Wednesday, May 31, 2017

பலன் தரும் பதிகங்கள்

ஓம் நமசிவாய மந்திரம் திருவைந்தெழுத்து


ஓம் நமசிவாய மந்திரம்

திருவைந்தெழுத்து

திருவைந்தெழுத்தை ஓதி உணர்ந்து இன்புறுவதற்கு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சுவோமாக
கு.சுந்தரமூர்த்தி
திருவண்ணாமலை 1976 கும்பாபிஷேக மலரிலிருந்து தொகுத்தது
உயிர்கள் அனைத்தும் இன்பத்தையே விரும்புகின்றன. அவ்வின்பத்தை அருளாளர்கள் இருவகப்படுத்தியுள்ளனர். உலகியல் நுகர்வு கொண்டு ஒரு காலத்தில் அடைகின்ற இன்பம், பிரிதொரு காலத்தில் உவர்ப்பாக மாறி விடுகின்றது. எனவே இது அழியத் தக்கது என அறிய முடிகின்றது. இதனைச் சிற்றின்பம் என்பர். திருவருள் நுகர்வு கொண்டு அடைகின்ற இன்பம் எப்பொழுதும் இன்பமாய் விளங்குகின்றது. இது எக்காலத்தும் உவர்ப்பதில்லை. இதனைப் பேரின்பம் என்பர். “இன்பம் இடையறாது ஈண்டும்”, பேரா இயற்கை தரும்”, இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என வரும் திருவாக்குகள் எல்லாம் இவ்வின்பத்தையே குறிப்பனவாகும்.
இத்தகைய பேரின்பத்தைத் தருதற்குரிய ஒரே மருந்து திருவைந்தெழுத்தாகும். “வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித் தீய பிறவி நோய் தீர்க்குமே” என நக்கீரர் குறிப்பர். இத்திருவைந்தெழுத்து இறைவனுடைய திருநாமம் ஆகும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் எழுந்தருளுவிக்கப் பெற்றிருக்கும் திருமேனிக்கு ஒவ்வொரு நாமம் உண்டு. அண்ணாமலையார் என்பர், செஞ்சடையப்பர் என்பர், வைத்தியநாதன் என்பர். இப்பெயர்கள் அத்தல மூர்த்திகளுக்குரிய சிறப்புப் பெயர்களாகும். இவ்வனைத்து உருவங்களுக்கும் மூல காரணமாய் நிற்கும் மூர்த்தியைக் குறிக்கும் திருப்பெயர் திருவைந்தெழுத்தாகும்.
“திருநாமம் ஐந்தெழுத்தும் செப்பாராகில்”
“எண்ணிலென் உன்திருநாமத்து எழுந்தஞ்சும்”
என வரும் திருவாக்குகள் இவ்வுண்மையை விளக்கும். இறைவனுடைய திருநாமமாக விளங்கும் இத்திருவைந்தெழுத்து அப்பெருமானுடைய திருவுருவாகவும் விளங்குகின்றது எனக் கூறும் ஞானநூல்.
ஆடும்படிக் கேணல் லம்பலத்தா னையனே
நாடும் திருவடியி லேநகரம் – கூடம்
மகர முதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்
சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகர மபயகரம் – பார்க்கிலிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கு மகரமது தான்
எனவரும் உண்மை விளக்கத் திருப்பாடல்கள் இறைவனுடைய திருமேனியில் திருவைந்தெழுத்து அமைந்திருக்குமாற்றை விளக்கும்.
திருவைந்தெழுத்து ஓதுவார்தம் பக்குவத்திற்கேற்ப ஐந்து வகையாகப் பிரித்துப் பேசப்பட்டுள்ளது. அவையாவன
1. ஸ்தூல பஞ்சாட்சரம் – நமசிவாய
2. சூக்கும பஞ்சாட்சரம் – சிவாயநம
3. காரண பஞ்சாட்சரம் – சிவாயசிவ
4. மகா காரண பஞ்சாட்சரம் – சிவ
5. மகா மனு – சி
இவ்வகையில் முன்னைய இரண்டுமே திருமுறைகளிலும், ஞானநூல்களிலும் மிகுதியாகப் பேசப் பெற்றுள்ளன. பின்னைய மூன்றும் மிகவும் பக்குவம் பெற்றவர்கள் குருவருள் வழிநின்று உணர்ந்து அனுபவிக்கத் தக்கனவாகும். முன்னையதான ஸ்தூல பஞ்சாட்சரம் இம்மை இன்பம் பெற வேண்டுவோர் ஓதத்தக்கது என்றும், சூக்கும பஞ்சாட்சரம் வீடுபேறு வேண்டுவோர் ஓதத் தக்கது என்றும் ஞானநூல் வரையறை செய்கின்றன.
மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின்
சிவமுதலே யாமாறு சேருமேற் றீரும்
பவமிதுநீ யோதும் படி
