Tuesday, March 27, 2018

பசுவும் புண்ணியங்களும்……..

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.
பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.


மூன்று வகை தவங்கள்

தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை “தவம்” என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ’நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் “தபஸி” (ஆண்) அல்லது ”தபஸ்வினி” (பெண்) என்றழைக்கப்படுவர்.
பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வது தான் ‘தவம்’ என்று தவறாக கருதப்படுகின்றது. ஆயினும் இந்துதர்ம நூல்களில் உடலை வருத்தி செய்யப்படும் தவங்கள் ‘தவிர்க்கப்படவேண்டியவை’ என அறிவுரை செய்யப்படுகின்றது.
பகவத் கீதை உட்பட இதர இந்துதர்ம நூல்கள் தவமுறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.
1) தூய நிலையிலான தவமுறை (சத்வம்)
2) ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை (ரஜஸ்)
3) அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை (தமஸ்)
இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவமுறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவமுறையை உடல், வாக்கு, மனம் என மூன்றாகப் பிரிக்கலாம். அவை:
|| உடல்
1) தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
2) பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்து போற்றவேண்டும்.
3) உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4) எளிமையான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளவேண்டும்.
5) தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
6) மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
|| வாக்கு
1) பொய்யானவற்றை தவிர்த்து உண்மையைப் பேச வேண்டும்.
2) கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிமையாகப் பேச வேண்டும்.
3) மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
4) நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.
5) வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
|| மனம்
1) இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
2) மனத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.
3) தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இறைவனின் அருளைப் பெறுவதற்கு இதுபோல எத்தனையோ எளிதான வழிகள் நம் இந்துதர்மத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, தனக்கும் மற்றவருக்கும் துன்பத்தை தரும் கடுமையான மற்றும் தவறான வழிகளில் செல்லாமல் மேற்கூறிய தவமுறைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.

Monday, March 26, 2018

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள் !

ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடையணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள் செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து வணங்கும் போது தலைக்கான இரத்தோட்டம் சீராகும்.
ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய்வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டி வழிபடுவது வழக்கம், இவ்வாறு குட்டுகின்ற போது புத்தியைச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும். அடுத்து ஆலயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது நடப்பது ஓர் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண்ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களுக்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர். அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என்னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுயமும் இடபுயமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்களுக்கான உடல் பயிற்சியாகும். இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண்டு முழந்தாளிரண்டு என்னுதைந்தவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்.

சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் இதுக்காக..

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.
TIRUPATHI SECRET - திருப்பதி ரகசியம் - TIRUPATHI SECRET

Ragugalam secret - ராகுகால ரகசியம்

Navakiraga ragasiyam - விதியை வெல்லும் நவகிரக ரகசியம்

Tirumanthira ragasiyam - தலைவிதியை மாற்றும் திருமந்திர ரகசியம்

colours and emotions - வாழ்வில் மாற்றத்தை கொடுக்கும் நிறங்கள்

The success flowers - வெற்றியை தரும் மலர்கள்

bramma hathi secret - பிரம்ம ஹத்தி ரகசியம்

God Friend - இவரை நண்பராக்கி கொண்டால் நம் வாழ்க்கை கொண்டாட்டமே

Sani bhagvan - சனி பகவானை இவ்வாறு வணங்கினால் நன்மைகளை அடையலாம்

Increase magnetic energy - ஜீவ காந்த சக்தியை அதிகரிக்க

Secret of hindu temples - ஆலய வழிபாட்டின் அற்புத இரகசியம்

cosmic trees - பிரபஞ்ச சக்தியை அள்ளித்தரும் விருட்சங்கள்

Powerfull cosmic temples - அளவற்ற பிரபஞ்ச சக்தியை கொடுக்கும் ஆலயங்கள்

most powerfull mandra - அளவற்ற காந்த சக்தியை கொடுக்கும் ஓம் எனும் பிரணவ ...

Sunday, March 25, 2018

மூன்று கடன்கள்!

