Thursday, March 28, 2019

பில்லி, சூனியத்திற்கு சிறந்த பரிகாரம் !!

நாம் சக்கரத்தாழ்வாரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து, சிவப்பு மலர்களால் மாலை சூட்டி, மனமுருகி "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம " என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும். மேலும் சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து, அவரை 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தடையில்லாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு எனப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னதி எழுப்புவர்.
சக்கரத்தாழ்வாரை வணங்கிட நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும். மன அமைதியின்மை, செய்யும் தொழிலில் நிலையற்ற தன்மை, கெட்ட கனவு, எதிர்மறை எண்ணங்கள், பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ஏவல், உடல் நலம் சரியில்லாமல் சித்தபிரமை, புத்தி சுவாதீனம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதுரையில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் பிரச்சனைகளையும், துன்பங்களையும் தீர்த்து வைப்பார்.
‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். அப்படியென்றால் அவரிடம் அபயம் என்று போய் நின்றால், அடுத்த கணமே நம்மை நம் இடர்களில் இருந்து காத்தருள்வார். திருமாலின் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், அது அந்த பெருமாளுக்கே ஏற்பட்ட இடையூறாக கருதி விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார்.
நாம் அவரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும் !!!

ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அருளிய சுய நாம ஜெபம்

ஆன்மீகம் என்ற வார்த்தையின் அடிப்படையில், அவை தொடர்பாக நாம் மேலும் மந்திரம், ஜெபம், தியானம், ஆலயங்கள் என்று நிறைய வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கின்றோம். தியானம் என்றவுடன் நம் மனதில் தோன்றுவது என்ன? நாம் இதை எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கின்றோம்? உலகில் எவ்வளவு வகையான தியான முறைகள் உள்ளன? நம்மில் ஒரு சிலர், தியானம் என்று ஆரம்பிப்பதில் இருந்து அதை செயல்முறைப் படுத்த முடியாமல், குழப்பத்தில் ஆழ்பவர்களும் உண்டு.
ஆக, "சுய நாம ஜெபம்" என்றால் என்ன? நம்மில் சிலர், “சுய நாம ஜெபம் செய்தல் நன்று” என்று பிறர் சொல்லக் கேட்டு இருப்போம். ஸ்ரீவாத்தியார் அவர்கள் சுய நாம ஜெபத்தை, ஒரு மிகச் சிறந்த, சக்தி வாய்ந்த தியானமாக உரைக்கின்றார். தியானம் என்றவுடன் அதை மிகப் பெரிய அண்டமாக உருவகித்து, அதை கடினமான ஒரு செயலாக பாவித்து அணுக முற்படுகின்றோம். அன்புள்ளம் கொண்ட ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்கள், தியானம் என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தருவிக்கின்றார்.
சுய நாம ஜெபம் செய்யும் முறை
சுய நாம ஜெபம் என்றவுடன், வார்த்தையிலே உள்ளது போல் (சுய நாமம்) நம்முடைய நாமத்தை உச்சரிப்பது என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒருவருடைய பெயர் கிருஷ்ணன் என்றால் அவர் “கிருஷ்ணன், கிருஷ்ணன், கிருஷ்ணன்” என்று தொடர்ந்து உச்சரித்தல் வேண்டும். இதற்கும் மேலாக உங்கள் அன்னை உங்களை எவ்வாறு அழைக்கின்றார்களோ அவ்வாறே உச்சரித்தல் நலம் பயக்கும். கிருஷ்ணன் என்ற உங்கள் பெயரை, உங்கள் அன்னை, “கண்ணா” என்று அழைத்தால் நீங்கள் “கண்ணா, கண்ணா, கண்ணா” என்றே உச்சரித்தல் வேண்டும்.
சுய நாம ஜெபத்தைப் பயற்சி செய்யும் பொழுது, ஸ்ரீவாத்தியார் அவர்கள் கீழ்காணும் சில விதிமுறைகளை நினைவில் கொள்ளும் படி அறிவுறுத்துகின்றார்.
Star தரையில் நேரடியாக அமராது, பலகையிலோ, துணியை விரித்து அதற்கு மேலோ அல்லது தர்ப்பைப் பாயிலோ அமர்தல் வேண்டும்.
Star அமரும் திசை கிழக்கு அல்லது வடக்கு திசையாக இருத்தல் அவசியமானது. பொதுவாக இத்திசையில் அமர்ந்து பூஜைகளை நிகழ்த்துதல் நலம் பயக்கும்.
Star சுய நாம ஜெபம் செய்யும் நேரம் ஒரே நேரமாக இருத்தல் வேண்டும். உதாரணமாக ஒருவர் காலை 6 மணிக்கு சுய நாம ஜெபம் செய்கின்றார் என்றால், ஒவ்வொரு நாளிலும் அதே நேரத்தில் நிகழ்த்துதல் வேண்டும்.
Star சுய நாம ஜெபம் செய்யும் நேரத்தின் அளவை சிறிது சிறிதாக அதிகரிப்பதே முறையான படிப்படியான பயிற்சியாக அமையும். முதலில் 5 அல்லது 10 நிமிடத்தில் ஆரம்பித்து, சிறிது நாட்கள் பயிற்சி செய்த பின்னர், படிப்படியாக கால அளவை அதிகரிப்பதே உசிதமாகும்.
