Thursday, March 30, 2017

தாரபலம் விளக்கம்

கோடான கோடி நன்றிகள் - 

 http://neerkondar.blogspot.in/2014/10/blog-post_29.html                      

செல்வா பதிகம் : காரிய சித்தி மாலை

செல்வா பதிகம் : காரிய சித்தி மாலை: காரிய சித்தி மாலை காசிப முனிவர் இயற்றி, கச்சியப்பர் மொழி பெயர்த்தது Karya Sidhi Malai - The garland for achieving results - E...************
கோவில் பிரகாரத்தை சுற்றுவதின் பலன்கள் ,,,,,!

கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு

குடும்ப ஒற்றுமை பெருக ...

http://www.kulaluravuthiagi.com/nithya7.htm  

 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம் 

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

காரியத் தடங்கல்கள் விலக ...

http://www.kulaluravuthiagi.org/nithya18.htm
  

 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம் 

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

 

காரிய சித்தி நட்சத்திரங்கள்
காரிய சித்தி நட்சத்திரங்கள் 

<3 span="">
=============================
புனர்பூசம் பூரம் ஸ்வாதி உத்திரட்டாதி ஆகிய நான்கும்
காரிய சித்தி நட்சத்திரங்கள்.
" காரிய சித்தி நட்சத்திரங்கள் என்றால் காரியத்தை சித்திக்க (நிறைவேற்றி) வைக்கும் நட்சத்திரங்கள் "
காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களில்
நீங்களும் ஒருவராக இருப்பீர்கள் அல்லது உங்கள் நட்பு / உறவு வட்டத்தில் இருப்பார்கள்.
காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் இணைந்து பயனிக்க வாழ்க்கை இனிமையாகும் என்பது ஜோதிட விதி.
ஒருவர் ஒரு காரியம் நடைபெறவில்லை என்னும் வருத்தத்தை காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அத்தகைய நடக்காத பல காரியங்கள் நடைப்பெற்றதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.


நீங்கள் செய்த பாவங்கள் விலக வேண்டுமா? - Tamil TV

இந்த 14 பழக்கங்கள் உங்களுக்கு புகழ், வெற்றி, செல்வத்தை வாரி வழங்கும்! - ...

3 பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவது...

உங்களுக்கு திருநங்கைகள் ஒரு பொருளை குடுத்த நீங்கள் பணக்காரன் ஆயிடுவீங்க ...

திருமணப் பொருத்தம் சில இரகசியம்

பரசுராமரின் பரசு ரகசியம்

கோடான கோடி நன்றிகள் ஐயா - மணிகண்டன் பாரதிதாசன் - 9894201785 ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி நான்காவதாக அல்லது பதிமூன்றாவது அல்லது இருப்பத்தி இரண்டாக வரும் நட்சத்திரத்திற்குரிய வடிவம் அல்லது அந்த நட்சத்திரத்தில் உதித்த கடவுள் அல்லது மஹான் உங்களுக்கு நலம் தரும் சூழ்நிலை உருவாக்கி தருவார்கள் என அறியுங்கள்.


பரசுராமரின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி. இவரது நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரம் புனர்பூசம், பதிமூன்றாவது நட்சத்திரம் விசாகம், இருப்பத்தி இரண்டாவது நட்சத்திரம் பூரட்டாதி. இதில் புனர்பூசத்தின் வடிவம் வில் (சிவ தனுசு), விசாகத்தின் வடிவம் கைவிசிறி போன்ற வடிவுள்ள கோடாரி எனும் பரசு. இந்த சிவதனுசே ஜனகருக்கு பரிசாக அளிக்கப்பட்டு ராமரால் முறிக்கப்பட்டது.

தனது தாயின் மரணத்திற்கு காரணமான சத்ரிய குலத்தை சார்ந்த அரசர்களை அடியோடு அழிக்க சபதம் கொண்டு, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். பரசுராமர் எதிர்க்கபோவது சத்ரிய குல அரசர்கள் என்பதால், இவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ப சிவபெருமான் வில் மற்றும் பரசு இவற்றை வரமாக கொடுத்தருளினார். இதனை கொண்டு தனது சபதத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

சேம நட்சத்திர வடிவான பரசும், வில்லும் எப்பொழுதும் தன்னிடமே வைத்திருப்பதால் இவரது இயற்பெயரான ராமர் என்பது பரசுராமர் என்றானது. எனவே இந்த சேம நட்சத்திர வடிவத்தின் பெயரை தன் இயற்பெயருடன் சேர்த்துக்கொள்வதும் நமக்கு சாதகமான சூழ்நிலை அமைத்து தரும்.

