Tuesday, April 25, 2017

சித்தர்களின் குரல் செய்தி அவசியம் கேட்டு விட்டு யோசித்து பாருங்கள்

ஆன்மீக கேள்வி பதில் தொகுப்பு

சித்தர்களும் சைவமும் கூறும் பஞ்சபூத ரகசியம்

திருச்சி திருவானைக்கா மூலாதார இரகசியம்-சித்தர்கள் வழி

சித்தர்கள் கூறும் காசி இரகசியம்

சண்டிகேஸ்வரர் பற்றிய முழு விளக்கம்

சித்தர்கள் கூறும் பிரதோஷ ரகசியம்

யாரும் அறிந்திடாத கங்கைக்கொண்ட சோழபுரத்தின் சிறப்புகள்! | The Secrets Of...

உலக புகழ்பெற்ற அர்தநாரீஸ்வரரின் சிறப்புக்கள்! |

பித்ரு காரியத்திற்கு உகந்த தமிழகத்தின் திரிவேணி சங்கமம் |
http://www.shivatemples.com/knaadut/bhavani.php

***************************************

http://temple.dinamalar.com/New.php?id=612

***************************************


https://shaivam.org/siddhanta/sp/spt_p_nana.htm


********************************************************************************

பல நூற்றாண்டுகளாக வாழும் அதிசய பிறவிகள்! List Of 7 Immortals !

மாதர்பிறைக் கண்ணியானை_அப்பரின் அற்புதத் திருப்பதிகங்கள்_பா.சற்குருநாதன்

எளிய பரிகாரங்கள்

கடன் தோஷம் நீங்க!!!

எளிய பரிகாரங்களும் மிக பெரிய பலன்களும்...!

பயத்தை விரட்ட வழிபட வேண்டிய தெய்வம் எது ?

பைரவருக்கான பரிகாரமும் – தீரும் பிரச்சனைகளும்

‘ஹரே கிருஷ்ணா’ என்ற மந்திரத்தின் அர்த்தம் !!!


பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன ???

காலையில் செய்யும் இந்த பரிகாரங்கள் பண வரவை அதிகரிக்கும்

பாவம் போக்கும் லிங்கோத்பவ கால வழிபாடு !!!

அடி காண இயலாத ஆதி சிவன் !!!

கோமாதா வழிபாடு நீக்கும் தோஷங்கள்...!!!

துன்பங்களை சிதற வைக்கும் சிதறுகாய்...!!!

தட்டுப்பாடு இல்லாமல் சாப்பாடு கிடைக்கணுமா !!!

திருப்பதி கருவறைக்குள் நம் வேண்டுதல் மறந்து போகும் ரகசியம்

அட்சய திருதியை அன்று எதுவும் வாங்கலாம் !!!

பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம் சக்தி

கோவில் கலசமும் அதன் ரகசியங்கள்

கோவில் கருவறை ரகசியம்

முக்கிய தல விருட்சங்களை வணங்கும் பலன்...!!!

கிழக்கு திசைநோக்கி விளக்கு ஏற்றினால் என்ன நன்மை...!!!

பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கும் சொர்ண பைரவர்...!!!

விரைவில் பணம் சேர எளிய பரிகாரங்கள்!!!

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!

கோடான கோடி நன்றிகள்


http://ashtabairava.blogspot.in/

Sunday, April 23, 2017

Moondravathu Kan New - Gnani Brindavanar: How To Worship Sithar? [Epi-15]

Sorna Bairava Manthiram / Moondravathu kan / GnaniBirundavanar /சொர்ண பை...


