Saturday, April 28, 2018

மலையை குடைந்து உருவான ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில்...

நரசிம்மரை பற்றி நீங்கள் அறிந்திராத ஆன்மீக குறிப்புகள்...

பலிபீடத்தை தொட்டு வணங்கினால் என்ன ஆகும் தெரியுமா?

இந்தியாவில் உள்ள அபூர்வமான கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்...

இந்தியாவில் உள்ள அபூர்வமான கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்...

Thursday, April 26, 2018

நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான். 
அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். 
சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.
அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார். அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.
இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர்.
அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாறச் சென்ற போது "குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி, அங்கு தங்களால் உண்ண இயலாது எனச் சொல்லி சென்று விட்டனர். இதனால் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர். இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார்.
நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார். சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார். தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், ""இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார். அந்த நேரத்தில்,""சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன். அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே. அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது.
12 ஆண்டு தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத்துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார். தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அந்தக் குழந்தை சிவலோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது. சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர். அவன் பிரதோஷ வேளையில் (மாலை4.30-6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான். அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியின் நடுவில் சிவதரிசனம் காட்டினான்.
இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர்.
பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர், 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார். தன் தவறுக்கு வருந்தி, முழங்காலிட்டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணிவுடன் அமர்ந்துள்ளார். பிரதோஷ நாளான இன்று, நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

astrokannan : கிரகங்கள், நட்சத்திரங்களின் அதி தேவதைகள்

astrokannan : கிரகங்கள், நட்சத்திரங்களின் அதி தேவதைகள்: நமது  இந்திய ஜோதிட  சாஸ்திரத்தில்  கிரகங்கள், நட்சத்திரங்களுக்கு என பிரத்யேகமாக  அதி தேவதைகள் உண்டு. ஒருவரின்  ஜென்ம  நட்சத்த...

அரோஹரா

'அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கம். இதற்கான பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
... என்பதாகும்.
முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள்
'ஏலே லோ ஏலே லோ'
... என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று,
'அர ஹரோ ஹரா'
... என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு
'அர ஹரோ ஹரா'
... என்றுச் சொல்வது வழக்கமாயிற்று. காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்),
'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'
... என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள்
'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'
... என்றுச் சொல்வது,
'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக'
... என்று உரிமையோடு முறையிடுவதாகும்.
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் இனி,
'வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா'
... என்று உற்சாகமாகச் சொல்வோமே!

நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு

மனிதர்கள் தங்கள் வாழ்வில் சிறப்படைய அவரவர் நட்சத்திர நாளில் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்களை வழிபட நல்வழி பிறக்கும்
இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருப்போம் என்பது விதியாகும். ஒவ்வொருவரும் மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்போம். ஆனால், அதன் அதிதேவதை எது என்பது நம் அனைவருக்கும் தெரியாத ஒன்று. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய நட்சத்திர தேவதையை அறிந்து அல்லது தெய்வத்தை அறிந்து அதை வழிபட்டாலே நம்முடைய சகல காரியங்களும் எளிதில் நிறைவடையும். ஏனெனில், ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் பொழுது அவனின் ஜென்ம நட்சத்திரமே முதன்மை மற்றும் முக்கியமானது ஆகும். அதனால்தான் நாம் கோவில்களுக்குச் சென்று நம் பெயருக்கு அர்ச்சனை செய்யும் பொது நம்முடைய பெயர், கோத்திரம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கூறி அர்ச்சனை செய்கிறோம்.அவன் இறந்த பிறகு, அவன் இறந்த நாளின் “திதி” யே கணக்கில் எடுக்கப்பட்டு, வருடா வருடம் அந்தத் திதியைக் கணக்கில் வைத்தே அவர் நினைவாகத் திதி கொடுக்கப்படுகிறது.எனவேதான் ஒரு மனிதன் இப்பூவுலகில் உயிருடன் இருக்கும் வரை அவரின் “ஜென்ம நட்சத்திரமும் அவரது ஆன்மா பிரிந்த பிறகு அந்த நாளின் “திதியே” முக்கியமாகக் கணக்கில் எடுக்கப்படுகிறது.
பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள்.
இங்கு எந்தெந்த நட்சத்திரத்திற்கு என்ன தெய்வம் என்று, பழைய கிரந்தங்களிலும், மூலநூல்களிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து “ அதிதேவதைகள் ” யார் – என்று கொடுக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் :
அஸ்வினி – ஸ்ரீசரஸ்வதி தேவி.
பரணி – ஸ்ரீதுர்கா தேவி.
கார்த்திகை – ஸ்ரீசரஹணபவன் (முருகப் பெருமான்).
ரோகிணி – ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்).
மிருகசீரிடம் – ஸ்ரீசந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்).
திருவாதிரை – ஸ்ரீசிவபெருமான்.
புனர்பூசம் – ஸ்ரீராமர் (விஸ்ணு பெருமான்).
பூசம் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்).
ஆயில்யம் – ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்).
மகம் – ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்).
பூரம் – ஸ்ரீஆண்டாள் தேவி.
உத்திரம் – ஸ்ரீமகாலட்சுமி தேவி.
அஸ்தம் – ஸ்ரீகாயத்ரி தேவி.
சித்திரை – ஸ்ரீசக்கரத்தாழ்வார்.
சுவாதி – ஸ்ரீநரசிம்மமூர்த்தி.
விசாகம் – ஸ்ரீமுருகப் பெருமான்.
அனுசம் – ஸ்ரீலட்சுமி நாரயணர்.
கேட்டை – ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்).
மூலம் – ஸ்ரீஆஞ்சநேயர்.
பூராடம் – ஸ்ரீஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்).
உத்திராடம் – ஸ்ரீவிநாயகப் பெருமான்.
திருவோணம் – ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்).
அவிட்டம் – ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்).
சதயம் – ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்).
பூரட்டாதி – ஸ்ரீஏகபாதர் (சிவபெருமான்).
உத்திரட்டாதி – ஸ்ரீமகாஈஸ்வரர் (சிவபெருமான்).
ரேவதி – ஸ்ரீஅரங்கநாதன்.
இவைகள் அனைத்தும் அந்தந்த நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் ஆகும். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
இதனைத் தவிர அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகம் எதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வந்தால் வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.
நட்சத்திரங்களின் கிரகங்கள் மற்றும் தெய்வங்கள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சூரியன் சிவன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் சந்திரன் சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் செவ்வாய் முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகு காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி குரு தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி சனி சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி புதன் விஷ்ணு
மகம், மூலம், அஸ்வினி கேது விநாயகர்
பரணி, பூரம், பூராடம் சுக்கிரன் மகாலஷ்மி
ராசி அதிபதிகள் :
மேஷம், விருச்சிகம் - அதிபதி - செவ்வாய்
ரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.
மிதுனம், கன்னி - அதிபதி - புதன்
கடகம் - அதிபதி - சந்திரன்
சிம்மம் - அதிபதி - சூரியன்
தனுசு , மீனம் - அதிபதி - குரு
மகரம் , கும்பம் - அதிபதி - சனி
உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களின் அதிபதியான ஸ்ரீசரஸ்வதி தேவியையும் நவக்கிரக கேதுவையும் அதன் அதி தெய்வமான விநாயகரையும் நிச்சயம் வழிபட வேண்டும். மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயையும் அதன் அதி தெய்வமான முருகனையும் வழிபட வேண்டும்.
இது போன்று அவரவர் நட்சத்திர, ராசி/இலக்கின தேவதை, அதி தேவதைகளை வழிபட்டு வர நமது ஜாதகப்படி வரவேண்டிய விரைவாகவும் நிறைவாகவும் வந்து சேரும். தீமைகள் வந்தாலும் குறைவாக வரும். அதை சமாளிக்க முடியும். அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மன வலிமையும் கிடைக்கும்.
*******************************************************************************


Tuesday, April 24, 2018

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம். ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம். ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு. உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.
நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.
நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.
எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம். இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன. இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

