Sunday, October 21, 2018

சிவன் மூலமந்திரம்

கோடான கோடி நன்றிகள்சிவன் மூலமந்திரம் "ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌ ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ; ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌ ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।"

கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்

கோடான கோடி நன்றிகள்


கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் "ஓம் ஹரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி ஸ்திரி புருஷ வசிகரி கிலீம் கிலீம் மமவசம் குருகுரு சுவாகா" பச்சை கற்பூரத்தை இடதுகையில் வைத்துக்கொண்டு மேற்படி மந்திரத்தை 32 செபித்து பாலில் கலந்து மனைவி கணவனுக்கோ,கணவன் மனைவிக்கோ யார் மந்திரம் செபித்து கொடுகிறார்களோ அதை குடிப்பவர்கள்கொடுத்தவரின் சொல்கேட்டு அதன்படி நடந்து கொள்வர்.

Kalyana Pasupatheeswarar Temple | karur boomi sirappu | Karuvurar

சைவ கடவுள் - அசைவ கடவுள் விவரிக்கவும்

2018 - PART - 13 விதி, தலையெழுத்து விளக்கம்.

2018 - PART - 17 சைவம் வைணவம் பற்றி.

Wednesday, October 17, 2018

கர்மாவை_அழிப்பது_எப்படி???

ஒரு நாள் மாலை நேரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி மலைமீது உலா செல்லும்போது டிஆர்பி எனப்படும் டி.ஆர்.பி ராமச்சந்திர ஜயர் புறப்பட்டார்
திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது ஸ்ரீ பகவானிடம் தன் சந்தேகத்தை கேட்டார்.
" பகவானே
ஒருவர் தனது கர்மாவை, பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் தன்னுடைய விதியை, முற்றிலுமாக மாற்றி கொள்ள இயலுமா?". என்றார்
பகவான் "நிச்சயமாக 100% மாற்றிக்கொள்ள முடியும்" என்று சொல்லிவிட்டு சற்று நேரம் மௌனமாக நடந்தார்
பின்னர் ஜயரிடம் அவர் சொன்னார்,
"கர்மா - ஒருவரை இரண்டு விதங்களில் பாதிக்கிறது.
1. கடந்த கால நிகழ்வுகள்.
ஒருவர் செய்த வினைகள்
வெற்றி
தோல்வி
அதற்கான முயற்சிகள்
அதனால் அடுத்தவருக்குச் செய்த துன்பம்
போன்றவற்றால் வரும் கர்மா ஒருபுறம்
2. எதிர்காலத் திட்டங்கள்.
ஆசைகள்
லட்சியங்கள்
அதை அடைவதற்காக செய்யும் முயற்சிகள்
அதனால் விளையும் கர்மாக்கள் என்று மறு புறம்.
பிராரப்த கர்மாவை ஒருவர் முயன்று நிர்மூலம் செய்து விட்டால் 50% கர்மா அழிந்துவிடும் .
பழையது அழிந்தது போல் புதியதும் அழிந்துவிடும் என்று ஒருவர் உறுதி பூண்டால் எஞ்சி இருப்பது நிகழ்காலம் மட்டும் தானே!"
என்றார் பகவான்
உடனே ஜயர் "பழைய கர்மாவை அழிப்பது என்பது எப்படி?எனறார்.
பகவான் புன்னகையுடன்
"உனக்கு நிகழ்வும் எதுவாக இருந்தாலும் அதை மனதளவில்
எந்தவித எதிர்ப்பும் - எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்.
இருந்தாலும் அது கடவுளின் விருப்பத்தால் மட்டுமே நிகழ்கிறது என்று மனப்பக்குவத்தோடு இரு.
இப்படி இருந்தால் நாளடைவில் மனம் அதற்கு பழகிவிடும் அவ்வளவுதான் பின்பு நடக்க வேண்டியது அது தானாக நடக்கும்" என்றார் !
ஐயரும்உண்மை புரிந்தார்.
அகம் தெளிந்தார்.
ஸ்ரீ ரமண பாகவதம்
#ஓம்_நமச்சிவாயம்
வாழ்க்கையை கஷ்டம் என்று பார்த்தால் அங்கு சிரிப்பு இருக்காது.
வாழ்க்கையை சந்தோஷமாக பார்த்தால் அங்கு கஷ்டம் இருக்காது.
கஷ்டமான வாழ்க்கையையே சந்தோசமாக பார்த்தால் அங்கு தோல்வி என்பதே இருக்காது.
எல்லாவற்றையும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டோம் எனில் வாழ்க்கை இது தான் இவ்வளவு தான் என்று புரிந்து நம் வாழ்க்கையை நாம் நன்கு வாழ முடியும்.
இறக்க ஒரு நொடி துணிச்சல் போதுமாம் ஆனால்,
வாழ்க்கையை வாழ ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேணுமாம்.
மற்றோர் எவர் சொல்லும் கேளாதே
உன் மனம் பேசுவதை உற்று கவனித்து கேள்
உனக்கான உற்ற துணை அவனே உனக்கான உன் வாழ்வின் ஏணி படிகள் உன் மனமே
அதுவே நான் நம்பும் என் சிவமே.
வாழ்வை வாழுங்கள் மனநிறைவோடும்
என் சிவனின் நினைவோடும்
அருளோடும்
இச்சைகள் துறந்து ஈசனை அடி பணிந்து இன்பமாக வாழ அருள்வாய் இறைவா
ஓம் நமசிவாய நமோ நமஹ நமோ நமஹ நமோ நமஹ...