பணம் நிறைய வர ஒரு யோசனை

கோடான கோடி நன்றிகள் ஐயா http://www.netrigun.com/2016/09/10/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/


********************************


********************************
மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள்.இவர்கள் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும்.இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.இந்த தெய்வீக ரகசியம் கடந்த 20 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்குத் தந்தருளியவர் புளியங்குடி சகஸ்ரவடுகர் அவர்கள்!!!
1.நமது முன் ஜன்ம வினைகள் நமது பிறந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.அந்த கடுமையான கர்மவினைகளே திருமணத் தாமதம்,படிப்புக்கேற்ற/திறமைக்கேற்ற/அனுபவத்திற்கேற்ற சம்பளம் கிடைக்காமை,குடும்ப ஒற்றுமையின்மை என ஏதாவது ஒரு குறையிருக்கும்.இந்தக் குறை நீங்கத்துவங்கும்.அதாவது ஒரே நேரத்தில் நமது கஷ்டங்கள் குறையும்;அப்படி குறையக் குறைய வருமானம் அதிகரிக்கும்.
2.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.
3.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
4.இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.
நாளை தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.நாளை ராகு காலம் மாலை 3.00 முதல் மாலை 4.30 வரை வருகிறது.செவ்வாய்க்கிழமை இல்லையா?
தமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் மீண்டும் ஒருமுறை:
1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.
3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.
4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.
5.சிதம்பரத்தில் இருக்கிறார்.
6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.
7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.
ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்தாலே,அடுத்த ஒரு மாதத்திற்குள் எதிர்பாராத (நியாயமான)வருமானம் கிடைக்கிறது அல்லது நீண்டகாலக் கடன் தீர்ந்துவிடுகிறது.டெஸ்ட் பண்ணிப்பார்க்கலாமா?