கோபுர பொம்மைகள்கோவில் கோபுரத்தில் பல திருவுருவங்கள் காணப்படுவதைப் பார்க்கிறோம்.பொம்மைகள் நம் விருப்பபடி வைத்துவிட முடியாது.இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன தெய்வங்களின் உருவங்களை வைக்க வேண்டும் என்ற விதி உண்டு.கோபுரத்தின் அடிப்பாகத்தில் பிரும்ம தேவர் சம்பந்தப்பட்ட பொம்மைகளும் ,நடு பாகத்தில் மகா விஷ்ணு சம்பந்தப்பட்டு பொம்மைகளும்,மேல் பாகத்தில் சிவ பெருமான் சம்பந்தப்பட்ட பொம்மைகளும் இடம் பெற வேண்டும்.
கோபுரத்தில் பக்கப் பகுதிகளில் தேவதைகள் ,ரிஷிகள் , பக்தர்கள்,பூத்கான்ன்களின் உருவங்கள் அமைக்க வேண்டும்.
இந்த உருவப் பொம்மைகளைச் செய்ய சில இலக்கண விதிகள் உண்டு. பிரதிமாலக்ஷணம் என்று பெயர்.
அந்தத் தெய்வ உருவங்களின் முகங்களின் அளவை விட உடல் பகுதி பத்து மடங்கு இருக்க வேண்டும்.மற்ற தேவதைகளுக்கு முகத்தை விட ஒன்பது மடங்கு இருக்க வேண்டும்.மனித உருவங்களுக்கு முகத்தைவிட எட்டு மடங்கும்,வேதாளம் ,அசுர கணங்களுக்கு முகத்தைப் பொருத்தவரை துவார பாலகர்,பூதகணங்களின் கண்கள் உக்கிர திருஷ்டியுடனும்,கடவுள் உருவங்களின் கண்கள் அனுக்கிரக திருஷ்டியுடனும் இருக்க வேண்டும்.
கோபுரத்தில் தேவர்கள்,மிருகங்கள்,பறைவைகள் என அனைத்து ஜீவராசிகளின் உருவங்களும் இடம் பெற்று இருக்கும்.இவை சமத்துவதைக் குறிக்கின்றன.அனைத்து உருவங்களிலும் இறைவன் இருப்பதை இவை உணர்த்துகின்றன.

மண்டலம் பற்றிய தகவல் இது ...48 நாள் என்பது ஒரு மண்டலம் இது ஒரு கணக்கு.
இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் என்றும் சொல்லலாம் ..
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.
அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ? அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்..
நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.
ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும
கவனிப்போம்....
கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48
எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.
நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! அறிவியல் உண்மை விளங்கும்.

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ? கேட்கமாட்டீர்கள் ...
மதம் மாற்றிவிட்டால்.......
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!
“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.
அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.
எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.
சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.
நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.
பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.
ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.
ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்
மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.
ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.
எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.
ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.
மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.
இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.
அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.
இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.
குறிப்பு:-
மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.
ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.
மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.
விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

பாவமும் பரிகாரங்களும்

நாம் செய்துள்ள பாவங்களை போக்குவதற்கும் ,நமக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகவும் ஆலயங்களில் தீபம் ஏற்றுகிறோம் 
நல்லஎண்ணை மற்றும் ,நெய் தீபமே சிறந்தது ஆனால் நாம் என்ன செய்கிறோம் கடையில் விற்கும் தீபஎண்ணெயை வாங்கி உபயோகிக்கிறோம் அதில் பத்து சதவீதம் நல்லஎண்ணையும் மீதி பாமாயிலும் தவிட்டு எண்ணையும் கலந்துஉள்ளது இந்த எண்ணெயால் தீபம் ஏற்றுவது சரியல்ல .பாவத்தை போக்க நினைத்து மீண்டும் பாவத்தை சுமக்கிறோம்.

Saturday, April 21, 2018

முருக கடவுளின் அறுபடை வீடுகளும் அவற்றின் சிறப்புகளும்....!

