Monday, December 31, 2018

Sunday, December 30, 2018

🍁மார்கழி மாதத்தில் வழிபட வேண்டிய திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கத்தின் மர்மம்...!!

🍃மார்கழி மாதம் மட்டுமே காண முடியும்.. பலரும் அறிந்திடாத தகவல்!
🍁மார்கழி மாதத்தில் வழிபட வேண்டிய திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கத்தின் மர்மம்...!!
🌷அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.,,
🌺திருச்செங்கோடு சுயம்பு லிங்கத்தின் மர்மம்:,🌺
இங்கு மார்கழி மாதம் மட்டும் குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும். அப்பொழுது பிருங்கி முனிவர் வழிபட்ட மரகதலிங்கம் வைத்து வழிபடப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள்.
பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தின் வரலாறு சுருக்கம்..
முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் செய்து கொண்டனர். அந்த போரினால் உலகில் பேரழிவுகள் ஏற்பட்டன. இந்த துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர்.
அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் வாயுதேவனால் பிடியை தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியை தளர்த்த வேண்டினார்கள்.
ஆதிஷேசன் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பு மியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது. அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.
🍂சுயம்பு மரகத 🍂
🐚லிங்கத்தின் வரலாறு :🐚
பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், என சாபமிட்டார்.
இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். (இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).
அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தாயார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார்.,


🍀பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மீதி நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து விடுங்கள் என்றார்.,,

சித்தர்கள் மகிமை | யோகா குரு

பணம் தடையில்லாமல் வரவைக்கும்மூலிகை

தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்!தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்!தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்!உமையருபாகனாக ஈசன் தரிசனம் தரும் இந்தத் திருவுருவை (விக்கிரகங்களை) திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோயிலிலும், திருச்செங்கோட்டிலுள்ள கோயிலிலும், திருக்கண்டியூரிலும், திருமழப்பாடியிலும், காஞ்சிபுரத்திலும் தரிசிக்க முடியும்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கையில் ஒரு கோல் வைத்திருக்கிறார்.இந்த அமைப்பு, தமிழகத்தில் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்று!திருக்கண்டியூரில் அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த நிலையில் உள்ளார்.திருமழப்பாடியில் இடப்பகுதிக்குப் பதிலாக வலப்பகுதியில் உமாதேவியின் (பெண்) உருவம் உள்ளது.காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலில் அபயமுத்திரை இல்லாமல் காட்சி தருகிறார் அர்த்தநாரீஸ்வரர்!

Thursday, December 27, 2018

What is donating to God..? - இறைவனுக்கு தானம் பண்ணுவது எது..?

003/07-Bhavani Thyagarajan-Sivagnana Sidhdhiyaar-எண்குணத்தான் -சிவத்தி...

ஐந்தெழுத்து-

கருவறை - சிவத்திரு பவானி .அ .தியாகராசன்

சிவலிங்க திருமேனி - சிவத்திரு பவானி. அ . தியாகராசன்

005/03-சிவஞான சித்தியார் - சிவத்திரு பவானி அ தியாகராசன்-ஏன் சிவத்தைப் ...

கைலாசத்தையும் மிஞ்சும் புண்ணிய சக்தி தலம் எது ?

வாழையடி வாழையான வாழ்வு !

சற்குரு முழக்கம் 30 ஏகாதசி மகிமை

வணங்குவது எப்படி?கைகளைக் குவித்து தலைக்கு மேல் உயர்த்தி மும்மூர்த்திகளை வணங்க வேண்டும்.
தலைமேல் கைகளைக் குவித்துப் பிற தெய்வங்களை வணங்க வேண்டும்.
நெற்றிக்கு நேராகக் கைகளைக் கூப்பியபடி அறிவு புகட்டிய ஆசானை வணங்க வேண்டும்.
வாய்க்கு நேராகக் கரங்களைக் கூப்பியவாறு தந்தை, அறவோர், அமைச்சர், அரசர் ஆகியோரை வணங்க வேண்டும்.
குவித்த கைகளை வயிற்றில் வைத்து பெற்ற தாயை வணங்க வேண்டும்.
தாய்.தந்தை,குரு,தெய்வம் ஆகியோரை மட்டுமே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கலாம்.

*ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறும் வழி..!!!*பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது..அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல..
ஆசிர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விசயம் இருக்கிறது
108 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்.. தீர்க்காயுசா இருப்பா என்றார் எவ்வளவு நாளா ஐயா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி கொடுக்குறீங்க என்றேன்..
அது ஒரு 60 வருசமா அப்படித்தான் ஆசி கொடுக்கிறேன் என்றார்..அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்...
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்..அய்யோ என் கால்ல விழுந்துட்டு என பதறுவர்.
இதெல்லாம் தவறு.நம்மை விட வயதானவர் என்றாலும் *ஆசி கொடுக்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.*
*புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும், தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்...*
வயதானவர்கள் சகல தோசங்களும் இன்றோடு நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன் ,நல்ல தொழில் வளத்துடன்,நீண்ட ஆயுளுடன் வாழுங்க வாழ்க வளமுடன் என்று ஆசிர்வாதிக்கலாம் ...
*தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள் அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் அவை கிடைக்கும்....*
*வாழ்க வளமுடன் என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை.*
மந்திரம்,உச்சாடனம்,அபிசேகம்,ஆராதனை எல்லாமே கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான் என இந்துமதம் மறை பொருளாக உணர்த்தி வருகிறது..
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.
காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு.
நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.
சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்
சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது...
பல பாவங்களையும்,தோசங்களையும் போக்குகிறது பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்..
ஜோதிடம், ராசிபலன், சாஸ்திரம்,மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவர்.
பெரியோர், மகான்கள், சதனை புரிந்தோர், மகான்களை சந்தித்தோர், நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்.

உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்

நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.
சூரியன் :-
சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.
வியாழன் :-
உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.
சந்திரன் :-
சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.
செவ்வாய் :-
செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.
புதன் :-
உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
சுக்கிரன் :-
செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.
சனி :-
நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.
ராகு - கேது :-
ராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

Sunday, December 23, 2018

*திருப்பதி விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!*

*திருப்பதி விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!*

*திருச்செந்தூர் RPS.பொன்ராஜ்*
யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்…
*இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.*
*சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.*
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..
ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.
பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
*வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.*
வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..
செல்வம் மலை போல குவியும்.
*உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.*
*அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.*
சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.
*வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.*
இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.
கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.
குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.
*நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.*
நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.
*திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.*
திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.
*அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..*
அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்
அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .
மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்…இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.
*அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?*
மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.
*வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.*
ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் ”
ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே!
*பொதுப் பொருள்:*
திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
*ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் ” சரணம் ” சரணம்…*

THIRUMALAI THIRUPATHI:PRAPANCHA RAGASIYANGAL - UDAYAM PUTHITHU 11.01.201...

சனி கிரகத்தின் பாதிப்பு நீங்க - பரிகாரம்...!!!

சனி பகவான் தரும் கஷ்டங்களில் இருந்து விடுபட – ஒரு சிறந்த பரிகாரம்...!!!

திருவாதிரை நோன்பு கடைபிடிக்கும் முறை How to worship and follow Thiruvad...

ஆடல் வல்லானின் ஆருத்ரா தரிசனம் - Smt Sindhujha Chandramouli

Friday, December 21, 2018

48 நாள் ஒரு மண்டலம் என்பதின் விஞ்ஞான ரீதியான விளக்கம்.

அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) ? அந்த கணக்கு தெரியுமா?
இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் அல்ல.
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ?
அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.
அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ?
அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர். .
நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ?
அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.
ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும
எப்படி என்கிறீர்களா...? இதோ இப்படி
கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48
எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள்.
அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத செயல்களும் கை கூடுகின்றன.
நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
இன்னும் சந்தேகமா ?
ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! அறிவியல் உண்மை விளங்கும்.

Thursday, December 20, 2018

சர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்! | Temple For Diabetes!

108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் !| An Unbelievable Temple!

