Thursday, August 30, 2018

கிருஷ்ணர் வாழ்ந்த ஆதாரம் :

கிருஷ்ணர் வாழ்ந்த ஆதாரம் :

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது. மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பணமில்லாமல் பசுதானம் :

‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், ‘பணம்’ கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

துளசி மாலை அணிவது ஏன்? :

கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

கோவிந்தா :

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும்.
எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

விஷ்ணுகிராந்தி :

வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி ‘விஷ்ணுகிராந்தி’ இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பஜகோவிந்தம் :

கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

கண்ணனின் ஆபரணங்கள் :

பெருமாள் சிலையை ‘திவ்ய மங்கள விக்ரகம்’ என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் ‘திருவபிடேகம்’ எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, ‘நூபுரம்’ என்று பெயர்.பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்«ப, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

திரிபங்கி தோற்றம் :

கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத் தரிசிக்கலாம். இதற்கு ‘திரிபங்கி’ என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று! கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு! இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை ‘திரிபங்கி லலிதாகாரன்’ என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன.
இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிக்கின்றன.

16 ஆயிரம் மனைவிகள் :

ருக்மணிதான் கிருஷ்ணனின் பட்டத்து ராணி. மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா. இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட ப்ரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே ப்ரக்ருதியின் 8 பகுதிகள். இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.

கோபியர் சேலைகளைக் கவர்தல் :

ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.

மயில் இறகு :

கிருஷ்ணனின் படங்களில் அவர் தலையில் மயில் இறகு சூடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் ஒரு தத்துவம் உள்ளது.
“கண்ணனின் தலையில் உள்ள மயில் இறகு, சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். கண்ணனின் சக்தியே ‘ராதை’ ஆவாள். அவளைத் தலை மீது வைத்துத் தான் கொண்டாடுவதையே மயில் இறகு மூலமாக அறிவிக்கின்றான் மாதவன்.

முகுந்தா... முகுந்தா :

“மு” என்றால் முக்தியை அருள்வது என்று பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.

சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :

கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

முதல் உறியடி திருவிழா :

கிருஷ்ண பக்தரான நாராயண தீர்த்தர் ஒரு முறை கடுமையான வயிற்று வலியோடு தல யாத்திரை மேற்கொண்டிருந்தார். அவர், வரகூரை அடைந்து, அங்கிருந்த வெங்கடேச பெருமாளை வழிபட்டதுமே அவருடைய வயிற்று வலி மாயமானதாம். இறைவனின் கருணையைப் போற்றி அவர் இயற்றிய இசைக் காவியம்தான் கிருஷ்ண லீலா தரங்கிணி. இந்தக் காவியத்துக்கு கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் தாளம்போட்டதாகவும், திரைக்குப் பின்னால் பெருமாள் நடனம் ஆடியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குதான் முதன் முதலாக உறியடி உற்சவத்தை நாராயண தீர்த்தர் தொடங்கி வைத்ததாகவும் சொல்வார்கள்.

சீடை, முறுக்கு ஏன்? :

பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு. குழந்தையாக இருந்தபோதே பூதனை, சகடாசுரன், தேனுகாசுரன் போன்ற பல அசுரர்களைக் கொன்று உய்வித்தவன் கிருஷ்ணன். அப்படிப்பட்ட விசேஷ ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே, அவன் பிறந்த நாளில் சீடை, முறுக்கு போன்றவற்றை நிவேதனம் செய்கின்றோம்.

வசீகரிப்பவர் :

கிருஷ்ணா என்ற பெயரில் ‘கிருஷ்’ என்ப தற்கு அனை வரையும் வசீகரிப்பவன் என்று பொருள். (‘ணா’ என்பதற்கு பக்தி பரவசத்தை அளிப்பவன் என்று பொருள் அனை வரையும் வசீகரித்து பக்தி பரவசத்தை ஏற்படுத்துபவரே கிருஷ்ணர்.

Sunday, August 19, 2018

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா?
இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.
அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.
அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. இது நமது கலாச்சார உண்மை.