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு மூன்று கடன்கள் (கடமைகள்) உண்டு. அவை தேவ கடன், பித்ரு கடன், ரிஷி கடன் ஆகியனவாகும். இவற்றில் பண்டிகைகள், விழா வைபவங்கள் மற்றும் அனுதினமும் கடைப்பிடிக்கும் வழிபாடுகளால் தேவ கடன் நிறைவேறும்.
சாதுக்களுக்கும் அதிதிகளுக்கும் உணவு வழங்குவதன் மூலம் (அதிதிக் கடன் எனச் சொல்வதும் உண்டு) ரிஷி கடனை நிவர்த்திக்கமுடியும். வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, குளிர்ந்த நீர் அளித்து பசியாற்றி, தாம்பூலம் கொடுத்து, உபசரிப்பதால் ரிஷிகள் மகிழ்கின்றனர்.
அடுத்து பித்ரு கடன். நைவேத்தியமான அன்னத்தை தினந்தோறும் காகத்துக்கு இடுவது சிறப்பு. காகங்களுக்கு இடும் அன்னத்தால் பித்ருக்கள் மகிழ்கிறார்கள். பித்ருக்கள் மகிழ்ந்தால் சந்ததி அபிவிருத்தி உண்டாகும். குழந்தைகள் கல்வி மற்றும் உத்தியோகத்தில் மேன்மை அடைவார்கள். அகால மரணம், விபத்துகள் நேராது.
அமாவாசையன்று காக்கைக்கு உணவிடல், பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுப்பதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும்.
இவை தவிர, இயன்ற வரையிலும் பசுவுக்குக் கைப்பிடி புல்லும், பழங்களும், பசித்தவர்களுக்கு உணவும், தாகமானவர்களுக்குக் குடிக்க நீரும், மனம் நொந்து திகழும் அன்பர்களுக்கு ஆறுதலும் அளிப்பது மிகுந்த புண்ணியச் செயல்களாகும். இதனால், நம் சந்ததியினர் வாழ்வும் சிறக்கும்.

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?
என்றால் ...
நிச்சயம் முடியும் எப்படி?
காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30
வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார். இதோ உங்களுக்காக....!
|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||
|| சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||
|| அங்குல்யா பரண சோபிதம் ||
|| சூடாமணி தர்சனகரம் ||
|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||
|| வைதேஹி மனோகரம் ||
|| வானர சைன்ய சேவிதம் ||
|| சர்வமங்கள கார்யானுகூலம் ||
|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்
இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.
நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்.


Saturday, March 24, 2018

கோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா?

கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது. காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை. திரிகரணசுத்தி என்றால் என்ன?
மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது.
இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள்.

வாழ்வை உயர்த்தும் நற்செயல்கள்...!!!

ஸ்ரீ நாமகிரித் தாயாரின் சிறப்பு!

Friday, March 23, 2018

*திருச்சிற்றம்பலம்* *என்றால் என்ன?*

*திருச்சிற்றம்பலம்* *என்றால் என்ன?*
சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.
நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன.
இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.
அதாவது நாம் தான் அது,
அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம்.
அதாவது மனிதனின்
அகம் ஒரு கோயில்
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.பொதுவாகவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,
சிவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர்.
இதற்க்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்
அதற்க்கு எங்கே செல்ல வேண்டும் என்றால் தில்லையம்பலம் என்று எதிரில் உள்ளவர் பதில் வணக்கம் சொல்லுவர்.
உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.
கூறுவதோடு நில்லாமல் தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை தரிசிக்க வேண்டும்.
உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.
இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான்.
நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!
சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்
திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புன்னியம் சேற்க்கிறோம்..... அப்போது அரியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயறை குறிப்பிட்டான்.....
*திருசிற்றம்பலம்!*
*தில்லையம்பலம்!*

Wednesday, March 21, 2018

ஆடி மாதத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்

• ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும். • ஆடி மாதம் முழுவதும் விரதமிருந்து மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
• ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
• ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.
• ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.
• ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசியில் கோ பத்ம விரதம் (பசு வழிபாடு) கடைப்பிடித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பர்.
• ஆடிப்பெருக்கு தினத்தன்று விரதமிருந்து காவிரி ஆற்றில் பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.,
• ஆடி மாதம் நாக சதூர்த்தி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கிய தடை நீங்கும்.
• சென்னை திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
• ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.
• ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை விரமிருந்து அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
• ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

Variyar Swamigal Speech - நன்றி மறவாமை

Kandha Guru Kavasam ~ கந்த குரு கவசம் 2016

Monday, March 19, 2018

சாஸ்திரபடி பெண்கள் வணங்கும் முறை:!!!*கடவுளையோ அல்லது பெரியவர்களையோ பூமியில் விழுந்து வணங்கவேண்டும் அடிக்கடி இவ்வாறு வணங்குவதால், ஆயுளும் அழகும் கூடும்.
*பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும்போது கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்....
*வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது; இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும்.
*பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்.
*பஞ்சாங்க நமஸ்காரத்தை மூன்று,ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வது மிகுந்த நன்மையாகும். இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்

தூய்மையான பக்தியால் கிடைக்கும்பேறு!

