Tuesday, February 27, 2018

நமதுவீட்டில் ஒரு மந்திரத்தை வாய்விட்டு ஒரு முறை சொன்னால்,ஒரு முறை ஜபித்த பலன் கிடைக்கும்.

நமதுவீட்டில் ஒரு மந்திரத்தை வாய்விட்டு ஒரு முறை சொன்னால்,ஒரு முறை ஜபித்த பலன் கிடைக்கும்.
மனதுக்குள்=உதடு அசையாமல் ஒரு முறை ஜபித்தால்,
வீட்டில் = 10 முறையும்
பழமையான(கருங்கல்லால் கட்டப்பட்ட சிவாலயத்திலும்/விஷ்ணு/அம்மன்/எந்தக் கோவிலாக இருந்தாலும்) ஆலயத்தில் = 1000 முறையும்
மலைமீதிருக்கும் கோவிலில் = 1 கோடி முறையும்
கடலோரக்கோவிலிலும்,கடலில் இடுப்பளவு தண்ணீரிலும்
= 2 கோடி முறையும்
ஜபித்த பலன்கள் நமக்குக் கிடைக்கும்.
தரையில் நின்றோ,நடந்தவாறோ இந்த மந்திரத்தை ஜபித்தால்,ஜபித்த பலன் நமக்குக் கிடைக்காது.
பூமிக்குப் போய்விடும்.
இதுவே,தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,பவுர்ணமி,அமாவாசை,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேற்கூறிய எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி மடங்கு பலன்கள் நமக்குக் கிடைக்கும்.
இருந்த போதிலும்,நாம் ஜபிக்கும் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும்போது,நமது வாழ்க்கை சிந்தனை மாறிவிடும்.
நாமே மாறிவிடுவோம்.

அன்னதானம்

உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ, எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய் வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம் விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய். "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Monday, February 26, 2018

திருவிளக்கின் முக்கியத்துவம் .

ஏக முகம்: பிணி நீக்கும்.
துவி முகம்: குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
த்ரி முகம்: சகோதர பிணக்குகள் நீங்க, நல்லுறவுகள் பலப்பட.
சதுர்முகம்: வியாபாரம் வளர, மேல்நாடு செல்ல.
பஞ்ச முகம்: பூர்வஜென்ம புண்ணியம் ஏற்பட, மாத்ரு-பித்ரு தோஷங்கள் விலக, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக.
சன் முகம்: ரோகம், சத்ரு கடன் தீர.
சப்த முகம்: திருமணம் நடை பெற, இல்லறம் நல்லறமாக.
அஷ்ட முகம்: மரணபயம், விபத்துக்கள் அகல, வழக்குகள் வெற்றிபெற.
நவ விளக்கு: குடும்ப ஷேமம், புத்திர பௌத்திராதிஷமம், மகிழ்ச்சி.
தச முகம் : தொழில், உத்தியோகம், பதவி, புகழ் கிட்ட.
ஏக தசை முகம் : லாபங்கள் கூட, பணம் சேர,
சொத்துக்கள் வாங்க
துவாச முகம்: நஷ்டங்கள் அகல, எதிர்ப்பு- இடைஞ்சல் விலக, பகை நீங்க.
சோடஷ முகம் (16 முகம்): கோயில்களில் மட்டுமே ஏற்றுவர்.
திருவிளக்குத் துளிகள்:
* வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.
* திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
* விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.
* வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும்.
* அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம்.
திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாடு..!