இப்பிறப்பில் இவ்வுலகத்திற்கு நம்மை அடையாளப்படுத்துவது நம் நாமமே. சுய நாம ஜெபத்தினை முறையாக தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருப்பதன் மூலம், ஒரு கட்டத்தில் நாம் நம்மை அறிவதற்கு இதுவே உறுதுணையாக அமையும் என்று ஸ்ரீவாத்தியார் அவர்கள் கூறியுள்ளார். நம்முடைய நாமமாக இருந்தாலும் நாம் நம் நாமத்தை உரைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமே. மற்றவர்களுக்கு நம் நாமமே அடையாளம் காண உதவி செய்கின்றது. தூக்கத்தில் நம் நாமத்தைக் கூறி எழுப்பியவுடன் உடனடியாக எழுந்துக் கொள்கின்றோம் அல்லவா! ஆகவே நம் நாமத்திற்கும், இந்த உலகத்தில் அவற்றை தாங்கி வாழ்வதற்கும் ஒரு பிணைப்பு உள்ளது என்பது நாம் அறிதல் வேண்டும். இத்தகைய பிணைப்பினை உணர்விப்பதற்கு உறுதுணையாக இருப்பதே சுய நாம ஜெபமாகும்.
சித்தர்களும், மஹான்களும் நமக்கு சுய நாம ஜெபத்தின் பல வழிமுறைகளை நமக்கென வித்திட்டு வழிவகுத்துத் தந்துள்ளார்கள். உதாரணமாக, ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (கர்நாடக சங்கீத மேதை) மற்றும் ஸ்ரீஆஞ்சநேய மஹாபிரபும் சுய நாம ஜெபத்தினை கையாண்டு ஸ்ரீராமரின் பரிபூரண தெய்வ தரிசனத்தைப் பெற்றனர்.
நம்முடைய நாமத்தை உச்சரித்தல் என்பது, அமைதியாக உரைத்தல் என்று மட்டும் பொருள் கொள்ளல் ஆகாது. நாம் நிறைய முறைகளில் நம்முடைய நாமத்தை உச்சரிக்கலாம். நம்முடைய நாமத்தை ஒரு ராகமாக, இசையாகக் கூட உச்சரிக்கலாம். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் தன்னுடைய நாமத்தை வித விதமான ராகத்தில் உச்சரித்தே ஸ்ரீராமரின் தரிசனத்தைப் பெற்றார் என்று ஸ்ரீவாத்தியார் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே ஒருவருக்கு ஒருவர், தம்முடைய நாமத்தினை உச்சரிப்பதிலும், அவற்றை கையாளும் முறையிலும் வித்தியாசப்படுகின்றார் என்றும் பயிற்சியின் ஆழத்தைப் பொறுத்தும் தியான நிலை வெகுவாக கைகூடும் என்பதை அறியவும். Thiyagarajar
ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, "சுந்தரா" என்று தன் அன்னை அழைக்கும் பெயரையே சுய நாம ஜெபமாக ஏற்றார். ஸ்ரீவாத்தியார் அவர்கள் சுய நாம ஜெபம் என்பது தியானத்திற்கு மிகவும் எளிதான வழியாக உரைக்கிறார். இவை எளிதானது மட்டுமல்ல, மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
மேலும் அவர் நிறைய தருணங்களில், தம் சிஷ்யர்கள் அவரவர் குருவோடு சுய நாம ஜெபத்தின் மூலம் தொடர்பு கொண்டிருப்பதை பகிர்ந்தது நினைவு கூற முடிகின்றது. ஆம், சுய நாம ஜெபத்தினை முறையாக, தொடர்ந்து பயிற்சி செய்வதின் மூலம் பல ஆன்மீக தரிசனங்களை நம்மால் காண முடியும் என்பதையும், இயந்த கதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் வாழ்க்கையை குருவின் அருளால் முறைப்படுத்தவும் வழிவகுக்கும் என்பதை அறிவீர்.
ஒன்றை மட்டும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ளுதல் அவசியம். வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்றால் அவை முறையே கனியும் வரை பொருத்திருந்து அதற்கான முயற்சியை தொடர வேண்டும். ஆகவே, ஒரே நாளில்அதற்குண்டான பயனை அடைய வேண்டும், அற்புதம் நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து, ஸ்ரீவாத்தியார் அவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து பின்பற்றுவதின் மூலம் அவர் நமக்கு தேவையானதை தகுந்த தருணத்தில் அதை தருவிப்பார்.
ஸ்ரீவாத்தியார் அவர்கள் முக்கியமானதாக குறிப்பிட்டது என்னவென்றால் நமக்கு என்ன தேவை என்று நமக்கு தெரியாது. குருவிற்கே அவை தெரியும், எந்த தருணத்தில் எப்போது அதை தருவிக்க வேண்டும் என்று. தன்னுடைய கடுமையான குரு குலவாசத்தில் தம் குருவாம், ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்தரிடம் பயின்றதை நாம் பயனுற வேண்டி மிக எளிமையாக இத்தகைய சுய நாம ஜெப முறையை நமக்கு அளித்ததற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்துதல் வேண்டும். நாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்தது உண்டா? ஸ்ரீவாத்தியார் எந்த ஒரு சிரமத்திற்கும் நம்மை உட்படுத்தாது, எவ்வளவு எளிமையான தியான முறையை நமக்காக வழிவகுத்துத் தந்துள்ளார். அதற்காக நம்மிடம் அவர் எதிர்ப்பார்ப்பது என்ன? ஒவ்வொருவரும் தன் பிறப்பை எடுக்கும் முன்னர் இறைவனிடம் சத்தியம் செய்து கொடுப்பது என்ன? நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அறிந்து, கர்மவினை சுழற்சியை களைந்து இறைவனை அடைய வேண்டும். நாம் அவ்வழியில் செல்ல என்றாவது முயன்று இருக்கின்றோமா? இவற்றிற்கான உண்மை நிலைகளை நாம் ஆராய்வதோடு, ஸ்ரீவாத்தியார் அவர்கள் நமக்கு அளித்த பரந்த கடல் போன்ற ஆன்மீக விஷயங்களில், சிலவற்றையாவது நாம் கடைபிடிக்க முயற்சி செய்வோம் என்று உறுதி கொள்வோம்.