கோவில் வாளகததி னுல்லோ குறைந்தது ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்கோவில்களுக்கு செல்லும்போது மறக்காமல் சோம்பல் இல்லாமல் அந்த கோவிலின் குளத்தில் கால் கழுவி செல்லுங்கள் ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் கதிர்களை உள்வாங்கி தக்க வைத்து கொள்கிற தன்மை தண்ணீருக்கு உண்டு அதே போல் கடத்துகிற தன்மையும் தண்ணீருக்கு உண்டு. அந்த கோவிலில் எச் சக்தி தீர்மானித்து இருகிறார்களோ அச் சக்தியை குளத்தில் உள்ள நீர் கிரகித்து தக்க வைத்து இருக்கும்.
மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளின் நுனிகள் கால் பாதங்களின் முன் பகுதி, பின் பகுதி, பின் காலில் இருக்கிற மெல்லிய எலும்புகள் நம்முடைய முதுகு எலும்போடு தொடர்பு உடையதால் சில் என்ற இந்த சக்தி நிறைந்த நீர் நரம்புகளை தூண்டி எலும்புகளை வலுபெற செய்து நீங்கள் கோவிலுள் பெற போகும் சக்திக்கு நம்மை ஆய்தத படுத்தும். அப்புறம் நுழைவாயிலில் இருக்கிற படிகளில் கால்பாதம் அழுந்த மிதித்து ஏற வேண்டும். இது இக்காலத்திற்கு சொன்னால் சிறந்த அக்குபஞ்சர் அழுத்தம். நம்முடைய கால்ப்லாடார், பெரிகாடியம்,மூலையில் உள்ள பதிவு இடங்களை சமன் படுத்தும்.
கோவிலின் பிரகாரத்தை சுற்றி நடக்க நம்முடைய ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் சீராகும்போது மூளையின் பரபரப்பு தன்மையும் அடங்கி மூலையில் சுரக்கும் சுரபிகளின் செய்யலபாடும் சமன் படும். இதனால் உடலில் பரபரப்பு தன்மை அடங்கி அமைதி ஏற்படும் . கோவிலின் உள்ளே செல்லும்போது உடம்பும் மனதும் ஒருமித்து இருக்கும். அபபொழுது அக் கோவிலில் தீர்மானம் செய்ய பட்டு போற்றி வருகிற சக்தி நம்முள் இறங்கும். நம்முடைய எண்ணங்களும் செய்யல பாடுகளும் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் உடைய சக்தியின் ப்ரோக்ராம்மை சிறிது மாற்றும்.நமக்கு எந்த கிரகத்தின் பாதிப்பு உள்ளதோ அதை சீர் செய்யும். கோவில் இருக்கிற சக்தி என்பது பிரபஞ்சத்தில் இருந்து பூமியில் விழுகிற கிரகங்களின் கதிர் வீச்சு அதை உள்வாங்கி தான் ஒரு ஸ்தூபி போல கற்பகிரகத்தில் நிறுத்தி இருப்பார்கள்.
கற்ப கிரகத்தில் இருக்கிற சக்தியை தூண்டுகிற விதமாகத்தான் கோவில்களில் பொருள்கள் பயன்படுத்தப்படும் பூ,சந்தனம், விபூதி, குங்குமம் போன்றவை. கர்பகிரகத்தின் உள்ளே ஏற்றப்படும் தீபம் கூட அச் சக்திக்கு தேவை படுகிற அளவு வெப்பத்திற்கு தகுந்தாற்போல் 1,3,5,7,9, த்ரி தீபங்கள் ஏற்றப்படும்.
அங்கு வழங்க படுகிற பிரசாதம் கூட அச் சக்தியை நம் உடலுக்கு கொண்டு செல்லுகிற விஷயமாகத்தான் வைத்து இருப்பார்கள். மேலும் எந்த கோவிலிக்கு சென்றாலும் உட் பிரகரததிலோ அல்லது கோவில் வாளகததி னுல்லோ குறைந்தது ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். இதற்காகத்தான் விளக்கு பூஜை, சங்கு பூஜை, அபிஷேகம்,சொர்ண அபிஷேகம், ஆராதனை , என்று மக்களை கோவிலுள் இருக்க வைத்து, அச் சக்தியை பெற வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுகிறீர்களா ? இது உங்களுக்குத் தான் !!!

சிறப்பை தரும் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

கலப்பு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதால் வரும் தீமைகளும் நன்மைகளும்

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் !