Thiruvathirai Kali | திருவாதிரை களி

திருவாதிரை விரதம் இப்படி இருந்து பாருங்கள் இந்த வருடம்

திருவாதிரை அன்று விரதம் இருப்பது எப்படி மேலும் ஆருத்ரா தரிசனம் தோன்றிய கதை

Sunday, December 16, 2018

கேட்க கேட்க திகட்டாத குரலில் ,திருப்பள்ளியெழுச்சி, திருவாசகம், Thiruvasagam

திருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது

https://www.shaivam.org/to-know/thiruvasagam-music-thiruthani-swaminathan

திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


திருவாதிரை கலி செய்யும் முறை:


பச்சரிசி - 250கிராம் , வெல்லம்-350 கிராம், பச்சை பயிறு - 100 கிராம், ஏலக்காய்-3; தேங்காய் திருவல்-1 மூடி ; முந்திரி பயிறு - 5 , நெய் - 3 ஸ்பூன் பச்சரிசியையும் பச்சை பயிரையும் நன்றாக கழுவி காய வைத்து உலர்த்தி கொள்ள வேண்டும். இரண்டையும் தனி தனியாக வறுத்து ஆறிய பின் மிக்க்சியில் ரவை பதத்துக்கு அரைத்து கொள்ள வேண்டும். அகலமான கடாயீல் 5 டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதித்ததும் பொடி செய்து வைத்த வெல்லத்தை அதில் கரைய விட வேண்டும். கொதிக்கும் பொது அதில் பச்சரிசி மாவு மற்றும் பச்சைபயிறு சிறிது சிறுதாக சேர்த்து நன்கு கிண்ட வேண்டும். ஒரே அடியாக போட்டால் கெட்டி பட்டு விடும். வெந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் நெய்யில் வருத்த முந்திரி ஆகியற்றை போட்டு இறக்கினால் பரமனுக்கு பிரியமான திருவாதிரை கலி தயார். (சிலர் பச்சரிசி வறுக்காமல் தண்ணீரில் ஊற வைத்து பின் உலர்த்தி அதை மிக்க்சியில் அரைத்து வெல்ல பாகில் சேர்ப்பர் . பச்சை பயிரை வறுத்து முழுதாகவே பாகில் சேர்ப்பதும் உண்டு ). பரமனுக்கு உரிய பதிகங்களை பாடிக்கொண்டு , செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் . முதல் முதல் சேந்தனாரின் மனைவி தான் சிவன் அடியாராக வந்த ஈசனுக்கு இந்த கலி செய்து படைத்தார்கள் அது முதல் இவ்வழக்கம் உள்ளது. மறுநாள் சேந்தனார் தில்லையில் பரமனை தரிசித்த பொது அவரது திரு உதட்டில் கலி இருக்க கண்டு நெகிழ்ந்து போனார்.நாமும் இறை அன்புடன் கலி செய்து படைத்தது அடியார்களுக்கு பிரசாதமாக தருவோம். பரமன் அவசியம் ஏற்பார். திருவாதிரை கலி பிரசாதமாக உட்கொள்பவர்கள் நரகம் செல மாட்டார்கள் என்பது மரபு. அதனால் தான் "திருவாதிரைக்கு ஒரு வாய் கலி" என்ற மொழி ஏற்பட்டது. அதிகாலை எழுந்து இல்லத்தில் எழுந்தருளி உள்ள பரமனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, திருவெம்பாவை. திருப்பள்ளி எழுச்சி பாடி, கலி நிவேதனம் செய்வோம். அனந்த நடராஜ பெருமானின் திருவருளால் நம் வாழ்விலும் ஆனந்தம் பெருகும்.
 
 
திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

F

Sunday, December 9, 2018

அபிஷேக_நீரின்_மகிமைகள்

தமிழ்நாட்டில் இன்றைக்கு 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களை மட்டுமே இப்படிப்பட்ட பட்டியலில் சேர்த்திருக்கின்றோம்;மற்ற புதிய கோவில்களை சேர்த்தால் 10,00,000 க்கும் மேலாக இருக்கும்;

தினமும் இந்த ஆலயங்களில் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்;பெண்ணின் பிறப்பு உறுப்பு போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;

சைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது)யில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும்,மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;

இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம்,இளநீர்,பால்,தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது;இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில்,இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)

ஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன்படுத்தினாலும்,பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதிநீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்;அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடலாம்;

ஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி,எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்;

நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள் நமக்கு உபதேசம் செய்ததை இங்கே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளுக்கு இக்கணத்தில் நாம் நன்றிகள் தெரிவித்துவிட்டு இந்த ஆன்மீக உபதேசத்தை பின்பற்றிட ஆரம்பிப்பதுதான் முறை!


