Thursday, November 30, 2017

பச்சரிசியில் பண வசியம்

மலைக்கோயில்கள்

மலை ஏறிப்போகும் போது மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. அப்போது வெளிமன
உணர்வுகள் அடங்கி, கிரியா மனம் திறந்து கொள்கிறது. அவ்வேளையில் என்ன
எண்ணினாலும் அது நடக்கும் என்பதால், மலைக்குச் சென்று வரும் பழக்கத்தை
ஏற்படுத்த மலைக்கோயில்கள் உருவாக்கப்பட்டன. மலைக்கோயிலுக்குச் சென்றான்! நான்
நினைத்தது நடந்தது! 

வெளிமனம் அடங்கும் போது உள்மனம் திறக்கும். இதுதான் உலகறிந்த உண்மை. 

கோலம் எனும் யோகா !


தழைய தழைய தாவணி கட்டிக்கொண்டும், சரசரக்க சேலை கட்டிக்கொண்டும் நம் தமிழ் பெண்கள் கோலம் போடும் அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும். அதிகாலையில் அழகு கொஞ்சும் கோலம் போட்டு அசத்துவதால், லட்சுமி விருந்தாளியாக வந்து நிரந்தரமாக தங்கி தாண்டவம் ஆடுவாள் என்பது பெரியவர்கள் நம்பிக்கை.

அழகுக்காகத்தான் கோலம் போடுகிறார்கள். இந்த காலத்தில் வாசலும் இல்லை, கோலம் போட நேரமும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் கோலம் போடுவதால் பல நன்மைகள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.
பசு சாணம் கரைத்து வாசலில் கோலம் போடுவது வழக்கம். பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படுகிற அதிகாலை 4.30 - 6 மணிக்குள் கோலம் போட்டு முடிக்க வேண்டும் என்பார்கள் நம் பாட்டிகள். 'ஏன்... 8 மணிக்கு போட்டால் என்ன கோலம் கோவிச்சுக்குமா?' என எகத்தாளம் பேசும் இளசுகளுக்கு, பாட்டி சொல்லும் விஷயத்தின் விஞ்ஞானம் தெரிவதில்லை.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் காற்றில் ஓசோன் வாயு கலந்திருக்கும். சூரிய உதயம் ஆவதற்கு முன் சாணம் தெளிப்பதால் நிலத்திலிருக்கும் பிராண வாயு மேல் எழும்பி மூலாதாரங்கள் வழியாக பெண்களின் கர்ப்ப பை வரை பரவி, சுகப் பிரசவம் நிகழ உதவுகிறது என்ற உண்மையை பெரியவர்கள் கண்டுபிடித்து உணர்ந்திருக்கிறார்கள்.
இயல்பாகவே விரும்பி, அர்ப்பணித்து, ரசித்து மகிழ்ந்து, முறையாக கோலம் போடும் பெண்கள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, புத்துணர்வுடன் இருப்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? கோலத்தின் விஞ்ஞானத்தை அறிந்தவராக இருந்தால் மட்டுமே அதை நீங்கள் உணர்ந்திருக்க முடியும்.
குனிந்து பெருக்கி, வளைகரங்களில் மாவெடுத்து வளைந்து நெளிந்து கோலமிடுவது என வாசல் கோலத்துக்கும் பல வரைமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். இன்றைய ஃபேஷன் உலகத்தில் வியாபாரமாகிப் போன யோகா கலையை வாழ்வியலோடு அழகியலாக கலந்து வைத்து, நம்மை வழி நடத்த நம் பாட்டன்மார்கள் போட்டுத் தந்த பாதையிலிருந்து விலகி பயணிப்பதால்தான், ஊர்ப்பட்ட நோய்களை நாம் இன்று விருந்து வைத்து அழைத்து வந்திருக்கிறோம்.
கொஞ்சம் நம் பெண்களின் கோலக் கலையை மனசுக்குள் நிறுத்திப் பாருங்கள். நம் மாடர்ன் சாமியார்கள் கல்லா கட்டும் யோகா அதில் ஒளிந்திருப்பதை உணரலாம்.
பசு சாணம் ஒரு கிருமிநாசினி என்பதும் நாம் மறந்து போன விஷயம். அடுக்குமாடிகளில் முடங்கிவிட்ட நம் பெண்களுக்கு, கோலம் என்னும் இயற்கை யோகாவை சொல்லிக் கொடுப்போம். வாரம் ஒருமுறையாவது பிரம்ம முகூர்த்தத்தில் அந்த வாழ்வியல் யோகாவை பழக்கமாக்கிக் கொள்ள பயிற்சி தருவோம்.

Tuesday, November 28, 2017

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.
இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = *சூரியன்*
2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்*
3.) திரி = *புதன்*
4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்*
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு*
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு*
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி*
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = *கேது*
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....
இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

Monday, November 27, 2017

Very powerful Sai Slogam 4 Bhayam Vilaga

Aanmiga Kurippugal Sarva Graha Dosha Pariharam for 27 Stars

Aanmiga Kurippugal - Sarvakarya siddhi

எப்படி குளிக்க வேண்டும் ? அருமையான விளக்கங்கள்

Aanmigakurippugal / Leg Pain Removal Secret

தினப்பலனில் மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாள் எனப் போட்டிருக்கிறதே அப்படி என்றால் என்ன?

தினப்பலனில் மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாள் எனப் போட்டிருக்கிறதே அப்படி என்றால் என்ன?: ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு தன்மை உடையது. இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் மும்மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ...

To Improve wealth and happiness | லக்ஷ்மி கடாட்சம் பெருக |Pumkin Flower ...