தங்களின் இரு உள்ளங்கைகளையும் பார்த்து இந்த ஸ்லோகத்தை சொல்லவும்.
“கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே ஸரஸ்வதீ| கரமூலே ஸ்திதோ கௌரீ ப்ரபாதே கரதர்ஸனம் ... !!!"
ஏனெனில் கையின் முதல் பாகத்தில் லக்ஷ்மீதேவி வசிக்கிறாள். கையின் மத்திய பாகத்தில் வித்யா தேவியான ஸரஸ்வதி தேவி இருக்கிறாள். கையின் அடிபாகத்தில் கௌரி தேவி வசிக்கிறாள்.

புதிய சிகிச்சை முறை - Healer Baskar

*மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரதின் அபூர்வ பலன்களும்... அதை பிரயோகிக்கும் அபூர்வ வழிமுறைகளும்....*

*மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரதின் அபூர்வ பலன்களும்... அதை பிரயோகிக்கும் அபூர்வ வழிமுறைகளும்....*
*********************************************************************************************************************
அண்டசராசரமெங்கிலும் நாதத்தின் ஒலி அலைகள் நீக்கமற பரவியிருக்கிறது. நாதமாகிய ஒலியே முதலில் தோன்றியதினால் நாதபிரம்மம் என்று சொல்லக் கேட்கிறோம்.
அந்த ஒலி அலைகளில் ஒவ்வொரு அலைகளிலும் ஒவ்வொரு ஓசை எழுகிறது. அதையே அக்ஷரங்கள் என்பார்கள். இந்த நாதமே சக்தியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம்.
எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அக்ஷரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள். அந்த குறிப்பிட்ட அக்ஷரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது. அந்த சக்திக்கு அடையாளம் தருவதற்காக அதற்கு பெயர்களும் வடிவமும் தரப்பட்டன.
உதாரணமாக சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது. த்ரியம்பகம் என்ற சொல்லுக்கு பல்வேறு கருத்துக்களை நம் முன்னோர்கள் முன் வைக்கிறார்கள். முக்கண் என்பார்கள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி. இதுவே யோகநிலையில் சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனை அதாவது அக்னி கலை எனப்படுகிறது.
மூன்று சக்திகளையும் (இசஞ்சா சக்தி, க்ரியா சக்தி, ஜ்ஞான சக்தி) உடையவர் என்பதால் த்ரியம்பகன் . சத்துவம், இராஜஸம், தாமஸம் என்ற முக்குணங்களைக் கொண்டு ஜீவனில் நிலைப்பதால் முக்குணங்களை முக்கண்ணாக உடையவர் என்பர் சிலர்.
வேதாந்தம் சித்தம், அஹங்காரம், புத்தி மூன்றையும் முக்கண்ணாகக் குறிப்பிடுகின்றது. இப்படி பல் வேறு கருத்துக்களையும் கூர்ந்து கவனித்தால், எல்லா கருத்துக்களும் யோக நிலையில் மேன்மையடையும் விஷயங்களைக் குறித்தே சொல்லப்பட்டிருப்பது புரியும். ம்ருத்யு என்றால் அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தை நீக்கி சம்சார பந்தத்திலிருந்து ஜீவனை ரட்ஷிக்கும் மந்திரம். இதுவே மரணத்தை வெல்லும் மந்திரம்.
இந்த மந்திரத்தை இலட்சம் தடவை உச்சாடனம் செய்ய வைத்து யாகம் செய்தால் நூறு வயதைத் தாண்டி வாழலாம் என்றும், சாகக் கிடப்பவர் பிழைத்து விடுவார் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது அவ்வாறல்ல. பணம் பறிப்பவர்கள் சொல்லும் கட்டுக் கதை அது.
எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்.
இந்த மந்திரமானது
''த்ர்யம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருக மிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீயமா அம்ருதாத் ||''