*************
நாய்க்கு உணவிடும் பரிகாரம்
==============================
புனர்பூசம் நாயின் வடிவம் என்பதால், உத்திரட்டாதி, பூசம் மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நாய்க்கு தினமும் உணவிட பல சிக்கல்களுக்கு வழிகாட்டுதல்கள் இயற்கையாக கிடைப்பதை அறியலாம்.


சதயம், திருவாதிரை மற்றும் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சம்பத்து தாரை ஆகும். நட்சத்திரத்தில் பிறந்தவர் நாய்க்கு உணவிட சாராவை சம்பத்துகள் (வளங்கள்) பெறுவதை அறியலாம்.

பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சாதக தாரை ஆகும். நட்சத்திரத்தில் பிறந்தவர் நாய்க்கு உணவிட தொழில் மற்றும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட சாதக சூழல் உருவாகும்.

ரோஹிணி, அஸ்தம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சேம தாரை ஆகும். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாய்க்கு உணவிட, கரிய சித்தி கிட்டும்


************************************

கேட்டை, ரேவதி ஆயில்யம் நட்சத்திர சம்பத்து வடிவம்
=====================================================
ஜேயஸ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி இந்திரன். கீழே இருப்பது நமது முன்னோர்கள் இந்திரனுக்கு கொடுத்த வடிவம்.
கேட்டை நட்சத்திரத்தின் சம்பத்து தரும் நட்சத்திரம் மூலம், அஸ்வினி மற்றும் மகம்.
மூல நட்சத்திர வடிவம் - அங்குசம், சூலம் மற்றும் யானையின் துதிக்கை.
மூல நட்சத்திர வடிவம் தாங்கிய ஐராவதம் யானையின் மீது இந்திரனை அமரவைத்து, அவனது கையில் அங்குசம், மற்றும் சூலம் போன்ற மூலம் சம்பத்து தாரை வடிவங்களை கொடுத்து வைத்துள்ளனர்.
இதன் அர்த்தம் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரங்களாக கொண்ட நண்பர்கள் பயன்படுத்தலாம்.
இந்திரன் என்றால் வஜ்ராயுதம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அது அவரது ஜெனம நட்சத்திர தாரை என்பதால்
 போருக்கு செல்லும் போதும் மற்றும் தன்னை காக்கும் கவசமாகவும் உபயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வடிவங்களில் ஏதேனும் ஒன்றை தனது மோதிரம், செயின் அல்லது வேறு வடிவத்தில் உபயோகம் செய்யலாம்.

********************************************************************
பரம மித்ர மற்றும் சமபத்து நட்சத்திரமும்
==========================================

மித்ரன் என்றால் நண்பன் என்று பொருள். பரம மித்ரன் என்றால் உங்களின் உயிர் நண்பர் என பொருள்.

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் ஒன்பதாவது நட்சத்திரம் உங்கள் பரம மித்ர நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு நண்பர் அமைய வாழக்கை முழுவதும் அவர் துணையாக வருவார்.
இதில் இன்னொரு சிறப்பான விடயம் என்னவெனில் உங்கள் பரம மித்ரனின் (இரண்டாம் நட்சத்திரம்) சம்பத்து நட்சத்திரம் உங்கள் நட்சத்திரமாக வருவது.
உதாரணமாக மஹாபாரதத்தில் கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி இதன் ஒன்பதாவது நட்சத்திரம் உத்திரம். உத்திரம் அர்ஜுனன் நட்சத்திரம்.
தனது கலியுக அவதார நோக்கத்தை கிருஷ்ணன் தனது பரம மித்ரனான அர்ஜூனன் கொண்டு செயல்படுத்தினார். மேலும் தனது உயிர் நண்பனாக பஞ்சபாண்டவரில் அர்ஜீனரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். காரணம் ரோகிணிக்கு பரம மித்ர தாரை அர்ஜுனன் நட்சத்திரம் உத்திரம்.
அதுபோல அர்ஜுனன் கிடைப்பதற்கரிய கீதாஉபதேசம் தனது சமபத்து நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்ட கிருஷ்ணரிடமிருந்து பெற்றார்.
*********************************************************************

ஜென்ம நட்சத்திர பயன்பாடு
================================
ஒருவர் தனது ஜென்ம நட்சத்திர வடிவத்தை தனக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் உபயோகம் செய்யலாம் என்பதை பல முறை கூறி இருக்கிறேன். அதனை நிரூபிக்கும் இன்னொரு புராண நிகழ்வு ஸ்ரீகிருஷ்ணன் "கோவர்த்தன மலையை கொண்டு இடையர்களை காத்தது"