12ராசியினரும் அறிந்து கொள்ளவேண்டிய கந்தர் ஷஷ்டி கவச ரகசியம்/Kandhar sha...

Saturday, November 25, 2017

ஓம் சாய் ராம்: ஸ்ரீ ராமநாமப் பதிகம்

ஓம் சாய் ராம்: ஸ்ரீ ராமநாமப் பதிகம்:   வடலூர் இராமலிங்க அடிகளார் நிகழ்த்திய அற்புதங்களுள் இந்த நிகழ்ச்சியும் ஒன்று . ஒரு முறை குருஞ்சிபாடி போலீஸ் head constable விஜயராகவன்...

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: மருந்தே இல்லாத நோய்களையும் கூட நீக்கக்கூடிய மிக மி...

மகரிஷிகள் உலகம் உங்களை நீங்கள் நம்புங்கள்: மருந்தே இல்லாத நோய்களையும் கூட நீக்கக்கூடிய மிக மி...: மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷியின் அருள் சக்தியால் ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ...

வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
-திருமூலர் திருமந்திரம்
இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை.
சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார்.
இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.
தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையானாலும் பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.
நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.
ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.
சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.
சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.
சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.
இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். 

http://4.bp.blogspot.com/-AOZ6rj98BJs/UnXr2GNplYI/AAAAAAAAG7Y/9gdn75VzUMo/s1600/lamp.gifhttp://4.bp.blogspot.com/-AOZ6rj98BJs/UnXr2GNplYI/AAAAAAAAG7Y/9gdn75VzUMo/s1600/lamp.gif

நான்கு வேதங்களில் யஜுர் வேதத்தில் உள்ள மஹாமந்திரமாக போற்றப்படுவது ஸ்ரீ ருத்ரம்.


ஸ்ரீ ருத்ரம் ஜபிப்பதால் பெரும் புண்ணியம் பெறலாம் என்பதை திருமுறைகளும், வேத வழி நூல்களும் தெரிவிக்கின்றன.
சூதசம்ஹிதை,
"விருக்ஷஸ்ய மூலஸேகேன சாகபுஷ்யந்திவைவதா,
சிவருத்ர ஜபாத் ப்ரீதே ஏவாஸ்ய தேவதாஹா.
அதோ ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்திதஹ."
ஒரு மரத்தின் வேரில் நீருற்றினால் கிளை, இலை, கனிகள் எல்லாம் செழிப்பது போல், ஸ்ரீ ருத்ர ஐபத்தினால் அனைத்து தேவதைகளும் திருப்தியடைகின்றனர்.என்று கூறுகின்றது.
63நாயன்மார்களில்,
ஸ்ரீ ருத்ர பசுபதிநாயனார் ருத்ரமந்திரம் ஜபித்து சிவனருள் பெற்றவர்.

