Tuesday, February 28, 2017

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம்
குழந்தைகளையும் பழக்குவோம்.
அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ....
இறை சக்தி நம்மை காக்கும் ...


அக்னி ஹோத்ரம் - பணம் வளம் பெருக

http://rechargeyouraura.blogspot.in/


*************

சுற்றுச் சூழலை சுத்தப் படுத்த பண்டைக் காலத்திய சூட்சும வழிமுறை

http://energyvastu.in/tamil/agni.html


************

https://blaufraustein.wordpress.com/2012/03/05/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/

************


தன வசிய மூலிகை - மலை மஞ்சள்

Monday, February 27, 2017

தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை ஏன் வைக்க வேண்டும்?
✫ நம் வீட்டின் அறைகளில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்ற ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஒரு டம்ளர் நீரை இரவில் படுக்கும் முன் கட்டிலுக்கு அடியில் வைப்பது.
✬ ஒருவர் மனநோயால் அவதிபடுவதற்கு உயிரியல் மற்றும் உளவியல் ரீதியான காரணிகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ஆன்மிக ரீதியாக அதாவது கெட்ட சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களாலும் ஒருவரது மனம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
✭ உதாரணமாக, ஒருவரது வீட்டில் கெட்ட சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டினுள் நுழையும் போதே சந்தோஷமாக இருந்த மனநிலையில் திடீரென்று மாற்றத்தைக் காணக்கூடும். சில பெரியோர்கள் தூங்கும்போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை வைத்துக் கொண்டு தூங்க வேண்டும் என்று சொல்வார்கள்.
✮ இப்படி தூங்கும்போது கட்டிலுக்கு அடியில் நீரை வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேறி, மனஅமைதியுடன் இருக்கும்.
✯ தூங்கும் முன் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெளியே ஊற்றி விட வேண்டும். மீண்டும் மறுநாள் இரவில் புதிய நீரை டம்ளரில் நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
✰ இரவில் ஒரு டம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலையில் பார்க்கும் போது, அந்நீரில் சிறுசிறு நீர்முட்டைகள் மற்றும் நீர் கலங்கலாக இருந்தால், நீர் எதிர்மறை ஆற்றல் முழுவதையும் உறிஞ்சிவிட்டது என்று அர்த்தம்.