கிருஷ்ணனின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணி. இதன் வடிவம் ஊற்றால். ஊற்றால் என்பதன் அர்த்தம் கோழிக்குஞ்சுகளை மூடி வைக்கும் அகன்ற கூடை என்பதாகும். ரோஹிணி நட்சத்திரத்திற்கு ஊற்றால் நட்சத்திரம் என்ற தமிழ் பெயரும் உண்டு. காரணம் இந்த நட்சத்திரம் அகன்ற கூடை போன்ற தோற்றம் தருவதால் ஆகும். கோவர்தர்த்தன மலை பார்ப்பதற்கு அடைகாக்கும் அகன்ற கூடையை கவிழ்த்து வைத்ததை போன்ற தோற்றம் தரும். இந்திரனுடன் மோதல் ஏற்பட்ட போது, இந்திரன் இடையர்களின் மேல் பெரும் மழை பொழிய செய்தார். அந்த சமயத்தில் கிருஷ்ணன் தன்னையும் இடையர்களையம் கோவர்த்தன மலையை ஊற்றால் (கோழி மற்றும் குஞ்சுகளை மூடி வைக்கும் கூடை) போன்று மாற்றி கொண்டு, தன்னிடம் சரண் புகுந்த மக்களை மழையில் இருந்து காத்தார்.
*********************************************************************

பரம மித்ர தாரை வடிவம் (ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ஒன்பதாம் நட்சத்திரம்) - ஜாதகருக்கு வழிகாட்டும்
ஜென்ம தாரை வடிவம் (ஜென்ம நட்சத்திரம்) - ஜாதகருக்கு கேடயமாகும்

சம்பத்து தாரை வடிவம் (ஜென்ம நட்சத்திரத்திலிருந்து இரண்டாம் நட்சத்திரம்)- ஜாதகருக்கு வளம் தரும்.

*********************************************************************
வாமன ரகசியம்
===============
விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் வாமன அவதாரமாகும். இந்த அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. திருவோண நட்சத்திரத்திற்கு ஸரவண நட்சத்திரம் என்ற பெயருண்டு. ஸரவண நட்சத்திரம் என்பது ஒளி பொருந்திய ஒன்றாகும். திருவோண நட்சத்திரம் வானத்தில் காணும்போது மூன்று பாத சுவடுகள் வடிவத்தில் காட்சியளிக்கும்.


வாமன அவதாரம் உயரம் குறைவாகவும், கையில் குடை மற்றும் குச்சி ஏந்தி இருக்கும். தனது ஜென்ம நட்சத்திரம் திருவோணத்திற்கு சாதகம் தரும் நட்சத்திரம் கேட்டை நட்சத்திரமாகும். கேட்டை நட்சத்திர வடிவான குடையை தன் கையில் ஏந்தி தன் அவதார நோக்கம் சரியாக சாதகமாக அமைத்துக்கொண்டார். அதுபோல தனது கையில் பரம மித்ர நட்சத்திரம் உத்திரத்தின் வடிவான குச்சி ஏந்தி மூன்றாடி மண் கேட்டார். அதுபோல தனது ஜென்ம நட்சத்திரம் திருவோண வடிவான பாதத்தை ஆயுதமாக்கி மஹாபலி தலைமீது வைத்து அழுத்தி பாதள உலகம் அனுப்பினார்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குச்சி அல்லது கம்பு மற்றும் குடையை வாழ்வில் வெற்றி பெறலாம்.கலைவாணி கையில் வீணை - நட்சத்திர சூட்சுமம்
=======================================================

முப்பெரும் தேவிகளுள் ஒருவர் கலைமகள் என்று அழைக்கப்படும் சரஸ்வதி ஆவார். சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சை தருபவள் என்று பொருள். சரஸ் + வதி = சரஸ்வதி சரஸ் என்றால் சமஸ்கிருதத்தில் பேச்சு என்று பொருள். வதி என்றால் வாழ்பவள் அல்லது இருப்பிடமாக கொண்டவர் என்று பொருள். சரஸ்வதி என்பதன் இன்னொரு அர்த்தம் ஈரத்தன்மை கொண்டவர் என்பதாகும்.