Thursday, August 9, 2018

மனிதர்கள் பூஜிப்பதற்காக கடலே வழிவிடும் அதிசய சிவ தலம்

நிஷ்களங் மஹாதேவ் (பாவங்களை போக்கும் மஹாதேவர்)

கடவுளை வழிபட வழிபட நம் வாழ்விற்கான வழி பிறக்கும் என்பது ஐதீகம். இதில் மக்கள் வந்து இறைவனை பூஜிக்கும் வகையில் கடல் ஒன்று உள்வாங்கி வழிவிடுகிற அதிசய சிவ ஸ்தலம் ஒன்றை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.
பூமியின் எல்லா இடங்களிலும் பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் அதிசயத்தின் அடிப்படையில் கடலுக்கு மத்தியில் பாண்டவர்கள் வழிபட்ட சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டும் சாதாரண மக்கள் தினமும் வந்து பூஜிக்கும் வகையில் இக்கோயில் அமைந்திருக்கும் கடல் உள்வாங்கி வழிவிடுகிறது.
தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடந்த யுத்தத்தில் பாண்டவர்கள் கௌரவர்களை வென்று தர்மத்தை நிலை நாட்டினர். இருப்பினும் இதன் மூலம் உறவினர்களை கொன்ற பாவத்திற்கும் ஆளானார்கள்.
யுத்தம் வென்ற சந்தோஷத்தை விடவும் உறவினர்களை கொன்ற பாவம் பாண்டவர் மனதை வாட்டியது. இதற்கான பரிகாரம் தேடி பகவான் கிருஷ்ணரை சரணடைந்தனர் .கிருஷ்ணர் ஒரு கருப்பு நிற கொடியையும் கருப்பு நிற பசுவையும் பாண்டவர்களிடம் தந்து அதன் பின்னால் போக சொன்னார்.
எந்த இடத்தில இந்த கருப்பு கொடியும் கருப்பு பசுவும் நிறம் மாறி வெண்மையாக காட்சியளிக்கிறதோ அந்த இடமே அவர்கள் பாவம் போக்கும் தலமாகும் என்று கூறினார்.
பல வருடங்களாக கருப்பு பசு மற்றும் கருப்பு கொடியின் பின்னால் பாண்டவர்கள் நடந்தனர். ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கருப்பு பசுவும் கொடியும் நிறம் மாறி வெண்மையாகியது.
அதுவே தங்கள் பாவங்கள் போக்கும் தலம் என்பதை உணர்ந்த பாண்டவர்கள் அங்கேயே தவம் இயற்ற ஆரம்பித்தனர். பல ஆண்டுகள் பாண்டவர்கள் செய்த உக்கிரமான தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் ஐவருக்கும் தனி தனியே காட்சி அளித்தார்.
அவ்வாறு தங்கள் களங்கங்களை போக்க இறைவன் சிவனே நேரில் வந்ததால் பாண்டவர்கள் அந்த இடத்தில நிஷ்களங் மஹாதேவ் (பாவங்களை போக்கும் மஹாதேவர்) என்ற ஒரு கோயிலை உண்டு பண்ணினார்கள்.
குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள கோலியாக் எனும் இடத்தில் கடலுக்குள் ஒன்றரை கிமீ தூரத்தில் பாண்டவர்கள் அமைத்த இந்த கோயில் அமைந்துள்ளது.
வெள்ளம், புயல், சுனாமி , பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக தற்போது இந்த கோயிலில் ஐந்து சிவலிங்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும் அவை வெளிவிடும் சக்தி அளப்பறியாதது என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.
காலையில் இருந்து மதியம் மூன்று மணி வரை ஆழமான கடல் பகுதியாக காணப்படும் இந்த கோயில் மிகவும் சீற்றத்தோடு பொங்கி வருமாம். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதியம் மூன்று மணிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பிக்கிறது. அங்குள்ள சிவலிங்கங்கள் வெளியே தெரிகின்றன.
அந்த நேரத்தில் எது குறித்தும் அச்சப்படாமல் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கடலுக்குள் செல்கின்றனர்.சில மணி நேரம் மட்டுமே தரிசனம் தரும் சிவனை மக்கள் பால் தயிர் பூக்கள் போன்ற பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழி படுகின்றனர்.
கோயிலை ஒட்டி பாண்டவர்கள் வெட்டிய தீர்த்தமும் அமைந்திருக்கின்றதால் அந்த தீர்த்தத்தில் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு அதன்பின்தான் மேற்கண்ட பூஜைகளை ஆரம்பிக்கின்றனர்.
இங்கு வந்து கடலில் குளித்து சிவனை பூஜித்தால் எல்லாவிதமான பாவங்களும் அகன்று விடும் என்றொரு நம்பிக்கை இங்கு நிலவுகின்றது.
அமாவாசை பௌர்ணமி நாட்களில் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் நிஷ்களங் மஹாதேவரை சந்திக்க மக்கள் வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.
கடல் உள்வாங்கும் வரை பக்தியோடு காத்திருக்கும் மக்கள் அதன் பின் பக்தியோடும் நம்பிக்கையோடும் கடலுக்குள் நடந்து செல்கின்றனர்.
இவை அத்தனையையும் பார்க்கும்போது மனிதனின் மீதான இறைவனின் கருணையால்தான் கடல் வந்து வழி விட்டு இறைவனை பூஜிக்க செய்யும் அற்புதம் நடைபெறுகிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
அவன் அருள் இல்லாமல் அவன் தாள் வணங்க முடியாது என்பதுதான் நிதர்சனம் என்று இந்த குஜராத் கோலியாக்கில் அமைதியாக நிரூபித்து கொண்டிருக்கிறார் நிஷ்கலங் மஹாதேவர்

