Friday, October 27, 2017

ஸ்ரீகிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்..

ஒரு சமயம் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ணனை காண சென்றார்கள் அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு தியானத்தில் இருப்பதாக ஸ்ரீருக்மிணி கூறினார்கள் சிலநேரம் கழித்து ஸ்ரீகிருஷ்ணர் வெளியே வந்தார் அவரிடம் குந்திதேவி அண்டசராசரமும் உன்னை பூஜிக்கையில் நீ யாரை பூஜிக்கிறாய் தியானிக்கிறாய் என்று கேட்டார்கள் அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியது
ஸ்ரீகிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்..
நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி
வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ
மாஸோபாவாசீச பதிவ்ரதா ச
ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே.:
பொருள்:
இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: அவர்கள்
தினமும் அன்னதானம் செய்வோர்,
தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
வேதம் அறிந்தவர்கள்,
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து
சதாபிஷேகம் செய்துகொண்டோர்
மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
பதிவ்ரதையான பெண்கள்.ஆகியோர்.
!! சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பனமஸ்து!!

*"மனம் கலங்காதிருக்க..."*

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...
சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...
பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...
உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...
அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...
இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...
தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...
ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...
பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...
மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...
கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...
இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...
கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...
மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...
பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...
கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...
நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...
சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...
*எப்படி முடிந்தது இவர்களால்..?*
ரகசியம்...
*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏
கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?
*ஆழ்ந்த நம்பிக்கை...*
அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?
*முதல் வழி...*
(சொல்லறிவு)
அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...
*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)
மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...
நம்பிக்கை ஏற்பட்ட பின்...
மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...
தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...
அந்த பிரார்த்தனைகள்...
எந்த மதம் சார்ந்ததாகவும் இருக்கலாம்
*மந்திரமாக இருக்கலாம்...*
*ஜபமாக இருக்கலாம்...*
*தொழுகையாக இருக்கலாம்...*
*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*
மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.
இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...
என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*
அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...
ஆதலால் ...
*திடமாக பகவானை வழிபடுவோம்...*
*அன்பே கடவுள் என போற்றுவோம்...*
*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*
இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் 

The Greatest Mantra in the world in Tamil

Tuesday, October 24, 2017

*தூபங்களும் அதன் பயன்களும்...!!!


**********************************************
*சந்தனதத்தில்--- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
*சாம்பிராணியில்--- தூபமிட கண் திருஷ்டி பொறாமை
நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
*ஜவ்வாது --- தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
*அகிலி --- தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
*துகிலி --- தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு
ஆரோக்கியத்தினை உண்டாகும்.
*துளசி தூபமிட --- காரியத்தடை திருமணத்தடை நீங்கி
விரைவில் நடந்தேறும்.
*தூதுவளை --- தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள்
அருள் புரியும்.
*வலம்புரிக்காய் --- தூபமிட பன்னிரண்டு வகையான
பூத கணங்களும் நீங்கும்.
*வெள்ளைகுங்கிலியம் --- தூபமிட துஷ்ட அவிகள்
இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
*வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
*நாய்கடுகு --- தூபமிட துரோகிககள் நம்மை கண்டு
ஓடுவர்.
*மருதாணிவிதை ---தூபமிட சூனிய கோளாறுகளை
நீக்கும்.
*கரிசலாங்கன்னி --- தூபமிட மகான்கள்அருள்கிட்டும்.
*வேப்பம்பட்டை --- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.
*நன்னாரிவேர் --- தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.
*வெட்டிவேர் --- தூபமிட சகல காரியங்களும்
சித்தியாகும் .
*வேப்பஇலைதூள் ---தூபமிட சகலவித நோய்
நிவாரணமாகும்.
*மருதாணிஇலைதூள் --- தூபமிட இலட்சுமி கடாட்சம்
உண்டாகும்.
*அருகம்புல்தூள் ---தூபமிட சகல தோஷமும்
நிவாரணமாகும்...!!
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் ,
இறைவனை நினைத்து தூபமிட்டாலே
அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து ,
அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்...!
வாழ்க வளமுடன் !
வளர்க அருளுடன் !!