Thursday, October 11, 2018

உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் பாடல் கனகதாரா ஸ்டோத்திரம் (KA...

"நரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும்"

பெண்களுக்கு ஏற்றம் தரும் ஏழு தலங்கள்!

திரு அண்ணாமலையில் சித்தர்கள் அதிகம் ஏன்?

திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம்.அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச்
சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால்
மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!
மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து
தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!
ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது?
நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.இயல்பாகவே புவியியல்
அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.
நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி
வருகின்றனர்.
திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது. இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்..
இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.
அத்திரி மகரிஷி, மச்ச முனிவர், கோரக்கர், கிராம தேவர், துர்வாசர், சட்டை முனிவர், அகத்தியர், போகர், புசுண்டர், உரோமா மச்சித்தர், யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா, பிரம்ம முனி, காலங்கி நாதர், நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி, கொங்கனர், உதயகிரிச் சித்தர்,
பிகுஞ்சக ரிஷி, மேக சஞசார ரிஷி, தத்துவ ஞான சித்தர், காளமீகா ரிஷி, விடன முனிவர், யாகோபு முனிவர், அமுத மகாரிஷி, சூதமா முனிவர், சிவத்தியான முனிவர், பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி, ஜெயமுனி, சிறு வீரமா முனி, வேதமுனி, சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி, பராச முனி, வல்ல சித்தர், அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர், புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர், மவுனச்சித்தர், தேகசித்திக் சித்தர், வரரிஷி, கவு பாலச்சித்தர், மதிராஜ ரிஷி, கவுதமர், தேரையர், விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர், கண்ணானந்த
சித்தானந்தர், சச்சிதானந்தர், கணநாதர், சிவானந்தர், சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர், திரி காலாக்கயான முனி, அருட் சித்தர், கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி, கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர், வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச்சித்தர், சத்தரிஷி, தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர், நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி, அநுமாதிச்சித்தர், ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர், வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர், தொழுகன்னிச்சித்தர்....
என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்
அவற்றுள் தகவல்கள் சேகரித்து கிடைக்க பெற்ற 20 சித்தர்கள் பற்றி ஒவ்வொரு பதிவாக காணலாம்.
திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.
“திருவண்ணாலைக்கு வந்து ஞானகுருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே
குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.
திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.
உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர். தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.
திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.
திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.
தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியதால் அண்ணாமலையானை
நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.
யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திபரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.
பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.
ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.
காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணாமலையானின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர்
மடத்தில் தீட்சை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.
வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.
கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.
தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர்.
இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.
கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.
திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.
பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்.
பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், முடிக்கப்படாது பாதிக்கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாட்சர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.
திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)
திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர். திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்.
கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)
“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்’ என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். கண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.
“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும்
தருமபுரிப்பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும்
மேற்கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.
உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.
திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 108 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள்.
1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.
திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950)
விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக்கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி, ராம் சுரத்குமார்..
.. ஓம் நமசிவாய சிவசிவ அன்பே சிவம்.
அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !

எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதேஅருளாளா! அருணாசலா!

- சித்தகுருவேத சூக்த மாமந்திரம்

Nothing is mine, Everything is YoursO Merciful Lord! Arunachala!

- Siddha Guru Veda Sooktha Maha Mantram


"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"


*


திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
Wednesday, October 10, 2018

கொங்கு மண்டலத்தில் பாடல் பெற்ற சிவத்தலங்கள்

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி தமிழகத்தில் உண்டு. தமிழகத்தின் பழமையான நகரங்கள், ஊர்கள் பலவும் அங்குள்ள கோயிலை மையமாகக் கொண்டே உருவாகியிருப்பதைக் காண முடியும். தமிழோடு சைவமும் வைணவமும் வளர்த்த பெருமை மிக்கது தமிழகம். 