எனவரும் திருவருட் பயன் காண்க. திருவைந்தெழுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்பதாகும். சிகரம் சிவத்தையும், வகரம் அருளையும், யகரம் உயிரையும், நகரம் மறைப்பையும் (திரோத மலம்) மகரம் ஆணவமலத்தையும் குறிக்கும். எனவே இத்திருவைந்தெழுத்தில் உயிர் (ய) இடையில் நிற்கின்றது. ஒரு மருங்கில் சிவமும். பிறிதொரு மருங்கில் மலமும் நிற்க இவ்வுயிர், தான் சார்ந்ததன் வயப்பட்டு நிற்கும் தன்மை அறியத் தக்கதாகும்.
ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞான நடந் தானடுவே நாடு
எனவரும் திருவருட்பயன் இவ்வுண்மையை அறிவுறுத்தி உயிர் சாரவேண்டிய பொருள் எது என்பதையும் குறிப்பாக அறிவுறுத்துகின்றது. குருவருள் வழிநின்று இவ்வுண்மையை உணர்ந்து ஓதுவார், தான் ஓதியதின் பயனாகச் சிவமாம் பெருந்தன்மையை அடைவர்.
நாம் ஒழிந்து
சிவமான வா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ
என்னும் அருள் அனுபவமும் காண்க.
திருவைந் தெழுத்தை வாயால் ஒலித்தலினும் மனத்தால் உன்னுதலே தக்கதாகும்.
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ வாய தெளிவினுள்ளார்கள்
சிவசிவ வாகுந் திருவருளாமே
என வரும் திருமந்திரம் இவ்வுண்மையை விளக்கும்
திருமுறைகளும், சாத்திரங்களும் போற்றிக் கூறுவதெல்லாம் திருவைந்தெழுத்தின் பெருமையே ஆகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்களிலும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் ஒவ்வொரு பதிகங்களிலும் திருவைந்தெழுந்தின் பெருமையை அருளியுள்ளார்கள். மாணிக்கவாசகர் சிவபுராணாத்துள் இத்திருவந்தெழுத்தை முன் வைத்து வாழ்த்தி, இதுவே உயிர்க்கு ஊதியம் எனத்திருக்கோவையாரின் இறுதிப் பாடலில் உணர்த்தியிருப்பது இதயத்தில் எண்ணுதற்குரியதாகும். மணிவாசகர் இத்திருவைந்தெழுத்தை ஓதுவதற்குத் தாம் செய்திருக்கும் தவத்தையும், இத்திருவைந்தெழுத்தை ஓதப்பெற்றதால் தாம் பெற்ற பயனையும் நெகிழ்ந்தும், குழைந்தும் கூறியருளிய திருவாக்குப் பன்முறையும் நினைந்து நினைந்து இன்புறத் தக்கதாகும்.
நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் னமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனது உள்ளம்
புகுந்து அடியேற் கருள் செய்தான்
ஊனாரு முயிர்வாழ்க்.கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே
இத்திருப்பாடலைப் படிக்கும் தொறும் ஒரு பேரின்பம் உள்ளத்து ஊறிக் கொண்டேயிருக்கும். கருவூர்த்தேவர் திருவைந்தெழுத்தின் சொற்பாதத்தை உள் வைத்து உள்ளம் அள்ளுறும் தொண்டருக்கு எண்திசைக் கனகம், பற்பதக்குவை, பைம்பொன் மாளிகை, பவளவாயவர் இன்பம், கற்பகப் பொழில் ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பர். பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்துள் 137 பாடல்களால் இதன் பெருமை விரிந்துரைக்கப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறையுள் பட்டினத்தடிகள் “நித்தம் நித்தம் தேறும் பொருள் திருவைந் தெழுத்தும், திருநீறும், கண்டிகையும்” என்பர். பன்னிரெண்டாம் திருமுறையுள் சேக்கிழார் திருவைந்தெழுத்தைக் கருத்தின் பயனாகக் கொள்ள வேண்டும் என்றும், “ஞான மெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சியாச் சொலாம்” என்றும், “ஆதி மந்திரம் அஞ்செழுத்து” என்றும் அருளிச் சிறப்பிப்பார்.
அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தெ ஆதிபுராணம் அனைத்தும் – அஞ்செழுத்தெ
மானந்த தாண்டவமும் யாவைக்கும் அப்பாலா
மோனந்தா மாமுத்தி யும்
எனக் சிறப்பிக்கும் சாந்திரம்.
இத்தகைய திருவைந்தெழுத்தை ஓதி உணர்ந்து இன்புறுதற்கு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சு வோமாக.
நன்றி – கோயில் கும்பாபிஷேக மலர் 2015

