Thursday, February 28, 2019

சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம்,

சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், 
பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் தோன்றும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும் பாறை அளவுக்கும் கிடைப்பதாகக் கூறுவர். நீரில் சுழற்சியின் காரணமாக நீள் உருண்டையாகத் திகழும் பாண லிங்கங்கள். நர்மதை நதிக்கரையில் சோணபுரத்தை ஆட்சி செய்து வந்தவன் வாணாசுரன், சிறந்த சிவபக்தன், அவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் செய்தார் என்றால், அவனது சிவபக்தி எத்தகையதாக இருந்திருக்கும்?!
திருஅஞ்சைக்களம் தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலைக்கு அழைத்துவர சிவபெருமான் அனுப்பியது இவனைத்தான். இதை, ‘வரமலி வாணன் மத்த ஆனையோடு வந்தெதிர் கொள்ள ’ எனும் நொடித்தான் மலை பதிகத்தின் வரிகளில் இருந்து அறியலாம். இந்த வாணாசுரன் தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து பூஜிப்பான். பூஜை முடிந்ததும் லிங்கங்களை நர்மதை நதியில் விட்டுவிடுவான். அப்படி அவன் நர்மதையில்விட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை. நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டுசென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்துவருவது விசேஷம். பாண லிங்கங்களை வீட்டில் வைத்து பூஜிப்பது, பல கோடி நன்மைகளைப் பெற்றுத் தரும். அந்த வீட்டைத் துயரங்களும் தீய சக்திகளும் அண்டவே அண்டாது. பிரதோஷம், திங்கட்கிழமை, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற தினங்களில் பாண லிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்து, வில்வம் சமர்ப்பித்து, சிவபுராணம் போன்ற துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், நமது மனக்கிலேசங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
அன்புடன் செல்வம் மோஹி

""பசு, காகம், பாம்பு… கொல்லக்கூடாது... "" ஏன்.....!?!

""பசு, காகம், பாம்பு…
கொல்லக்கூடாது... ""
ஏன்.....!?!
உலகில் எத்தனையோ விலங்குகள் கொல்லப்படுகின்றன; உணவாகின்றன!
ஆனால், பசு வதை ஏன் கூடாது என நம் கலாச்சாரத்தில் சொல்லப்படுகிறது?
பசு மீது மட்டும் நமக்கு பாசம் வந்துவிட்டதா என்ற கேள்விகூட எழுகிறது.
உயிர்ப் பரிணாமத்தில் பசு, காகம், பாம்பு ஆகிய உயிரினங்கள் கொண்டுள்ள சிறப்புகள்...
பசு வதை கூடாதென்று நமது கலாச்சாரத்தில் ஏன் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது?
நமது கலாச்சாரத்தில் பசு, பாம்பு, காகம் ஆகிய மூன்று உயிரினங்களுக்கும் தனி இடம் உண்டு.
உடலின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, நமக்கு மிக அருகில் இருக்கிற உயிரினம் குரங்கு
. ஆனால், உயிரின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, முதலில் சொன்ன மூன்று உயிரினங்கள்தான் நமக்கு மிக அருகில் உள்ளன.
அதனால்தான் அவற்றுக்கு அத்தனை முக்கியத்துவம்!
அவற்றைக் கொல்வது என்பது மனிதர்களைக் கொல்வது போல. அந்த அளவுக்கு அவை மனித உயிர்களுக்கு நெருக்கமாக உள்ளன. கிராமங்களில் இன்னமும் மனிதர்கள் பசுக்களுடன் மிக ஆழமான உறவு வைத்துள்ளனர்.
மிகச் சில உயிரினங்கள் மட்டுமே, அதிலும் பசு மிக அதிகமாக மனித உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. நீங்கள் துக்கமாக இருந்தால், பசு உங்களுக்காகக் கண்ணீர்விடும்.
உண்மையாகவே அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழியும். பசு ஏறக்குறைய மனித உயிரினம் போலத்தான். அதனால்தான், பசு வதை நமது கலாச்சாரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இயற்கையில் உள்ள எந்த வன விலங்கைத் தொட்டாலும், அது எதிர்வினை செய்யும்.
ஆனால், ஒருப் பாம்பை… அது விஷப் பாம்பாக இருந்தாலும், அதை நளினமாகத் தூக்கினால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது.
இந்த ஓர் உயிரினம்தான் மனிதனிடம் இப்படி நடந்துகொள்கிறது. மேலும், ஆன்மீக சக்தி உள்ள இடங்களை நாடிப் பாம்புகள், தானாகவே வந்து சேரும்.
சில யோகிகள் பாம்புக்கோ, பசுவுக்கோ, காகத்துக்கோ பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்த சம்பவங்களும் உண்டு. மற்ற உயிரினங்களை அப்படி விடுவிக்க முடியாது.
இந்தக் காரணங்களால்தான் தெரிந்தோ, தெரியாமலோ பசு, பாம்பைக் கொல்ல நேர்ந்தால், மனிதர்களைப் புதைப்பது போல முறைப்படிப் புதைக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது!
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்"
வள்ளுவர் குறல் வழி நிற்போம்..
Nandri aalayam thozhuvom