ஒலிகளின் சக்தி


கோடான கோடி நன்றிகள் ஐயாமந்திரங்களின் மாபெரும் சக்தி...
மந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்கள்.
ஆலய வழிபாட்டில் மிக, மிக முக்கியத்துவம்
வாய்ந்தது மந்திரங்கள். ஒவ்வொரு
கடவுளுக்கும், ஒவ்வொரு வகையான
மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்களை
தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து வழிபாடு செய்யும் போது கடவுள் மனம் மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை
கொடுப்பார். அதை விடுத்து ஆலயத்துக்கு சும்மா வெறுமனே சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்து
கொள்ளுங்கள். 
சரி... மந்திரம் என்றால் என்ன?
மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம்
கொடுப்பதுதான் மந்திரம். சுவாமிகளின் மூலமந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.
பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து
செல்லும்.
இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து
கொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து பலன் பெற்றனர். மந்திரங்களில் 7 கோடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள் சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம்
இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.
மந்திரங்கள் பல வகைப்படும். பிரணவ
மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர
மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள்,
வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக்
கொண்டே போகலாம்.
சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே
உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை
ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள
மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும். சில மந்திரங்கள் காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க வேண்டும். சில மந்திரங்கள் திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல்
மந்திரங்களை சொல்லக்கூடாது. இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்கவேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108
தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய
பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை
சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு
பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும் நிறைய பேர் என்னவோ... 
ஏதோ என நினைத்து பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு
ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே
விட்டு விடுகிறார்கள். சிலர் எல்லா
மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே
இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று நினைப்பார்கள்.
இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக,மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன. 
ஓம்கணபதி நமஹ, 
ஓம் நமசிவாய 
ஓம் நமோநாராயண, 
ஓம் சக்தி பராசக்தி, 
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா 
என்றெல்லாம் சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள். இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல
தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக
உச்சரிக்கலாம். இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.
வாழ்க வளமுடன் என்று சொல்வது கூட
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக
கருதப்படுகிறது. திருமந்திரம், பெரிய
புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை. பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக
புதைந்து கிடைப்பதை காணலாம். செல்வம் வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா? நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் தமிழ் வேத மந்திரங்கள் உள்ளன. காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே சிவ... சிவ என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு பிடித்த சாமி பெயரை சொல்லலாம். தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆலய சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப் பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய்
பஞ்சாக பறந்து விடும். சிலருக்கு சனிக்கிரக பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடிய
பதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால் பயன் அடையலாம்.
அது போல திருஞான சம்பந்தர்
திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய
பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய
தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.
திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில்
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை பெற முடியும். அது போல அவர் திருமருகல் எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே திருமணம் கை கூடி விடும். இப்படி நோய்கள் நீங்கவும், கிரக தோஷங்கள் விலகவும் பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.
அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு
ஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள்
கிடைக்கும். பதிகங்களை படிப்பதால் எப்படி பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். மந்திரங்கள், பதிகங்களில் உள்ள ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள்,
நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை
பெற்றுள்ளன. இந்த அதிர்வுகள் ஒலி
சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும் போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு பலனைப் பெற்றுத் தரும்.
நோய் தீர்க்கும் தன்வந்த்ரி ஸ்லோகத்தை 27 தடவை சொன்னால் இத்தகைய பலன்களை பெற முடியும். ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும் உடனே நீங்கி விடும். ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.
அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால் சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்பாள் சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண அஷ்டகத்தை சொல்லலாம்.
மந்திரங்கள், பதிகங்களை படிக்கும் போதோ, சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை விட மனதுக்குள் சொல்வது நல்லது. நமது புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள்
உள்ளன. திருமந்திரம், கந்தர் அணுபூதி,
கந்தகஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள் மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச் சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து கொண்டு உள்ளம் உருகப்பாடினால் நிம்மதியான வாழ்வு பெறலாம். அதிலும் ஆலயங்களில் பாடல்களை பாடும் போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்ட
ஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து
ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில், குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100
சதவீதம் பலன் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம். சில
மந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள் செய்யும் போது உச்சரிக்க வேண்டும். உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது "ஓம் சிவாய நம" என்று சொல்லிக் கொண்டே பூசவேண்டும்.
அது போல ஒரு செயலை தொடங்கும் போது "ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம்" எனும் மந்திர வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால் நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை இல்லாமல் நிறைவேறும். "ஸ்ரீ விஸ்வநாதாஷ்டகம்" எனும் 8 சுலோகங்கள் மந்திர வலிமை பெற்றவை. இந்த சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான் சன்னதியில் நின்று கூறி வழிபட்டால் வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது. அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு சென்றால் மறக்காமல் "ஆதிசங்கரர் அருளிய கவுரி சத்கம்" பாட வேண்டும்.
இந்த மந்திரம் நிம்மதியான வாழ்வைத்
தேடித்தரும். வசிஷ்ட முனிவர் சிவநாம
மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த
மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி விடும். கந்தபுராணத்தில் வரும் சங்கர சமஹிதை மந்திரத்தை சிவாலயத்தில் அமர்ந்து படித்தால் எல்லாவித சுக போகங்களும் தேடி வரும். அது போல ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில் அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா சித்திகளைப் பெறலாம்.
ப்ருதி வீஸ்வராய ஸ்தோத்திரம் எனும்
மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று உச்சரித்தால் குடும்பத்தில் அமைதி
உண்டாகும். துர்கா தேவி முன்பு நின்று
ஸ்ரீதுர்கா கவசம் பாடினால் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீசுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால்
முருகன் அருள் பெறலாம். ஸ்ரீமகாலட்சுமி
சன்னதி முன்பு நின்று அவருக்குரிய அஷ்டக
மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார
நிலை உயரும். குங்கும பஞ்சதசி என்றொரு மந்திரம் உள்ளது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில்
இதை சிறப்பாக செய்வார்கள். இந்த
பஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இப்படி ஒவ்வொரு சன்னதிலும் உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன. அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். சகல கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை சொல்ல வேண்டும்.
இத்தகைய மந்திரங்களில் "காயத்ரி மந்திரம்" உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று போற்றப்படுகிறது. அது போல "பிரணவ மந்திரம்" (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது. சூரியனில் இருந்து வெளியாகும் ஓசை "ஓம்" என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அனைத்து மதங்களிலும் மந்திர உச்சாடனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர். இஸ்லாத்தில் ஓதுவது, கிருஸ்துவத்தில் ஜெபம் செய்வது, என மட்டுமல்லாமல் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே ஹிந்து மத இதிகாசங்களிலிருந்தும், புராணங்களில் இருந்தும் மந்திரங்களின் மகத்துவத்தை ஹிந்துக்கள் புரிந்து, உணர்ந்து உலகிற்கு அளித்துள்ளது இம் மானுடப்பிறப்பு பயன் பெறும் அளப்பறியா மகத்துவம். 
நன்றி...