 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 

 

ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்தர் அருளிய கர தரிசனம்ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்தர் அருளிய கர தரிசனம்
காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் செய்ய வேண்டிய எளிய 
இறைவழிபாடுகள் உண்டு. சித்த புருஷர்கள் அருள்கின்ற இவ்வெளிய இறை வணக்க முறைகளைப் பின்பற்றினால் நித்ய வாழ்க்கை சாந்தமாக, சீராக அமையும். காரணம், இறையருளன்றி நம் விரலை ஒரு முறை கூட அசைக்க முடியாது என்பதை உணர உணர "எல்லாம் அவன் செயல், அனைத்தும் நம் கர்ம வினைப்படியே நடக்கின்றது, அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம்" என்ற பேருண்மை புலப்படத்துவங்கும்.
இதற்காகவே நம் தினசரி வாழ்க்கை துவங்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் எழும் போது "பிராப்தப் பிங்களாசனம்" என்ற எளிய ஆசனத்தையும் "சங்கர நாராயண கர தரிசனத்தையும்" சித்த புருஷர்கள் அளித்துள்ளனர். இறை நினைவோடு எழுந்தால் அதுவே உத்தமமானது. திடுக்கிட்டு எழுதல் கூடாது. தானாகவே சாந்தமாகத் துயிலெழுகின்ற தன்மையைப் பெற வேண்டும். இதற்கு சில சயன யோகப் பயிற்சி முறைகள் உண்டு. இதைத் தக்க குருவை நாடி அறிதல் வேண்டும்.
ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனம்
விடியற்காலையில் எழுவதே சிறந்தது. விழிப்பு நிலையை உணர்ந்தவுடன் கண்களைத் திறவாது இரு கரங்களையும் ஒன்று சேர்த்து, உள்ளங்கைகளைப் பரந்து, விரித்து இரு கண்களால் இரு உள்ளங்கைகளையும் தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசிக்கின்ற போது வலது உள்ளங்கை பகுதியில்: சுக்கிர விரல் (கட்டை விரல்), குருவிரல் (ஆள்காட்டி விரல்), சனி விரல்களின்(நடுவிரல்) கீழ்ப்பகுதிகளில் சிவ லிங்க தரிசனம் தருவதாக பாவித்து, உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் ஸ்ரீகோமதி அம்பாள் தரிசனம் தருவதாகவும் பாவித்து துதிக்க வேண்டும். இடது கை பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. வலது கையில் இருப்பதே இடது கைகளிலுமுள்ளது. எனவே பிரபஞ்சமாயும், பிரபஞ்சத்தினுள்ளும், பிரபஞ்சத்திற்கு அப்பாலுமாய் விளங்கும் ஹரிஹர சக்தி ரூபம், பரப்பிரம்மம், பிறகு கை கூப்பி ஸ்ரீஉத்தாதலகர் வந்தனம் என்று வணங்கி மீண்டும் உள்ளங்கைகளை விரித்து "ஸ்ரீஉத்தாதலகர் மஹரிஷியே போற்றி" அல்லது"ஸ்ரீ உத்தாதலகராய நம:" என்று ஸ்ரீ உத்தாதலகர் மஹரிஷியைப் போற்றி வணங்க வேண்டும். காரணம் என்ன?
ஸ்ரீசேஷ்டா தேவிஅமுதம் பெற தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலை கடைந்த போது மூத்த தேவி என்ற ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்தனள் (நாம் வழக்கில் "மூதேவி" என்று அழைப்போம், இது மிகவும் தவறு). ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்த போது எவரும் ஏற்கவில்லை. இதனால் சினமுற்ற மூத்த தேவி சிவனிடம் ஓடுகிறாள். "சிவபெருமானே! பாற்கடலில் பதிந்து கிடந்த என்னை அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்து என்ன எழும்பச் செய்தனர். பெண் குலத்தில் உதித்த என்னை மூத்த தேவி என்பதால் அசுரர்களோ, தேவர்களோ யாரும் ஏற்கவில்லை. நான் நுழைந்தால் அங்கே செல்வம் நிற்காது என்பதால் என்னைக் கண்ட அனைவரும் ஓடுகின்றனர். செல்வமில்லாக் குறை எனதல்லவே? என்னைப் படைத்ததற்குரிய தொழிலைத்தானே நான் செய்ய முடியும். பாற்கடலில் வசித்த என்னை எழுப்பியது அவர்கள் குற்றமல்லவா? என்னை யாரும் ஏற்காவிடில் நான் எங்கு செல்வேன்? தாங்கள் தான் எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று வேண்டினாள்.