Wednesday, February 27, 2019

சமையல் அறையில் பத்துபாத்ரங்கள் சுத்தம் செய்தல்: சர்மா சாஸ்திரிகள்

மனம் அடங்க மூன்று வழி!!!

மனம் அடங்க மூன்று வழி!!!
(பக்தி, யோகம், ஞானம்)
---------------------------------------------
சனாதன தர்மமான நம் ஹிந்து மார்கம் ஏனோ தானோ என்று வடிவமைக்கப்பட்டது அன்று. மனிதனின் பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து, அணைத்து துன்பங்களுக்கும் "மனம்" ஒன்றே காரணம் என்று உணர்ந்த ரிஷிகள், மனதை நாசம் செய்ய நமக்கு தந்த எண்ணற்ற பயிற்சி முறைகளின் வாழ்வியல் நன்னெறியே ஹிந்து மார்கம் ஆகும்.
"மனம் என்னும் மாடடங்கில் தாண்டவகோனே,
முக்தி வாய்த்ததென்று என்னிடடா தாண்டவக்கோனே"
என்று பாடுகிறார் ஒரு சித்தர்.
மனதை கட்டுப்படுத்து. அதன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடு என்று எல்லோரும் கூறுகிறார்கள் சரி. அந்த பாழாய்ப்போன மனதைதான் கட்டுப்படுத்துவது எப்படி?
முதலில் மனம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்.
கடல் அலைகள் போல ஓயாது உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் பற்பல எழுகின்றன. அந்த எண்ணங்களின் கூட்டே மனம். மனம் என்றோர் பொருள் இல்லை. எண்ணங்களே மனம். எண்ணங்களை கட்டுப்படுத்துவேதே மனதை கட்டுப்படுத்துவது.
மனிதனின் மனோபாவத்திற்கு ஏற்ப நம் ரிஷிகள் எண்ணங்களை கட்டுப்படுத்த. நமக்கு முன்று மார்கங்களை வழங்கியுள்ளனர். அவை பக்தி, யோகம், ஞானம் என்பவையே.
*பக்தி மார்கம்:-
பக்தி என்பது இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுவது. பிறந்து சில மாதங்களே ஆன ஒரு சிசு எப்படி அனைத்திற்கும் தன் தாயையே எதிர்நோக்கி இருக்குமோ, இறைவனை மட்டுமே அனைத்திற்கும் ஒரே ஆதரவாக கொண்டு வாழ்வை நடத்துவதே பக்தி. அனைத்தையும் இறைவனாக பார்பதுவே பக்தி. அனைத்தும் இறைவன் ஆதலால், பக்தன் யார்மீதும் கோபப்படவோ பொறாமை கொள்ளவோ மாட்டான். மரணம் முதற்கொண்டு எதைக்கண்டும் அஞ்சமாட்டான். தன் வாழ்வை தீர்மானிப்பது இறைவன் ஆதலால், தன் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்கவோ, முடிவெடுக்கவோ மாட்டான். இவ்வாறு தன்னை முழுமையாக இறைவனுக்கே ஒப்புவிக்கும் பக்தனை "சரனாகதான்" என்பார்கள். இவ்வாறு சரணாகதி மூலம் இறைவனுடன் தன்னை ஐக்கியப்படுத்தினால் சின்தனைகள் ஒழிந்து, மனம் அழிந்து முக்தி பெறலாம்.
*யோகம்:-
"யோகம் என்பது இடைவிடாத முயற்சியின் மூலம் மனதின் எண்ணங்களை கட்டுப்படுத்துவது" என்று பதஞ்சலி மகரிஷி கூறுகிறார்.
இடைவிடா முயற்சியின் மூலம் சிந்தனை அலைகளை கட்டுப்படுத்த முனைவிர்களே யோகிகள். வாசி, குண்டலினி, க்ரியா,............... போன்ற எண்ணற்ற கடுமையான பயிற்சிகளால் பாடுபட்டு மனதின் எண்ணங்களை காடுப்படுதி மனதை வென்ற யோகிகளை "சமாதி நிஷ்டர்கள்" என்பார்கள். அவ்வாறு கடுமையான பல பயிற்சிகள் செய்து, யோகம் பயின்று, மனதை அடக்கி, சமாதி ஸ்திதியை அடைந்தாலும் முக்தி பெறலாம். (சமாதி என்பது மண்ணுக்குள் போட்டு உடலை புதைப்பது அல்ல. எண்ணங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து, மனம் சும்மா இருக்கும் நிலையே சமாதி நிலை ஆகும்)
*ஞானம்:-
கூர்ந்த அறிவால் பிரபஞ்சத்தை நோக்கி சத்தியம் ஏது? அசத்தியம் ஏது? என்று ஆராய்ந்து, இருப்பது அனைத்துமே பிரம்மம் தான். பிரம்மத்தை தவிர்த்து இரண்டாவது ஒன்று சிறிதும் இல்லை. என்று நன்கு தேர்ந்து, எக்கணமும் விழிப்பாக இருந்து மனம் சிந்திக்காதபடி கணத்திற்கு கணம் கவனமாக வாழ்ந்து மனதை அடக்கியவர்களை "ஞானிகள்" என்பார்கள். இவ்வாறு ஆழ்ந்த விசாரனயினாலும், கவனமாய் இருந்து மனம் சிந்திக்காமல் பார்துக்கொல்வதாலும் முக்தி அடையலாம்.
பக்தியின் மூலம் இறைவனுக்கு சரணாகதி செய்வதாலும், யோகம் பயின்று சமாதி நிலை அடைவதாலும், ஞானத்தினால் விழிப்பாய் இருப்பதாலும் மனதை நசித்து முக்தி அடையலாம்.
இளகிய மனம் உடையவருக்கு பக்தியும். விடாமுயற்சி உடைய மனம் கொண்டவருக்கு யோகமும், அறிவுக்கூர்மை உடையவருக்கு ஞான மார்க்கமும் பொருந்தும்.

