Sunday, September 30, 2018

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் சுந்தர காண்டத்தை முழுவதும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்)

யச்யஸ்ரீ அனுமான் அனுக்ரஹ பலாத்தீர்ணாம் 

புத்திர்லீலா

லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதலிதாம்

பங்க்த்வா  வனம் ராக்ஷஸான்

அக்ஷாதீன் விநிஹத்ய வீஷ்ய தசகம்

தக்த்வா புரிம் தாம்புன :

தீரனாப்தி  :  கபி பிர்யுதோ யம்அநுமத்தம்

ராமச்சந்த்ரம் பஜே :

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால்
 சுந்தர காண்டத்தை முழுவதும் பாராயணம்
 செய்த பலன் கிடைக்கும்)

Agasthiar's Easy Tharpanam Method

https://agasthiar.org/a/tharpanam.htm
ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்


கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 


Saturday, September 29, 2018

திருப்பதி சென்றால் திருப்புமுனை கிடைக்கும்

வீடு மனைகள் நன்றாக அமைய இந்த வழிபாட்டை செய்யுங்கள்

எப்படி விளக்கை ஏற்றினால் அருள் கிடைக்கும்

விஷ்ணுபதி புண்ய காலம்ஸ்ரீ ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் முதல் நாள் (நாளை) வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுதி புண்ய காலம்
புண்யகாலம் என்பதை 
1 .விஷு புண்யகாலம் 2 . உத்தராயண புண்ய காலம் 3 .தக்ஷிணாயன புண்ய காலம் எனபலவராகக் கூறுவோம். 
இதைப்போலவே விஷ்ணுபதி புண்யகாலம் என்பதுவும் மிகவும் சிறப்பானது.
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசிதிதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் , அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர்.
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். 
மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவது உண்டு. 
தமிழ் மாத கணக்கின்படி மாசி , வைகாசி , ஆவணி, கார்த்திகை மற்றும் மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் வருகிறது. 
அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் 
காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. 
முழுமையாக 9மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.
இந்தபுண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லா தேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறிபிரார்த்தனை புரியலாம்.
ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளைகுறைவற செய்யலாம். 
முறைப்படி பூஜைசெய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் . அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசிபூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம்.
அதே போன்று அன்றைய தினத்திலேவிரத நாட்களில் செய்யக் கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று.
ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும்.
எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்யகாலத்தை தவறவிட்டால் அடுத்து இதேபோன்ற ஒரு புண்யகாலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும்.
எனவே அரிதான இந்த வாய்ப்பினைத்தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்புமிக்கவளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் . ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தரவல்லது இந்த புண்ய காலம் ஆகும்.
எல்லோரும் இந்த புண்ய காலத்தைமுழுமையாகக் கடைப் பிடித்து ஸ்ரீ லக்ஷ்மிநாராயணனின் பரிபூரண அருளைப் பெறுவோமாக!

Thursday, September 27, 2018

எளிய முறையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி ?


வாழ்க்கையில் சந்தர்ப்பம் எப்போதாவது தான் கிடைக்கும். அதை தவற விடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல. சில குடும்பங்களில், துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வாழாவெட்டியாய் வரும் பெண்கள், அங்கஹீனர்களாகப் பிறப்பவர்கள், திருமணமாகியும் நிம்மதியில்லாமல் இருக்கும் ஆண்கள், பணக்கஷ்டத்தால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பவர்கள்... இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பது தான். ஒவ்வொரு அமாவாசையும், பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்புகளில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இவையெல்லாம் சாத்தியமில்லாவிட்டால், தை அமாவாசை, ஆடி அமாவாசையாவது தர்ப்பணம் செய்யலாம். இதுவரை என் வாழ்க்கையில் தர்ப்பணம் செய்ததே இல்லை, அதற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால், அதற்கும் மாற்று வைத்திருக்கிறது சாஸ்திரம்.

புரட்டாசி மாத பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையுள்ள, 15 நாட்கள் மகாளயபட்ச காலம். மகாளயம் என்றால், மொத்தமாகக் கூடுதல் என்று பொருள் கொள்ளலாம். பிதுர்கள் எனப்படும் முன்னோர்கள் இந்த, 15 நாட்களும் கூட்டமாக பூமிக்கு வந்து விடுகின்றனர். தங்களது சந்ததியர், தங்களை நினைத்துப் பார்க்கின்றனரா என சோதிக்கின்றனர். அவர்களை அந்த, 15 நாட்களும் நினைத்து தர்ப்பணம் செய்தால், அவர்கள் மகிழ்கின்றனர்.

இதற்கு அதிக செலவாகுமோ என்று எண்ணத் தேவையில்லை. வசதி படைத்தவர்கள், தகுதியுள்ள அந்தணர்களை அழைத்து, இதை சில ஆயிரங்கள் செலவழித்து செய்யலாம். மற்றவர்கள் என்ன செய்யலாம் என்றால், சில விதிமுறைகளை சாஸ்திரம் சொல்கிறது.