Thursday, November 23, 2017

ஹோமம் & அறிவியல்

எனக்குள் சில நாட்களாகவே ஒரு நெருடல். “ஏன் இப்படி புதிய புதிய நோய்கள் அவதாரம் எடுக்கின்றன?” என்று. அப்போது போபால் விஷவாயு சம்பவமும் அதிலிருந்து ஒரு குடும்பம் தப்பித்ததும் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்தி நினைவுக்கு வந்தது. வேதம், இதிகாசம், புராணம் இதிலெல்லாம் நம்பிக்கை கொள்வது அல்லது விட்டு விடுவது என்பது தனிமனித விஷயம். ஆனால் சில பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ள சில பாரம்பரிய நம்பிக்கைகள் அது ஆன்மீகம் என்பதை விட அறிவியலாக இருந்திருக்கிறது என்பதை அது நினைவுபடுத்தியது. போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்லை. இதற்கு காரணம் யாகமல்ல. யாகத்தில் போடப்பட்ட பொருட்களும் அதிலிருந்த வெளிக்கிளம்பிய அனலும், மெல்லிய புகையும் தான் நச்சுப்புகையை அந்த வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியதும் தான் காரணம்!
இப்படி கொடுமையான விஷ வாயுவை கூட முறியடிக்கும் சக்தி இந்த யாகத்திற்கு இருந்திருக்கிறது என்றால் இந்த ஈ, எலி, பன்றி, பறவை, கொசுக் காய்ச்சல்களை பரப்ப சுற்றுப்புற காற்றில் அலைந்து திரியும் கிருமிகளை அழிக்க முடியாமலா இருக்கும்? அதற்கும் பதில் சொல்லியிருக்கிறது அதர்வணம். சுற்றுப்புறக் காற்றில் உள்ள நோய்க் கிருமிகளையும் அசுத்தஙகளையும் நீக்கும் யாகத்தீக்கு ‘ஹோமம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். நல்ல சுற்றுப்புறத்தை ஐந்து எளிமையான அடிப்படையான மூலாதரமான விதிகளின் படி வேள்வித் “தீ” மூலம் உண்டாக்கலாம் என்கிறது சில பழங்கால வேதங்கள். அதில் ஒன்று தான் ஹோமம். அதாவது வேள்வித்தீயின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தலாம் என்கிறது வேதங்கள். இந்த ஹோமம் பற்றி ‘இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெடீஸ் இன் வேதிக் சையின்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு கையேட்டில் காணப்பட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு…
காற்றில் ஒரு ஊசி மருந்து : “நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அது போல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் ஹோமம். இந்த ஹோமம் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும் அமைதிப்படுத்துகிறது.
ஹோமம் என்பது…. இயற்கை சமன் பாட்டிற்கும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அவசியமாக இருந்து ஜீவராசிகளின் சீர் பிரமாணத்திற்காக சூரியோதத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் செய்யப்படும் யாகத்தின் அடிப்படையிலான செயல் முறை. சுற்றுப்புறக் காற்று தான் நமது நாசி வழியாக இழுக்கப்பட்டு உடலை உயிரோட்டமுடன் வைக்கிறது. இந்த சுற்றுப்புறக் காற்றுக்கு உயர்ந்த குணமளிக்கும் சக்தியை கொடுக்கும் ஒரு செயல்.
ஹோமம் செய்ய அடிப்படை தேவைகள்
1. நிச்சயமான நேரங்கள்
2. தீ (அக்னி) பசுஞ்சாண விரட்டியால் உண்டாக்கப்படுவது.
3. குறிப்பிட்ட அளவுடைய பிரமிட் தோற்றம் கொண்ட செப்பு பாத்திரம்.
4. சுத்தமான பசுநெய் தடவப்பட்ட முனை முறியாத பச்சரிசி
5. மந்திரங்கள்.
இதில் நிச்சயமான நேரங்கள் என்பது இயற்கையின் தாளகதியான சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனம். (சூரியோதத்தின் பல நெருப்புகள், ஒளி அலைகள், மின்சாரங்கள், ஈதர்கள் மற்றும் நுட்பமான சக்திகள் எல்லா வழிகளிலும் பரவி பாய்கின்றன. தீவிரமான இந்த ஒளி வெள்ளம் பரவசத்தை ஏற்படுத்தி சுறுசுறுப்பை உண்டாக்குகின்றது. மேலும் அது பாயும் வழியில் உள்ள எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கின்றது. சூரிய அத்தமனத்தில் ஒளிவெள்ள அதிர்வுகள் மறைகின்றன. அப்பொழுது நோய்க்கிருமிகள் பெருகி அழிக்கும் சக்தியாக செயல்படும். எனவே ஹோமம் செய்தால் சுற்றுப்புறக்காற்றில் கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கும்)
அக்னி (தீ) மற்றும் பிரமிட் பாத்திரம்
பிரமிட் உருவ (பிரமிட் என்ற வடிவத்தை பற்றி ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம், அது அறிந்து கொள்ளப்பட்ட அனைத்து விஞ்ஞான மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விதிகளுக்கு சவாலாக உள்ளது என்றார்கள். (psychic discoveries Behind Iron Curtain) புத்தகத்தில் பிரமிட்டின் உட்பகுதியில் இருக்கும் மின்காந்த சக்தி அதனுள் இருக்கும் பொருட்களின் சிதைவடைதலை தடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. (பிரமிடில் வைக்கபட்ட உடல் சிதைவுறாது. துர்நாற்றம் வீசாது)
தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை தடுக்கும் மூலங்கள் உள்ளதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால், இன்டால், பார்மலின் முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது. யாக மரங்கள் என்று கூறப்படும் ஆல் (Ficul Bengalnesis), அத்தி (Ficus Glometra), புரசு (Butea Prondosa), அரசு (Ficus Religiosa), வில்வம் (Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்ந்த குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றை பசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.
செய்முறை : பசுஞ்சாண விராட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளே காற்றோட்டத்துடன் சரியாக எரிய வைக்க வேண்டும். அதிகாலையில் மற்றும் மாலையில் ஹோமம் நேரத்தில் (சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்) தீ கொளுந்து விட்டு எரியவேண்டும். புகை உண்டாக்கக்கூடாது. ஜுவாலை நெருப்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையான பச்சரிசி – கைக்குத்தல் அரிசியை ஒவ்வொரு நேரத்திற்கு இரண்டு சிட்டிகைகளாக இந்த நெருப்பில் போட வேண்டும். சுத்தமான பசுநெய்யை இந்த நெருப்பில் சொட்டு சொட்டாக விட வேண்டும். இந்த நெய், உப்பு சேர்க்காத பதப்படுத்தும் பொருள் அல்லது ரசாயனங்கள் சேர்க்காத சுத்தமான பசு நெய்யாக இருப்பது முக்கியம். இப்படி வேள்வி தீயை வீட்டில், சரியாக சூரியோதத்திலும், சூரிய அஸ்தமனத்திலும் முறையே இரு தடவை செய்ய வேண்டும்.
இப்படி உருவாக்கும் வேள்வித் தீயிலிருந்து 4 வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.
1 எத்திலின் ஆக்சைடு
2, புரேப்பலின் ஆக்சைடு
3. பார்மால்டிஹைடு
4. ப்யூட்டோ பயோலேக்டோன்.
இந்த வேள்வி தீயால் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். நெய்யை தீயில் சொட்டு சொட்டாக விடும் போது நெய்யானது உஷ்ணத்தைக் கொண்ட அசிட்டிலின் வாயுவை உற்பத்தி செய்கிறது. இது நம்மை சுற்றி இருக்கும் அசுத்தம் அடைந்த காற்றை உறிஞ்சி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.
என்ன நடக்கிறது?
இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும். ஒரு வீட்டில் தொடர்ந்து செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள் உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க ஹோமம் செய்து வரலாம்.
பொது இடங்களில் செய்யலாம்
இந்த செயலை பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் குவிந்து வரும் அரசு மருத்துவமனைகள், மிக அதிக மக்கள் குழுமும் இடங்களில் எல்லாம் கடைப்பிடித்தால் அந்த இடங்களில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்பட்டு சுற்றுப்புறக்காற்று சுத்தமானதாக மாறிவிடும். நோயாளிகளை பார்க்க வரும் நல்ல ஆரோக்கியமுள்ள பலர் இந்த நோய்க்கிருமிகளால் பாதிப்புள்ளாகாமல் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த யாகத்தீ அமையக்கூடும். மேலும் நோயாளிகளின் நோய்க்கிருமிகளும் எளிதில் அவர்களை விட்டு விலகி குணமடைய வாய்ப்பிருக்கிறது. முயற்சிக்கலாமே!
ஹோமம் நன்மைகள்
ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.
அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.
முன் தலைவலி, சைனஸ், தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.
நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாக இருக்கும்.
பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதியை அடைகிறார்கள்.
பிரமிட்டில் மின்காந்த கதிர்களும், காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.
இப்படி இதனை பற்றி பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கப்பட்டிருக்கிறது.
இதை தான் பிராமணர்களாகிய நமக்கு ஔபாஷனம் என்று கொடுத்திருக்கிறார்கள்.