மிகப்பழமை வாய்ந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரிக்கிறது. இவற்றில் மலையும் மலையைச் சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான்.
பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது
திருச்செந்தூர்: கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர்.
திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.
திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.
பழமுதிர்ச்சோலை: நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

ஒவ்வொரு மனிதரும் காசியில் பாயும் கங்கையில் நீராட வேண்டும்

கருடன் பறக்காது.
பல்லி கத்தாது.
மாடு முட்டாது.
பூக்கள் மணக்காது.
பிணம் எரியும் போது நாறாது.
முதலில் கேள்விப்பட்ட போது, வழக்கம் போல இதுவும் இந்துமத அதீத நம்பிக்கை தான் போல என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், கருடன் எங்கேயும் பறக்கவே இல்லை. (அத்தனை பிணங்கள் எரியும் இடத்தில் Sky Scavenger கருடன் இல்லை என்பதே பேராச்சர்யம்).
நடக்கும் போது நாலடிக்கொரு இடத்தில் மாட்டுச் சாணம் கிடக்கும் அளவுக்கு மாடுகள் நிறைந்த தெருக்களில் ஒரு மாடு கூட முட்ட எத்தனிக்கவில்லை.
பல்லி கத்துகிறதா என்று ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு நேரமில்லை. அவசியமுமில்லை.
பூக்கள் மணக்கவில்லை ( மதுரை மல்லிகையை அங்கே எடுத்துச் சென்று ஒரு முறை சோதித்துப் பார்க்கலாம்)
பிணம் எரியும் போது நாறவில்லை. (கிட்டத்தட்ட 4 மணி நேரம் சடலங்கள் வருவதையும், அதன் சடங்குகள், விறகு கொண்டு வருபவர்கள், விறகு உடைப்பவர்கள், எரிப்பவர்கள், எரித்த சாம்பலை அகற்றுபர்களை அருகிலிருந்து கூர்ந்து கவனித்தோம்.)
பக்தியைக் கடந்து புவியியல், மண்ணியல் படி பார்த்தால், அந்த நிலம் ஏதோ ஒரு தனித்துவமாகத் தான் இருக்கக் கூடும். இல்லாவிட்டால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இறங்கி கிழக்கில் பாயும் கங்கை, காசியில் மட்டும் வடக்கு நோக்கி பாயும் சிறப்பு எப்படி அமையும்?
இறைவன் இருப்பதால் அதை புனிதத்தலம் என்று நாம் நினைக்கிறோம். நம் முன்னோர்கள் அது புனிதத்தலமாக இருப்பதால் அதை இறைவன் இருக்கும் இடமாக நிர்மாணித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதரும் காசியில் பாயும் கங்கையில் நீராட வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் அற்புதம்.
வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு ஒரு முறையேணும் சென்று வாருங்கள்.

Friday, April 20, 2018

மலைக்கோயில் கட்டியது ஏன்?

நம் முன்னோர், மலைகளில் கோயில்களை அமைத்து, வழிபாடு செய்ததற்கு ஆன்மிகக்காரணம் மட்டுமல்ல.
அறிவியல் காரணமும் இருக்கிறது. நம் ஆரோக்கியம் கருதியே அவர்கள் இவ்வாறு செய்தனர்.
அடிவாரத்தில் இருந்து நடந்து மலையேற வேண்டும் என்பதற்காக, பாத விநாயகர் கோயிலை அடிவாரத்தில் கட்டினர்.
மலைப்பாதையின் இருபுறமும் வனம் போல திறந்தவெளியாக இருக்கும். அங்குள்ள மூலிகைகள் மீது பட்டு வரும் காற்று மருத்துவகுணம் கொண்டது. அது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும்.
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, தசைகள் வலுவடையும்.
தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து போகும். காலுக்கு சிறந்த பயிற்சி ஏற்படும் வியர்வை வெளியேறும். நல்ல பசி உண்டாகும்.
மலைப்பாதையிலுள்ள ஊற்று, சுனைநீரில் மருத்துவகுணம் நிறைந்திருக்கும்.
திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற தலங்களில் மலையைச் சுற்றி வந்து வழிபடுவதும் இதற்காகத் தான். கிரிவலம் வரும்போது விளையாட்டாகப் பேசிக் கொண்டு சுற்றக் கூடாது.
இறை நினைவுடன் மட்டும் சுற்ற வேண்டும்.
இதனால் தியானத்திற்கு ஈடாக மனம் ஒருநிலைப்படும். மனம் அடங்கினால் உடலுக்கு நல்லது. இதன் அடிப்படையில் தான் மலையில் கோயில்கள் கட்டப்பட்டன.
இன்றோ, சில மலைக்கோயில்களில் வாசல் வரை வாகனங்களில் செல்லும் வழக்கம் வந்து விட்டது.
முடியாதவர்களும், முதியவர்களும் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தால், இறையருளுடன் உடல்நலமும் பெறலாம் !!!
உபயம் கம்லாம்பிகைகேசவன் அம்மா(G+)