ஞாயிற்றுக்கிழமையில் இதை மட்டும் செய்ங்க-செல்வம் கொட்டோ கொட்டுனு கொட்டுமாம்

Saturday, August 4, 2018

பசுக்களை வழிபட்ட கிருஷ்ணர்:


பசுக்களை வழிபட்ட கிருஷ்ணர்:
ஆயர்பாடியில் வளர்ந்தக் கிருஷ்ணரும், பலராமரும் பசுக்களைத் தெய்வமாகப் போற்றி வணங்கி வந்தனர். ஆயர்களின் தலைவனான நந்தகோபரின் மாளிகையில் எண்ணற்ற பணியாட்கள் இருந்தப் போதும் , கிருஷ்ணரே மாடுகளை அன்போடு பராமரித்து வந்தார்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் , சிவன், பிரம்மா, விஷ்ணுவும் , முப்பெரும் தேவியரும் பசுவில் குடியிருக்கின்றனர் என்கிறது வேதங்கள். அப்படிப்பட்ட புனிதமான பசுவை , கோமாதா என அன்போடும், பரிவோடும் பூசித்து வந்தார் கிருஷ்ணர் (கோ=பசு)
ஆயர்கள் இந்திரனுக்கு எடுக்கும் விழாவை நிறுத்தி, அதற்குப் பதில் இயற்கையையும், கோவர்த்தன மலையையும் பூசிக்கச் செய்தார் கண்ணன்.
இயற்கையை வழிபட வேண்டும்! நமக்குப் பாலைத் தரும் பசுக்களைத் தெய்வமென வழிபட வேண்டும்! என்றார் கண்ணன். ஏனெனில் பாலில் இருந்து தயிரும், அதிலிருந்து வெண்ணெயும் , அதை உருக்கி நெய்யையும் நாம் பெறுகிறோம். தேவர்களை மகிழ்விக்கும் யாகங்களைச் செய்யத் தேவையான நெய்யைப் பசுவின் பாலில் இருந்தே பெறுகிறோம்; நமது செல்வங்கள் எல்லாம் இப்பசுக்களே ! என்றார் கண்ணன். விவசாயத்திற்குப் பயன்படும் காளைகளையும் கௌரவிக்க வேண்டும்! என்றார் கண்ணன்.
கண்ணன் கூறியபடி. அனைவரும் மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றிற்குப் பொட்டிட்டு , கொம்புகளுக்குப் பூச்சூடி , சுவையான உணவுவகைகளை அவற்றிற்குப் படைத்து , சூரிய தேவனையும் வழிபட்டு விமரிசையாக திருவிழாவைப் போல கோபூஜையை கண்ணனோடு இணைந்துக் கொண்டாடினர்.
இராமரின் வம்சத்தில் வந்த மன்னன் நக்னஜித் என்பவன் தனது மகள் ' சத்யா' ( நப்பின்னை) என்பளை மணக்க ஏழு வலிய காளைகளை அடக்க வேண்டும் ! என நிபந்தனை விதித்திருந்தானாம். கிருஷ்ணர் ஏழு ஏறுகளையும் அடக்கி அழகுமிகு நப்பின்னையை மணந்ததாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. 
தமிழ்ப் பெண்ணான நப்பின்னையை கிருஷ்ணர் ஏழு ஏறுகளைத் தழுவி மணந்தார் என்றால் , இராமரின் முன்னோர்களும் தமிழர்கள் தானே? 
ஏறு தழுவி பெண்களை மணக்கும் பண்பாடுடைய கரிய நிற கண்ணனும் தமிழரே.