சூரியனை பார்த்தால் சூப்பர் சக்தி கிடைக்கும் -நாசா தகவல்..

*பல ஆயிரம் வருடம் முன்
நம் முன்னோர்கள் சூரியநஸ்காரம் என்று கற்பித்தது*
சூரியனை பார்த்தால் சூப்பர் சக்தி கிடைக்கும் -நாசா தகவல்..
அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது இந்தியாவில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் யோகக் கலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் சூரியனை பார்க்கும் வழக்கமானது, பண்டைய மாயன் நாகரீகம், எகிப்து, திபெத் ஆகிய நாடுகளில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சூரியனை பார்த்தால் டெலிபதி போன்ற 'Super Human Abilities' எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாசா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது.
எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் அறியப்படுகிறது. ஆனால் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளது நாசா.
சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும். இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம்.
பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக்குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
தன்னை 'சூரியக்கதிர்களை உண்பவன்' என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த "ஹிரா ரத்தன் மானக்" என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு நாசா விஞ்ஞானிகளை அணுகினார். நாசாவினால் நிதியுதவி பெறக்கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது, பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன.
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர்.
100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர்வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் மூன்று மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று 'ஹைபோதாலமஸ் பாதை 'என்ற அங்கத்தில் தனது சக்தியை சேர்க்கிறது. கண்களில் உள்ள ரெட்டினாவுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையே 'ஹைபோதாலமஸ் ' என அழைக்கப்படுகிறது.
இதன் பின்னர் இந்த பாதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது. அதன் பின்னர் மன அழுத்தம், பசி ஆகியவை சிறிது, சிறிதாக குறையத் தொடங்குமாம். மேலும் மனிதனிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் மறைந்து போகுமாம்.
சூரியனை பார்த்தல் செயல்முறையை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்குள், உடல் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம்.
இதற்கு காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வண்ணங்கள், நம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவதுதான்.
வண்ண மருத்துவம் எனப்படும் துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும், இதயத்திற்கு மஞ்சள், சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றனவாம். இப்படி வானவில்லில் இருக்கக் கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை போக்குகிறதாம்.
வண்ண மருத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ் தான் பல வண்ணங்களில் இருக்கக் கூடிய சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாது என கூறப்படுகிறதாம்.
சூரியனை பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள், உடலுக்கு தேவை உணவு இல்லை எனவும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல்தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர். அந்த ஆற்றலானது சூரிய ஒளி மூலமே கிடைத்துவிடுவதால், உணவு தேவைப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சூரியக்கதிர்களை நேரடியாக பார்ப்பது கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சரியான நேரத்தில், சரியான வழிமுறையில் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சூரியனை பார்ப்பதை பல ஆண்டுகளாக செய்து வருபவர்களின் கண்களை சோதித்த போது, அவர்களின் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.


