Thursday, June 28, 2018

விபூதி தரித்துக் கொள்வதன் காரணம் என்ன?

சிவபக்தர்களுக்குரிய இலட்சணங்கள் மூன்று. அதாவது விபூதி தரித்தல் , உருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் செபித்தல் போன்ற மூன்றாகும். இம்மூன்றிலும் விபூதிதரித்தலானது மிகச்சிறிய பராயத்திலேயே ஆரம்பிக்கக் கூடியதொன்றாகும். எனவே சைவர்களாகிய நாமெல்லாம் விபூதி தரித்துக்கொள்ள வேண்டுமென்பதையே சைவசமயம் கூறுகின்றது.
”கங்காளன் பூசுங் கவசத்திருநீற்றை
மங்காமற் பூசிமகிழ்வாரே யாமாகிற்
றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”
என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது

Wednesday, June 27, 2018

திருச்சிற்றம்பலமுடையான்

கடவுளை உண்டா இல்லையா என மறுப்பவர்களே இன்னும் சிலர் இருக்கும் போது கடவுளே தன் கைப்பட பக்கம் பக்கமாக எழுதி பின் அடியில் கை சான்றும் ( SIGNATURE ) இட்ட ஒரு பனை ஓலைசுவடிக் கட்டு இன்னும் இருக்கிறது !
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே சுவடிகள் இருக்கும் வெள்ளி பேழையை திறந்து பூஜை செய்யப்படுகிறது என்ற செய்தி சற்று வியப்பளிக்கக் கூடும் .
இத்தகைய ஓலை சுவடி இருக்குமிடம் புதுச்சேரி தான் அவை இடம் பெற்றிருக்கும் இடம் , அந்த ஓலை சுவடிகளையும் மாணிக்க வாசகரின் உருவசிலையையும் பாதுகாக்கும் பெரும் பேறு பெற்ற அம்பலத்தடியர் திருமடம் தான் இந்த அரிய பொக்கிஷங்கள் இருக்கும் இடம்
இதைப்பற்றிய பின் புலத்தை காணலாமா ?..
திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வாக்கு.
திருவாசகம் வேறு, சிவன் வேறு என்பது அல்ல !
சிவனையே அவரின் அர்த்தத்தையே கூறும் நூல் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஆகும் . சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்
மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது.
சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர்
"கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க;
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள்
வாழ்க,"
என்று ஆகமத்தைச் சிறப்பித்து விடுகிறார்.
.திருவாசகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை.....
அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் அடியில்இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதது
என்று கையெழுத்திட்டு அருளிய நூல்; ! எவ்வளவு முறையாக தானே வந்து உயரிய ஒரு நூலுக்கு மதிப்புரை வழங்கி மாணிக்கவாசகரை சிவன் உலகறிய செய்ய்திருக்கிறார் பாருங்கள் !
திருப்பெருந் துறையில் தனது ஞான ஆசானாக இறைவனையே கண்டு ஆதி யோகியான சிவனையே ஆதிகுருவாகக் கண்டு அரிட இருந்து நேரடியாக யோக நெறியை கற்று அங்கே ஒரு ஞானாலயம் மன்னனின் குதிரைவாங்க கொடுத்த பணத்தில் கட்டி , பின் அதனால் மன்னனின் கோபத்திற்கு ஆடப்பட்டு சிறைபட்ட மாணிக்க வாசகரை இறைவனே நரியை பரியாக்கி திருவிளையாடல் செய்து மாணிக்கவாசகரின் பெருமையை இவன் உலகறிய செய்த பின் பல பாடல்களைப்பாடி , பல திருத்தலங்களை தரிசித்து பின் தில்லையை அடைந்தார் .
கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர் தில்லையின் கீழ்த்திசையில் ஒரு தவச்சாலை அமைத்துப் தங்கியிருந்து தினமும் அம்பலவாணனின் நடனத்தைத் தரிசித்து வந்தார். .
தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், . கோயில் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, . போற்றித் திருவகவல், . திருப்பொற்சுண்ணம், . திருத்தெள்ளேணம், . திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், . திருப்பூவல்லி, . திருப்பொன்னூசல், . அன்னைப் பத்து, , திருக்கோத்தும்பி, . குயில் திருத்தசாங்கம், அச்சோப்பத்து, என பலவாகும் .சிதம்பரம் ஆகாய தலம் ஆகையால் அங்கே பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகள் அடங்கிய திருவண்டப் பகுதி, .பாடினார்போலும் .
இவ்வாறு தில்லையில் வாழ்ந்தபோது
அவரை பெருமைபடுத்தி ஆட்கொள்ள சிவன் ஒரு நாள் அந்தணர் வடிவில் வநது தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், மணிவாசகருக்காகச் சிவன் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது எனக் கூறி மணிவாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.
மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக' என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங்கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட திரு கோவையார் என்ற நூலை சொல்லயும் இறைவன் தம் திருக்கரத்தால் அதையும் எழுதி முடித்தார்.
பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார் . அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.
திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில்
`திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து'
எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார்.
மறு நாள் பூசை செய்ய வந்த அந்தணர்கள் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு படித்துப் பார்த்து அதில் திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார்.
அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளை என்னவென்று விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந் தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்' என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மணிவாசகர் மறைந்தருளினார்.
வாதவூரர் அதைக்கேட்டு திருவருளையெண்ணி வணங் கினார்.
நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட்கொண்டருளினார். பின்பு இறைவன் கை சான்று அளித்த ஓலை சுவடியை யார் வைத்துக் கொள்வது என அந்தனர்களுக்குள் போட்டி வந்த போது அதில் ஒரு ஓலையை இலையில் வைத்து சிவா கங்கை எனும் திருக்குளத்தில் இட்டு அந்த இலை கரையில் இருக்கும் அந்தணர்களுக்குள் யாரை நோக்கி வருகிறதோ அவரே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து குளத்தில் இட்டனர்
அந்த ஓலை அந்தனருள் எளிய ஒரு பக்தரை நோக்கி சென்றது .
அவர் கோவிலின் வடக்கு வீதிக்கு அருகில் மடம் ஒன்றை நிறுவி இந்த ஓலைகளை பூஜித்து வந்தார். பிறகு முகமதியர் படையெடுப்பின் போது அஞ்சி ஓலைகளை புதுச்சேரிக்கு கொண்டு வந்து மடம் ஒன்றை நிருவினர்‌.
திருச்சிற்றம்பலத்து இறைவனே என்று மாணிக்கவாசகரால் சுட்டிக்காட்டப் பட்ட பெருமையுடைய நூல். கடவுளே ஒரு முதிய அந்தணர் வடிவில் வநது மாணிக்கவாசகரிடம் அவர் மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்'ர் சொல்ல சொல்ல திருவாசகத்தையும் , திருவம்பாவையும் சொல்லி முடித்த பின் பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்க புதியதாக மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டார் . ...
....எனவும் எழுதி முடித்தவுடன் இறுதியில், மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல 'திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான்' என்று கைச்சாத்துச் சாற்றி தில்லையில் திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். என்ற வரலாறா அல்லது கதையா , ஏதோ ஒன்றை கேட்டிருப்போம் .
மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்' என்பது உறுதி உறுதி உறுதி.
ஓம் நமசிவாய 