Tuesday, February 26, 2019

இயற்கையான எளிய பரிகாரம்.

இயற்கையான எளிய பரிகாரம்.
இப்பிரபஞ்சத்தில் மனித ஏதேனும் ஒரு விஷயத்தால் பாதிக்கப்பபடுகிறான்.உடனே பரிகாரத்தை நோக்கி பயணிக்கிறான்.
இயற்கையாகவே சில பரிகாரங்களை பார்ப்போம்.
நாம் உயிர் வாழ மூன்று நேரம் சாப்பிடுகிறோம்.
கிரகங்களின் கதிர்வீச்சு போதிய அளவு கிடைக்காமல் Negative energy வெளிப்படும் போது கீழ்கண்ட இயற்கையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் தாக்கம் அதிகமிருக்கும்.அதை வைத்தே ஞானிகள் கிழமைகளை பிரித்தனர்.
அந்த நாளிலும் சூரிய உதயத்திலிருந்து முதல் ஒரு மணி நேரம் அந்த நாளின் ஆதிக்கதிற்குரிய கிரகம் பலமாக இருக்கும்.இதை ஹோரை என்கிறோம்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உணவு சமித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு -சூரியன்- கோதுமை
திங்கள் -சந்திரன்-பச்சரிசி,பால்
செவ்வாய்-துவரம் பருப்பு.
புதன் -பச்சைபயிறு
வியாழன் -குரு- கொண்டக் கடலை
வெள்ளி-சுக்ரன்-வெண் மொச்சை
சனி-எள்ளு
ராகு- உளுந்து
கேது- கொள்ளு
மேற்படி நாட்களில் இவைகளை உணவோடு கலந்து பயன்படுத்துவது நன்மை தரும்.செலவுமில்லை.
மேற்படி திசைகளில் இதை உணவோடு பயன்படுத்துவது எளிய பரிகாரம்.