*ஸ்ரீ காலபைரவர்*

*ஸ்ரீ காலபைரவர்*
*********************
காலபைரவாஷ்டமி. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் தான் காலபைரவர் அவதாரம் செய்தார். இத்தகைய நன்னாளில் பைரவரைப் பற்றி சிறப்பு பதிவு வெளிவிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது.
பைரவர் என்றாலே மனதில் ஒரு வித பரவசமும், பக்தியும் குடி கொள்ளும் என்பது எல்லோரும் உணர்ந்த ஒரு நிகழ்வு ஆகும். பைரவர் என்பதன் பொருள் இதோ.
பை - காத்தல்
ர – அழித்தல்
வ – படைத்தல்
மூன்று தொழில்களும் செய்யும் நாயகர் பைரவர் ஆவார். அதனால் தான் பைரவ பெருமானுக்கு முத்தொழில்களின் அடையாளமான திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளின் தொழிலையும் செய்யும் ஆற்றல் கொண்டவர். இவர் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர். நிர்வாண கோலத்தில் இருப்பவர். மூன்று கண்களை உடையவர். பாம்புகளை அணிகலனாக கொண்டவர். குண்டலம், சடைமுடியில் மாலை, கத்தி, சூலம், கபாலம், உடுக்கை, கோரைப்பற்கள் மற்றும் நாயை வாகனமாக கொண்டவர்.
சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர் கோலமே உலகெங்கும் வியாபித்து இருக்கும் சிவ வடிவமாகும். பைரவர் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். நம் வாழும் இந்த கர்ம பூமியில் பைரவருக்கு எத்தனையோ கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது. பைரவர் முதலில் ஒரு வடிவமாகவும், பின்பு 4 வடிவமாகவும், அதன் பின்னர் 8 வடிவங்களாகவும், அதே 8 வடிவங்கள் 64 வடிவங்களாகவும் தோன்றினார். எந்த பைரவ வடிவத்தை வழிபாடு செய்தாலும் அது ஆதிசிவனின் அவதாரமான ஸ்ரீ சொர்ண பைரவரையே சென்று சேரும்.
எத்தனை கோவில்கள் இருந்தாலும் மனம் என்ற கோவிலே மிகவும் சிறப்பானது. எத்தனை பைரவர்களும் இருந்தாலும் நம் மனதில் குடி கொண்டிருக்கும் பைரவரே மிக மிக மிக சக்தி கொண்டவர். உலகெங்கும் வியாபித்திருக்கும் பைரவ பெருமான் நம் உள்ளத்தில் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. மனோ பைரவர் நம் உடலோடும், உயிரோடும் கலந்து நிற்பவர். இதை எப்படி உணர்வது? அது ஒன்றும் கடினமான செயல் இல்லை. நாம் உள்ளன்புடன் பைரவ பெருமானை வழிபாடு செய்தாலே போதுமானது. அப்படியென்றால் கோவில்களுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யக்கூடாதா? வழிபாடு செய்யலாம். தவறில்லை.
நம்மில் பலருக்கு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய நேரம் இருக்காது. மேலும் வீட்டில் சொர்ணபைரவர் வழிபாடும் செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். நமது மனமே பெரிய கோவில். நம் மனக்கோவிலில் பைரவ பெருமானை நிறுத்தி வழிபாடு செய்வதே மிகப் பெரிய சிவ வழிபாடு ஆகும். அதற்கு சில மனப்பயிற்சிகள் கண்டிப்பாக தேவை. சதா சர்வ காலமும் மனதில் பைரவர் பெருமானை நினைத்து வந்தாலே போதுமானது. அதாவது பூரண சரணாகதி அடைய வேண்டும். நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பைரவ பெருமானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். எல்லாம் இறைவனின் செயல் என்ற மனநிலை வருகிறதோ அந்த கணத்திலிருந்தே பைரவர் பெருமான் நம் உள்ளங்களி்ல் குடியேறுவார் என்பது திண்ணம்.
அதன் பின்னர் பைரவ பெருமான் நம் மனதிலிருந்து இயங்கும் மாபெரும் பைரவ சக்தியாக செயல்படுவார். நாம் எந்த பைரவரை வழிபாடு செய்தாலும் தவறில்லை. நாம் வணங்கும் பைரவரே நம் மனோ பைரவராக செயல்படுவார். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பைரவ பெருமானை நாம் வழிபாடு செய்ய நமது மனத்தை விட சிறந்த ஆலயம் இந்த உலகத்தில் இருக்க முடியாது. எனவே இவ்வாறு நாம் வழிபாடு செய்யும் காலத்தில் நமது உடல், உள்ளம் மற்றும் வாக்கு இவற்றில் சுத்தம் இருந்தாலே போதுமானது. பைரவர் நமது மனத்தில் வந்து நிரந்தரமாக குடியேறுவார். அருள் புரிவார். தவறுகளை சுட்டிக்காட்டுவார். தண்டனைகளை கொடுத்து திருத்துவார். தமது அருள் மழையில் நனைய வைப்பார்.
அது மட்டுமல்லாமல் நமது கர்மவினைகளை சுட்டெரிப்பார். பிறவியில்லா பெருநிலை அருளுவார். நவகோள்களையும் நமக்கு நன்மை செய்யுமாறு ஆணையிடுவார். நமது பிறவி பயனை அடைய வைப்பார். நாளடைவில் நாம் பிறவிப்பிணியை ஒழித்து ஒரு பைரவ கணமாக மாறி பைரவ உலகத்தில் பைரவருடன் ஆனந்தமாக இனிதுடன் வாழலாம். நமது உடல், உயிர் மற்றும் வாக்கு இவற்றில் பைரவர் கலந்து நிற்பார். நம் பார்வை பட்ட மாத்திரத்தில் அனைவரின் கர்ம வினைகளும் நாசமாகும். பைரவ சொரூபமாகவே நாமும் மாறிடுவோம். பைரவரைப் போல் வேரொரு தெய்வத்தை நாம் இந்த கர்ம பூமியில் காண இயலாது. இந்த உலகத்தில் நம்மை நாம் அனைத்து வித பிரச்சனைகளிலிருந்தும் காத்துக் கொள்ள பைரவரை துணைக் கொள்ள வேண்டும்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் க்லீம் காலபைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்Sh

ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பாருங்கள்..** ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.. உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பாருங்கள்.
.http://4.bp.blogspot.com/-AOZ6rj98BJs/UnXr2GNplYI/AAAAAAAAG7Y/9gdn75VzUMo/s1600/lamp.gifhttp://4.bp.blogspot.com/-AOZ6rj98BJs/UnXr2GNplYI/AAAAAAAAG7Y/9gdn75VzUMo/s1600/lamp.gif

Wednesday, November 22, 2017

27 நட்சத்திரம் அதிஷ்டம் தரும் மரம்/27 stars lucky tree-Siththarkal Manth...

Star symbal gives success - வாழ்க்கையில் வெற்றியை தரும் நட்சத்திர கு...

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.
உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.
இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.
உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.
இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.
அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.
ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.
னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.
இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.
அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.
அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.
இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம், இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்! சரியா!
நன்றி:- தினமலர்

Sivapuranam - Thiruvachakam (Tamil)

Siva Dheeksha |Siva Diksa | சிவ தீக்ஷா | Pa. Rajasekara Sivachariyar

கொடுத்ததை-இழந்ததை--விலகியதை மீட்பது எப்படி? Sri Rajagopala Ganapadigal

குளிக்கும் போது இதை கூறினால் செல்வ வளம் பெருகும்...