Tuesday, June 26, 2018

மாவிளக்கு தத்துவம்

காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக் கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.

அரிசி [அன்னம்] பிராணமயம்.அன்னம்
பிரம்ம ஸ்வரூபமே யாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.

வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.

அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.

அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவேமாவிளக்கு ஏற்றுகிறோம்.

நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறை யாவது செய்ய வேண்டும்.

மிக சக்தி வாய்ந்த பரிகாரம் எது?

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன.
கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும். மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும்.

ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது.

Thursday, June 21, 2018

நட்சத்திர தோஷம் (அடைப்பு)

நட்சத்திர தோஷம் (அடைப்பு)

ஒருவர் இறந்த நேரத்தின் போது வரும் சில அசுப நட்சத்திரங்களுக்கும்

 தோஷம் உண்டு. அவிட்டம் (தனிஷ்டா) முதல் ரேவதி வரையிலான ஐந்து

 நட்சத்திரங்கள் தனிஷ்டா பஞ்சமி என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த

 நட்சத்திரம் வரும் போது ஒருவர் இறந்தால் ஆறு மாதங்களுக்கு

 அடைப்பு (வீடு மூடப்பட்ட வேண்டும்) என்கிறார்கள். இது தவிர

 கார்த்திகைக்கு ஆறு மாதங்களும், ரோகிணி மற்றும் மகத்திற்கு ஐந்து

 மாதங்களும், புனர்பூசம், உத்திரம், உத்திராடம் மற்றும் விசாகத்திற்கு

 மூன்று மாதங்களும், மிருகசீரிஷம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு

 இரண்டு மாதங்களும் அடைப்பாகும்.