திருமணமாகி புகுந்த வீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவதன் காரணம்:

1.திருமணமாகி புகுந்த வீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவதன் காரணம்:
குத்துவிளக்கின் தாமரை போன்ற பீடம் – பிரம்மாவையும்
குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும்
நெய் எரியும் அகல் – சிவனையும் 
திரி – தியாகம்
தீபம் – திருமகளையும்
சுடர் – கலைமகளையும் குறிக்கிறது
குத்துவிளக்கில் உள்ள 5 முகங்களும், பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற 5 நற்குணங்களை குறிப்பதாகும்.
அதனால் தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் மூலமாக வீடு முழுக்க ஒளிபரவச் செய்கின்றனர்.
2.திருமணத்தின் போது அருந்ததி பார்ப்பது என்பது என்ன? எதற்கு?
இரமாரின் குலகுருவான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. இவர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
இதன் விளைவாக இவர்கள் வான மண்டலத்தில் நட்சத்திரங்களாக ஒளிரும் பேறு பெற்றனர்.
இவர்களைப் போல் மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது ஆன்மீக காரணம்.

Tuesday, April 17, 2018

தடைகள் யாவும் நீங்கி நலமுடன் வாழ திருநெடுங்களம்...

ஜோதிடத்தில் அட்சய திருதியை

தமிழ் வருடத்தில், முதல் மாதத்தில் மேஷத்தில் உச்சம் பெறும் சூரியனும், ரிஷப ரோஹிணி நட்சத்திரத்தில் உச்சம் பெறும் சந்திரனும் வரும் திதி அட்சய திருதியை என்று போற்றபடுகிறது. இருவரும் உச்சம் பெறும் ஒரே திதி இது என்பதால் மேலும் சிறப்பு. கீழ் இருக்கும் ராசி சக்கரத்தில் காணலாம். புது வருசத்தில் காலபுருஷ இரண்டாம் இடம் ரிசபம் எனும் தனஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெறுதல் என்பது மிகசிறப்பான காலம்.
அட்சய - வளருதல், எப்போதும் குறையாதது என பொருள் . திருதியை (திரி + திதி) - அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள். வளமும் முன்னேற்றமும் தரும் "சித்திரை மாத மூன்றாம் பிறை" என்பதே இதன் பொருள்.
உயிர் மற்றும் ஆன்ம காரகன் சூரியனும், உடல்/மன காரகன் சந்திரனும் உச்சம் பெற்று இருப்பதால் இந்நாள் சிறப்பு பெறுகிறது அவ்வாறு இருவரும் உச்சம் பெற்று, உயிர் காரகன் சூரியன் தான் நீசம் பெறும் ராசி துலாம் மீதும் மற்றும் உடல் காரகன் மற்றும் மன காரகன் சந்திரன் தான் நீசம் பெறும் விருச்சகத்தின் மீதும் தன் பார்வையை செலுத்தி சுபதன்மை பெற செய்கிறனர். மேலும், அட்சய திருதியை அன்று கால புருசனின் இரண்டாம் இடத்தில் உச்சம் பெறும் சந்திரனால், கல்வி அறிவு, செல்வம் மற்றும் புகழ் பெறுவார்கள் என கொள்ளலாம்.
ஆரோகணத்தில் (சுக்ல பட்சம் ) பயணிக்கும் சந்திரன், சித்திரை சந்திரனாக ஒளிவீசும் பௌர்ணமியும் இந்த அட்சய திரிதியை புள்ளியில் இருந்து தொடங்குவது சிறப்பு.
அட்சய திருதியில் செய்யவேண்டியவை
==================================
இந்த தினத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தேவையான செயல்கள் செய்வது சிறப்பு. குறிப்பாக கல்வி பெறுதல், அன்னம் மற்றும் வஸ்திரம் தானம் செய்தல், பெரியோர்களை தரிசித்தல், புத்தகங்கள் வாங்குதல் மற்றும் கொடுத்தல், இறைவழிபாடு, முதலீடு செய்தல்..வெள்ளியிலான சிறுபொருட்க்கள் வாங்குதல் போன்றவை ஜோதிடத்தில் பரிந்துரைக்க படுகிறது. இதனால் இந்த தமிழ் வருடம் முழுவதும் புண்ணியங்கள் சேரும் என்றும், வாழ்க்கை வளம் பெறும் என்றும் நம்பிக்கையூடப்படுகிறது.
(அட்சய திருதியை அதிகாலை சித்தர்கள் ஜீவ சமாதிக்கு செல்லுங்கள். தியானம் செய்யுங்கள் அதிக உணர்வலைகளை உணர்வீர்கள்)