*************************************

Monday, October 23, 2017

கண் திருஷ்டியை போக்க சில எளிய யோசனைகள்!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏனோ அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்காமலேயே இருக்கும்.
நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இதற்கான காரணங்கள் பல உள்ளது. முறையாக நேரத்தை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை ஹார்ட் வொர்ட் விட ஸ்மார்ட் வொர்க் தான் பெஸ்ட் என்று பல காரணங்களை சொன்னாலும் கடைசியாக இப்படியும் இருக்கலாம் என்று சிந்திக்கும் விஷயம் கண் திருஷ்டி!
அம்மாக்கள் எல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கேட்டிருப்போம். சிலரது பொறாமை குணம் நம் மீது வெறுப்பாகவும், அர்த்தமில்லாத கோபமாகவும் மாற்றிடும். அதுவும் முன்னேறிக் கொண்டே செல்பவர்கள் திடிரென சறுக்கினால் கண் திருஷ்டி பட்டுருக்கும் அதான் இப்டி நடக்குது என்று சொல்வோம். அப்படி தொடர் தோல்விகள் ஏற்ப்பட்டால் அல்லது கண் திருஷ்டி பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அவற்றை நீக்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எப்படி கண்டுபிடிப்பது? :
திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம்.
சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.
தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும்.

கவனிக்க :
திருஷ்டிக்கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.
தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.

மலர்கள் :
வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது.
வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.

வாழை :
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய்,அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள்.
ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

மீன் தொட்டி :
இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.

உப்பு :
குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி,சோம்பல்,அலர்ஜி எதாவது ஏற்ப்பட்டால் நீங்கிடும். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.

எலுமிச்சை :
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.
வாசலில் ஒரு எலுமிச்சை,ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.

படிகாரம் :
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அல்லது உங்களது தொடர் வெற்றியால் கூட கண் திருஷ்டி விழும். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள், தடங்கள்கள் அடிக்கடி வரும். இப்படியிருந்தால் அதனை படிகாரத்தைக் கொண்டு சரி செய்யலாம்.
கடைகளில் படிகாரக் கல் என்றே கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின்னர் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை சுற்றவேண்டும்.
தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் அதனை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்திடுங்கள்.
படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படிச் செய்தால் அந்த நீரை பிறர் கால் படாத இடத்தில் ஊற்ற்ற வேண்டும்.

ஆகாய கருடன் கிழங்கு :
கண் திருஷ்டி நீக்கும் பொருட்களில் மிக முக்கியமானது 'ஆகாய கருடன் கிழங்கு'.இது நாட்டு மருந்து கடைகளிலும், சந்தைகளிலும் கிடைக்கும். இதன் அளவை பொறுத்து விலை மாறுபடும்.
இதை வாங்கி கிழங்கை சுற்றி வளர்ந்திருக்கும் வேர்களை நீக்காமல் தண்ணீரில் கழுவி, முழுவதும் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வீட்டிற்கு வெளியே வாசலில் கட்டினால் கண்திருஷ்டி நீங்கி விடும்.
இதை வீட்டிற்கு உள்ளே கண்டிப்பாக கட்ட கூடாது.

செப்புக் காசு :
குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது.
சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது.

தண்ணீர் :
நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்முடைய வீட்டைப் பார்த்தோ அல்லது நம் வளர்ச்சியைப் பார்த்து தொடர்ந்து ஆச்சரியப்பார்வையை வீசினால் அல்லது பொறாமைப்பட்டால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்.
இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

எண்ணெய் :
உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் உங்களின் முகம் தெரியுமாறு பார்த்து மூன்று முறை உங்கள் பெயரைச் சொல்லவேண்டும். பின்னர் அதனை யாருக்காவது தானமாக கொடுத்துவிட வேண்டும்.