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வேண்டுமா.?பரிகாரம் இதோ..!

மனைவியின் ஆயுள் நீடிக்க அனைத்து கணவரும் இதை பாருங்கள்...

ஏழரை சனியில் திருமணம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா.?

நமசிவாய என்பதன் பொருள் என்ன.?இதன் சிறப்பு என்ன தெரியுமா.?

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தின் பொருள் என்ன தெரியுமா.?

சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க எளிய ரகசியம் இதோ.!

உறவுகளுக்குள் சண்டையா.?இங்கு சென்று வாருங்கள் போதும்...

காயத்ரி மந்திரம் சொல்வதால் இத்தனை நன்மைகள் உண்டாகுமா.?

பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது இதை தவறாமல் அணிய வேண்டும்...

Sunday, November 19, 2017

ஆன்மீகத்தில் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...

தீர்க்க சுமங்கலி யோகம் இவர்களுக்கு மட்டுமே/karudayan nommbu

27 nakshatras- Swathi/ ஸ்வாதி நட்சத்திரக்காரர்கள் தெரிந்து கொள்ளவேண்ட...

Planet saturn-Research about saturn-ஆயுள் காரகன் சனிபகவானை யோகமாக்கும் ர...

12ராசியினரும் அறிந்து கொள்ளவேண்டிய கந்தர் ஷஷ்டி கவச ரகசியம்/Kandhar sha...

Friday, November 17, 2017

சர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்.


“எறும்பானது ரவையில் இருந்து சர்க்கரையை பிரித்து உண்ண உண்ண உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு குறைவதை கண்கூடாக பார்க்கலாம்”
அருள்மிகு செளந்தரநாயகி உடனுறை வெண்ணிக்கரும்பேஸ்வரா்
கோவில்வெண்ணி, நீடாமங்கலம் வட்டம். திருவாரூர் மாவட்டம்.
மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, நான்கு யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.
கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் வெண்ணிக் கரும்பேசுவரர் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து வைத்தாற்போல் அருள்பாலிக் கிறார். அதே மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் செளந்தர நாயகி என்னும் அழகிய அம்மை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. திரு மணமாகி கர்ப்பமாக (தலைபிரசவம்) இருக்கும் பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு முடிந்ததும், கொஞ்சம் வளையல்களை எடுத்து வந்து அம்மனின் சன்னிதிக்கு எதிரே கட்டி விட்டு, தமக்கு பிரசவம் எளிதாக நடக்க பிராத்திக்க கண்டிப்பாக சுக பிரசவமாகும் என்பது உண்மை.
நோய்களை விரட்டும் சூரிய மற்றும் சந்திர புஷ்கரணி அமைய பெற்றது.
பழங்காலத்தில் இந்தத் தலம் இருந்த இடம் கரும்புக் காடாக இருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரையாக இங்கு வந்தனர். அப்போது கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி இருப்பதை கண்டு அதனை பூஜித்து வழிபட்டனர். அவர்களில் ஒருவர், இங்குள்ள தல விருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றும் வாதிட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு முனிவர் சிறிதும் யோசிக்காமல் வெண்ணி கரும்பேஸ்வரர் என்று அழைக்கலாம் என்றார்.
வெண்ணி என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் செடியாகும். இதுதான் இத்திருக்கோவிலின் தல விருட்சமாகும். சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களில் மிக முக்கியமானது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெண்ணி கரும்பேசுவரர் சன்னிதிக்கு வந்து, சர்க்கரையும்(சீனி), ரவையும் சம அளவு எடுத்து கலந்து, பிரகாரத்தைச் சுற்றி போட்டு விட்டு வலம் வர வேண்டும். எறும்பு ரவையில் இருந்து சர்க்கரையை பிரித்து உண்ண உண்ண உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு குறைவதை கண்கூடாக பார்க்கலாம், சர்க்கரை காணாமல் போனது போல, நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயும் நீங்கி விடும். பிறகு கோவிலை வலம் வந்து, வெண்ணி கரும்பேசுவரருக்கும் அழகிய நாயகி அம்பிகைக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சுக்ர தோஷம் உள்ளவர்களுக்கும் லிங்கோத்பவர் சன்னதியில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றி சிறப்பு பரிகார பூஜைகள் செய்யபடுகின்றது.
தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற கரிகால சோழன் வணங்கிய “பிடாரி அம்மன்” இங்கு வீற்றுருக்கின்றாள். இந்த அம்பாளை சூடம் ஏற்றி எலும்பிச்சை மாலை அணிவித்து வணங்க உங்கள் எதிரிகள் ஒடுக்கபடுவது திண்ணம். வெட்ட வெளியில் மரத்தின் அடியில் மேல் கூரை இல்லாமல் இந்த அம்பாள் இருக்கின்றாள். மேல் கூரை அமைக்க பல முறை முயன்று பல தடங்கல்கள் ஏற்பட்டதால் முயற்சியை கிராம மக்கள் கைவிட்டு விட்டனர்.
வினைதீர்க்கும் வெண்ணித் தொன்னகர், வெண்ணியூர் என்று அழைக்கப்பட்ட ஊர், இன்று கோவில் வெண்ணி என்று மருவி விட்டது.
கோவிலுக்கு அருகில் கடைகள் இல்லை. எனவே விளக்கு, நெய், அர்ச்சனை பொருட்கள், வஸ்திரம், பூமாலை, சர்க்கரை, ரவை என தேவை படும் அனைத்தையும் தாங்களே முன்னதாக வாங்கி செல்வது நல்லது.
சுமார் 40 வருடத்திற்கு மேலாக கும்பாபிஷேகம் செய்யபடாமல் இருப்பது வேதனையான தகவல்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து செல்லும் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர் அம்மாபேட்டை அடுத்து உள்ளது கோவில்வெண்ணி திருத்தலம்.
ஆலய பூஜை தொடர்பிற்கு :
G.இராஜா குருக்கள் ~ 9626769424


Thursday, November 16, 2017

அபிஷேக நியதிகள்!!