Saturday, February 25, 2017

"தொழில் செய்யும் இடங்களில் வரும்" தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்
பிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவாசித்தால் என்ன ஆகும்?
ஆகவே, தவறான செயல்களை உற்றுப் பார்த்த அடுத்த கணம் “ஈஸ்வரா..,” என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் சுழலச் செய்து அந்தத் தீய செயலின் உணர்வு உங்களுக்குள் அது வளராது அதனுடைய உணர்வைச் சமப்படுத்துதல் வேண்டும்.
ஆனால், சமப்படுத்திச் சென்றாலும் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது அங்கே தொழில் சம்பந்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் பொழுதும் இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
எங்கள் செயல் அனைத்தும் நலம் பெறவேண்டும். நாங்கள் உருவாக்கும் உற்பத்தி செய்யும் பொருள்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று கண் கொண்டு அந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.
அடுத்து எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மலரைப் போன்ற மணங்கள் பெருக வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இவ்வாறு எண்ணி எடுக்கும் உணர்வின் செயலாக்கங்கள் அங்கே கூடினால் தொழில் செய்யும் இடத்தில் உள்ள தொழிலாளியிடமோ அல்லது மேலதிகாரியிடமோ பேசும் பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைந்து வாழச் செய்யும்.
இப்படிச் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்? நாம் ரோட்டில் வரப்படும் பொழுது தீய செயலை ஒருவர் செய்கின்றார் என்றால் அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உடலில் ஆன்மாவில் முன்னனியில் வந்துவிடும்.
அதை நுகர்ந்துவிட்டுத் தொழிலுக்கு வந்தால் நாம் சுவாசித்த உணர்வுகளே “நமக்குள் எதிரியாக வந்துவிடும்” என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அப்பொழுது வேதனையான உணர்வைச் சுவாசித்துவிட்டுச் சென்று தொழிலில் ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் தவறான நிலைகளில் அது செயலுக்கு வரலாம். அது தவறான நிலைகளில் இயக்கப்படும் பொழுது பழுதாகி தடையாகவும் ஆகலாம்.
அதனால், நண்பரிடத்தில் அல்லது மேலதிகாரியிடத்தில் பகைமை ஊட்டும் நிலை வரும். ஏனென்றால், நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமையான உணர்வுகள் நல்ல நண்பர்களையே பகைமையாக்கிவிடும்.
அதனால் தொழிலையும் வெறுக்கும் நிலை வரும்.
இதைப் போன்று நம்மையறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நிமிடத்திலும் வெளியிலே செல்லும் பொழுதும் தொழிலுக்குச் செல்லும் பொழுதும் தொழிலுக்குச் சென்று தொழில் ஆரம்பிக்கும் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்திப் பாருங்கள்.
மன உறுதி கிடைக்கும். நம் சொல் மற்றவர்களை இணைந்து வாழச் செய்யும். உங்களுக்கு உதவியும் தேடி வரும். அன்பு வளரும். பண்பும் வளரும்.
அருள் ஒளி பெற்றால் இருளை அடக்கிடும் ஞானமும் வரும். தெளிந்த மனதுடன் வாழவும் முடியும். ஆகவே, இதை நீங்கள் எண்ணி எடுத்துப் பழகுங்கள்.
இதனால் உங்கள் தொழிலும் விருத்தியாகும். செல்வமும் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் “உங்களால்.., ஒரு மன நிம்மதி கிடைக்கும்.”அரசமரத்தை சுற்றிவர விதிமுறைகள்
குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.
2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.
3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.
4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.
5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.
6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.
7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.ஓம் நமோ நாராயணாய
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.
அப்போது ராமர் லட்சுமணனை நோக்கி, "லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா" என்று கூறி அனுப்பினார்.
லட்சுமணன் அருகில் வந்ததும் இராவணன் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.
ராமன் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.
"லட்சுமணா, ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும், எமனும், இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.
ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.
சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது. நல்ல செயலை உடனடியாக செய்து முடி. அது பலன் தரும். தீய செயலைத் தள்ளிப் போடு. அதைச் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு" என்றான்.
Friday, February 24, 2017

தேப்பெருமாநல்லூர்

மறுபிறவியை தடுக்கும் பெருமாநல்லூர் கோவிலின் பிரம்மாண்ட வரலாறு 


https://vivekaanandan.blogspot.in/2016/11/rebi.html

*****

http://temple.dinamalar.com/New.php?id=2195


*****நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள் ..
நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது (இதை பற்றி ஒரு பதிவை பதித்தேன் )
அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .
இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....
இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் .....


