Tuesday, January 30, 2018

இவர் தமிழில் நீங்கள் மெய்மறப்பீர்கள்,அருமையான விளக்கம்,sivapuranam,சிவபுராணம்

ஸ்ரீ ருத்ரத்தின் மகத்துவத்தை பற்றி பிரஹ்மஸ்ரீ குருராம கனபாடிகள்

சிவயநமயநமசிவமசிவயநவயநமசிநமசிவய

சந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா? || தைபூசம் (Can we go to t...

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?


சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.
மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம்.
சுமங்கலி பூஜை எப்படி செய்வது?
இல்லத்தை தூய்மைப்படுத்தி ,மாக்கோலமிட்டு ,மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.சுவாமி படங்களுக்கு பூ,தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .
நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .
தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி ,வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .
சந்தனம் ,குங்குமம்,மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி ,தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.
தனித்தனியாக நமஸ்காரம் செய்து ,அவர்களுக்கு புடவை ,ரவிக்கை ,மஞ்சள் ,குங்கும சிமிழ் ,கண்ணாடி ,வெற்றிலை ,பாக்கு ,பூ ,பழம் ,தட்சனை கொடுக்க வேண்டும். இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால் தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .
பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே ,இல்லத்தலைவி சாப்பிட வேண்டும் .மீண்டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும் வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.
இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள் ,புதன்,வெள்ளி .
இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே .இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை ,நோய் ,துன்பம்,தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்யத்தொடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
அதுமட்டுமல்ல, இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் வகுக்கிறது.


கிரகண காலங்களில் ஆலயங்களில் நடை திறக்கலாமா ?

