Sunday, December 31, 2017

வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் வரும் என்கிறார்களே ஏன்?

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்கவும், கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபட, பண...

திருவாதிரை_களி

திருவாதிரை_களி_கூட்டு: பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகு வெட்டி பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தை பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.
-
வீட்டில் ஒன்றும் இல்லாவிட்டாலும், இருந்த கொஞ்சம் அரிசி மாவையும், வெல்லத்தையும் வைத்து சேந்தனின் மனைவி களியாக சமைத்தார். இருக்கும் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டும் செய்து சாப்பாடு போட்டார். மறுநாள் தில்லை (சிதம்பரம்) ஆலயத்தில் இறைந்து கிடந்த களியை கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியை தொடர்ந்து சென்ற அவர்கள் சேந்தனாரின் வீட்டை அடைந்து, நடந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். 
-
இது நடந்தது ஒரு மார்கழி மாதம் ஆருத்ரா [திருவாதிரை] நக்ஷத்திரத்தின் போது. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய புனித நாள். இன்றும் ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து, நடராஜனுக்கு நிவேதனம் செய்து பின்னர் சாப்பிடுவது வழக்கம். 
-
களியும் கூட்டும் செய்து நடராஜனுக்கு நிவேதனம் செய்து, கோயிலுக்குப் போய் நடராஜனை சேவித்து, அவனது அருளாசிகளைப் பெறுவோம்.
-
#முதலில் #திருவாதிரை #களி #செய்முறை #பார்ப்போம்:
-
பச்சரிசி --- 250 கிராம் 
பாசிப்பருப்பு --- 100 கி (பயத்தம்பருப்பு)
முந்திரி --- 10
நெய் ---- 3 டீஸ்பூன்
ஏலக்காய் --- 3
தேங்காய் (துருவியது) ---- 1 மூடி [நாங்கள் தேங்காய் சேர்க்க மாட்டோம்]
வெல்லம் ---- 350 கிராம்
-
அரிசியை நன்கு அலம்பி, களைந்து உலர்த்திக் கொள்ளவும்.
-
அரிசியையும் பயத்தம்பருப்பையும் தனித்தனியே சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்திற்கு உடைத்துக் கொள்ளவும்.
-
அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, இரண்டரை தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
-
நன்கு கொதி வரும்போது உடைத்த அரிசி-பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக தூவினாற்போல போடவும் - கட்டி தட்டி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
-
முக்கால் பதம் வெந்ததும் சிறிது நெய், தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும். [தேங்காய் வேண்டாதவர்கள் நெய் மட்டும் சேர்க்கவும்]
-
மேலும் 10 நிமிஷங்கள் இளம் சூட்டில் (SIMMER) வைத்து கிண்டி, நன்கு வெந்தவுடன் இறக்கிவிடவும்.
-
மீதி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து, ஏலக்காயை பொடித்து களியில் போட்டு கிளறி விடவும்.
-
திருவாதிரைக் களி தயார் .. ஏழுகறி கூட்டுடன் சேர்த்து சாப்பிடவும்.
#அடுத்து, #ஏழு-#கறி #கூட்டு ::
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு - ஒவ்வொன்றும் 100 கிராம். [தோலுரித்துக் கொள்ளவும்]
-
வாழைக்காய் - ஒரு பாதி; பூசணி, பரங்கிக்காய், ஒவ்வொன்றும் ஒரு சிறு பத்தை
அவரைக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், பச்சைப்பட்டாணி, சௌசௌ, காரட் --- 100 கிராம் ஒவ்வொன்றும்.,
மொச்சை முதலான சில கொட்டை வகைகள், வேர்க்கடலை, கொத்துக்கடலை (முதல் நாளே ஊறவைத்துக் கொள்ளவும்) (ஒவ்வொன்றும் 1/2 கைப்பிடியளவு)
கறிவேப்பிலை
துவரம் பருப்பு ---- 3 டேபிள்ஸ்பூன்
புளி ---- எலுமிச்சம் பழ அளவு.
சாம்பார் மிளகாய்ப் பொடி ---- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்
உப்பு,
-
#அரைத்துக் #கொள்ள --
தனியா 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
வெந்தயம் -- 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் -- 8 - 10
தேங்காய் துருவியது --- 2 டேபிள்ஸ்பூன்
-
#செய்முறை:
தேங்காய் தவிர மற்றவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து வறுத்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
எல்லா காய்களையும் மீடியம் சைஸில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை நன்கு கரைத்து, உப்பு கொஞ்சம் போட்டு, அதில் காய்களை போட்டு வேக விடவும்.
சாம்பார் பொடி, மஞ்சள் தூள் போடவும். சுமார் 15 நிமிஷங்கள் வேகட்டும்.
காய்கள் வெந்தவுடன், அதில் வெந்த துவரம்பருப்பை சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்க்கவும்.
உப்பு போடவும். கறிவேப்பிலை போட்டு எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.
5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
எழுகறி கூட்டு தயார்.
திருவாதிரை நன்னாளில் களியோடு சேர்த்து சூடாக பரிமாறவும்.ஆதிரை பதிகம்

திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ் பெற்று இன்று வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.

"ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே"

என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.

தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!

இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


பாடல் எண் : 01
முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
மேற்புறத்தில் முத்துக்கள் மற்றும் மணிகள் பதிக்கப்பட்ட பந்தலின் கீழே மிகுந்த பொலிவுடன் அமர்ந்து இருக்கும் பெருமானுக்கு பொன்னால் செய்யப்பட்ட பிடியினை உடைய கவரி வீசப்படுகின்றது. திருவீதி உலா வரும் சிவபெருமானை, சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்களும், பாவையர்களும் சூழ்ந்து கொண்டு சிவபெருமானுடன் திருவீதிவலம் வந்தனர். மேலும் இறைவனுக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட பொருட்கள் எடுத்துவரப் பட்ட ஊர்வலத்தில், எலும்பு மாலைகள் மற்றும் தலை மாலைகள் அணிந்து வித்தியாசமான கோலத்துடன் உலவும் மாவிரதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சிவபிரான், திருவாரூர் நகரத்தில் மார்கழி ஆதிரைத் திருநாளில் சிறந்த பொலிவுடன் உலா வந்த கோலம், அமைந்தது: அதனைக் கண்ட அடியார்களின் மனதினில் நிலைத்து நின்றது.

பாடல் எண் : 02
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணி தான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
திருவாரூருக்கு மிகவும் அருகில் உள்ளவர்களும், திருவாரூருக்குத் தொலைவில் இருப்பவர்களும், நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய பலரும், தங்களது பிறவிப்பிணி தீர வேண்டும் என்று சிவபிரானை வழிபடும் அடியார்களும், எந்தன் பொன்னே, எனது மணியே, மைந்தனே, மணாளனே என்று இறைவனை அழைத்து துதிப்பார்களும் ஆரூர்த் ஆதிரைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள். கலந்து கொள்ளும் பலவிதமான அடியார்களின் கருத்துக்கு அணியாகத் திகழ்பவன் சிவபிரான் ஆவான். இவ்வாறு அனைத்து தரத்தினரையும் அங்கமாகக் கொண்ட ஆரூர்த் திருவிழாவின் மாண்பு காண்போரின் கருத்தில் நிலைத்து நிற்கின்றது.

பாடல் எண் : 03
வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளி தோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
நகரத்தின் ஒவ்வொரு வீதியும் வெண்கொடிகள் கட்டப்பட்டும், விதானங்களில் ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்டும், சிறந்த ஒளியுடன், குற்றங்கள் ஏதும் இல்லாத, உயர்ந்த வகையைச் சார்ந்த முத்துக்களும் பவளங்களும் சேர்த்து கட்டப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், மார்கழி ஆதிரைத் திருநாளில் வீதி வலம் வரும் பெருமானை வரவேற்கும் முகமாக அழகு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு நகரமே விழாக் கோலம் கொண்டு, ஆதிரை நாளன்று இருப்பது காண்பர் நினைவில் எங்கும் நீங்காது இருக்கும்.