ஓம் நமச்சிவாய !
✫ இறைவனை கோவிலிலும் வழிபடலாம், வீட்டிலேயும் வழிபடலாம். ஆனால் ஞானிகளால் நிறுவப்பட்ட ஆலயம் சென்று வழிபடும்போது பயன் அதிகமாகவும், விரைவிலேயும் கிடைத்து விடும்.
✫ கோயிலில் இறைவனை வழிப்பட்டால் வினைகள் வெந்து எரிந்து கருகி, நீராகி விடுவது போல், மனம் நிம்மதி கொள்ள வாய்ப்புகள் உருவாகிவிடும்.
✫ விஞ்ஞான ரீதியிலும் ஒரு கருத்து அழுத்தமாகவே தெரிவிக்கப்படுகின்றது நன்றாக மின் சக்தியை ஏற்கக்கூடிய பொருட்கள் தான் பூஜை அறையில் பயன்படுத்தபடுகின்றது. வேப்பிலை, மாவிலை, துளசி, எழுமிச்சைபழம் போன்றவைகளுக்கு இந்த ஆற்றல் அதிகம். பிராண வாயு நமது ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பண்பாக கலப்பதற்கு இது உதவுகின்றது. கோயில்களில் - நகரங்களிலும் வெளியிலும் இருப்பதைவிட, பூஜை நடைபெறும் கர்ப்ப கிரகத்தில் இந்த சக்தி அதிகமாகவே கிடைக்கிறது.
✫ கடற்கரையிலும், மலை மீதும் உள்ள ஆலயங்களில் இந்த சக்தி இயற்கையாகவே நிரம்பக் கிடைக்கிறது. மலை அருவிகள் பொழியும் இடங்களிலும் இது நிறைந்துள்ளன. எனவே தான் பழனி, திருப்பரங்குன்றம், திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற மலைகள் மீதும் ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர் போன்ற கடற்கரையிலும் குற்றாலம் போன்ற அருவிகள் கொட்டும் இடங்களிலும் ஆலயங்கள் அமைக்கபட்டுள்ளன.
✫ ஆலயங்களில் ஒலிக்கப்படும் மணியிலிருந்து வரும் அதிர்வு அணு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலைவரிசையைத் தோற்றுவிக்கும். நமது உடலும் உள்ளமும் ஆன்மாவும் அந்த அலைவரிசையினால் மீட்டப்பட்டு, மூளை, இருதயம், செவிப்பறை, முகுளம் போன்றவற்றிக்கு ஊட்டம் அளிக்கின்றது. பின்னர் எரியும் கற்பூரத்திலிருந்து வரும் வெளிச்சம், கண்ணின் ஆடிகளை அகல விரியச் செய்து அதனால் ஏற்படும் அதிர்வுகள் நரம்பு மண்டலத்தையே உறுதி செய்கின்றன.
✫ விஞ்ஞான உலகில் ஆலய தரிசனம் என்பது அன்றாட நடவடிக்கை என்பது இல்லாது போயிற்று. ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பது உண்மை என்றாலும், ஆலயத்தை அவனது இருப்பிடமாக கருதி வழிபடுவதில் ஒரு தனி சுகத்தையே நாம் காண்கின்றோம். ஏனெனில் அனைத்து இடங்களிலும், சூழ்நிலைகளிலும் மனதை ஒரு நிலைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றாகும். ஆனால் ஆண்டவன் குடி கொண்டுள்ள இடம் ஆலயம் எனக் கருதி அங்கே நுழையும் போதே மனம் ஒருவித நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது.
✫ ஆலயத்தின் மணியோசை அங்கு கமழும் தூப, தீப, நைவேத்யங்களின் வாசனை, இறைவன் மீதான பாமாலைகளின் ஒளி, அங்கு குழுமியுள்ள இதர மனிதர்களின் பக்திபரவச நிலை ஆகிய அனைத்தும் சேர்ந்து நம்முடைய இதயங்களையும் வேறு திசைக்குத் திருப்பாமல் பக்திப் பரவசத்தால் நிரப்பிவிடுகின்றன.
✫ வெளியில் பெறமுடியாத இறையுணர்வை, பக்திப் பரவசத்தை ஆலயங்களில் பெற முடிவதால், ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடுவதே சாலச் சிறந்தது ஆகும்.

Thursday, February 23, 2017

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை!

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு ….

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்க பட்டு கொண்டுஇருந்தது , மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள்.

மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது…

அடியார்கள் ,சிவாச்சாரியார்கள் ,கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார் -கள் என்று புரிய வில்லை ..

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டது காரணம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும்.

உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான் .

கோவில் என்ன சிற்றுண்டி கடையா ? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது.கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.

மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு ? ..

மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் ,

ஏகாந்தம் ;ஏகாந்தம் ;ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி….

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறை -களையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆனால் பக்தர்களின் ஆரவாரம் ,கேளிக்கைகள் , சப்தம் கோவிலை பிளக்கிறது -சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது ….

>> ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு …..

மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள் ,பணியில் உள்ளவர்கள் பனி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தலே போதுமானது..

