Saturday, January 26, 2019

திருவிளக்கின் முக்கியத்துவம் .

திருவிளக்கின் முக்கியத்துவம் .
ஏக முகம்: பிணி நீக்கும்.
துவி முகம்: குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
த்ரி முகம்: சகோதர பிணக்குகள் நீங்க, நல்லுறவுகள் பலப்பட.
சதுர்முகம்: வியாபாரம் வளர, மேல்நாடு செல்ல.
பஞ்ச முகம்: பூர்வஜென்ம புண்ணியம் ஏற்பட, மாத்ரு-பித்ரு தோஷங்கள் விலக, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக.
சன் முகம்: ரோகம், சத்ரு கடன் தீர.
சப்த முகம்: திருமணம் நடை பெற, இல்லறம் நல்லறமாக.
அஷ்ட முகம்: மரணபயம், விபத்துக்கள் அகல, வழக்குகள் வெற்றிபெற.
நவ விளக்கு: குடும்ப ஷேமம், புத்திர பௌத்திராதிஷமம், மகிழ்ச்சி.
தச முகம் : தொழில், உத்தியோகம், பதவி, புகழ் கிட்ட.
ஏக தசை முகம் : லாபங்கள் கூட, பணம் சேர,
சொத்துக்கள் வாங்க
துவாச முகம்: நஷ்டங்கள் அகல, எதிர்ப்பு- இடைஞ்சல் விலக, பகை நீங்க.
சோடஷ முகம் (16 முகம்): கோயில்களில் மட்டுமே ஏற்றுவர்.
திருவிளக்குத் துளிகள்:
* வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.
* திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
* விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.
* வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும்.
* அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம்.
திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.

பண ரகசியம் - துர்க்கை வழிபாடு

செல்வத்தை பெரிய அளவில் ஈர்க்க...

நாமக்கல் அதிசயம்

அதிசய கோவில்கள்

நிச்சயம் தரிசிக்க வேண்டிய கோவில்கள் | Andal Vastu | Dr.Andal P Chockalingam

Friday, January 25, 2019

கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?
ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது.

Thursday, January 24, 2019

பரிகாரம் ஒரு வரம்

 பரிகாரம் ஒரு வரம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும்.
அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
 இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ] இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,
செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் ,
அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது
ரிசிகள் சொல்லிய பரிகாரம்.
கொடிய கடன் தொல்லைகளுக்கு
ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள்,
பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ,ஏதும் பூதகண சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில்
நெய்தீபம் ஏற்றி 12 முறை,
48 நாட்கள் சுற்றி வழிபட
தொழில்,
வழக்கு சாதகமாதல்,
பில்லி,
சூனியம்,
ஏவல் நீங்கும்.
21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
 வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க , வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி நிவர்த்திப் பரிகாரங்கள் – மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது, ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.
இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட இயலாதவர்கள் ,கடல் நீரின் ஒரு பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள், தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.
அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர் ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம் செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை, மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.

பச்சை கற்பூரத்தை இந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் | Where to ...

வருமைவிலகும்செல்வம்பெருகம்இதைசொன்னால்

உங்களை உயர்த்தும் பச்சைகற்பூரம்

தானத்தின் பலன்கள்தானத்தின் பலன்கள்
ஜலத்தை அளிப்பவன் திருப்தியையும்
அன்னத்தை அளிப்பவன் குறைவில்லா சுகத்தையும்
எள்ளு அளிப்பவன் நல்ல சந்ததியையும்
தீபம் கொடுப்பவன் நல்ல கண்ணையும்
பூமியை அளிப்பவன் பூமியையும்
தங்கம் அளிப்பவன் தீர்கமான ஆயுளையும்
வீடு அளிப்பவன் உயர்ந்த மாளிகைகளையும்
வெள்ளி அளிப்பவன் அம்சமான ரூபத்தையும்
வேஷ்டி அளிப்பவன் சந்திர லோகத்தையும்
காளையை அளிப்பவன் அகண்ட ஐஸ்வரீயத்தையும்
வண்டி அளிப்பவன் அழகான பத்தினியையும்
அபய தானம் அளிப்பவன் தனத்தையும்
தான்யம் அளிப்பவன் நிலையான சௌக்கியத்தையும்
வேத தானம் ( ஞானத்தை ) அளிப்பவன் பிரம்மலோகத்தையும் அடைவான்.
எல்லா தானத்தை காட்டிலும் வேததானம் உயர்வானது!
தானத்தை யாருக்கும் செய்யலாம். ஆனால் இடமும் காலமும் பாத்திரமும் அனுசரித்து அளித்தால் பலன் அதிகம்.

Tuesday, January 15, 2019

கருடன் பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள்.

கருடன் பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள்.
1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
3. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.
4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.
7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.
8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி - பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.
9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.
10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.
12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.
13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
14. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.
17. குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
18. சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.
19. உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.
20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.
22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.
25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.
26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.
27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.
28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள். இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.
29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி.
31. கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.
32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.
33. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!
34. கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!
35. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.
36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.
37. கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.
38. எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.
39. கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.
40. நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.
41. எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.
42. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.
43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.
44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.
45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.
46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.
47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.
48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.
49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.
50. சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.
51. ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.
52. வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.
53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.
54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.
55. கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.
56. திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.
57. கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்.
58. கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.
59. ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.
60. பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.
61. கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.
62. கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.
63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.
64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.
65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.
67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.
68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.
69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
70. ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.
71. கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.
72. வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.
73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.
74. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.
75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.
76. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.
77. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.
78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.
79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.
80. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.
81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.
82. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.
83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.
84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.
85. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.
86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.
87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.
88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.
89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.
90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!
ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.
91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.
92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்
93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.
94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.
95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.
(குங்குமோங்கித வர்ணாய
குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹன நமஸ்துப்யம்
* பக்ஷி ராஜாயதே * நமஹ)
96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.
97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம், காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.
98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.
99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
100. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்

Sunday, January 13, 2019

OM Chanting for meditation positive energy and brain development ஓம் என்...

வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை

வீட்டில் இருக்கும்
தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை
பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் தூபம். வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது.

கடன் தீர எளிய வழி | Easy way to clear your Debt

Saturday, January 12, 2019

கொக்கராயன் பேட்டை கோயில்

கொக்கராயன் பேட்டை கோயில்
எமதர்மராஜன்
தன் உதவியாளர்கள் அன்று எடுத்து வந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் .
எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற் செயல்களையும் செய்யாவிடினும் ....
ஒருவன் கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான் எனில் ,
அவன் செய்த பாவங்கள் அனைத்தும்
அந்த நொடியில் விலகி
சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான்...
இப்படி ஒரு திருகோயிலா?
தலமா ?
எங்கு உள்ளது ?
நம் கொங்கு நாட்டில் தான் .....
திருச்செங்கோடு அருகில் ...
16 கிலோமீட்டரில் ..
திருச்செங்கோட்டி
லிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்தி
லிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான்
காண் என
வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில்
2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற
ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....
திருத்தல
இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர்,
கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல்
பாமா, ருக்மணி
சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
ஸ்ரீ பைரவர்
நாய் வாகனமின்றி விளங்குகிறார் .
இந்த அமைப்பு
வேறு எங்கும் கிடையாது.
சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார்.
பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.
இத் திருத்தல
இறைவி
மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப் பிரசாதி.
இறைவன்
கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன.
இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.
"கல் கோழி கூவும்,
கல் கதவு திறக்கும், அப்போது
கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட
மிகப் பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.
ஸ்ரீ விநாயகர்,
ஸ்ரீ முருகப் பெருமான்,
ஸ்ரீ தட்க்ஷணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர்,
நவ கிரஹங்கள்,
சூரிய பகவான்,
சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே
அமையப் பெற்ற சிவஸ்தலம்.
சனி பகவானுக்கு
தனி சந்நிதி உள்ளது.
சுமார்
500 ஆண்டுகளுக்கு முன்பு
விஜய நகரப் பேரரசை ஆண்டு வந்த
கிருஷ்ணதேவராயர் இத் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன..

உங்களின் கெட்ட நேரம் அனைத்தும் நல்ல நேரமாக மாற தூங்கும் முன் இந்த செயல...

வழிபாட்டுக்குரிய தேங்காயில் ஒளிந்திருக்கும் தத்துவம்!

வழிபாட்டுக்குரிய தேங்காயில் ஒளிந்திருக்கும் தத்துவம்!
தேங்காய் தரும் தென்னை மரமும், வாழைப்பழம் தரும் வாழை மரமும் மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றின் எந்த பாகமும் வீண் ஆவதில்லை. மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் தான் கோவிலில் அனைத்து பூஜைகளி லும் தேங்காய் உடைத்த பிறகே நிவேதனம் செய்வார்கள். தேங்காய் உடைப்பதே நம் ஆன்மா வை சுற்றியுள்ள மும்மலங்களை போக்குவதற்காக தான்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மும்மலம் என்று சொல்லப்படு கிறது. தேங்காய் மேல் இருக்கும் மட்டை தான் மாயை மலம் எனப்படுகிறது. மட்டை எனும் மாயை மலம் நீங்கினால் அடுத்து நார் எனும் கன்ம மலம் வரும். கன்ம மலம் நீக்கப்பட்டால் தேங்காயைச் சுற்றி இருக்கும் ஓடு தெரியும். இந்த ஓடு ஆணவ மலத்தை குறிக்கும். ஓட்டை உடைத்தால் தேங்காய் இரண்டாக உடைந்து உள்ளே இருக்கும் வெள்ளைப் பருப்பு தெரியும். இந்த வெள்ளைப் பருப்பை பேரின்பம் என்பார்கள்.
ஆக வாழ்வில் மாயை, கன்மம், ஆணவம் என்ற மும்மலங்களையும் விரட்டினால் தான் பேரின்பத்தை பெற முடியும் என்பதை தேங்காய் உடைப்பதன் தாத்பர்யமாக சொல்கிறார்கள்.
தேங்காய் உடைப்பதில் இன்னொரு தாத்பர்யமும் உள்ளது.
தேங்காய் உள்ளே இருக்கும் இளநீர் உலக ஆசைகளின் அடையாளமாகும். தன்னை சுற்றி இருக்கும் ஓடு ஒரு போதும் உடையாது. அது என்றென்றும் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று இளநீர் நம்புகிறது. அது போலதான் நாம் இளம் வயதில் நமது உடம்பு அழகானது, உறுதியானது என்று நம்பி பல்வேறு ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம்.
ஆனால் மனம் பக்குவம் பெறும் போது நமது உடம்பு சாசுவத மானது அல்ல என்பது புரியும். அதாவது இளநீர் வற்றும் போது, அது தேங்காயின் பக்குவத்துடன் இரண்டற கலந்து விடும். ஓட்டுக்குள் இருக்கும் நீர் வற்றுவதால், ஒரு போதும் தேங்காய் கெட்டுப் போவதில்லை. மாறாக உறுதி பெறும்.
அது போல இளம் வயதில் ஆசைகளுடன் சுற்றித்திரியும் நாம் அனுபவ ஞானம் எனும் பக்குவம் வர, வர உலக ஆசைகளை துறந்து விடுகிறோம்.

Thursday, January 10, 2019

பிறந்த நாள் நட்சத்திரம் அன்று ஏன் முடிவெட்டக்கூடாது, நகம் வெட்டக்கூடாது

பிறந்த நாள் நட்சத்திரம் அன்று ஏன் முடிவெட்டக்கூடாது, நகம் வெட்டக்கூடாது
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உயிரியல் உடல் மற்றும் ஒரு சக்தி உடல் உள்ளது
இந்த உயிரியல் உடல் – பயாலஜிகல் பாடி – என்பது எலும்பு, சதை, நரம்பு, இரத்தம், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளால் ஆனது
சக்தி உடல் என்பது சக்தியால் ஆனது
இதை சூட்சும சரீரம் என்றும் அஸ்ட்ரல் பாடி என்றும் அழைப்பார்கள்
இந்த சூட்சும சரீரமானது நமது உடலில் உள்ள சக்கிரங்களுடன் தொடர்புடையது
இது நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது
நாம் நகம் வெட்டினாலோ, அல்லது முடி வெட்டினாலோ உடலின் ஒரு பகுதியை இழக்கிறோம்
எனவே இதற்கு ஏற்ப சூட்சும சரீரமும் மாறும்
முடிவெட்டிய / நகம் வெட்டிய இடத்தில் சூட்சும சரீரத்தில் ஓட்டை இருக்கும்
சிறிது நேரத்தில் இது சரியாகி விடும்
முடிவெட்டியவுடன் தலைக்கு குளித்தாலோ அல்லது நகம் வெட்டியவுட கையை கழுவினாலோ
இந்த சூட்சும சரீரம் விரைவில் சரியாகி விடும்
பிறந்த நாள் அன்று நமது சூட்சும உடலுக்கும், அஸ்ட்ரல் தளத்திற்குமான தொடர்பு அதிகமாக இருக்கும். எனவே
இந்த சூட்சும உடலானது நெகிழ்ந்த நிலையில் இருக்கும்
எனவே இது போன்ற தினங்களில்
சூட்சும சரீரம் புதிய நிலைக்கு வர நிறைய நேரம் ஆகும்
முடிவெட்டிய / நகம் வெட்டிய இடத்தில் சூட்சும சரீரத்தில் ஓட்டை இருக்கும்
இது சரியாக நிறைய நேரம் ஆகும்
அது வரை
நமது உடலின் சக்கிரங்களின் சக்தி எளிதில் மாறும் வாய்ப்பு உள்ளது
இதனால் சளி பிடிப்பது, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்
இதனால் தான்
முடிவெட்டியவுடன் குளிக்கவேண்டும்
2.பிறந்த நாள், நட்சத்திரம் அன்று முடிவெட்டக்கூடாது
என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

Monday, January 7, 2019

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்....

நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது
அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும்
இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ..
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும்.
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவி
லுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல்
(விலங்கு ,பறவைகள்),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....
இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

ஹோரை இரகசியம் தெரிந்தவனுக்கு வெற்றி நிச்சியம்| பணம் பெருக்கும் ஹோரை ரகசியம்

வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள் - இந்த ஒரு எண்ணெய் போதும் | Parihar...

Wednesday, January 2, 2019

நவதானியம் விவரம் - உகந்த கடவுள்

நவதானியம்
நவதானியம் விவரம் - உகந்த கடவுள்
கோதுமை - சூரியன்
நெல் - சந்திரன்
துவரை - செவ்வாய்
பச்சை பயிரு - புதன்
கடலை - குரு
மொச்சை - சுக்கிரன்
எள் - சனி
உளுந்து - ராகு
கொள்ளு - கேதுசூரியன்:- இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும்,
சந்திரன்:- இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி” யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும்.
செவ்வாய்:- இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.
புதன்:- இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும்.
குரு:- இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும்.
சுக்கிரன்:- இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும்.
சனி:- இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம் - Powerful Ganesh Mantra to Gain We...

தர்ப்பையின் பயன்கள்

ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்

வன்னி மரத்தின் பயன்கள் மற்றும் அறியாத பல தகவல்கள்

நன்மை தரும் நவதானியங்கள்