பாடல் எண் : 04
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
நாள்தோறும் காலையில் தேவர்கள் வணங்கும் படி, தெய்வத்தன்மை பெற்று சிறப்பு வாய்ந்த சிவபிரானின் மார்கழி மாதத்து ஆதிரைத் திருவிழாவில், பங்கேற்கும் அடியார்கள் சிவபிரானது உயர்ந்த குணங்களையும் அருட்செயல்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், மற்றவர்களுடன் கூடி இறைவனது புகழினைப் பாடிக்கொண்டும், சென்றனர். அவ்வாறு பேசிக் கொண்டு செல்கையில், சிவபிரானின் பேரில் தங்களுக்கு இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, தாங்கள் சிவபிரானைப் பற்றி சொல்லும் கருத்தே சரியென்று, மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படாமல், மறுபடியும் மறுபடியும் தங்களது கருத்தையே வலியுறுத்தி பித்தர் போல் பிதற்றுகின்றார்கள். இவ்வாறு அடியார்களின் அன்பு வெளிப்படும் ஆதிரைத் திருநாளின் நினைவுகள், அதனைக் காணும் அடியார்களின் மனதினில் என்றும் நிலைத்து நிற்கும்.

பாடல் எண் : 05
நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
நிலவைப் போன்று வெண்ணிறம் கொண்ட சங்குகள், பறை எனப்படும் தோல் இசைக் கருவிகள், எழுப்பும் ஓசையினோடு, பல மங்கையர்கள் இடைவிடாது ஆடுவதால், அவர்கள் காலில் கட்டிய சலங்கைகள் எழுப்பும் ஒலியும் இணைந்து தோன்றும் ஒலி, மேகங்கள் உண்டாக்கும் இடியோசை போல் ஒலிப்பதால், மழை வரும் என்று எதிர்பார்த்து மகிழ்வுடன் தங்களது தோகையை விரித்து நடனமாடும் மயில்கள், மழை ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்து வருந்துகின்றன. இவ்வாறு, ஆரவாரம் மிகுந்து, மங்கையர்களின் நடனமும் மயில்களின் நடனமும் நடைபெறும் ஆரூர் ஆதிரைத் திருவிழாவின் அழகு காண்போர் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கின்றது.

பாடல் எண் : 06
விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்
தம் மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
சூழ்ந்திருக்கும் அடியார்கள் சிவபிரானின் புகழைக் கூறக் கேட்ட அடியார்கள் சிலரின் குரல் விம்மியது; மற்றும் சில அடியார்கள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது; சிலர் தங்களின் விழிகளை அகல விழித்து உரத்த குரலில் ஆரவாரத்துடன் அனைவரையும் விரட்டுமாறு பேசினார்கள்; சிலர் அளவு கடந்த மகிழ்ச்சியால், தாம் செய்வதை உணராமல் தங்களது தலையினை மற்றவர்களின் தலையுடன் மோதினர்; இவ்வாறெல்லாம் உணர்ச்சி மிகுதியால் தாம் செய்வது யாது என்று அறியாமல், பல விதமான செயல்களைப் புரியும் தொண்டர்கள், எம் தலைவனே, எம்மை அடக்கி ஆட்கொண்டவனே, என் அப்பனே என்று குரல் கொடுக்க, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் சிவபிரானின் ஆரூர்த் திருவிழாவின் காட்சிகள், காண்போரின் உள்ளத்தில் நிலை பெற்று விளங்குகின்றன.

பாடல் எண் : 07
செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப்பேற்றினை உடைய செல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்; மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவாகும்.

பாடல் எண் : 08
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்ல
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
சிவபெருமானின் திருவீதி உலா முன்னர், தங்களது தலைகளைத் தாழ்த்தி இறைவனை வணங்கும் தேவர்கள் முன்னே செல்ல, சிவபெருமானின் உலாவின் பின்னர், வடிவாக அமைந்த மூங்கில் போன்று அழகான தோள்களைக் கொண்ட தேவமங்கையர்கள் செல்ல, திருநீற்றினைப் பூசிய அடியார்கள் நாற்புறமும் இறைவனைச் சூழ்ந்து செல்ல மிகவும் அழகிய காட்சியாக உள்ள ஆரூர் திருவிழாக் கோலம் காண்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.