ஆலயத்தில் அபிஷேகம் செய்யும் வரிசை முறை குறித்து அபிஷேகக்கிரமம் கூறும் விவரம்:
1. சுத்த நல்லெண்ணெய் - ப்ரதமம்

2. பஞ்சகவ்யம் - த்விதீயம்
3. மாவு - த்ரிதீயம்
4. நெல்லி முள்ளி - சதுராமலகம்
5. மஞ்சள் பொடி - பஞ்சமம்
6. பஞ்சாமிர்தம் - சஷ்டம்
7. பால் - சப்தமம்
8. தயிர் - அஷ்டமம்
9. பசுநெய் (கோக்ருதம்) - நவமம்
10. தேன் - தசமம்
11. இக்ஷீசாரம் (கரும்புசாறு) - ஏகாதசம்
12. பலம் (பழங்கள்) - த்வாதசம்
13. நாரங்கபலம் (நார்த்தம் பழம்) - த்ரயோதசம்.
14. இளநீர் (கேளமன்னம்) - சதுர்த்தசம்
15. சுதந்தாம்பு (சந்தனம்) - பஞ்சாதசம்.
16. ஸ்நபநம் (கடம்) - சோடசம்.
*அபிஷேகம் செய்ய வேண்டிய நெறி*
அந்தச் சந்தனைத்தைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கினால், அந்த உணர்வின் அலைகள் நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகும்.
அந்த மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நம் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.
பன்னீரைப் போன்ற அந்த நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நமது உயிருக்கு நறுமணம் கிடைக்கின்றது.
அங்கே கனிகள் படைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும் பொழுது, அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணவேண்டும்.
ஆக, அங்கே காணும் பொருள்கள் அனைத்தும் துவைதம். அந்தப் பொருள்களுக்குள் மறைந்துள்ள சத்து அனைத்தும் அத்வைதம்.
சூட்சம நிலைகளிலிருந்துதான் நாம் இந்த உடலைப் பெற்றிருக்கின்றோம். சுவைத்துப் பார்க்கும் பொழுது அந்தச் சுவையினை அறிகின்றோம். அதனையே நுகர்கின்றபொழுது, அந்த மணத்தை அறிகின்றோம்.
அந்த மணத்தைச் சுவாசித்தாலும், இந்த உடலான நிலைகள் கொண்டு சுவையின் தன்மை வருகின்றது. உடலான சிவனுக்கு சுவைமிக்க உணர்வுகள் சேருகின்றது. அந்த மணத்தின் தன்மை உயிரான ஈசனுக்கும் சேர்கின்றது.
ஆக, கண்களிலே பார்ப்பது துவைதம் என்றாலும், அத்வைதம் தான் என்று காட்டுகின்றார் ஆதிசங்கரர். அதாவது, சூட்சம நிலைகள் பெற்றதை உடலாக நீ எவ்வாறு ஆக்கவேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
நீ தேன் அபிஷேகம், பால் அபிஷேகம், கனி அபிஷேகம் இவைகளை அந்தச் சிலைக்குச் செய்வதினால் ஒரு பலனும் தராது. ஆனால், அங்கே காட்டும் பொருளை நீ கண்டுணர்ந்து, அதை எண்ணத்தால் (“சூட்சமத்தால்”) நுகர்ந்து உன் உடலுக்குள் செலுத்தும் பொழுது, அந்த உணர்வின் அலையாக உயிர் இயங்குகின்றது. அங்கே உன் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.
உணர்வின் சத்து, உடலான சிவத்திற்கு அமுதாகச் சேருகின்றது. இப்படி, உன் உடலுக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வின் செயலை உன் உணர்வாக நீ ஆக்கவேண்டும். அந்த மகிழ்ச்சியூட்டும் தன்மை உன் உடலாக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்கு மகிழ்ச்சியூட்டும் செயலை உருவாக்கும் என்று உணர்த்தினார் ஆதிசங்கரர்.அபிஷேக நியதிகள்!!
ஆலயத்தில் அபிஷேகம் செய்யும் வரிசை முறை குறித்து அபிஷேகக்கிரமம் கூறும் விவரம்:
1. சுத்த நல்லெண்ணெய் - ப்ரதமம்
2. பஞ்சகவ்யம் - த்விதீயம்
3. மாவு - த்ரிதீயம்
4. நெல்லி முள்ளி - சதுராமலகம்
5. மஞ்சள் பொடி - பஞ்சமம்
6. பஞ்சாமிர்தம் - சஷ்டம்
7. பால் - சப்தமம்
8. தயிர் - அஷ்டமம்
9. பசுநெய் (கோக்ருதம்) - நவமம்
10. தேன் - தசமம்
11. இக்ஷீசாரம் (கரும்புசாறு) - ஏகாதசம்
12. பலம் (பழங்கள்) - த்வாதசம்
13. நாரங்கபலம் (நார்த்தம் பழம்) - த்ரயோதசம்.
14. இளநீர் (கேளமன்னம்) - சதுர்த்தசம்
15. சுதந்தாம்பு (சந்தனம்) - பஞ்சாதசம்.
16. ஸ்நபநம் (கடம்) - சோடசம்.
*அபிஷேகம் செய்ய வேண்டிய நெறி*
அந்தச் சந்தனைத்தைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கினால், அந்த உணர்வின் அலைகள் நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகும்.
அந்த மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நம் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.
பன்னீரைப் போன்ற அந்த நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நமது உயிருக்கு நறுமணம் கிடைக்கின்றது.
அங்கே கனிகள் படைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும் பொழுது, அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணவேண்டும்.
ஆக, அங்கே காணும் பொருள்கள் அனைத்தும் துவைதம். அந்தப் பொருள்களுக்குள் மறைந்துள்ள சத்து அனைத்தும் அத்வைதம்.
சூட்சம நிலைகளிலிருந்துதான் நாம் இந்த உடலைப் பெற்றிருக்கின்றோம். சுவைத்துப் பார்க்கும் பொழுது அந்தச் சுவையினை அறிகின்றோம். அதனையே நுகர்கின்றபொழுது, அந்த மணத்தை அறிகின்றோம்.
அந்த மணத்தைச் சுவாசித்தாலும், இந்த உடலான நிலைகள் கொண்டு சுவையின் தன்மை வருகின்றது. உடலான சிவனுக்கு சுவைமிக்க உணர்வுகள் சேருகின்றது. அந்த மணத்தின் தன்மை உயிரான ஈசனுக்கும் சேர்கின்றது.
ஆக, கண்களிலே பார்ப்பது துவைதம் என்றாலும், அத்வைதம் தான் என்று காட்டுகின்றார் ஆதிசங்கரர். அதாவது, சூட்சம நிலைகள் பெற்றதை உடலாக நீ எவ்வாறு ஆக்கவேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
நீ தேன் அபிஷேகம், பால் அபிஷேகம், கனி அபிஷேகம் இவைகளை அந்தச் சிலைக்குச் செய்வதினால் ஒரு பலனும் தராது. ஆனால், அங்கே காட்டும் பொருளை நீ கண்டுணர்ந்து, அதை எண்ணத்தால் (“சூட்சமத்தால்”) நுகர்ந்து உன் உடலுக்குள் செலுத்தும் பொழுது, அந்த உணர்வின் அலையாக உயிர் இயங்குகின்றது. அங்கே உன் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.
உணர்வின் சத்து, உடலான சிவத்திற்கு அமுதாகச் சேருகின்றது. இப்படி, உன் உடலுக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வின் செயலை உன் உணர்வாக நீ ஆக்கவேண்டும். அந்த மகிழ்ச்சியூட்டும் தன்மை உன் உடலாக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்கு மகிழ்ச்சியூட்டும் செயலை உருவாக்கும் என்று உணர்த்தினார் ஆதிசங்கரர்.