சரஸ்வதி தேவி பிறந்த நட்சத்திரம் மூலம் ஆகும். மூலத்தின் நட்சத்திர வடிவங்கள் என்பது அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை.
சரஸ்வதி தேவியின் கையில் அங்குசம் (மூல நட்சத்திர வடிவமாகும்) காணலாம். மேலும் யானையின் துதிக்கை வடிவான வீணை அவரது கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீணையை தலைகீழாக செங்குத்தாக பிடித்தால் அது யானையின் தும்பிக்கை போல காட்சி தரும். எனவே மூல நட்சத்திர வடிவத்தை சரஸ்வதி தேவியின் கையில் கொடுத்துள்ளனர். மேலும் தாமரை எனும் வடிவம் இவர் நீரில் நிலைகளில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. ஆதாவது நமது பேச்சுக்கு காரணம் நாவில் இருக்கும் ஈர தன்மையே ஆகும். அந்த ஈர தன்மை குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் நமக்கு பேச்சு வராது. நீர் நிலையில் இருக்கும் கடவுள்களுக்கு தாமரை வடிவம் கொடுப்பது முன்னோர்கள் மரபு. உதாரணமாக லஷ்மி தேவி நீரில் உறைபவர் என்பதால் அவருக்கு தாமரை இருப்பிடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரம்ம தேவருக்கு திறமை வடிவ இருப்பிடம் கொடுத்ததற்கு இதுவே காரணம்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி தமது ஜென்ம நட்சத்திரமாக கொண்ட நபர்கள் சரஸ்வதி தேவியை வழிபட கல்வி நிலையில் மேன்மை பெறலாம்.
விசாகம், பூரட்டாதி மற்றும் புனர்பூசத்திற்கு சேமம் எனும் நலம் அளிப்பவர் அளிப்பவர் சரஸ்வதி தேவி ஆவார்.
சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு தோஷம் போக்கும் தெய்வம் சரசவாதி தேவி ஆவார்.
குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் தமது தந்தை இழந்து இருந்த காலத்தில், தனது அண்ணனிடம் கற்ற வீணை கலை இவருக்கு சாதகமான சூழலை உருவாக்கி பெரிதும் உதவியது. ஒரு காலத்தில் வீணை இசை கலைஞர் என்ற பெயரே அடையாளமாக இருந்தது. வீணை இவரது சாதக நட்சத்திரமான மூலத்தின் வடிவாகும். ஸ்வாமிகள் வீணை வாசிப்பதில் அபார திறமை கொண்டவர். இவரது வறுமை காலத்தில் வீணை இசை சொல்லிக்கொடுத்தே இவரது ஜீவனம் நகர்ந்தது. மேலும் மனவிரக்தி அடைந்து குளத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இவரது சாதக நட்சத்திர தெய்வம் சரஸ்வதி தேவி குளத்தில் வீணையுடன் தோன்றி இவரது முற்பிறவி ரகசியத்தை கூறி ஞானம் கொடுத்தார். அதன் பிறகே வேங்கடநாதன் எனும் நாமம் மாறி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் என்ற நாமம் நிலைபெற்றது.


திருவாதிரை, ஸ்வாதி. சதயம் வணங்க வேண்டிய நடராஜர்
================================================================
திருவாதிரை என்பது சிவபெருமானின் நட்சத்திரம். அவரது நடராஜ உருவம் ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் திருவாதிரை நட்சத்திரத்தின்று கொண்டாடப்படுகிறது.
திருவாதிரையின் பரம மித்திர நட்சத்திரம் அவிட்டம் அதன் வடிவம் உடுக்கை. இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வழிகாட்டும் நட்சத்திரம்.
திருவாதிரையின் ஜென்ம நட்சத்திர வடிவம் ஸ்வாதி இதன் வடிவம் தீ ஜுவாலை. இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆபத்தில் இருந்து காக்கும் நட்சத்திரம்.
திருவாதிரையின் மித்ரா நட்சத்திரம் ஹஸ்தம் அதன் வடிவம் அபய கரம் (அபய ஹஸ்தம்). இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆபத்தில் கை கொடுக்கும் நட்சத்திரம்,
திருவாதிரையின் சேம நட்சத்திரம் ஆயில்யம் இதன் வடிவம் படம் எடுத்த நாகம். இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோயில் இருந்து நலம் பெற செய்யும் நட்சத்திரம்.
எனவே திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்கள்
நடராஜ உருவத்தை தினமும் கண்டு தரிசித்து வர பல நன்மைகள் பெறலாம்.
நீங்கள் பிறக்கும் போதே பூர்வபுண்ணிய அடிப்படையில் உங்கள் வாழ்க்கை முறையை கிரகங்கள் தீர்மானித்து விட்டன. இருப்பினும் உங்கள் ஆகாமிய கர்மாவை (நிகழ்கால பாவ/ புண்ணிய செயல்) நீங்கள் ஒழுங்கு படுத்துவதன் மூலம், உங்கள் ஆகாமிய கர்மா பிராப்த கர்மாவில் சேர்க்கப்படாது. எனவே பிராப்த கர்மா எனும் முன்வினை பாவம் இந்த ஜென்மத்தில் அனுபவித்துவிட்டு கழிக்கப்பட்டு, அடுத்த பிறவியில் புண்ணிய ஆத்மாவாக உங்களை பிறக்கவைக்கும் கிரகங்கள்.இதுவே ஆன்மீக சூட்சுமம்.