பந்தத்தை நீக்கி மரணத்தை வெல்லும் நிலையைத் தரும் மந்திரம். இடைவிடாது இந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குண்டலினியானவள் விழிப்படைந்து ஆறு ஆதாரங்களையும் சுலபமாகக் கடந்து சஹஸ்ராரத்தை அடைவாள். அதற்குத் தோதாக எல்லா சக்தி மையங்களும், ஆறு ஆதாரங்களும் தூய்மையடைந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். எனவே ப்ரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்பட்டு குண்டலினியைத் தாங்கும் வலிமை தேகம் பெற்று விடும்.
இப்போது இந்த மந்திரத்திலுள்ள எந்தெந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது எந்தெந்த சக்கரங்களில் உள்ள சக்திகள் சிறப்பாக இயங்கும் என்பதையும், அந்த சக்திகளோடு கூடிய சிவனின் பெயர்களையும் காண்போம்.
த்ர்யம்பகம் - பூதசக்தி ஸஹித பவேச போதகர் - மூலாதாரச் சக்கரம்.
யஜாமஹே - சர்வாணீ சக்தி ஸஹித சர்வேச போதகர் - சுவாதிஷ்டானம்.
ஸுகந்திம் - விரூபா சக்தி ஸஹித ருத்ரேச போதகர் - மணிபூரகம்.
புஷ்டிவர்த்தனம் - வம்ச வர்த்தினி சக்தி ஸஹித புருஷவரதேச போதகர் - அநாஹதம்.
உருவாருகமிவ - உக்ரா சக்தி ஸஹித உக்ரேச போதகர் - விசுத்தி.
பந்தனாத் - மானவதீ சக்தி ஸஹித மஹாதேவேச போதகர் - ஆக்ஞா.
ம்ருத்யோர்முக்ஷீய - பத்ரகாளி சக்தி ஸஹித பீமேச போதகர் - சகஸ்ராரம்.
மாஅம்ருதாத் - ஈசானி சக்தி ஸஹித ஈசானேச போதகர் - சகஸ்ராரம்.
சக்தியை வளர்த்து ஜீவனை அமிர்தமயாக ஆக்கி முக்தி நிலைக்கு கொண்டு சேர்க்கும் தாரக மந்திரம். இந்த மந்திரங்களை கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட உச்சரிக்கலாம். பலன் நிச்சயம். பக்தியோடு உச்சரிப்பவர்கள் மனமும் வசப்படுவதால் எளிதில் காரியம் சித்தியாகும். இந்த விளக்கங்களெல்லாம் அறிவைப் பேரறிவு நிலைக்குக் கொண்டு செல்ல முனைபவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ளது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll
மந்திரத்தின் அர்த்தம்
*************************
| ஓம் | பிரணவ மந்திரம் ஆகும்.
| த்ர்யம்பகம் | த்ரி என்றால் மூன்று, அம்பகம் என்றால் கண். முக்கண் என்பதே இதன் பொருளாகும்.
| யஜாமஹே | என்றால் நாங்கள் அன்போடு வணங்குகிறோம் எனப் பொருள்படும்.
| ஸுகந்திம் | என்றால் நறுமணம் வீசுகின்ற எனப் பொருள்படும்.
| புஷ்டி வர்தனம் | என்றால் எக்குறையும் இல்லாத, நிறைவான, போதுமான வாழ்க்கையை எப்போதும் அளிப்பவர் சிவபெருமான் எனப் பொருள்படும். மேலும், நோயில்லாத ஆரோக்யமான வாழ்க்கையை தந்து மனவலிமையையும் உடல் பலத்தையும் அதிகரிக்க வல்லவர் சிவபெருமான். நம் வாழ்க்கையை முழுமைப்படுத்துவதே சிவபெருமான்.
| உர்வாருகமிவ | என்றால் உயிரைக் கொல்லக் கூடிய கொடிய நோய்களாக இருந்தாலும், உடலை வறுத்தக் கூடிய நோய்களாக இருந்தாலும், எவ்வகையான நோய்களாக இருந்தாலும் அவற்றை நீக்கி எங்களைக் காத்து அருள் புரியவேண்டும் இறைவா எனப் பொருள்படும்.
| பந்தனான் | என்றால் பந்தங்களிலிருந்து எனப் பொருள்படும். இதை நாம் அடுத்த வரியோடு சேர்த்துச் செப்பித்தால் அர்த்தமாகும்.
| ம்ர்த்யோர் முக்ஷீய | என்றால் மரணங்களிலிருந்து விடுதலை அடைய செய்யுங்கள் எனப் பொருள்படும். முதலில் நோய்களை நீக்க வேண்டினோம். இப்போது மரண பந்தங்களில் இருந்து நம்மைக் காத்து, மரணமே நேராமல் விடுதலை தாருங்கள் என வேண்டுகிறோம். இதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு.