எண்நட்சத்திரம்அடைப்பு காலம் (மாதங்களில்)எண்நட்சத்திரம்அடைப்பு காலம் (மாதங்களில்)
1கார்த்திகைஆறு மாதங்கள்8விசாகம்மூன்று 

மாதங்கள்
2ரோகிணிஐந்து மாதங்கள்9உத்திராடம்மூன்று 

மாதங்கள்
3மிருகசீரிஷம்இரண்டு மாதங்கள்10அவிட்டம்ஆறு 

மாதங்கள்
4புனர்பூசம்மூன்று மாதங்கள்11சதயம்ஆறு 

மாதங்கள்
5மகம்ஐந்து மாதங்கள்12பூரட்டாதிஆறு 

மாதங்கள்
6உத்திரம்மூன்று மாதங்கள்13உத்திரட்டாதிஆறு 

மாதங்கள்
7சித்திரைஇரண்டு மாதங்கள்14ரேவதிஆறு 

மாதங்கள்

Wednesday, June 20, 2018

ஊத்துமலை கோயில்

அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.
நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை. முருகப் பெருமானின் இடப்புறத்தில் விநாயகரும், வலப்புறத்தில் நந்தியுடன்கூடிய சிவலிங்க மூர்த்தியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலுக்கு பல சிறப்புகள் உண்டு.
இங்கே, எட்டுத் திருக்கரங்களுடன் வடக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீசக்ர மஹா கால பைரவர். தேய்பிறை அஷ்டமி நாள்களில் இங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு இந்தப் பைரவரை வழிபட்டால், சனி தோஷம் முதலான கிரக தோஷங்கள் நீங்கும், எதிரிகள் தொல்லை அகலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
அதேபோல், இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீசக்ர தரிசனம். ஆம்... கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீசக்ர சந்நிதி அமைந்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து மனைவி லோபாமுத்திரையுடன் புறப்பட்ட அகத்தியர், ஊத்துமலையில் தங்கியிருந்த போது, ஒரு பாறையில் செங்குத்தாக ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அதற்குச் சான்றாக இங்குள்ள ஸ்ரீசக்ரத்தின் அருகில் அகத்தியர், லோபாமுத்திரை ஆகியோரின் சிற்பங்களைக் காணமுடிகிறது. இந்த ஸ்ரீசக்ரத்தின்முன்பு நின்று வணங்கினால், அனைத்துவிதமான நோய்களும் நீங்கிவிடுவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இங்கே பௌர்ணமி நாளில் பதினெட்டு சித்தர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்துகொள்வதன்மூலம் சித்தர்களின் அருள் கிடைப்பதாக ஐதீகம்.
ஸ்ரீசக்ரம் இருக்கும் பகுதிக்கு தெற்கில், கபிலர் தியான குகை அமைந்துள்ளது. இந்தக் குகையில் முனிவர்கள் தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தால் மனம் அமைதி பெறும் என்பது நம்பிக்கை.
நீங்களும் ஒருமுறை ஊத்து மலைக்குச் சென்று முருகனின் திருவருளோடு, சித்தர்களின் ஆசியையும் பெற்று வாருங்களேன்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி, சீலநாயக்கன்பட்டி பைபாஸில் இறங்கினால், நடந்து செல்லும் தொலைவில் ஊத்துமலை கோயில் உள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது

Monday, June 18, 2018

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

1.ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாதுஎன்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
2.காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார்.அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3.சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
4.சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
5.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6.சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7.சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8.சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
9.சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
10.சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து...மேலும் படிக்க : goo.gl/kPfwvP