உண்மையில் ஆகமங்களில் சொல்லப்டுள்ளது என்ன ?
 விளக்குகிறார்
"வேதோவாச ஆகம வித்துவான்"'சங்கானை பிரம்மஸ்ரீ நித்யானந்த சுதானந்த சர்மா
கிரகண கால பூஜை தொடர்பான ஆகமோக்த சைவ சித்தாந்த புராண இதிகாச சங்க இலக்கிய ரீதியான ஆய்வும் முடிவுகளும்
கிரகணம் என்றால் என்ன என தெரிந்து கொள்வது அவசியம். ‘கிரஹண்’ எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு ஒளி இழந்த தன்மை என பொருள். மனிதன் அறியாமையாலும், சோகத்தாலும் ஒளியிழந்து காணப்படுவதை கூட கிரஹணத்தின் அடைப்படையில் “கிரஹணி என வடமொழியில் கூறப்படுகிறது.கிரஹணம் நமது கலாச்சாரத்தில் மிக முக்கிய இடத்தை பெறும் ஒரு இயற்கை நிகழ்வு. பெளர்ணமி மற்றும் அமாவாசைகளில் நிலவின் மாற்றத்தை கண்டு உணர்ந்த மனிதன் தனது இயற்க்கை அறிவில் அதிக முன்னேற்றம் அடைந்தது கிரகண கோட்ப்பாடு மூலமாகத்தான்.உலக மக்கள் கிரகணம் ஒரு பேரழிவு நிகழ்வு என பயந்து வந்த காலத்தில் நமது பாரத தேசத்தில் இருக்கும் அறிஞ்சர்கள் கிரஹணங்களை ஆய்வு செய்து மனித மேம்பாட்டுக்கு பயன்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். கிரகணத்தை சிறப்பாக ஆய்வு செய்ததால் தான் நமது சாஸ்திரங்களில் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்ற விஞ்ஞான கோட்பாட்டை கூற முடிந்தது. சாஸ்திர அறிவியல் கோட்பாட்டை பின்பற்றி ஆரியபட்டர் மற்றும் பாஸ்கராச்சாரியர் அறிவியலில் இன்றுவரை யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்தனர் .
சூரிய மண்டலத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதை கிரகணம் என்கிறோம். சூரிய சந்திரர்கள் எது ஒளியை பூமியிலிருந்து பார்க்க முடியாதோ அது கிரஹணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சூரியன் மறைக்கப்பட்டு சூரிய ஒளி தெரியவில்லை என்றால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் ஒளி பெறாமல் இருளாக இருந்தால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறோம்.இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? இதற்கு முதலில் மனித பிறப்பை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உண்டு ,பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உண்டு என்பது சித்தாந்தம் .அண்ட வெளியில் எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும் அதே நிகழ்வுகள் நமக்குள்ளும் நடக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். சைவ சித்தாந்தத்தில் பூமி மனித உடலையும், சந்திரன் மனதையும், சூரியன் ஆன்மாவையும் குறிக்கும். கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும. இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. அன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்ல தகுந்த நாளாக மாறிவிடுகிறது.
இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.
தற்காலத்தில் நவநாகரீகம் என்ற பெயரில் கிரஹணத்தை மக்கள் மதிப்பதில்லை. பறவை மற்றும் விலங்கின்ங்கள் கூட கிரஹணத்தான்று தன் இருப்பிட்த்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா? மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாக வாழ்கிறான் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?.கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.
வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரஹணம் ஏற்பட்டாலும் முழு சூரியகிரஹணம் சில வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அப்படி ஏற்படும் முழுசூரியகிரஹணமும் நாம் இருக்கும் தேசத்தில் தெரிவது போல அமைவது அதைவிட அரிது.
கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.
மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷய்ங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
சூரிய கிரகணத்தில் ராகுகிரஸ்தம் எனப்படுகிற ஸ்பர்ச காலமும், சந்திரகிரகணத்தில் ராகு விமோசனம் எனப்படுகிற கிரகணம் விடும்காலமும் உபராக புண்ணிய காலம் எனப்படும். சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுகிற இருவகையான உபராக புண்ணிய காலத்திலும், இரவிலோ பகலிலோ கிரகணம் ஏற்படும்பொழுது, அந்த நேரத்தில் தெய்வங்களை நதி, குளம் முதலிய தீர்த்தக்கரையை உபசரிப்புடன் அடைவித்து, அங்கேயே சிறப்பான முறையில், மந்திரஜபத்துடன் கூடியதாக விசேஷமாகப் பூஜை மற்றும் தீர்த்தோற்சவத்தைச் செய்யவேண்டும். பின்பு ஆலயத்தில் சேர்த்து ஒடுக்கப் பூஜையைச் செய்யவேண்டும்.
கிரகண காலத்தில் சைவோற்சவமாக ஒருநாள் விழா செய்யப்படுவது பத்துமடங்கு உயர்வான பயனைத் தரவல்லது. இத்தருணம் (கிரகணம் உள்ளநேரம்) பாவ காலமில்லை. இது உபராகம் எனும் புண்ணிய காலமென்றே பெயர்பெறும். இதனை ""அதம் வக்ஷியே விஷேசேன உபராகோத்சவம் " என்று உத்தர காரணாகமம் கூறத்துவங்கி உபராகத்தின் விளக்கம் கூறுவதுடன், இதன் சிறப்பையும் பயனையும் கூறுகிறது. “உபராகம் என்ற இந்த பெயர்ச்சொல் எப்படி வந்தது’ (உபராகம் மஹத் சப்தம் கதம் சம்போ மஹேஸ்வரஹ ) என்று கேட்கப்பட்டதற்கு பதிலாக இறைவன் கூறியது: “பாவம் மிகுந்ததிலும், குரூர காலத்திலும், மக்களுக்கு வியாதியால் துன்பம் ஏற்படும்பொழுதிலும் உபகிரக உதயம் ஏற்படுகிறது. இதுவே உபராகம் என்று ஆகிறதுஎன்று சொல்லி வந்த ஈஸ்வரன் பூலோகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் "மகா ஸ்பரிசம் " என்னும் தோஷம் ஏற்படுகிறது என்றும் அது எதனால் எனில் "ஆச்சாரமான ஒருவரை அனாச்சாரமான ஒருவர் தீண்டுவதனாலே எத்தகைய தோஷம் ஏற்படுமோ அத்தகைய தோஷம் உப கிரகங்களான ராகுவும் கேதுவும் மகா கிரகங்களான சூர்ய சந்திரர்களை தீண்டுவதனால் ஏற்படுவதாயும் சைவ சித்தாந்த ரீதியில் சூர்யன் ஆன்மா என்றும் சந்திரன் மனது என்றும் கூறப்படுவதனால் நேரிடையாக அந்த தோஷம் மனிதர்களை பீடிக்கும் என்பதனை நாம் உணர வேண்டும். அடுத்து தோஷம் என்பது என்ன ? அறியாமையினால் ஒருவன் செய்கின்ற தீய செயலுக்கு இயற்கையில் எதிர்வினையாக விளைவது எதுவோ அது தோஷம் எனப்படுகிறது என்பது சித்தாந்தம். எனவே தோஷம் பீடிக்கின்ற இந்த காலத்தில் புற உலக செயல்பாட்டிலிருந்து விலகி அக ஒளி ஆன்ம வீடு பேற்றுக்கான புண்ய செயல்களை செய்ய வேண்டும் .
அடுத்து பாவம் புண்யம் என்பவை தனி மனிதன் சார்ந்தவை என்பதனை நாம் உணர வேண்டும். எனவே தனி மனித எழுச்சிக்கான வழிகளாக "ஜபம் ஹோமம் தர்ப்பணம் ஸ்னானம் " முதலியவைகளும் சிவ பூஜை செய்வதுமாம். மேலும் ஸ்மிருதிகளிலே கிரகணத்தின் பொழுது அனைவர்க்கும் ஆசௌசம் எனும் தீட்டு ஏற்படும் என்று சொல்லி உள்ளது . எனவே இக்காலங்களில் ஆசௌசத்துடன் ஆலயங்களை திறந்து எவ்வாறு வழிபாடாற்ற முடியும் ? என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். உற்ஸவ காலங்களில் ஆச்சார்யாருக்கு காப்பு கட்டி உள்ளதனாலே ஆசௌசம் இல்லை எனினும் பத்தர்களுக்கு அது பொருந்துமா ? ஆலயங்களுக்கு பக்தர்கள் ஆசௌசத்துடன் வர முடியுமா ? பிறகு எப்படி நடை திறந்து பூஜை செய்வது ? இந்த காரணங்களை உத்தேசித்தே