நல்ல நாள் - நல்ல நேரம் பார்க்கலாம் --

நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள் .


1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.
3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.
6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
7. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.
10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.
11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.
13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.
14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.
15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.
16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.
17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.
18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.
19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.
20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.
21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.
22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.
*இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்.?


ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும். வாங்க பார்க்கலாம்
_*நமஸ்காரம்:*_
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.
_*மெட்டி:*_
திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.
_*பொட்டு:*_
ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ளல ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும்.
_*கோவில் மணிகள்:*_
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.
_*துளசியை வழிபடுதல்:*_
இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.
_*அரசமரம்:*_
பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.
_*உணவருந்திய பின் இனிப்பு உண்ணுது:*_
இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
_*கைகளில் மருதாணி வைப்பது:*_
அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.
_*தரையில் அமர்ந்து உண்ணுவது:*_
நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்
காலையில் சூரியனை வழிபடுதல்:-
விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.
_*கோவிலை வலம் வாருங்கள்:*_
உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையல் சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும், வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன, பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள், புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்..


■ பிறந்த கிழமையின் ஆன்மிக வழிபாடு !.


***************************************************
● பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும், அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ஒருவர் பிறந்த கிழமையில் எந்த மாதிரியான ஆன்மிக வழிபாட்டை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
● ஞாயிற்றுக்கிழமை
ஞாயிறன்று அதிகாலையில் 'ஆதித்ய ஹ்ருதயம்" பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்க்க வேண்டும். இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசை பயன் தருவதாக இருக்கும். அரசு வழிகளில் காரிய வெற்றி பெற சு ரிய ஹோரை காலத்தில் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
● திங்கட்கிழமை :
திங்கட்கிழமை அதிகாலையில் தாயை வணங்கி, அவரின் ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பு க்களால் அம்பாளை வழிபாடு செய்து கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும்.
● செவ்வாய்க்கிழமை :
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பு மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது வெற்றிகளைத் தரும்.
● புதன்கிழமை :
புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயிறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்களில் ஆடை இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து பு ஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.
● வியாழக்கிழமை :
வியாழக்கிழமை அன்று சு ரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பு க்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். வியாழன் அன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சு ழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பு ச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது நன்மைகளை தரும்.
● வெள்ளிக்கிழமை :
வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பு க்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது வெற்றியை தரும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலம், இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.
● சனிக்கிழமை :
சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பு , வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. பு ஜைக்கு பிறகு காகத்திற்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிக்கலாம். ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளை தரும்..