Saturday, September 30, 2017

மானிடர் குல மூல காரணி.

ஆணோ, பெண்ணோ யாராயினும் மானிடராய் பிறத்தல் என்பதே பல பிறவிகள் தாண்டியே நிகழும். மானிடரின் சிறப்புக்கான காரணம் யாதெனில் மானிடர்க்கு மட்டுமே முதுகெலும்பும் மூளையும் புவியில் இருந்து விண்ணை நோக்கி செங்குத்தாய் நிற்கும் திறன் கொண்டது. மற்ற எவ்வுயிரும் அப்படி அல்ல. குரங்குக்கு கூட அவை வளைந்து தான் அமைந்துள்ளது. முதுகெலும்பும் மூளையும் தான் நமக்கிருக்கும் ஒரே ‘ஆண்டனா’ கருவி (ஆண்டவன் கருவி). விண் அலைகளை அணுகும் திறன் அதற்கு மட்டுமே உண்டு. தவ முனிவர்களின் முதுகு நிமிர்ந்து இருப்பதற்கும் காரணம் அதுதான். நிமிர்ந்த நன்னடை வேண்டும் என்று தமிழ் கவி யாரோ பாடினார் அல்லவா!

மானிடர் ஆயினும்
கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது.
உலகில் உருவெடுக்கும் எல்லா உயிரும் தத்தம் நிலையிருந்து மேலேற யாண்டும் முயன்று வருகின்றன. அவைகளின் முயற்சியின் இறுதியில் உள்ள படி நிலையே மனித உடல். இதுகாறும் உடல் எனும் சடத்திற்குள் வெவ்வேறு பிறவியில் பிணிப்புண்ட உயிர் சடம் அற்ற ஒரு வெளிக்குள் புக முயல்கிறது. அதற்காகவே மனித உடல். அவ்வுடல் வழியாகவே ஒவ்வொரு உயிரும் பரவெளி புக முடியும். அவ்வுடலை பெற்றும் மேல்நிலை அடைய முயலாது உலக சழக்குகளில் உழன்று மீண்டும் மீண்டும் இங்கேயே பிறந்து இறந்து உழல்வது பேதமையே.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. – வள்ளுவர்.
அப்பேதமையை ஒழித்து கட்டும் செம்பொருள் எது வென்று தேடி அடைவதே மனித அறிவின் தலையாய பயன்.
பலர் என்னிடம் கேட்டதுண்டு. வெளிநாட்டில் தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு அறிவின் சிறந்த கண்டுபிடிப்பாக எதை சொல்வீர்கள்? என்று கேட்கிறார்கள்.
‘அறிவு இயலுக்கும், கருவி இயலுக்கும்’ உள்ள வேற்றுமையை இன்னொரு பதிவில் விளக்க முயல்கிறேன்.
வேலுக்கும் விந்தணுவுக்கும் உள்ள ஒற்றுமை அறிந்திருப்பீர்கள். தாயின் வயிற்றில் உருவாகும் ஒரு கரு ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பதே தந்தையின் விந்தணு தான். பள்ளியில் X, Y கதை படித்திருப்பீர்கள். இதையே திருமூல சுவாமிகள் வலது இடது சுவாசத்திலேயே விளக்கி விட்டார். திருமந்திரம் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். ஆக, ஆணாயினும் பெண்ணாயினும் அலியாயினும், அவ்-விந்து எனும் வேலின் விசை உள்ளே இருக்கிறது. அதனாலேயே எவர் எக்குலத்தில் எந்த நாட்டில் பிறந்தாலும் அவரின் மூல குல தெய்வம் கந்த கடவுளே.
மானிடர் குல மூல காரணி.
உருவங்களில் சிக்குண்டு அறிவிழந்து சண்டையிட வேண்டாம். உருவங்களின் மூலமாய் உணர்த்தப்பட்ட பொருள் யாது என்ற ஆராய்ச்சி செய்யுங்கள். கற்பனை அல்ல. ஆய்வு செய்யுங்கள்.
இறை அருள் துணை நிற்கும்.

Thursday, September 28, 2017

காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா?