மனதில் சொல்லவேண்டிய மந்திரம்

“சிவாய நம ஓம்

சிவாய வசி ஓம்

சிவ சிவ சிவ ஓம் ”

இப்படி செய்வது ஒரு விதம்

மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது ஒரு விதம் …

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம் ..

இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது ,சும்மா நண்பர்களுடன் கோவிலை சுற்றி வருவது ,கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை …

சிவராத்திரி பெயர் என்ற பெயர் வர காரணம் அம்பாள்தான் , பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப் பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை,தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவித மான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாற்றுதலும் செய்யவேண்டாம் …

இதைப் படிப்போர் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 2000 சூரியக் குடும்பங்களையும் சுற்றி வந்தவர்.
அவர் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் நிலைகளை ஞானகுரு வேணுகோபால சுவாமிகளுக்கு உனர்த்தினார்.
இந்த உலகில் வாழும் மக்கள் எல்லோரும் அருள் ஞானிகளாகவும் மகா மகான்களாகவும் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஞானகுரு வெளிப்படுத்திய உபதேசக் கருத்துக்களை இங்கே பதிவு செய்கின்றோம்.
சுமார் 35 வருடம் அவர் வெளிப்படுத்திய கருத்துக்களை முழுவதும் ஒரே நாளில் படிக்கவும் முடியாது. உணரவும் முடியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது.
சிறுகச் சிறுக இங்கே பதிவு செய்கின்றோம்.
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை உபயோகித்து தலைப்பு வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ள நிலைகளைப்படித்து அறிந்து கொள்ள முடியும்.
அதே சமயத்தில் அவர் நேரடியாகப் பேசியதை ஒலிப் பதிவுகளாகவும் கேட்க விரும்புவோரும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
(1). Blog Link: தமிழில்
https://omeswara.blogspot.in/
(4) BLOG lINK: ஆங்கிலத்தில்
http://omeswaragurudeva.blogspot.in/மனிதனுக்கு ஏது ஜாதகம்…?
ஜோதிடம் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் வருகின்றதா.,,! கெட்ட நேரம் வருகின்றதா..,? என்று பலர் கூடிப் பார்க்கின்றார்கள். யாகங்கள் பல செய்கின்றார்கள்.
அவர்கள் எல்லாம் உடலுடன் இன்று இருக்கின்றனரா? அவர்கள் உடலிலுள்ள துன்பங்களைப் போக்கினார்களா?
துன்பத்தைப் போக்கினாலும் அவர்கள் செல்வத்தையெல்லாம் நிலை நிறுத்தினார்களா? செல்வம் இவருடன் செல்கின்றதா..,? உடலுடன் செல்கின்றார்களா? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
பல ஜாதகங்களையும் ஜோதிடங்களையும் பார்த்துத்தான் நல்ல நேரத்தை அமைத்துத் திருப்பூட்டுகின்றனர். திருப்பூட்டிய பின் ஒரு சிலரே அவருடைய சந்தர்ப்பம் “உயர்ந்த வாழ்க்கை” வாழ்கின்றனர்.
நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் ஜாதகம் ஜோதிடம் பார்த்தாலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த பின் பல புகைச்சல் பல வெறுப்புகள் பல வேதனைகள் “எல்லாமே வருகின்றது”.
எல்லாப் பொருத்தமும் பார்த்துத் திருமணம் செய்தாலும் இங்கே பகைமை உணர்வு வளர்ந்துவிட்டால் அதனால் பல நோய்களும் வந்துவிடுகின்றது.
ஒருவருக்கொருவர் வெறுத்துப் பேசும் பொழுது வெறுப்பின் உணர்வு வீட்டிற்குள் பரவப்படும் பொழுது “பாவி மகள் என் வீட்டிற்குள் வந்தாள்.., எல்லோருக்கும் நோய் வந்துவிட்டது” என்பார்கள்.
இவர்கள் பண்படுத்தும் உணர்வைத் தவறியதனால் வெறுப்பின் உணர்வைத் தனக்குள் வளர்த்ததால் அந்த உணர்வால் இவர்களுக்குள் நோயாகி விடுகின்றது.
ஆனால், “மருமகள் வந்தாள்.., அதனால்தான் என் குடும்பம் சிதைந்து விட்டது..,” என்று இவர்கள் செய்யும் தவறை விடுத்து, வந்த மருமகள் மேல் பழியைப் போட்டு “மீண்டும்.., குடும்பத்தில் சிக்கல்களையே ஏற்படுத்துகின்றனர்”.
ஜாதகம் ஜோதிடம் பார்த்துத்தான் திருமணத்தைச் செய்து வருகின்றனர். ஆனால், மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தே விடுகின்றது.
அப்பொழுது துயர்படும் உணர்வுகள் வரும்பொழுது விஷத் தன்மையான உணர்வுகள் ஆகிவிடுகின்றது.
அப்பொழுது இவர்கள் பார்த்த ஜோதிடம் எங்கே போய்விட்டது..? இவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னவாகிவிட்டது?
பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக தெய்வத்தின் மேல் பூவை வைத்துக் கேட்பார்கள். இந்தக் கலர் பூ வந்தால்.., “எனக்கு நல்லது” என்றும் எண்ணுவார்கள்.
சிலை மீது அந்தப் பூவே வைத்தபின் இவர்கள் எண்ணம் எப்படியோ அப்படித்தான் விழுகும்.
கலக்கமான எண்ணத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுடன் கண்ணின் பார்வை அங்கே பட்டால் உணர்வுகளுக்குள் உணர்வுகள் மோதப்படும் பொழுது அன்று அதன் வழி தான் நடக்கும்.
உதாரணமாக, அன்று வேதனையை அதிகமாக எடுத்திருந்தால் வேதனை வரும். “எப்படியும்.., இன்று நல்லதாக வேண்டும்..,” என்று எண்ணியிருந்தால் அதற்குத்தக்க நல்ல பூ வரும்.
நல்ல பூ விழுந்த பின் என்ன செய்கின்றனர். எல்லாத் தெய்வமும் ஒத்து வந்துவிட்டது ஜாதகமும் ஒன்றி வந்துவிட்டது. ஆக, திருமணத்தை நடத்தலாம் என்று வருகின்றனர்.
அத்தகைய நிலைகளில் பார்த்தாலும் திருமணமாகி வந்தபின் இவர்கள் எண்ணிய நிலைகள் கொண்டு அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் வரப்படும் பொழுது வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது.
ஒன்றுபட்டு வாழும் நிலைகள் மாறிவிடுகின்றது. பகைமை ஆகிவிடுகின்றது. அப்பொழுது அந்த ஜாதகம் காக்கின்றதா..,? பூ வைத்துக் கேட்ட அந்தத் தெய்வம் காக்கின்றதா..,?
ஆகவே, “உங்களுடைய எண்ணங்களை உயர்த்தி வரப்படும் பொழுது.., அதுவே தெய்வமாகின்றது”.
ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஜாதகம் மனிதனுக்கு அல்ல.
இயற்கை தாவர இனங்களுக்கு உண்டு. “கிரேதா..,” என்ற நிலையில் செடி கொடி இவைகளுக்கும் சூரியன் மற்ற கோள்களுக்கும் ஜாதகம் உண்டு.