ஆன்மீக எக்ஸ்பிரஸ்: உங்கள் பிரச்சனைகள் விரைவாக தீர இதோ ஒரு எளிய வழிமுற...

ஆன்மீக எக்ஸ்பிரஸ்: உங்கள் பிரச்சனைகள் விரைவாக தீர இதோ ஒரு எளிய வழிமுற...: வணக்கங்கள், அன்பான தமிழ் மக்களே தங்கள் அனைவர்க்கும் உள்ள பிரச்சினைகள் நீங்கவும், இறை அருள் கிடைக்கவும் இதோ ஒரு அறிய வாய்ப்பு. இதை என் குரு...

கடன்கள் தீர...பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க வாங்கும் பணம் பட்டும் கடன் அல்ல. அப்படியெனில் மற்ற கடன்கள் என்ன என்று கேட்கதொன்றுதா....?

நமுடன் வாழ்பவர், நம்மையே ஆதாரமாக நம்பி வாழும் நமது பெற்றோர், மனைவி, குழந்தைகள், முன்னோர்கள்,நம்மை வாழவைத்த தெய்வம் என அனைவருக்கும் கடன்பட்டிருக்கிறோம்.நாம் தீர்க்கவேண்டிய கடன்களே நமக்கு பணப் பற்றாக்குறையை உண்டாக்குகிறது.நோய் ஏற்ப்பட பல காரணங்கள் உள்ளன, கடனும் அதில் ஒன்று.

சரி மேல சொன்ன எல்லா கடன்களும் தீர என்ன பரிகாரம் என்று இப்பொழுது பார்ப்போம்...

  • தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் 6,8 மடங்காக,                         (6,8,12,16,18,32,36,64,108 ) முறை தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
  • கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது.
  • முகிகியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.
  • இது தவிர மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் தினமும் காலை, மாலை பாராயணம் செய்தால் இன்னும் நல்லது.


எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு.* அனைவரும் எல்லா வளங்களும் பெற இறைவனை வேண்டுவோமாக *கோடான கோடி நன்றிகள்       :-    https://wwwsivamsakthivel.blogspot.in/


மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும்.

ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் வேண்டி கொண்டு, அந்த பேப்பரை சுருட்டி அதில் கருப்பு நிற நூலால் லேசாக கட்டி வைக்கவும்.

பின்பு கருப்பு நிற மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, மனதினுள் குறைகள் அனைத்தும் அகல வேண்டும் என கருப்பசாமியை நினைத்து வேண்டுதல் வைத்து, அதை மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி ஏறிய விடவும். எரிந்து முடிந்த பின் அனைத்தையும் அகற்றி விடலாம்.

சிறிய அளவில் உள்ள குறைகள் ஒரே வாரத்தில் நீங்குவதை அனுபவத்தில் காணலாம். பெரிய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு 8 வாரங்கள் தொடர்ந்து செய்யவும். நேரம், திசை போன்றவை பார்க்க தேவை இல்லை. பலர் செய்து வெற்றி கண்ட சூட்சுமம் நிறைந்த பரிகாரம் இது.


Wednesday, April 19, 2017

யோக நிலையில் சிவன்

யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.. எந்தக் கோயிலிலும் இது போன்ற ஒரு காட்சியைக் கண்டதில்லை

                                                                        
கடம்பனேஸ்வரர் கோயில்.
பராந்தக சோழன் காலம்.
எறும்பூர்.


http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=24935

************************************************************************************************************************************************************

இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள்! - Ta...

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

Tuesday, April 18, 2017

money || தன வசியம்ஆருத்ரா தரிசனத்தின் பெருமை !