***************************************************************************************************************************************************************************************************************

பூராடமும் கதாயுதமும்
=========================

பூராடம் என்பதன் இன்னொரு பெயர் பூர்வ ஆஷாட என்பதாகும். ஆஷாட என்றால் வெற்றி என்றும், பூர்வ என்றால் முந்தைய என்றும் பொருள். ஆதாவது முந்தைய வெற்றி தருவது பூராட நட்சத்திரம் ஆகும். இது வானத்தில் நீண்ட கோலுடன் இணைக்கப்பட்ட உருண்டை வடிவமாக தெரியும். இதை கதாயுதம் வடிவத்துடன் ஒப்பிடலாம். இது மூலத்தின் சம்பத்து நட்சத்திரமாக வருகிறது. சம்பத்து என்றால் வளம் என்று பொருள். இதன் காரணமாகவே மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயர் தனது கரத்தில் பூராடத்தின் வடிவான கதாயுதத்தை ஏந்தி இருக்கிறார். பெரும்பாலும் போரின் போது பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களை போர்க்களத்தில் முன்னே நிறுத்தும் வழக்கம் இருந்தது. காரணம் இந்த நட்சத்திரம் முந்தைய வெற்றி தருவதாகும். எனவே தான் பூராடம் போராடும் என்ற பழமொழி வழக்கில் இருக்கிறது.

மூலம், அஸ்வினி மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த பூராட வடிவான கதையுதைதை பயன்படுத்தி வர இக்கட்டான சூழலில் இருந்தும் தப்பிக்கலாம், போட்டி மற்றும் போர்களில் வெற்றியும் பெறலாம். இதற்கு உதாரணம் மஹாவீர ஹனுமான் ஆகும். மேலும் பூராடம், பூரம் மற்றும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த கதாயுத வடிவத்தை பயன்படுத்திவர, துஷ்ட சக்திகளின் பிடியில் இருந்து தன்னை காத்துக்கொள்ளலாம். உத்திராடம், உத்திரம் மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கதாயுதவடிவத்தை பயன்படுத்தினால், பல பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் தீர்வு கிடைப்பதை அறியலாம். இந்த கதாயுதம் இப்போது ஆஞ்சநேயர் கோவிலில் கி செயின் வடிவில் கிடைக்கிறது. எனவே இதை நண்பர்கள் பயன்படுத்தி நலம் பெறுக.
கர்ணனின் வாழ்க்கையில் நட்சத்திரங்கள்
===============================================
கர்ணனின் ஜென்ம நட்சத்திரம் பூராட்டாதி. இதன் பிரத்தயக்கு தாரை எனப்படும் துன்பம் தரும் நட்சத்திரம் பரணி ஜென்ம நட்சத்திரமாக கொண்ட துரியோதனன் நட்பு கர்ணனுக்கு அமைந்தது. இதனால் துரியோதனனால் பல துன்பங்களுக்கு ஆளானார்.


ஆனால் துரியோதனனின் பரணி நட்சத்திரத்திற்கு கர்ணனின் பூராட்டாதி நட்சத்திரம் சேமம் அல்லது நலம் தரும் நட்சத்திரமாகும். எனவே துரியோதனனை தன் உயிருள்ளவரை சேமத்துடன் வைத்திருந்தான் கர்ணன்.
அக்காலத்தில் குருமார்கள் தங்கள் சீடர்களின் நட்சத்திரத்திற்கு ஏற்ப ஆயுதங்களை தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தி எதிரிகளை வெல்லும் யுக்திகளை சொல்லி கொடுத்தனர். கர்ணன் மாறுவேடம் அணிந்து வில்வித்தை பரசுராமரிடம் பயின்றான். இருப்பினும் அஸ்த நட்சத்திர வடிவான அஸ்திரங்கள் கர்ணனின் நட்சத்திரத்திற்கு சாதகமில்லா சூழல் தருபவை. எனவே கர்ணனின் பிறப்பு நட்சத்திரத்தை மறைத்து குருகுல கல்வி பயின்றதால், அவனது இறப்பு தருணத்தில் குரு பரசுராமரின் சாபத்தால் அவர் பயிற்றுவித்த அஸ்திர வித்தைகள் கை கொடுக்கவில்லை.
கர்ணனின் பூராட்டாதிக்கு வில் என்பது ஜென்ம நட்சத்திர வடிவத்தில் ஒன்று என்பதாகும். ஜென்ம நட்சத்திர வடிவம் ஒருவருக்கு கவசமாகும். எனவே அவன் கையில் வில் இருந்தவரை அவனை எவராலும் வெல்லமுடியாது என அறிந்த கிருஷ்ணர். அவனது வதைத் தாரை எனும் சாதகமில்லாத நட்சத்திர வடிவான தேர் சக்கரத்தை பிடித்து குழியில் இருந்து மீட்கும் சமயம் பார்த்து அர்ஜீனனை அம்பெய்தி கொல்ல சொன்னார். இதுவே பிரத்தயக்கு நட்சத்திரத்தை ஒருவர் கையாண்டால் அது எதிரிக்கு சாதகமான சூழ்நிலையை அமைத்து தரும்.