Friday, August 3, 2018

குழந்தையின் கல்வி ..மேம்பட

வேத நாராயண பெருமாள் கோயில்
திருநாரயணபுரம்.
வழி : திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் பேருந்தில் ஏறி தொட்டியம் என்ற ஊரில் இறங்கினால் அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது...
நான்கு வேதத்தையும் தலையணையாக வைத்துள்ள பெருமாள்.
பிரம்மனுக்கு வேதம் உபதேசம் செய்தவர்.
பிரகலாதன் குழந்தை வடிவில் உள்ளார்.
இங்கிருக்கும் கம்பத்தடி ஆஞ்சநேயர் வரப்பிரசாதி .
உங்கள் குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபட்டு வாருங்கள்..

பரிகாரம்

கோடான கோடி நன்றிகள் - மணிகண்டன் பாரதிதாசன் ஐயா அவரகள்
தெய்வ வழிபாடு மட்டுமே பரிகாரம் அன்று. உங்கள் செயல்களை கவனித்து, அதில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகளை சீர்படுத்துதலே பரிகாரம் ஆகும். அந்த எதிர்மறை அதிர்வுகளை சமன் செய்யும் நேர்மறை அதிர்வுகளை பெறவே, பற்றற்ற தானம், மந்திரங்கள், ஸ்லோகங்கள் சனாதன தர்மத்தில் மனிதருக்கு பரிந்துரைக்கபடுகிறது.

Wednesday, August 1, 2018

கடன் பிரச்னை தீர்த்தருளும் அரன் !!!