‘பந்தனான் ம்ர்த்யோர் முக்ஷீய’ என்றால் இறப்பு என்பது நிச்சயம். ஒருவேளை இறந்துவிட்டால், இனி நாங்கள் பிறக்கவேண்டாம். மீண்டும் பிறந்து துன்பப்பட்டு இறக்கவேண்டாம். எங்களுக்கு மோக்ஷம் அளியுங்கள் இறைவா எனப் பொருள்படும்.
| மாம்ர்தாத் | என்றால் எங்களை மரணத்தில் இருந்து காத்து, மரணமே இல்லாதவர்களாய் செய்யுங்கள் எனப் பொருள்படும்; இறந்தாலும் இறப்பே இல்லாதவர்களாக இருக்க அருள்புரியுங்கள் இறைவா எனவும் பொருள்படும்.
முன்னதாக, நாம் இனி பிறப்பே வேண்டாம், எங்களுக்கு மோக்ஷம் தாருங்கள் என வேண்டினோம். இப்போது, இறந்தாலும், மோக்ஷம் பெற்று என்றுமே அழியாதவர்களாக உங்களோடு (இறைவனோடு) இருக்க அருள்புரியுங்கள் என வேண்டுகிறோம்.
____________________________
சுருக்கமான அர்த்தம் –
*************************
ஓம். நாங்கள் முக்கண்ணுடைய இறைவனை அன்போடு வேண்டுகிறோம். உங்களின் திருவருளால் எங்களின் வாழ்வு என்றுமே எந்த குறைகளும் இல்லாமல் நறுமணம் வீசுகின்றது. எங்களை நோய்களில் இருந்து காத்து, மரணப்பிடியில் இருந்து மீட்டு அருள்புரியுங்கள், இறைவா. இறப்பு நிச்சயம் என்றால், எங்களுக்கு மோக்ஷம் தந்து என்றுமே உங்களோடு இணைந்திருக்க அருள்செய்யுங்கள்.
____________________________
மந்திரத்தின் பொருள்:-
*************************
ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.
விளக்கவுரை:-
***************
ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் பொதுவானது. அதைத் தனியாக உச்சரிக்க சன்யாசிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. ஆகையால், மற்றோர்களும் அதை உச்சரித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக, அந்த ஓரெழுத்து மந்திரம் அனைத்து மந்திரங்களுக்கும் முதலில் உச்சரிக்கப் பெறுகிறது. இங்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது.
சிவபிரானுக்கு மற்ற பல அங்க அடையாள, அணிகலன்கள் இருக்க, இங்கு அவர் முக்கண்ணரே! என விளிக்கப்படுகிறார். காரணம், மற்றெந்த தெய்வத்திற்கும் இல்லாத இந்தச் சிறப்பை உடையவரே, மற்றெந்த தெய்வத்தாலும் அளிக்க இயலாத, பின்னால் கேட்கப் போகும் (இறவாமை என்ற) வேண்டுகோளை நிறைவேற்ற சக்தியுள்ளவர் என்று சுட்டிக் காண்பிப்பதற்காகவே ஆகும். மூன்றாவது கண்ணால் காமவேளை எரித்தவருக்கு, அதேபோல, யமனை எரிப்பது ஒரு பெரிய காரியமல்ல என்று கூறுவதுவும் ஏற்புடையதே.
சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து (இதற்கு வடமொழியில் ’அவ்யாஜ கருணா’ அல்லது ’நிர்ஹேதுக க்ருபா’ என்று பெயர்), நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார். அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே ’வர்தனம்’ என்ற சொல் உணர்த்துகின்றது.
நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், ’புஷ்டி’ என்பது உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன.
வடமொழியில் ’யஜனம்’ என்றால் யாகம் செய்தல் என்று பொருள். பொதுவாக பூசிப்பது என்பது பொருளானாலும் சிறப்பாக யாகத்தால் பூசிப்பதையே குறிக்கிறது.