நாம் அன்றாடம் இறைவனை மனதிலும், இல்லங்களிலும் வணங்கி வந்தாலும் ஆலய வழிபாடு என்பது அவசியமானது ஆகும்.
ஆலய வழிபாட்டுக்கு செல்பவர்கள், உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடையணிந்து ஆலயம் செல்ல வேண்டும்.
இவ்வாறு கோவிலுக்கு செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும்.
கோவிலுக்குள் சென்றதும் முன் நின்று முதலில் இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து அண்ணாந்து கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுர தரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது.
மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து வணங்கும் போது தலைக்கான இரத்த ஓட்டம் சீராகும்.
ஆலயங்களில் கோபுரத்துக்கு எதிரில் நாம் நிற்கும்போது இறைவனான பரம்பொருள் எங்கும் நிறைந்து காணும்படியாக இருக்கிறார்.
அவருக்கு எதிரில் நாம் மிகவும் சிறியவர்கள் என்ற அடக்க உணர்வு ஏற்படும். மனதில் அகங்காரம் அழிந்து பணிவு தோன்றும். எனவே கோபுரத்தை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.
கோவிலுக்கு உள்ளே சென்ற உடன் முதலில் செய்வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, பின்பு மூன்றுமுறை கொட்டிக்கொண்டு வழிபடுவது வழக்கம்.
விஞ்ஞான ரீதியாக, இவ்வாறு கொட்டிக் கொள்வதன் மூலம், மூளைக்குச் செல்லும் நரம்புகளை, சுறு, சுறுப்பாக்கி நமது இயக்கத்தினைச் சீராக்குவதாக கூறுகின்றனர்.
மேலும் புத்தியை செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும். இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும்.
அடுத்து கோவிலை மூன்று, ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது நடப்பது ஓர் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் செய்வது ஆண்களுக்கான சிறந்த உடற்பயிற்சியாகும்.
இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க நமஸ்காரம் செய்வது பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சியாகும்.
இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். கோவிலில் மனதில் இறைவனை நினைவில் நிறுத்தி கண்களை மூடி தியானம் செய்வது மிகச்சிறந்தது.
ஆலயங்களில் காணப்படும் அமைதி மனதிற்குள் ஊடுருவி தெய்வ சக்தியை நமக்கு வழங்கும். ஆகையால் ஆலய வழிபாடு செய்வோம்.
வாழ்வில் உன்னத நிலையை அடைவோம்.

நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு!

வாழ வைத்தால் தான் வாழ முடியும்.

Tuesday, February 20, 2018

உயர்வு தரும் கிரகங்களுக்குரிய தெய்வ வழிபாடு! | ஆன்மீக தகவல்கள் | Anmeega...

இராம நாம மகிமை...

1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே
மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!

8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .
9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .
11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.
12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது )
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
13. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.
'ராம நாமா' சொல்லும் பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்து விடும்.
'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding...இல் உள்ள குணங்களுக்கு காரணமான ........கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான....gene coding யை அழித்து .........ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)
'ராம நாமா' சொல்ல சொல்ல .........பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .
அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".
அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.
உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !
எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.
16. நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.
18. 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல 'ராம நாமா' வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.
19. நமது கைகளால் எது கொடுத்தாலும், அது நமது தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம். எது , எதனை எவரிடம் இருந்து பெற்றாலும் நமது அன்னையாகிய ஸ்ரீ ராமனே ( எதிரில் உள்ள மனித வடிவில் ) கருணையுடனும், அன்புடனும் நமது நன்மைக்காக தருகிறான். இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து , வாங்குகிறான். ( எதிரில் உள்ள மனிதரை கவனிக்காமல் அவரின் ....அந்தராத்மவுடனே பேசுகிறோம்.......ராம்! அன்னையே இந்த உடலுள் இருந்து நீயே பேசி, இயங்கி, செயல்படுகிறாய் ......என வணங்க, நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன் ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன் ஸ்ரீ ராமன்.

20. 'ராம நாமா' சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ' அந்த ஒன்றே !' காரணமாகிறது என்பதும் ...... எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !.......என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .
21.'ராம நாமா' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , ..... .........நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம்.
இத்தகைய .'ராம நாமா' வில் பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக சித்தமாக ) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ......ராமனாக ( ஆத்மா ராமனாக ) பார்ப்பதுவே ......... எல்லா எண்ணங்கள் ....... எல்லா செயல்கள் ........எல்லா உணர்ச்சிகளிலும் ...........இறை உணர்வை உணர்வதுவே ............இந்த பிறவியின் பயனாகும்.
‬: பகவத் கீதை : அத் : 2 - 17
" இந்த வையகம் முழுதும் பரந்து விரிந்து நிற்கும் பொருள் .
அழிவே இல்லாதது என்பதை அறிந்து கொள் ;
அது தீங்கற்றது ;
அதனை அழிக்க யாராலும் முடியாது."..