காகத்திற்கு சாதம் வைப்பது ஏன்?பொதுவாக காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். அதுவும் சனிகிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. காகத்திற்கு சாதம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறோம். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

சனி பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்.
காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.
இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை ஆகாயத்தோட்டி என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாக சொல்வார்கள்.
காகத்திற்கு உணவு வைத்தால் தேக ஆரோக்கியம் சீராகும். மேலும் காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை அழைக்கும்போது காகம் வந்து வீட்டின் மேற்கூரையிலோ அல்லது மரக்கிளைகளின் மீதோ வந்து அமரும். நாம் வைத்த உணவையும் சாப்பிட்டு, நம் வீட்டினுள் ஏதேனும் பூச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று அப்புறப்படுத்துகிறது.
இதனால் நோய்க்கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க உதவுகிறது. காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, ஒரு காகம் தன் கூட்டத்தையே அழைத்து உணவை பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் பொழுது நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. காகத்திற்கு உணவு வைப்பதால் முன்னோர்களின் ஆசி பரிபு ரணமாக கிடைக்கும். சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும். சனிபகவானின் அருளும் கிடைக்கும்.

Wednesday, September 27, 2017

பூஜை' சரஸ்வதிக்கு மட்டுமே!

******************
'பூஜை' என்ற அடைமொழி இருப்பது சரஸ்வதிக்கு மட்டுமே. தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என சொல்வதில்லை. பூஜை என்ற சொல் 'பூஜா' என்பதில் இருந்து வந்ததாகும்.
'பூ' என்றால் 'பூர்த்தி'. 'ஜா' என்றால் 'உண்டாக்குவது'. அதாவது மனிதனை முழுமை பெறச் செய்வது பூஜை. தான் என்னும் ஆணவம், அடுத்தவன் வளர்ச்சி கண்டு உருவாகும் பொறாமை குணம், வாழ்வு நிரந்தரமானது என்ற மாயை ஆகிய மூன்றும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றை சைவ சித்தாந்தம் 'ஆணவம், கன்மம், மாயா மலம்' என குறிப்பிடுகிறது. இம்மூன்று அழுக்குகளை போக்கி ஞானத்தை உண்டாக்குவது பூஜை.
சரஸ்வதியை வழிபட்டால் ஞானம் பெற்று மனிதன் முழுமை பெறுகிறான் என்பதால் 'பூஜை' என குறிப்பிடுகிறோம்
Tuesday, September 26, 2017

நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ராசி உண்டு அந்த ராசிக்கு ஒரு மரம் உண்டு. அந்த ராசிக்கு உரிய மரத்தை வெட்டினால் அவன து நிலை குலைந்து விடும். நம்பிக்கை இல்லை எனில் சோதிடரை கேட்டுப் பாருங்கள். அவரவர் ராசிக்கு உரிய மரங்களை நட்டு வளர்த்தால் அவரது நிலை மேம்படும். உதாரணம் ஸ்தல விருட்சம் இல்லாமல் எந்த ஆலயமும் இருக்காது. எனது ராசிப்படி எனக்கு அத்தி மரம் என் உடல் நிலை குன்றும் போது மரத்திற்கு சிறிது நீர் ஊற்றி விட்டு சிலஅத்தி இலைகளை பறித்து வணங்கி சாப்பிடுவேன். எனது உடல் நிலை சரியாகிவிடும். இது இன்று வரை நான் கடைபிடிக்கும் மருத்துவ முறையாகும். பின் குறிப்பு இந்த எளிய பரிகாரத்தை எந்த சோதிடரும் கூறுவதில்லை. ஏன் எனில் உங்கள் நிலை மேம்பாடடைய ஆரம்பித்து விட்டால் அவர்களை நீங்கள் மீண்டும் பார்க்க போக மாட்டீர்களே
மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி
பார்ப்போம்:
நட்சத்திரம்:
* அஸ்வதி ஈட்டி மரம்
* பரணி நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி நாவல்மரம்
* மிருகசீரிடம் கருங்காலி மரம்
* திருவாதிரை செங்கருங்காலி மரம்
* புனர்பூசம் மூங்கில் மரம்
* பூசம் அரசமரம்
* ஆயில்யம் புன்னை மரம்
* மகம் ஆலமரம்
* பூரம் பலா மரம்
* உத்திரம் அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி மருத மரம்
* விசாகம் விலா மரம்
* அனுஷம் மகிழ மரம்
* கேட்டை பராய் மரம்
* மூலம் மராமரம்
* பூராடம் வஞ்சி மரம்
* உத்திராடம் பலா மரம்
* திருவோணம் எருக்க மரம்
* அவிட்டம் வன்னி மரம்
* சதயம் கடம்பு மரம்
* பூரட்டாதி தேமமரம்
* உத்திரட்டாதி வேம்பு மரம்
* ரேவதி இலுப்பை மரம்
ராசிகள்
* மேஷம் செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம் அத்தி மரம்
* மிதுனம் பலா மரம்
* கடகம் புரசு மரம்
* சிம்மம் குங்குமப்பூ மரம்
* கன்னி மா மரம்
* துலாம் மகிழ மரம்
* விருச்சிகம் கருங்காலி மரம்
* தனுசு அரச மரம்
* மகரம் ஈட்டி மரம்
* கும்பம் வன்னி மரம்
* மீனம் புன்னை மரம்
இந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயி ல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.