வேண்டியதை வேண்டியபடி உடன் அருளும் கருணை வெள்ளமல்லவா சிவபெருமான். மூத்த தேவி சாபமிட்டால் அது பலித்து தேவர்களையும் அசுரர்களையும் தாக்கும். எனவே சிவபெருமான், யாரொருவர், மூத்த தேவியை மணக்கிறாரோ அவருக்கு விசேஷமான சக்திகள் உருவாகும், என்று அறிவித்தும் ஒருவரும் முன்வரவில்லை. காரணம் மூத்ததேவி எங்காவது நுழைந்தால் எனில் அங்கு தரித்திரம் தாண்டவமாடும் என்பதால் தான். ஆனால் ஸ்ரீஉத்தாதலகர் என்ற முனிவர் எவ்வித சுயநலமின்றி மணக்க முன் வந்தார். இவர் தான் உலகிற்கு கடுக்கனின் மஹிமையை வெளிப்படுத்தியவர். தியாகசீலங்கொண்ட தவசீலர். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றியும் விசேஷ சக்திகளைக் கூட எதிர்பாராது தன்னலமின்றி அவர் மூத்த தேவியை (ஸ்ரீசேஷ்டா தேவி) மணந்தார்.
மூத்த தேவியை மணந்தவுடன் வறுமையும், பசியும், தரித்திரமும் அவர் குடிலில் தாண்டவமாடின. அவற்றை உவப்புடன் ஏற்று, திறந்த உள்ளத்துடன், மனநிறைவுடன் மூத்த தேவியுடன் நன்கு வாழ்ந்து அவர் தேவ லோகத்தை ஒரு சாபத்திலிருந்து மீட்டார். ஸ்ரீஉத்தாதலகரின் தன்னலமில்லாத் தொண்டை கண்டு சிவபெருமானே மகிழ்ந்து மூத்த தேவி வாக்கின் மூலம் ஸ்ரீஉத்தாதலகருக்கு அனுக்ரஹம் புரிந்தார்.
மூத்ததேவி, "முனி சிருஷ்டரே அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்க, தாங்கள் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சுயநலங்கருதாது என்னை மணந்து ஒரு மஹரிஷியின் பத்தினி என்ற ஸ்தானத்திற்கு உயர்த்தி விட்டீர்கள். சிவனருளால், இன்றிலிருந்து யாரொருவர் விடியற்காலை எழுந்த உடன் தன் கரங்களை மலர விரித்து வலது உள்ளங்கைக் கீழ் மேட்டைப் பார்த்து தரிசனம் செய்து "ஸ்ரீஉத்தாதலகராய நம:" என்று தங்கள் திருநாமம் செப்பித் துதிக்கின்றார்களோ அவர்கள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வர். தங்களை கரம் மூலம் தரிசனம் பெறும் போது தங்களது தன்னலமில்லாத தொண்டும், எதுவரினும் ஏற்போம் என்ற கர்மயோக மனப்பான்மையும் அவர்களிடம் உருப்பெற வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தாள்.
எனவே சித்தர்கள் அருள்கின்ற காலை இறை வழிபாட்டில் :
1. ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனமும் 
2. ஸ்ரீஉத்தாதலகர் தியானமும் இடம் பெறுகின்றன.
இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கப் பட்டாலும் இவ்விரண்டையும் நிறைவேற்றிட பத்து வினாடிகள் கூட ஆகாது! என்னே, எளிய வழிபாடு! ஆனால் பெறுகின்ற பலன்களோ அபரிதம்.
பிராப்தப் பிங்களாசனம்விழிப்புணர்ச்சி வந்தவுடன் இடது புறம் ஒருக்களித்து அந்நிலையிலேயே இடது கையைத் தரையில் அல்லது கட்டிலில் ஊன்றி சாய்ந்த நிலையிலேயே எழுந்து உட்கார வேண்டும். இம்முறையினால் வலது புற நாசியில் சூரிய கலையில் சுவாசம் சீராக ஓடி மனத்தினைச் சாந்தப்படுத்தும்.
1. இதனால் இரத்த அழுத்த நோய்கள் தணியும். 
2. என்ன ஓட்டங்கள் குறைந்து சீர்படும் 
3. ஆழ்ந்த மூச்சு சுவாசம் ஏற்படும்.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இதன் பின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், பெற்றோர்கள், குலகுரு ஆகியோரை மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். இவ்வெளிய முறைகளையே ப்ராத்த பூஜை (காலை பூஜை) என சித்த புருஷர்கள் அருள்கின்றனர். உள்ளங்கை தரிசனமே நவகிரகங்களின் தரிசனமாக மலர்ந்து நம் நித்திய வாழ்வின் கர்மங்களைப் பகுத்து வகுக்கின்ற ஸ்ரீ நவகிரஹ மூர்த்திகளின் அருளையும் பெற்றுத் தருகிறது. எவ்வாறு?
1. கட்டை விரல்.... சுக்கிரன் 
2. ஆள்காட்டி விரல் ..... குரு 
3. நடுவிரல்.....சனி 
4. மோதிர விரல்.....சூரியன் 
5. சுண்டு விரல்.....புதன்
உள்ளங்கை = சந்திர மேடு 
மேடுகள் = செவ்வாய் மேடு 
ராகுவும் (Moon's Ascending Node) கேதுவும் (Moon's Descending Node), பழங்கால வானியியல் கணிதப்படி சனி, செவ்வாய் கிரகங்களின் பாற்படும்.
இதன் பிறகு பெற்றோர்களை நமஸ்கரித்தல் அல்லது மானசீகமாகவேனும் நமஸ்கரித்தல், குலதெய்வ, இஷ்ட தெய்வ மூர்த்திகளைத் தியானித்தல், குரு தியானம் இவற்றுடன் காலை வழிபாட்டின் முதல் அம்சம் நிறைவு பெறுகிறது
Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

