் தொடர்ந்து அணிந்து வந்தால் மாமியார் -மருமகள் சண்டை தீரும். நடத்தை விசயமாக சந்தேகத்திற்கு உள்ளாகி அவமானப்படும் பெண்களும் இந்த வெள்ளியிலான அணிகலனை அணியலாம். இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை இருக்கும்.

******************************************************************************************************************************************************************

வீட்டில் சமையல் அரையில் அரிசி தண்ணீர் வைப்பது தவிர்க்கவும் ..
ஏன் என்றால் மாமியார் மருமகள் சண்டை ஏற்படும்..
சமையல் அரை சுக்கிரனை குறிக்கும் அதவாது மருமகள்..

அரிசி தண்ணீர் சந்திரனை குறிக்கும் அதவாது மாமியார்..
சுக்கிரன் சந்திரன் சேர்க்கை மாமியார் மருமகள் சண்டை ***

செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”

கோடான கோடி நன்றிகள்http://srirajanastro.blogspot.in/2015/11/blog-post.html

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”
வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.
மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.
நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
நகம் ,முடி சாப்பிடக்கூடாது.
வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.
திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.
வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.
வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.
தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.
வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.
மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக


உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
இதை உங்கள் மனைவிக்கு பொறுமையாக கிழக்கு நோக்கி அமர்ந்து படித்து கூறவும்
48 நாட்களுக்கு பின் அது உங்களுக்கு புரியும்
1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.
அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.
அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.
ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.
அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.
விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.
லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.
நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.
எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.
நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?
பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்.
கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.
‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
11) விளக்கை தானாக மலையேற விடக்கூடாது,
ஊதியும் அமர்த்தக்கூடாது.
புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது.
அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்?
அப்படி கேளுங்க….
தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.
12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.
அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
16) எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.
கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.
அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
27) இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.
வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.
பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.
கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.
ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.
லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.


வளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

வளமான வாழ்க்கைக்கு சித்தர்களால்
சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20
பரிகார முறைகள்.
(அவசியம் படிக்க தவறாதீர்கள் )
---------------------------------------------
----------------------------------------
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில்
செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள்
அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல,
போகிற காரியம் தடையில்லாமல்
முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு
மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய
வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,
இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய
வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக
வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று
நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண்
சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம்
வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3
முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள்
சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து
விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும்
நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை
துணியை எடுத்து அதில் நான்கு
பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து
கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை
வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும்
இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார
போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல :
ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை
பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது
வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு
மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன்,
அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு
சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து
விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது
பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும்
எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள
அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து
போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும்
புதிய தொழில், முயற்சி தொடங்குமுன்,
சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க
வைத்து மூன்று முறை தலையை வலது
புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி
பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர்
சென்றதும் அவற்றை கூட்டி வெளியில்
பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது
செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு
தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால்
பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து
ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7
நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம்
காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத
கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட
பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே
செய்யலாம்.
(9)7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு
வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த
மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி
வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட
திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும்
பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து
எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல
செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில்
வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை
டேபிள் மீது வைத்து படிக்க,எழுத
தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில்
நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை
செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால்
நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய
செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர
சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால்
அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை
ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை
உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு
உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை
ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி
மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது
கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள்
தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில்
மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம்
சந்தனம் வில்வ இலை இவைகளை
வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய
உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில்
கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம்
மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது
குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால்
இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில்
போட்டு ,கழிவறையில் வைத்தால்
கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும்
ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது
வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர்
தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த
பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து
ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில்
வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக்
வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில்
குறைக்கும்
(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில்
கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல்
படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால்
பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும்
பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது
ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:-
-----------------------------
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி
பைரவர் படம் வைத்து தினமும்
வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள்
படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின்
கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி
நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு
உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ
காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு
உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில்
பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி
தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில்
உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத
்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப்
பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும்.
வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய
்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே
வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:-
--------------------------------
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு
ஞாயிற்றுக்கிழமை வரை தினமும்
சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை
ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும்
சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத
தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது
உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம்
அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய
நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத்
தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு
உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன்
மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை
வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக்
குச்சியால் தொட்டுக் கோதுமை
உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக்
குளம்,ஆறு அல்லது கோவில்
தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப்
போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது
அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு
வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை
களில் செய்து வர லக்ஷ்மியின் அருள்
உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம்
சேரத் தொடங்கும்.

நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்.

நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்
‪#‎சூரியபகவான்‬ - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
‪#‎சந்திரபகவான்‬ - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
‪#‎செவ்வாய்பகவான்‬ - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
‪#‎புதபகவான்‬ - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
‪#‎குருபகவான்‬ - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
‪#‎சுக்ரபகவான்‬ - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
‪#‎சனிபகவான்‬ - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
‪#‎கேதுபகவான்‬ - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
‪#‎ராகுபகவான்‬ - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்
கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்*

சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு 

காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் *உடல் பலவீனம்,* 


இரண்டாவது *கண்திருஷ்டி*


நம் உடலில் *ஏழு சக்கரங்கள*் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல 

விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர 


வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் 


தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் 


சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.

மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே 

பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் 


இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து 


பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் *கடல் தண்ணீர்*கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு

சக்கரங்களும் பலம் பெறும்.எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி

வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து

நம்முடைய உடலில் உள்ள *சப்த சக்கரங்களை* பலப்படுத்தும்..

அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த

வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண


பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம்


நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை


சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி


விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு

கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால்

குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை

எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு

சக்கரங்களும் பலப்படும்.

*ஸ்ரீராமர்* பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த

லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில்

அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு,

*கடல் நீரே விசேஷமானது* என்றார் ஸ்ரீராம பிரபு.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை !!!

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.
அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

இதோ அதன் செய்முறை…!
வ. எண் பொருட்கள் அளவு
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..! - செல்வம் பெருகும்.கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, 

லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள்.அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர்.ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர்ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறுவிரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்.....


இதை அவரவர் மனைவியிடம் சொல்வதால் வரும்

 பின்விளைவுகளுக்கு கம்பெனி 

பொறுப்பேற்காது....!!!!!!!😀😀😀

பெண்கள் சுமங்கலியாய் கணவனுடன் ஒற்றுமையாய் நீண்ட நாட்கள் வாழ

கணவன்-மனைவி சண்டை தீர பரிகாரம் 

------------------------------------------------------------ 
கணவன்-மனைவி இருவரும் இடுப்பில் சிவப்பு நிற


 அரைஞான் கயிறு கட்டிக்கொண்டால்,கணவன்-

மனைவியிடையே உள்ள பிணக்குகள் நீங்கும்.

****************************************


திருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் -


தேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள் 

வீட்டில் வாசம் செய்யும். கணவன் 

மனைவியரிடையே பாசத்தை உண்டாக்கும். 

பழம்பாவங்கள் நீங்கும்.

****************************************


http://vivekaanandan.blogspot.in/2016/02/blog-post_63.html

****************************************
http://vivekaanandan.blogspot.in/2016/02/blog-post_61.html


****************************************
****************************************Remedies For the Nine Planets in Vedic Astrology