கொங்குநாடு அமைவிடம்: 

பண்டைக்காலத்தில் தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு என அரசியல்ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த பிராந்திய வேறுபாடுகள் ஒவ்வொரு காலத்திலும் மாறியபடியே இருந்துள்ளன. ஆயினும், ஏதாவது ஒரு ஊரைக் குறிப்பிடுகையில் அந்த ஊர் உள்ள பகுதியை சேரநாடு, கொங்குநாடு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்துள்ளது. 

அதன்படி, தர்மபுரி முதல் கோவை வரையிலான தற்போதைய மேற்கு மண்டல தமிழகப் பகுதிகள் ‘கொங்குநாடு’ என்று அழைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்கள் அக்காலத்தில் கொங்குநாடு என்று அழைக்கப்பட்டுள்ளன. 

இந்த கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. 

தேவார மூவர்: 

தமிழகத்தில் சைவசமய எழுச்சி 1,500 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. அப்போது தோன்றிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவார மூவர் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கால்நடையாகவே சென்று பக்திப்பயிர் வளர்த்தனர். சைவ சமயத்தில் மட்டுமல்லாது தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடும் திறனும் படைத்த அவர்கள், ஊர்தோறும் சென்று அத்தலத்தின் இறைவனையும் தலத்தையும் போற்றிப் பதிகங்கள் பாடி மக்களை வழிப்படுத்தினர். 

அவர்களது தமிழகப் பயணம் பல அற்புதங்களை நிகழ்த்துவதாகவும் அமைந்தது; இறையாற்றல் வாய்ந்த மொழி தமிழ்மொழி என்பதை நிலைநாட்டுவதாகவும் அமைந்தது. தேவார மூவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளில் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கொங்கு நாட்டில் உள்ள ஏழு தலங்கள் மீதான பதிகங்களும் அடங்கும். 

திருநணா (பவானி), திருச்செங்கோடு, கருவூர் (கரூர்), திருமுருகன் பூண்டி, திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி), திருப்புக்கொளியூர் (அவிநாசி), வெஞ்சமாக்கூடல் ஆகிய ஏழும் ‘கொங்கேழ் தலங்கள்’ என்ற சிறப்புப் பெற்றவை. இத்தலங்கள் தேவார மூவர் விஜயம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெருமை வாய்ந்தவை. 

தேவாரப் பாடல்களில் பதிவு பெற்று ஆன்மிக சரித்திரத்தில் இடம் பெற்றவை இந்த ஏழு தலங்களும். அந்த ஏழு தலங்களுக்கும் செல்வோமா? 
முக்கூடலில் உள்ள பவானி: 

கங்கை, யமுனை, அந்தர்வாஹினியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடுமிடம் திரிவேணி சங்கமம் (பிரயாகை) என்று அழைக்கப்படுகிறது. இந்துக்களின் வழிபாட்டில் திரிவேணி சங்கமத்துக்கு பேரிடம் உண்டு. உ.பி. மாநிலத்தின் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமம் புண்ணியத்தலமாகவும் தீர்த்தாடனத் தலமாகவும் விளங்குகிறது. 

அதற்கு இணையானது தென்னகத்திலுள்ள, பவானி கூடுதுறை என்று தற்போது அழைக்கப்படும் ‘திருநணா’. காவிரி, பவானி, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் இங்கு கூடுகின்றன. இங்கு புனித நீராடலும் நீத்தார் கடன் மேற்கொள்வதும் மிகச் சிறப்பானவை. 

இங்குள்ள சங்கமேஸ்வரர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு சங்கமேஸ்வரர் என்ற பெயரில் ஈசன் குடிகொண்டுள்ளார். இறைவி, வேதநாயகி. இக்கோயில் வளாகத்திலேயே, ஸௌந்தரவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் தனி சந்நதியில் காட்சி தருகிறார். இக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரம். 

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருநணா. சம்பந்தரின் திருநணாப் பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தைப் பாடியுள்ளார். தனது பக்தரான ஆங்கிலேய அதிகாரி வில்லியம் காரோவின் உயிரை வேதநாயகி அம்மன் காத்ததாகவும், அதற்கு நன்றிக்கடனாக அம்மனுக்கு தந்தக் கட்டில் வழங்கியதாகவும் (1804ம் ஆண்டு) கோயில் தலவரலாறு கூறுகிறது. ÷ 

ஈரோடு மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. ஈரோட்டிருந்து 15 கிமீ. தூரத்திலும், சேலத்திலிலிருந்து 56 கிமீ. தூரத்திலும் பவானி உள்ளது. கொங்கு மண்டலத்தின் பிரதானமான கோயில் பவானி எனில் மிகையில்லை. 

சமத்துவம் கூறும் திருச்செங்கோடு: 

ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்த, ஈசனே மாதொரு பாகனாக தரிசனம் அளிக்கும் தலம் திருச்செங்கோடு. இங்குள்ள சுயம்பு வடிவான மூலவரில் இடதுபாகம் அம்பிகையாகவும், வலதுபாகம் சிவனாகவும் காட்சி தருகிறது. 