www.agasthiar.org

The unique non-pareil cent percent divine Websites.

எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா

http://www.kulaluravuthiagi.com/index.htm******************

http://www.agasthiar.org/tstmfr.htm

******************

திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

F

பரிகாரத்தால் கடுகளவு மாற்ற முடியாது - நவகிரகங்கள் தோஷம் - ஏழரை சனி - ராக...

உங்கள் நட்சத்திரத்திற்கு வணங்க வேண்டிய மரம் எது தெரியுமா? நினைத்தது நடக்...

Sunday, March 24, 2019

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அன்ன தோஷம் ரகசியங்களும் பரிகாரங்களும்-Ann...

எளிய பரிகாரங்கள்

எளிய பரிகாரங்கள்
எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும்.
அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். நான் தெரிந்து கொண்ட சிலவற்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்
கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,
கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்
நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]
இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,
செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, .
நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்
தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,
மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில்
தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.
கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,
மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்
வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும்
கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,
திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்
குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு
எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ,ஏதும் பூதகண
சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி
12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு
சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.
21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி
வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில்
தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி
சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,
திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,
பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்
தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்
நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோவிலில் கால பைரவரையும்,
விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும்
வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை
21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,
நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும்.
இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும்
சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய்,
மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத
யாகங்களை செய்த பலனை பெறுவார்கள்.
அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு
காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால்
எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு
தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால்,
விரைவில் திருமணம் நடை பெறும்.
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு
அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது.
இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான
அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம்.
ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள்
துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட
நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில்
துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு
ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு
சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து
27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி,
குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில்
வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை
சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு
எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட
பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று
சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு
செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட
மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று
முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி
அர்ச்சனை செய்யவும்.
ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள
இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில்
தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில்
காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால்
விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து
மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து
நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில்
கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை
சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட
சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல்,
பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில்
பூஜை நடக்க உதவுதல்,
அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்-
ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம்
செய்ததற்குச் சமம்.
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க ,
வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி
வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற
பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா
பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
எத்தகைய கிரக தோசமானாலும் தினமும்
சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம்
செய்வது மிக, மிக நன்மை தரும்.
வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால்
குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி
நிவர்த்திப் பரிகாரங்கள் -
மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது
ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது,
லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது,
ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும்.
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து,
அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால்
நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று
அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை
எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.
இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில்
தீர்த்தமாட இயலாதவர்கள் ,கடல் நீரின் ஒரு பகுதியாக
இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய
கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள்,
தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.
அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்
பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர்
ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம்
செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை,
மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி,
எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள்
உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த
அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.