கலியுகத்தில் வழிபாட்டிற்குரிய சிவலிங்கத் திருமேனிகள் தேவசிற்பியான மயனால் வடிவமைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரம்மாண்ட புராணம் சொல்கிறது. அவற்றில் பெரணம்பாக்கம் என்னும் புண்ணியத் தலத்தில் சிவபெருமான் இந்த கலிகாலத்தின் கஷ்டங்களை தீர்த்து, மக்களை காத்தருள ருணஹரேஸ்வர மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். மகிமைகள் நிறைந்த மகேசனின் இந்த புண்ணியத் தலம் அக்கினித் தலமாகிய திருவண்ணாமலைக்கு மேற்கே போளூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மன்னராட்சி காலத்தில் வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்ற பிராமணர்கள் பலர், சுவாமி சந்நதிக்கு வடபால் குடியிருந்து இந்த வேதநாயகனுக்கு ஆறு காலங்கள் நடைபெற்ற ஆராதனைகளில் கலந்துகொண்டு, நான்கு வேதங்களையும் ஓதி வழிபட்டனர். அடுத்த சந்ததிகளுக்கு வேத மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து, தர்மத்தைப் பேணி வந்ததால் இந்த ஊர் சதுர்வேதமங்கலம், சதுர்வேதிப்பாக்கம், பிராமணப் பாக்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, இப்போது பெரணம்பாக்கம் என்று மருவி உள்ளது.
அது என்ன பெரணம்பாக்கம்?
இறைவன் மனிதப் பிறவிக்கு ஏற்படும் கடன்களைத் தீர்க்கும் சக்திபடைத்தவராக இத்தலத்தில் அருள்பாலிப்பதால் பெரிய+ருணம்+பாக்கம்= பெரணம்பாக்கம் என்றானது. சப்த கரைகண்ட க்ஷேத்திர வரிசையில் ஏழு சிவத்தலங்கள் சேயாற்றின் வடகரையில் அமைந்திருக்க அதன் கிழக்குப் பாகத்தில் போளூரின் நடுநாயகமாக இந்த சிவாலயம் அமைந்துள்ளது.ஒரு சமயம் ஏழு அந்தணர்களாகிய போதவான், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், வாமன், சோமன் ஆகியோர் பாவ விமோசனம் வேண்டி ஏழு குன்றுகள் மேல் தவம் இயற்றிக் கொண்டிருந்தபோது பாலமுருகனது சக்திவேல் அவர்களின் சிரசைக் கொய்து சென்றது. இந்த நிகழ்ச்சி பிரம்மனின் கட்டளையால் முருகனது வேலாயுதத்தால் முக்தி கிடைக்க அருளப்பட்ட திருவிளையாடல் ஆகும்.
முருகன் ஏழு தபஸ்விகளைக் கொன்ற பாவம் தீர்ந்திட ஏழு இடங்களில் சிவலிங்க பூஜை செய்யும்படி உமாதேவியார் பணித்தார். அன்னையின் வழிகாட்டுதல்படி ஏழு தலங்களில் முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்டார். காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென்மகாதேவ மங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகிய தலங்களில் வழிபட்டு, எட்டாவதாக பெரணம்பாக்கம் என்ற இடத்திற்கு முருகன் வந்தபோது பிரம்மஹத்தி தோஷம் துரத்தி வந்துகொண்டிருந்தது.
‘‘என்னைத் தொடர்ந்து ஏன் வருகிறாய்?’’ என்று கந்தவேள் கேட்க, ‘‘ஏழு அந்தணர்களுக்கும் முக்தி கிடைக்க பூஜை செய்த நீர் எனக்கு என்று எந்த விமோசனபலியும் தரவில்லையே’’ எனக் கேட்க, அந்த தலத்திலேயே ஆறுமுகம் கொண்டு சிவலிங்க பூஜை செய்து பிறவிப் பெருங்கடனைத் தீர்த்துக் கொண்டார். அதன் காரணமாக, இந்த சுவாமிக்கு ஜென்ம பாவ ருணஹரேஸ்வரர் என்றும் தல விநாயகருக்கு சங்கடஹர கணபதி என்றும் பெயர் வழக்கத்திற்கு வந்தது.
ஒரு சமயம் மகாவிஷ்ணு அமிர்தகலசம் அமைத்து சிவபூஜை செய்து வந்தார். அப்போது முருகப் பெருமானால் உருவாக்கப்பட்ட வெள்ளப் பிரவாகத்தால் அந்தக் கலசம் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. அந்தக் கலசத்தில் இருந்த தாமரை மலர் தங்கிய இடம் தாமரைப்பாக்கம் எனவும் பூணூல் ஒதுங்கிய இடம் பூண்டி எனவும் தர்ப்பைப்புல் ஒதுங்கிய இடம் பில்லூர் எனவும் கலசம் தங்கிய இடம் கலசப்பாக்கம் எனவும் கலசத்தில் சாற்றப்பட்ட நெற்றிப்பட்டை புதையுண்ட இடம் ஆபரணப்பாக்கம் என்ற பெரணம்பாக்கமாகவும் உருவானதாம். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் இந்த தலங்களின் திருநாமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இக்கோயிலின் தோரணவாயில் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்ற ஐந்து கலசங்களோடு திருக்கயிலாய காட்சியைக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக உள்ள திருச்சுற்றுகள் வேதபாராயண மண்டபத்தோடு இரண்டு பிராகாரங்களைக் கொண்டிருக் கின்றன. தலவிருட்சங்கள் சரக்கொன்றையும் மகாவில்வமும் ஆகும். உள்திருச்சுற்றின் முதலில் மகாகணபதி, வள்ளி-தெய்வானையுடன் ஆறுமுக சுவாமி, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, சிவாலய கருவறைக் கோஷ்டத்தில் முறையே, நர்த்தன கணபதி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு அருள்கிறார்கள்.