Monday, September 25, 2017

Valmiki Ramayanam - 1/3 (Tamil)

Atma Dhyanam (Tamil)

சூட்சும விஞ்ஞானம் :

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

சிவலிங்கம் என்பது......

ஆதி சிவனியத்தில்..
மனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்..அதன் வடிவமே சிவலிங்கம்!!
அப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில்..
அருவமாக ஒரு ஒளி தெரிகிறதே..
அது தான் சிவம்!!
இதை தான் திருமூலர் சிவம் இணங்குமிடம் என்கிறார்!
இதை தான் இப்போது "Pituitary Gland" என போற்றுகின்றனர்..
சிலர் குண்டலினி சக்தி என்கின்றனர்..
மூச்சு நாசி வழி சென்று சுற்றி உள்ளே செல்வதால் அதுவும் சிவமாக கருதபடுகிறது!
இதை தான் தமிழர்கள் போற்றினர்..
சிவ வழிபாடு செய்தனர்..


Nadhaswaram Music | Mangala Vadyam | Nadaswaram Thavil Music

தினமும் இந்த இசையை ஒளிப்பரப்பி வீட்டில் பூஜை செய்து பாருங்கள் !!! |

கல்லையும் உருக்கும் குரலில் திருவாசகம் முழுத் தொகுப்பு, Thiruvasagam

மஹாலக்ஷ்மியின் மகிமை - இறையருள் அரசி, இளம்பிறை மணிமாறனின் சொற்பொழிவு RAN...

Friday, September 22, 2017

மகா பெரியவாளின் சமையல் விளக்கம்

குழம்புக்கும் ,ரசத்திற்கும் என்ன வித்தியாசம்?
இரண்டிலுமே பருப்பு ,புளி ,உப்பு,சாம்பார் பொடி,பெருங்காயம் தானே சேர்க்கிறார்கள். 
என்ற விவாதம் ஒரு சமயம் பெரியவாளின் முன் வைக்கப்பட்டது.அதற்கு நம் குருநாதராகிய மகா பெரியவா அருமையான பதிலை கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அங்கிருந்த பக்தர்கள் "சாம்பாரை முதலிலும்,ரசத்தை பிறகும் சாப்பிடுவதாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
இதைக் கேட்டு மகான் பெரிதாக சிரித்தார்.
தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்றுவிட்டதால்,நாம் குழம்பி போகிறோம்.அதாவது சாம்பாரை போல ....
இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு,ரசம் வைக்கிறோம்.
விருந்தில் முதலில் குழம்பு,ரசம்,பாயசம்,மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?
இந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும் இல்லை.மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் "தான்" என்ற அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.
இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்து காட்டுகிறது.அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது.
இவற்றை தொடர்வது இனிமை,ஆனந்தம்.அவைதான் பாயசம்,மோர் ,பட்சணம்.
இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும்,சாப்பிடும் சாப்பாட்டிற்கும் பலவித ஒற்றுமை உண்டு.மோர் தனித்தன்மை வாய்ந்தது.பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.
பாலிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய்,மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.மோர்தான் கடைசி நிலை.அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது.அதனால்தான் பரமாத்மாவைக் கலந்தபின்,மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.
நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை இதுபோல் யாரும் சொன்னதே இல்லை.
ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கரா
நடமாடும் தெய்வம் பாதம் சரணம்

Sunday, September 17, 2017

ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் .