அக்ஷய திருதியை ! Akshaya Thrithiya !

Monday, April 16, 2018

சிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம்! - இது திருநல்லூர் ஸ்பெஷல்!

நாம் பெருமாள் கோயில்களுக்குச் செல்லும்போது, நமக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுப்பதுடன், நமக்கு பகவானின் திருவடி ஸ்பரிசம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பகவானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரியை நம் தலையில் வைத்து எடுப்பார்கள். அப்படி பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதுபோலவே, ஒரு சிவன் கோயிலிலும் சடாரிவைத்து எடுக்கிறார்கள். பக்தர்களின் தலையில் சடாரி வைக்கும் நடைமுறை, தொன்மைச் சிறப்பு வாய்ந்த, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆச்சர்யமான பழக்கத்துக்குக் காரணம், சிவபெருமான் திருநல்லூரில் திருநாவுக்கரசரின் முடியில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வாதம் செய்ததுதான். இதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
திருச்சத்திமுற்றம் தலத்தைத் தரிசித்த திருநாவுக்கரசர், ``இறைவா, யமன் என்னைக் கொண்டுபோகு முன்னர் உன் திருவடியை என் தலை மீது சூட்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்" என மனமுருகி வேண்டினார்.
திருச்சத்திமுற்றத்தில் வேண்டிக்கொண்ட திருநாவுக்கரசருக்கு, நல்லூர் திருத்தலத்தில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வதித்தார். அதை நினைவுகூரும் வகையில், இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிவபெருமானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரிவைக்கப்படுகிறது.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.
வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.
குறிப்பு
சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால்
நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.
திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.
திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..
அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதிணோர் மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது மாறாக அங்கு கூச்சலும் குலப்பமாக தான் இருக்கும் இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.
அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னம் காரர்கள் தெரியுமா. மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் அவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்
.


Sunday, April 15, 2018

ஓம் ஷாந்தி மூன்று முறை சொல்வது ஏன்?


ஷாந்தி என்றால் அமைதி எனவும் பொருள்படும். மந்திரங்கள் உச்சாடனம் செய்து முடிக்கும் போது இறுதியாக “ஓம் ஷாந்தி:, ஷாந்தி:, ஷாந்தி:” என்று முடிப்பார்கள். இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. நம்முடைய நூல்களைப் புரட்டிப் பார்த்தால் அதற்கான அரிய தத்துவம் நமக்கு புரியும்.

ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் மூன்று விதமான துன்பங்களில் இருந்து நீங்க வேண்டும். இதைப் பற்றி சாங்கிய யோக சூத்திரம் முதல்வரியில் கூறுகின்றது. அந்த மூவகை துன்பங்கள்:

1) அதிதைவீகம் (நம் சக்திக்கு மீறிய ஒன்றால் ஏற்படுவது)
2) அதிபௌதீகம் (பௌதீக பொருட்களால் ஏற்படுவது)
3) அதியாத்மிகம் (நம்மால் ஏற்படுவது)

|| அதிதைவீகம் என்பது நம்மால் கட்டுப்படுத்தமுடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் வரும் துன்பமாகும். நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இயற்கை. வெள்ளம், புயல், நிலநடுக்கம், ஆழிப்பேரலை, எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கையிடமிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இந்த துன்பங்களை தடுத்து நிறுத்தும் சக்தி சாமானிய மனிதர்களுக்குக் கிடையாது. 

|| அதிபௌதீகம் என்பது உலகத்தில் இருக்கும் ஜடப்பொருட்கள், உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இவற்றுள் மனிதன், மிருகம், தாவரம், உயிரற்றப் பொருள் ஆகியவை அடங்கும். உதாரணமாக: ஒருவர் நம்மை வாய்ச்சொல்லால் துன்பப்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கையால் தாக்குதல். பாம்பு கடி, தேள்கடி, டிங்கு, மலேரியா, வனவிலங்கு தாக்குதல், விஷசெடி தீண்டல், கட்டிடங்கள் சரிந்து விழுதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்து போன்றவை.

|| அதியாத்மிகம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துன்பமாகும். இதுவே மிகவும் ஆபத்தானது என சொல்லப்படுகின்றது. இந்த வகையான துன்பத்திற்கு நாம் தான் முழு பொறுப்பு. நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதை இரண்டு வகையாகப் பகுக்கலாம்.

க) உடலால் – புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல் போன்ற செயல்களால் நம் உடலை நாமே துன்புறுத்திக் கொள்ளுதல்
உ) மனத்தால் – தேவையற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல், முறையற்ற விஷயங்களை நினைத்துக் கொண்டிருத்தல், கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற தீயகுணங்களைக் கொண்டிருத்தல்

|| தீர்வுகள் ||

பதஞ்சலி யோக சூத்திரத்தில் துன்பங்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெளிவாக விளக்குகின்றார். துன்பங்கள் என்பவை கிலேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. நம்முடைய சுய இயல்பைப் பற்றி நாம் அறியாமல், அறியாமையில் திளைத்திருப்பதால் தான் புத்திமலுங்கி நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்கிறோம் என பதஞ்சலி கூறுகின்றார். எனினும் எதிர்காலத்தின் துன்பங்களைத் தடுக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் உள்ளது என்பதை “ஹேயம் துக்ஹம் அனாகதம்” (2:16)-இல் குறிப்பிடுகின்றார்.

இந்த மூன்று நிலையிலுமான துன்பங்கள் நீங்கி எங்கும் அமைதி நிலவிடவே, ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி என மூன்று முறை செப்பிக்கப்படுகின்றது. அமைதியான இடத்தில், தூய்மையான பக்தி கொண்ட உள்ளத்தோடு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு ஓம் ஷாந்தி என செப்பித்து வந்தால் ஒரு மனிதன் இந்த மூன்று வகையான துன்பங்களில் இருந்தும் நீங்கிடலாம்.

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!!


ஹோமங்களும் அதன் பயன்களும்

=========================
1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
..
2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
..
3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
..
4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
..
5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
..
6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
..
7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
...
8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
...
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
...
10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
...
11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
...
12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
..
13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
...
14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
...
15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
..
16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல பயங்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

Friday, April 13, 2018

நான்கு முக நடராஜர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நடராஜர், நான்கு முகங்களுடன் வித்தியாசமான கோலத்தில் உள்ளார். இவரை ‘குஞ்சிதபாத நடராஜர்’ என்கின்ற னர். இவரது பாதத்திற்கு கீழே முயலகன் இல்லை. சித்ரா பவுர்ணமியன்று இவர் பரத்வாஜ முனிவருக்கு காட்சி தந்ததாக ஐதீகம். எனவே அந்த நாளில் இவரை வழிபட்டால் குறைவில்லாத வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காகமும், ஆன்மீகமும் ...........