Monday, February 25, 2019

108 சித்தர்கள்_ஜீவா_சமாதி1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

*நாம்* *கர்மாவை* *சுமக்கும்* *வாகனங்கள்!!!*

*நாம்* *கர்மாவை* *சுமக்கும்* *வாகனங்கள்!!!*
நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..? புண்ணியங்களையா ..?பாவங்களையா ..........?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...! நாமோ நமது முன்னோர்களின்
கர்மாவை சுமக்கிறவர்கள்...!! ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று. நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றிதோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லைஎன்ற கற்பனையில் நீ உலாவ ..உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்காத்திருப்பான் காலத் திற்காக ..தக்க தருணத்தில் வெளியிடுவான் ..அதை நீ அனுபவிக்க ...என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும். ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :
பட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு
.
ஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்குஉதவுவது ..........................................6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்குஅந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.

உண்மையான பரிகாரங்கள் என்ன தெரியுமா?

உண்மையான பரிகாரங்கள் என்ன தெரியுமா?
1)ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றுதல்…
2)ஆலய இறைவனை வழிபாடு செய்து வலம் வருதல்
3)ஆலயத்தைச் சுத்தமாக வைத்திருத்தல், அப்பணிகளில் உதவுவதல்
4)நந்தவனத்தைப் பராமரித்தல், விருட்சங்களை வளர்த்தல்
5)ஆலயத்தை அண்டி வசிப்பவர்களுக்கு உதவுவதல் (அன்னதானம்)
6)ஏழைகளுக்கு வசதி இருப்பின் உடை, உணவு போன்றவற்றை அளித்தல் (வஸ்திர தானம்)
7)ஏழைகளது நோய் தீர்க்க உதவுதல் (சஸ்திர தானம்)
8)அவர்களது கல்வி உயர்வுக்கு உதவுதல் (வித்யா தானம்)
9)திருமணமாகதவர்களுக்கு பொன் அளித்து உதவுதல் (மாங்கல்ய தானம்)
10)ஆதரவற்ற வறியவர்களைத் தங்க வைத்துப் பராமரித்தல் (சத்திரம், மடம் அமைத்தல்)
11)தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல், குளம் போன்றவை அமைத்தல்
12)ஆதரவற்று இறப்போர்களுக்கு அந்திமக் கிரியைகள் செய்தல்.
இவ்வளவுதான். இவை எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியாது என்றாலும் இயன்றதைச் செய்து கர்மாவின் வலிமையைக் குறைத்துக் கொள்ளலாம்.
ஓம் நமசிவாய

Hindu Saivite Prayers for healing from various sufferings. அன்றாடச் சிக்கல்களிலிருந்து வெளிவருவதற்கான திருமுறைப் பதிகங்கள்

சொல் பேச்சு கேட்காத பிள்ளைகளை திருத்தவும் இருக்கு பரிகாரம் | Parihara to...

Saturday, February 23, 2019

7 அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர...

தீபத்தை குளிர வைக்கும் முறை..!!

தீபத்தை குளிர வைக்கும் முறை..!!
விடியற் காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம்' என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.
அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

மன அமைதி இன்றி அவதிப்படுபவர்கள் உண்மையான ருத்ராட்ச மாலையை அணிந்தால், அவர்கள் மனதில் இனம் புரியாத ஒரு வகை அமைதி கிடைக்கும்.

மந்திரம் சொல்லாமல் இருந்தால் கூட உண்மையான ருத்ராட்சம் அணிந்தால் மனது அமைதியாக இருக்கும். பாகவதம், சிவப்புராணம் ஆகிய இவை இரண்டிலும் ருத்ராட்சத்தைப் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிவதால் பாவங்கள் நீங்குவது மட்டும் இல்லாமல் மருந்துளால் குணம் ஆகாத வியாதியைக் கூட ருத்ராட்சம் அணிந்தால் குணம் ஆகும்.
மன அமைதி இன்றி அவதிப்படுபவர்கள் உண்மையான ருத்ராட்ச மாலையை அணிந்தால், அவர்கள் மனதில் இனம் புரியாத ஒரு வகை அமைதி கிடைக்கும். இது நாளடைவில் முழுமையான மன அமைதியை உருவாக்கும் வல்லமை பெற்றது ருத்ராட்சம். வேலை பளு, மனச் சோர்வு போன்றவற்றாலும், குடும்பத்தில் குழப்பம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கூட, ருத்ராட்ச மாலை அணிந்து சிவன் சன்னதியில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தாலே அவர்களுக்கு மன அமைதி என்பது உடனடியாக ஏற்படுத்தும் ஆற்றல் ருத்ராட்சத்திற்கு உண்டு....
***********************
அபாயத்திலும் அபயமளிப்பது சிவாயமே.