வேதத்தில் உள்ள . ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் . ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, ஈஸ்வரனே துதித்து வழிபட்ட பெருமைக்குரியது..
மந்திரங்களுக்கெல்லாம் ராஜாவான ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் கிடைக்கும்..; பில்லி- சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும் .. நாளை என்பதே நரசிம்மத்திற்குக் கிடையாது.. நினைத்த அந்த க்ஷணத்திலேயே வரம்வாரி வழங்குவதில் நிகரற்றவர் அருள்மாரி பொழியும் உத்தம அண்ணல் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்..
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:
ஸ்ரீ ஈச்வர உவாச:-
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!
பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!
ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்!
நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மன:!
மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!
யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:!
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்!!
ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே!
ச்யா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!
ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!
நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்!
த்யக்தது: கோகிலாந் காமாந் அச்நந்தம் தம் நமாம்யஹம்!!
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மான: பரமாத்மன:!
அதோஹமபி தே தாஸ: இதிமத்வா நமாம்யஹம்!!
சமங்கரேணா தராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!
வீரபாண்டி ஆலயத்தில் வீற்றிருந்து அருளும் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளைக் கண்ணாரத் தரிசிச்சு வேண்டிக் கொண்டால் கவலையெல்லாம் பறந்தோடிடும்'' என்பது நம்பிக்கை..!
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் சுமார்
5 கி.மீ. தொலைவில் உள்ள வீரபாண்டி பிரிவு ரோடு. அருகில் அற்புதமாக கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்..!
ஒருகாலத்தில், இந்தப் பகுதி முழுவதும் வனமாகத் திகழ்ந்த போது பூமியில் இருந்து சுயம்புவாகத் தோன்றிய ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் மக்கள்.
பிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பின்போது, ஸ்வாமியின் விக்கிரகத்தைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அருகில் உள்ள கிணறு ஒன்றில் போட்டுவிட்டார்கள்.
கால ஓட்டத்தில் இந்த விஷயம் எவருக்குமே தெரியாமல் போய்விட்ட நிலையில், ஊர்ப்பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், 'கிணற்றுக்குள் இருக்கும் என்னை எடுத்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், இந்த ஊரே செழிக்கும்’ என்று அருள்புரிந்தாராம்.
அதன்படி கிணற்றில் இருந்த ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளின் விக்கிரகத் திருமேனியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, அவருக்குக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கி இன்று வரை, காரமடையைச் சுற்றியுள்ள மொத்த கிராமங்களையும் கிராமத்து மக்களையும் காத்தருளி வருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்.
மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அருகில் பிரகலாதனும் காட்சி தருவது ஆலயத்தின் தனிச்சிறப்பு!
ஒரே கல்லால் ஆன கொடிமரம், பன்னிரு ஆழ்வார்களின் சந்நிதி, ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீயோக நரசிம்மர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கும் அற்புதமான கோயில் ...
பொதுவாக, புதன் மற்றும் சனிக்கிழமைகளில்
ஸ்ரீநரசிம்மர் வழிபாடு அமர்க்களப்படும்.
அந்த நாட்களில் மட்டுமின்றி, செவ்வாய்க்கிழமைதோறும்
ஸ்ரீலட்சுமி நரசிம்மரை தாமரைப் பூவால் அர்ச்சித்து வழிபட்டால், சகல சந்தானங்களும் பெறலாம்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எடுத்த காரியம் இனிதே வெற்றி பெறும் என்பது ஐதீகம்!
.
.
ஆனி மாதம் சித்திரை நட்சத்திர நாளில் பெருமாளுக்குக் கலசாபிஷேகமும், வெள்ளி ரதத்தில் வீதியுலாவும் விமரிசையாக நடைபெறும்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று, இங்கு நடைபெறும் நாட்டிய நாடகம் வெகு பிரசித்தம். அன்று இரவு முழுவதும் பஜனைப் பாடல்கள் பாடி வழிபடுவார்கள்...
நவராத்திரியில் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன....


Saturday, September 16, 2017

பரிகாரம் ஒரு வரம்!

எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். நான் தெரிந்து கொண்ட சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ] இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.
கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் 
சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

சனிக் 
கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

சிவன் 
கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.


ருத்ராட்சம்
சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

பஞ்சகவ்ய 
கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

புத்திர 
பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க , வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி நிவர்த்திப் பரிகாரங்கள் - மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது, ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.
இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட இயலாதவர்கள், கடல் நீரின் ஒரு பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள், தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.
அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர் ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம் செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை, மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.

Thursday, September 14, 2017

வழக்குகளைத் தீர்த்து வைக்கும் தெய்வங்கள்!


நமது பக்கம் நியாயம் இருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறதே’ என்று கலங்கி நிற்பவர்கள், அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்க, விழுப்புரம் பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய, வழக்கு விரைவில் முடிவதோடு சாதகமான தீர்ப்பும் கிடைக்கும். அது முடியாதவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை, வடை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட, நல்ல பலன் கிடைக்கும். மேலும் அஷ்டமி தினங்களில் பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தர, வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்கும்.
காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ளது பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயில். நீண்ட காலமாகத் தீராத வழக்குகளைத் தீர்த்து வைக்கும் மிகச் சிறந்த வரப்ரசாதியாகத் திகழ்கிறார் இத்தல ஈசன். சட்ட ரீதியான, நியாயமான வழக்குகளில் இருந்து தீர்வு கிடைப்பதற்கு, பக்தர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் 16 வாரங்கள் திங்கள்கிழமைகளில் நெய் தீபமேற்றி, சிவபெருமானை வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து, அதில் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விருத்தாசலம், மணவளநல்லூரில் உள்ளது கொளஞ்சியப்பர் கோயில். இங்கு ‘பிராது கட்டுதல்’ எனும் வழிபாடு நடைமுறையில் உள்ளது. ஒரு வெள்ளைத்தாளில், ‘மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு...’ என ஆரம்பித்து, தாம் எந்த ஊரில் இருந்து வருகிறோம், தமது கோரிக்கை என்ன என்பதை தெளிவாக எழுதி, அதை கோயிலில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால், அவர், இறைவன் காலடியில் வைத்து பூஜித்து பொட்டலமாக்கி நம்மிடம் தருவார். அதை முனியப்பர் சன்னிதியில் இருக்கும் வேலில் சிறு நூலில் கட்டிவிட்டு வந்து விடவேண்டும். இந்த வேண்டுதல் நியாயமாக இருக்கும்பட்சத்தில் 90 நாட்களில் அது நிறைவேறி விடுவது உறுதி.

Saturday, September 9, 2017

.Panjaatchara Ragasiyam/பஞ்சாட்சர இரகசியம்/ ஞானிபிருந்தாவனர்/GnaniBirun...
2.Panjaatchara Ragasiyam/பஞ்சாட்சர இரகசியம்/ 

ஞானிபிருந்தாவனர்/GnaniBirundavanar👉 ஸ்வஸ்திக் சின்னம் தரும் பலன்:👈


வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும்.விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர்.வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.
"ஸ்வஸ்திக்" என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள்.இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும்.8திசைகளிலும் நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பரியம்.
வெற்றிக்கு எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.
ஸ்வஸ்திக் கோலம் போடக்காரணம்
ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா.வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது.
ஸ்வஸ்திக் நமக்கு எடுத்துக்காட்டுவது என்ன?
நான்கு வேதம் -----ரிக் ,யசுர் ,சாம ,அதர்வண
நான்கு திசை ----கிழக்கு,மேற்கு ,வடக்கு,தெற்கு
நான்கு யுகங்கள் ---சத்ய ,த்ரேதா ,துலாபார ,கலியுக
நான்கு ஜாதிகள் ---பிராமண,ஷத்ரிய ,வைஷ்ய ,சூத்திர
நான்கு யோகங்கள்---ஞான ,பக்தி,கர்ம ,ராஜ
நான்கு மூலங்கள் ---ஆகாயம்,வாயு,நீர்,நிலம்
வாழ்க்கையின் நான்கு பருவங்கள் ---குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர், சந்நியாசி
ஸ்வஸ்திக், ஓம், திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ,வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும்.இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும்.