விதியை மாற்றும் மந்திரம் /Vithiyai matrum manthiram

Tuesday, March 19, 2019

இதை பறவைகளுக்கு வைத்தால் புண்ணியம் கிடைக்கும்...!!!!

பங்குனி உத்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்
3. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.
4. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.
அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்
ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
5. சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
6. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்
7. பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.
8. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
9. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
10. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
11. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

Monday, March 18, 2019

சைவம் என்றால் என்ன? வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம் (What does it mean ...

துன்பங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு? (How to rise above your suffering)

மொட்டை அடிப்பதன் பின் உள்ள ரகசியம் | மொட்டை அடித்தல் சரியா தவறா ? | why ...

நீங்கள் சிவனை வழிபடுபவரா? | இதை பார்க்கவேண்டாம் | siva valipadu | shiva ...

நீண்ட ஆயுளைக் கொடுக்கும் தருமமும், தானமும்!!

பெருமாளை எப்படி வணங்குவது

நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்தது ஏன்...???

Sunday, March 17, 2019

கடுமையான பாவ வினைகளை போக்கும் சிவ மந்திர ஜபம்!!!

கோடான கோடி நன்றிகள்காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ

 நமஹ


Without Removing 3 messy things No spirituality | KavanagarDaily

5 steps of chanting mantras | #Kavanagar Daily

TRY TO LEAVE YOUR BODY BEFORE IT LEAVES YOU | Kavanagar Daily

தீவினைகள் நீங்க ...கவலைகள் நீங்க ...சிவ பகவானை அடைய மிக எளிய வழி -- Thi...

அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை சமாளிக்க ஒரு தியானம்...Easy Meditation for ...

Friday, March 15, 2019

சகல செல்வங்களை பெற இந்த வீடியோ பாருங்க AFA

குலதெய்வ வழிபாடு கர்ம வினைகளை நீக்குமா...?

விளக்கு ஏற்றுவதின் பலன்கள் | வீட்டில் விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்கள்