பரணி நட்சத்திரம்,மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத்தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்;

வீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு,அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்;ஒருவேளை,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால்,இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்;அப்படி இறந்த பின்னர் கூட,அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;

இவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;

அசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்;கெட்ட கனவுகள் வராது;கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;

பரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;

கார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்;பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;

ரோகிணி;குழந்தைகளின் பயம் நீங்கும்;அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்;அதனாலேயே,மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத்தரேயரை மகனாகப் பெற்றாள்;

மிருகசீரிடம்:பேய்/கருப்பு சேஷ்டைகள் நீங்கும்;

திருவாதிரை:இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;

புனர்பூசம்:திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்;திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;

பூசம்:பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;

ஆயில்யம்:ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;

மகம்:இயற்கையான முறையில் உயிர் பிரியும்;விபத்தினால் உயிர் பிரியாது;ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;

பூரம்:வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;

உத்திரம்:கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;

அஸ்தம்;ருது தோஷங்கள் விலகிவிடும்;எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;

சித்திரை:அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;

சுவாதி:புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;

விசாகம்;கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்;தொழில் அமோகமாக இருக்கும்;

அனுஷம்:திருமணத் தடை நீங்கும்;நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;

கேட்டை:பரிட்சை காய்ச்சல்,போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;

மூலம் :வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;

பூராடம்:கஜானாக்களிலும்,எழுதுகோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்;பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;

உத்திராடம்:விஷகடிகள் இராது;தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;

திருவோணம்;உணவுப்பஞ்சம் வராது;

அவிட்டம்:கல்லூரி/அலுவலகம் போன்ற இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்;பதவிக்கு ஆபத்து வராது;

சதயம்:எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்;எதிரிகளின் துன்பம் குறையும்;

பூரட்டாதி:விமானப் பயணமோ,வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது;விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;

உத்திரட்டாதி:சிவில்,ஆர்கிடெக்,சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;

ரேவதி;தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்;

குறிப்பு:விநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
சிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;
பழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;

உங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறிது அருந்தலாம்;

இது முடியாதவர்கள்,தினமும் காலையில் குளித்துவிட்டு,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு,வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;

கோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்துவிடுகின்றார்;பிறகு,ஒரு போதும் பிரிவதில்லை;இதையே,ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

நன்றி: மஹாவில்வம்

திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

F

Friday, December 7, 2018

*பல ஜென்மத்து பாவங்கள் தீர அகத்தியர் கர்ம காண்டத்தில் அகத்தியர் பெருமான் உலகுக்கு சொன்ன ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம்*

மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே *பித்ரு வழி பாவங்கள்தான்,* இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் அரங்கேறும், அந்த துன்பத்தை உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் பாவத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும். பித்ரு சாபத்தை நீக்கவும். *மீன்களுக்கு உணவாக பொறி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொறியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும்,* என அறிந்து கொள்க .
நாம் செய்த ஒரு பாவத்தை ஆரம்பத்திலேயே போக்காத போது அந்த ஒரே பாவம் மட்டும் நம்மிடம் இருக்காது , ஒரு பாவம் விலக்காத போது அந்த பாவம் நம்முள் இருந்து தினம் தினம் ஒரு புது பாவத்தை செய்ய வைக்கும், இது நமக்கே தெரியாது , அதனால்தான் பாவிகள் கடைசிவரையுமே பாவிகளாக பலரும் இருக்கிறார்கள், இடைபட்ட வாழ்வில் ஒன்றோ. நூறோ தர்மத்தை செய்து விட்டு நான் எவ்வளவோ தர்மம் செய்கிறேன், என் கஷ்டம் மட்டும் போகமாட்டேங்குது என புலம்புவார்கள், இவர்கள் கஷ்டம் தீராததிற்கு மேற்கண்ட தினசரி பாவ கணக்கே காரணமாகும்,
எனவே நாம் செய்யும் தர்மம் அளவு அதிகரித்தால் தான் இந்த பித்ரு ஜென்ம பாவம் கழியும் எனவே இதை அறிந்த நம் முன்னோர்கள் *ஆலயத்தில் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும்* உண்டாக்கினார்கள், நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவி (அ) குளித்து பொறி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் *எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும்,* மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள் .
உணவே இல்லாமல் தவிக்கும் கிணறு. குட்டை. ஏரி. ஆறு போன்ற இடத்தில் உள்ள மீன்களுக்கும் பொறி உணவு கொடுத்தால் அவ்வளவும் தர்மம் உடனே வேலை செய்யும், யார் செய்கிறார்களோ இல்லையோ மாந்திரீக அருள் வாக்கு செயலில் ஈடுபடக்கூடியவர்கள் அவசியம் செய்ய வேண்டும் . காரணம் இறைக்கடமையில் குறுக்கிடக் கூடியவர்கள் ஆன்மீகவாதிகள், ஊர் பாவத்தை சுமக்கும் துர்யோகம் உள்ளவரும் ஆன்மீகவாதிகள்தான் , பிறக்கும் போதே அதிக பித்ரு பரம்பரை பாவத்தில் பிறக்க கூடியவரும் ஆன்மீகவாதிகள் தான், எனவே அவசியம் நீங்கள் தான்அதிகம் தர்மம் செய்ய வேண்டும், தர்மத்தின் அளவை பொறுத்து எந்த பாவமும் உங்களை அண்டாமல் காக்கும்,
*தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை* எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய உகந்த நாளாகும், அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை. பௌர்ணமி. ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள். ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .
உங்களுக்கு பெரும் சந்தேகம் உண்டாகும், நாம் மீனுக்கு உணவு கொடுத்து உதவுகிறோம் சரி, அது வளர்ந்த பின் அதை கொன்று சாப்பிடுகிறார்களே அது பாவம் இல்லையா என்று கேட்க தோன்றும், இந்த கேள்வி நியாயமானது தான், உயிரை வளர்ப்பது தர்மம் இந்த வாய்ப்பு பாவமற்றவருக்கும் துன்ப விடுதலை உள்ளவருக்கும் உண்டாகும் . உயிர்களை கொல்வது பாவம், பாவகணக்கு யாருக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அவர்களே அந்த செயலை செய்து கொண்டிருப்பார்கள், எனவே நம் செயல் தர்மம் செய்து உயிரை வளர்ப்பதாக இருக்கட்டும், அத்தனை உயிர்களுக்கும் இது பொருந்தும் .மரங்களுக்கும் பொருந்தும்,
எனவே தான் சித்தர்கள் ஒரு உயிரை கொன்றாலும் பல நன்மைக்கு பயன்படுத்தினார்கள், மூலிகை என்னும் உயிரை கொல்லும் முன் சாப விமோசனம். செய்தார்கள், பாவ விமோசன மந்திரம் கூறி காப்பு கட்டி இறைவனை வேண்டி அதன் உயிர் அதன் உடலிலேயே இருக்க வேண்டும் என வேண்டி எடுத்து பின்பு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினார்கள், ஒன்றை கொன்றாலும். பல உயிர் பிழைக்க மருந்தாகவும் பயன்படுத்தினார்கள், எந்த உயிரை கொன்றாலும் தவறு என்பதை உணர்ந்து பாவ புண்ணிய கணக்கை உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள் எனவே நாம் செய்யும் தர்மம் மூலமே அவர்களை சாந்தப்படுத்த முடியும்.
- *சித்தர்களின் குரல் shiva shangar*

Monday, December 3, 2018

கடனை அடைக்க உதவும் சில தந்திர ரகசியங்கள் |Tips to settle Loans faster in...

அருள்மிகு காமாட்சி திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி


கடந்த வருஷம் மட்டுமே சுமார் 600 பேர் வரை ஏலக்காய் மாலை சாற்றி, திருமண பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதில் டில்லி, சென்னை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் உண்டு. அம்பாள், மிகுந்த வரப்பிரசாதி, கேட்டதையெல்லாம் தந்தருளக்கூடியவள் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அம்பாளின் அனுக்கிரகத்தால், விரைவில் திருமணம் நடந்தேறியதும் மாதந்தோறும் மாலையில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு ஹோமத்தில் அந்த மாலையைச் சமர்ப்பித்துவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு பூஜை செய்யும் பழக்கத்தைக் கொண்டு வருவது நல்ல விஷயம். அதுவும் கோயில் கருவறையில் இருக்கிற மூலவிக்கிரத்துக்கு பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என்று குழந்தைகளே செய்யச் செய்ய அதில் ஆர்வமும், பிரார்த்தனையில் இறைபக்தி உணர்வும் அவர்களிடம் மேலோங்கும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
சிறப்பம்சங்கள் :
குழந்தைகளை அர்ச்சகர்களைப்போல, குருக்களைப்போல அருகில் நின்று அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள்.