தனக்குள் கிரகித்து உணர்வின் தன்மை சேர்த்துக் கொள்ளும் நிலைகளுக்கு அது உண்டு. அது எந்த உணர்வு கொண்டு உடல் பெற்று அதன் உணர்வின் மணத்தால் நுகர்ந்து செல்லும் மற்ற உயிரினங்களுக்கும் ஜாதகம் உண்டு.
ஆனால், மனிதனோ தீமைகளை அகற்றிவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றும் இந்தச் சக்தி பெற்றவனுக்கு ஜாதகம் என்பது இல்லை.
அடுத்து நியுமராலஜி என்று இந்தப் பெயரை இப்படி மாற்றி வைக்க வேண்டும் அப்படி வைக்க வேண்டும் என்றும் அதனால் நன்மை கிடைக்கும் என்று தாய் தந்தை வைத்த நல்ல பெயரை மாற்றிக் கொள்கின்றார்கள்.
அதே சமயத்தில் வாஸ்து சாஸ்திரம் என்ற நிலைகளில் வீட்டில் வாசலையோ சுவரையோ இப்படி மாற்றினால் சரியாக வரும் என்று அதற்காக கட்டிய வீட்டை இடித்து மாற்றவும் செய்கின்றார்கள்.
பணத்தைச் செலவழித்து மாற்றியமைத்துச் சிறிது காலம் நன்றாக இருந்தாலும் அடுத்த கணம் சொந்தத்தில் பிரியப்பட்டவர் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்?
“அடப் பாவி மகனே..,” எப்படி இருந்தான்..,? இப்படிப் போய்விட்டானே..,” என்ற வேதனை உணர்வை அதிகமாகத் தனக்குள் எடுத்துக் கொள்வார்கள்.
எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்துவிட்டு அதன்படி கட்டினார்களோ அந்த வீட்டிற்குள் இத்தனை வேதனை உணர்வுகள் பரவப்படும் பொழுது தன் உடலுக்குள்ளும் பெருகிவிடுகின்றது.
அடுத்து இதே உணர்வின் வேதனை தொழிலிலும் பரவிவிட்டால் வாஸ்து சாஸ்திரம் வந்து காக்குமா..,? காக்க முடியாது.
ஆகவே, அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்த்துத் தீமையான உணர்வுகளை நமக்குள் வராதபடி தடுத்தால் முடியும். ஆனால், இந்த நிலைக்குச் செல்வார் யாரும் இல்லை.
வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்துச் சில கட்டிடங்கள் கட்டி அவருக்குக் கூலி இவருக்குக் கூலி என்று எல்லோருக்கும் கொடுத்துச் செலவழித்த பின் “இதிலே எதாவது நன்மை வருமா..,?” என்று இப்படி நாம் சுற்றிக் கொண்டுள்ளோம்.
இந்த உடலின் இச்சைக்கு இனி பொருளைத் தேடி மீண்டும் பொருளைச் சேமிக்கலாம் என்ற நிலைக்குத்தான் செல்கின்றனர். ஜாதகம் ஜோதிடம் பார்த்து அதன் வழியில் நன்மை கிடைக்கும் என்ற “அந்த ஆசையிலேயே தான்” செல்கின்றனர்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கும். அதன் வழியில் தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை உருவாக்க முடியும்.
இந்த உடலில் வாழும் பொழுது பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்றை நாம் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.
அந்த அகஸ்தியன் கண்ட உணர்வை அவன் ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக ஆன பின் அவனைப் பின்பற்றிச் சென்ற ஞானிகள் எத்தனையோ பேர் உண்டு.
அவர்கள் அனைவருமே இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர். நம்முடைய எல்லை அது தான்.Wednesday, February 22, 2017