பெரியவர்கள் அக்காலங்களில் ஆலயங்களில் நடை சாத்தும் முறையினை கொண்டு வந்தார்கள். ஆனாலும் நித்ய உத்சவம் நடை பெறும் கோவில்களிலே கிரகண காலங்களிலே தீர்த்த வாரி நடை பெறுவதனையும் அதன் அவசியத்தினையும் சொல்லி அத போல் அநேக ஆலயங்களிலே பர்வங்கள் எனப்படும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களை தீர்த்தாந்தமாக வைத்து உத்சவங்கள் செய்வார்கள் . அந்நாட்களில் விசேஷமாக அஸ்த்ர தேவர் சகிதம் ஸ்வாமியை தீர்த்த வாரிக்கு அழைத்து செல்வதையே ஆகமங்கள் சொல்லி உள்ளன.தீர்த்த ஸ்னானம் கிரகண புண்ணிய காலத்திலே செய்வதனால் அடியார்கள் அந்நேரங்களில் ஆலயத்துக்கு வந்து தீர்த்த உத்சவத்திலே கலந்து கொள்ளலாம். மேலும் அவ்வாறு நித்ய உத்சவமோ மஹோத்சவமோ நடை பெறாத கோவில்களிலே அன்று சிறப்பு உத்சவம் எனில் சுவாமி வீதி வலம் வர வேண்டும்.ஆகாயம் நிர்மலமாயும் சந்திரனுடன் கூடி இருக்கும் பொழுதுமே சுவாமி வீதி வலமும் பலி தானமும் செய்ய வேண்டும் என்பது காமிக ஆகமத்தின் மஹோத்சவ விதி படலத்தில் சொல்ல பட்டுள்ளது என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் . கிரகண காலத்தில் இது எவ்வாறு சாத்தியம் ?இந்த விடயங்களை அறிந்து கொள்ளாமல் சிலர் ஆகமங்களில் கிரகண காலங்களில் ஆலய நடை திறந்து உத்சவம் செய்ய வேண்டும் என்று கூறி வருவது மேலோட்டமான அர்த்தமற்ற கருத்தாகும். மேலும் கிரகணம் என்பது துர்நிமித்தம் என்றும் அன்று பிரதிஷ்டை விவாகம் முதலிய செய்ய கூடாது என்று தீப்தம் வீரதந்திரம் முதலாய ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். மேலும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே கிரகணம் தொடர்பான அநேக குறிப்புகள் உள .
கலித்தொகையில் பல இடங்களில் சந்திரகிரகணம் (சந்திரனை ராகு பற்றுதல்) குறிப்பிடப்படுகிறது. ”ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா மையின் மதியின் விளங்கு முகத்தாரை (கலி 62;13-14) என்றும்
அடுத்து சூரிய கிரகணம் (சூரியனை கேது பற்றுதல்) பற்றி மலைபடுகடாம் இப்படிக் குறிப்பிடுகிறது:-“பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின் வாய்ப் பட்டான் கொல்” (வெண்பா 1)
சொல்ல பட்டுள்ளது .மேலும் மகா பாரதத்திலே ஜெயத்ரதன் வதை பற்றி புற நாநூற்று பாடல் ஒன்று உண்டு . அணங்குடை அவுணர் கணங்கொண்டி ஒளித்தெனச்
சேண் விலங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கெடுத்த பருத்தி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர்க்க கடுந்திறல்
அஞ்சன உருவன் தடுத்து நிறுதாங்கு "
அதில் சூரியன் மறைந்து விட்டதாக நினைத்து ஜெயத்ரதன் வெளி வரும் போது அர்ச்சுனன் அவன் தலையை கொய்து ஜபம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தையின் மடியில் விழ செய்கிறான் . அவன் அதனை கீழே தள்ள தந்தையும் தனயனும் தலை சுக்கலாகி இறக்கிறார்கள்.இதில் ஜெயத்ரதன் தந்தை ஜபம் செய்து கொண்டிருந்தான் என்றும் அது கிரகண காலம் என்றும் கூறபற்றி ப்படும் சிறப்பினை கவனிக்க வேண்டும்.
மேலும் ப்ரம்மசாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வனப்பிரஸ்தர்களுக்கும் ஜபம் என்றும் கிரகஸ்தர்களுக்கு தானம் ஹோமம் என்றும் எல்லோருக்கும் ஸ்னானம் என்றும் சொல்லப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர்தம் ஆன்ம ஈடேற்றம் கருதி தத்தமக்குரிய கர்மாக்களை செய்யாமல் பரார்த்தமாக எங்கனம் வழிபாடாற்ற முடியும் ?
எனவே உண்மையினை உணர்ந்து நம்ம எல்லோரும் அதன் வழி நடந்து நற்கதி பெறுவோமாக.