 

Wednesday, March 29, 2017

ஆன்மீகத்தில் பிறவா நிலை அடைவோர் ? Part -3

தாரா பலனும் சூட்சமங்களும்ஜோதிடத்தில் சந்திரன் ஒரு ராசியை கடக்க இரண்டே கால் (2.25) நாட்கள் எடுத்துக்கொள்கிறார். ஆதாவது 54 மணிநேரம். ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் வீதம் சந்திரன் ஒரு பாதத்தை கடக்க சரியாக (54 / 9 = 6) ஆறு மணிநேரம் எடுத்துக்கொள்கிறது.

இதன் மூலம் அறிவது என்னவென்றால் தினமும் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை நட்சத்திர பாதம் மாறும் சந்திரன் அதற்கேற்ப தன் கோச்சார பலன்களை தாரை அல்லது தாரா பலன் என்ற முறையில் வழங்குகிறார்.
சமஸ்கிருத மொழியில் தாரா அல்லது தாரை என்றால் நட்சத்திரம் ஏனப்பொருள். தாரைகள் முதலில் ஜென்ம நட்சத்திரத்தில் தொடங்கி ஒன்பது நட்சத்திரம் வரை கணக்கிடப்பட்டு பின் மீண்டும் முதலில் இருந்து கணக்கிடப்படுகிறது.
தாரைகளின் பெயர்கள்:
1. ஜென்ம தாரை
2. சம்பத்து தாரை
3. விபத்து தாரை
4. சேமத்தாரை
5. பிரத்தயக்கு தாரை
6. சாதக தாரை
7. வதைத்தாரை
8. மித்திர தாரை
9. பரம மித்ர தாரை
இதில் 3,5,7 இவை அனைத்தும் அசுபதாரைகள். மற்றவை சுபத்தாரைகள்.
இப்போது தாரா பலன் அறியலாம், ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் மகம் எனில் அது சிம்மராசியில் வருகிறது. சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார் எனக்கொள்க.
சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார் எனில், அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. இதில் உத்திராடம் 3 பாதங்களும், திருவோணம் 4 பாதங்களும், அவிட்டம் 2 பாதங்களும் உள்ளன.
மகரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் கால அளவு பின்வருமாறு:
உத்திராடம் 3 பாதங்கள் X 6 = 18 மணிநேரம்.
திருவோணம் 4 பாதங்கள் X 6 = 24 மணிநேரம்
அவிட்டம் 2 பாதங்கள் X 6 = 12 மணிநேரம்
இதில் உத்திராடம் என்பது மகத்தில் இருந்து 12 வது நட்சத்திரம். இதன் தாரை வகை அறிய 12/9= 1.3. இங்கே 1 ஈவு மற்றும் 3 மீதி. இதில் மூன்று என்பதே தாரை வகை. மூன்று விபத்துத்தாரை எனவே உத்திராடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் 18 மணிநேரம் அசுப பலன் இருக்கும்.
அடுத்து திருவோணம் இது 13 நட்சத்திரம் இதன் தாரைவகை 13/9 = 1.4. 1 ஈவு மீதி 4. 4 என்பது சேமத்துத்தாரை எனவே சந்திரன் திருவோணத்தில் சஞ்சரிக்கும் 24 மணிநேரம் நல்லபலன்கள் உண்டாகும்.
அடுத்து, அவிட்டம் இது 14 நட்சத்திரம், இதன் தாரைவகை 14/9=1.5. இங்கு 1 ஈவு, மீதி 5. இதில் ஐந்து என்பது பிரத்தயக்கு தாரை என அறிக. இதனால் சந்திரன் அவிட்டத்தில் சஞ்சரிக்கும் 12 மணிநேரம் அசுப பலன்.
இதன் மூலம் சந்திராஷ்டமம் என்பது 24 மணிநேரமும் ஜாதகரை பாதிப்பதில்லை எனவும், பாதிப்பு ஏற்படும் நட்சத்திர தாரை வரும் மணிநேரங்கள் அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அறிக.
இதுபோலவே ஜென்ம லக்னத்திற்கு, லக்னம் பெறும் சாரம் கொண்டு, தாரைபலம் கணித்து, கிரகங்களின் சாரம் கண்டு பலன் கூறலாம் என தெளிக. இது ஆய்வுக்குரியது.
இவ்வாறு சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திர பாதம் வைத்து தாராபலன் அறியலாம்.
இது ஜோதிடத்தின் மிக முக்கிய சூட்சமம். அதனால் இதனை குறிப்பெடுத்துக்கொள்ளுமாறு உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒருவரின் லக்ன சாரம் மற்றும் லக்னாதிபதி நின்ற சாரம் 3,5,7 தாரையாக இல்லை எனில் லக்னம் பலமுள்ளது எனலாம். இது போலவே கேந்திரம் மற்றும் திரிகோணத்திற்கு பார்க்கலாம்.