செந்நிறமான மலையாதலால் திருச்செங்கோடு என்று பெயர்பெற்ற 1,900 அடி உயரமுள்ள மலை மீது மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். தலத்தின் இறைவி பாகம்பிரியாள். கணவனும் மனைவியும் மனமொத்து வாழ்வதற்கு, இணைபிரியாத இச்சிலாரூபமே வழிகாட்டும் தத்துவமாகும். 

1,250 படிக்கட்டுகளில் ஏறியோ, கார் மூலமாக தார்ச்சாலையில் பயணித்தோ கோயிலை அடையலாம். மூலவரின் காலடியில் சுரக்கும் வற்றாத தேவதீர்த்தம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூலவருக்கு வலப்புறம் வேட்டியும் இடப்புறம் சேலையும் அணிவிக்கின்றனர். இங்கு அம்பிகைக்கு தனி சந்நிதி இல்லை. ஆதிகேசவப் பெருமாளுக்கு இங்கு தனிக்கோயில் உண்டு. 

“கொடிமாடச் செங்குன்றூர்’ என்று திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருச்செங்கோடு. இப்பதிகம் முதல் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களும் இங்குள்ள செங்கோட்டுவேலன் மீது பாடப்பட்டுள்ளன. 

நாமக்கல் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. ஈரோட்டிலிருந்து 18 கிமீ. தூரத்திலும், சேலத்திலிருந்து 27 கிமீ. தூரத்திலும், நாமக்கல்லிலிருந்து 35 கிமீ. தூரத்திலும் திருச்செங்கோடு உள்ளது. சிலப்பதிகார நாயகி கண்ணகி இம்மலைக்கு வந்ததாகவும் புராணக்கதை உண்டு. 
பசு வழிபட்ட கருவூர்: 

இவ்வுலக உயிர்கள் அனைத்தும் ஈசன் முன்பு சமமானவையே என்பதை உணர்த்துகிறது பசு வழிபட்ட கருவூர் (தற்போதைய கரூர்) திருத்தலம். இங்குள்ள சுயம்பு வடிவான லிங்கம் மீது பசுவின் குளம்படிகளைக் காணலாம். இவரை ஆனிலையப்பர் என்றும் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். 

காவிரியின் துணை நதியான அமராவதி ஆற்றங்கரையில், கரூர் நகரின் மையப்பகுதியில் பிரமாண்டமான ஆலய அமைப்புடன் உள்ளது பசுபதீஸ்வரர் கோயில். இங்குள்ள இறைவியின் பெயர் சுந்தரவல்லி. ஆனந்த வல்லி என்ற பெயருடன் பழைய கோயிலிலும் இறைவி தரிசனம் தருகிறார். இக்கோயிலின் நூற்றுக்கால் மண்டபம் காண வேண்டியதாகும். கருவறையிலுள்ள மூலவர் மீது பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சூரியஒளி விழும்படி ஆலயக் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். 

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது கரூர். கந்தபுராணத்தில் கூறப்படும் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை மிக்கது இக்கோயில் என்று தலபுராணம் கூறுகிறது. பதினென் சித்தர்களுள் ஒருவரும் ராஜராஜ சோழனின் குருவுமான கருவூர்ச் சித்தர் வாழ்ந்த இடம் இது. இக்கோயிலில் கருவூர்ச் சித்தருக்கு தனி சந்நிதி உண்டு. 

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. கருவூர்ப் பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. 14ம் நூற்றாண்டில் கரூர் வந்த அருணகிரிநாதர், இக்கோயிலில் குடிகொண்டுள்ள முருகன் தமது திருப்புகழில் பாடியுள்ளார். 

கரூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. கோவையிலிருந்து 121 கிமீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 115 கிமீ. தூரத்திலும், ஈரோட்டிலிருந்து 65 கிமீ. தூரத்திலும் கரூர் உள்ளது. ஈரோடு- திருச்சி ரயில்மார்க்கத்திலும் கரூர் உள்ளது. 63 நாயன்மார்களுள் ஒருவரான புகழ்ச்சோழ நாயனார் கருவூரை ஆண்ட மன்னராவார். எறிபக்த நாயனார் பிறந்த தலமும் இதுவே. மும்மூர்த்திகள் அருளும் கொடுமுடி: 

வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் மேருமலையின் ஒருபகுதியான வைரமுடி சிதறி விழுந்த இடமே கொடுமுடி என்று தலபுராணம் கூறுகிறது. கோயிலின சுயம்பு வடிவான இறைவனுக்கு கொடுமுடி நாதர் அல்லது மகுடேஸ்வரர் என்று பெயர். இறைவியின் நாமம் வடிவுடைநாயகி. 