Friday, January 26, 2018

முருகனின் 17 முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது "ஓம் வடிவம்"...! ஆச்சர்யம் ஆனால் உண்மை..!


முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்...
தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும்,இன்று சிலவற்றிற்கு பதில் தெரியாமல் நம்மை என்றுமே ஆச்சர்யம் படுத்தும் பல நிகழ்வுகள் இவ்வுலகில் நடக்க தான் செய்கிறது..
நாம் எதை புதுமை என்று உற்சாகமாக வரவேற்கிறோமோ...அவை அனைத்தும் அன்றே இந்த உலகில் நடந்துள்ளது....
அதன் ஒரு பகுதியாக தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து பார்த்தால் ஏரியல் அது “ஓம் வடிவில்” உள்ளது.

ஆச்சரியம் ஆனால் உண்மை
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை எப்படி நிகழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்தால் பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது
ஓ வடிவம் எப்படி உருவாகிறது
கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது.
அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ...
1.திருப்பரங்குன்றம்
2.திருச்செந்தூர்
3.பழநி
4.சுவாமிமலை
5.திருத்தணி
6.சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
7.மருதமலை
8.வடபழனி (சென்னை)
9.வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி
10.நாகப்பட்டினம் சிக்கல்
11.திருச்சி வயலூர்
12.ஈரோடு சென்னிமலை
13.கோபி பச்சமலை
14.கரூர் வெண்ணைமலை
15.கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16.கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17.கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
மேல் குறிப்பிட்டு உள்ள 17 முக்கிய திருத்தலங்களை இணைத்தால்,அதிசயமாக ஓம் என்ற வடிவம் வருகிறது...முருகனுக்கே உரித்தான ஓம் வடிவம்...முருகனின் திருத்தலங்களை இணைத்தாலே வருகிறது என்பது ஆச்சர்யம் தான்.

பெண்களே இதைச் செய்யாதீா்கள். கஷ்டம் வரும்

தைப்பூசம் என்றால் என்ன தெரியுமா?

கணவனின் காலை பிடித்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம் எப்படி தெரியுமா?

Monday, January 22, 2018

விஷ்ணு பகவான் பற்றி சிறப்பு தகவல்கள் -..

* திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
* திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
* நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
* உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.
* ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
* திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.
* திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.
* ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.
* திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவரும் வேதநாராயணன் என்று பெயர்.
* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019ம் ஆண்டு கிடைக்கும்.
* திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.
* கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.
* திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாக்கு சன்னதி இல்லை.
* பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
* கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
* மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
* காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.

Ilangai Jeyaraj - Mahabharatham - Gurukula Sarukkam DAY -1 FULL VIDEO

Ramayanam Oru Marundhu - Perundeivam - Ilangai Jeyaraj

Kumarasthavam the most powerful Karthikeya Manthra

Shirdi Sai Baba Samadhi Mandir Live Darshan

வெற்றி தரும் விஜய தென்னை !

பிறவிப்பிணியை அறுப்பது எப்படி.?Wednesday, January 17, 2018

கர்மாவின் மூலம் நம் செயல்களை சரியாக செய்வது எப்படி | U.Ve....

| 108 திவ்ய தேசங்களை பற்றி..

| உடல் வியாதிகளை சமாளிப்பது எப்படி | By U. Ve. Velukkudi Kri...

108 திவ்ய தேசங்களை பற்றி..

ஆத்மா இறப்பிற்கு பிறகு எங்கே செல்கிறது?

பகவானை அடைய ஏழு படிகள்

எல்லாம் விதிப்படி நடந்தால் கடவுள் வழிபாடு எதற்கு | By Velu...

பெண் ஆண் வாழ்க்கை முறை

திருக்குறுங்குடி பெருமாள் திருக்கோயில். எஸ்.வி. ஆர். Thirukkurungudi – ...

Thirukkurungudi, Tirumalai Nambi Temple | Aalayangal Arputhangal |

Tuesday, January 16, 2018

மாணிக்கவாசகருக்கு இறைவன் முதன் முதலில் காட்சி கொடுத்த ஸ்தலம்

அள்ள அள்ள பணம் பெருக வீட்டிலிருந்தே செய்ய கூடிய எளிய பரிகாரம்

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினையா? எப்படி தப்பிப்பது ? எங்கு செல்லவேண்...

இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் செல்வதில்லை - பக்தர்களை கோடீஸ்வரனாக்கும் ...

24 நிமிடம் மட்டுமே இருந்தால் மோட்சம் கிட்டும் கோவில்...

அபூர்வ பலன் அளிக்கும் ஆலயங்கள்...

நீங்கள் செல்வ செழிப்போடு இருக்க இதை செய்யுங்கள்........