பாடல் எண் : 09
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
அனைவருக்கும் அன்பனாக விளங்கும் சிவபிரானின் ஆதிரைத் திருநாளில் குழுமிய அடியார்கள், சிவபிரானைத் தொழாத நாட்கள் துன்பமான நாட்கள் என்றும், சிவபிரானைத் தொழுது வணங்கும் நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மிகவும் இன்பம் மிகுந்த நாட்கள் என்றும், பேசுவார்கள்; மேலும் இறைனை நோக்கி, இறைவா, நாங்கள் எப்போதும் உனது திருத்தொண்டில் ஈடுபட்டு உந்தன் பின்னர் வருமாறு நீ அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். இவ்வாறு அடியார்களால் மிகவும் சிறப்பாக கருதப்படுவது சிவபிரானின் ஆதிரைத் திருநாள் ஆகும்.

பாடல் எண் : 10
பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்த
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து
ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

பாடல் விளக்கம்:
உலகினைச் சூழ்ந்து நிற்கும் கடலைப் போன்று எல்லை காண முடியாத இறைவனை, சிறப்பான பத்து குணங்களை உடைய அவனது அடியார்கள் பணிந்து வாழ்த்துவதால், சிறப்பான பாடல்களும் ஆடல்களும் நீங்காத பெருமையை உடைய ஆரூர் நகரத்தின் ஆதிரைத் திருவிழாவின் சிறப்பினை புகழ்ந்து பேசாத ஊர்களே உலகத்தில் இல்லை; இவ்வாறு ஆதிரைத் திருநாளின் சிறப்பு உலகத்தவர் அனைவரின் சிந்தையிலும் நிலைத்து காணப்படுகின்றது.

தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன் ஐயா

"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Fa

Saturday, December 30, 2017

திருவாதிரை சைவர்கள் கொண்டாட வேண்டிய முக்கியமான பண்டிகை

திருவாதிரை சைவர்கள் கொண்டாட வேண்டிய முக்கியமான பண்டிகை என்கிறார் என் திருமுறை ஆசிரியர். திருவாதிரைப் பற்றிய குறிப்புகள் நம் திருமுறைகளிலோ, அல்லது தமிழ் இலக்கியங்களிலோ இடம் பெற்றிருக்கின்றனவா?
இடம் பெற்றிருக்கின்றன. திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய பதிகத்தில் சைவசமயத் தொடர்பான பல விழாக்களைக் குறிப்பிட்டு அவற்றைக் ’காணாதே போதியோ பூம்பாவாய்’ எனக் கூருகின்றார். அப்பதிகத்தில் ஒரு பாடலில் ’காபலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்கின்றார். அப்பர் தேவாரத்தில் ’திருவாதிரைத் திருப்பதிகம்’ என்று ஒரு பதிகமும் (10 பாடல்கள்) அமைந்துள்ளது. திருவாதிரையின் சிறப்பினைக் கூறும் இப்பதிகத்தின் ஒவ்வோரு பாடலின் இறுதி வரியிலும் ’ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’என முடிகின்றது. சேக்கிழாரின் பெரிய புராணத்தில் அப்பர் புராணம் (2398), சம்பந்தர் புராணம்(1505) ஆகியப் பாடல்களில் திருவாதிரைப் பற்றிய குறிப்பு வருகின்றது. 9ம் திருமுறையான திருப்பல்லாண்டும், கொடிக்கவி என்னும் சாத்திர நூலும் எழுந்த நாள் திருவாதிரை நன்னாநாளே ஆகும். தமிழ் இலக்கியத்தில் பரிபாடலில் 8வது செய்யுளில் ”ஆதிரை முதல்வன்’ என்னும் சிவபெருமானைக் குறிக்கும் ஒர் தொடர் வருகின்றது. கலித்தொகை அதன் பகுதியாகிய நெய்தற்கலியில் ’அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த’ என்னும் தொடர் (கலி 150-20), திருவாதிரை நாளன்று சிவபெருமான் அணிகளை அணிதிருப்பதுப் போல அமைந்த ஒரு செண்பக மரம் பற்றிய தொடர் வருகிறது.