Thursday, February 21, 2019

லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.

இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவர்களால் போற்றப்பட்டு, வழிபட்டு வரும் சிவ பெருமானின் லிங்க ரூப தரிசனம் பற்றிய பதிவுதான் இது! இந்த பதிவில் உள்ள‍

தகவல்கள் உங்களை அதிர வைத்து ஆச்சரியமூட்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. இதோ அந்த அரிய ஆன்மீக தகவல்கள்

லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.

பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதனடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம்.

நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்று அருள்சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.

குடவாசல் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணேசுவரரை கருடன் வழிபட் டார். அப்படி வழிபட்டபோது கருடனுடைய கால்சுவடுகள் லிங்கத்தின் மீது படிந்தது. அந்த அடையாளத்தை இன்றும் தரிசிக்கலாம்.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடி தலத்தில் குதிரையு ம் வண்டும் ஈசனை வழிபட்டு முக்தி அடைந்தன. அவற்றின் காலடிச் சுவடுகள் லிங்கத்தில் பதிந்திருப்பதைக் காணலாம்.

திருக்கொண்டீஸ்வரம் தலத்தில் சுயம்புலிங்கமாக பசுபதீஸ்வரர் அருள் புரிகிறார். இந்த லிங்கத்தை பசு வழிபட்டதால், பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவு காணப்படுகிறது.

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லிங்கத் திருமேனியில், எமனின் பாசக் கயிறு பட்டதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது.

ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ராமநாதர் லிங்கத்தை அனுமன் தன் வாலால் கட்டி இழுத்ததால், அனுமனின் வால்பட்ட தழும்பு லிங்கத்தில் பதிந்திருக்கிறது.

இதேபோல் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள சிவன் கோவிலில் அருள்புரியும் லிங்கத்திலும் அனுமனின் வால்பட்ட தழும்பு உள்ளது.

திருவிஜயமங்கைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவிஜய தேஸ்வரர் லிங்கத்தி ல், அர்ஜுனனின் அம்புபட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.

சூரியனை பார்த்தால் சூப்பர் சக்தி கிடைக்கும்’-நாசா தகவல்..!

சூரியனை பார்த்தால் சூப்பர் சக்தி கிடைக்கும்’-நாசா தகவல்..!
அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது இந்தியாவில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவில் யோகக் கலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் சூரியவை பார்க்கும் வழக்கமானது, பண்டைய மாயன் நாகரீகம், எகிப்து, திபெத் ஆகிய நாடுகளில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சூரியனை பார்த்தால் டெலிபதி போன்ற ‘Super Human Abilities’ எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாசா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது.
எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் அறியப்படுகிறது. ஆனால் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளது நாசா.
சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும்.
இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம்.
பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக்குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
தன்னை ’சூரியக்கதிர்களை உண்பவன்’ என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த ”ஹிரா ரத்தன் மானக்” என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு நாசா விஞ்ஞானிகளை அணுகினார்.
நாசாவினால் நிதியுதவி பெறக்கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது, பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர்.
100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர்வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதல் மூன்று மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று ’ஹைபோதாலமஸ் பாதை ’என்ற அங்கத்தில் தனது சக்தியை சேர்க்கிறது.
கண்களில் உள்ள ரெட்டினாவுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையே ’ஹைபோதாலமஸ் ’ என அழைக்கப்படுகிறது.
இதன் பின்னர் இந்த பாதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது. அதன் பின்னர் மன அழுத்தம், பசி ஆகியவை சிறிது, சிறிதாக குறையத் தொடங்குமாம்.
மேலும் மனிதனிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் மறைந்து போகுமாம்.
சூரியனை பார்த்தல் செயல்முறையை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்குள், உடல் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம்.
இதற்கு காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வண்ணங்கள், நம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவதுதான்.
வண்ண மருத்துவம் எனப்படும் துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும், இதயத்திற்கு மஞ்சள், சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றனவாம்.
இப்படி வானவில்லில் இருக்கக் கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை போக்குகிறதாம்.
வண்ண மருத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ் தான் பல வண்ணங்களில் இருக்கக் கூடிய சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாது என கூறப்படுகிறதாம்.
சூரியனை பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள், உடலுக்கு தேவை உணவு இல்லை எனவும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல்தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர்.
அந்த ஆற்றலானது சூரிய ஒளி மூலமே கிடைத்துவிடுவதால், உணவு தேவைப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சூரியக்கதிர்களை நேரடியாக பார்ப்பது கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சரியான நேரத்தில், சரியான வழிமுறையில் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
சூரியனை பார்ப்பதை பல ஆண்டுகளாக செய்து வருபவர்களின் கண்களை சோதித்த போது, அவர்களின் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது

Monday, February 18, 2019

Meaning of Lingam / லிங்கத்திற்குள் இவ்வளவு ரகசியங்களா ? ஆன்மீகம் மற்றும...

அதிசய சூரியகாந்த சிவலிங்கம்

வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை

வீட்டில் இருக்கும்
தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை
பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் தூபம். வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது.

`குளிகன்’ இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சரி... அது என்ன குளிகை நேரம்... யார் அந்தக் குளிகன்? `

`குளிகன்’ இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சரி... அது என்ன குளிகை நேரம்... யார் அந்தக் குளிகன்? `
குளிகன் என்ற மாந்தன், சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வன்’ என்கிறது புராணம்.
குளிகனுக்கு, மாந்தி என்ற தங்கையும் உண்டு. குளிகனின் தாயார் ஜேஷ்டாதேவி `தவ்வை’ என்று தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
மூத்த தேவி, மாயை, ஏகவேணி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும், எளிய மக்களால் `மூதேவி’ என்றே இவர் அழைக்கப்படுகிறார். திருமகளான ஸ்ரீதேவியின் அக்கா என்பதால், இவர் `மூத்த தேவி’ எனப்பட்டார்.
குளிகை நேரம்
ராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்துவருகிறது.
இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.
குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்துகொண்டே இருக்கும்.
இதனால் அடகுவைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டுசெல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது.
அதேபோல, குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.
`சரி அது எப்படி குளிகன் மட்டும் நல்ல நிகழ்வுகள் நடக்கக் காரணமாக இருக்கிறான்?’
இதோ கதைக்குள் செல்வோம், குளிகனின் பிறப்பே ஒரு நல்ல நிகழ்வைத் தொடங்கத்தான் உருவானது.
ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத சூலியாக இருந்தார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் ராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தார்.
யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும்கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்றும், அதற்கு என்ன வழி என்றும் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், ``கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்’’ என்று யோசனை சொன்னார்.
அவ்வளவுதான், நவக்கிரகங்களையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டார் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் யாவும் தவித்துப்போயினர்.
இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்துகொண்டனர். ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலைகொண்டனர்.
இராவணன்
இதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெரும் தவிப்பில்கிடந்தார். வலி அதிகம் இருந்தபோதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவகிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டனர்.
இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். ``இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்.
அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம்’’ என்றார்.
அதன்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார்.
குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்து அவனுக்கு `மேகநாதன்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது.
தான் பிறக்கும்போதே நல்லதை நடத்திவைத்ததால், குளிகன் நவகிரகங்களால் பாராட்டப்பட்டார். `குளிகை நேரம்’ என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம், `காரிய விருத்தி நேரம்’ என ஆசீர்வதிக்கவும்பட்டது.
இதனாலேயே இந்த நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்று கூறப்பட்டது. குளிர்விக்கும் தன்மையைக்கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டான்.
குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்.

மஹாவில்வம்(maghavilvam): தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...

மஹாவில்வம்(maghavilvam): தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...: நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டகாலம் தற்போது இருந்தாலும் சரி ;நீங்கள் இந...

மஹாவில்வம்(maghavilvam): அனைத்து கஷ்டங்களையும் சில வாரங்களிலேயே தீர்த்துவைக...

மஹாவில்வம்(maghavilvam): அனைத்து கஷ்டங்களையும் சில வாரங்களிலேயே தீர்த்துவைக...: உங்களது வாழ்க்கை இன்று முதல் அடியோடு மாறிட நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்;அசைவம்,மது இரண்டையும் கைவிடவேண்டும்;புரோட்டாவும்,...

Sunday, February 17, 2019

மஹாவில்வம்(maghavilvam): திக்குவாய்,பேச்சுக்குறைபாடினை நீக்கும் மழை மாரியம்...