கால் கட்டை விரல் :
பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கடுகு :
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும்.குழந்தை :
கைக்குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டால் சரியாக உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருகைப்பிடி உப்பை எடுத்து,தாய் மடியில் குழந்தையை வைத்து இடமிருந்து வலமா மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணியில போட்டிட வேண்டும்.

சூட்சும விஞ்ஞானம் :

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

Sunday, October 22, 2017

ஈசன் உபதேசம்...

1, ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
2, உத்திரகோசமங்கை – பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3, இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4, திருவுசாத்தானம் – இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5, ஆலங்குடி – சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6, திருவான்மியூர் – அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
7, திருவாவடுதுறை – அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8, சிதம்பரம் – பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9, திருப்பூவாளியூர் – நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10, திருமங்களம் – சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11, திருக்கழு குன்றம் – சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12, திருமயிலை – 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
13, செய்யாறு – வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14, திருவெண்காடு – நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
15, திருப்பனந்தாள் – அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16, திருக்கடவூர் – பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17, திருவானைக்கா – அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18, மயிலாடுதுறை – குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
19, திருவாவடுதுறை – அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20, தென்மருதூர் – 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
21, விருத்தாசலம் – இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22, திருப்பெருந்துறை – மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
23, உத்தரமாயூரம் – ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
24, காஞ்சி – ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
25, திருப்புறம்பயம் – சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
26, விளநகர் – அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
27, திருத்துருத்தி – சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
28, கரூர் – ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
29, திருவோத்தூர் – ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்.

Saturday, October 21, 2017

Arupadaiveedu Suprabatham (Part 2) - Vaazhum Manithar Yaavarukkum

Muruga Muruga Om Muruga-Arupadai Veedu Suprabatham (Part1)

சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.
ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...?
அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...?
ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்..
"பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று அர்த்தம்.
அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர்.
அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.
“அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ! அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.
‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?' என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.
பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்!
இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார்.
பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.
அவன் சொன்னது கீதை; கேட்பது சஹஸ்ரநாமம்.
இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.
பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார்.
"பகவத் குண தர்ப்பணம்" என்று அதற்குப் பெயர்.
'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள்.
"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும்
போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா?
அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்...
அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்!
சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..?
அதைப் போலே சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.
நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது.
சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது.
"கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.
இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது.
கீதையைச் சொன்னது பகவான்.
அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம்.
பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.
வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!!
நாராயண! நாராயண ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலிலிருந்து எடுத்தது.

Kanda shasti Explanation

திருவாசகம்_போற்றித் திருவகவல்

கோயில் மூத்த திருப்பதிகம் (திருவாசகம்) - Kovil Mootha Thirupathigam (Th...

Kalabhairavashtakam

மார்கபந்து ஸ்தோத்ரம்

Thursday, October 19, 2017

பசுவும் புண்ணியங்களும்


பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

பித்ருபூஜை ஓர் சிறப்புப்பார்வை


மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.
சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது.
இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம்.
பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது.
அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது.
அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது.
ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது.
தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது.
மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.
பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.
இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.
அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர்.
இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர்.
சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.
நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.
நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.
ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
(ஆதாரம்: பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம், ஸ்ரீமத் மகாபாரதம் முதலிய நூல்கள்.)


Tuesday, October 17, 2017

இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!!
மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.
கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.
நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில் ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்
காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்
சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.
1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669) 2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)
3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)
4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)
5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)
6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)
7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559) 8) ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174)
கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்

Sunday, October 15, 2017

"டெங்கு ஒழிய & டெங்கை ஒழிக்க எளிய பாராயணம்''..