திருச்சிற்றம்பலம்

 
 
*
 

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட 
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ் 
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 

*

திருமுறைகளின் சிறப்பு:-
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால். 
*
 பன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள்:-
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாத வூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்துருத்தி நம்பி
வருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திரு வாலி யமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திரு ஆல வாயார்
ஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார்
திருமேவு பட்டினத்தடிகளொடு
நம்பியாண்டார்நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்விகத் தன்மையோரே.

*
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத 
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் 
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்


திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


Natchathira Palangal in tamil | natchathira trees | Which tree gives goo...

அண்ணாமலையாரின் அருள் பெற்ற அதிசய சித்தர் || Rishi Seshathri Swamigal his...

பெண் சாபம் நீங்க || Causes for Curse of women || Unknown Facts In Tamil

Sthree Shabam Remedy! ஸ்த்ரீ சாபம் நீங்க! பெண் சாபம் தோஷம் விலக! Family ...

இந்த தானம் மட்டும் செய்தால் 21 தலைமுறைக்கும் புண்ணியமாம்

ஏழு ஜென்ம பாவங்களை போக்க சித்தரின் மிக எளிய வழி

சித்தர்கள் சொன்ன பல ஜென்மத்து பாவங்கள் தீர ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்

Tuesday, December 26, 2017

ஆன்மீக சூட்சமங்கள்.

நீங்கள பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். கோயிலுக்கு போனாலும் சரி போகவில்லை என்றாலும் சரி., இதை முதலில் படியுங்கள். உங்களுக்கு வேலை கிடைக்கும் வியாதி போகும்., திருமணம் நடைபெறும் அன்பர்களே.
சகல செல்வங்கள் நிலைக்க
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்
.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள
21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும
22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள
23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும
24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்
.27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது
.31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும
32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது
.33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும
37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.,
38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப் பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு, 100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான
39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும். ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள
40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான
41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும
43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும
44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும
45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கான ஆன்மீக மூல காரணங்களின் ஒரு அறிமுகம்

வீட்டில் இந்த பறவைகளை வளர்த்தால் தெய்வ சக்தி கூடும்

கர்ம வினைகளை தீர்க்கும் எளிய முறை.

Saturday, December 23, 2017

வீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!

வீட்டில் மூலிகை சாம்பிராணியை போடுவதால் இவ்வளவு நன்மைகளா!

சாம்பிராணி !!|21 மூலிகைகள் தூபம்!!!முக்கியமான இரண்டு மூலிகைகள் |கார்த்த...

நோய்களை போக்கும் சாம்பிராணி தூபம் ட்ரை பண்ணிப் பாருங்க அப்புறம் தெரியும்

Vethathiri Maharishi Arutkappu - வேதாத்திரி மகரிஷி அருட்காப்பு

Sadasiva Brahmendra history | Miracle of Sadasiva Brahmendra siddhar Ne...

Siddhar miracles | 18 Siddhar ragasiyam in tamil | which siddhar is best...

Friday, December 22, 2017

* தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம் (கடன் நிவாரண ஸ்தோத்ரம்)1. விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய
2. கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
3. பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
4. சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய
5. பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
6. கெளரி விலாஸ புவனாய, மஹேஷ்வராய
பஞ்சானனாய சரணாகத கல்பகாய
ஷர்வாய, சர்வ ஜகதா மதிபாய - தஸ்மை
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
7. பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
8. ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
9. முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம்
சர்வ தாரித்ரிய நாசனம்
சர்வ சம்பத்கரம் ஷீக்ரம்
புத்ர பெளத்ராபி வர்தனம்.

சனிபகவானின் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா.?