வட நாட்டில் 10க்கு 10 சதுர அடியில் கடை வைத்துக் கொண்டு மாதம் 3 கோடி வரை தொழிலில் லாபம் பார்க்கின்றார்கள்!
ஆன்மீக பூமியான தமிழ்நாட்டில் நம்மில் பலர் 4000 சதுர அடியில் கடை வைத்திருந்தாலும் மாதம் 3 லட்ச ரூபாய்கள் கூட லாபம் சம்பாதிப்பதில்லை;
பின்வரும் சுயபரிகாரத்தை மாதம் தோறும் செய்து தொழிலில் அபரிதமான வளர்ச்சியையும்,செல்வ வளத்தையும் பெறுங்கள்........
சுயதொழில் செய்யும் ஒவ்வொருவரும் மகம் நட்சத்திரம் வரும் நாளன்று உங்கள் ஊரில் இருக்கும் ஆலயத்திற்குச் செல்லுங்கள்!
விநாயகர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
நாராயணர் கோவிலாக இருந்தாலும் சரி;
சிவாலயமாக இருந்தாலும் சரி;
நரசிம்மர் ஆலயமாக இருந்தாலும் சரி;
பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அம்பாள் ஆலயமாக இருந்தாலும் சரி;
அபிஷேகம் நடைபெறும் போது அந்த தண்ணீரை கோமுகம் வழியாக வெளியேறும் போது பிடிக்க வேண்டும்;
நமது அலுவலகத்தில் தெளிக்க வேண்டும்;மகம் நட்சத்திரம் முடிவதற்குள் தெளிக்க வேண்டும்;


ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்...

1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.
இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.
மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது.
இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.
இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு வெகுவாக குறையும்.
ஒரு சமயம் கைலாசத்தையும், திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள்.
என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில், கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும். இவ்வாறு பகவான் கூறி அருளிய தலம் இது.
அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கோடிக்காவல்,(வழி)
நரசிங்கன் பேட்டை–609 802.
திருவிடை மருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்......

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்
20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)
21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை
23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்
24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)
25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை
26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12
29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்
33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்
34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்
38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)
39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்
41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்
42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)
43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி
47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி
48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி
49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை
50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது
51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்
52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்
53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12
54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்
55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)
56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி
57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்
58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்
59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்
60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்
61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்
62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)
63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு
64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி
65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்
66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய
67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம
68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்
70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்
71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி
72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12
73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்
75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்
76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81
77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்
79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி
80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி
82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி
84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்
85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்
86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்
87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்
88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்
89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்
90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி
91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்
92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்
93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்
94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)
96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)
98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்
99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்
100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்
101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்
102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்
103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)
104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்
105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்
106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்
107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்
108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.
109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்
110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)
111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)
113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்
114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி
115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்
117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்
118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்
119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்
120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்
121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்
122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்
123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்
124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்
125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்
126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்
127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை
128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்
130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்
131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்
132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்
133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்
133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு
134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்
135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.
137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்
138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி
139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)
140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்
141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்
142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)
143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி
145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை
147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)
150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்
151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்
152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்
155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)
157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்
158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்
160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்
161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்
162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்
164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்
165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)
166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்
167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்
168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14
170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்
171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.
172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி
173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்
174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்
175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி
176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்
177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி
178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்
179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்
180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்
181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64
182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்.

காகத்திற்கு உணவிடுங்கள்!


காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம்
என்று தெரியும். ஆகவே, பிதுர் எனப்படும்
முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத் தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.
காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்ப தாக கருதுவதும் மக்களின் நம்பிக்கை யாக இருந்து வருகிறது.
பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில்
உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை!
ஓம் நமசிவாய


Monday, January 15, 2018

விழுப்புரம் மாவட்டத்தில் பரிக்கல் ஊரில் அருள்பாலிக்கும் வரப்ரசாதி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ பெருமாள்