பசு பூஜித்த புண்ணிய தலங்கள்

பசு பூஜித்த புண்ணிய தலங்கள்
சூரிய வழிபாட்டிற்கு அடுத்ததாக மாட்டுப் பொங்கல் மனிதர்களின் வாழ்வினூடே ஒன்றாகிவிட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாளாகும். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டது. ரிஷபம், நந்தி, பசுக் கூட்டம் என்று சனாதனமான இந்து மதம்இதை பல வகையாகப் பிரிக்கின்றன. இவை மூன்றையும் எப்போதும் வழிபடச் சொல்கின்றது, இந்துமதம். பசுக் குலத்தையே நந்த குலம் என்றழைப்பர். ஆண் காளையை நந்தி என்றும் பெண் பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன்பசுவை மேய்த்ததாலே கோபாலன் என்று பெயர்பெற்றான். பசுக்களை மேய்த்ததாலேயே அவர்கள் நந்த கோபர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையின் உருவை கொண்டவரையே ரிஷபம் என்கிறோம். காளையின் வடிவில் படுத்திருக்கும் இவரே ரிஷப தேவர் ஆவார். இவரைத்தான் நாம் நந்தி என்றழைக்கிறோம்.ஈசன் நந்திமீதேறி வருவான் என்பதை ‘வெள்ளை எருதேறி’, ‘விடையேறி’ என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன. தேவாரத்தில் ‘நந்தி நாமம் நமசிவாய’ என்றும், ‘நங்கள் நாதனாம் நந்தி’ என்றும் திருமந்திரம் பேசுகிறது. ஆகவே, நந்தியும் சிவமும் வெவ்வேறல்ல என்பது தெளிவாகிறது. கோயில்களில் விழா நடக்கும்போது நந்திக் கொடியை பறக்க விடுவர். ரிஷப தேவருக்கும், நந்தியம் பெருமானுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவரும் வெவ்வேறானவர்கள். கருவறைக்கு நேரேயுள்ள காளை வடிவம் கொண்ட ரிஷப தேவர் என்கிற நந்தியிலிருந்து நந்தியம் பெருமான் வேறுபட்டவர். நந்தியம் பெருமானுக்கு மனித முகத்தில் காளையின் தோற்றத்தோடும், இரண்டு கால்களோடும் இருப்பார். நந்திதேவர் வெண்ணிறமுடையவர். முக்கண் கொண்டவர். நான்கு கைகளை உடையவர். ஜபமாலை, சூலம், அபயவரதம் காணப்படும். நந்தித்தேவரின் நாத ஒலியால் உண்டானதே நந்திநாதோற்பவம் என்ற நதி. இது காசியில் இருக்கிறது.
ஆவுடையார் கோவில் எனும் தலத்தில் கருவறையில் சிவபெருமான் அருவமாக ஆத்மநாதராக அருள்கிறார். அதேபோலரிஷபதேவரும் அருவமாக அமைந்துள்ளார். திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள செங்கம் எனும் தலத்தில் ரிஷபபுரீஸ்வரர் எனும் திருப்பெயரிலேயே அருள்கின்றார். கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருலோக்கி தலத்தில் ரிஷபத்தின் மீது ஈசனும் உமையும் காட்சி தரும் சிற்பம் அற்புதமானது. மதுரைக்கு அருகேயுள்ள காளையார்கோயில் என்றே ஒரு தலமும் உள்ளது. சுந்தரருக்குப் பெருமான் காளை வடிவில் காட்சியளித்தார். பசுவின் திருமுகமே தெய்வீகத்தன்மை பெற்றது. கண்களில் சூரிய சந்திரர்களும், முன்உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீர் வெளியேறும் நீரைப் பெறும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுகத் தாமரை அத்தனை பவித்ரமானது என்பதற்காகவே ஆலயங்களில் வைத்துள்ளனர். பெரியவேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப்போன்ற அமைப்பில் வைத்திருப்பர்.
பாரத தேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனிததீர்த்தங்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர் திருவையாற்றை சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம்பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடைய தலங்களாகும். திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர் போன்ற இந்த ஏழு ஊர்களுக்கும் நந்தியம்பெருமானின்திருமண நிகழ்வை முன்னிட்டு ஈசனும், அம்மையும் திருவுலா வந்து இறுதியில் திருமழபாடியில் திருமணத்தை நடத்துவர். பார்வதி தேவியே பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால் கோமுக்தீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் அருள்கிறார். கரூர் எனும் தலம் காமதேனுவால் பூஐிக்கப்பட்டது. அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் அழைக்கப்படுகிறார்.
கும்பகோணம் திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில் ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். வசிஷ்டரின் சாபத்தைப் பெற்ற காமதேனு பூஜித்த முக்கிய தலமாக ஆவூர்விளங்குகிறது. ‘ஆ’ எனும் பசுவின் பெயராலேயே இத்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பாகும். இது தசரதர் வணங்கிய கோயிலும் ஆகும். வசிஷ்டரால் வாஜபேயம் என்கிற யாகம் இங்கு நிகழ்த்தப்பட்டது. இத்தலம் கும்பகோணத்திற்கு 10 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலைக்கும்விழுப்புரத்திற்குமிடையே ஆவூர் எனும் தலம் உள்ளது. தஞ்சாவூர் அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதிகோயில் இறைவன் பசுபதீஸ்வரர் ஆகும்.தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டு இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அஷ்ட மங்கலச் சின்னங்களில் ஒன்றாகவே ரிஷபத்தை வைத்துள்ளனர். முக்கிய ஹோமங்களில் யாக குண்டலத்தைச் சுற்றிலும் வைக்கப்படும் மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று.
மாடுகளை கட்டும் மந்தைக்கு பட்டி என்று பெயர். இதையொட்டியே நிறைய ஊர்களுக்குப் பின்னால் பட்டி என்று சேர்த்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் எனும் தலத்தில் தேனுபுரீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்கிறார். இது காமதேனுவால் பூஜிக்கப்பட்டதாகும். கொங்கு நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவால் வணங்கப்பட்டவையாகும். அதில் முக்கியமாக பேரூர் தலத்தை ஆதிபட்டீஸ்வரம் என்றும், ஈசனின் பெயர் பட்டீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோண பட்டீஸ்வரத்தையும் பேரூரையும் தனியே பிரித்துக் காட்ட இத்தலத்தை ஆன்பட்டீஸ்வரம் எனவும் அழைத்தனர். பசுக்கள் ஈசனை நோக்கி வழிபட்டு தங்களை தற்காத்துக்கொள்ள கொம்பை பெற்றன. அப்படி தவமிருந்து பெற்ற ஊரே திரு ஆமாத்தூர் என்கிற திருவாமாத்தூர் ஆகும். விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இத்தலத்தை பசுக்களின் தாய்வீடு என்றே அழைப்பர். திருவாரூர், நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும்,காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயர் உண்டு. இந்த கொண்டியான அம்பிகை பசுவடிவத்தில் சிவனை வணங்கியதால் பசுபதீஸ்வரர் ஆனார்.சென்னை குன்றத்தூருக்கு அருகேயுள்ள கோவூரில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அழகு சுந்தரராக காட்சியளித்தார். ‘கோ’ எனும் பசு வழிபட்டதாலேயே இன்றும் கோவூர் என்றழைக்கப்படுகிறது. கோமளம் என்கிற சொல்லுக்கு கறவைப்பசு எனும் பொருளும் உண்டு. இப்படி கறவைப் பசுவால் வழிபடப்பட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ளது. சென்னை மாடம்பாக்கத்திலுள்ள ஈசனை பசு பூஜித்ததால் தேனுபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மிக ஆச்சரியமாக பொள்ளாச்சிக்கு அருகே களந்தை எனும் தலத்தில் கருவறையிலேயே அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளி காட்சியளிக்கிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசனின் திருப்பெயர் வெண்ணெய்ப்பிரான் என்பதாகும். காமதேனுவின் பால் குளமாகத் தேங்கி வெண்ணெயாக மாறியதை வசிஷ்டர் லிங்கமாக்கி வழிபட்டார். தேனு என்று ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயர் இருந்தாலோ அவையெல்லாமுமே பசு பூஜித்த தலங்களாகும்.
மேல்மருவத்தூர் அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே தேன்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதேபோல கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர்உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. நெல்லை சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில்தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். கோ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள். கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசுக் கொட்டிலின் அருகே சென்று அந்த அதிர்வுகளுக்குள் நில்லுங்கள். உங்கள்மனம் அமைதியாவதை உணரலாம். அதனால்தான்பெரியோர்கள் கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வதென்பது கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள். நீங்கள் கடந்து செல்லும்போது பசுவைப் பார்த்தால் மனதுக்குள் வணங்குங்கள், உங்களின் முதல் மரியாதை அங்கு வெளிப்படட்டும்.