பிக்க்ஷாடனமூர்த்தி - சிவன் உண்மையில் எதை பிச்சை கேட்டார்.

Thursday, December 21, 2017

"கோலம் போடுவதால் இருக்கும் நன்மைகள்"

ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.
மார்கழி மாத பனிக்காற்று மருத்துவகுணம் கொண்டது. ஓசோனின் காற்று உடலில்பட்டால், அதிகாலைவேளை, பிரம்ம முகூர்த்தம் காற்று நன்மை என்பதாலும் கோலம் வரையும் மாதமாக இந்த மார்கழ
ி மாதம் இருக்கிறது. அத்துடன் மார்கழி மாதத்தில் அநேகமாக சுபநிகழ்ச்சிகள் செய்யாமல் இருப்பார்கள்.
அதனால் சுபசின்னமான கோலங்களை வீட்டின் வாசலுக்கு முன் பதிக்க வேண்டும். அப்படி செய்வதால் அடுத்து வருகிற தை மாதத்தில் அந்த குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்றும் அப்படி சுபநிகழ்ச்சிகள் செய்யும்போது தடையேதும் ஏற்படாமல் இருக்க ஸ்ரீமகாலஷ்மி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.
மார்கழி மாதம் என்று மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் கோலம் போடும் போதும், கோலங்களுக்கு மும்மூர்த்திகளின் அருளாசி கிடைக்கச் செய்யும் மகிமையும் இருக்கிறது. அது எப்படியென்றால், கோலமாவின் நிறம் வெண்மை. இது பிரம்மாவை அழைக்கிறது. கோலம் போட்டபிறகு அந்த கோலத்தை சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை அழைக்கிறது. கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்திற்கு அழகு சேர்ப்பதற்காக பசு சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணிபூவை வைப்பார்கள்.
பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியை குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்தினுள் அழைக்கிறது. இதனால் இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்கு கிடைக்கிறது. பசு சாணமும் பூசணிப்பூவும் தினமும் கிடைக்காதபோது, சாதாரண கோலமாவுக்கு பதிலாக பச்சரிசிமாவில் கோலம் போட்டால் மும்மூர்த்திகளின் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும்.
நம் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்க, நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியதுதான் கோலங்கள்.
கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.
தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது.
தினமும் அரிசிமாவில் கோலம் போட்டால், நம்மை அறியாமலே பல புண்ணியங்கள் தேடிவரும். இப்படி தினமும் கோலங்கள் போட்டு பல நன்மைகளை பெறுவோம்.

margali tamil month specialமார்கழியின் சிறப்பு

மார்கழி நோன்பு - பாவை நோன்பு:

கர்மா தீர சில எளிய வழிகள் | what is karma | how it works

Sadhananda Swamigal: அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம் [ ABISHEGAM (Bathing t...

Sadhananda Swamigal: அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம் [ ABISHEGAM (Bathing t...: ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்ட...

Wednesday, December 20, 2017

கோசேவையால் வாழ்வு பெற்ற திலீப சக்ரவர்த்தி வரலாறு

திருசெங்கோட்டு மலை-அறுபதாம் படி

திருசெங்கோட்டு மலை-அறுபதாம் படி

http://www.karikkuruvi.com/2014/08/blog-post_7.htmlபசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?

கோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு!

கோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு!: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, ...