Wednesday, February 14, 2018

திருநணா (பவானி)

சங்கமேஸ்வரர் கோவில் திருநணா (பவானி) என்னும் ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். பவானி சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது.
இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகைபவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். (சங்கமம்-கூடுதல்).

பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது.இது ஒரு சோமாஸ்கந்த வடிவுடைய தலமாக கூறலாம்.
இறைவன் இங்கு சுயம்பு லிங்கம்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன. அவர்களது பாடல்களில் இவ்விடம் ’திருநாணா’ என்று குறிக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் பல முறை பலரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 1640-1741வரை இக்கோயில் மூன்று முறை திருப்பணி கண்டுள்ளது, அதில் சிலரின் கல்வெட்டுக்கள் அம்பிகை கோயில் மகாமண்டப விதானத்தில் எழுத்துக்கள் வெட்டப்பட்டு உள்ளது. அவற்றுள் இம்முடி கெட்டி முதலியார் அவரது துணைவியார் சின்னம்மாள், மகாராசா கிருஷ்ண ராசா உடையார், பேரூர் கந்தப்ப பிள்ளை அந்தியூர் ஆத்ம சகாயன் சேர்வை குடும்பத்தினர். இப்படி பல தகவல்கள் கல்வெட்டுகளின் முலம் தெரியவருகிறது.
இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.
வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்... பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள். ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலின் பிரதான கோபுரம், வடக்குத் திசையில் ஐந்து நிலை கொண்டது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இதனால், பித்ரு தோஷம் நீங்கும் என்பார்கள்.இந்தக் கோயிலில் ஸ்ரீசங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும் ஸ்ரீசௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இது, சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலங்களில் ஒன்று.
ஸ்ரீவேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்தச் சந்நிதியின் வலப்பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. அதையடுத்து, மூலவரான சங்கமேஸ்வரரைக் கண்ணாரத் தரிசிக்க லாம். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே ஸ்ரீசுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள்.
இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து, மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாள், சூரியனின் ஒளி ஸ்ரீசங்கமேஸ்வரர், ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீசுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்புக்கு உரிய ஒன்றுபூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கும் வந்தான். இந்தத் தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான்.
அதில் நெக்குருகிப் போன குபேரன், தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இது. அவனது தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனுமாக வந்து, அவனுக்குக் காட்சி தந்தருளினர். ''குபேரனே! என்ன வரம் வேண்டும், கேள்'' என இறைவன் கேட்க, ''அளகேசன் எனும் உன் பெயரால் இந்தத் தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்'' என வேண்டினான் குபேரன். அன்றிலிருந்து இந்தத் தலம் 'தட்சிண அளகை’ எனும் பெயர் பெற்றதாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வில்லியம் காரோ என்பவர் இங்கே கலெக்டராக இருந்தார். அம்பாளின் சக்தியை அனைவரும் சொல்லக் கேட்டு, வியந்து போனார். அந்த அனுபவம் தனக்கே ஒரு நாள் கிடைக்கப்பெற்றார், கடுமையான மழைக்காலம், இடியும் மின்னலுமாய் இருக்க கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்த கலக்டரை ஒரு சிறுமி உடனே வெளியில் வாருங்கள் ஆபத்து என கூறி அழைத்து செல்ல சில நிமிடங்களில் அந்த பங்களா இடிந்து விழுந்தது, .1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோவில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

Tuesday, February 13, 2018

Neeyae Iraivan!! (நீயே இறைவன்) Tamil Speech - Shri Aasaanji (Must Watch)

கோழி, ஆடு, மாடு, மிருக, ஜீவராசி பலியை உடனடியே நிறுத்தவும்!

https://agasthiar.org/siddha-voice/stop-animal-sacrifice-now.tamil

சற்குரு வேங்கடராம சித்தர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு உள்ளம் தெளிவு அடையட்டும்!


