Tuesday, August 29, 2017

பரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய் தீபம் ஏற்றுவதே..!!!

தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.
மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.
இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.

கோடான கோடி நன்றிகள்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


Sunday, August 27, 2017

அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா?

கோடான கோடி நன்றிகள்http://hindusamayams.blogspot.com/2014/12/8.html"அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா?
மகளுக்கு செவ்வாய்தோஷம், மகனுக்கு ஏழரைச் சனி என்று வீண் அச்சத்தால் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா?
எடுத்ததற்கெல்லாம் சகுனம், அபசகுனம், இராகுகாலம் பார்த்துக் கொண்டிருப்பவரா நீங்கள்?
"வீட்டில் வாஸ்து தோஷமாம்..அங்க இடிச்சுக்கட்டணுமாம்..."
"பெயரில் அதிர்ஷ்டமில்லையாம் பெயரை மாற்றணுமாம்"
யார் யாரோ சொல்லும் கதையெல்லாம் கேட்டு இப்படி இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறீர்களா?
கவலையை விடுங்கள்...உங்களுக்கான வழி தான் இங்கு சொல்லப்படபோகிறது!
என்னடா, பக்தி ஸ்பெஷல், சக்தி விகடன் போல ஆரம்பிக்குது..ஏதாவது கோயிலுக்கு போகச் சொல்றாங்களான்னு நீங்கள் கேட்பது புரிகிறது 
சோதிடம், வாஸ்து, காலம் இது எல்லாவற்றையும் விஞ்சிய ஒரு பொருளை நீங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள்...

அது! கடவுள்!!
கடவுளை விஞ்சி, நம்மை, என்ன சக்தி, என்னதான் செய்துவிடும்? அவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்..
தோஷம், கிரகம், நாள் கோள் எதுவுமே உங்களை ஒன்றுமே செய்துவிடாது!
அவை எல்லாம் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை...
அப்படியிருக்க சிவனடியாரான நாம் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை!
தோஷ பரிகாரம், சோதிடம் பார்த்தல், பரிகாரத்தலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்லுதல் இதெல்லாவற்றையும் இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!
மிக இலகுவான வழிமுறையைக் காட்டித் தந்திருக்கிறார்கள் ஆன்றோர்கள்...எதற்காக வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதிக்கும் பணத்தை வீண்செலவு செய்யவேண்டும்? இனிச் சொல்லப்படுவதை முழுமனதோடு சிலநாட்கள் செய்துபாருங்கள்..உங்களில் மாற்றம் ஏற்படுவது உங்களுக்கே புரியும்!
நாளும் கோளும் அடியவர்களை ஒன்றுமே செய்யாது என்று அப்பர்சுவாமிகளிடம், ஞானசம்பந்தப்பெருமான பாடிய அழகான பதிகம் உள்ளது. அது - கோளறுபதிகம்!
உண்மையில் அது அப்பர் சுவாமிகளிடம் பாடிய பதிகம் இல்லை..அப்பர் சுவாமிகளின் பெயரில் நமக்காகப் பாடிச் சென்ற பதிகம்!
அந்தப் பதிகத்தைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
தினமும் இருவேளையும், அல்லது நேரங்கிடைக்கும் போதெல்லாம், அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றோ அல்லது உங்கள் வீட்டு பூசையறையிலோ, மனமுருகி இந்தப் பதினொரு பதிகங்களையும் ஓதுங்கள்! ஓதும்போதே அதன் முழுமையான பொருளையும் உணர்ந்து ஓதுங்கள்! மனதைச் சிதறவிடாமல், முழுமனதோடு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடுங்கள்!
சிலநாட்களிலேயே பாருங்கள்!
உங்கள் மனதில் ஒரு தெளிவு பிறந்திருக்கும்!
எதற்கும் அஞ்சாத வைராக்கியம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும்!
எல்லாவற்றுக்கும் மேலாக, சம்பந்தப்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அந்தப் பதிகங்கள் ஏற்படுத்தும் தெய்வீக அதிர்வால், உங்கள் இல்லத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது!
உங்கள் வசதிக்காக, இப்பதிகம் சந்திபிரிக்கப்பட்டு இலகுவான நடையில் தரப்படுகிறது, கீழேயே பொருளும் தரப்பட்டுள்ளது. பதிகத்தை ஓதும்போது, பொருளையும் மனதுள் உருப்போட்டு ஓதுங்கள். உண்டாகும் பலன் பன்மடங்காகும்!
சோதிடர்கள், சில அர்ச்சகர்கள் ஏற்படுத்தும் வீண் அச்சங்களில் பயந்துநடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதைக்கூறி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்! சிவனருள் சித்திக்கும்!
ஆங்கிலத்தில் மின்னூலாக இங்கே:http://slokas.yolasite.com/resources/kolaru%20pathigam.pdf
இங்கே பதிகம் யூடியூப் காணொளியாக: http://www.youtube.com/watch?v=uWO9_Pb7kJo
ஓம் நமச்சிவாய! _/\_
பதிகம்:
திருச்சிற்றம்பலம்
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன்.
ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன்.இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.
4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் - ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி - அதள் - அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.
10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.
11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
திருச்சிற்றம்பலம்

‘தாலி’ சரடில் உள்ள ஒன்பது இழைகளும்! அவற்றின் தத்துவங்களும்!

பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும்“தமிழர் திருமணம்” என்கிற புத்தக ம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக்
கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
1.தெய்வீகக் குணம்
2.தூய்மைக் குணம்
3.மேன்மை & தொண்டு
4.தன்னடக்கம்
5.ஆற்றல்
6.விவேகம்
7.உண்மை
8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
9.மேன்மை
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு (தாலி சரடு) அணிவிக்க‍ப்படுகிறது.

காலையில் இதை செய்தால் நடக்கும் அற்புதங்கள் ...

Saturday, August 26, 2017

பிரிந்த தம்பதியை இணைக்கும் தீர்த்தம்

பிரிந்த தம்பதியை இணைக்கும் தீர்த்தம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், சிவன் அம்பிகையை இடது பாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். ...

ஜெயம் தரும் ஸ்லோகம்

ஜெயம் தரும் ஸ்லோகம்: ராமாயணத்தை படிக்க இயலாதவர்கள், பின்வரும் ஸ்லோகத்தை  தினமும் காலையில் நீராடியதும் படித்தால் போதும். ராமாயணம் படித்த புண்ணியம் ...

Thursday, August 24, 2017

8உங்கள்வாழ்க்கையைமாற்றும்

தண்ணிர் அனைத்து நோய்களையும்போக்கும்

கேட்டதை கொடுக்கும் கண்ணாடி.

உப்பு.உங்கள் வாழ்க்கையை மாற்றும்

மணதை மாற்றும் மகா மந்திரம்

தர்பை நம்வாழ்க்கையை மாற்றும்

Vishaka Hari l Gajendra Moksham | Amrutha Mathanam | Day.4 | Harikatha l...

Seethakalyanam - About Sita

Wednesday, August 23, 2017

நவதானியம் ஊறவைத்த தண்ணீரை மரங்களுக்கு ஏன் ஊற்ற வேண்டும் ஜோதிட அறிவியல் உண்மை*


கோடான கோடி நன்றிகள் - 

JO SIMHAA, NAGERKOIL.  MOBILE NO - 9629170821.நவதானியம் ஊறவைத்த தண்ணீரை மரங்களுக்கு ஏன் ஊற்ற வேண்டும் ஜோதிட அறிவியல் உண்மை*
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு*
மரங்களின் வினைமாற்றத்திற்கு நீங்கள் உதவும் போது உங்கள் வினை மாற்றமும் நிகழும்*
நீங்கள் மரங்களின் வளர்ச்சிக்கு ஊட்ட சத்து மிக்க உணவு கிடைக்க உதவுகின்றீர்கள் அதைப் பெற்றுக்கொண்டு அவை உங்கள் வளர்ச்சிக்கு பெரும் உதவியை திரும்ப செய்யும் .

Tuesday, August 8, 2017

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..?

தலை - சிவபெருமான்

நெற்றி - சிவசக்தி
வலது கொம்பு - கங்கை
இடது கொம்பு - யமுனை
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால்
மூக்கின் நுனி - முருகன்
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்
இரு கண்கள் - சூரியன், சந்திரன்
வாய் - சர்ப்பாசுரர்கள்
பற்கள் - வாயுதேவர்
நாக்கு - வருணதேவர்
நெஞ்சு - கலைமகள்
கழுத்து - இந்திரன்
மணித்தலம் - எமன்
உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள்
மார்பு - சாத்திய தேவர்கள்
வயிறு - பூமிதேவி
கால்கள் - வாயு தேவன்
முழந்தாள் - மருத்து தேவர்
குளம்பு - தேவர்கள்
குளம்பின் நுனி - நாகர்கள்
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள்
முதுகு - ருத்திரர்
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
குதம் - லட்சுமி
முன் கால் - பிரம்மா
பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு கடல்கள்
சந்திகள் - அஷ்ட வசுக்கள்
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை
வால் முடி - ஆத்திகன்
உடல்முடி - மகா முனிவர்கள்
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்
சிறுநீர் - ஆகாய கங்கை
சாணம் - யமுனை
சடதாக்கினி - காருக பத்தியம்
வாயில் - சர்ப்பரசர்கள்
இதயம் - ஆகவணியம்
முகம் - தட்சரைக் கினியம்
எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்
பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.
அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.
எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.
கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.
லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.Tuesday, August 1, 2017

நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள

முருகன் கையில் இருக்கும் வேலின் ரகசியம் என்ன.?கோ சேவை


கோ சேவை

ரமண மகரிஷி :-
~~~~~~~~~~
சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது கோ-சேவை.
கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது.
தயங்கவும் கூடாது
பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா..???
ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார்.
வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி.
அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது.
எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம்,
ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை.
ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது.
எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.
ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல
ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.
பகவான் ரமணர் அவரை பார்த்து,
“நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து.
உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்.
ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய்.
பசுக்களை குளிப்பாட்டு,
சாணத்தை அள்ளிப்போடு,
கோ-சாலையை சுத்தம் செய்!”
என்றார்.
செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு,
ஆஸ்ரமத்தின், . . .
கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.
சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது ,
அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.
பசுவின் சாணம்,
கோமியம் ,
ஆகியவை நம் மேல்படுவது,
பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும்,
சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன..???
தீராத தோல் நோய் உள்ளவர்கள்,
உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு,
ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள்.
கோ-சேவையின் மகத்துவம் புரியும்
அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு
ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே.
ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும்
தொழுவத்தில் இருந்தாலும்
பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்
பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா...???
காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல்,
கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால்
புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்/
🙏 சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.🙏
பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார்.
கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால்
வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால்,
சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான்.
கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.
பசு காயத்ரீ மந்திரம்:-
~~~~~~~~~~~~~
ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.
1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் ,
அவன் நம் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றி விடுவான்.
நாட்டுப் பசுவினம் காக்க உதவிப் பயனடையுங்கள் .