மரத்தில் ஏற்றி விடப்பட்ட வெள்ளரிக் கொடியில் காய் காய்த்துப் பழுக்கிறது. பக்குவம் வந்தவுடன் பழம் கொடியிலிருந்து விடுபடுகிறது. நிலத்தில் விழும் அதற்கு என்ன நேருகிறது? அதே கொடி நிலத்தில் படருகிறது, காய்க்கிறது, பழுக்கிறது. பழம் எடை கூடுதலாக இருப்பதால், பக்குவம் வந்தவுடன், பழத்திற்குச் சேதமில்லாமல், கொடி பழத்திலிருந்து விடுபடுகிறது. அந்த நிலையே இங்கு விளக்கப்பட்டுள்ளது. நம்மைப் தன்பால் பிணைத்து வைத்துக் கொண்டுள்ள இறப்பு, நம்மிடம் இருந்து விலக அருள் புரிய வேண்டும் என வேண்டப்படுகிறது.
வெள்ளரிக்காய் பழுத்த உடனேயே கொடி அதை விட்டுப் பிரிவதில்லை. பக்குவம் வர வேண்டியதுள்ளது. அதுபோல, சாகாமையை வேண்டினாலும் பக்குவம் வரும் போதுதான் அதை அடைய முடிகிறது. அதுதான் குருவருள். இறையருள் கிடைத்தாலும், குருவருளின்றிக் காரியம் கை கூடாது என்பது இங்கே, அதாவது பக்குவம் வந்தபோது தானாக விடுபட்டுப் போகும் கொடியினால், குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.
இறவாமை என்றால் என்ன? பிறந்த உடனேயே சாவதும் உறுதி. எவரும், எதுவும் நிலையல்ல; அப்படியிருக்க இறவாமையை எப்படி வேண்டிப் பெற முடியும்? இறவாமை, இப்பொழுது எடுத்துள்ள இப்பிறவியில் அல்ல. இனிப் பிறந்து-பிறந்து, இறந்து-இறந்து இளைக்காமல் இருப்பதுவே வேண்டப்படுகிறது
. அதற்கு இம்மனிதப் பிறவி ஒரு கருவியாக இருக்கிறது.
இம்மாதிரியான மந்திரங்களைச் சொல்லி, கேட்டு, சிந்தித்து, உணர்ந்து பயன் அடைய முடிகிறது.
எந்த மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கேற்ற பயன் கிடைப்பது உறுதி. அதில் ஐயமில்லை.
ஆனால் ஒலிநாடா சொல்லிக் கொண்டிருப்பது போலன்றி, அதன் பொருளறிந்து சொல்லுவது, பன்மடங்கு பயனை, உடனே அளிக்க வல்லது.
மந்திரம் செப்பும் ஒழுக்கநெறி
இம்மந்திரத்தை உடலில் திருநீறு இட்டுக்கொண்டு, ருத்ராட்சை மாலை அணிந்துகொண்டு செப்பிக்கலாம். (இம்மந்திரத்தை சரியாக உச்சரித்தால்) இம்மந்திரத்தால் எழும் சக்தி, நமக்கு புதிய தெம்பை அளித்து மனத்திற்கு தைரியத்தை அளிக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இம்மந்திரத்தைச் செப்புவது அவர்களின் மனதிற்கு ஒரு தெம்பை தரும். மேலும், சிவபெருமானின் அருளால் அவர்களுக்கு நல்பேறு கிட்டும்.
எப்படி காயத்ரி மந்திரம் மனத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீகத்தில் ஈடுபட நம்மை தயார்ப்படுத்துகிறதோ, அதுபோல மஹாம்ரித்யுஞ்சாய மந்திரம் நம் உள்ளத்திலும் உடலிலும் இருக்கும் பிணிகளை நீக்க துணைபுரியும்.
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
+++++++++++++
நமது உடம்பில் சிரசு (தலை) மேலானது. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். அதற்கு மேல் இருப்பது சிகை.சிகைக்கு மேல் ஒன்றும் இல்லை. நமது சைவ சாத்திரத்தில் மந்திரங்கள் 11
1,ஒம் ஈசானாய நமஹ
2.ஒம் தத்புருஷாய நமஹ
3,ஓம் அகோரா ய நமஹ
4,ஒம் வாமதேவா ய நமஹ
5,ஒம் சத்யோஜாதா ய நமஹ
6,ஓம் ஹ்ருதாய நமஹ
7,ஒம் சிரசே நமஹ
8,ஒம் சிகாயை நமஹ
9,ஓம் கவசாய நமஹ
10,ஒம் நேத்ரோப் யோ நமஹ
11,ஒம் அஸ்த்ராய நமஹ
இதில் 8 வது மந்திரம் சிகாயை நமஹ . எட்டாம் திருமுறையாக
சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்திற்கு மேல் சிறந்த நூல் இல்லை முதல் ஐந்து மந்திரமும் பஞ்சப் பிரம மந்திரம் . அடுத்த ஆறும் சடங்க மந்திரம் .இந்த 5+ 6 சேர்ந்துசம்மிதா மந்திரம் எனப்படும். கல்லை கனியாக்கும் திருவாசகத்தை கலந்து பாடினால் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டா இன்பம் அருளி முக்தி நெறி அளிக்கும்.
ஒம் நமசிவாய
- *சித்தர்களின் குரல் shiva shangar*