STOP Animal Sacrifice NOW!
"உனக்கு உயிரின் மீது எவ்வளவு ஆசை உண்டோ, அதே போல் ஒவ்வொரு மிருகத்திற்கும், ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன் உயிர் மீது ஆசை உண்டு." — சற்குரு வேங்கடராம சித்தர்


 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 


Seven Sacred Sounds must issue out of every home every day, said Siddha Sathguru Venkataraman.

https://agasthiar.org/aum/7-sacred-sounds-in-every-home-daily


ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்


கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

குழந்தை பாக்கியம் அருளும் காவேரி அம்மன், குழந்தைக் கிருஷ்ணன்.
https://agasthiar.org/aum/kaveri-amman-with-baby-krishna.darisanam.tamil


 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 


814 Shiva Linga Darshan is a Great Blessing!

https://agasthiar.org/aum/814-shiva-lingas


 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 


Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | ...

Bolo Bolo Sab Mil Bolo Om Namah Shivaya

Sathya Sai Baba chanting Om Namah Shivaya

Sivashtakam - Rahul Vellal - 'Vande Guru Paramparaam'

Monday, February 12, 2018

*தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்கள்...*

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்

1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.

கடவுளால் வகுத்தது தருமத்தை
பற்றி மட்டும் உபதேசித்தது.

1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்

1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.

1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி

திவசம் சிறப்பு இடம் (பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்).

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.

திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய

ஓம் சிவாய நம.......


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்IMPORTANT OF HOLY COW&PITHRUS

ரமணர்கற்றுத்தந்த "எளிய"தியான முறை

சிவலிங்கத்தின் அறிவியல் தத்துவமும், மந்திரங்களும்

Sunday, February 11, 2018

கேட்க கேட்க திகட்டாத குரலில் ,திருப்பள்ளியெழுச்சி, திருவாசகம், Thiruvasagam

மஹா சிவராத்திரி தத்துவ விளக்கம்

தெய்வீக தமிழில் - தெய்வீக சொற்பொழிவுகள் : Siva Dharisanam - சிவ தரிசனம் - Part 1 - Ayya 16 K...

வாழ்க்கையில் ஒரு முறையாவது ஐயாவின் அற்புதமான சொற்பொழிவை தயவு செய்து நேரம் ஒதுக்கி கேட்டு பயன் பெறுங்கள் - கோடான கோடி கோடி நன்றிகள் .

தெய்வீக தமிழில் - தெய்வீக சொற்பொழிவுகள் : Siva Dharisanam - சிவ தரிசனம் - Part 1 - Ayya 16 K...: சிவ தரிசனம், சிவராத்திரி மகிமை - Sivaratri Mahimai - Part 2-Ayya16 Kavanagar  RamaKanagasubburathinam https://youtu.be/O8v77...

Thoughts

Thermostat in stomac

பழனிமலை ரகசிய உண்மைகள்

Saturday, February 10, 2018

sai baba miracle

தெளிவான வழிப்பாடு தெய்வமாக்கும்.

திருச்சிற்றம்பலம்

கடலுக்கு பலம் தந்த மந்திரம்!

காசி விஸ்வநாதர் கோயில், ஜோதிர்லிங்கம்

மகா சிவராத்திரி ரகசியம் விளக்குகிறார் வர்மகலை ஆசான்

Sivarathiri - Significants (சிவராத்திரி தத்துவம் )

Shivaratri Vrat fast Tamil MAHA SHIVARATRI

Friday, February 9, 2018

குடும்பம் வாழையடி வாழையாக மகத்தான செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் திகழ கோதானம் செய்வீர்!

Moondravathu Kann New நோய் தீர்க்கும் ராக்கால சந்தனம்..!!

பண ஓட்டத்திற்கு இந்த பக்கம் தலை வைத்து படுக்கவும் /Sleep in this positio...

Manikka Veenai Endhum

Raksha Raksha Jaganmatha song by P Susheela

வாய் கட்டு மந்திரம்

Thursday, February 8, 2018

கடன் தொல்லைகள் நீங்க , பிறரிடமிருந்து கடன் பெறாமலே போதிய பொருளாதாரத்துடன் வாழ வழிபட வேண்டிய தலம்

பெண்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி பாதிப்பும் பரிகாரமும்; Penkalukku Kant...