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….தெரியவில்லை!.. ஆனால்,
உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திர
சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்
– மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமைவேண்டும் என்று நினைக்கும்சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.
தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும்மகிழ்ச்சியாகவும்இருக்க,
தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழஇந்தக்காணுப்பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக்கோலமிடுவார்கள்.
அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில் நூபூரம்,
பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கை எனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால்காக்கைக்கு உணவு அளித்தால் எமன்மகிழ்வாராம்.
எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.தந்திரமான குணம் கொண்ட காகம்
யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்லசெய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம்வீட்டின் முன் உள்ள “கா…கா…’
என்று பலமுறை குரல் கொடுக்கும்.
இந்தப்பழக்கம் இன்றும் உண்டு.
காலையில் நாம் எழுவதற்கு முன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்லபலன் உண்டு. வீடு தேடிகாகங்கள் வந்துகரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.
காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன் வாழலாம் என்று ஆன்மீகம் கூறினாலும் மனிதனை அண்டி பிழைக்கும் ஒர் உயிரினம் நாகரீக வளர்ச்சியில் நாம் கவனிக்க தவறி அந்த இனம் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும,
Devi recently shared 13 posts in this group. Learn more about

சொந்தவீடு அமைய இந்த வழிபாடு செயுங்கள் :

சொந்தவீடு அமைய இந்த திருப்புகழ் சொல்லி பூஜித்து முருகப்பெருமானை வழிபட்டு வர நற்பலன் கிடைக்கும்.
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!
புந்தி நிறை அறிவாள! உயர்தோளா !
பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீச வடிவேலா
தண்மரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப !
தண்தமிழன் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே ... !!!

Thursday, April 12, 2018

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்.சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.

Wednesday, April 11, 2018

விஸ்வாமித்திரரின் காயத்ரி இலிங்கமும் சங்கமேஸ்வரரின் திருவருளும் - பவானி கூடுதுறை :

>> பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனும் நாமத்தில் சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார் . இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை ஆகும் . இங்கு கோபுரமே இலிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.
>> அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.
>> விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக இலிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி இலிங்கம் எனப்படுகிறது. காயத்ரி இலிங்கத்தை பூசிக்க விஸ்வாமித்திரரின் பரிபூரண அருளை பெறலாம் .காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை , ஒரு தடவை சொன்னால் போதும், இலட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும்.
>> மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அருகில் காவிரியாற்றின் ஓரத்தில் தனித்து நின்று தன்னிகரில்லாத பலன்களை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார் காயத்ரி லிங்கேஸ்வரர். இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
>> இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், “காயத்ரி லிங்கேஸ்வரர்” அங்கே தானாகவே தோன்றினார்.
>> இராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளார் .காயத்ரி இலிங்கம் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது படுகின்றது. நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன.

>> இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான
சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. .
>> இக்கோவிலில் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாம் நாள் சூரியனின் ஒளி சிவன் சங்கமேஸ்வரர் மற்றும் இறைவி வேதநாயகி மேல் விழுகிறது .வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறம் உள்ள பசுவுக்கு முன்புறம் மட்டுமின்றி பின்புறமும் தலையுடன் காணப்படுவது அற்புத திருக்காட்சியாகும் ...தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 207 ஆம் திருத்தலம் ஆகும் ..
>> இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது.
>> இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. நாக தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும் ..செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.

>> குழந்தை பாக்கியம் வேண்டுவதில் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.
>> இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர் . மாந்தி கிரகத்தின் ரூபத்தில் இச்சனி பகவான் அருளுவதால் மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம். நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
>> அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன.
>> ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
>> இக்கோவிலின் பின்புறமுள்ள இரட்டை விநாயகர் கோவில் பகுதியில், காவிரி, பவானி, அமுதநதி போன்ற மூன்று நதிகள் சங்கமிப்பதால், முக்கூடல் சங்கமம், கூடுதுறை, என அழைக்கப்படுகிறது. பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். பவானி சங்கமேஸ்வரர் கோவில் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருமையான கோவில் ஒருமுறை சென்று வாருங்கள் .
Sh