Sunday, March 18, 2018

" அஷ்டமியும்,நவமியும் "

!! "அர்த்தமுள்ள இந்து மதம்"!!
" அஷ்டமியும்,நவமியும் "
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்க்கு என்ன காரணம் ?
அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.
கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.
ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.
அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.
அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.
சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.
அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.
அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.
அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.
நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெறும்.
அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

Saturday, March 17, 2018

எறிபத்த நாயனார்

சிவாயநம எனும் மந்திரத்தின் இரகசியம் - Sattaimuni Nathar

*அமாவாசை வழிபாட்டின் மகத்துவம்!

நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் விளங்கும்.இந்த தெய்வங்கள் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும், என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.
அமாவாசை அன்று வழிபடக்கூடிய தெய்வங்கள் :
விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவாராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி.
அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
*காகத்திற்கு உணவிடுங்கள் :
காகம் சனிஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு, முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை!!

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வாழ்வில் திருப்பமான நிகழ்வுகள் நடைபெறும்

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வாழ்வில் திருப்பமான நிகழ்வுகள் நடைபெறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். திருப்பதி பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
* திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம். ஆனாலும் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்து விடும் என்பது அதிசயமான ஒன்றாகும். அவரது வியர்வையை பீதாம்பரத்தால் ஒற்றி எடுப்பார்கள்.
* திருமலையில் உள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிபருப்பு கேசரி போன்றவை தினமும் தயார் செய்யப்படுகிறது. ஆனால் இவற்றுள் லட்டு தான் முதலிடம் பெற்று விளங்கு கிறது.
* ஏழுமலையானுக்கு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் நைவேத்தியமாக படைக்கப்படும். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பகிரகத்துக்கு முன்பாக உள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. எனவே இறைவனின் முன்பாக வைக்கப்படும் தயிர்சாதம் பிரசாதமாக கிடைப்பதை, தங்கள் வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
* ஏழுமலையானுக்கு உடுத்தப்படும் பீதாம்பரம் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஒன்றாகும். 6 கிலோ எடை கொண்ட பட்டுப் புடவை பீதாம்பரமே இறைவனுக்கு ஆடையாக அணிவிக்கப்படுகிறது. உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பார்கள். பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கிறார் கள்.
* ஏழுமலையானின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புணுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புணுகும் சாத்துவார்கள். தினமும் காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறும்.
* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் போன்றோர் பெருமாளுக்கு காணிக்கைகளை செலுத்தியுள்ளனர். ராஜேந்திர சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்றோர் செய்த திருப்பணிகள், கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
* வெள்ளிக்கிழமையிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.
* மகா சிவராத்திரியில் சத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதி உலா எழுந்தருள்வார்.
* திருமலை திருப்பதி கோவில் தல விருட்சம் புளியமரம்.
* சாத்வீக கோலத்தில் இருந்தாலும், தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம்பெற்றிருக்கும். ஆனால் திருமலையில் ஏழுமலையான் எந்தவித ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
* திருப்பதி அலர்மேல்மங்கை தாயாருக்குரிய ஆடை கத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இந்த ஆடையை பயபக்தியுடன் தயாரிக்கின்றனர்.
* ஏழுமலையான் அபிஷேக நீர், குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே மீண்டும் கலக் கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்ட நீர் என்பதால் இதனை புனித நீராக பக்தர்கள் கருதுகின்றனர்.

Friday, March 16, 2018

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?
சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். "ஏக தந்தர்" என்பதைத் தமிழில் "ஒற்றைக் கொம்பன்" என்பார்கள். "ஓம்" என்னும் ஓம்கார எழுத்தின் தனித் தமிழ் வடிவம், ஏறத்தாள யானை முகத்தின் வடிவம் போலக் காணப்படும். ஓம்கார ஒலியைக் காதால் கேட்கலாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்கு புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும், விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இவ்விரண்டும் சேர்ந்ததே,"உ" என்கிற பிள்ளையார் சுழி ஆகும்.
நாதமும் விந்தும் ஒன்றுக் கொன்று துணை (சான்று) நிற்க வேண்டும். இதில்,சான்று என்னும் பதத்தை "கரி" என்றும் சொல்வர். ஆக, உமை வடிவாகிய "சுழி" வடிவமும், சிவ சக்தி சான்றாகிய "கரி" வடிவமும் கொண்டு நிற்கும் போது, கணபதியின் வடிவமாகிய ஓம்காரம் தோன்றும். எனவே தான், ஏதேனும் எழுதத் துவங்கும் முன்னர், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம். தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும், சுழியை அடிப்படையாகக் கொண்டவையே! பிரணவத்துக்கும் ஒலி வடிவமும்,வரி வடிவமும் உண்டு. வரி வடிவாக விநாயகரின் திருவுருவமும், ஒழி வடிவாக அவரது ஆற்றலும் திகழ்கின்றன.


உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :
உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :
எவ்வளவு சந்தோசமான விஷயம்.
1.அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா
2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு
3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி
4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.
5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,தமிழ்நாடு
6.பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.
7.பிரஹதீஸ்வரர் கோவில்,தஞ்சாவூர்,தமிழ்நாடு
8.அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை, தமிழ்நாடு
9.ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி, தமிழ்நாடு
10.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு
11. ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம், தமிழ்நாடு
12.தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்,தமிழ்நாடு
13.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,தமிழ்நாடு
14.நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,தமிழ்நாடு
15.மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,தமிழ்நாடு
16.வைத்தீஸ்வரன் கோவில்,தமிழ்நாடு
17.ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா
18.பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி,