Monday, May 20, 2019

துர்க்கை அம்மனை வழிப்பட ராகு காலம் உகந்தது ஏன் தெரியுமா?


கோடான கோடி நன்றிகள்
துர்க்கை அம்மனை வழிப்பட ராகு காலம் உகந்தது ஏன் தெரியுமா?
பொதுவாக பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற விளக்கேற்றி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழிபடுகிறார்கள்.
செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
பூஜிக்க உகந்த காலம்
துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும். துர்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளுக்கு உகந்தவையே.
மேலும் அவளுக்கே உரித்தான அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.
காயத்திரி
(சகல காரியங்கள் வெற்றி அடைய)
ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்
துர்கை (ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.
இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.
வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும்.

Friday, May 17, 2019

வன்னிமரத்தின்_சிறப்பு

✰ வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்க்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.
✰ வன்னிமரம் பூக்காது. காய் காய்க்காது. இது ஒரு அற்புதமான மரம். இது வெற்றியை தேடி தரும் மரம். இது சிவாலயங்களில் இருக்கும். நம்மை ஆளும் உமாதேவி வன்னி மரத்தடியில் தான் வாசம் செய்கிறாள்.
✰ வன்னி மரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பு வாய்ந்தது. பால், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு மறைந்து, குடும்பம் ஒற்றுமை பெறும். குழந்தை பேறு கிட்டும். வன்னி மரத்து விநாயகரை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
✰ ராமபிரான், இராவணுடன் போருக்கு செல்லும் முன், வன்னி மரத்தை வணங்கி விட்டு, சென்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. வன்னிமரம் சிவ பெருமானின் அம்சம். இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும்.
✰ வில்வத்திற்கு அடுத்தது வன்னிமரம் தான் சிவனுக்கு உரியது. வில்வ மரம் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த அளவுக்கு வன்னி மரமும் சிறப்பு வாய்ந்தது. சிவனுக்கு பிடித்த மரங்களில் வன்னி மரமும் ஒன்று.
✰ வன்னிமர இலையை வடமொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள். இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும். விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.

Thursday, May 16, 2019

நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.
மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே

கேட்கும் போதே சிவனருளை அள்ளி வழங்கும் பாடல்

அப்பர் தேவாரம் - சொற்றுனை வேதியன்

Thursday, May 9, 2019

செல்வம் பெருக சில குறிப்புகள்!

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.

பவானி சங்கமேசுவரர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு ... கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.கோடான கோடி நன்றிகள்


https://brseetha.blogspot.com/2018/05/blog-post_94.html

அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்கோடான கோடி நன்றிகள்


http://mkselvan.blogspot.com/2018/04/blog-post_24.html

ஸ்ரீ நாமராமாயணம்ஸ்ரீ நாமராமாயணம்
ஓம் ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதஸத்ருக்ந ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமச்சந்த்ரபரப்ரஹ்மனே நம:


பாலகாண்டம்


1 .ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
2 .காலாத் மக பரமேஸ்வர ராம்
3 .ஸேஷ தல்ப ஸுக நித்ரித ராம்
4. ப்ரஹ்மாத் யமரப் ரார்த்தித ராம்
5. சண்டகிரண குலமண்டந ராம்
6. ஸ்ரீமத் தஸரத நந்தந ராம்
7. கௌஸல்யா ஸுகவர்த்தந ராம்
8. விஸ்வாமித்ர ப்ரியதந ராம்
9.கோர தாடகா காதக ராம்
10. மாரீசாதிநி பாதக ராம்
11. கௌஸிகமக ஸம்ரக்ஷக ராம்
12. ஸ்ரீ மதஹல்யோத்தாரக ராம்
13. கௌதம முனி ஸம் பூஜித ராம்
14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம்
15. நாவி கதா விதம் ம்ருது பத ராம்
16. மிதிலா புர ஜன மோஹக ராம்
17. விதேஹ மாநஸ ரஞ்ஜக ராம்
18.த்ர்யம்பக கார்முக பஞ்ஜக ராம்
19.ஸீதார்ப்பித வரமாலிக ராம்
20.க்ருதவை வாஹிக கௌதுக ராம்
21. பார்க்கவ தர்ப்ப விநாஸக ராம்
22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம்


ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்


அயோத்யா காண்டம்


23. அகணித குணகண பூஷித ராம்
24. அவநீத நயா காமித ராம்
25. ராகா சந்த்ர ஸமாநந ராம்
26. பித்ரு வாக்யா ஸ்ரித காநந ராம்
27. ப்ரிய குஹ விநி வேதிதபத ராம்
28. தத்க்ஷாலித நிஜ ம்ருது பத ராம்
29. பரத்வாஜ முகா நந்தக ராம்
30. சித்ரா கூடாத்ரி நிகேதந ராம்
31. தஸரத ஸந்தத சிந்தித ராம்
32. கைகேயீ தந யார்த்தித ராம்
33. விரசித நிஜ பித்ரு கர்மக ராம்
34. பரதார்ப்பித நிஜ பாதுக ராம்


ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்


ஆரண்ய காண்டம்


35. தண்டகா வந ஜந பாவந ராம்
36. துஷ்ட விராத விநாஸத ராம்
37. ஸரபங்க ஸுதீக்ஷ்ணார்ச்சித ராம்
38. அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம்
39. க்ருத்ராதி பஸம் ஸேவித ராம்
40. பஞ்சவடி தட ஸுஸ்தித ராம்
41. ஸுர்ப்பண கார்த்தி விதாயக ராம்
42. கரதூ ஷணமுக ஸூதக ராம்
43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம்
44. மாரீசார்த்திக் ருதாஸுக ராம்
45. விநஷ்ட ஸீதாந் வேஷக ராம்
46. க்ருத்ராதி பகதி தாயக ராம்
47. ஸபரி தத்த பலாஸந ராம்
48. கபந்த பாஹூச் சேதந ராம்


ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்


கிஷ்கிந்தா காண்டம்


49.ஹனுமத் ஸேவித நிஜபத ராம்
50.நத ஸுக்ரீவா பீஷ்டத ராம்
51.கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
52.வானர தூத ப்ரேஷக ராம்
53.ஹிதகர லக்ஷ்மண ஸம்யூத ராம்


ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்


ஸுந்தர காண்டம்


54. கபிவர ஸந்தத ஸம்ஸ்ம்ருத ராம்
55. தத்கதி விக்னத் வம்ஸக ராம்
56. ஸீதா ப்ராணா தாரக ராம்
57. துஷ்டத ஸாதந தூஷித ராம்
58. ஸிஷ்ட ஹநூமத் பூஷித ராம்
59. ஸீதா வேதித காகாவந ராம்
60. க்ரூத சூடாமணி தர்ஸந ராம்
61. கபிவர வஸநா ஸ்வாஸித ராம்


ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்


யுத்த காண்டம்


62. ராவண நிதநப் ரஸ்தித ராம்
63. வாநர சைன்ய ஸமாவ்ரூத ராம்
64. ஸோஷித ஸரீதி ஸார்த்தித ராம்
65. விபீஷணா பயதாயக ராம்
66. பர்வத ஸேது நிபந்தக ராம்
67. கும்பகர்ண ஸிரஸ் சேதக ராம்
68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
69. அஹி மஹி ராவண சாரண ராம்
70. ஸம்ஹ்ரூத தஸமுக ராவண ராம்
71. விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம்
72. கஸ்தித தஸரத வீக்ஷித ராம்
73. ஸீதா தர்ஸந மோதித ராம்
74. அபிஷிக்த விபீஷண நத ராம்
75. புஷ்பக யாநா ரோஹண ராம்
76. பரத்வா ஜாபி நிஷேவண ராம்
77. பரத ப்ராண ப்ரியகர ராம்
78. ஸாகே தபுரீ பூஷண ராம்
79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம்
80. ரத்நல ஸத்பீடா ஸ்தித ராம்
81. பட்டாபிஷேகா லங்க்ருத ராம்
82. பார்த்திவ குல ஸம்மாநித ராம்
83. விபீஷணார்ப் பித ரங்கக ராம்
84. கீஸகுலா நுக்ரஹ கர ராம்
85. ஸகல ஜீவ ஸம்ரக்ஷக ராம்
86. ஸமஸ்த லோகா தாரக ராம்


ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்


உத்தர காண்டம்


87. ஆகத முநிகண ஸம்ஸ்துத ராம்
88. விஸ்ரூத தஸகண்டோத் பவ ராம்
89. ஸீதாலிங்கந நிர்வ்ரூத ராம்
90. நீதி ஸுரக்ஷித ஜநபத ராம்
91. விபிநத் யாஜித ஜநகஜ ராம்
92. காரித லவணா ஸுரவத ராம்
93. ஸ்வர்க்க தஸம்புக ஸம்ஸ்துத ராம்
94. ஸ்வதநய குஸ லவ நந்தித ராம்
95. அஸ்வமேதக்ரது தீக்ஷித ராம்
96. காலா வேதித ஸுரபதி ராம்
97. அயோத்யக ஜந முக்தித ராம்
98. விதிமுக விபுதா நந்தக ராம்
99. தேஜோமய நிஜ ரூபக ராம்
100. ஸம்ஸ்ரூதி பந்த விமோசக ராம்
101. தர்ம ஸ்தாபந தத்பர ராம்
102. பக்தி பராயண முக்தித ராம்
103. ஸர்வ சராசர பாலக ராம்
104. ஸர்வ பவாமய வாரக ராம்
105. வைகுண்டாலய ஸம்ஸ்தித ராம்
106. நித்யாநந்த பத ஸ்தித ராம்


107. ராம ராம ஜெய ராஜா ராம்
108. ராம ராம ஜெய ஸீதா ராம்


// இதி ஸ்ரீ நாம ராமாயணம் ஸம்பூர்ணம் //http://shribalasubiksharam.blogspot.com/2018/08/blog-post_20.html

வாழ்வில் எவ்வளவு கொடிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகத் தீர, நரசிம்மரை சுவாதியன்று வணங்கினால் போதும்..........

வாழ்வில் எவ்வளவு கொடிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகத் தீர, நரசிம்மரை சுவாதியன்று வணங்கினால் போதும்..........
பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுக்கு அதிபதி "வாயு'. வேகமாகச் செல்வதில் நிகரற்றது காற்று. "வாயுவேகம் மனோவேகம்' என்று சொல்வர்.
இதயத்தில் எதை நினைத்தாலும், அந்தக் கணமே மனம் அங்கு சென்றுவிடும். ஆஞ்சநேயருக்கு "மாருதி' என்ற பெயருண்டு. இதற்கு "வாயுவின் பிள்ளை' என்று பொருள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு அதிதேவதை உண்டு.
இதில் சுவாதிக்குரியவராக இருப்பவர் வாயு. பிரகலாதனுக்கு ஆபத்து நேர்ந்த சமயத்தில் இரண்யனிடம் இருந்து காப்பதற்காக புயலைப் போல பறந்து வந்தவர் நரசிம்மர்.
எனவே அவருக்குரிய நட்சத்திரமாகவும் சுவாதி அமைந்தது. வாழ்வில் எவ்வளவு கொடிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகத் தீர, நரசிம்மரை சுவாதியன்று வணங்கினால் போதும். அருள்புரிய பறந்து வருவார்...
உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும் ஜவந்தம் சரவதோ முகம். பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்..

Saturday, May 4, 2019

'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!' என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார்.

'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!' என்று சொன்னவர் யார் தெரியுமா?
திருமுருக கிருபானந்த வாரியார்.

அதற்கு என்ன அர்த்தம்?
காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
யார் இந்த பைரவர்?
சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது.
அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் என்பது, உங்களுக்கு தெரியுமா?
அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?
இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தரும் ஆலய வரலாறை இப்போது பர்க்கலாமா?
அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார்.
அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவரகளையெல்லாம் அடித்து துரத்தினான்.
அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர்.
உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார்.
விடங்கி முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார்.
நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர்.
தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.
அப்புறம் என்ன? முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்! ஒன்றரை லட்சம் டன் வேகம். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன்.
காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார்.
விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார்.
விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது.
அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான் என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.
எது உண்மையாக இருந்தாலும் போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும். அவற்றின் பெயர் என்ன தெரியுமா? ரத்தக்காடு! சாம்பல் காடு! களரிக்காடு!
காலங்கள் கடந்தன. வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல், விடங்கி முனிவிர் எழுப்பிய சிற்றாலயமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பூமிக்குள் மறைந்த காலபைரவர் தனக்கு மாபெரும் ஆலயம் எழுப்ப, மிளகை பயறாக்கிய அற்புத சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் குண்டடம் ஆலயத்தை வலம் வருவோமா?
எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்!
ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.
ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன.
இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.
தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.
அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன. இப்போது மிளகைப் பயறாக்கிய கால பைரவரின் கதை!
மிளகு:
மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.
அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அப்படி ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார்.
அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். 'ஐயா, எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள்' என்றார்.
அந்த வியாபாரி, இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு, 'பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு' என்று பொய் சொன்னார்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.
கொங்கு வடுகநாதா!
மறுநாள் வியாபாரி, மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு, ஏதோ ஒரு சந்தேகம் வந்து, பாண்டிய மன்னன், மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார்.
வீரர்கள் அப்படியே செய்ய, எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள்!
சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
வியாபாரி கதறினான், பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார்.
அதையெல்லாம் நம்பும் நிலையிலா மன்னன் இருந்தான்? 'பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள்' என்றான் கோபத்துடன்.
கதறினான் வியாபாரி. 'கொங்கு வடுகநாதா! என்னை மன்னித்துவிடு' என்று புலம்பினான். அழுதான். அவனது அழுகை குரல் பைரவருக்குக் கேட்டது!
எல்லா நலனும் தருவேன்!
நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். 'நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு!' என்றார்.
மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான்.
'என்னுடைய பெண், பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன், நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன்' என்றான் மன்னன்.
வடுகநாதர் புன்னகைத்தார்.
அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள், தந்தையே! என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும், தந்தையை நோக்கி நடந்து வந்தான்!
பரவசமடைந்தான் பாண்டிய மன்னன், 'என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே, நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று துதித்தான்.
வடுக பைரவர் புன்னகைத்தார். 'நானும், விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக. வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து, மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன்' என்று சொல்லி மறைந்தார் பைரவர்.
அதுபோலவே, கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது, பயறு பழையபடி, மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, குண்டடம் சென்றான். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட, விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும், விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி், கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். மன்னன் மட்டுமல்ல, யார் கால பைரவரை மனமார வேண்டி மிளகு சாற்றி வழிபட்டாலும் அவர் எல்லா நன்மைகளையும் அருளுகிறார் என்பது கண்கூடு. அது மட்டுமல்ல, காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டாலே போதும் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.
சரி, உங்கள் குறைகள் எல்லாம் தீர நீங்கள் எப்போது கொங்கு நாட்டுக் காசியான குண்டடம் சென்று கொங்கு கால பைரவ வடுகநாதரை தரிசனம் செய்யப் போகிறீர்கள்?
ஒரு விஷயம் மறக்காமல் மிளகு எடுத்துச் செல்லுங்கள். யாராவது உங்களிடம் கொஞ்சம் மிளகு கேட்டால் கொடுத்துவிடுங்கள். ஜாக்கிரதை, ஒரு வேளை மிளகு கேட்பவர் காலபைரவராகவும் இருக்கக்கூடும்.
எங்கே இருக்கிறது:
கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது.
கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.
ஆலய நேரம்:
காலை 7 மணி முதல் 1 மணி வரை; மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
தொலைபேசி: 04258-263301
என்ன சிறப்பு:
காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர்.

மந்திர ஒலிகளின் விந்தைகள்.

மந்திர ஒலிகளின் விந்தைகள்.
-------------------------------------------------------
தனது பலம் என்ன என்பதை தானே அறியாதவர் ஆஞ்சநேயர். அதுபோல நமது மொழியின் சிறப்புக்களை நாம் அறிந்து கொண்டதில்லை. அதை வெளிநாட்டவர் வந்து சொன்னால்தான் நாம் நம்புவோம். ஒரு சிறிய உதாரணம். புஜாகோடி ஜாசமஸ்காரம் என்றொரு கணித முறை. இது ஆதிகாலந்தொட்டு நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதன் சிறப்பை நம்மவர்கள் அறிந்தபாடில்லை. அதேசமயம் அதனை வெளிநாட்டவர் Trigonometry என்ற பெயரில் நம்மிடத்தில் அறிமுகப்படுத்தியபோது ஆஹா ஓஹோ என்று பாராட்டுகிறோம். அதுபோல் நமது மொழியைப் படித்தால் அறிவாளியாக முடியாது.வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று பல அறிவுஜீவிகள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த மொழிதான் மிகுந்த ஆற்றல் கொண்டது என ஒரு ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். அவர் யார் தெரியுமா? சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒலியலை ஆய்வு விஞ்ஞானி டாக்டர். ஹான்ஸ் ஜென்னி தான் அவர். இவர் ஒலி அலை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு 1967ம் ஆண்டில் சைமேட்டிக்ஸ்-தி ஸ்டடி ஆப் வேப்பினாமினா என்ற நூலை வெளியிட்டார். பத்து வருட காலம் கிளிசரின், ஜெல், பாதரசம், இரும்பு, பவுடர் போன்ற பொருட்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை முறையாக ஆய்வுசெய்து குறிப்பெடுத்தார். குறைந்த அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவதைக் கண்டு அதிசயித்தார். அதேசமயம் அதிக அதிர்வுள்ள ஒலி அலைகள் சிக்கலான படத்தை உருவாக்கின. இதைத் தொடர்ந்து இந்துமதம் சித்தரிக்கும் பல்வேறு யந்திரங்கள் மீது இவரது கவனம் திரும்பியது.
மந்திரங்களும் யந்திரங்களும்
-------------------------------------------------------
வேதங்கள் கூறும் மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி உண்டு. இதேபோல் ஒவ்வொரு யந்திரமும் ஒருவித ஜியாமெட்ரி உருவமாக அமைக்கப்படுவதோடு குறிப்பிட்ட யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய குறிப்பிட்ட மந்திரம் உச்சரிக்கப்பட்டு சக்தி ஊட்டப்படுகிறது. குறிப்பிட்ட மந்திரம் ஒன்றை உச்சரிக்கச் செய்தபோது குறிப்பிட்ட யந்திரத்தின் உருவம் உருவானதைப் பார்த்து ஹான்ஸ் ஜென்னி பிரமித்துப்போனார். பிரணவ மந்திரமான ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சோதனை செய்தார். அப்போது ஓ என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும்போது ஸ்ரீயந்திரம் உருவானது. நவீன உடலியல் வல்லுனர்கள், வானியல் மற்றும் இயற்பியல் விஞ்ஞானிகள், யோகிகள் முதலியோர் நமது உடலானது அணுத்துகள் அதிர்வுகளின் அமைப்புக்களே என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். உடலே அதிர்வுகளின் கூட்டு என்னும்போது நம்மைச்சுற்றியுள்ள ஒலி அலைகள் நம்மைப் பாதிக்காமல் இருக்குமா? இவற்றை எல்லாம் ஏராளமான பரிசோதனைகள் மூலம் ஆய்வுசெய்த அவர் ஒலி அலையின் அடிப்படையில் ஒவ்வொரு யந்திரத்திற்கும் ஒரு வடிவ அல்லது உருவ ஆற்றல் உள்ளது என்பதை அறிந்தார். அதாவது ஒவ்வொரு வடிவமும் ஒரு சக்தியை வெளியிடுகிறது. இதன் அடிப்படையிலேயே தேவைக்குத் தகுந்தவாறு யந்திரங்களை ஒலியின் அடிப்படையில் நமது பண்டைய ரிஷிகள் அமைத்தனர். யாகசாலை குண்டங்களும் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட திசையில் அமைக்கப்பட்டதும் ஒலியின் ஆற்றலை உணர்ந்து அமைக்கப்பட்டவையே. மேலும் பிரமிடுகள் அமைக்கப்பட்டதும் பிரபஞ்சத்தின் ஒலி அலைகளை உள்வாங்குவதற்காகவே உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படு கிறது. நமது பண்டைய இலக்கியங்களில் அறம்பாடுதல் என்ற ஒன்று உண்டு. எதிரியை அழிப்பதற்கு புலவர்கள் மூலம் அறம்பாடச் செய்வார்கள். அவ்வாறு அறம்பாடப்படும் பாட்டுடைத்தலைவன் அப்பாடல்களின் எதிர்மறை ஒலி அதிர்வுகளால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவுவானாம். அந்த முறையில்தான் நந்திக்கலம்பகத்தைப் பாடி நந்திவர்மனை அழித்ததாக வரலாறு உண்டு. ஹான்ஸ் ஜென்னி தனது சோதனைகளில் ஒரு தகட்டின் மீது மணலைப் பரப்பி சமஸ்கிருதம் மற்றும் ஹீப்ரு உயிர் எழுத்துக்களை உச்சரித்தபோது அந்தத் தகட்டின் மீதுள்ள மணலானது அந்த எழுத்து வடிவை அடைந்ததைக் கண்டு அதிசயித்தார். ஆனால் பின்னாளில் தோன்றிய மொழிகளில் இந்தச் சிறப்பை அவர் காணவில்லை. மேற்கண்ட மொழிகளின் ஒலிகள், ஒலிச் சேர்க்கைகள் அவை கூறும் பொருளை உருவாக்க வல்லவையா? பௌதிக உலகில் தனது செல்வாக்கை இந்த மொழிகளின் ஒலி அலைகள் ஏற்படுத்துகின்றனவா? இவை கூறும் ஸ்தோத்திரங்கள் அதில் சொல்லியிருப்பது போல் மனித நோய்களைக் குணப் படுத்துமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இவரது ஆய்வு பதில் தருகிறது.
திரவம் பூசப்பட்ட ஒரு தகடை அதிர்வுக்குள்ளாக்கிச் சாய்த்தபோது புவி ஈர்ப்புவிசைக் கொள்கைப்படி அந்தத் திரவம் கீழே வடிந்து விழாமல் வெவ்வேறு வடிவங்களைக் காட்ட ஆரம்பித்தது. அதிர்வது நின்றவுடன் திரவம் கீழே வடிய ஆரம்பித்தது. இச்சோதனையின் மூலம் அதிர்வுகள் புவியீர்ப்பு விசையைத் தடுக்கும் வல்லமை கொண்டவை என்பதைக் கண்டு பிடித்து அறிவித்தார். அவரது சோதனையின்போது எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் வெளியானதும் உலகமே பரபரப்புக்கு உள்ளானது. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு அதிர்வு உண்டென்றும் மனிதனின் பரிணாமமே இந்த அதிர்வின் அடிப்படையில் எழுந்ததுதான் என்றும் அவர் தனது ஆய்வின் முடிவை அறிவித்தார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உயர்வை விளக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தினார். மனிதக் காதுகளை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் ஒலி அதிர்வின் நுட்பங்களையும் ரகசியங்களையும் அறிய முடியும் என்கிறார் டாக்டர்.ஹான்ஸ் ஜென்னி. இத்துடன் ஒரு வலைத்தளத்திற்கான லிங்க் கொடுத்திருக்கிறேன். அதில் ஒலி அதிர்வினால் எப்படி படம்உருவாகிறது என்ற வீடியோவை நீங்கள் பார்க்கலாம்.

இறப்புத் தீட்டு உண்டா ?

 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

 

இறப்பு பிறப்புத் தீட்டுகள் என்றால் என்ன?
இல்லத்தில் மரணம் சம்பவித்தால் ஒரு வருடம் கோயிலுக்குப் போகக்  கூடாதா? சென்றால் விபரீதங்கள் ஏற்படுமா?
“எங்கள் வீட்டில் … இன்னார் இறந்து விட்டார். ஒரு வருடத்திற்கு எந்தப்  பண்டிகையும் கிடையாது, கோயிலுக்கும் செல்லக் கூடாது!” மிகவும்  சர்வ சாதாரணமாக அனைவரும் சொல்கின்ற பதில் இது!
ஏதோ நீத்தார் நினைவாக மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருப்பது  போலவும், நீத்தார் சடங்குகளை நன்கு சிரத்தையுடன் தினந்தோறும்  நடத்துவது போலவும் அமாவாசை மற்றும் மாதாந்திர/பட்ச சடங்கு  வழிபாடுகளை அடக்கத்துடன் கைக்கொள்வது போலவும் மிகவும் ஆசார,  அனுஷ்டானத்துடன் பவித்ரமான, புனிதமான வாழ்க்கை மேற்கொள்வது  போலவும் இன்னாருடைய மரணம் காரணமாக ஒரு வருடம்  கோயிலுக்குச் செல்வது கிடையாது என்று அற்புதமான பதில்! என்னே அப்பட்டமான பொய்!
நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ள நீத்தார் சடங்குகளை  உண்மையிலேயே நிறைவேற்றி வந்தால் எத்தனையோ கர்ம வினைகள்  எளிதில் கரையுமே! ஆனால் கலியுக மனிதனோ எதனையுமே  சிரத்தையாகச் செய்வது கிடையாது! ஆனால் கோயிலுக்குச்  செல்வதில்லை, பண்டிகை கிடையாது, விரதமும் இல்லை என்ற  எதையோ ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றான்,  தன் சுயநலத்தினாலும், சோம்பேறித் தனத்தினாலும், எது தனக்கு  வசதியாக இருக்கின்றதோ எதனால் செலவு மிச்சமோ, எதைச்  சொன்னால் உறவினர்களையும் நண்பர்களையும் அச்சத்தால் நம்ப  வைக்கலாமோ அதனால் தன்னையும் ஏமாற்றிக் கொள்கின்றான்! என்னே  பரிதாபம்!
ஏற்கனவே மூட்டை மூட்டையாய்க் கர்மவினைகளைச் சுமந்து வந்து  மனிதனாகப் பிறப்பெடுத்திருக்கின்றான், சஞ்சித கர்மா என்ற பெயரில்! அதாவது எத்தனையோ கோடி ஜென்மங்களில் சேர்ந்துள்ள கோடி  கோடியான கர்மவினைகள்! இதில் கோயிலுக்குச் செல்லாமை என்ற  அதர்மமான நிலை வேறு!
“அதெப்படி சார், கர்மவினை கோடி கோடியாகச் சேரும், நான் ஈ,  எறும்பிற்குக் கூடத் துன்பம் தராது என்பாட்டில் நல்ல வாழ்க்கை தானே  வாழ்கின்றேன்!”
எங்கே உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், உங்களுக்கு எந்த  விதமான தீய, முறையற்ற காம எண்ணங்கள் தோன்றியதே கிடையாதா?  உங்களுக்காக நீங்கள் வாழ்ந்தால் சமுதாயத்தை விட்டு ஒதுங்கிய  சுயநலவாதி ஆகின்றீகளே!
இறப்புத் தீட்டால் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டிக்கின்றோம்! அதனால்  கோயிலுக்கு செல்லக் கூடாது! மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும்  என்று சொல்கின்றீர்களே, அப்படி நீங்கள் உண்மையாகவே ஆழ்ந்த துக்கத்தில் ஒரு வருடம்  இருப்பீர்களானால் நீத்தார் நினைவோடு, சடங்குகளை முறையாகச்  செய்து வருவீர்களானால்… இப்படியா செய்து வருகிறீர்கள், உங்கள்  மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.
1.   உங்களுடைய காபி, டீ, சிகரெட், பான், புகையிலை, சினிமா,  கேளிக்கை எதையாவது ஒரு வருடம் தள்ளி வைத்திருக்கிறீர்களா?
2.   உண்மையான மரணத் தீட்டு என்றால் ஒரு வருடத்திற்கு சவரம்  செய்து கொள்ளாது இருக்க வேண்டும். ஆனால் செவ்வாய்,  வெள்ளி, அமாவாசை, நட்சத்திரம் பாராது மழமழவென்று மழித்து  விடுகின்றீர்களே, இதனால் விபரீதங்கள் வராதா?
3.   எத்தீட்டிலும் மூன்று வேளை சந்தியா வந்தன வழிபாடு உண்டு.  இறப்புத் தீட்டிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை! இறப்பின் பத்து  நாள் சடங்குகளிலேயே மூன்று வேளை சந்தியா வந்தன  வழிபாட்டை மட்டும் விடாது தொடர்தல் வேண்டும் என்ற விதியும்  உண்டு! இதனை ஒழுங்காகச் செய்து வருகின்றீர்களா? பின் ஏன்  ஒரு வருஷ கோயில் பகிஷ்காரம் என்ற சாக்கு சொல்லி உங்களை  ஏமாற்றி கொள்கின்றீர்கள். மூன்று வேளை சந்தி பூஜையையே  விட்டுவிட்டீர்கள்! பின் ஏன் ஒரு வருட காலக்கெடு?
4.   நீத்தார் நினைவு என்றால் ஒரு வருடம் தினந்தோறும் அவருடைய  படம் வைத்தோ அவர் உபயோகித்த பொருளை வைத்தோ வழிபாடு  செய்திட வேண்டும். தினசரி தானமும் உண்டே! செய்கின்றீர்களா?
5.   நீத்தாரின் நினைவாக ஒரு வருடம் டீவி, சினிமா பத்திரிகை  பார்க்காமல், படிக்காமல் இருக்கின்றீர்களா?
6.   நீத்தாரின் நினைவிலிருப்பின் ஒருவருடம் எவ்விதத்  தீயொழுக்கமும் இருத்தல் கூடாது. மது. பீடி, சிகரெட்டையா  நிறுத்தி இருக்கின்றீர்கள்?
உண்மையில் நீத்தாரை ஒரு வருடம் முழுதுமேனும்  நினைப்பதற்குத்தான் முதல் வருடத் திவசம் வரை பல வகை  சடங்குகளைத் தந்துள்ளனர். அவற்றை எல்லாவற்றையும் செய்யாமல்  உதறிவிட்டு ஒரு வருடம் கோயில் பகிஷ்கரிப்பு மட்டும் கோலாகலமாக  நடக்கிறது! இத்தகைய ஆன்மீக சீரழிவிற்கு நாம் தான் வெட்கப்  படவேண்டும்!
7.   இறப்புச் சடங்குகளில் முதல் பத்து தினங்களிலும் தினமும் முக்கியமான நீத்தார் வழிபாடுகள் உண்டு. 11, 12 ,13 தினங்களிலும் சுத்திகரிப்புச் சடங்குகள் மற்றும் தான தர்மங்கள் உண்டு. இவற்றை  முறையாக, ஆத்மார்த்தமாகச் செய்தீர்களா?
8.   புனிதமான உடலுறவிற்குக் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு.  முறையற்ற காம எண்ணங்கள் ஒருபோதும் எழக் கூடாது.  இவற்றையெல்லாம் ஒரு வருடம் முழுமையாகக் கடைபிடிக்க  முடிகின்றதா?
எவையெல்லாம் முக்கியமான பூஜை விதிகளோ, ஒழுக்கக்  கட்டுப்பாட்டு முறைகளோ அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு  விட்டீர்கள்! புனித்மான குடுமி அமைப்பையும், கடுக்கன்கள்  அணிதலையும் கைவிட்டதாகி விட்டது. ஜாதி பேதமின்றி நம்  மூதாதையர்கள் அனைவரும் குடுமி வைத்து, கடுக்கன்கள் அணிந்து  நம் மக்கள் சுமுகமாக எவ்வித வித்யாசமின்றி வாழ்ந்து கட்டுக்  கோப்பான சாந்தமான சமுதாய நிலவிய பவித்ரமான நாடு இது! சுயநலம், பேராசை, அந்தஸ்து, கௌரவம், பணிவின்மை, அகங்காரம்  காரணமாகவே, மனிதனுடைய குறைபாடுகளினால்தான் ஜாதிப்  பிரிவினைகள் தோன்றின! நாமெல்லாம் இறைவனின் குழந்தைகள்,  நமக்கு விலை மதிப்பில்லாத இம்மனிதப் பிறவியை அளித்த  இறைவனுக்கு நன்றி செலுத்தத்தான் ஆறுவேளை பூஜைகளும்,  பண்டிகைகளும் கோயில் வழிபாடுகளும் ஏற்பட்டன.
பெருமலைகளைப் போல் தீவினைக் கர்மங்களைச் சுமந்து வாழும் மனிதன் இறப்பைச் சாக்காகக் கொண்டு ஒரு வருடம் கோயிலுக்குச்  செல்தல் கூடாது என்ற அதர்மமான முடிவெடுத்தால் என்ன செய்ய  முடியும்? கோயிலுக்குச் செல்வதால் கரைகின்ற தீவினைகள் கூட  ஒரு வருடத்தில் அப்படியே தங்கி பல்கிப் பெருகி மனித உருவமே  தீவினைகளின் மொத்த உருவாக ஆகி விடுமே! என்னே கொடுமை!  அறியாமையால் விளைகின்ற விபரீதத்தைப் பார்த்தீர்களா? இறப்புத் தீட்டில் ஒரு வருடத்திற்குள் கோயிலுக்குச் சென்றால் சாமி  தண்டிப்பார், அது நடக்கும், இது நடக்கும் என்ற அச்சத்தினால்  விபரீதங்கள் ஏற்படும் என்று தயவு செய்து அபத்தமான முடிவிற்கு  வராதீர்கள்! நீத்தார் நினைவில் அப்படி ஒரு வருடம்தான் எதைப்  புனிதமாக சாதித்தீர்கள்? உங்களுடைய நடைமுறை வழக்கங்களில்  ஒரு மாறுதலும் இல்லையே! தினமும் மூன்று சந்தி பூஜைகளுண்டு! ஒரு வருடம் வெளியில் உண்ணக் கூடாது. பாயில் படுக்கலாகாது,  கேளிக்கைகள், சங்கமம் கூடாது, சவரம் கூடாது போன்ற நியதிகள்  என்னவாயின? பின் ஏன் இந்தப் பொய்யான வாழ்க்கை! இறப்புச்  சடங்குகளில் வேதமந்திரங்களும் ஓதப்பட்டுப் புனிதமான ஹோமமும்  நடத்தப்பட்டு ஏழைகளுக்கு தங்கதானம், பசுதானம், வஸ்திரதானம்  என்ற விதவிதமான தானங்கள் அளிக்கப் பட்டிருக்கையில் ஒரு  வருடம் கோயிலுக்குச் செல்லலாகாது என்ற நியதி இடைச்  செருகலே!
எனவே, இறப்பைச் சாக்காகக் கொண்டு