மஹாவில்வம்(maghavilvam): திக்குவாய்,பேச்சுக்குறைபாடினை நீக்கும் மழை மாரியம்...: புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார் கோவிலில் இருந்து 5 கி மீ தொலைவில் மின்னாமொழி கிராமம் இருக்கின்றது;இங்கே மழை மாரியம்மன் கோவில் இருக்கின...

இந்த சிவாலயத்தில் நந்தி விலகி இருக்கும்! ஏன் தெரியுமா? | Thenupuriswarar...

பட்டீஸ்வரம் துர்க்கை ஆலயம்


கோடான கோடி நன்றிகள்https://santhipriya.com/2011/02/patteeswaran-durgaa-temple.html

Sunday, February 10, 2019

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன்.
பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.
அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.
ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

Saturday, February 9, 2019

தினமும் ராமாயணம் படிக்க முடியாதவர்கள் இதைச் சொன்னால் போதும்! முழு பலன்..!!தினமும் ராமாயணம் படிக்க முடியாதவர்கள் இதைச் சொன்னால் போதும்! முழு பலன்..!!
தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?
என்றால் ...
நிச்சயம் முடியும் எப்படி?
காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார். இதோ உங்களுக்காக....!
|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||
|| சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||
|| அங்குல்யா பரண சோபிதம் ||
|| சூடாமணி தர்சனகரம் ||
|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||
|| வைதேஹி மனோகரம் ||
|| வானர சைன்ய சேவிதம் ||
|| சர்வமங்கள கார்யானுகூலம் ||
|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்
இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.
நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்.

Thursday, February 7, 2019

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன || டிஎன்ஏ ஜோதிடம் || சித்தர்பூமி |

இல்வாழ்க்கை தத்துவம் கூறும் திருக்கோயில்கோடான கோடி நன்றிகள்


இல்வாழ்க்கை தத்துவம் கூறும் திருக்கோயில்
===============================================
வெள்ளை நிற சுக்கிலமும் (சுக்கிரன்), சிவப்பு நிற சுரோணிதமும் (செவ்வாய்) இணைந்து கருப்பை எனும் கருவறையில் இறைவனை (உயிரை) தோற்றுவிக்கிறது என்பதை கூறுவதே கோவிலின் தத்துவம்.
கோவில் சுவரில் இருக்கும் வெள்ளை நிற கோடு - சுக்கிலம்
கோவில் சுவரில் இருக்கும் சிவப்பு நிற கோடு - சுரோணிதம்
விபூதி - சுக்கிரன், குங்குமம் - செவ்வாய்
விபூதி மற்றும் குங்குமம் இணைந்து அணிவது இல்வாழ்க்கை தத்துவத்தை குறிக்கிறது.

Wednesday, February 6, 2019

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்
அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்
பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்
கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக
ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்
மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்
திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்
புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்
ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்
மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்
பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்
உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி
ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்
சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்
சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்
விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்
அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்
மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி
உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்
திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்
அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்
சதயம். ... ராகு. ... ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்
பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்
உத்திராட்டாதி ... சனி. ... கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்.

Tuesday, February 5, 2019

நெற்றியில் குங்குமமும் சந்தனமும் இடுவது ஏன் தெரியுமா…? வியக்க வைக்கும் அறிவியல் காரணம்.!

நெற்றியில் குங்குமமும் சந்தனமும் இடுவது ஏன் தெரியுமா…? வியக்க வைக்கும் அறிவியல் காரணம்.!
குளிர்ச்சி தரக் கூடிய சந்தனத்தை நெற்றியிலும், உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருப்பதை பார்த்தால் நமக்கு நகைச்சுவையாக தோன்றினாலும் அதற்கு பின் அறிவியல் காரணங்களும் ஒளிந்துள்ளன.
சந்தனம்..
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகவே செல்கின்றன. ஆகவே நெற்றிப்பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தி இருக்கிறது. ஆனால் அந்தச்சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அங்கு பூசப்படும் சந்தனம் நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்கிறது.
சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு உதவுகிறது.
குங்குமம்..
நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும்போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல், மன உளைச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.
சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றை தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். இதன் மூலம் உணர்ச்சியற்ற நரம்புகள் கூட தூண்டப்படுகின்றன.