குங்குமம் போச்சு, அதன் ஸ்தானத்தில் ஸ்டிக்கர் பொட்டு வந்தது...இப்போ அதுவும் போய்விட்டது.
ஆம் இப்போதெல்லாம் பெண்கள் நெற்றியில் திலகத்தோடு பார்ப்பதென்பது அரிதாகி வருகின்றது. இப்போதெல்லாம் யாரை பார்த்தாலும் வெறும் நெற்றிதான் - பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உள்பட.ஆம், மூன்றாவது அல்லது நான்காவது படிக்கும் குழைந்தைகள்கூட பலர் வெறும் நெற்றியுடன் இருப்பதைதான் விரும்புகிறார்கள். அம்மாக்களும் கண்டுக்கொள்ளுவதில்லை. குழந்தைகளை விட்டுத் தள்ளுங்கள். நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளாத அம்மாக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.
ஃபேஷன், பெண்கள் உரிமை என்று பேசப்படும் இந்த நாட்களில் இவைகளை பற்றி பேசுவதற்கே யோசிக்கவேண்டியுள்ளது.
தப்பா ரைட்டா என்பது வேறு விஷயம். அந்த வாக்குவாதத்தில் நான் இறங்க தயாராக இல்லை.ஆனால் ஒன்று.
நமது கலாசாரமும், பல இதிஹாஸங்களும், தேவீ மஹாத்மியம், செளந்தர்யலஹரி போன்ற சக்தி வாய்ந்த அம்பாள் ஸ்லோகங்கள் ஸ்த்ரீகளுக்கு நெற்றி திலகம் எவ்வளவு அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்து சொல்லியுள்ளதை நாம் அலக்ஷியப்படுத்தக்கூடாது. அலக்ஷியப்படுத்தினால் நஷ்டம் அவைகளுக்கு அல்ல; நமக்குதான்.
பரமேஸ்வரன் ஆலகால விஷத்தை லோக க்ஷேமத்திற்காக முழுங்கியப்போது செளமங்கல்யமாக அன்னை பராசக்தி பக்கத்தில் இருந்தததினால்தான் ஈஸ்வரன் ச்ரமப்படவில்லை என நமது ஆச்சார்யாள் பகவத்பாதாள் வியாக்யானம் செய்துள்ளதை நாம் நினைவுப்படுத்திக்கொள்ளவேண்டும்.
சுமங்கலி பிரார்த்தனை போன்ற பல சடங்குகளும் இதைத்தானே நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
இக்காலகட்டத்திலும், இங்கிருந்தாலும் சரி, வெளி நாட்டில் வசித்தாலும் சரி, நெற்றியில் திலகத்துடன் இருக்கும் ஸ்திரீகளும் அதிக எண்ணிக்கையில் கண்ணில் படாமல் இல்லை. அவர்களுக்கு எனது வந்தனங்கள்.
நமது குடும்பம் க்ஷேமமாக இருக்கவேண்டும் எனில் பல அம்சங்கள் தேவைப்படுகின்றது அதில் ஸ்த்ரீ தர்மம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என சாஸ்திரங்கள் எடுத்து கூறுகின்றன.
-சர்மா சாஸ்திரிகள்