தந்திர யோகம்!

எமனை விரட்டும் நமசிவாய மந்திரம் ந.ச.நடராசன்

கோடான கோடி நன்றிகள் :-


http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8335768.ece
சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.
சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
“ வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே “ என திருஞான சம்பந்தரும்,
“ கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே “ என திருநாவுக்கரசரும்,
“ நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும்
நா நமசிவாயவே” என சுந்தரரும் கூறியுள்ளனர்.
மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.
ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே
என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.
மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.
“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.
சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். ‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும், ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும். ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும், ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும், ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.
சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம். ‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே. முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.
எப்போது ஓதலாம்?
எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.
குழந்தைகளுக்குப் பெயர்
நாம் அடிக்கடி நமசிவாய மந்திரத்தைக் கூறவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். அதாவது மழலைகளுக்கு நமசிவாய என்ற பெயரைச் சூட்டி அப்பெயரை உச்சரிப்பதன் மூலம் நம்மையறியாமல் சிவ மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சிவனருள் கிடைக்க வழி செய்தனர்.
நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

Tuesday, May 30, 2017

காரைக்கால் அம்மையார்

சித்தபுருஷர் போகர் அருளிய மகாமந்திரம் - ஞானிபிருந்தாவனர்/Bohar Mahamant...

நாம் ஏற்றும் விளக்கில் உள்ள பஞ்ச பூதங்கள் | Five Elements in Dippam

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலின் சிறப்பு | சிறப்பான கோவில்களில் யாரு...

இராமயணம் நமது உடம்பிலே ஓடுகின்றது ஒரு சிறு கதை May 23, 2017 2:58 PM

தசவாயுக்கள் மற்றும் நமசிவய பஞ்சபூதம் இருக்கும் இடம் May 23, 2017 5:57 PM

உயர் வள்ளுவம்

Wednesday, May 24, 2017

*குளிக்கும் முறைகளில் உள்ள அபூர்வ ரகசியங்கள்*


குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.
(கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.
*குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள்.*
*அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.*
*அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.* உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.
நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.
அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.
உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.
*பிறருடன் வாய்_திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.*
மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.
தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை. அதை உணரவேண்டும்.
குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.
ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது.

Monday, May 15, 2017

Thevaram Thirumurai song lyrics with Tamil

அழைத்தால் போதும் உடனே ஓடி வந்தருளும் தெய்வம்

பெண்களும் பருவமும் ருது சாந்தி பரிகாரங்கள்

மூன்று திருமகள் சக்திகள் பொலியும் முத்தான திருத்தலம்

அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம்

Vayanamasi Shiva mantra 108x - Siddha Yogi Gnani Birundavanar cures Dise...

Thursday, May 4, 2017

தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறா எதற்காக வளர்க்கபடுகிறது ????

1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது.
2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும்.
3. கரையான் வராது அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும்.
4. கற்சிற்பங்களை சேதப்படுத்தும் சிற்றுண்டிகள் வராது. மீறி வந்தால் அதுவும் புறாக்களுக்கு இரையாகி விடும்.
5. வவ்வால் உள்ளே வராது, ஆந்தையும் உள்ளே வராது புறாக்கள் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டிவிடும்.
6. புறாக்கள் எழுப்பப்படும் ஓசையானது நோயாலிகளை குணப்படுத்தும். கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு தரவல்லது.
நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் , வேற்று நாட்டவரை எண்ணி வியப்படைவதை விடுத்து, நமது மூதாதையர்கள் வழங்கிய பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!!