திருமணம் இனிதே நடந்தேறும் பெருமண திருநல்லூர் கோவில்

சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுவதால் (தாமிர நிறம், இளம் சிவப்பு, உருக்கிய தங்க நிறம், நவரத்தின பச்சை, பிறகு இன்ன நிறமென்றே கூற முடியாத ஒரு தோற்றம்) பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வேண்டிக் கொள்ளலாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்த பாண்டவர்களின் தாய் குந்தி தேவிக்கு ஏற்பட்ட தோஷம், ஏழுகடல் தீர்த்தமும் ஒன்றாக கலந்த "சப்தசாகர தீர்த்தம்" எனும் இத்தல தீர்த்தத்தில் ஒரு மாசிமக நாளில் நீராடி தன் தோஷம் நீங்கப்பெற்றாள். மகாமக குளத்தில் நீராடிய பலன் இத்தல தீர்த்தத்தில் நீராடினால் கிடைக்கும். குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு உள்ளது. இறைவன் சுயம்பு மூர்த்தியாவர். அகத்தியர் சிவனின் திருமணக்கோலம் கண்ட தலம். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில். நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் முக்தி பெற்ற தலம். இத்தலமுருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். இத்தல விருட்சமான மிக பழமையான வில்வ மரத்தை "ஆதிமரம்" என அழைக்கின்றனர். பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் உள்ளது. மூலவருக்கு அருகில் ஒரு சிறிய லிங்கம் “அகத்திய லிங்கம்” எனப்படுகிறது. ஒரே ஆவுடையார் மீது இரண்டு பாணங்கள் இருப்பது சிறப்பு. அஷ்டபுஜ காளி சந்நிதியும் சிறப்பு வாய்ந்தது. கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் பிரசவம் ஆக காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கின்றது. ************************************************************************************************ இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள் பின்வருமாறு: 1. திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் * * * * * தேவாரப் பாடல் பெற்ற தலம் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது 2. பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 3. பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் - 108 சிவலிங்க கோயில் பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 4. கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் - திவ்ய தேசம் பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 5. திருக்கூடலூர் - ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் – திவ்ய தேசம் கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. 6. வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர் திருக்கோயில் - தேவாரப் பாடல் பெற்ற தலம் திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. 7. திங்களூர் - கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் – சந்திரன் ஸ்தலம் வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 8. திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் – தேவாரப் பாடல் பெற்ற தலம் திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 9. திருவையாறு - ஐயராப்பன் திருக்கோயில் – தேவாரப் பாடல் பெற்ற தலம் திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. * திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும். இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன. நம் தமிழ்நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம். கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம். 

Saturday, April 15, 2017

வாருங்கள் உலகை ஆளலாம்

சென்னிமலையின் சிறப்புகள்:

கோடான கோடி நன்றிகள் :-  https://kaumarapayanam.blogspot.in/******************************************************************************************************************************************************************ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு எனும் கிராமத்தில் 

மலைக்காரன் தோட்டத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞான ஸ்கந்த 

மூர்த்தியின் ஜீவ நாடியில் சென்னிமலையில் முருகப்பெருமான் தினசரி 

அதிகாலையில் மலை உச்சியில் மயில் மேல் வந்து ஓய்வு எடுக்கிறார் 

என்று சொல்லப்பட்டுள்ளதால் முருக பக்தர்கள் காலை வேளையில் 

பின்னாக்கு சித்தர் கோவிலுக்கு அருகில் அமைதியாக தியானம் செய்தால் 

இதை உணர முடியும் என தெரிவித்துக் கொள்கிறோம். முருகனே 

வந்து ஓய்வெடுக்கும் மலை என்பதால் வீடு சம்பந்தமான எல்லா 

கோரிக்கைகளையும் சென்னிமலை முருகனை வழிபாடு செய்வதால் 

அடைய முடியும் என்றும் ஜீவ நாடியில் சொல்லப்பட்டுள்ளது.

சென்னிமலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் 

இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஈரோட்டிலிருந்து 26 கி.மீ. தூரத்திலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ. 