ஒரு வருடம் கோயிலுக்குச் செல்லாமலிருந்து பொன்னான மனித  வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். தாராளமாக கோயிலுக்குச்  செல்லலாம். விரதங்களைத் தாராளமாகத் தொடரலாம், இதையே  இறந்தவரின் ஆத்மா எதிர்பார்க்கின்றது.
இறந்தவரின் சூட்சும ஆன்ம உடலானது கோயில், புனித நதி,  தீர்த்தம் போன்ற இடங்களுக்குத்தான் விஜயம் செய்யும். எனவே  புனித யாத்திரைகளை மேற்கொள்வதில் எவ்வித தவறுமில்லை.
நீத்தார் நினைவு வழிபாடுகள் மிகவும் புனிதமானவை. நம்முடைய  வம்ச விருத்திக்கு வழிவகை செய்பவை. எனவே இருக்கின்ற  தினசரி வழிபாடுகளையே மறந்து விட்டு ஏனோதானோவென்று  இயந்திர கதியில் வாழ்கின்ற மனிதன், போதாக் குறைக்கு  ஆயிரத்தெட்டுத் தீயவழக்கங்களைக் குறிப்பாக  புகைபிடித்தலையோ, பொடி, பான் போடுதலையோ, காபி, டீயையோ  ஒரு நாள் கூடத் தவிர்க்க முடியாமல் அவற்றிற்கு அடிமையாக  வாழும் மனிதன், கேளிக்கைகள், முறையற்ற காமம் போன்ற  மாயைகளில் உழலும் மனிதன், நீத்தார் நினைவு வழிபாட்டையே  பரிபூர்ணமாகச் செய்வது கிடயாது! பின் ஒரு வருடம் கோயிலுக்குச்  செல்வது வேண்டாம் என்று எண்ணினால் எத்தகைய தன்னைத்  தானே ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றும் அறிவற்ற  செயல்! பிறரையும் கோயிலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி  அச்சுறுத்தும் அறிவற்ற நிலை!
அக்கிரமங்கள் பெருத்து வரும் கலியுகத்தில், உண்மையான தெய்வ பக்தி  மங்கி வரும் நிலையில் நம்முடைய புண்ய சக்திகளும் குறைந்து  வருகின்ற நிலையில் தயவு செய்து இத்தகைய அதர்மமான முடிவைக்  கைவிட்டு விடுங்கள்! மூதாதையர்களின் கருணையால்தான் நாம் வாழ்கின்றோம்! அந்த  பித்ருக்கள் நாள்தோறும் வருகின்ற இடங்களே திருக்கோயில்கள்! பார்க்,  பீச், மைதானம் என தினந்தோறும் வாக்கிங் போவதற்கு மனம்  வருகின்றது, ஏன் கோயிலுக்கு போவதில்லை!
மார்கழிக் குளிரில் கூட நாயைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னால்  அது மலஜலங் கழித்திட விடியற்காலையில் ஓடுகின்றார்களே,  என்றேனும் மார்கழி மாத விடியற்காலை வழிபாட்டிற்குச்  சென்றிருக்கின்றார்களா? என்னே வெட்கக் கேடு! நீங்கள் தினந்தோறும்  கோயிலிக்குச் சென்று இறைவனை தரிசிப்பதையே பித்ருக்கள்  விரும்புகின்றார்கள். உங்களுடைய கர்ம நிவாரணப் பணியில் பெரிதும்  அக்கறை காட்டுபவர்கள் பித்ருக்களே! இறப்பிற்குப் பின் சூட்சும சரீரத்தில் பித்ரு நிலையைத் தேடிப் பயணம்  செய்யும் நம் மூதாதையர்களா ஒரு வருடத்திற்குக் கோயிலுக்கு  செல்லவேண்டாம் என்று சொல்வார்கள்? சற்றே பகுத்தறிவுடன் சிந்தித்துப்  பாருங்கள். நீங்கள் எத்தனையோ இறைப் பணிகளைச் செய்து  வழிபாடுகளை மேற்கொண்டு கூடுதலான பூஜைகளைச் செய்வதையே  மூதாதையர்கள் விரும்புவார்களேயன்றி கோயிலுக்குச் செல்லாதே என்று  தடுத்து நிறுத்துவார்களா? நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்!
ஸ்ரீதசரத சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரான ஸ்ரீராமர் தம் தந்தையாரின்  ஆத்ம சாந்திக்குப் பின்னர் கானகத்தில் வசித்தாலும் கூட, நித்ய  வழிபாடுகளிலிருந்து சற்றும் பிறழாது அனைத்தையும் செவ்வனே  நடத்தினார் அன்றோ! மேலும் இந்த ஓராண்டு காலத்திற்குள் தான் ஸ்ரீ  ராமர் எத்தனையோ மஹரிஷிகளையும் ஞானிகளையும் தரிசித்து  அவர்களுடைய பூஜைகளில் கலந்து கொண்டு அனைவருக்கும் ஸ்ரீ ராமர்  ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றாரே! இனியேனும் உண்மையான  தெய்வீகத்தை உணர்ந்திடுக!
அரைகுறையான நியதிகளால், தவறான வழிகளை மேற்கொண்டு  பொன்னான காலத்தை விரயமாக்காதீர்கள்! எனவே குடும்பத்தில் உறவு  முறையில் மரணம் ஏற்பட்டிடினும் தாராளமாகக் கோயிலுக்குச்  செல்லலாம். விரதங்கள், பண்டிகைகளைக் கடைப்பிடிக்கலாம். இதில்  எவ்வித தெய்வக் குற்றமும் கிடையாது!