"டெங்கு ஒழிய -
 டெங்கை ஒழிக்க எளிய பாராயணம்''..''திருச்செங்கோடு
பாகம்பிரியாள் உடனுறை மாதொருபாகன் திருக்கோயில்''..ஈரோட்டில் இருந்து
18கிலோமீட்டர் தூரத்திலும்,சேலத்தில் இருந்து 38கிலோமீட்டர்
தூரத்திலும்,விழுப்புரத்தில் இருந்து 188கிலோமீட்டர் தூரத்திலும்
திருச்செங்கோடு அமைந்து உள்ளது
. உங்கள் வாழ்வில் கலக்கல் கலகல என வாழ்வு
இருக்கவேண்டுமா?!திருமுறைகள் பாராயணம் செய்யுங்கள்.இந்த தீபாவளிமுதல்
தினமும் மூன்று திருமுறைப்பதிகம்கள் பாராயணம் செய்வோம்.
''நாளாயே போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளி
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமாளே''[சம்பந்தர்]..ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டும் என்பர்.வினை தவிர்க்க முடியாதது;அதை அனுபவித்துத்தான்
தீர்க்கவேண்டும் என்கிறார்கள்.ஆனால் ஈசன்,திருமுறைகளின் கருணையால் விதியை
மாற்றலாம் அல்லது அதன் கடுமையைக் குறைக்கலாம் உறுதியாக.
''அவ்வினைக் கிவ்வினையாமென்று சொல்லும தஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்''
வினையிலிருந்து உய்யும் வழியை நீலகண்டத்தின்மீது ஆணையிட்டுச் சொல்கிறார்
சம்பந்தப் பெருமான்.வினை நீக்கம் பற்றி நூற்றுக்கணக்கில்
பாடியிருக்கிறார்.அப்பர் சுவாமிகளும் பாடுகிறார்:
''அரிச்சுற்ற வினையால் அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சுற்றுப் பல பேசப்படா முனம்
திருச்சிற்றம்பலம் சென்றடைந்து உய்ம்மினே''
''அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லைமா நகர்ச் சிற்றம் பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே''
சுந்தரர் பின்தங்குவாரா? அவரும் பாடுகிறார்:
''சைவத்த செவ் வுருவன் திரு நீற்றன்னுறு மேற்றன்
கைவைத்தொரு சிலையால் அரண்மூன்றும் எரிசெய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன் திருச்சுழியல்
மெய்வைத்தடி நினைவார் வினைதீர்தல் எளிதன்றே''
''கொன்று செய்த கொடுமையால் பலசொல்லவே
நின்றபாவம் வினைகள் தாம் பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ தண்கழுக் குன்றமே''......முன்செய்த வினையே
இவ்வுடலாகவும் அது படும் துன்பமாகவும் வந்து மூண்டுள்ளது.ஆனால் இதையே
சொல்லித்திரிவதால் பயனில்லை. அருளாளர்கள் காட்டிய வழியில் சென்று
முயலவேண்டும்.அவர்கள் அருளிய திருமுறைகளை பாராயணம் செய்து,ஈசனை பணிந்து
தொழுவதுதான் நம் கடன்.வினை அகலும்;வாழ்க்கை
வளமாகும்-நலமாகும்.''எம்பிரான் எம்மைத் தாங்கிக் கொள்ளே!''என்று ஈசனிடம்
நம்மை ஒப்படைத்துவிட்டால் வாழ்க்கைக்கு நல்வழி காட்டிகைகொடுப்பார் நம்
ஈசன்.''தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் அய்யா''உலகோர் நலமுடன் வாழ
வழிகாட்டி உள்ளார்கள்.ஆம்!ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் என்று
ஓலமிடுகிறார்கள்.அதனை ஈசனின் துணையுடன் குணமாக்கிட நம்மையெல்லாம் தினமும்
மும்முறை விளக்கேற்றி அல்லது ஆலயங்களில் விளக்கேற்றி ''திருச்செங்கோடு
திருத்தல சம்பந்தர் பதிகம்''-திருநீலகண்ட பதிகம் பாராயணம் செய்ய அருளி
உள்ளார்கள்.அன்று உலகைக் காக்க விடமுண்ட ஈசன் ,முறைப்படி நாம் வழிபட்டு
பிரார்த்தித்தால் விஷக்காய்ச்சலையும் குணமாக்கித்தருவான்.நம்பிக்கையுடன்
பாராயணம் செய்வோம்.குருமுகமாக உலகிற்கு அருளியதல்லவா...திருஞானசம்பந்தர்