🍁ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது


1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.
2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.
3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.
4. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.
5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.
6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம் ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.
8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்' என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.
9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.
10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது

Variyar Swamigal Speech - அப்பர் பாடல்

Vaariyar Swamigal Speech - அழகிய மூப்பு

Variyar Swamigal - தேவர்களின் ஆயுட்காலம்

Variyar Swamigal Speech - மந்திரிக்கு என்ன இலக்கணம்?

Variyar Swamigal Speech - எது காலை கடன்?

THIRUNEERU VAIPPADHAN PALAN - SMT. DESA MANGAIYARKARASI

குழந்தைப்பேறு - முருகக் கடவுள் பிள்ளையாக வர... | திருப்புகழ் 218

திருமுறை, துதிப் பாடல்கள் | பாராயணம் செய்வது

நினைத்தை நடக்க வைப்பதற்கான வழி.

பிரிந்த தம்பதியரை ஒன்றுசேர்க்கும் கார்கோடேஸ்வரர்------------------------------------------------------------------------
திருநல்லூர் திருத்தலத்தில் உள்ள கார்கோடேஸ்வரரை வழிபாட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

திருவையாறுக்கு அருகே உள்ளது ரதிவரபுரம் என்னும் திருநல்லூர் திருத்தலம். இங்கு கார்கோடேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்பாலித்து வருகிறார். பாம்புகளின் அரசனான கார்கோடகன், இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்று பெயர் வந்ததாம்.
இறைவனின் திருநாமம் காமரசவல்லி. மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி, அவனது மனைவி ரதி தேவி இத்தல இறைவியை வழிபட்டதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தன் கணவனின் உயிரைத் திருப்பித்தர வேண்டி கடும் தவம் செய்த ரதி தேவிக்கு, சிவபெருமான் அருள் செய்த திருத்தலம் இதுவாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், திருமானூர் என்ற இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்Monday, February 5, 2018

Panchatchara - மனஅமைதிக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் சிவ பஞ்சாட்சரம்

Srivilliputtur & Andal Kovil

ஸ்ரீஆண்டாள் கல்யாணம் சொற்பொழிவு

Small spiritual notes ஆன்மிக குறிப்புகள்

பசுவிற்கு உணவு கொடுங்கள் குலம் செழிக்கும் Feeding cow gives lot of benef...

வாசல் நிலைபடிக்கு மஞ்சள் அவசியம் turmeric is more important for house en...

எந்த காரியத்திலும் ஏமாறாமல் இருக்க பரிகாரம்! | ஆன்மீக தகவல்கள் | Anmeega...

Sunday, February 4, 2018

சர்வ மங்கல யோகம் பெற

பஞ்சு திரியில் நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய்,

 தேங்காய் எண்ணெய் 

ஆகிய ஐந்தையும் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி திருவிளக்கு பூஜை செய்தால்

 தேவியின் பரிபூரண அருள் கிட்டும். சகல விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும். சந்திர சக்தி

 அடைவர். அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்வ மங்கள யோகம்

 கிடைக்கும்.

தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

அன்னம்தரித்திரம், கடன் தீரும் தேன்புத்திர பாக்கியம்தங்கம்தோஷங்கள் விலகும்
அரிசிபாவங்கள் போக்கும்பழங்கள்புத்தி, சித்தி அருளும் வெள்ளி மனக் கவலை அகலும்
நெய்நோய்கள் தீர்க்கும்நெல்லிக்கனிஞானம் உண்டாகும்பசுமாடுரிஷி, தேவ கடன் தீரும்
பால்துக்கங்கள் நீங்கும்தீபம்கண் பார்வை தீர்க்கம் நிலம்நினத்தவை நிறைவேறும்
தயிர்இந்திரிய விருத்திதேங்காய்பிதுர் கடன் அகலும்வஸ்திரம்ஆயுள் விருத்தி தரும்


http://temple.dinamalar.com/news_detail.php?id=49714

விரத வழிபாடுகள் அளிக்கும் சிறப்புகள்

சங்கடஹர சதுர்த்தி

தேவையற்று ஏற்ப்படும் சங்கடங்கள்

 அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்

விநாயக சதுர்த்தி

வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து 

விநாயகனின் பூரணமான அருள் கிட்டும் 

சிரவண விரதம்

குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி

. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.
வைகுண்ட ஏகாதசி

குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள்

 அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்

சஷ்டி விரதம் 

மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும்

 இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்

கௌரி நோன்பு

குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல்

 மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும். 