Thursday, March 14, 2019

Prize of god you need gifts| தீபம் ஒளி உங்கள் வாழ்க்கை ரகசியம் தீபம் யாற...

திருமந்திரம் 09 - K சிவகுமார் M E - கோவை - Thirumanthiram 09 - K Siv...

சைவ சித்தாந்தம் அறிமுகம்

Can one be Liberated from their Karma ?

Result of Karma | Kavanagar Daily

விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.
2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.
3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.
4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.
5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.
6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.
7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.
8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டி யவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந் தருளி அருள்புரிவார்.
9. சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாய கரை செய்து வழிபடுவார்கள்.
10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.
15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனா லேயே மீண்டும் விண் ணில் பறக்க ஆரம்பித்தது.
18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனை வரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.
24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.
27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.
28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.
30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.
31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.
32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.
33. சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.
34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.
36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.
39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.
41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.
42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.
43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.
46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.
48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.
52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.
54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.
55. மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2Ð லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.
56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.
60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.
61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.
62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.
63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.
64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.
65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.
66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.
68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.
69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.
70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.
71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.
72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.
73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.
74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.
75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.
77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.
79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.
80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.
82. ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.
83. திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.
84. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.
85. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.
86. பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.
87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.
88. விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.
89. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.
90. ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.
91. நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.
92. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள் இருவரும் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.
93. திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.
94. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.
95. நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
96. மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.
97. திண்டுக்கல் கோபால சமுத்திரகுளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.
98. ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.
99. ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன ச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் களை தான் அவர் வணங்கி வந்தார்.
100. புண்ணியத் தைத்தேடி காசி மாநக ருக்கு செல் பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.
ஓம் கணபதயே நம:

ஓம் மந்திரத்தின் மகா ரகசியம்

Wednesday, March 6, 2019

நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை?நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை?
நவ கிரகங்கள் குரு பகவான் என்ற சிவபெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.இவர்கள் தன்னுடைய கடமையில் சிறிதும் தவறுவதில்லை.எங்கே பிறரை பார்த்து பிறரிடம் பேசிக்கொண்டிருந்தால் நம்முடைய கடமையில் தவறிவிடுவோம் என்றும் குரு பகவானின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில்லை.
யார் ஒருவர் பிறரை பார்த்துக்கொண்டு தன்னுடைய நேரத்தை வீணாக்குகின்றார்களோ.அவர்கள் இறுதி நேரத்தில் தர்மராஜபுரிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நவகிரகங்களை போல யார் கடவுளை மட்டும் நினைத்து காரியம் செய்கின்றார்களோ அவர்கள் வாழ்கையை வெற்றி அடைகின்றார்கள்.