காவிரி நதிக்கரையில் உள்ள இத்தலம், மும்மூர்த்திகளுக்கும் தனி சந்நிதி கொண்டிருப்பதால் தனிச்சிறப்பு பெற்றது. இங்குள்ள பிரம்மாவும், வீரநாராயணப் பெருமாளும் மகுடேஸ்வரரை வணங்குவதாக ஐதீகம். இங்குள்ள ஈசனை அகத்தியர் வழிபட்டதாகவும், அவரது விரல் தடங்கள் மூலவர் திருமேனியில் பதிந்திருப்பதாகவும் ஐதீகம் உண்டு. 

காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவதீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்கள். காவிரியிலும் தேவதீர்த்தத்திலும் நீராடி, சிவனையும் பெருமாளையும் வழிபட, தீராப் பிணிகளும், பில்லி, சூனியம்,மனநோய் போன்றவையும் அகலும் என்பது நம்பிக்கை. 

ஈசனின் ஆருயிர்த்தோழர் சுந்தரர் விஜயம் செய்து பாடி மகிழ்ந்த தலம் இது. பாண்டிக் கொடுமுடிநாதர் மீது சுந்தரர் பாடிய நமச்சிவாய பதிகம் ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மலையத்துவஜ பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்டதால் “திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று பெயர்பெற்ற இந்தப் பரிகாரத் தலம் தற்போது கொடுமுடி என்று வழங்கப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி உள்ளது. ஈரோட்டிலிருந்து 40 கிமீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 89 கிமீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது. ஈரோடு – திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணித்தும் இங்கு செல்லலாம். திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூட இத்தலத்து இறைவனை பதிகங்களில் பாடி வணங்கியுள்ளனர். 

தமிழின் இறைமை காட்டிய அவிநாசி: 

தொல்மொழியான தமிழுக்கு இறையாற்றல் உண்டு என்பதை மெய்ப்பித்த தலம் ‘திருப்புக்கொளியூர்’ என்று பழங்காலத்தில் வழங்கப்பட்ட அவிநாசி திருத்தலம். ‘காசிக்குச் சென்றால் தான் முக்தி; அவிநாசியை நினைத்தாலே முக்தி’ என்ற சொல்வழக்கு உண்டு. 

தமிழகத்தின் பழங்கால வணிகப்பாதையான ராஜகேசரி பாதையில் அமைந்த அவிநாசி, சுந்தரரின் பாதம் பட்டுப் புனிதமடைந்த தலமாகும். இக்கோயிலின் இறைவர் அவிநாசியப்பர்; இறைவி கருணாம்பிகை. காசி கங்கை, நாககன்னிகை தீர்த்தம், ஐராவத தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. தலவிருட்சம் மாமரம். 

சுந்தரர் இத்தலத்துக்கு வந்தபோது எதிரெதிர் வீடுகளில் ஒரு வீட்டில் மங்கல ஒலியும் மறுவீட்டில் அமங்கல ஒலியும் கேட்டன. அதுகுறித்து சுந்தரர் விசாரித்தபோது, இரு வீடுகளிலும் இருந்த ஐந்து வயதுச் சிறுவர்கள் இருவர் அருகிலுள்ள தாமரைப் பொய்கையில் நீராடச் சென்றபோது ஒருவனை முதலை விழுங்கியது தெரியவந்தது. அதில் தப்பிய பாலகனுக்கு ன்று உபநயனம் செய்விக்கப்படுவதும், தமது குழந்தை இத்தருணத்தில் இல்லையே என்ற ஆற்றாமையால் எதிர்வீட்டுப் பெற்றோர் அழுவதும் உணர்ந்த சுந்தரர், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று திருப்புக்கொளியூர்ப் பதிகம் பாடினார். 

முதலை பாலகனை உண்ட குளக்கரையில் ‘எற்றான் மறக்கேன்’ என்று துவங்கும் பதிகம் பாடினார் சுந்தரர். பதிகத்தின் 4வது பாடலில் ‘முதலையை பிள்ளை தரச் சொல்லு’ என்று ஈசனுக்கே கட்டளையிட்டார் சுந்தரர். அதையேற்று, வற்றிய குளம் நிறைந்து முதலை அங்கு தோன்றியது; தான் ஐந்தாண்டுகளுக்கு முன் விழுங்கிய பாலகனை 10 வயது சிறுவனாக உயிருடன் உமிழ்ந்து மறைந்தது முதலை. இத்தகைய தெய்வீகத் தமிழின் அற்புதம் நிகழ்ந்த தலம் அவிநாசி. 