தூரத்திலும் அமைந்துள்ளது சென்னிமலை. இங்கிருந்து எட்டு கி.மீ தூரத்தில் 

ஈங்கூர் இரயில் நிலையம் உள்ளது.

மலைக்கோவில்

கொங்கு நாட்டில் பழம் பெருமை பெற்றது சிரகிரி என்றும், சென்னியங்கிரி 

என்றும் சிறப்புப் பெயர் பெற்ற சென்னிமலை முருகன் கோயில். பழங்காலத்தில் 

கொங்கு மண்டலம் 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதி 

பூந்துறை நாடு. அதிலுள்ளது தான் சென்னிமலை. வடமொழிப் பெயர் சிரகிரி 

என்பது. தேவராய சுவாமிகளும் இத்தலத்தைப் பாடிய அருணகிரி நாதரும் 

சிவகிரி என்று குறிப்பிட்டுள்ளனர்.

தலபுராணம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலை என்னும் நகரில் 

இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 

சுமார் 1749 அடி உயரத்தில் பசுமை நிறைந்த மரங்களாலும், மூலிகை குணம் 

கொண்ட செடி கொடிகளாலும் சூழப்பட்ட அழகிய மலையில் அமைந்துள்ளது. 

மலை 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அடிவாரத்திலிருந்து 1320 படிகளைக் 

கடந்து ஆலயத்தை அடையலாம். கோவில் நிர்வாகத்தில் கீழிருந்து மலைக்குச்

செல்ல 4 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை அமைத்து வாகன (பேருந்து) வசதி 

செய்துள்ளனர்.

காஞ்சிமா நதி என்னும் நொய்யல் ஆறு ஆலயத்தின் தெற்குப் பகுதியில் 

ஓடுகிறது. ஆண்டவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறம் புளியடி 

விநாயகர் சந்நிதியும், அடுத்து கோயிலின் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை 

ஆண்டவருக்கு வலது பாகத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி 

அம்மன் சந்நிதிகளும், இடது பாகம் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி 

அம்மன் சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளன. அம்மன் சந்நிதியிலிருந்து 

பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் சித்தர் மகான்(பின் நாக்குச் 

சித்தர்) புண்ணாக்குச் சித்தர் கோயில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாக 

அமைந்துள்ளது. இதன் அருகே சரவண மாமுனிவரின் சமாதிக் கோயிலும் 

உள்ளது. இந்தக் கோயில் அருகே மிகப் பழமை வாய்ந்த குகை ஒன்றும் 

காணப்படுகிறது.

வரலாற்று பேரதிசயம்!!!

சென்ற 12-08-1984 அன்று இரட்டைக் காளை மாட்டுவண்டி புறப்பட்டுத் 

தங்கு தடையின்றி 1320 படிக்கட்டுகளையும் தாண்டி மலைக் கோயிலை 

வந்தடைந்தது. இந்தப் பேரதிசயம் நடைபெறுவதற்குப் பல மாதங்களுக்கு 

முன்பே வேட்டுவ பாளையம் பூசாரியார் வழித்தோன்றல் பொன்னுசாமித் 

தம்பிரான் மாட்டுவண்டி படிக்கட்டு வழியாக குறிப்பிட்ட நாளில் மலையேறப் 

போகிறது என்பதை தன் அருள் வாக்கு மூலம் தெரிவித்தார். இலட்சக் கணக்கான 

மக்கள் திரண்டு வந்து இந்த அதிசயக் காட்சியினைக் கண்டு களித்தனர்.

கந்தர் சஷ்டி கவசம்

உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள் தோறும் 

மனமுருகிப் பாராயணம் செய்யப்படும் கந்தர் சஷ்டி கவசம் இயற்றியவர் 

பாலன் தேவராய சுவாமிகள். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்ய வேண்டி 

முருகனை நினைந்து வேண்டியபோது, அரங்கேற்றம் செய்ய உரிய ஆலயம் 

சென்னிமலை ஆண்டவர் திருக்கோவில் தான் என்பதை அருளாணையால் 

உணர்ந்து, சென்னிமலைத் திருக்கோவிலில் சீரோடும் சிறப்போடும் கவசத்தை 

அரங்கேறினார். அன்று தொட்டு பல்லாயிரம் முருகபக்தர்கள் பாராயணம் செய்து 

வரும் அக்கவசத்தில் வருகின்ற “சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக” என்னும் அடி

இத்தலத்தைக் குறிக்கும்.