சிவத்தல யாத்திரையாக தமது அடியார் புடைசூழ திருச்செங்கோடு
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வருகை தந்தார்.அது ஒரு பனிக்காலம். பனி
அதிகம் பொழிந்தமையால் அப்பகுதி மக்கள் பலரும் குளிர் சுரம் என்னும்
காய்ச்சலால் அவதிப்பட்டனர்.மக்களை வாட்டிய குளிர்சுரம் ஞானசம்பந்தரின்
உடன் வந்த அடியார்களையும் பற்றியது. இதனைக்கண்ட ஞானசம்பந்தர்
''அவ்வினைக்கிவ்வினை'' என துவங்கும் திருநீலகண்ட பதிகம் பாடி
'தீவினைவந்தெம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு
அருளினார்.அப்பிணி அப்போதே அப்பகுதியை விட்டு
அகன்றது.திருச்செங்கோட்டில் தேரடி வீதியில் உள்ள சம்பந்தர் தம்
அடியவர்களுடன் அன்று தங்கிய மடத்தில் ''சுரகண்டநாதர்''[ஜுரஹரேஸ்வரர்]
எனும் பெயரில் ஈசன் அருள்பாலிக்கிறார்.டெங்கு முதலிய விஷ காய்ச்சலால்
துன்பப்படுபவர்கள் அங்கு சென்று ஈசனை வேண்டி மிளகு ரசம் சாதம் வைத்து
வழிபாடு செய்து வழிபட்டு,பின்னர் மலைமேல் உள்ள அர்த்தநாரிஸ்வரர்,ஆதி
கேசவப்பெருமாள் ,செங்கோட்டு வேலவர் சன்னதிகளிலும் வழிபட்டு வந்தால்
காய்ச்சலின் பாதிப்பு உடனே படிப்படியாக குறைந்து முற்றிலும்
குணமாகிவிடும். அன்பர்கள், அவர்கள் அருகில் உள்ள பழமையான சிவாலயங்களில்
உள்ள ஈசன்,ஜுரஹரேஸ்வரர் வழிபாடு செய்து ,சம்பந்தரின் ''திருநீலகண்ட
பதிகம்''பாராயணம் செய்தும் நோய்களில் இருந்து
விடுபடலாம்.ஜுரஹரேஸ்வரருக்கு ஆயில்யம்,அஸ்வினி நட்சத்திர அல்லது
செவ்வாய் கிழமைகளில் இள வெந்நீர், இளநீர்,நிலவேம்பு நீர்,மலைவேம்பு
நீர்,மிளகு தீர்த்தத்தால் அபிசேகம் செய்து,மிளகு காப்பிட்டு,மிளகு சாதம்
நெய்வேத்தியம் செய்வித்து தீபம் ஏற்றி வழிபட்டால் டெங்கு முதலிய நோய்
பாதிப்புகள் உடனே அகலுமாம்."நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப்
பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது
நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான்
எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி
நிழலில்".ப்ரியமுடன்:கட்டுரையாக்கம்:அன்பன்.சிவ.அ.விஜய்
பெரியசுவாமி,கல்பாக்கம்,9787443462...''பாராயணம் செய்ய சம்பந்தரின்
திருநீலகண்ட பதிகம்'':
''அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே''[சம்பந்தர்]....

நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்கநாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே. நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. வாருங்கள் இது குறித்து பார்ப்போம்.
சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க:
சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சந்திரனால் ஏற்படும் தோஷங்கள்
அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது, திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர் கவலைப்படுவதுண்டு. இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால், வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் விலகும்.
புதனால் ஏற்படும் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை. சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல் நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில்
கலந்து குளித்துவர வேண்டும்.
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.