இந்த மகிமைமிகு நிகழ்வு நடந்த குளம் அவிநாசியில் கோயிலிருந்து அரை கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு சுந்தரருக்கு தனிக்கோயிலும் உண்டு. பங்குனி உத்திர நாளில் இக்குளக்கரைக்கு வரும் அவிநாசியப்பர் முதலையுண்ட பாலகனை மீட்ட திருவிளையாடலில் பங்கேற்கிறார். சுந்தரர் பாடிய திருப்புக்கொளியூர்ப் பதிகம் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. திருப்பூரிலிலிருந்து 8 கிமீ. தூரத்திலும், கோவை, ஈரோட்டிலிருந்து தலா 40 கிமீ. தூரத்திலும், பவானியிலிருந்து 53 கிமீ. தூரத்திலும் அவிநாசி உள்ளது. அவிநாசித் தேர் தமிழகத்திலுள்ள தேர்களில் இரண்டாவது பெரியதாகும். 

சித்தம் காக்கும் திருமுருகன் பூண்டி: 

மிகப் பழமையான திருமுருகன் பூண்டி தொல்பொருள் சின்னமாக அறிவிக்கப்பட்டதாகும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சீரடைய இத்தலத்தின் சண்முக தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தங்களில் நீராடி, ஈசனை வழிபடுவதும் குணமடைவதும் இத்தலத்தின் சிறப்பாகும். 

செந்நூரில் சூரமத்மனை வதம் செய்தபிறகு தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் போக்க முருகன் வழிபட்ட தலம் இது; ஞானத்தின் அதிபதியான கேதுபகவான் ஈசனை வழிபடும் தலமும் இதுவே என்கிறது தலபுராணம். இங்கு கேது பகவானுக்கு தனி சந்நிதியும் உண்டு. 

திருமுருகனால் நிறுவப்பட்டு வழிபடப்பட்ட பரிகாரத் தலம் என்பதால் ‘திருமுருகன் பூண்டி’ என்று பெயர் பெற்ற இத்தலத்தின் இறைவர் திருமுருகநாதர். இறைவியின் நாமம் ஆவுடைநாயகி. மூலவர் சந்நிதியின் வலப்புறம் ஆறுமுகக் கடவுளுக்கு தனி சந்நிதி உள்ளது. 

தனது உற்ற தோழர் சுந்தரரின் பொருளை ஈசனே வேடன் வடிவில் வந்து பறித்து நிகழ்த்திய வேடுபறித் திருவிளையாடலின் மூலமாக சுந்தரரின் பெருமையை உலகறியச் செய்தார் ஈசன். திருமுருகன் பூண்டி திருத்தலத்தில் வேடுபறிக்குழி இன்றும் உள்ளது. இந்த நிகழ்வை ஆண்டுதோறும் வேடுபறி உற்சவமாகக் கொண்டாடுகின்றனர். 

தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருளை திரும்பப் பெறக் கோரி சுந்தரர் இத்தலத்து இறைவன் மீது பாடினார். இப்பதிகம் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவருக்கு திருடிய பொருளைக் காட்டிய விநாயகர் ‘கூப்பிடு விநாயகர்’ என்ற பெயரில் தரிசனம் தருகிறார். 

திருப்பூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. திருப்பூரிலிலிருந்து 7 கிமீ. தூரத்திலும், அவிநாசியிலிருந்து 4 கிமீ. தூரத்திலும் திருமுருகன் பூண்டி உள்ளது. இழந்த பொருளை மீட்க வேண்டுவோர் இத்தலத்தில் பிரார்த்திக்கலாம் என்பது பக்தர்தம் நம்பிக்கை. சிற்பத் தொழிலிலும் திருமுருகன் பூண்டி சிறந்து விளங்குகிறது. 

இந்திரன் வழிபட்ட வெஞ்சமாகூடல்: 

கொங்கேழ் தலங்களில் இத்தலம் மட்டுமே போக்குவரத்து வசதிகள் குறைந்த ஊரகப் பகுதியில் உள்ளது. குடகனாற்றின் கரையில் உள்ள இத்தலம் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. குடகனாற்றுடன் ஒரு சிற்றாறு கலக்கும் இடம் என்பதாலும், வெஞ்சமன் என்ற வேடன் ஆண்டு வழிபட்ட தலம் என்பதாலும் “வெஞ்சமாகூடல்’ என்று பெயர் பெற்றது. 

தேவர்களின் தலைவனான இந்திரன் சாபவிமோசனம் பெற இங்கு வந்து வழிபட்டதாக ஐதீகம். பாண்டியர்காலக் கல்வெட்டுகள் இங்கு கிடைத்துள்ளன. இங்குள்ள இறைவனின் பெயர் விகிர்தநாதேஸ்வரர். இறைவி பெயர், விகிர்தேஸ்வரி அல்லது பண்ணேர்மொழியம்மை. 

சுந்தரரின் பாடலுக்கு மயங்கி, இத்தலத்தில் ஈசனே கிழரூபம் எடுத்து வந்து தனது இரு புதல்வர்களை மூதாட்டியிடம் ஈடுவைத்துப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்கிறது தலபுராணம். இத்தலத்தின் இறைவன் மீது சுந்தரர் பாடிய பதிகம் ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. 