1. ஜென்ம தாரை-உறுதியும் வெற்றி தரும். ((ஜென்ம நட்சத்திரம்)
2. சம்பத்து தாரை-சர்வசம்பத்துகளை தரும்
3. விபத்து தாரை-அசம்பாவிதம் உண்டாகும்.

4. சேமத்தாரை-நலம் தரும்.
5. பிரத்தயக்கு தாரை-சிக்கல்கள் தரும்.
6. சாதக தாரை-நல்லகாரியம் செய்யலாம்.
7. வதைத்தாரை- துன்பம் தரும்.
8. மித்திர தாரை-தெய்வகாரியம் செய்யலாம்.
9. பரம மித்ர தாரை- சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.*எதிரிகள் தொல்லை, துன்பங்கள் அகற்றும் சரபேஸ்வரர்*

அசல தீபேஸ்வரர் கோவிலில், உள்ள சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும்.
சிவதலங்களில் பெரும்பாலும் சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களே அதிகம். ஆனால் சிவன் மேற்கு நோக்கியும், அன்னை கிழக்கு நோக்கியும் வீற்றிருக்கும் தலம் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அசல தீபேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலிக்கிறார். எனவே இந்தத் தலம் சோமாஸ்கந்தர் திருத்தலமாகவும் விளங்குகிறது.
இந்தக் கோவில் சிவன் சன்னிதியில் சிறப்பு கருவறை முன்பு உள்ள அசல தீபம் எப்போதும் ஆடாது, அசையாது இருக்கும். எனவே அசையாத தீபம் கொண்ட சிவன், ‘அசல தீபேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகச்சிறப்பாகும். திருவண்ணாமலை பரணி தீபத்திற்கு வித்திட்ட திருத்தலம் என்றும் கருதப்படுகிறது.
அசல தீபேஸ்வரர் கோவிலில், சரபேஸ்வரர் சன்னிதி வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும்.
வியாபார விருத்தி, உயர்பதவி, தொழில் மேன்மை, கல்வி அறிவு, வீடு யோகம், காரிய வெற்றி, குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு காலத்தில் எலுமிச்சம் பழ மாலை, செவ்வரளி பூ, வடை மாலை சாத்துதல், அன்னதானம் செய்தல், பால், தயிர், இளநீர் போன்ற பூஜைகள் மற்றும் ஹோமம் செய்வது சிறப்பானது.
சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் சரபர் 30-வது மூர்த்தம் ஆகும். இவரது பாதி சரீரம் விலங்கினங்களிலேயே பயங்கர சக்தி படைத்த யாளியாகவும், பாதி சரீரம் பறவைகளிலேயே மிக சக்தி படைத்த சரபட்சியாகவும் அமைந்திருக்கும்.
இவருக்கு அதிரசம் படைத்து தானம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்ல நட்பு, நல்ல குணங்கள் வளர்வதுடன், இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கும். ஞாயிறு சந்திர ஓரை பூஜையில் 4.30 மணி முதல் 6 மணி வரை பசும்பால் அபிஷேகம் செய்து வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சிக்கலாம். உடையாத அரிசி மணிகளை சந்தன காப்பில் பதித்து வழிபடலாம். வெண் பட்டு சாத்தி, தேங்காய் சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். இவ்வாறு செய்தால் மனதில் நிம்மதி உண்டாகும். வெண் குஷ்டம் குணமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஞாயிறு ராகு காலத்தில் சனி ஓரை சேருகின்ற போது, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சந்தன காப்பு அலங்காரத்தில், சந்தனத்தில் புணுகு, பன்னீர் கலந்த அபிஷேகம் செய்து வழிபட்டால், நம் மீதான வீண் பழிகள், இடையூறுகள் அகலும். மேலும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, துர்க்கா தேவி, நரசிம்மர் ஆகிய 4 பேரும் ஒருசேர சரபேஸ்வரர் உருவத்தில் அருள்பாலிப்பதால் இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜை பிரசித்தி பெற்றதாகும்.
நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும், பரமத்திவேலூரில் இருந்து கிழக்கில் 17 கிலோமீட்டர் தொலைவிலும், காட்டுப்புத்தூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், கரூர் மாவட்டம், வாங்கலில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூரில் இந்த தலம் அமைந்துள்ளது...