நதிக்கரைகளுக்கு சென்று, அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை தானம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை கையில் எடுத்து, தீர்த்தத்தை விட்டு கீழே விடலாம். இதெல்லாம் முடியாவிட்டால், பசுவை வலம் வந்து வணங்கலாம். அதற்கும் முடியாவிட்டால், வெட்டவெளியில் நின்று இரண்டு கைகளையும் உயரே தூக்கி, "பித்ரு தேவதைகளை வணங்க வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனவே, பித்ரு தேவதைகளே... நீங்கள் எல்லாரும், நான் சிரார்த்தம் செய்ததாக எண்ணி திருப்தி அடையுங்கள்...' என்று வேண்டலாம்.

இதை விட சாஸ்திரம் நமக்கு என்ன சலுகையைத் தந்துவிட முடியும். மேற்கண்ட பரிகாரங்களுக்கு ஒரு பாக்கெட் எள் போதாதா. எள் எந்த அளவுக்கு வேண்டும் என்றால், கை கட்டை விரலில் எள்ளை ஒற்றிக்கொண்டு, அதில் தண்ணீரை விட்டு கீழே விட்டால் கூட போதும் என்கிறது சாஸ்திரம்.

மகாளயபட்சத்தின், 15 நாட்களும் இவ்வாறு செய்யலாம். முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்றாவது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை கடமைக்குச் செய்யாமல், சிரத்தையாக செய்தால், கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?

இனிமேல், நம் குடும்பங்களில் ஊனமான குழந்தைகள் பிறக்க மாட்டார்கள். இப்போது, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை அமையும். மேலும், நம் முன்னோர்கள் பாவம் செய்து நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களுக்கு விமோசனமாகி சொர்க்கத்தை அடைவர். அவர்களின் ஆசிர்வாதம், நம்மை மனநிம்மதியுடனும், செல்வச்செழிப்புடனும் வாழ வைக்கும்.

மகாளயபட்ச காலமான 15நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.முடியாதவர்கள் மகாளய அமாவாசைக்கு அவசியம் செய்தல் வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் செதலபதி கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே, ராமபிரான் பூஜித்த பிதுர்லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை மகாளயபட்ச காலத்தில் ஒரு நாளாவது சென்று தரிசித்து வாருங்கள். அங்கே தர்ப்பணம் செய்வது இன்னும் விசேஷம். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், கூத்தனூர் சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ் பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. பிதுர் தர்ப்பணத்தின் பலன் அளவிட முடியாதது; அனுபவத்தின் மூலமே உணர முடியும்.

Saturday, September 8, 2018

*4 நிமிடம் இருந்தாலே பிரம்மதோஷம், பில்லி, சூனியம் விலகும் - சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்*

108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக திகழ்கிறது சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். சோளிங்கர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.
750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோயிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோயில்.
பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் சேவை சாதிக்கிறார். மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார்.
விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்தார்.
கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார். ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.
இம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும் ஐதீகம்.
உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்ேதாசித பெருமாள் கோயில் அருகில் உள்ளன.
பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. தொட்டாச்சாரியார் ஆண்டுதோறும், காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளை சேவித்து வருவதை வழக்கமாகக் கொண்டவர். வயது மூப்பு காரணமாக அவரால் காஞ்சிபுரம் வரை பயணிக்க முடியவில்லை.
ஒருநாள் இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்தபடி, காஞ்சி வரதராஜப்பெருமாளையும், அவரது கருடசேவையையும் பற்றி சிந்தித்தபடி இருந்தார். அப்போது கருடவாகனத்தில் வரதராஜப்பெருமாள் தக்கான் குளக்கரையில் தொட்டாச்சாரியாருக்கு காட்சி தந்தார். இன்றும் காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக்குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
இக்கோயில் சென்னையிலிருந்து 100கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், திருத்தணியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சென்னையிலிருந்து ரயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலை சென்றடையலாம்.
*திருகடிகை ( சோளிங்கர்) "ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளே சரணம் "*

Friday, September 7, 2018

aishwaryam: கோ தானம்!

aishwaryam: கோ தானம்!: கோ மாதா சகல தெய்வங்களும் தன்னுள் அடங்கியதால் ஸர்வ தேவ ஸ்வரூபீ  கோமாதா பூலோகம், பாதாலலோகம், ஸுவர்க்கம், பித்ருலோகம், கந்தர்வலோகம் , வைவஸ...

aishwaryam: பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்!...

aishwaryam: பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்!...: இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை...

aishwaryam: தொழிலில் அபரிதமான வளர்ச்சி!

aishwaryam: தொழிலில் அபரிதமான வளர்ச்சி!: மாதம் தோறும் செய்து தொழிலில் அபரிதமான வளர்ச்சியையும்,செல்வ வளத்தையும் பெறுங்கள்........ சுயதொழில் செய்யும் ஒவ்வொருவரும் மகம் நட்சத்திரம் ...

Thursday, September 6, 2018

மஹாவில்வம்(maghavilvam): அனைத்து கஷ்டங்களையும் சில வாரங்களிலேயே தீர்த்துவைக...