கொங்கு மண்டல சதகத்திலும் இத்தலம் குறித்துப் பாடப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவர் கருவறைக் கதவுகளில் கொங்கேழ் தல மூர்த்திகளின் சிலாரூபங்கள் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இங்குள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் பாடிப் பரவியுள்ளார். 

கரூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. கரூரிலிருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 14 கிமீ. தூரம் பயணித்தால் ஆறுரோடு பிரிவு என்ற இடம் வரும் அங்கிருந்து 8 கிமீ. தூரம் பயணம் செய்தால் வெஞ்சமாகூடல் தலத்தை அடையலாம். 

– மேற்கண்ட ஏழு திருத்தலங்களும் சைவமும் தமிழும் வளர்த்து, மக்களை நன்னெறிப்படுத்தியவை. இத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடும்போது, தேவார மூவரும் அருந்தமிழால் போற்றிப் பாடிய பதிகங்களும், அவர்களது தெய்வீக சாதனைகளும் நினைவில் வருகின்றன. மந்திரத் தமிழில் பதிகம் பாடி இறைவனை வணங்கிய நமது முன்னோரின் நினைவுகளே நம்மை என்றும் காக்கும்.
திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

திருமுறைகளை முறையாக ஓதுவதன் பயன்கள்


திருமுறைகளுக்குப் பெருஞ்சிறப்பு உண்டு. சைவர்கள் இவற்றை இறைவன் நூல் என்றும், தமிழ்வேதம் என்றும் கருதிப் போற்றி வருகின்றனர். வேதம் மற்றும் சைவ ஆகமங்களின் சாரமாகவே திருமுறைகள் அமைந்துள்ளன.
இவை சிவனின் அடையாளங்கள், ஆற்றல்கள், அருள் செயல்கள் முதலியவற்றை விளக்கி நிற்கின்றன. சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றுவதற்கு அடிப்படையான இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்)
இவற்றின் இயல்புகள் திருமுறைகளுள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. சில பதிகங்கள் அற்புத நிகழ்வுகளோடு இணைந்தவை. (பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது) அவற்றைப் பக்தியோடு ஓதினால் உரிய நன்மையை அவை தரும் என்ற நம்பிக்கை சைவர்களிடையே நிலவி வருகிறது.
தமிழ்நாட்டின் 500 ஆண்டுக்காலச் சமய-சமூக வரலாற்றை அறியத் திருமுறைகள் துணையாகின்றன. தமிழ், இசை, கலை, பெண்மை ஆகியவை உயர்ச்சி பெறத் திருமுறைகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.
சிவன் சந்நிதிகளில் பூசைக்காலங்களில் திருமுறை ஓதி வழிபடும் வழக்கம் நிலவுகிறது. சிவன் சந்நிதியில் நின்று திருமுறை பாடுவோரை ஓதுவார் என்று கூறுவர். கல்வெட்டுகள் இவர்களைப் ?பிடாரர்கள்? என்று குறிக்கிறது.
திருமுறை ஓதப்படும் முறைகள்
திருமுறைகளை ஓதுவதில் சில நெறிமுறைகளைச் சைவம் வகுத்துள்ளது. சிவ தீட்சை பெற்றவர்களே, நீராடித் தூய ஆடை உடுத்து, வெண்ணீறு அணிந்து, உரிய பண் அடைவோடு இறைவன் முன்பு திருமுறை ஓதுதல் வேண்டும்.
ஒவ்வொரு காலப் பூசையிலும் திருமுறை ஓதப்பட வேண்டும். அந்தத் தலத்துக்கு (தலம் – இடம்) உரிய பாடல்களைப் பாடுவது சிறப்பு.
திருமுறை விண்ணப்பிக்கத் தொடங்கும் முன்பும், நிறைவு செய்த பின்பும் ‘திருச்சிற்றம்பலம்’ என உச்சரித்தல் வேண்டும். தேவாரமாயின் பதிகம் முழுவதையும் பாடவேண்டும்.
காலம் கருதி இயலாத போது பதிகத்தின் முதற்பாடலையும், நிறைவுப் பாடலையும் பாடலாம். ஒவ்வோர் திருமுறையிலிருந்தும் குறைந்தது ஒரு பாடலையாவது பாடுதல் நலம்.
இயலாத நிலையில் ஒரு தேவாரப் பாடல், ஒரு திருவாசகப்பாடல், ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பாவிலிருந்து ஒருபாடல், திருப்பல்லாண்டில் ஒன்று, பெரியபுராணப் பாடல் ஒன்று என்று ஐந்து பாடல்களைப் பாடும் மரபு உண்டு.
இதற்குப் பஞ்சபுராணம் பாடுதல் என்று பெயர். சிவன் திருவீதி உலா வருகையில் திருமுறைகள் முன்னாகவும், வேதங்கள் பின்னாகவும் ஓதப்படும் மரபு நிலவி வருகிறது.
சிவ பூசையின் நிறைவில் முதல் மரியாதை ஓதுவார்களுக்கே வழங்கப்பட்டு வருதல் திருமுறைகளின் பெருமைக்குச் சான்றாக உள்ளது.
திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்

https://nytanaya.blog/2018/03/19/வினை-முற்றுக்கு-திருமுறை/
திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Tuesday, October 9, 2018