Wednesday, September 6, 2017

நம் பண்பாட்டில் தாம்பூலம் வழங்குவதின் சிறப்பு என்ன ?


தாம்பூல பூரித முகீ…………..என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.
இதன் பொருள் தாம்பூலம் தரித்தால்பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்’என்பதாகும்.
விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, ‘நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர்.
தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.
திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.
பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம்.
இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.
1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம்.
மஞ்சள்,குங்குமம்,
மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,
கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,
வளையல், மன அமைதி பெற‌
தேங்காய், பாவம் நீங்க,
பழம்,அன்னதானப் பலன் கிடைக்க,
பூ, மகிழ்ச்சி பெருக,
மருதாணி, நோய் வராதிருக்க,
கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,
 தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ வழங்குகிறோம்.
அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்.
தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம்.
நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர்
இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.

சூட்சமம் மற்றும் இரகசியம் நிறைந்த முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம் | மஹா...

!!*காயத்திரி மந்திரம் பற்றி மகான்கள்*!!


படிப்பு, உடல் தூய்மை, மனத்தூய்மையை தரும் காயத்திரி மந்திரத்தின் அரிய பெரும் சிறப்புகள்! மற்றும் அதிசயங்கள்
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி பெரியவர் காயத்ரி ஒரு சிறந்த மனத் தூய்மைக்கான அருமருந்து என்கிறார்.
ஸ்ரீ சத்ய சாயி பாபா "ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறையாவது கூறுங்கள். குறிப்பாக குளிக்கும் போது கட்டாயம் கூறுங்கள். அப்போது உடல் தூய்மையுடன் மனத்தூய்மையும் ஏற்படும்" என்கிறார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டார்.

ஒரு சிலரிடம் பேசிவிட்டு வந்தாலே நம் உடலில் “பல விதமான வலியும் வேதனையும் ஏற்படுவது ஏன்...!” மாற்றுவது எப்படி?


சாதாரணமாக மற்றவர்களுடன் பேசும் பொழுது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே அந்த மாதிரியான எண்ணங்கள் உமிழ்நீராக மாறி நம் உடலுக்குள் வித்தாக மாறி நோயாக மாறுகிறது.