திருவடிகளே சரணம் ... !!!
ஸ்ரீ நரசிம்ம பகவானின் பக்தனான வசந்தராஜன் எனும் மன்னன் செய்த யாகத்திற்கு இடையூறு செய்தான் . பரிகலாசூரன் அந்த யாகத்தை தடுத்து பலரை அழித்தான். அப்போது பகவான் நரசிம்ஹர் தோன்றி பரிகலாசூரனை அழித்து மற்றவர்களை உயிர்ப்பித்து காப்பாற்றினார்.
பரிகலாசூரனை வதைத்த இடம் இதுவாதலால் பரிகலபுரம் என வழங்கி வந்து இன்று பரிக்கல் என மருவியுள்ளது.
மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் கிழக்கு பார்த்து உட்கார்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார்.
கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள்.
ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம் : --
ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரசிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் ... !!!

ஆகமத்தை வகுத்தது சிவன்..
ஆகம முறைப்படி உயிர்களின் தலையே கருவரை..
அதிலும் நெற்றியே சிவம் இருக்கும் வெட்டவெளி...
நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு வழியே நுழைந்து சுழிமுனைக்குச் சென்று அங்கிருந்து கீழ்நோக்கி நுரையீரலில் பில்ட்ராகி மூலாதாரம் சென்று அங்கிருந்து இதயம் வந்து மீண்டும் சுழிமுனை வழியாக வெளியேறுகிறது.
இந்த காற்றானது உள்ளும் புறமும் சுழிமுனை வழியாக செல்வதன் மூலம் சுழிமுனையிலிருக்கும் ஆன்மாவானது சுழல்கிறது..
( பூமி மற்றும் பிற கோள்களைப் போலவே)
நம்மையும் அறியாமல் மூச்சை இழுத்து சுவாசித்து ஆன்மாவை இயக்கும் அந்த சக்தியே கடவுள்.
சீவனை இயக்குவதால் சிவன் என சித்தர்கள் பெயர் சூட்டினர்.
இந்தசுழி முனையை சிவம் எனவும் அதற்கு கீழ்பகுதி லிங்கமெனவும் லிங்கம் உள்ள அடிப் பகுதி ஆவுடையார் எனவும் சித்தர்கள் ஆராய்ந்து கூறினர்.
அதாவது கீழ் தாடை மற்றும் மேல் தாடை ஆவுடையார் என்றும்
தொண்டைக் குழியில் உள்ளே உள்ள உள் நாக்கு ஆவுடையாரில் பதிந்திருக்கும் லிங்க பாகம் . இதை வாய்க்குள் நம்மால் பார்க்க முடியும்.
அதே நாக்கானது மேல் நோக்கியும் அதே அளவு குவிந்திருக்கும். அதுவே அன்னாக்கு. (அண்ணாமலை) நம்மால் வெளியில் அதைக் காண முடியாது. அதைத்தான் லிங்கமாக (மஹாதேவராக) ஆவுடையாரின் மீது காண்கிறோம்.
அதன் மீதினிலிருந்து இயக்கும் சுத்த வெளியே நெற்றிப்பொட்டினுள் காற்று உள் செல்லும் மூக்கின் கடைசிபகுதியும் தொண்டைக்குழிக்கு மேல் சேரும் இடமே சுத்த சிவம்.
ஆகமமும் இதையே தெளிவுபடுத்துகிறது..
சித்தர்களும் ஆராய்ந்து உருவாக்கியதே சிவன் உறையும் லிங்கத் திருமேனி..
இதனாலேயேதான் கருத்தையும், சிந்தையையும், தியானத்தையும் நெற்றிப்பொட்டு எனப்படும் சுழிமுனையில் வை என சான்றோர்கள் கூறினர்.
எண்ணாயிரத்தாண்டு யோகம்
இருக்கினும்
கண்ணாணார் அமுதினைக கண்டறிவாரில்லை
உண்ணாடிக்குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடிபோலக் கலந்து நின்றானே...
நாட்டமும் இரண்டும் நடு மூக்கினில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கு அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவனாமே..
திருமூலர்...
சிவ செம்பொன் செண்பகராஜ் பதிவு.