Sri Maha Periyava Mahimai Part- 6 by Ganesha Sharma | 125th Jayanthi Mah...

Thiruvasagam | திருவாசகம் | மார்கழி மாதச் சிறப்புச் சொற்பொழிவுகள் | பா.ர...

விழித்தவுடன் சிவ தியானம் | Vizhithavudan Siva Dhyanam | Dr.Rajasekara ...

Siva Dharmam | விளக்கிடுதல்| தீபமேற்றுதல் | திருவிளக்கு ஏற்றி வைத்தல்| D...

மிகுந்த கடனால் அவதிப்படுபவர்கள்,

மிகுந்த கடனால் அவதிப்படுபவர்கள்,எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் வறுமையில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்கள்,வியாபாரத்தில் லாபமே பார்க்க முடியாமல் வியாபாரத்தை கைவிடமுடியாமல் இடியாப்பச்சிக்கலில் மாட்டியுள்ளவர்கள் பட்டீஸ்வரம் சிவாலயம் வரவேண்டும்;இங்கே வருகை தந்து காராம்பசுவின் பாலைக் கறந்து அதன் இளஞ்சூடு ஆறும் முன்பாகவே இங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;இதை மாசி மகம் அன்று செய்ய வேண்டும்;இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே அதன் பிறகு அவர்களது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வழிகள் கிட்டும்;

கோடான கோடி நன்றிகள்
பணம் சேர மந்திரம் இந்த மந்திரத்தை தினமும் சொன்னால் போதும் ! உங்கள் வீட்ட...

வளமோடும் நலமோடும் வாழ ஒரு எளிய வழி!வளமோடும் நலமோடும் வாழ ஒரு எளிய வழி! வாரம் ஒரு முறையாவது சிறிதளவு துளசி, வில்வம், அருகம் புல், வேப்பிலை உண்டு வாருங்கள். கிரக ரீதியாக ராகு, கேது, சனி இவர்களின் ஆக்ரோசத்தை குறைத்து நம் உடலை நோயிலிருந்து காப்பற்ற முடியும். இந்த செய்தி மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும்... ஆனால் கை மேல் பலன் நிச்சயம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்களேன்

Monday, October 8, 2018

பரிகாரம்

யார் யார் எப்படி 
செய்ய பலன் தரும்
எல்லோருக்கும் ஒரே 
முறை கை தராது
யார் யார் விளக்கு
ஏற்ற வேண்டும்
யார் யார் ஹோமங்கள்
வளர்க்க வேண்டும்
யார் யார் அபிஷேகம்
செய்ய
வேண்டும்
மந்திரங்கள் யார்
சொல்ல வேண்டும்
ராசிகளை பஞ்ச பூத
அடிப்படையில் பார்த்து
அதன் வழியில் பரிகாரம்
செய்ய உதவும்
மேசம் சிம்மம் தனுசு
இவை நெருப்பு 🔥 இராசிகள்
ரிசபம் கன்னி மகரம்
இவை நில இராசிகள்
மிதுனம் துலாம் கும்பம்
காற்று இராசிகள்
கடகம் விருச்சிகம் மீனம்
நீர் இராசிகள்
எனவே இவ்வாறு பகுத்து
பார்த்து எந்த ராசியில் எந்த
கிரகம் நின்று என்ன தடைகள்
பிரச்சினைகள் தருகிறது என்று
ஆராய்ந்து உணர்ந்து பரிகாரம்
செய்ய உதவும் பலன் தரும்
நெருப்பு 🔥
ராசிகளுக்கு
ஹோமங்கள் வளர்த்தல்
விளக்கு போடுதல்
தீபாராதனை செய்தல்
கற்பூரம் ஏற்றல்
நிலம் இராசிகளுக்கு
தானம் கொடுத்தல்
கிரகங்களை பொருத்து
காற்று இராசிகளுக்கு
மந்திரங்கள் ஜெபித்தல்
நீர் இராசிகளுக்கு
அபிஷேகம் செய்தல்
இப்படி ஆராய்ந்து
பார்த்து செய்து பலன்
பெற வேண்டும்
எல்லாவற்றிற்கும்
எல்லோருக்கும்
ஒரே பரிகாரம் பலன்
தராது