Tuesday, February 21, 2017

ஒரு விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ;
அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் , ''ஐயா ...எனக்கு நிறைய வேலைகள் உள்ளன ...உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் ! ..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !'' என்றார் ;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ......சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட......ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் !
தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது .....அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....கோபுரம் ...ராஜகோபுரம் ...உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ....வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி ...........இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !!
சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ ' பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....
' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் ' என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது!
'ஒரு ஏழைக்கு, சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் '
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க .....அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!.
கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி !!
.
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் !
**************************************
விளக்கேற்றுவது ஏன் ?
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!
விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது' என்று ஒரு பழமொழி உள்ளது.
எதற்கு என்று தெரியுமா??
சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வாறு ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்!
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்!
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது.
சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.
திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது....
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.
இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க
“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும் தாயார் சொல்கிறார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.
கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும்.
மணம் வீசும் மலர்களின் வாசம்...
அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.
கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல... தாயார் மகிழ்ந்தார்......
குறிப்பு:
********
மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ! ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவத்திதான் தாய் ! மண்ணெண்ணை விளக்கும் வேண்டாம்....
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால்
அவர்களை தினசரி விளக்கேற்றும்பட
ி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால்
அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு
கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான
தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக
தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு
எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம்,
எதை பயன்படுத்தக்கூடாது,
என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில்
எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற
தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது
குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி
எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து
தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக
இருக்கும் என்று நம்புகிறேன்.
பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால்
அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை
அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு
ஏற்றும்படி பணிக்க வேண்டும்.
இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல்
அவர்களின் தேஜசும் (அதாவது
முகபொலிவும்) கூடுகிறது.
இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட
தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி
சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம்
அவளது முக பொலிவை முகம் பார்க்கும்
கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும்
பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின்
மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை
கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும்
உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது
முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள்.
நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள்
இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு
மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால்
உணர முடியும். அதுமட்டுமின்றி
பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும்
வியப்பூட்டும் வகையில் கூடும்
விளக்கேற்றவேண்டிய நேரம்
************************
விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச்
சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’
என்கின்ற இரவின் விடியலாகத் திகழும்
அருணம், என்கின்ற அருணோதய காலத்தில்
விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித
யோகத்தையும் பெறலாம்.
அதேபோல்
மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று
முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற
உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி
வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும்.
சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு
நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம்
உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும்.
மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும்
பெறலாம்.
பொதுவான விதிமுறைகள்
***********************
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை
திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும்
ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி
குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு
பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில்
விளக்கில் நெய் அல்லது எண்ணெய்
ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு
தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக
ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை
அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்
அனைவரின் மன இருளையும் அகற்றி,
தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த
முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான
அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது
நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை
நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு
உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும்.
வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை
கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின்
கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம்
பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி
என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம்
காண்போம்
எந்தெந்த எண்ணைகளில்
விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
*****************************************
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித
சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்
படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய்,
நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து
தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய்
எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை
வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு
நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள்
தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும்
பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே
ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை
திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர்
வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற
வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர்
விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய
ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.
முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவ
து நல்லது.
நாராயணனுக்கு நல்லெண்ணெய்
ஏற்றதாகும்.
மகாலட்சுமிக்கு நெய்
உபயோகப்படுத்தலாம்.
சர்வ தேவதைகளுக்கு
நல்லெண்ணெய் உகந்தது.
குலதெய்வத்திற்கு
இலுப்பை எண்ணெய், நெய் மற்றும்
நல்லெண்ணெய் இவை மூன்றும்
உபயோகிக்கலாம்.
கடலை எண்ணெய், கடுகு
எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக்
கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே
கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில்
தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும்.
வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்
தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்
பங்களிப்பதை இவை நீங்கும்.
வடக்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும்,
மங்கலமும் பெருகும்.
தெற்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
*****************************************
தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப்
பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும்
வெண்மை கலந்த பகுதியும், தண்டுப்
பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய
வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை
விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால்
முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித்
தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து
நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால்
திரித்து எடுக்கப்படுகின்ற திரி
விளக்குகளுக்கு தீபத்திரியாக
பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பான்மையானோர்
பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக
பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம்,
பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக்
கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால்
விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல
பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக
எடுத்து, அதைத் திரியாகத் திரித்து
பயன்படுத்துவதால் பலவித உத்தமமான
பலன்களை பெற முடியும். அதிலும்
வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய
வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக
திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது
மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு
துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய
பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும்
மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும்
பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி :
இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம்
உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும்
அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது.
தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த
திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு
ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள்
நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம்
பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள்
ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும்
திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து
அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை
திரியாக எடுத்து விளக்கெரிக்க
பயன்படுத்தலாம். இது முன்னோர்களால்
ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட
பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி,
குடும்ப அமைதி, குழந்தைப்பேறு
ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம்
பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து
அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து
விளக்கிற்கு பயன்படுத்தினால்
செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால்
பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து
காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு
நீடிக்கும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய
ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச
வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி
நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
பொருள்:
புழுக்களோ, பறவைகளோ அல்லது
கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை
என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும்
பூமியிலும் எத்தனை வகையான
ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த
குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த
தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய
சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும்.
இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த
வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை
அறிமின்விளக்கினின் முன்னே வேதனை
மாறும்விளக்கை விளக்கும் விளக்கு
உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர்
தாமே!