ஒரு தடவை சஞ்சலப்படுகின்றோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்ந்து விடுகின்றது.
உதாரணமாக சில இடங்களில் பார்த்தோம் என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவர்களுக்கும் ஆகாது.
பக்கத்து வீட்டுக்காரர் எனக்குப் பல வகைகளிலும் இடைஞ்சல் செய்கிறார். அதைப் பற்றிக் கேட்டால் தகராறு செய்கிறார் என்பார்கள்.
ஆக அவர்கள் செய்யும் தகராறுகளைப் பற்றி எண்ணும்பொழுது அந்த உணர்வுகள் இவருக்குள் வந்துவிடுகின்றது. அவர்களைப் பற்றி எண்ணினாலே அல்லது அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத வெறுப்பு வரும்.
வெறுப்பான உணர்வுடன் அவர்களிடம் பேசும் பொழுது அவர்களுக்கு இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர் மீது வெறுப்பு வரும்.
இதைத் தீர்க்கவே முடிவதில்லை.
ஆனால் இரண்டு பேரும் சண்டையிடுவதனால் என்ன இலாபம் அடைகிறார்கள்...!
இவர்கள் சங்கடமாகவும் ஆத்திரமாகவும் பேசி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் இங்கே உமிழ்நீராகி இவர்கள் உடலில் வியாதியாக மாற்றிக் கொள்கிறார்கள்.
எதிர்நிலைகளில் பேசுகின்றவர்களும் அதே போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உமிழ்நீராக மாறும் போது அவர்கள் உடலிலும் நோயாக மாற்றிக் கொள்கிறார்கள்.
இரண்டு பேருமே நல்லதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இரண்டு பேரும் அவர்கள் உடலில் "வியாதியைத்தான்" சேர்த்துக் கொள்கின்றார்கள்.
நிலத்தில் ஒரு விஷச் செடியைப் பதியச் செய்தால் காற்றிலிருந்து அது தன் இனமான விஷத்தின் சத்தைக் கவர்ந்து வளர்கின்றது.
இதைப் போன்று தான் வெறுப்பான எண்ணங்களைப் பதிவு செய்யும் பொழுது அதே எண்ணங்களை எடுத்து இரண்டு பேரும் வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
ஒருவருடைய சொல் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்றால் “ஓ...ம் ஈஸ்வரா...” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
1.அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின் நம் சொல் அவர்களுக்கு நல்லதாகப் படவேண்டும்.
3.எல்லோருக்கும் நல்லது செய்யக் கூடிய மனது
அவர்களுக்கு வரவேண்டும் என்று எண்ணி
4.இந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.
அவர்கள் நம் மேலே கோபமாகத் திட்டிக் கொண்டேயிருந்தாலும் கூட இந்த உணர்வுகள் அவர்களிடம் போய்ச் சேர்ந்து நாம் பாய்ச்சிய நல் உணர்வுகள் அதை நல்லதாக்கச் செய்யும்.
நமக்குள் அந்தச் சங்கடமான எண்ணங்கள் வந்து நம் உடலில் நோயாக மாற்றாது.
ஏனென்றால் நாம் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் நம் வியாபாரமோ தொழிலிலோ மந்தமாகிவிடுகின்றது. நம் குழந்தைகளிடமும் பக்குவமாக இருக்க முடியாது.
சமையல் செய்யும் பொழுது சங்கடமான எண்ணத்தைக் கொண்டிருந்தால் சுவையாகச் செய்யும் நிலைகளை மாற்றிவிடும்.
அதே சமயத்தில் ருசியாகச் சமைத்து வைத்திருந்தாலும் சங்கடமான எண்ணத்துடன் இருக்கும் பொழுது சாப்பிட்டால் ருசி இருக்காது.
ஆகாரத்திலுள்ள சத்தைப் பிரிக்காது. அப்பொழுது அது நம் உடலில் வியாதியாகவும் மாறிவிடுகின்றது.
அதை மாற்றுவதற்காகத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா...” என்று ஏங்கித் தியானியுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ணுதல் வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் பிறருக்கு நல்லதாக இருக்க வேண்டும். பிறர் என்னைப் பார்க்கும் பொழுது நல்லதாக இருக்க வேண்டும்.
வியாபாரம் செய்யும் பொழுது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் வளமாக இருக்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ண வேண்டும்.
இவ்வாறு எண்ணித் தியானம் செய்தீர்கள் என்றால் உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீர் சுவையுள்ளதாகச் சுரக்கும். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்திலுள்ள சத்தினைச் சீராகப் பிரிக்கும். உடல் நலம் பெறுவீர்கள்.
இப்படி உங்கள் உயிரான ஈசனிடம் நல்ல உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த குணத்தின் அடிப்படையிலேயே உங்கள் இயக்கம் அமைகின்றது.
இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.Saturday, September 2, 2017

வீட்டிற்க்கு முன் எந்த மரம் வைத்தால் நன்மை.....

*108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்*

இந்த உலகினை படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புகளான உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக திகழ்கிறது 108. பகவானிடம் பிரார்த்தனை, வேண்டுதல் என எல்லா சூழ்நிலைகளிலும் நாம் 108 என்ற எண்ணை பயன்படுத்துகிறோம்.
*உதாரணம் இதோ உங்களுக்காக 

➥ வேதத்தில் உபநிடதங்கள் 108.
➥ பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பது கோல சைவ, வைணவ திவ்ய ஷேத்திரங்கள் 108.
➥ பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்குகளஷேத்திரங்கள்ஆகும்.
➥ பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்குகள் ஆகும்.
➥ நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108.
➥ அர்ச்சனையில் நாமங்கள் 108.
➥ அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
➥ சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு ஆகும். ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
➥ தாவோ தத்துவத்தில் தெய்வீக நட்சத்திரங்கள் 108.
➥ திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108.
➥ ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
➥ புத்தமதத்தில் மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
➥ முக்திநாத் ஷேத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
➥ உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள் உள்ளன.
➥ உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
➥ குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
➥ மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
➥ சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
➥ 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
➥ 108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
➥ 1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும்
➥ 0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும்
➥ 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்...