வரலெஷ்மி நோன்பு

மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். மணமான

 தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்

பிரதோஷ விரதம்

மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்

மகா சிவராத்திரி

சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்

வைகாசி விசாகம்

நீண்ட நாட்களாக மக்கட்பேறு இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர்

நவராத்திரி விரதம்

மன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்

கோகுலாஷ்டமி விரதம்

மன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்

அமாவாசை விரதம் 


பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், 
அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும். 

பௌர்ணமி விரதம்

வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் 
விலகி, சுகமான வாழ்வு அமையும்.
கார்த்திகை விரதம்எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்


Saturday, February 3, 2018

Velukkudi - EnPaNi: A Tip For Positive Thinking

VK - EnPaNi: Will Karma Decide Every Detail

VK - EnPaNi: Why Tarpanam Or Sraddham

நம்பினால் நம்புங்கள்

1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.அதனால் கணவன் மனைவி உறவு மேம்படும் .
2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், கணவன் மனைவியுடன் சண்டை போடாதீர்கள்.(எப்போதும் சண்டையில்லாமல் ஒற்றுமையா இருப்பது நல்லது ) சுபகடாட்சம் குறைவு ஏற்படும்.
3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
4.வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும்.
5.அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
6.பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.
7.பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
8.கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.
9.வீட்டின் நிலைகளில் ( வாசற்கால்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்.
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
10.நெய், விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் , இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
11.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
12.வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
13.சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
14.யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
15.பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
 16.பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
17.விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய இணைவு, சண்டையிடுதல் கூடாது.
18.ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
19.தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
20.புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
21.தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
22. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
23.வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
24.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
25. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு அன்றைய தினம் பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
26.பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
 27.வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி பூதானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படும் தானம் சிறப்பானது.
28.வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
29.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
30.செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்களுக்கு செல்வத்தை வாரி கொடுப்பவரே பரம்பொருள் ( சிவபெருமான்) ஒருவரே ஆவார் இவர்களின் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
31.நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
32.அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
33.கடல் நீரை கொஞ்சம் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் உடம்பில் உள்ள எதிர்மறை சக்திகள் அகலும். புத்துணர்ச்சி கிடைக்கும்
34.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
35.சாமி படங்களில் உள்ள உலர்ந்த பூக்களை வீட்டில் வைக்கக் கூடாது..
காலில் மிதிபடாமல் நீர் நிலைகளில் சேர்ப்பது நல்லது.
36. வீட்டிற்கு வரும் சுமங்கலிகள் அனைவருக்கும் தாம்பூலம் குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வயது முதிர்ந்த சுமங்கலிகளிடம் காலில் விழுந்து ஆசி பெற்று குங்குமம் அவர்களை வைக்க சொல்லி பெறவேண்டும். அவர்களுக்கும் தர வேண்டும். 

 காலம் காலமாக பலர் செய்து வருகின்ற
முறைகளை இங்கே தரப்பட்டுள்ளது.பண வரவுகள் நிறைய வரும் என்பதை விட தேவையற்ற செலவுகள் ,நஷ்டங்கள் முதலில் குறையும். நம்பிக்கை இல்லாதவர்கள்படி
க்கவேண்டாம்.நம்பிக்கையோடு கடைபிடித்தால் பலனை உணரலாம்.
1.வியாழக்கிழமை குரு ஹோரை காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேரனருள் வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்க
ளுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது.மதியம்வரை பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது சிறிதளவு (1ஸ்பூன்) குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாக பணம் வரும்.