Sunday, June 17, 2018

மந்திரம் – நாமம்

மந்திரம் என்பது இறைவனின் நாமமே. மன ஒருமைப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் சொல்லப்படும் இறைத் திருநாமமே மந்திரம் ஆகிறது.‘ஒரு மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அதனைத் திரும்ப திரும்பச் சொல்வது ‘உரு’ எனப்படுகிறது.
இப்படி திரும்ப திரும்ப ஒரு மந்திரம் உருப்போடும் பொழுது மனம் ஒருமைப்படுகிறது. கடவுளின் அருள் கிடைக்கின்றது. நினைத்தது நடக்கிறது. நமது நல்ல எண்ணங்களை வலுப்படுத்துவதிலும், அதனை நிறைவேற்றுவதிலும் மந்திரங்களுக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை.’
நமது தினசரி வாழ்வில் மந்திரங்கள் அற்புத ஆற்றல்களைக் கொடுக்கின்றன. மந்திரங்கள் இறைவனுக்கும் நமக்கும் இடையே பாலமாக அமைகிறது.
எவ்வாறு மந்திரம் சொல்லுதல் வேண்டும்?
1.நம்பிக்கையோடு மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்
2.மன ஒருமைப்பாட்டுடன் மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்.
3.ஒரு நல்ல நாளில் ஆலயத்தில் தட்சிணா மூர்த்தி சன்னதியில் அவரை வேண்டி, குரு நிலையில் இருந்து அவர் நமக்குச் சொல்வதாகக் கருதிச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.
4.நாள்தோறும் இஷ்ட மந்திரத்தைக் குறைந்தது 27 முறைகளாவது ஜபித்தல் வேண்டும்.
5.நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் மந்திரத்தைச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.
நாமத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள்
1.புண்ணியம் கிடைக்கின்றது
“எல்லா புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், அவிமுக்தி தலமான காசியில் எண்ணற்ற லிங்கங்களை ஸ்தாபிதம் செய்தல், வேத விற்பன்னர்களுக்குச் சூரிய கிரகணத்தன்று பலமுறை பல கோடி சொர்ண தானம் செய்தல், கங்கைக் கரையில் அஸ்வமேத யாகம் செய்தல், தண்ணீர் கிடைக்காத இடங்களில் பல கிணறுகள் வெட்டுதல், பஞ்ச காலத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு அன்ன தானம் செய்தல் இவை யாவும் செய்வதால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கின்றதோ அதற்கு ஈடான புண்ணியம் இறைவனின் திரு நாமத்தை உச்சரிப்பதனால் கிடைக்கும்”.
2.பாவங்கள் நாசமாகின்றன
“சிவ சிவ” என்று ஜபிப்பதால் பல கோடி பாவங்கள் உடனடியாக நாசமாகின்றன” என்கிறது பிரம்ம புராணம். மனிதராகப் பிறப்பெடுத்த நாம் அறிந்தும் அறியாமலும் பாவங்களைச் செய்கின்றோம். அந்தப் பாவங்கள் நாசமாக நன்மைகள் உதயமாக நாமத்தைச் சொல்லுதல் வேண்டும். பாவ எண்ணங்களிலிலுந்து, தீய எண்ணங்களிலிருந்து விடுபட நாமத்தை நவிலுதல் வேண்டும். கொல்லித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க் குரங்காய்த் துள்ளுகின்ற கள்ள மனத்தை அடக்கியாள்வதற்கு இறைவன் திருப் பெயரை இயம்புங்கள்.
3.சகல நன்மைகளும் கிடைக்கின்றன
கல்வி, செல்வம், நல்ல வேலை, நல்ல கணவன் ̸ மனைவி, மக்கள், வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, எதிலும் வெற்றி இவைதாமே எப்போதும் நாம் அடைய நினைப்பவை. இந்த நன்மைகள் அனைத்தும் நம்மை நாடி வந்து சேர்வதற்கு ஆண்டவன் பெயரை அல்லும் பகலும் சொல்லுங்கள்.
4.ஞானம் கைகூடுகின்றது
“நல்ல ஞானம் வேண்டும் என விரும்புகின்றவர்கள் இறைவனின் நாமத்தை ஓத வேண்டும்” என்கிறார் ஆதி சங்கரர். வாழ்க்கையின் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்கும் மனநிலை ஞானமாகும். “போருக்கு நின்றிடும் போதும் சிந்தை பொங்குதல் இல்லா நிலையே ஞானம்” என்பான் பாரதி. இந்த நிலை அடைதல் என்பது இறை நாமம் சொல்லுபவர்க்கே மிகவும் எளிது.
5.முக்திப் பேற்றுக்கு வழிகாட்டுகின்றது
முக்திப் பேற்றுக்கும் வழி காட்டுகிறது நாமம், “முக்தியடைவதற்கு கிருஷ்ணா! கோவிந்தா! என்ற திருப் பெயர்களை எல்லா நேரங்களிலும் சொல்லிக் கொண்டிருப்பது ஒன்றே போதுமானது” என்று கூறுவார்கள்

சொந்த வீடு வாங்க எளிய பரிகாரங்கள்.....

:- சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியது தானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.
:- சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமை நல்ல நேரத்தில் செவ்வாய் பகவானை பூஜித்து அர்ச்சனை செய்து வர விரைவில் சொந்தவீடு கட்டும் வாய்ப்புகள் அமையும்.
:- நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி ஓம் சரவண பவ எனும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து, ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி தெளிக்க வேண்டும்.
:- வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாயன்று அபிஷேகம் செய்து வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும் வாய்ப்புகள் அமையும்.
:- நிலம், வீடு வாங்கும் யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை விரதமிருந்து வழிபட்டு வரவேண்டும்.
:- வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்கும் வாய்ப்பு அமையும்.
:- ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் வாய்ப்புகள் அமையும் என்பது ஐதீகம்.

Tuesday, June 12, 2018

கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்பொருளாதாரப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த நரசிம்ம துதியை பாராயணம் செய்தால் கடன் பிரச்சனைகள் தீரும். இத்துதி நரசிம்ம புராணத்தில் உள்ளது. தினமும் இத்துதியை உளமாறப் படித்தால், அவரருளால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதியான புது வாழ்வு பெறலாம்.
ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்
தேவதா கார்யஸித்யர்த்தம் ஸபாஸ்தம்பஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
தேவதைகளின் காரிய வெற்றியின் பொருட்டு இரண்யனின் ராஜசபையில் உள்ள தூணில் தோன்றியவரும், மகாவீரரும் ஆன நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
மகாலட்சுமி தேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரே, பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம் வாரி வழங்குபவரே, மகா வீரரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
இரண்யனின் நரம்புகளை மாலையாகத் தரித்துக் கொண்டவரே, சங்கம், சக்ரம், தாமரைப்பூ, ஆயுதம் ஆகியவற்றைப் பூண்டவரே, வீரத்துக்கு வித்தானவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ஸ்மரணாத் ஸர்வபாபக்னம் கத்ரூஜ விஷநாஸனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
நினைத்த மாத்திரத்திலேயே எல்லா பாவங்களையும் போக்கி அருள்பவரே, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாஸனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
மிகுத்து ஒலிக்கும் சிம்ம கர்ஜனையால் எத்திசையிலிருந்தும் வரும் பயத்தை அழித்து ஒழிப்பவரே, அநியாய எதிர்ப்புகளை துவம்சம் செய்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
பிரகலாதனுக்கு வரமளித்து, அற்புத தரிசனம் அருளியவரே, லட்சுமியின் நாயகனே, அசுர ராஜனான இரண்யனின் மார்பைப் பிளந்தவரே, நரசிம்ம மூர்த்தியே, நமஸ்காரம்.
க்ரூரக்ரஹை: பீடிதானாம் பக்தானாமபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
கேடுகள் விளைவிக்கும் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்களைப் பெற்ற பக்தர்களுக்கு அத்துன்பங்களை நீக்கி அபயம் அளிப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
வேத வேதாந்த யக்ஞேஸம் ப்ரஹ்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
வேதம், உபநிஷத்து, யக்ஞம், இவற்றுக்கு ஈச்வரனாக விளங்குபவரே, ப்ரம்மா, ருத்ரன் போன்றோரால் வணங்கப்படுபவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ய: இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்க்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸத்ய: தனம் ஸீக்ரமவாப்னுயாத்.
யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர். நரசிம்மர் திருவருளால் தனப் பிராப்தி பெருகும் என்பது நிச்சயம். நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

Monday, June 11, 2018

வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா?

*வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா? அப்போ இந்த இரண்டு பொருட்களையும் வீட்டின் நான்கு மூலையிலும் போடுங்க!!*
தர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்
1) வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்
வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்
2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்
தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு...

Sunday, June 10, 2018

நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை!

எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ தினத்தன்று சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.
இதேபோல், நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை உகந்தது. அந்த நாளில் நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இரணியன் வித்தியாசமாக வரம் ஒன்றை வாங்கியிருந்தான். அதாவது என்னைக் கொல்லும் சக்தி மனிதருக்கும் இருக்கக் கூடாது; மிருகத்துக்கும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால்தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்டு அவதரித்தார் நரசிம்மர்.
அடுத்து, வீட்டுக்குள்ளேயும் கொல்லக் கூடாது. வெளியேயும் சாகடிக்கக் கூடாது எனும் வரத்தைக் கேட்டிருந்தான். அதனால்தான் இரணியனை வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், வாசலுக்குக் கொண்டுவந்து, மடியில் கிடத்தி சம்ஹரித்தார் பெருமாள்.
என்னைக் கொல்லும் நேரம் காலையாகவும் இருக்கக் கூடாது இரவாகவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி ஆணவத்துடன் திரிந்தான். அதனால்தான் காலையும் இல்லாமல் இருளும் இல்லாத அந்திசாயும் வேளையாகப் பார்த்து, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது.
அப்படி நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது... மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்... அவதரித்தது ஓர் பிரதோஷ நாளில் என்றும் சொல்வார்கள்.
ஆகவே, பிரதோஷ நாளின் போது, நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

Saturday, June 9, 2018

நளன் – தமயந்தி கதை,இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்

நளன் – தமயந்தி கதை
இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும் படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.
★ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.
★தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.
★சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.
★நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.
★இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.
★தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.
★ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
★இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.
★பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
★தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
★அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.
★திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.
★நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரி வரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்!!!

வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:-

வீட்டின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதை சந்தி வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்.
அடுத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.
இது ஓர் அற்புதமான திருஷ்டி பாதுகாப்பு மற்றும் நிவர்த்தி பரிகார அமைப்பாகும். மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்து கொள்ள வேண்டும்.
இது வீட்டிற்கு சுபமங்கள சக்திகளை அளிப்பதோடு தீவினை எதிர் மறைசக்திகளை பஸ்மம் செய்கிறது. வீடு, கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் வாசல் படிகளில் திருஷ்டி பரிகார பொருள்களான எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய், உத்திரங்கு, படிகார கல், கரித்துண்டுகள் இவற்றை முறையே ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும். இது மிக சிறந்த திருஷ்டி தடுப்பாக செயல்படும்.

'திருநாவலூர் பக்த ஜனேஸ்வரரை துதித்தால் கடன் தொல்லை தீரும்' என்கிறார் குதம்பை சித்தர்.

http://www.shivatemples.com/nnaadut/nnt08.php

***
http://www.marinabooks.com/detailed?id=2926&name=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%201திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்Wednesday, June 6, 2018

*முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்:*

* ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.
* திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
* கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.
* சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, அவர்களின் வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்.
* கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் தீர்த்தால் சவுபாக்கிய வாழ்வு கிடைக்கும்.
* கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து, கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான, தர்மங்கள் செய்தால் நன்மைகள் உண்டாகும்.
* காசியின் அருகில் உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்களைப் பெறலாம்.
* காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில்தான் ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றியதாக தல புராணம் கூறுகிறது. எனவே இங்கு திதி கொடுத்து முன்னோர்களை திருப்திப்படுத்தினால் திருமாலின் திருவருள் கிடைக்கும்.

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.
சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக
தீரும் என்பது ஐதீகம்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம்
சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.
அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர்
நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.
சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது .
துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக
நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும்
நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது
மிகச் சிறப்பு.
இதன் அடிப்படையில்தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.

Sunday, June 3, 2018

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போது்

உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.

Friday, June 1, 2018

நேர்மறை_சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வர நாம் செய்ய வேண்டியவை?
வீடு சிறியதாக இருந்தாலும், அதில் சந்தோஷம், நல்ல சிந்தனை, அமைதியான சூழல் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையை எந்தவித தங்குதடையும் இன்றி சுமூகமாக பயணிக்க முடியும்.
அதற்கு மாறாக வீட்டில் அடிக்கடி பிரச்னை, நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், பதற்றம் இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்டால், அந்த வீட்டில் ஏதோ எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டுள்ளதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜோதிட ரீதியாக நேர்மறை சக்திகள் (positive energy) நம் வீட்டிற்குள் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
நேர்மறை சக்திகளை எப்படி வீட்டிற்குள் கொண்டுவருவது?
வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடல
 சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும், பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோயிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும், மஞ்சள் பொடியும் கலந்திருக்கும்.
இவ்வாறு நாம் வசிக்கும் வீட்டினுள் தினமும் செய்துவந்தால் எதிர்மறை ஆற்றல் மறைந்து நேர்மறை சக்திகள் உருவாகும். தினமும் இதைச் செய்து பாருங்கள் வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.