Gomatha Astotharam

​கோ பூஜை செய்யும் முறை

கோ பூஜை அதன் சிறப்பு -(ஸ்ரீ காஞ்சி  காமகோடி   மஹாபெரியவா)
கோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று பதிவுடன் அழைக்கிறோம். ஆதிசங்கரரிடம் `அன்னை போன்றவள் யார் என்று கேட்டதற்கு பசு என்று சொல்லி அதனைப் பெருமைபட வைத்திருக்கிறார்.
இந்த சக்தி உடைய பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த `கோமாதா பூஜை’ செய்யும் முறையைப் பார்க்கலாம். வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை.
பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி, இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம். `பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. முதலில் பசுவுக்குரிய அருகம்புல், அரிசி, வெல்லக் கலவை, வாழைப்பழம், தேங்காய், தாம்பூலம், பால் சாதம், பூமாலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பசுவை கன்றுடன் அழைத்து வந்து, குளிக்க வைத்து, கொம்புகளில் மஞ்சள் பூசி மாலை அணிவிக்கவும். அருகம்புல்லை கொடுத்து வீட்டுக்கு அழைப்பது போல ஸ்வாகதம்,
ஸ்வாகதம், கோமாதா ஸ்வாகதம்,
ஸ்வாகதம், மகாலஷ்சுமி ஸ்வாகதம்,
ஸ்வாகதம், அஷ்டலஷ்சுமி
-என்று 3 முறை கூற வேண்டும்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, சுமுகஸ் சைக தந்தஸ்ச ஹேரம்ப ஸ்கந்த பூர்வஜ -என்று சொல்லி அதற்கு 16 மலர்கள் வைக்கவும். அல்லது `பாலும் தெளிதேனும்’-என்று தொடங்கும் பாடலைப் பாடி, மலர் போட்டு, பழம், கல்கண்டு படைத்தும் ஆரத்தி காட்டலாம்.
பசுவின் முன் ஒரு பலகை வைத்து, அதன் மேல் காமாட்சி தீபம் (அ) கமல தீபம் என்கிற ஐஸ்வர்ய தீபத்தை (பொதுவாக இந்த தீபத்தை கேரளா, ஆந்திரா மற்றும் வடநாடுகளில் ஏற்றுவார்கள். நடுவில் குழாய் வடிவில் இருக்கும்) ஏற்றி வைக்கவும். எட்டு விதமான வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு, முதலில்-`காமதேநேர: ஸமுத் பூதே ஸர்வதாம பலப்ரதே த்யாயாமி ஸெளரபேயி த்வாம் வ்ருஷபத்னி நமோஸ்துதே என்று 3 முறை சொல்லவும்.
அடுத்தது, இந்த பூஜையின் முக்கிய அம்சமான அங்க பூஜை. கீழே தந்துள்ள மந்திரங்களை உச்சரித்தபடியே பசுவின் உடற்பாகங்களில் குங்குமத்தை இட்டு பூஜிக்க வேண்டும்.
இரண்டு கொம்புகளின் நடுவே ஓம் சிவரூபாய நம: வலக்கொம்பில்-பிரம்மனே நம:
இடப்புறக் கொம்பில்-விஷ்ணுவே நம:
வலக்காது நுனியில்-தீர்த்தேப்யோ நம:
இடக்காது நுனியில் – ஸ்தாவர ஐங்கமேப்யோ நம:
மூக்கு நுனியில் – ஜ்யேஷ்டாய நம:
வலது கண்ணில் – சூர்யாய நம:
இடக் கண்ணில் – சந்த்ராய நம:
பற்களில் – மாருதாய நம:
தாடையில் – வருணாய நம:
மேலுதடு – யட்சேப்யோ நம:
கீழுதடு- யமயே நம:
கழுத்தில் – இந்த்ராய நம:
குளம்பு நுனி – நாகேப்யோ நம:
குளம்பு நடுவே-கந்தவர்வேப்யோ நம:
குளம்பு மேற்பாகம்-அப்சரேப்யோ நம:
கால்களில் – கணேப்யோ நம:
நாடிகளில் – நேத்ரேப்யோ நம:
மடியில் – ப்ருகுப்யோ நம:
மடி நுனியில் – சாத்தேப்யோ நம:
இதயத்தில் -உமாதேவ்யாய நம:
வயிற்றில் – பூமிதேவ்யாய நம:
யோனியில் – மகாலஷ்மியே நம:
தோள்களில் – தேவேப்யோ நம:
பிறகு பிடித்து வைத்த கோமயத்தில்-பிரும்மனே நம:
கோ ஜலத்தில் – விஷ்ணுவே நம:
நெய்யில்- ருத்ராய நம:
தயிரில் -ஈஸ்வராய நம:
பாலில் – சதாசிவாய நம:
– என்று சொல்லியபடி அர்ச்சனை செய்யவும்.
பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,
ஓம் சுரப்யை ச வித்மஹே காமதாத்ரேய தீமஹி தன்னோ தேனு:
ப்ரசோதயாத்: என்று சொல்லவும்.
அடுத்து குங்குமம், மலர்களால்..
ஓம் காமதேனவே நம:
ஓம் பயஸ்வின்யை நம:
ஓம் ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம:
ஓம் வ்ருஷபத்ன்யை நம:
ஓம் சௌரபேயை நம:
ஓம் மகாலக்ஷ்மியை நம:
ஓம் ரோகிண்யை நம:
ஓம் ஸ்ருங்கிண்யை நம:
ஓம் க்ஷíரதாரிண்யை நம:
ஓம் காம்போஜ ஜனகாயை நம:
ஓம் பப்ல ஜனகாயை நம:
ஓம் யவன ஜனகாயை நம:
ஓம் மாஹேயை நம:
ஓம் நைசிக்யை நம:
ஓம் சபலாயை நம:
ஓம் ஸ்ரீம் காமதேனவே நம:
– என்று சொல்லி அர்ச்சிக்கவும்.
பிறகு தூப, தீபம் காட்டி, பொங்கல், அரிசி, வெல்லக் கலவையை நிவேதனம் செய்து, தேங்காய், பழம் படைத்து அதற்கு ஆரத்தி செய்து, பிறகு அவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவும். பசுவை மூன்று முறை வலம் வந்த பிறகு,
கோமாதாவே… எங்கள் குலம் தழைத்திடவும் ஏற்றம் பெற்று வாழ்ந்திடவும் என்றும் பக்கத்துணையிருக்க திருமகள் அருளைக் கூட்டி நீடியே எட்டாத செல்வமும் எட்டவைப்பாய் பசியும் பிணியும் போக்கி விடும் பாலைத் தந்திடும் மாதாஜி செல்வத்திருவே போற்றியம்மா! என்று கூறி கோமாதாவைச சுற்றி வந்து விழுந்து வணங்கி அதன் பின்பகுதியை தொட்டு வழிபடவும். கோமாதாவின் வாழ்த்தினால் வளங்கள் பெருக வாழ்த்துகிறோம்.
பசு உடலில் வேதங்கள்……….
கோமாதா என்று போற்றப்படும் பசுவுக்கு ரிக்வேதம் பின்பக்கமாகவும், யஜீர்வேதம் நடுப்பகுதியாகவும், சாமவேதம் கழுத்தாகவும், இஷ்டம் பூர்த்தம் ஆகியன இரு கொம்பு களாகவும், அதன் உரோமங்கள், சகல சுத்தங்களாகவும், சாந்தி கர்மம் புஷ்டி கர்மம் ஆகியவை கோமய மாகவும், வேதம் வகுத்தெடுத்த நான்கு வருணங்களே பசுவின் பாதங்களாகவும், சுவாஹா, ஸ்வதா, வஷம், ஹந்த என்ற நான்கும் அதன் காப்புகளாகவும், இவற்றின் மூலம் தேவர்களையும் மானிடர்களை யும் ஊட்டி வளர்க்கிறாள் நம் கண் முன்னே தோன்றும் பெண் தெய்வமான கோ மாதா.
லலிதா சகஸ்ர நாமத்தில் கோமாதா……..
அம்பிகை வழிபாட்டில் அம்பாளின் ஆயிரம் நாமங்களைக் கொண்டு போற்றிப்பாடலாக உயர்ந்த சக்தி வேத மந்திரமாக விளங்குவது லலிதா சகஸ்ரநாம போற்றித் திருமாலை. அதில் 605-வது நாமாவளி வரியாக வருவதுதான் கோமாத்ரே நம என்பது. இதன் பொருள் கோமாதா என்னும் தாய் போல விளங்குபவளே என்பதாகும். ஆம்! கோமாதாவை வழிபடாத இலக்கியங்களோ, புராணமோ இக்கலியுகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
தென்னாடுடைய மஹா பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி! போற்றி!!