Tuesday, March 28, 2017

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால்,  மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால்,  மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.
தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை,
சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

சித்தர்கள் பற்றி ஆராய்பவர்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

குடும்ப அமைதி மற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்க

சதா சண்டை சச்சரவு, குடும்ப நபர்களிடையே ஒற்றுமையின்மை மற்றும் அமைதி இன்மை, வீட்டிற்குள் நுழைந்ததுமே எரிச்சல் வருதல் போன்றவை நீங்க, ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் ஆழி விதைகளை நிரப்பி தென் கிழக்கு பகுதியில் வைக்கவும். மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரிலோ அல்லது மரத்தடியிலோ, பறவைகளுக்கோ இட்டு விட்டு புதிதாக வைக்கலாம்-தேவை உள்ள வரை. குடும்பத்தில் அமைதி பரவ மிகுந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக முறை இது. புதன் அல்லது வெள்ளி கிழமை காலை 6-7 அல்லது மதியம் 1-2 மணிகளில் செய்யவும்.கோடி புண்ணியம் தரும் எள் தானம்

Raasi and Nakshatram Calculator

http://www.agasthiar.org/AUMzine/0019-rasi.htm#calc  

 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம் 

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

 

Agasthiar Mantra. Thought Purification Mantra.

http://www.agasthiar.org/agasthiar.htm  

 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம் 

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

 

Monday, March 27, 2017

லக்னம் கோட்சார பலன்கள் பார்ப்பது சரியா எது சரியானது ?

spiritualknot.com: வீட்டை துர்சக்திகிளிடம் இருந்து பாதுகாக்க

spiritualknot.com: வீட்டை துர்சக்திகிளிடம் இருந்து பாதுகாக்க: ஓம் நம சிவாய &&&&&&&&&&&&& வீட்டை துர்சக்திகிளிடம் இருந்து பாதுகாக்க ^^^^^^^^^^^^^...


************


spiritualknot.com: உங்கள் வீட்டை துர் சக்திகளிடம் இருந்து பாதுகாக்க: ஓம் நம சிவாய ********************** உங்கள் வீட்டை துர் சக்திகளிடம் இருந்து பாதுகாக்க *************************************************...

உங்கள் செல்வ செழிப்பை கண்டு பிறர் ஆச்சரியத்தில் மூழ்குவார்கள் .

spiritualknot.com: மகத்தான பண பொழிவை தரும் ரயில் தண்டவாள ஆணிகள்: ஓம் நம சிவாய &&&&&&&&&&&&& ********************************************************...

spiritualknot.com: அதிஷ்ட வாய்ப்பு தூபம்

spiritualknot.com: அதிஷ்ட வாய்ப்பு தூபம்: ஓம் நம சிவாய &&&&&&&&&&&&& அதிஷ்ட வாய்ப்பு தூபம் ***********************************...spiritualknot.com: பணத்தை வசியம் செய்ய தந்திர கட்டு

spiritualknot.com: பணத்தை வசியம் செய்ய தந்திர கட்டு: ஓம் நம சிவாய பணத்தை வசியம் செய்ய தந்திர கட்டு : *********************************************************** **************************...

spiritualknot.com: நம் வீட்டை சகல விதமான துர்சக்திகளிடம் ( பேய் , பிச...

spiritualknot.com: நம் வீட்டை சகல விதமான துர்சக்திகளிடம் ( பேய் , பிச...: ஓம் நம சிவாய நம் வீட்டை சகல விதமான துர்சக்திகளிடம் ( பேய் , பிசாசு , ஏவல் ,ஆவி ) இருந்து பாதுக்காக ************************************...

Sunday, March 26, 2017

எளிய அகஸ்திய தேவாரத் திரட்டு

http://www.kulaluravuthiagi.com/thirumurai.htm************************************************************************************************************************
ஸ்ரீஅகத்திய தேவாரத் திரட்டு பன்னிரு திருமுறைப் பாடல்கள்:-****************************************************

ஸ்ரீஅகத்தியர் தேவாரத் திரட்டு - பாகம் ஒன்று  :-
****************************************************

ஸ்ரீஅகத்திய தேவாரத் திரட்டு - பாகம் இரண்டு :-
****************************************************
ஸ்ரீஅகத்தியர் தேவாரத் திரட்டு - மூன்றாம் பாகம்:-****************************************************


திருச்சிற்றம்பலம்

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்