மஹாவில்வம்(maghavilvam): அனைத்து கஷ்டங்களையும் சில வாரங்களிலேயே தீர்த்துவைக...: உங்களது வாழ்க்கை இன்று முதல் அடியோடு மாறிட நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்;அசைவம்,மது இரண்டையும் கைவிடவேண்டும்;புரோட்டாவும்,...

Wednesday, September 5, 2018

வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள்

வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –
———–
சித்திரை

வைகாசி

ஆவணி

ஐப்பசி

கார்த்திகை

தை

—————————

புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் குடி போக கூடா மாதம்
• ஆனி மாதம் குடி போகக் கூடாது
(மகாபலி சக்கரவர்த்தி தமது ராஜ்ஜியம் இழந்தது)

• ஆடி மாதம் குடி போகக் கூடாது
(இராவணன் கோட்டையை கோட்டை விட்டது.)

• புரட்டாசி மாதம் குடி போகக் கூடாது
(இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம
மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.)

• மார்கழி மாதம் குடி போகக் கூடாது.
(துரியோதனன் தன் ராஜ்ஜியம் இழந்தது)

• மாசி மாதம் குடி போகக் கூடாது
(மாசி மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம்
அருந்தி மயக்கமுற்றார்)

• பங்குனி மாதம் குடி போகக் கூடாது.
(சிவன் மன்மதனை எரித்தது


Tuesday, September 4, 2018

கோலமிடுவதைப் பற்றி நம் சாஸ்திரம் கூறும் உட்பொருள் என்ன?

மார்கழி மாதம் வந்தால் தெய்வ நிலைகளில் நமக்குள் நற்குணங்களை எப்படிப் பேணிக் காக்க வேண்டும்? வீட்டை எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.
அதிகாலையில் கோலங்கள் போடுவதும் அதில் மலர்களை வைப்பதும் வீட்டு வாசல்படியில் வைப்பதும் அதைக் கண்டு மகிழ்ந்திடும் நிலையாக வைத்தார்கள்.
ஆக, இவையெல்லாம் நம் சாஸ்திர விதிகளில் தெளிவான நிலைகளில் காட்டப்பட்டுள்ளது. அதை நாம் தெளிந்து ஒவ்வொரு நிமிடமும் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.
கோலமிடப்படும் பொழுது அந்தக் கோலத்தை நாம் எவ்வளவு அழகுபடுத்துகின்றோமோ இதைப் போல நம் வாழ்க்கையில் “ஒன்று சேர்த்து…, இணைக்கும் நிலைக்கு..,” வர வேண்டும்.
அதாவது, மகிழ்ந்திடும் நிலைகள் கொண்டு மனித எண்ணங்களை ஒன்றுக்கொன்று இணைத்துக் கொண்டு வர வேண்டும்.
ஆக, அது எப்படிக் கோலத்தைப் போட்டு நாம் மகிழ்கின்றோமோ இதைப் போல மனித வாழ்க்கையில் சிக்கலான நிலைகள் இருந்தாலும் “பிணைப்பது ஒன்றாகி.., பார்ப்பதற்கு அழகாகவும்.., நன்மை பெறும் சக்தியாக” ஒருவருக்கொருவர் நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் இதைத்தான் சாஸ்திரங்களாகக் கதைகளாக எழுதியுள்ளார்கள்.
ஆனால், கோலத்தை வெறுமனே போட்டு, “நான் போட்டிருக்கின்ற கோலம் எப்படி இருக்கிறது பாருங்கள்..?” என்று இப்படித்தான் காட்டிப் பழகுகின்றோம்.
கோலம் போடும் போது நம் நினைவுகள் எப்படி வரவேண்டும்?
வாழ்க்கையில் நாம் சுழன்று வரும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் தீமையிலும் தூய்மையற்ற நிலைகளிலும் நமக்குள் வளர்ந்து வரும் நிலைகளிலிருந்து அதை அழித்திடாது “நாம் ஒருக்கிணைந்து மகிழ்ந்திடும் செயலாக, நம் எண்ணங்களில் இணைத்திடும் நிலையாக, அழகுபடுத்தும் நிலையாக இந்த வாழ்க்கை அமைந்திட வேண்டும் என்ற நினைவுடன் கோலம் போட வேண்டும்.
இதைத்தான் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளில் தெளிந்தது தான்.
ஆனால், தெளிவற்ற நிலைகள் கொண்டு இன்று கோலம் போட்டார்கள் என்றால், “ஆமாம்.., பெரிய.., யாரும் போட முடியாத கோலத்தை இவர்கள் போட்டுவிட்டார்களாக்கும்..,” என்று பொறாமைப்பட்டுக் கொள்வார்கள்.
அடுத்தாற்போல் அவர்கள் போட்ட கோலத்தைவிட “நான் எப்படிப் போடுகின்றேன் பார்..,” என்று அந்தப் பொறாமையைத்தான் நாம் ஏற்றுக் கொள்கின்றோமே தவிர நன்மையின் நிலைகள் இல்லாது போய்விட்டது.
ஆகவே, இதைப் போல சாஸ்திரங்களை அனர்த்தமான நிலைகளில் மாற்றியமைத்து அதனின் உட்பொருளைக் காண முடியாத நிலைகளில் நாம் மறைத்துவிட்டோம்.