சிரம்-சென்னி, கிரி-மலை.

மூலவர்

மூலவர் சென்னிமலை நாதன் நடு நாயக மூர்த்தியாக செவ்வாய்க் 

கிரகமாகஅமைந்திருக்க, மூலவரைச் சுற்றிலும் நவகிரகங்களின் எட்டு 

நாயகர்களும் அழகுடன் அமைந்து அருள் பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை 

வலம் வந்து வணங்கினாலே நவக் கிரகங்களையும் வணங்கி வழிபட்ட 

பலன் உண்டு. முருகன் சந்நிக்குப் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக மேலே 

சென்றால் அங்கு வள்ளி, தெய்வானை இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி 

என்ற பெயர்களுடன் சென்னிமலையாண்டவரைத் திருமணம் செய்யத் 

தவமிருந்து இறைவனை அடைந்து அங்கேயே தனிப்பெருங்கோவில் கொண்டு 

பக்தர்களை அருள்பாலிக்கிறார்கள். அருள் மிகு வள்ளி மற்றும் தெய்வானை திரு 

உருவங்களும் ஒரே கல்லில் அமைக்கப் பட்டுள்ளது.

தனிச்சிறப்பு

சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய 

காரியங்களுக்கு திருக்கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய 

பொதி காளைகள் மூலம் தினமும் அடிவாரத்திலிருந்து திருமஞ்சனத் தீர்த்தம் 

மலைக்குக் கொண்டு செல்லும் சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத 

தனிச்சிறப்பு.

மழையில்லாத வறட்சியான கோடை நாட்களில் கூட மலைக் கோயிலின் 

தென்புறம் அமைந்துள்ள விநாயகர் முன்புபொங்கி வழிந்தோடும் மாமாங்க 

தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பு வாய்ந்தது. பட்சி தீர்த்தத்தில் 

இரும்புச்சத்து இருப்பதால் அதில் நீராடுவோர் தோல் வியாதிகள் நீங்கப் 

பெறுகின்றனர். இம்மலையில் வெண்சாரை, வெண் தவளை, கரநொச்சி முதலிய 

சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உடற்பிணி நீங்க வேண்டி பல தலங்கள் சென்று வழிபட்டு இத்தலத்தை 

வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி நோய் நீங்கப் பெற்றான் 

சோழ மன்னனான சிவாலயச் சோழன். அவன் தான் சென்னிமலைக் கோவிலை 

அமைத்ததாகக் கூறப்படுகிறது.

பக்தர்கள் புதிய வீடுகள் கட்டவும், தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம்

குறித்தும், விவசாய பூமிகள் வாங்குவது, விற்பது, மற்றும் கிணறு

வெட்டுதல், ஆழ்குழாய்க் கிணறு தோண்டுதல், புதிய வியாபாரங்கள் செய்ய 

கூட்டு சேர்தல், சேர்த்தல், புதியதாகத் தொழில் துவங்குதல், வியாதியின் 

சிகிச்சைக்காக மருத்துவ மனை செல்லுதல் முதலான அனைத்துமே முடிவு 

செய்ய சென்னிமலை ஆண்டவருக்கு அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்தரவு 

கேட்டு நல்ல உத்தரவு கிடைத்தபின் மன நிறைவோடு செயல்படுவது 

தொன்று தொட்டு நடந்து வரும் மிகப் பெரிய அற்புதமாகும். சிரசுப்பூ 

உத்தரவு நல்லபடியாகக் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் 

தவிர்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

***************************************************************************************************************************************************************************************************************

கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை
***************************************************************************************************************************************************************************************************************