இவர்கள் தவிர அகத்தியர், காலபைரவர், மிருகண்டு மகரிஷி, சிவசூரியன், சனிபகவான், மகாலட்சுமி, நால்வர், பஞ்சலிங்க மூர்த்திகள், நந்தி ஆகியோரின் அற்புத தரிசனம் கிடைக்கிறது. அடுத்து பலிபீடம், துவஜஸ்தம்பம் என்று முறையாக அமைந்துள்ளன. ஆலய மகா மண்டபத்தை ஒட்டியபடி ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்ற துவார பாலகர்கள் காவல் காக்க அர்த்த மண்டபத்தை ஒட்டி கஜப்பிருஷ்ட விமானக் கருவறையின் கீழ் லிங்கத் திருமேனியாக ருணஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
தெற்கு நோக்கியபடி அன்னை மங்களாம்பிகை அபய வரத ஹஸ்தம் காட்டி, பாசம் அங்குசத்துடன் அருள்கிறாள். ஆலயத்தின் எதிரில் ருணஹர தீர்த்தமும் வடபாகத்தில் பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளன. தல ரட்சகராக கால பைரவர் விளங்குகிறார். இத்தலத்தில்தான் ஈசனும் உமையும் மிருகண்டு மகரிஷிக்கும் அகத்தியருக்கும் காட்சி கொடுத்துள்ளார்கள்.
‘‘மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரதஹ
ஸ்திராஸனோ மஹாகாயஹ ஸர்வகாம பலப்ரதஹ
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமோஸ்துதே மமாஸேஷம் ருணமாஸு விமோசய’’
என்று போற்றி மங்களன் என்றழைக்கப்படும் அங்காகரனை வழிபடுவது வழக்கம். அந்த மங்களனே ஒருமுறை இந்த தேவியை வழிபட்டு கடன் என்ற பாவச்சுமை தீர்ந்திட உபாயம் கேட்க, ‘‘முழு நிலவு நாளில் பரமனை முற்றோதல் செய்து நெய்தீபம் ஏற்றி வில்வார்ச்சனை செய்து, தனது பத்ம பீடத்திலும் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் மக்கள் கொண்டு வந்து சேர்க்கும் பாவங்கள் கரையும்’’ என்றாள், அன்னை. அதன்படி அம்பிகை சந்நதிக்குப் பின்புறம் மங்கள தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, தேவியின் கட்டளைப்படி ஈசனை வழிபட அவருடைய கடன், பாவதோஷங்கள் நீக்கி, ருண-கடன், ஹர-தீர்த்தல் ஈஸ்வரன் ஆகப்பெயர் பெற்றார், அரன். தேவி மங்களன் ஆகிய அங்காரகனுக்கு அருளியதால் மங்களாம்பிகை, திருவுடையம்மை என்கிற நாமங்களைப் பெற்றாள்.
தீர்க்க முடியாதபடி கடன் சுமையால் நெஞ்சம் கலங்கி நிற்பவர்கள் இத்தல ஈசனை திங்கள், செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு,
‘ஓம் தத் புருஷாய வித்மஹே ருணஹரரூபாய தீமஹி தந்தோ ருத்ர ப்ரசோதயாத்’; ‘ஓம் மங்களரூபாய வித்மஹே பத்மபீடாய தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்’
என்ற மந்திரங்களை 21 முறை ஓதி வணங்க பணக் கடன், பிறவிக் கடன், பித்ரு கடன், தேவ கடன் ஆகியவை தீரும்.
இத்தனை மகிமை பொருந்திய மகேசனது ஆலயம், அந்நியர் படையெடுப்பாலும் இயற்கை சீற்றங்களாலும் மண்ணில் புதையுண்டு இருந்த இடம் தெரியாமல் போனது. மகான்களின் திருவாக்கின்படியும், அரசு ஆவணத்தின் உதவியோடும் ஆலயம் இருந்த இடம் அடையாளம் காணப்பட்டு சீர் செய்ய முயன்றபோது, இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டு அழகுற அமைந்திருந்தது தெரியவந்தது.
சில சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சிலைகளையும் வைத்து, சந்நதிகளுடன், முழு கோயிலாக உருவாக்க, சிவநேசர்கள் மிக உற்சாகத்துடன் களமிறங்கி இருக்கிறார்கள். போளூர்-சேத்துப்பட்டு சாலையில் மட்டப்பிறையூர் கூட்டுச்சாலை மற்றும் தேவிகாபுரம் சிறுநகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது பெரணம்பாக்கம். மேலும் தகவல் பெற: 8754405387 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.